கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


01

நின்று சலித்த

நீள் பயணமொன்றில்

மென்று விழுங்கிய

பார்வையோடு நீ

விட்டுச் சென்ற

இருக்கையில்

இன்னமும்

உன் சூடு.

0

02

பிறை நிலா

நெற்றிப் பெண்ணின்

பின் முதுகில்

பௌர்ணமி நிலா.

0

03

தளும்புவதில்லை

நீர் நிறைந்த குடங்களுடன்

நீரற்ற குடங்களும்.

0

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

சி.சுந்தரம்


நம்பிக்கை

கடவுளை சாட்சிக்கு அழைக்க வேண்டிய
கட்டாய தருணத்தில்
கரையத் தொடங்கியது
கடவுள் நம்பிக்கை

உள்ளே நுழைதல்

என் வீட்டு வரவேற்பறையில்
மேஜையின் மீது கிடந்தன
பத்திரிக்கைகளும் டிவி ரிமோட்டும்

இணைய வசதி கொண்ட கணிணியும்
அங்கேதான் இருந்தது

நீங்கள் எனக்காக காத்திருந்தீர்கள்
பூட்டிய வீட்டின் முன் காத்திருக்கும் பாவனையில்

சி.சுந்தரம், துட்டம்பட்டி, தாரமங்கலம்

chinnusundaram@gmail.com

Series Navigation

சி.சுந்தரம்

சி.சுந்தரம்

கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

ப.மதியழகன்


போதி

பாலகனாய்
மரத்தைச் சுற்றி விளையாடும் பருவத்தில் தான்
அம்மரம் அவனுடன் அளவளாவத் தொடங்கியது
‘பச்சை பசேலென
எத்தனை இலைகள்
விரிவதற்குக் காத்திருக்கும் மொட்டுக்கள் பல
மணம் வீசும் மலர்கள்
பூக்களைத் தேடி வரும் பட்டாம்பூச்சிகள்
உனக்கு மகிழ்ச்சி தானே’ என்றது
சிறிது நேரத்தை அங்கு கழித்த அவன்
அவ்விடம் அலுத்துப் போகவே
மற்ற சிறுவர்களோடு விளையாட
மைதானம் நோக்கிச் சென்றான்
ஒவ்வொரு நாளும் அவன் வருவானென
எதிர்ப்பார்த்துக் காத்திருந்து
ஏமாற்றமடைந்தது அம்மரம்
விடலைப் பருவத்தில்
நண்பர்கள், திரைப்படம், கடற்கரை-என
சுற்றுவதற்கே
நேரம் சரியாகயிருந்தது அவனுக்கு
மரத்தை மறந்தே போனான்

காதல் அவன்
வாலிபக் கோட்டையை
முற்றுகையிட்டது
அகல்யா என்றொரு யுவதியின் தலைமையில்
‘காதலுக்கு மனம் தேவை
கல்யாணம் முடிந்து
குடும்ப ஓடத்தை தடையில்லாமல் நகர்த்த
பணம் தேவை – இதை உணர்ந்து
முதல் போட்டு தொழில் துவங்கி
சமூகத்தில் இன்னாரென முகவரியோடு
எனை அணுகுங்கள்
தலைகுனிந்து உங்கள் மலர்மாலையை
பெருமித்துடன் தோளில் ஏற்கிறேன்’-என
அவள் கூற
வியாபாரம் தொடங்க
பணம் தேவையே
எப்படிப் புரட்டுவது – என
அவன் மரத்தடியில அமர்ந்து
சிந்திக்கும் வேளையிலே
மரம் அவனிடம் பகன்றது
‘உன் நிலை எண்ணிக் கலங்கினேன்
இவ்வளவு காலம் எனை மறந்து
வாலிபக் குதிரையில
தன்னிலை மறந்து பயணம் செய்தாய்
காதல் கைகூட
செல்வம் வேண்டுமென
அவள் நிஜத்தை உணர்த்தியபோது
தாமாகவே உனது கால்கள்
நான் இருக்கும் திசையில் திரும்பி
என் நிழலை நோக்கி
வந்தமர்ந்து கொண்டன
துயரப்படாதே
உன் துன்பத்தைப் போக்க
வழியொன்று சொல்கிறேன்
என்னை வேரோடு வெட்டியெடுத்து
மரச்சாமான்கள் செய்யும்
தச்சனிடம் விற்றுவிடு
உனக்குப் பொருள் கிடைக்கும்
அகல்யாவின் அருகாமை
உன் இளமைக்கு
புத்துயிர் கொடுக்கும்’
எனக் கூறி முடித்ததும்
அவன் முகத்தில் ஆயிரம்வாட்ஸ் பிரகாசம்
ஞானத்தினால் அல்ல
அவளை அடைய வழி தெரிந்ததினால்
அண்ணாந்து மரத்தைப் பார்த்தான்
கருணையினால் அல்ல
எவ்வளவிற்கு விலைபோகுமென்று
கண்காளாலே அளப்பதற்கு
விரைந்தோடினான்
அகல்யாவை அணைப்பதுபோன்ற
அவனுடைய லட்சியக் கனவை நனவாக்கிட
முதல் படியாக
மரத்தை வேரோடு சாய்த்திட
கோடாரியை எடுப்பதற்கு!

குழந்தைகள் உலகம்

குழந்தைகள் உலகம்
தனது நுழைவாயில் கதவுகளைத் திறந்து
குதூகலத்துடன் என்னை வரவேற்றது
அங்கே
ஆனந்தமும், ஆச்சர்யங்களும்
ஒவ்வொரு மணற்துகள்களிலும்
பரவிக்கிடந்தன
காற்றலைகளில்
மழலைச் சிரிப்பொலி
தேவகானமாய் தவழ்ந்து
கொண்டிருந்தது
மோட்ச சாம்ராஜ்யம்,
தனக்குத் தேவதைகளாக
குட்டி குட்டி அரும்புகளை
தேர்ந்தெடுத்திருக்கின்றது
அங்கு ஆலயம் காணப்படவில்லை
அன்பு நிறைந்திருக்கின்றது
காலம் கூட கால்பதிக்கவில்லை
அவ்விடத்தில்
சுயம் இழந்து
நானும் ஒரு குழந்தையாகி
மண்டியிட்டு அவர்கள் முன் நிற்கின்றேன்
அந்தக் கணத்தில்
மரக்கிளையொன்று முறிந்து விழுகையில்
அதைக் கொண்டு இன்னொரு
விளையாட்டு ஆரம்பமாகிவிடுகிறது
எங்கு நோக்கினும்
முடமாக்கப்பட்ட பொம்மைகள்
உடைந்த பந்துகள்
கிழிந்த காகிதக் குப்பைகள்
சேற்றுக் கறை படிந்த சுவர்கள்
களங்கமில்லா அரும்புகள் எனக்கு
கற்றுத் தந்தது இவைகள்
வீட்டிற்குத் திரும்பியதும்
ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த
அலமாரி பொருட்களையெல்லாம்
ஒன்றுவிடாமல் கலைத்துப்போட்டேன்,
தரையில் விசிறி எறிந்தேன்
ஏக்கத்தோடு
ஊஞ்சலின் மீது அமர்ந்தேன்
எனது வீட்டை அங்கீகரிக்குமா
குழந்தைகள் உலகம் – என்று
யோசனை செய்தபடி…

பூமராங் வாழ்க்கை

மண்ணும், காற்றும், நீரும்
கொஞ்சம் கொஞ்சமாக
உயிரோடு தின்றுகொண்டிருக்கின்றன
எனதுடலை
அதனை அலட்சியப்படுத்தி
செலுத்தப்பட்ட அம்புபோல
சுயப்பிரக்ஞை சிறிதும் அற்று
விரைந்து கொண்டிருக்கிறேன்….
எந்த வில்லினுடைய நாணின்
இழுவிசையிலிருந்து
எந்த இலக்கை நோக்கி
விடப்பட்டு இருக்கிறேன்
என்ற கேள்வி தோன்றி
வேதாளம் போல்
எனது தோளில் வந்தமர்ந்து கொண்டது
நான் இலக்கை சென்றடைவேனென
நம்பிக்கை வைத்து
என்னையவன் எய்து இருக்கின்றானா?
வழியில் எனது லயம் தவறிய
தப்புத்தாளங்களை
கண்ணிமைக்காமல் கவனித்துக்
கொண்டிருந்தானா?
மீண்டும் அவன் கைகளில்
தவழ நேருமோ
நியாயத்தீர்ப்புக்காக அவன் எதிரில்
கைகட்டி நின்று
சாட்சிக் கூண்டில் சிறைபட நேருமோ
அச்சூழ்நிலையில்
‘உனது படைப்பு பூரணமடையாத போது
எப்படி அந்தப் படைப்பு நடத்தும்
வாழ்க்கை பூரணமாக
இருக்கவேண்டுமென்று நீ ஆசைப்படலாம்? ’
என்ற கேள்வியை பதிலாக்கி
அச்சமற்று நின்றிடுவேன்
அச்சபையில்
மானுடத்தின் கேள்வியினை
நானொருவன் கேட்டிடுவேன்.

வசீகரமிழந்த வாழ்வு

வசீகரமிழந்தது வாழ்வு
தொலைவிலிருந்து காண்கையில் பொலிவாகவும்
அருகாமையில் செல்லச் செல்ல விகாரமும் கொண்டது
வாழ்வுவெளியெங்கும்
வசந்தத்தைப் பறிகொடுத்த நட்சத்திரங்கள்
உணர்வின்றி ஜொலிக்கும்
வறட்சியால் பிளவுகண்ட நிலங்கள்
தனது களங்கத்தை திரையிட்டு மறைக்க
விழையும் நிலா
தென்றலின் மீது பகைமை கொள்ளும் மரங்கள்
தன்னுடைய மாமிசத்தையே வேட்டையாடி
உண்ண நினைக்கும் விலங்கினங்கள்
தனது சிறகுகளையே முடமாக்கி,
அங்கஹீனமாக்கும் பறவையினங்கள்
பலிகொடுப்பதற்கே குழந்தைகளை பெற்றெடுக்கும்
தாய்,தந்தையர்கள்
அன்பை தூரஎறிந்துவிட்டு ஆயுதத்தை கையிலெடுக்கும் மனிதர்கள்
பூமி நரகமாகியதால்
காடுகளே இனி மனிதன் வாழ்வதற்குச் சிறந்தது
நாட்டில் எவ்வுருத்தில்
எந்த மிருகம் ஒளிந்திருக்கும்
என்றறியாது எவ்வாறு வீட்டினில்
பயமின்றி உறங்குவது?

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

கார்த்தி. என்


——–
கணக்கீடு..

குறிகளில்
கவனமின்றிக்
கரும்பலகையைப்
பலவண்ணமாய்
யோசித்தமர்ந்திருக்கும்
குழந்தைக்குக்
கணக்கைத்
திணித்து விடாதீர்கள்..

ஒருகாலத்து ஓவியன்
செத்துப் போகலாம்..
——
முழாண்டு..

தனித்தனியாய்ப்
படித்திருந்தும்

தேர்வில்
ஆற்றில் மிதந்தது
மரத்தின் தன்வரலாறு.
====
குறி தவறல்..

நிமிர்ந்து
நின்று
ஒன்றொன்றாய்ச்
சேர்த்துச்
சோர்ந்து போய்

சமயத்தில்
வளைந்து கொடுத்துப்
பெருக்கத் தொடங்குகிறது

———-
கூட்டல் குறி.

1 x 1
ஒன்றைப்
பெருக்க
அப்படியே
இருக்கிறது
இன்னொன்று.
…………………………
……………………………………………………..

Series Navigation

கார்த்தி. என்

கார்த்தி. என்

கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

வே பிச்சுமணி


ஒட்டஞ்சில் சொல்லும்

பரணி ஆற்றில் பள்ளிகூடம் போகாமல்
சட்டையும் அரைகால்சட்டையும் அவிழ்த்து
பாறை மீது வைத்து பறக்காதிருக்க கூழங்கல்லும் வைத்து
அம்மணமாய் ஈட்டியாய் நீரில் பாய்ந்து
குதியாட்டம் போட்டு பல்டி அடிக்க போய்
காதில் மணலும் மூக்கில் தண்ணீரும் புகுந்து
விரல்களில் தசைகள் சுருங்கி கண்கள் சிவந்து போக
கண்கள் சிவப்பு போக்க ஒட்டஞ்சில் ஒத்தடமும்
விளையாடிவிட்டு வருவதாக காண்பிக்க புழுதி தடவி
மூக்கில் முட்டையிடும் சளி காட்டி கொடுக்க
அரட்டி சிந்த சொல்லி சிந்தா மூக்கை பிடித்து
சிந்தி சிந்தி ஒரு பக்கம் சாய்வாய் என் மூக்கு
ஆனாலும் திருட்டுதன குளியல் தொடர
ஆற்று நீரும் மூக்குக்கு பழகி போனதும்
ஒட்டஞ்சில்லில் தவளை விட்டு மகிழ்ந்ததும்
பூட்டிய குளியலறையில் வாசனை சோப்பு போட்டு
குளித்தாலும் அந்தகுளியல் சுகம் என்றும் வராது
இன்றும் ரோட்டில் எப்பவாது காணும்
ஒட்டஞ்சில் சொல்லும்
சூட்டு ஒத்தடத்தையும்
ஆற்று நீர்பரப்பில் தவளை விட்டதையும்
மகிழ்ச்சிக்காக குளித்ததையும்உன் பெயர் உச்சரிக்கையில்

விழா மேடையில் உன் பெயர்
உச்சரிக்கையில் முகம் சாய்த்து
வெட்கத்துடன் மூன்றாம்பிறையாய்
இதழ் விரித்து நீ புன்னகைக்க
என் முகமும் பிரதிபலிக்க


விழாவுக்காக ஒரு புல் கூடபுடுங்காம
என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு
என என் மனசாட்சி-
கீழ்வானம் சிவக்க
புல் இனங்கள் துயில் எழவில்லையா
அவள் பெயரின் ஒலி என்னுள்
காதலாய் பரவி என் இதழ் விரிக்காதா

பரமனின் உடுக்கை நாதத்தில
உயிர்கள் பிறந்ததாய் மெய்ஞானம்
எரிமலையின் வெடிசத்தத்தில்
பிறந்ததாய் விஞ்ஞானம்
உன் பெயரின் ஒலியில்
நான் பிறந்ததாய் என்ஞானம்

நான்மறைகளும் காற்றில் ஒலியாய்
இன்றும் உள்ளதாக நம்பிக்கை
உன் பெயரின் ஒலியில்
என் நாளும் என் இருக்கை

பெயர்களின் ஒலி வலிமையை
அனுமனுக்கு பின் நானறிவேன்
உன் பெயர் உச்சரிக்க படும்பொழுது
எல்லாம் உயிர்ப்பிக்கபடுகிறேனே
எனது ராமஜெயம் உன் பெயர்தானே

உன் பாட்டியின் பெயர் உனக்கு
உன் தந்தை சூட்டிய காரணம்
இப்போதான் விளங்கிறது
என் மூலம் ஊரிலும் தெருவிலும்

புது பேனா எழுதும் முதல்
பரிசோதனை வார்த்தையாய்
என் கை எழுதும் உன் பெயர்

உன் பெயர் உச்சரிக்கபடும் போதெல்லாம்
என் கண்கள் உனை தேடும் எல்லாஇடத்திலும்

உன் பெயர் சூட்டிய
சின்ன குழந்தைகளின் கன்னம்
செல்லமாய் தடவும் என் கைகள்

உன் பெயர் சூட்டிய
பாட்டிமார்களுக்கு பாதை கடக்க
உதவும் என் கால்கள்

மொழி பாடங்களில் எழுதும்
கடிதங்களின் முகவரியில்
எல்லாம் உன் பெயர்

என் மின்னஞ்சல் முகவரியின்
கடவுசொல்லாக மட்டும்
உன் பெயரை வைக்கவில்லை
என்னை நீ கடவு செய்யகூடாதென

Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

க.செ.வெங்கடேசன்.. அபுதாபி.


சந்தி(ப்) பிழை

அவள் இவள்
சந்தித்தது, சந்திப்பதே,..
பிழையெனில்,
இவர்களைப் பற்றி
எழுதுகையில் ஏற்படும்
சந்திப் பிழை
பிழைபடில்,
பெரும்பிழையோ?என் காதலி

குறும்புப் பார்வை,
குறுகுறுத்த கண்கள்,
மென்மையான ஸ்பரிசம்,
அன்பான முத்தம்,
என்னில் விளையாடும் கரங்கள்,
காதல் வழியும் மொழி,
என்னில் ஏற்படுத்திய தாக்கம்,
எல்லாம் என் கண்முன்னே,
இமைகள் மூடும் போதெல்லாம்,
என்னுள்ளே உள்ள காதல் அவளின்பால்,
இத்தனை வயதிலும் மாறவே இல்லை,
என் மகள்.களவு கூட சந்தோஷம்தான்

குளிர்கால ரயில்வே ஸ்டேஷன்
சிமெண்ட் பெஞ்சில்
தி ஜாவின் மோகமுள்
உடனான தணிமை,

முன் வராண்டா வேப்பமர
முன்னிரவு தென்றலில்
இளையராஜாவின் இசையுடன்
ஜென்சியின் இனிமையுடனான
எப் எம் அலைவரிசை.

அலுவலகம் முடிந்து
நண்பர்கள்
பாய் கடை டீ பிஸ்குத்
தம் அரட்டை,

காலை செய்தித்தாள்,
மாலை தொலைக்காட்சி,
செய்தி, மெகா சீரியல்,
பின்னிரவு பால் பழம் தம்,

மற்றும் எத்தனை எத்தனையோ?!!..
களவு போயும்கூட
கவலையில்லை,
சந்தோஷமே!!..
என்னுடனான என்
குழந்தையின் திருடப்பட்ட
சந்தோஷ தருணங்கள்
களவு போனதில்..


Series Navigation

க.செ.வெங்கடேசன்-அபுதாபி

க.செ.வெங்கடேசன்-அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

கணேஷ்


சருகுகள்
மழை நாட்களில்
எத்தனை
காகிதக் கப்பல்கள்
அந்த முற்றத்தில்

மண் பிள்ளையார்களும்
தொப்பை நாணயங்களும்
எத்தனை கிடக்கும்
அணில் போல் கிறீச்சிடும்
அந்த ராட்டினக் கிணற்றில்

அந்த ரேழியில்
எத்தனை கதைகள்
என் பாட்டியுடன்

இரவில் அச்சுறுத்தும் கொல்லையும்
தலையணையுடன் பிறந்த
வாசற் திண்ணையும்
இவை எல்லாவற்றிற்கும்
சாட்சியாய் நின்ற
கூடத்துத்தூணும்… … …

அடுக்குமாடி குடியிருப்புகளில்
நுழைந்ததால்
தொலைந்து போய்
இன்றோடு
ஆண்டுகள் இருபது !நடுத்தர வர்க்கம்

விபத்தில் சிக்கியவனுக்கு
உதவி செய்ய

நாலணா தராமல் போன
நடத்துனா¢டம் காசு கேட்க

கண்ணாடி கதவுகளிட்ட
அலுவலகங்களில் நுழைய

அக்கம் பக்கம் வலிய சென்று
அறிமுகம் செய்து கொள்ள

பருவப் பெண்களொடு
கலகலப்பாய் புழங்க

தெருக்கோடி சென்ற
பூக்காரனை உரக்க கூப்பிட

தயக்கம் !
ஏனோ விரட்ட முடியவில்லைஇது இலையுதிர்காலமோ

விழுதுகள் உதறிய வேர்கள்
பொக்கை வாயும்
சுருங்கிய தோலுமாய்
சருகுகளாக காத்திருக்கும்
பழுப்பு இலைகள்
வயது வளர்ந்து
தளர்ந்து போனதால்
விரட்டப்பட்ட
பஞ்சுத் தலைகள்
பிஞ்சு மனங்கள்
அசுர வேக வாழ்க்கையில்
சல்லிக் காசுகள்
அள்ளிக்கொண்டு போன
அஸ்திவாரங்கள்
குடும்பக் கூட்டின்
குண்டுத்தூண்கள்

உதிரத்திற்கு உரமிட்டவர்கள்
இன்று
முதியோர் இல்லத்தில்
ஏன் இந்த அவல நிலை
நமக்கும்
நாளை உண்டு
ந்ரையும் உண்டுநிஜம்

கால் கட்டை விரல்கள்
கட்டப்பட்டன
ஒற்றை விளக்கு தலைமாட்டில்
தாயே !!!
உன் மரணம்
ஜனித்து விட்டிருந்தது
வாய் விட்டு
இல்லை
வயிறு விட்டு அலறினேன்
மழையாய் அழுதேன்
நீளமாய் பயமாய்
இருந்தது இரவு

மறு நாள் காலை
இறுதி ஊர்வல வண்டிக்கு
சில நூறுகள்
சாஸ்தி¡¢களிடம்
சில நூறுகள்
மந்திரங்களைக் குறைக்கச் சொல்லி
சில நூறுகள்
வெட்டியானிடம்
சில நூறுகள்
என்று பேரங்கள்
ஆரம்பித்தன !
நிஜங்கள் உறுத்தின !
இப்படித்தான் பேரமாய்
போய்விடுமோ
என் மரணமும் !


முகவா¢
நான்கு வயதில்
வாத்தியாராய் வருவேன் என்றேன்
ஆறு வயதில்
போலீஸ்காரனாய் வருவேன் என்றேன்
பத்து பன்னிரண்டு வயதில்
விஞ்ஞானியாக ஆசைப்பட்டேன்
பதினெட்டு வயதில்
கவிஞனாக நினைத்தேன்
முன் இருபதுகளில்
ந்டிகனாக விரும்பினேன்
முப்பது வயதில்
இன்று
அப்பாவாக இருக்கிறேன் !!!


ganeshadhruth@yahoo.co.in

Series Navigation

கணேஷ்

கணேஷ்

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

கே.பாலமுருகன்


1
ஒவ்வொருமுறையும்
ஏதையாவது பேசிவிட
தோன்றுகிறது

மார்க்சியம்
ஓஷோ
பாரதி
அரசியல்
உலக சினிமா
அகிரா குரொஷோவா
பாலிஸ்தீனம்
பின்நவீனத்துவம்

தத்துவ ஆய்வான
உரையாடல்களில்
விவாத மேடையில்
குறைந்தது
சினிமா விமர்சனத்தில்

இப்படி எதிலாவது
கலந்து கொள்ள
ஒவ்வொருமுறையும்
என்னைத் தயார்ப்படுத்திப்
பார்க்கிறேன்

வீட்டின்
முன்வாசல்வரைத்தான்
வர முடிகிறது

அதன்பிறகு
சரிந்து
கரைந்துவிடுகிறது
எனக்கான உலகம்

2
வீட்டைக் கடக்கும்
ஒரு குழந்தையாவது
சிறிது நேரம்
என் வீட்டின்
அருகாமையில் நின்று
விளையாடிவிட்டு போகாதா
என்று
என் பொழுதுகள்
விரைத்துக் கொண்டிருக்கும்

3

மீண்டும் மீண்டும்
வரைந்து பார்க்கிறேன்
குழந்தைகளின்
புகைப்படங்களை
என் வீட்டுச் சுவரில்

ஏனோ தெரியவில்லை
மறுநாள்
குழந்தைகள்
நகர்ந்து வெளிச்சுவரில்
காத்திருக்கின்றன


ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்

கவிதைகள்

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

தாஜ்அக்கரைக் காட்சி

அவர்கள் பெருத்துவிட்டார்கள்
மனிதர்களின் மாற்றாய்
நிஜங்களின் நிழலாய்
நகர வீதிகளின் அங்கமென
நடமாடும் அவர்கள்
லோக காப்பாளர்களால்
கல்லடிப் படும்வரை
அடையாளம் தெரிவதில்லை.
நான் காலாறும் இடமெல்லாம்
கேலிச் சிரிப்போடு
சகஜமான அவன்
நேர் நின்றதோர் நேரம்
முகம் பார்த்து கையெந்த
இக்கரையிலிருந்து
கருணையோடு பார்த்தேன்
என் பார்வையை
அவனும் பார்த்தான்!


மூ ல ம்

பக்கத்தில் வந்து
கண்பார்க்க
கைகளில் இருந்ததை
தட்டிப் பறித்தன
அவைகள்!
சிலர் வீசியெறிந்ததை
பொறுக்கிய வேகத்திலும்
குட்டிகளைச் சுமந்தே
மலையேறின.
கொடிகளைப் பற்றியவைகள்
ஊஞ்சலாடித் தாவி
கிளைகள்மாறி நடை போட்டு
தடங்கலற மேலே நகர்ந்தன
உச்சத்தில் குந்த
வாய்ப்பற்றவைகள்
உறுமல் மொழியோடு
சதா தாண்டிக் குதித்தன.

நம் மூலமென சிலாகித்தாலோ
குரல் கொடுத்தாலோ
அவைகளின் சேட்டைகள்
கூடிக்கொள்கிறது.
தெற்கைக் காட்டிலும்
வடக்கில்தான் இவைகளின்
நவகொட்டம் என்கின்றனர்.

உச்சாணிக் கொம்பிலிருந்து
வாலில் தீயேந்தி
கடல்தாண்டிக் குதித்த ஒன்று
பலிகளைப் பொசுக்கி
கொண்ட கோரத்தை
யுத்தக் காண்டமாய் வாசித்து
கண்கள் சிவந்ததுண்டு.
————————————-
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

கவிதைகள்

This entry is part [part not set] of 23 in the series 20081204_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி01
இருக்கட்டும் எதற்கும்…!

பத்தாண்டுகளுக்கு முன்
நான் அனுப்பிய கடிதமொன்றை

பத்திரமாய் வைத்திருந்து
பிரதியொன்றை எனக்கின்று

அனுப்பித்தந்த நண்பனின்
அன்பைப்போல

இருக்கட்டும் எதற்கும் என்று
இதுபோல் இன்னும்

எத்தனையோ நம்
எல்லோரிடமும்.


02
அவனவன் பாடு

கண்டு கொள்ளாமல்
இருந்திடல் கூடும்
சிலருக்கு.

கண்டு கொண்டாலும்
கைவசப்படுவதில்லை
சிலருக்கு.

கண்டதையும் கொள்வதிலும் உண்டு
கணிசமான சிக்கல்கள்.

அவனவன் பாடு.
சிலதை கண்டு கொள்ளாமல் இருப்பதும்.
சிலதை கண்டும் கொள்ளாமல் இருப்பதும்.03
பட்டங்களும் பட்டமும்…!

மக்கள் திலகம்
நடிகர் திலகம்
மக்கள் கலைஞர்
நவரச நாயகன்
காதல் மன்னன்
காதல் இளவரசன்
ஆக்சன் கிங்
அல்டிமேட் ஸ்டார்
உலக நாயகன்
சூப்பர் ஸ்டார்
சுப்ரீம் ஸ்டார்

நடித்துப் பெற்ற பட்டங்களுடன்
நாயகர்கள் சுவரெங்கும்

சுவரெங்கும் சுவரொட்டி
சுவரொட்டி செல்லுமவன்

படித்துப்பெற்ற பட்டம் மட்டும்
பத்திரமாய் பெட்டிக்குள்.


Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

றஞ்சினிஎன் ரகசியம்…

கல் மலைக்
குகைக்குள்
வாழ்ந்த நிமிடத்தில்
அடர்காட்டின்
நடுவில் கலந்து
மலை உச்சியில்
பனியில் நனைந்து
கதிரவன்
கழைந்தெறிந்த
வர்ணங்களைச் சூடி
இயற்க்கையை
விழுங்கி
மது இதழில்
முத்தமிட்டு
ஆச்சிரமத்தில்
குடிபுகுந்து
தத்துவங்கள்
கவிதை சொல்லி
பிரபஞ்சக் கனவுடன்
விழிக்கிறது
நடுநிசியில்.


காவித்திரியும்..

சுயநலத்தின்
பிரதிகளாக
சிதறும் உன்
வார்த்தைகள்.

வரிகள் தரும்
வலிக்குள்
சிதைகிறது
நேசம்

நீ..
பிரபலத்தின்
நண்பன்
சுயநலத்தின்
அறிகுறி
விடையற்ற
கேள்வி
காத்திருப்பின்
ஏமாற்றம்
தேவையற்ற
கற்பனை..

உன்னைக்
காவித்திரிகிறது
அறிவற்று மனது.shanranjini@yahoo.com

Series Navigation

றஞ்சினி

றஞ்சினி

கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

செல்வராஜ் ஜெகதீசன்01
முரண்களுக்கா பஞ்சம்?

இரவுகள்

தவறுகள்

உறவுகள்

உரிமைகள்

குடும்பங்கள்

குழப்பங்கள்

கடமைகள்

களவுகள்

கனவுகள்

கற்பனைகள்

அர்த்தங்கள்

அனர்த்தங்கள்

அத்தனையும்

இருக்கட்டும்.

நம் கவிதைகளும்

தொடரட்டும்.

முடிவில்லா பெருவெளியில்

முரண்களுக்கா பஞ்சம்?

o
02
அவளின் முகம் …!

அடிக்கடி

இல்லையென்றாலும்

அவ்வப்போது

தோன்றி மறைகிறது

அப்பாவின்

நெஞ்சுவலிக்காய்

இன்னொருவன்

மனைவியாகி

குழந்தை ஒன்றோடு

குடும்ப சகிதமாய்

ஸ்கூட்டரில்

கடந்து போன

குமரி

அவளின் முகம்.

03

தீதும் நன்றும் …!

நல்லவன்

வாழ்வான்.

நல்லதுக்கு

காலமில்லை.

கெடுவான்

கேடு நினைப்பான்.

கெட்டாலும்

மேன்மக்கள் மேன்மக்களே.

என்றாலும்

அறிந்துணர்.

தீதும் நன்றும்

பிறர் தர வாரா.

04

பிறிதொன்றின்றி

நானும்

நீயும்

அவனும்

அவளும்

அவரும்

இவரும்

அதுவும்

இதுவும்

பிறிதொன்றில்லாமல்

எதுவுமில்லை.

எங்குமில்லை.

o

05

சுயம்

பெற்றோர்க்கு

பிள்ளை.

மனைவிக்கு

கணவன்.

பிள்ளைக்கு

தந்தை.

உடன்பிறந்தோர்ககு

சகோதரன்.

உண்மையில்

எனக்கு

நான் யார்?


jagee70@gmail.com

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


ஏன்?
கன்னி மோகினிகளுக்கு
கால் கொலுசு
மல்லிகை சரி.

வெள்ளைப் புடவை ஏன்?ஒருவேளை …!

அடிக்கடி

இல்லையென்றாலும்

அவ்வப்போது

தோன்றி மறைகிறது

உனக்கு முன்

பார்த்த பெண்ணை

ஒருவேளை கட்டியிருக்கலாமோ

என்று.


நண்பர்களும் இவளும்…!

பெரிதாய் ஒன்றுமில்லை என்றாலும்

பேசிப்பேசி மாய்கிறோம் நாம்.

சிறிதாய் ஒன்றுமற்றதற்கு எல்லாம்

பேச மறுத்து சாய்க்கிறாள் இவள்.


இனியொருமுறை …!

நாற்புறமும் தண்ணீர் சூழ

நண்பனென்று எவருமின்றி

தீவொன்றில் தனித்து விடப்பட்டு

இருக்கிறதா உன் வாழ்வு?

தொடர்புப் பட்டியலில் யாதொருவரின்

தொலைபேசி எண்ணுமன்றி

வெறுமையாய் இருக்கிறதா — உன்

வெந்நிற கைத்தொலைபேசி்?

இறுகியோ/இளகியோ இன்னொருமுகம்

எதிர்ப்படும் வரை

இனியொருமுறை சொல்வதைத் தவிர்

யாருமற்றவன் நீயென்று

எவரிடமும் எதன்பொருட்டும்.


jagee70@gmail.com

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


விரல்நுனி ஸ்பரிசம்…!

அதிகாலைக் கதிரவனுக்காய்
அனுதினமும்
காத்திருக்கும்
இலைநுனி
நீர்த்துளிபோல

சும்மா ஒரு
சுவாரஸ்யத்திற்காக
செதுக்கிக்கொண்டிருக்கிறேன்
என் சோக பிம்பத்தை.

இதமாய்
என் தலைகோதும்
உன் விரல்நுனி
ஸ்பரிசம் வேண்டி.


விட்டுவிடுதலையாகி…!

என்னைப் பின்தொடர்வதில்
உனக்கெதுவும் கிடைக்கப்போவதில்லை.
என்னைப் புறந்தள்ளுவதாலும்
பெரிதாய் நிகழப்போவதொன்றுமில்லை.
சேர்ந்தே என்னோடு நீ வருவதிலும்
சிறிதளவும் எனக்கு சம்மதமில்லை.

விட்டுவிடுதலையாகிப் போ
உன் சிறகுகள் செல்லுமிடமெங்கும்.

ஆகக்கூடி வரும் ஒரு ஊழிக்காலத்தில்
சந்திப்போம் _ நமது
அன்பின் வலிமையைச் சொல்ல.


06.07.2008


SJEGADHE@tebodinme.ae

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


நேசம்
செம்புலப் பெயல் நீர்
ஈரேழு ஜென்மம்
ஈருடல் ஓருயிர்

எவற்றிலும் நீ
எதுவரினும் நீ
எக்கணமும் நீ

இத்தனையும் பேசி
இனித்திருந்த நம் நேசம்
இப்போது இடம்மாறி

என்னவளாய் நீயின்றி
எவரோடோ நீயொன்றி.


எதிர்பார்ப்பு!

அதிக நேரமொன்றும்
ஆகாதுதான்.


ஒருதொலைபேசி
அழைப்பில்கூட
உறுதிசெய்து கொள்ளலாம்.

ஆயினும்,
எதிர்பாரா
ஒரு தருணத்தில்
நீ
எடுத்துத்தரப் போகும்
பிறந்த நாள் பரிசைக்
காண

அமைதியாகவே
வருவேன்.
அநேக
எதிர்பார்ப்புகளோடு.


தடங்கள்
எப்போதும் போல்தான்
இருக்கிறது.
என்னையும் உன்னையும்
பிரித்த நிலா.

இப்போதும் முத்தமிட்டுக்கொண்டுதான்
இருக்கின்றன.
எதிர்வரும் அலைகளோடு
உள் வாங்கும் அலைகள்.

நீ விட்டுப்போன
தடங்களோடு நான்.
இங்கேயும் அங்கேயும்.

இன்றும் நீ வராமலே
இருந்திருக்கலாம்.
ஏனைய நாட்களைப் போல.


பிரியமான என் வேட்டைக்காரன்…!
*

இடதுபக்கம் மூக்குத்தி அணிந்திருப்பாள் அமுதா.
எதற்கும் வாதிடுவாள் ராதா.
சிரிப்போடுதான் பேசத் தொடங்குவாள் சுசீலா.
சிறிது கூன்போட்டு நடப்பாள் கீதா.
கண்கள் பேசும் பானுமதிக்கு.
கடைசிவரை பேசாமல்
புன்சிரிப்போடு போனவள் மோகனா.
மையிட்ட கண்கள் மாலதிக்கு.
மல்லிகைச் சரமின்றி காண்பது கடினம் நிர்மலாவை.
அபூர்வமாய் சுடிதாரில் வருவாள் ஜெயந்தி.
அடிப்பதுபோல் பேசுவாள் வசந்தி.
கேள்விகளோடே வருவாள் புவனேஸ்வரி.
துருதுருவென்றிருப்பாள் சந்திரா.

தோழியர் எல்லோர்க்கும்
வாய்த்திருக்கும்
ஒன்றிரண்டு பிள்ளைகளுடன்
ஒளிமயமாய் ஒரு குடும்பம்.

எப்படியும் வரக்கூடும்…

நாளை வரும் நாயகனுக்காய் – இந்த
நாற்பதிலும் காத்திருக்கும்
பெண்மான் எனைக் கொண்டு செல்லும்
பிரியமான என் வேட்டைக்காரன்.


Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிஎன் …!

பெரும் மமதைக்காரனென்று சொல்.
பித்தலாட்டக்காரன் என்று சொல்.

சிற்றின்பப்பிரியன் என்று சொல்.
சின்னபுத்திக்காரன் என்று சொல்.

சீதாராமன் இல்லை என்று சொல்.
சிறுவயதுப் பிழைகள் எல்லாம் சொல்.

மதுபுகைக்கு அடிமை என்று சொல்.
மனிதனே இல்லை என்று சொல்.

என்னை
என்ன வேண்டுமானாலும்
சொல்.

என் கவிதைகளும்
என் போல்தானா?
சொல்.


இயல்பு…!

என்னாயிற்று என்றேன்.
எதுவுமில்லை என்றாய்.
பின் எதையும்
கேட்கவில்லை நான்.

இயல்பின்றி போவதில்
சம்மதமில்லை எனக்கும்.


இருப்பு…!

எப்படி இருக்கிறாய் என்றாய்.
அப்படியேதான் இருக்கிறேன்
என்றேன்.

இப்படி உன் விழிகள் விரிய
அப்படியே இருத்தலென்பது
அத்தனை சிரமமா என்ன?


பிரிவின் சாசனம்…!

ஏதாவது சொல் என்றேன்
என்ன சொல்ல என்றாய்?
எதையாவது சொல்லி
இருக்கலாம் நீ.

பிரிவின் சாசனமாய்
ஒரு பதிலாவது
எஞ்சியிருக்கும்
நமக்குள்.

இன்முகம்…!

எழுத்தில் இருப்பதை
எடுத்துக் கொடுக்கும்
பணிதான்
என்றாலும்

இன்னும் கொஞ்சம்
சிரித்தபடி
இருக்கலாம்
இந்த
மருந்துக்கடை
விற்பன்னர்கள்.கண்டதும் காணாததும்…!

சிக்னலில் கடந்து போன
பெண்ணின்
முகம் உருவம் எல்லாம்
மறந்துபோய்
சாலையைத் துடைத்தபடியே போன
அவளின்
சிவப்பு நிற துப்பட்டா மட்டும்
துல்லியமாய் கண்முன் இன்னமும்.

எப்படிக் கொண்டு சேர்க்க?
காலையில் வீதியில் கண்ட
அந்த ஒற்றைச்சாவியை
அதற்கு உரியவனிடம்.


மனக்குழந்தை…!

இடுப்பை விட்டு
இறங்க மறுத்து
அடம்பிடிக்கும்
குழந்தையாய்

எப்போதும்
எதையாவது
எழுதச் சொல்லி
நச்சரித்துக்கொண்டிருக்கிறது
என்
மனக்குழந்தை.சொல்லுதல்…..!

சிலதை
சொல்லத் தெரியவில்லை.
சிலதை
சொல்வதா தெரியவில்லை.

சிலதை
சொல்வதற்கில்லை.
சிலதை
சொல்லித் தெரிவதில்லை.

சிலதை
சொல்லாமல் இருக்க முடிவதில்லை.
சிலதை
சொல்லி ஒன்றும் ஆவதில்லை.

சிலதை
சொல்வதால் பெரும் தொல்லை.

இப்படிப் போகும்
சிலதை
எப்படி முடிக்க
என்றும் தெரியவில்லை.


ஹைக்கூ

அறுநூறு மைல் வேகத்திலும்
ஆழ்ந்த உறக்கம்.
விமானப் பயணம்.


SJEGADHE@tebodinme.ae

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


களவு

௧ளவு போனது.
கரையோரம் இருந்த

கடிகாரத்தோடு

அருவிக்குளியல்

தந்த ஆனந்தமும்.


அஞ்சல் அட்டை

நாளேடு தொடர்கதைக்கு

அனுப்பிய ஒன்று.

நேயர் விருப்பத்திற்கு

(வானொலியில் பெயர்!)

அனுப்பிய அத்தனை

ஆசைகள்.

நேர்முகத்தேர்வுத் தகவல்கள்

நிறையவே கொண்டு வந்தவை.

திரைப்படக் கலைஞர்களிடம்

புகைப்படம் கேட்டு

எழுதியவை.

படித்ததும் கிழிக்கப்பட்ட

உத்திரகிரியைப் பத்திரிக்கைகள்.

இப்படி

எதையெதையோ

ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது

அலுவலகக் கடித அலமாரியில்

அமைதியாய் வீற்றிருந்த – அந்த

மஞ்சள் நிற அஞ்சல் அட்டை.அன்பைப் பற்றிக் கொள்ளுதல்…..!

அவசரமாய் தொலைபேசியில் அழைத்து

அன்புபற்றிய கவிதையொன்று

அச்சில் வந்திருப்பதைச் சொன்னேன்.

வேலை முடிந்து

வீட்டுக்கு வரும்போது

மகனுக்கு மறக்காமல

மருந்து மாத்திரைகள்

வாங்கி வா என்றாய்.

எனக்குப் புரிந்தது.

அன்பைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதும்.

அன்பையே பற்றிக் கொண்டிருப்பதும்.


SJEGADHE@tebodinme.ae

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

கே. ஆர். மணி


NH-7ல் இறந்தநாய்

மெல்லச் சாப்பிடு , முட்டா காகமே
தொண்டையில் அடைத்துக்கொள்ள
போகிறது.

எலும்புகளின் மீதான ருசியை ரசித்தது
அந்த பெயர் தெரியாத பறவை.

ரொம்பநேரமாய் குருவி என்னதான்
செய்ய என்று யோசித்துக்
கொண்டேயிருக்கிறது.

ஈக்கள் அகிம்சாவாதிகள்
அவ்வளவாய் தொந்திரவு தருவதில்லை.
மெல்ல நக்கிவிட்டு எழுந்துபோய்விடுகின்றன.

கோலங்களை சாப்பிட்ட சைவ
எறும்புகளுக்கு இந்தவேகத்தில்
இடமில்லை எனினும்
என்னிடமும் ஏதோ இனிப்பு
இருக்கிறது போலிருக்கிறது.
இல்லாவிட்டால் அவையேன் என்னை
தேடிப்பிடித்து வரவேண்டும்.

இவர்கள் சாப்பிட்டபோதெல்லாம்
வலி தெரியாது இருந்த எனக்கு
டயர்கள் 14வது தடைவையாய்
ஏறியபோது பதிவுபோலவே வலித்தது.

எந்த மூன்றாம்நாள்
உயிர்தெழுவதற்காக
படுத்திருக்கிறேன் ?


டயரும் நடுத்தெரு நாய்களும்

அது அதுபாட்டுக்கு படுத்திருந்தது
பிரபஞ்சவேகமும் என் வேகமும் அறியாது
அசமஞ்ச நாய்

நாலாம் கியரிலிருந்து ஏன் ஒரு
நாய்க்காய் பிரேக் போடவேண்டும்.
ஓலிப்பான் அமுத்தியிருக்கலாம்.
அழுத்தவில்லை.

சின்னதாய் கீரிச்சலோடு டயர் சுழற்ற,
அடித்து புரண்டு எழுந்த அதன் கண்களில்
கடைசிநேர உயிரின் ஒளி.

தப்பித்தலின் பொருட்டு புரண்டு
பின்பக்கம்போயிற்று.
தப்பித்தும்விட்டது.

அந்த ஓளி என் கண்ணிலும் ஓளிர்ந்தது
போனமுறை பிங்க் ஸ்லிப்பின்போது

டயர்களால் சாகாது இந்த
நடுத்தெரு நாய்கள்.


*Pink Slip – வேலைவிட்டு அனுப்பும் கடிதம்.

mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி

கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

பஹீமாஜஹான்


தோட்டம்:
அறுவடை ஓய்ந்த வயல் வரப்புகளில்
மந்தைகள் மேயவரும் காலங்களில்
கோடை தன் மூச்சைக் கட்டவிழ்க்கும்
ஆற்றங்கரைத் தோட்டத்துப் பசுமையும் கருகும்
“தண்ணீர் தேடிப் பாம்பலையும்
காட்டில் திரியாதே”
அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்
பதுங்கிப் பதுங்கி நோட்டம்;விட்டு
ஓட்டமெடுப்பேன் தோட்டம் பார்த்து
அச்சம் தவிர்த்திடவும் கொய்யா பறித்திடவுமாய்
கையிலே ஓர் தடி
அத்தடியையும் செருப்பொரு சோடியையும்
மரத்தடியில் விட்டுக்
கிளையொன்றில் அமர்ந்து கொள்வேன்
கற்பனையும் பாடலும் தோட்டமெங்கிலும் பரவி
பள்ளத்தே பாய்ந்தோடும் ஆற்றிலும் கரைந்தோடும்

ஆறு:
ஆற்றின் நீரோட்டம் படிப்படியாக வற்றி
கோடையின் உச்சத்தில் நரைத்த தேகம் பூணும்
மாலைப் பொழுதொன்றில்,
தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்
சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்
தீர்க்க தரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா
மண்வெட்டியை ஊன்றி ஊன்றி
காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ
புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்
நானும் தொடர்வேன்
தோட்டத்து ஒற்றையடிப்பதையின் சருகுகளைச்
சிறு மண்வெட்டியால் இழுத்தவாறு
அவள் பின்னே

புதையல்:
அத்திமரத்தின் கீழே
கருநிறப் பாசி படர்ந்து
நீர்ப்புச்சிகள் சருக்கள் நிகழ்த்தும்
நீர் தேங்கிய மணலை அகழத் தொடங்குகையில்
வெண்ணிற மணலோடு
சலசலத்து ஊறும் குளிர் நீர்
ஊறிவரும் நீரை வழிந்தோட வைக்கும்
கால்வாய் அமைப்பையும் அவளே அறிவாள்
அத்தியின் கிளைகள் ஆடும்
தௌ;ளிய நீர்ச்சுனையை
உருவாக்கிய பெருமிதத்துடன்
மாலை இருளை ஆற்றில் விட்டுக்
கரையேறி வீடடைவோம் சிறுமியும் பாட்டியும்

நாசகாரன்:
பின்னாளில்
எல்லோரும் வந்தங்கே துவைப்பர் குளிப்பர்
இடையிடையே உயர்ந்த ஆற்றங் கரையின்
மூங்கில் மரங்களின் மறைவில் நின்று
வந்திருப்பவரை அடையாளங் கண்டு திரும்புவாள் அம்மை
பின்னும்
கண்காணிப்புத் தவறிய இடைவெளியில் வந்து
படு குழி தோண்டி வைத்துப் போயிருப்பான்
அவளது வடிகாலமைப்பு ஞானத்தின் துளியும் வாய்க்காத
அற்பப் பயலொருவன்
தெளிந்த நீர் ஊற்றுக் குட்டையாக மாறி
அழுக்கு நீர் சுற்றிச் சுழழுமங்கே
நாசமறுத்த பயலவனை முனிந்த படி
மீளவும் புணரமைப்பாள் வியர்வை வழிந்திட அம்மை


பஹீமாஜஹான்
2007.09.16


jahan.faheema@gmail.com

Series Navigation

பஹீமாஜஹான்

பஹீமாஜஹான்

கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

எஸ் அனுக்ரஹா


கணிணியியல்

உயிர் மின்சாரம்
ஏறியதும்,
வாழ்கைப்
பதிவதின், நகர்வதின்
சூத்திரம்
‘உண்டு’ ; ‘இல்லை’ ;முழுமை நிலையானதன்று

இரவுகள்தோறும்
சிரித்துக் கொண்டும்,
கரைந்து கொண்டும்,
வளர்கின்றன பிறைகள்.

ஓர் இரவு, முழு நிலவென
நிறைந்து ஒளியூட்ட,
முயற்சிகள் முடிவதில்லை;

மீண்டும் மீண்டும்
உருவாகும், முழு நிலவு.

இயற்கையிலேயே
முழுமை நிலையானதன்று.


சேவை

மேலிருந்து விழும்
கருணைச் சிதறலை
உறிந்து
எங்கும் பரப்பும்
மண் மெத்தை.


தேடல்

கலையா? வாழ்க்கையா?
இவ்விடையில்லாத்
தேடலின் தூண்டிலில்
சிக்குவதில்லை
நீரோடோடும்
மீன்கள்.


காலக்கடல்
பலர் சிலராவர்
சிலர் பலராவர்
காலக்கடலின்
ஒவ்வொரு அலையின்
எழுச்சியிலும்!

ஒவ்வொரு எழுச்சியும்
ஒரே கடலில்தான்
ஒவ்வொரு வீழ்ச்சியும்
ஒரே கரையில்தான்பிம்பம்

நிலைக் கண்ணாடியில்
பிம்பங்களைக் காண
நானும் ஒரு பிம்பமென
சட்டகம் முழுதும் நிறைய
என்னைத் தாண்டிய
முப்பரிமாணத்தை
மறைத்து விட்டேன்.


பிழை
சிறுவயதில் செய்த
பிழையைத் திரும்பவும்
செய்ய வேண்டாம்.
எதையும், சூனியத்தால்
பெருக்கினால்
மிஞ்சுவது சூனியம் மட்டுமே!


வாழ்க்கை

ஓவியம் புரியவில்லையென
வண்ணங்களை
நகைப்பது போல
வாழ்க்கை புரியாதபோது
மனிதர்களை
நகைக்கிறோம்.


முதல் மிதிவண்டிப் பயணம்

வீதியின் விசும்பல்கள்
காற்றோடியைந்த ராகமாகி
செவிகளைத் துன்புறுத்தாது
மறைந்தன.

தெருவோர நிகழ்வுகள்
பல முகங்களின் வாழ்க்கையை
அம்பலப்படுத்தின
பார்க்க முனைந்த
விழிகளுக்கு மட்டும்

பலவித மரங்களும்
சூழலோடு புணர்ந்து
அகன்ற வீதியின் ஓரங்களிலே
தம் இருப்பைப் போற்றாது மரியாதையோடு
முகம் நிமிர்த்தி நின்றிருந்தன
தம்மை உணராதவர்க்கும் நிழலாக

உலகம் என் கண் முன்
மெதுவாக நகர்ந்தது
தன் எல்லா உறுப்புகளையும்
விரிவாக விளக்கியவாறு,
அசுர வாகனங்கள் நிரம்பிய வீதியின்
ஓர் ஓரத்தில் என்
மிதிவண்டிப் பயனம்
தொடர்கிறது.

சிறகுகள் முளைத்த சுதந்திரத்துடன்
கவலையின்றிப் பார்க்கிறேன்
கவலை தோய்ந்த முகங்கள்,
முன்னேற முந்துவதை.

வியர்வைத் துளிகள்
வீசிய தென்றலால்
குளிர்ந்தன.

(எழுதிய நாள் 07.08.2003)


மழை
மழைப் பருவம் மயக்கியது
மண் மணக்கும் வீதியில்
நீர் குட்டைகளைக்
கலைக்கும் மழை

நானும் கலைக்க முனைய,
உடனே என்னை
உயர்த்தி தேரளில்
சாய்த்துக் கொண்டார்.
விநோத பாஷையில்
வியாதி ஒன்றைச் சுட்டி

தோள் சவாரியும் சுகம்தான். . . .
குடை, உலகை மறைக்க,
கஷ்டப்பட்டுத்தான் அதைக்
கண்ணிலிருந்து துரத்தினேன்

கடவுளிடம் கேட்டு
நானே மேகப்பஞ்சைப்
பிழிய வேண்டும். . . .
மழை நின்றது
“சாமிக்கே கை
வலிக்குமா என்ன?”

அருகில் ஒரு மரம்
சோம்பல் முறித்து,
துளிகள் தெளித்தது.
நின்று கொண்டே இருக்கின்றன.
அவை சோம்பேறிகள்.

அட வண்ணமயமாய் பூச்சிகள்!
கடவுள் ஏதேனும்
சேதி சொல்லி அனுப்பியிருப்பாரோ?
கோயிலில், அன்று
அவரிடம் ஒன்று கேட்டிருந்தேன். . . .

வீட்டு வாசலில் இறக்கிவிட்டு
அப்பா சொன்னார்
“அம்மா, . . .என்ன மழை!”
ஹ்ம்ம்ம் . . . . அதற்குள் வந்துவிட்டோமே?!
(எழுதிய நாள் 28.02.03)


Series Navigation

எஸ் அனுக்ரஹா

எஸ் அனுக்ரஹா

கவிதைகள்

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

கருணாகரன்


போக மறுத்த வெளிச்சம்

பகலில் வந்த வெளிச்சம் விளையாடியது

எங்கும் குழந்தைக் குதூகலத்தின்

மணிகள் மின்ன

அது கொண்டு வந்த பொம்மைகள்

பூமியெங்கும் சித்திரங்களாயின

பெய்யும் நிழலோடு

வந்த வெளிச்சம் தங்கியது ரகசியமாய்

இலைகளினடியிலும் மூலைகள் மறைவிடங்களிலும்

உன் அக்குளிலும்

இறுக மூடப்படாதிருந்த பாத்திரங்களிலும்

எங்கும் நிரம்பியிருந்த தது அலைகளோடும்

நிறங்களோடும்

பாத்திரங்களைத்திறந்த போது

முகத்தில் படர்ந்தது பகலின் வாசனை

உன் அக்குளை முகர்ந்தபோது

ஒளியின் வாசனை அழைத்துச் சென்றது

சூரியனிடமும் அது தன்னுள் நிரப்பிவைத்திருந்த

பாற்கடலிடமும்

போக மறுத்து விளையாடிக் கொண்டிருந்த

வெளிச்சத்தின் மென்குரலைக் கேட்டவேளை

என்னால் நம்ப முடியவில்லை

அதன் ஒளிக்கூருக்கும்

வெம்மைக்கும் இடையில்

இந்த மலர் எவ்விதம் மென்குரலானதென்று

இரவுக்கு அப்பால் விலகிச் செல்லும்

வெளிச்சத்தின் பயணப்பாதையில்

தூவிச் சென்ற துளிகளில்

மிஞ்சிய பகல்

பாடிக் கொண்டிருந்தது குழந்தையின் வேடிக்கை பொங்க

இரவை மெல்ல அவிழ்த்துக் கொண்டிருந்தது

ரகசியமாய் வெளிச்சக்குழந்தை

இன்னும் அதே வேடிக்கையாய்


உறக்கத்தில் வந்த மழை

உறக்கத்தில் வந்த மழை

தங்கியது இலைகளின் மீதும்

நிலத்தினடியிலும் மௌனமாக

தன் இரைச்சலையடக்கிக் கொண்டு

மெல்ல இறங்கியது சிறகுகளோடு

பூமியொரு பாத்திரம்

சிறகுள்ள மழையை

கருணையோடு ஏற்று

தன் மடியில் வைத்துப் பகிர்ந்தளித்தது

தாவரங்களுக்கும் கானுயிர்க்கும்

பிறவுக்கும்

குருதியொழுகும் மரங்கள்

பறக்கத்தொடங்கிய அதிகாலையில்

ஒரு மெல்லிய இருள் கசிந்து கொண்டிருந்தது

வானத்தின் அடிவயிற்றில்

அது நிலம் விட்ட மூச்சு

கொப்பளிக்கும் தனிமைக்குரல்களில்

ஊறிச் சுடரும் பானத்தை

நாங்கள் பருகினோம் மழையை வருடிக்கொண்டு

கைகளிலிருந்து கழன்ற விரல்கள்

மலர்கின்றன மழைத்துளிகளில்

ஒவ்வொரு மழைத்துளியும் ஒவ்வொரு மலர்

வானம் மலர்கள் மிதக்கும்

வாசனை மண்டபமாயிற்று

பனங்கூடலின் மீது தன்னிசையை மீட்டிய மழை

கடலின் வாசனையை

பரப்பியது பனைகளிடம்

பனைகள் ஆடிக்களிக்க அம் மலர்த்துளிகளில்.

சொற்களின் புதைகுழி

நொதித்துத் ததும்பிக் கொண்டிருந்த

நிலத்தில்

வடிந்து கொண்டிருந்த ஊனத்தைப்

பின்தொடர்ந்த குழந்தையொன்று

கண்டது சொற்களின் புதைகுழியை

இரத்தக்கறையும்

துருவும் படிந்திருந்த சொற்களில்

ஒட்டிக்கிடந்த காலத்தின் துகள்களில்

மின்னின கண்ணீர்த்துளிகள்

மெல்ல அந்தக் கண்ணீர்த்துளிகளை

தொட்ட குழந்தை அதிர்ந்தது

உடைந்தொழுகிய அவற்றின் குரலைக் கேட்டு.

நாறும் அந்தச் சொற்களின் துருவை விலக்கிய குழந்தையின் விரல்கள் காயம் பட்டன

காலத்தின் துருவேறிய அந்தச் சொற்களில் இன்னும்

வன்மம் நிறைந்திருந்தது உக்காமலே

எனினும் மெல்ல

அந்தச் சொல்லை எடுத்து அதன் அடையாளத்தைக்

கண்டபோது

அதிகாரம் என்று அது துப்பாக்கி வடிவிலும்

கத்தியின் உருவிலும்

வதையின் ஈனக்குரலோடும்

சிறைக்கூட விலங்குகளின் கனத்தோடும்

இருந்தது.

இன்னொரு சொல்லை எடுத்த குழந்தையின் உடல் நடுங்கியது

அதனுள்ளிருந்த மின்னலைகள் தாக்கி

போர் என்ற அந்தச் சொல்லில் ஏராளம் ஏராளம் உயிர்களின்

முனகலொலி அதிர்ந்து கொண்டேயிருந்தது.

பிறகவை ஒவ்வொரு கண்ணாக

பெருகிக் கொண்டிருந்தன

குழந்தை அந்தச் சொல்லை

உதறியெறிந்தது

ஆனால் அந்தச் சொல் குழந்தையுடன் ஒட்டிக் கொண்டது

அப்படியே அது

அதைச்சுற்றி விரிந்து தன்னுள் இழுத்தது குழந்தையை

குருதியொழுக தவழ்ந்து வந்த குழந்தை

இப்போது தன்கையில் அகப்பட்ட சொற்களை எல்லாம்

விலக்கி

வெளியே வந்தது

என்றபோதும் புதைகுழியிலிருந்த சொற்களெல்லாம்

குழந்தையைப்பின் தொடர்ந்தன

வலையில் வரியும் படையின் அணிவகுப்பாய்

இன்னும் குழந்தையைத் தோற்கடிக்கும்

அத்தனை சொற்களும்

ஒரு கண்ணியில் பொருந்திக்கிடந்தன

வெடிகுண்டுகளின் ரகசியங்களுடன்

குழந்தையைப்பின் தொடர்ந்த

அந்தப் புதைகுழியின் நிழலில்

மறைந்திருந்தன

இன்னும் சிறை விலங்கு

புலனாய்வு மற்றும் அரசியல்

படை மறுமலர்ச்சி

சுதந்திரம் ஜனநாயம் விடுதலை தேசியம்

அன்பு கருணை பகை கோபம் பரஸ்பரம் என்று ஏராளம்

எதிரர்த்தச் சொற்கள்.

திறந்த புதைகுழியை யாராவது மூடுங்கள்

என்ற குழந்தையின் கேவல் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

எல்லோருடைய புலன்களையும் ஊடுருவிச் செல்லும்

நுண்துளைப் பெருக்கியினூடாக.


கண்ணழிந்த நிலத்தில்

கண்ணழிந்த நிலத்தில்

முளைகளின் ஒலியெழுந்தபோது

தாழ்ந்த மரக்கிளைகளிலிருந்து விழுந்தது

உறங்காச் சூரியன்

கூடுடைந்து

எழுந்த முளைகளின் பேரலை

பரந்தது வௌ;வேறு

திணைகளில்

உருக்குலையும் காலையில்

துருவேறிய மலர்களை

எடு;த்துச் சென்றார் கடவுள்

பதற்றத்துடன் விரைந்து

சந்தையிலிருந்து திரும்பிய

பெண்ணிடம்

தன்னை அறிமுகப்படுத்திய கடவுள்

கேட்டார் இரண்டு காசுகளை கடனாக

பசி தணிந்த பிறகு காத்திருந்த

கடவுளை ஏற்றிச் செல்லவில்லை

எந்தப் பேருந்தும்.

யாரும் பேசாமற் சென்றபோது

தனித்த கடவுள்

வாழ்ந்து விட்டுப்போங்கள் என்றார்

துருவேறிய மலர்கள்

கல்லாய் இறுகி மலைப்பாதமாகின

அதுவே கடவுளின் பாதம்

என்றாள் கடன் கொடுத்த பெண்.

கண்ணழிந்த நிலத்தில்

இப்போதிருந்தன

அந்தப் பெண்ணின் ஒரு சோடிக்கண்கள்

நெருப்புமிழ்ந்தபடி.

அதனுள்ளிருந்தது ஒரு பாற்குடம்

அவளிதயத்தின் வடிவில்.


poompoom2007@gmail.com

கருணாகரன்

Series Navigation

கருணாகரன்

கருணாகரன்

கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

பைசால்


இடைவெளி

அதிகமான நாட்கள்
நாங்கள் பேசியிருக்கமாட்டோம்

வீட்டில்
தொலைபேசிக் கட்டணம் அதிகம்
தொடர்ந்து துண்டிக்கப்பட்ட தொலைபேசியை
தூக்கி
அது அடைத்துவந்த அறைக்குள் வைத்துவிட்டோம்

“இடைவெளி நிரப்புக”
என்ற சொல்லை என்னாலும் மறக்க முடியாது
இதைத்தான் நீ கடைசியாகப் பேசிவிட்டுப்போனாய்

பஸ்ஸில் போகும்போது
அடையாள அட்டை தவறியதாகச் சொன்னாய்
நான் நினைக்கிறேன்
இலேசில் நீ வீடுபோய் சேர்ந்திருக்க முடியாது

என் வீட்டு
தென்னை மரத்திற்குக் கீழ்
இப்போது யாருடனும்
நான் அமர்ந்திருப்பதில்லை
என்பதையும்
உனக்கு அறிவிக்க எண்ணியிருந்தேன்

நாம்
அருந்துவதற்காக வந்த தேநீர்
சுடுகிறதென்று சொல்லி
கதிரையில் இருந்தவாறு கீழே வைத்தோம்
கோப்பையில் தேங்காய் விழுந்து
தேநீரைக் குடிகுடியென குடித்துவிட்டு
எழுந்து நடந்து சென்றது
ஒரு மனிதன்போல்

என் வீட்டு
தென்னை மரத்திற்குக் கீழ்
இப்போது யாருடனும்
நான் அமர்ந்திருப்பதில்லை
என்பதையும்
உனக்கு அறிவிக்க எண்ணியிருந்தேன்

அவன்தான் தேங்காய் மனிதன் என்றாய்
நான்
அவன்தான் தேங்காய் மடையன் என்றேன் சிரித்துக் கொண்டு
அதன் பிறகு பேசமுடியாமல் போனது
அதனால் நானின்னும்
தொலைபேசி இணைப்பைப் புதுப்பிக்கவில்லை.


நள்ளிரவில் சிறுவன் கொக்குகளை உலர்த்துகிறான்

பகலின் குருடு நள்ளிரவு
இரவின் தெளிவு நடுப்பகல்

நள்ளிரவில் சிறுவன்
கொக்குகளை உலர்த்துகிறான்

நீரின் கதவுகள் திறந்து
உள்ளே நுழைய விருப்பம் தெரிவித்தது கொக்கு
அங்கே ஒரு மீன் கவிதையெழுதியது

“எனக்கு இரண்டு உதடுகள்
என்னை நானே முத்தமிடுகிறேன்
எனக்கு இரண்டு கண்கள்
என்னை நானே பார்க்கிறேன்
எனக்கு இரண்டு கைகள்
என்னை நானே தடவிக்கொள்கிறேன்
எனக்கு இரண்டு கால்கள்
நானே நடந்து செல்கிறேன் ஊரெல்லாம்”

மீன்களின் முத்தங்களைக் கொல்லுவது,
அதன் விரல்களிலிருக்கும் கவிதைகளைக் கொல்லுவது
என் பசியல்ல
என்று பாடிக்கொண்டு பறந்தது கொக்கு

பசியோடிருந்த சிறுவன் அதிர்கிறான்

நேற்று உலர்த்திய கொக்குகளுக்கு
உயிர் வாங்கச் செல்கிறான்
வழியில் தன்னுயிரை யாரோ எடுப்பதுபோல உணர்கிறான்

உயிர்த்திருடர்கள் இங்கு அதிகம்
திருடர்களுக்கு
இத்தனை உயிர்களும் அதிகம்

குடித்து முடிக்கமாட்டார்கள்


நான் ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்

நான்
ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்
என் மனைவியின் தலையில் நடுவதற்கு

பசளை உண்ணத் தெரியாது
நீர் அருந்தத் தெரியாது
பராமரிக்கத் தெரியாது என்று அவள் சொன்னாள்

நான்
ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்
என் காதலியின் தலையில் நடுவதற்கு

இன்று
அது நீண்டு வளர்ந்து
நிலாக் காலங்களிலும்
குளிர் காலங்களிலும்
என் முகம் முழுவதையும் மூடிக்கொள்கிறது

பைசால், இலங்கை


athanaal@gmail.com

Series Navigation

பைசால், இலங்கை

பைசால், இலங்கை

கவிதைகள்

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

விழியன்


நாடகம் நடுவே

உடைந்து கொண்டுதானிருக்கின்றது
காரணங்களை தானே உருவாக்கியபடி
தூரத்தே நிகழும் உடைப்புகள்
ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து
கனக்கிறது கசிவுடன்
யாருக்காக வருந்துவது?
அடுத்த கணம் ஏதும்நடவாததுபோல்
இதழோர புன்னகையுடன் கடந்துவிடுகிறேன்
வலிகள் கொடுத்த வலுவில்குழந்தை(பருவம்)

உன் பூனையும் என் புறாவும்
சண்டை போட்டதன் பின் திட்டியதற்கா?
கேரம் போர்டில் தோற்றுப்போனதற்காய்
கலைத்துவிட்டு மொண்டியடித்து ஓடிவிட்டதற்கா?
மாமா கொடுத்த பம்பர கயிறை
நான் மறைவாய் ஒளித்து வைத்தற்கா?
எதற்கு உம்மென இருக்கிறாய்
சாரி அக்கா
ஓரமாகவே உட்கார்ந்து என்ன தான் செய்கிறாய்?
நான் உன்னிடம் ஏன் வரக்கூடாது?
அக்கா என்னுடன் விளையாட வருவியா?


http://vizhiyan.wordpress.com
umanaths@gmail.com

Series Navigation

விழியன்

விழியன்

கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

ரசிகவ் ஞானியார்


குறுக்குச் சுவர்

ஏறவிடாது வழிமறித்து
பேருந்தின் படிக்கட்டில்
தொங்கும் பயணிகளை
சில சமயம்
தள்ளிவிட்டுவிட்டுதான்
மேல் ஏற வேண்டியதிருக்கிறது

வாழ்க்கையிலும் அப்படித்தான்இருக்கவோ ? எழவோ?

இருக்கையின் நுனியில் ….
மனப்போராட்டம் !

பெரியவரின் தள்ளாமை …
தர்மசங்கடப்படுத்துகிறது !

இருக்கவோ ? எழவோ?

எழுந்துவிட தீர்மானித்தேன்
இரக்கத்திற்காக அல்ல ..
இறக்கத்திற்காக !

எனது நிறுத்தத்திலேயே …
மனிதநேயமும் இறங்கிப்போனது!rasikow@gmail.com
– ரசிகவ்

Series Navigation

ரசிகவ் ஞானியார்

ரசிகவ் ஞானியார்

கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

உஷாதீபன்


இழப்பு

எப்படிச் சொல்ல
அந்தச் சோகத்தை-மகனே!
உனக்கு
கிட்டிப்புள் விளையாட்டு
தெரியுமா?
கோலியாடியிருக்கிறாயா?
எத்துக் கம்பு?
செதுக்குச் சப்பா?
அட…
பம்பரமாவது விட்டிருக்கிறாயா?
பாண்டியாவது உண்டா?
பச்சைக் குதிரை தாண்டியிருக்கிறாயா?
இல்லையா?
போச்சு!@ அத்தனையும் போச்சு!!
என்ன படித்து என்ன பயன்?
உன்
இளமைக் காலங்கள்
இழந்த காலங்கள்
நீ எவ்வளவு பெரிய
வேலைக்குப் போனாலும்
எத்தனை கைநிறையச் சம்பாதித்தாலும்
இந்த இழப்பு
ஈடு செய்ய முடியாதது
உன்பாலான
இந்தத் தாக்கம்
எனக்கு
தீராத மனச்சுமைதான்!!


அவன்
அந்த வளாகத்தில்
நுழையும் போதெல்லாம்
கையை நீட்டுகிறான் அவன்
அவனின் பொழுது – இன்று
என்னிலிருந்து துவக்கமா? – அல்லது
ஏற்கனவே துவங்கி விட்டதா?
எப்படியாயினும்
விடுமுறை நாளன்று
என்னின் எதிர்பார்ப்பு
உண்டு அவனுக்கு
அவனின் அந்த எதிர்பார்ப்பும்
அறியும் என் மனது
மனசு ஊனமுறாமல்
போட்டுவிடவேண்டும்-அந்த
ஊனமுற்ற நண்பனுக்கு


தேவை
குறைந்த சம்பளம்
நிறைந்த மனது
அப்பாவுக்கு
நாற்பதாண்டு காலம்
மாடாய் உழைத்த அவர்
ஒரு நாளும்
மனம சலித்ததில்லை
ஆனால் இன்று
இருபத்தைந்து வருட சர்வீஸில்
ஏகமாய்ச் சலிக்கிறது மனது
அப்பா காலத்தில்
லஞ்ச லாவண்யமில்லை
இன்றோ
ஊடுபாவாகி –
புரையோடிப் போயிருக்கிறது
இதற்கு மத்தியில்
நேர்மையாய் சர்வீஸ் போட
குறைந்தபட்சம் அந்தச்
சலிப்பாவது வேண்டாமா??


Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்

கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

ந. அனுராதா


கனவில் நீந்தும் கள்வன்
கனவுகள் உதிரத்துவங்கும் ஒரு காலையில்
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
கூட்டுக்குள் ஒரு கள்வனைப் போல்
நுழைந்தான்
என் நேற்றின் மிச்சமானவன்

என் மூச்சின் உச்சத்தின்
ரகசியம் புரிந்து
என்னை அள்ளி வெளியே வீசி
தன்னை என்னுள் நிரப்பினான்.

நீண்ட மரங்கள் அடர்ந்த
ஒரு பனிச் சாலையில்
மெல்ல நடுங்கும் என் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறான்.

ஒற்றை விளக்கெரியும்
இருட்டுப் புள்ளியின் திசை நோக்கிப்
பயணம் புரிகிறோம்

ஒருவரோடு ஒருவர் பேசாமல்

என் கூடு தானே தன்னை
கிழித்துக் கொள்ள வாயிலில் காத்திருக்கிறது

உதிக்கும் சூரியன் பரப்பும்
செவ்விள காலை எனக்குள் விரிய‌

என் பனி மெல்ல உருகி முத்தாக‌
ஊர்வலத்துக்காய்

ஏந்தும் தோளுக்காய் பசியுடன்…

இமை மீறி நீந்தும் நீருடன்…விரையும் குதிரை

இருண்ட குகையினுள்ளே
மெல்ல ஊர்ந்து சென்றுகொண்டிருக்கின்றன‌
நினைவு எறும்புகள்

ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே
அந்நியமாய் நலம் விசாரணைகள்.

நடக்கும் போதே தூங்கிப்போன
குழந்தையாய்
தோளில் தூக்கிக்கொண்ட உன் ஞாபக எச்சங்கள்

உள்ளே வழியும் வெண் ரத்தம்
நக்கிச்சுவைக்கும் நாக்காய்
நம் பிரிவின் மிச்ச நிமிடங்கள்

கண்ணில் தெறிக்கும் காதலுடன்
கைகள் வழியும் காமத்துடன்
உன் கன்னம் தீண்டிய
என் உள்ளங்கை முழுதும்
உனதான ரேகைகள்

விரிந்த கடலின் அலையின் மேல்
கதிரவன் இல்லா வானம் தேடி
விரையும் குதிரையாய்
நம் வாழ்க்கைக் கடிவாளம்


anuradan@gmail.com

Series Navigation

ந. அனுராதா

ந. அனுராதா

கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

ந. அனுராதா
என் காதல் காடு

இறுகும் இதய வட்டத்தின் நடுவில்
எரியும் தணலாய் நீ
வெந்து தணியும் என் காமக்கூட்டில்
முதல் தீயை வைத்துவிட்டு
கண் சிமிட்டியவாறே தூரத் தெரியும்
மலைப் பள்ளத்தாக்கினுள் சென்று மறைந்தாய்

தொடரும் நெருப்பில்
கருகும் சிட்டுக்குருவியின் இறகாய்
என் காதல் காடு
உனக்கான பூங்கொத்தோடு ம‌ட்டும்
காத்துக்கொண்டு இருக்கிற‌து மிச்ச‌மான‌ வ‌லியோடு

கான‌க‌த்தின் ந‌டுவில் ஓர் ஒற்றைக்குர‌ல்
தின‌ந்தோறும் பாடுகிற‌து
கேட்ப‌வ‌ர் இல்லாம‌ல்

க‌ட்டிய‌ணைத்து முத்த‌ம‌ழை பொழிந்து
சூடு த‌ணிவித்த‌ என் உட‌ல்கூடு
த‌ன்னைத்தானே கொளுத்திக்கொள்கிற‌து

த‌ன் ர‌த்த‌ம் சுவைக்கும்
ப‌சித்த‌ நாயாய்எனக்கான‌ கேள்விகள்

விரல் நீட்டப்படுகிறது
சுற்றும் சக்கரம் கையில் ஏந்தி
உதிர்ந்த வார்த்தைகள்
கவனமாக சரம் கோர்க்கப்படுகின்றன.

மயிலிறகு சொருகி
கண்முன்னே வலம் வருகின்றன
வாளேந்திய கேள்விகள்

வளைந்து நெளிந்து புற்று நோக்கி
வடிவம் எடுத்து போகின்றன.

நெடிதுயர்ந்த நீல நிறம்
ஆலகால விஷம் உண்டு
பொலிவு பெறுகிறது.

நடப்பவை நன்மைக்கே என
உபதேசம் செய்து
இதழ்கோடியில் விஷமப் புன்னகையுடன்
துயில் விழிக்கிறது
சுற்றும் உலகின் விட்டம் அளக்க

உண்மை உணர்ந்து
இயலாமையுடன்
கண் மூடித் தொடங்குகிறது

மோன தவம் மரத்தடியில்

எதிர்வரும்
வேட்டுவ அம்பு நோக்கி


anuradan@gmail.com

Series Navigation

ந. அனுராதா

ந. அனுராதா

கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

உஷாதீபன்


“தவறியவர்களுக்கு”

வேலை கிடைக்கும் முன்
வேலை வேலை என்று அலைந்தோம்
கிடைக்குமோ கிடைக்காதோ என்று
ஏங்கினோம்
கிடைக்காமலே போய் விடுமோ என்று
பயந்தோம்
ஓடி ஓடி விண்ணப்பங்கள்
வாங்கினோம்
தேடித் தேடித்
தேர்வுகள் எழுதினோம்
தேறினாலும் நழுவிடுமோ
என்று அஞ்சினோம்
விரட்டி விரட்டி
நேர்முகம் கண்டு
இன்று
கைப்பிடியில் ஒரு
அச்சாணி
கால் பதித்து நிற்கும்
தடம்
எல்லாம் சரி!
காலக் கணக்கை
அறுதியிட்டதுபோல்
கடமைகளையும் உணர்ந்தோமா?
சார்! இந்த ரிப்போர்ட்டை
மானேஜர்
ரெடி பண்ணச் சொன்னாரு
இன்னைக்கே அனுப்பணுமாம்!
அட! வையப்பா!!
அதுக்கென்ன இப்ப அவசரம்?
அவருக்கு வேறே வேலையில்லை?
எங்கிருந்து வந்தது
இந்த மெத்தனம்?


பிறகு பார்ப்போம்…

வந்திருக்கிறார்
போய்ப் பார்ப்போம்
நண்பர் சொன்னார்
நறுக்காக…!
எதற்கு? என்ற
என்னின் கேள்விக்கு -ஒரு
அறிமுகம்தான்
நம்மை
அறியவைக்க என்றார்
வேடிக்கைதான்
அவரை நான்
அறிந்தது -அவரின்
எழுத்தின் பேரில்
பிறகென்ன நேரில்?
அதுபோல்
என்னை அவர்
அறிவதும்
அறிய வேண்டியதும் – என்
எழுத்தின் மூலம்தானே?
என்ன போய்ப் பார்ப்பது?
பேசட்டும் என் எழுத்து
பேசப்படட்டும் முதலில்
பிறகு பார்ப்போம்
நேரின் தேவையை!


தெரிந்ததுபோல்
காட்டிக் கொள்வதில்
இருக்கும் அவஸ்தை
‘தெரியாது’ என்று
சொல்லி விடுவதில்
இருக்கும்
அறியாமையைவிட
உயர்ந்ததாயின்
அந்த
அறியாமைதான்
எனக்கு
கௌரவம்!!ushadeepan@rediffmail.com

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்

கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

கருணாகரன்


திசையழிவு

உடைந்து நொருங்கிய

மலர்களிலிருந்து சிதறிய குருதியில்

இருண்ட திவ் வெளி

தவித்தன நிறங்களும்

வாசனையும்

பெயர முடியா திறுகிய

நிலவில்

உறைந்தது இரவு

வெளியிலிருந்தும்

மரங்களிலிருந்தும் விலகிய

பறவை

கனலோடலைந்தது

கூடு தேடி

மரங்களும் வெளியுமற்ற

திசையில்

காலம் உருகி உறைந்தது

ஒரு கிண்ணத்தில்

அதன் சுவையாகத் திரண்டது

பறவையின் கனவும்

கூடும்.


செல்லாத சொற்களோடு

எங்கும் செல்லாத சொற்களோடு

தெருவில் நீ போனபோது

இரவில்

தூங்கமுடியாது நீ தவித்தபோது

உன் தொண்டைக்குழியில்

உயிர் முடிச்சிறுகியபோது

வலையில் நீ சிக்கிய பூச்சி

வலையோ

எல்லாக்கண்ணிகளாலும் தொடுக்கப்பட்ட

உலகம்

உனக்கெனவும் எனக்கெனவும்

ஒவ்வொரு கண்ணியிலும் விரிந்த சிறை

வலையில்

ஒடுங்கியது

உன் கானற் சொற்களின்

கொதிப்போடு

எனதும்தான்

யாரும் கேட்கவில்லை

உனது முறையீட்டை


>b>
பூட்டுகள் பூட்டுகள் பூட்டுகள்

எல்லாப்பூட்டுகளோடும்

இணைந்திருந்த வலைகள்

பிரித்தறியத் தெரிந்திருந்தன

நுட்பமாய்

உனது சொற்களை வேறாகவும்

உன்னை வேறாகவும்

அவை தெரிந்திருந்தன

இன்னும்

உனது சொற்களைத்தவிர்த்து

உன்னை தேரவழியில் ஒரு நாற்காலி

வழியில் ஒரு நாற்காலி

தனித்திருந்தது

விட்டுச் சென்றோருக்காகவா

வருவோருக்காகவா

மிஞ்சிய அதன் நினைவுகளில்

விடை பெற்றது யார்

இனி

வரும் விருந்தாளி யார்

யாருடைய நிழலும்

அதனிடமில்லை

பல்லாயிரம் வேர்களோடும்

பற்கள் கொம்புகளோடும்

வளர்ந்து மலையலாம் அது

சிலபோது

சிறகோடு

காற்றிலேறி வினோதப் பறவையாய்க் கரையலாம்

எப்படியோ

வழியில் ஒரு நாற்காலி

தனித்திருக்கிறது.


இசை மொழி

பாடுக என்ற இசை மொழியைச்

சொன்ன காற்றிடம்

பாடியது பறவை

தன் அந்தரங்கத்தின்

உள்@றிய சுனையை

மரங்களை வாழ்த்தி

காற்றை வாழ்த்தி

வெளியை வாழ்த்தி

தன் சிறகை வாழ்த்தி

பறவையின் அந்தரங்கச் சுனையை

அறிந்த காற்று

கொண்டு சென்றது

மரத்திடம் வாழ்த்துகளை

வெளியிடம்

நன்றியை

சிறகிடம்

குதூகலத்தை

அந்தத் திருவிழாவில்

ஒரு விருந்தாளியும்

கலந்திருந்தார் தோழமை நிரம்ப

சே (குவேரா)

இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள்.


poompoom2007@gmail.com

Series Navigation

கருணாகரன்

கருணாகரன்

கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

மதியழகன் சுப்பையா


வேடைக்குருதி கசியும்
புதுக்காயங்கள் பெற்று

இருட்டின் அடர்த்தியில்
மயிரினும் மெல்லிய வழித் தேடி

நுரையீரல் நீர்கனக்க
தனிமையாழியுள் ஆழ்ந்து

பசிக்கு மலம் புசித்து
பிணக்குழியில் படுத்துறங்கி

துன்பமொழி பிணாத்தி
தன்னோடு தான் பேசி

பொல்லாப் பொழுதுகளை
புலம்பியழுது போக்கி

நிராகரிப்பு எச்சிலால்
உடல் நனைந்து நாறி

உண்ட நஞ்சதுவோ
ஜீரணமாகி ஜீவன் தர

ஏதோ பிழைத்துக் கிடக்குமென்னை
வார்த்தைகளால் மீட்டெடுக்க
வருவாளோ தேவதை


உன் மவுனங்கள் புரியுமெனக்கு

காலையிலும் மாலையிலும்
தவறாது அழைத்துப் பேசும்
ஒழுங்கு

கூர்மையில் கிழிபடாது
பயணிக்கும் நத்தைபோல்
உரையாடல்களில் அத்தனை
கவனம்

தகாத-கூடாத- வேண்டாத
என தவிர்த்து; தேரும்
வார்த்தைகளில் வெளிப்படும்
அனுபவம்

அனுமதிக்க மன்னிக்க கோரி
விபரம் விசாரிக்கும்
குழைவு

குரல் மெலிகையில்
நடை தளர்கையில்
குறிப்பறிந்து நடக்கும்
கனிவு

விடு என்றால் விடவும்
கொடு என்றால் தரவும்
செய்யும் அடிபணிவு

இரும்புப் பந்தொன்றை
குரல்வளைக்குள் இறுக்கி
விழிபிதுங்கி நீ காட்டும்
மவுனங்கள் புரியுமெனக்கு


மவுனப் பயணி

இருக்கை மேல்
கால்கள் பரப்பி
அமர்கிறாய்

இருட்டில் ஊடுருவி
வெளிச்சம் தேடுதுன்
பார்வைகள்

உனக்குப் பின்னாலிருந்த
முகம் மலித்த இளைஞனும்
இறங்கிப் போய் விட்டான்

புத்தகத்தை மடித்து
வைத்துவிட்டு
உன் முகம் பார்த்து
புன்னகைத்தபடியிருக்கும்
என்னைப்பார்த்து
குறைந்தபட்சம்
புன்னகைத்திருக்கலாம் நீ

அடுத்த ரயில்
எப்பொழுது வருமென்று
கவலையோடு கேட்டாய்

இருபது நிமிடங்களில் என
நம்பிக்கையோடு பதிலளித்தேன்

ரயில் வரும் வரை
நீ எதுவும் கேட்கவில்லை
நான் எதுவும் சொல்லவில்லை

நம் மவுனம் கலைக்க
வந்து சேர்ந்தது
மின்ரயில்


தோள் சாய்ந்திருக்கிறாள்
தேவதையாய் ஒருத்தி

ஐந்து ரூபாய்க்கு ஆறு
எனக் கூவுகிறான்
அரைநிஜார் பையன்

கார்டூன் பாத்திரமொன்றை
நினைவூட்டும் ஜாடையில்
பல்தெரிய சிரிக்கிறான்
பைஜாமாக்காரன்

முலைபெருத்தவளோடு
ரகசியம் பகிர்கிறான்
புஜம் பருத்தவன்

துண்டு துண்டாய் ஏப்பம்
விட்டபடி வயிறு
தடவுகிறான் தடியன்

கம்பி தொங்கியபடி நால்வர்
வாசல் நின்றபடி ஐவர்
இறங்க ஆயத்தமாய் அறுவர்

எதையும் கவனியாது
விரித்த புத்தகத்துள்
படுத்துக் கிடக்கிறாய்
என்ன படிப்பாளி நீ?

கிடைத்து விடுகிறது
ஜன்னலோர இருக்கை

கண் கூடுகிறது
வழிநெடுக பசுமைகள்

கொரிக்கக் கிடைக்கிறது
கடலையும் மிட்டாயும்

பருக கிடைக்கிறது
தூயக் குடிநீர்

ஊர் விசாரிக்கிறான்
சாப்பாடுக் காரன்

கதை சொல்லி காசு
வாங்குகிறான் பிச்சைக்காரன்

அத்துமீறி ஏறும் ஆட்கள் கூட
போகுமிடம் கேட்கிறார் சைகையால்

பயணமுடிவிலும் பேசாது
இறங்கிப் போகிறாய் நீ


madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா

கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

கருணாகரன்


மியூசியத்தில் வைக்கப்படும் நாள்

இந்தக்களைப்பு நீங்க

தண்ணீரைக்குடி

கைவிடப்பட்ட இந்த நாள்

இனி ஒரு போதுமே கிடைக்கப் போவதில்லை

இன்று

துக்கத்தின் கடைசிப்புள்ளியிலிருந்து

திரும்பி

அவரவர் இடத்துக்குச் செல்வோம்.

மெல்ல மெல்ல

வேதனையின் வலி பின்னகர

இறந்தவனின் உயிர்

நம்மை விட்டு நெடுந்தொலைவு போன திசையில்

போகிறது

அவனின் நினைவுகளும்

கரைந்து

கனமற்று.

மெதுவாகவே

பதுங்கி நகர்ந்து வருகின்றன

துக்கத்தின் போது மிரண்டு பின்தங்கிய

வார்த்தைப் பூனைகள்

நம் கால்களுக்கிடையில்

மீண்டும்.

கழிந்து போன பருவகாலமாகிவிட்ட

அவன்

இனி ஒளி மங்கியதொரு புகைப்படமே

வெட்கமாகவேயிருக்கிறது

இந்த நாடகத்தில்

நாமே

நடிப்பதாகவும் நாமே

அதைப்பார்ப்பதாகவும் இருப்பதையிட்டு

தற்செயலாய்

இறந்தவனைக் காணநேர்ந்தால்

உலர்ந்த நினைவுகளை வைத்துக்கொண்டு

என்ன செய்வது

எந்தப்புள்ளியிலிருந்து அவனைத்

தொடர்வது

என்பதும் ஒரு பிரச்சினையே

எல்லாமே மியூசித்திற்குத்தான்

ஒரு போது, எனலாமா


தொண்டன்

இந்தக்கதவுக்கு வெளியே

நிறுத்தப்பட்டிருக்கிறது நெடுநேரமாய்

வரவேற்பு

யாரடையதோ வருகைக்காக

பூட்டப்பட்ட கதவின் வெளியே

நெடுநேரமாய் தனித்திருக்கும் போது

அவமானத்தையும்

நெருடலையும்

சகித்துக் கொள்ள முடியாது

வெளியேறவும்

உள்நுளையவும்

வழியற்று

சலிப்போடு காத்திருக்கிறது

வரவேற்பு

இன்னும் யாருக்காகவோ

அவசரமா

மகிழ்ச்சியா

துக்கமா

தனிமையா எது வருமெனத்

தெரியாமலே காத்திருக்கும்

அசைகின்ற நீள் பொழுது

எந்த முகமும்

இல்லை அதனிடம்

எனினும்

இன்னும் காத்துக் கொண்டேயிருக்கிறது

அது

பூட்டப்பட்ட கதவை விட்டுப் போக முடியாமல்


poompoom2007@gmail.com

Series Navigation

கருணாகரன்

கருணாகரன்

கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

அனுராதா


என் நீ
பிணைந்து கிடக்கிறது
நம் புணர்வின் மிருகம்!
வழியும் வேர்வையை
துடைக்கும் நம் உடலின் வெப்பம்…
ஆதாம் இல்லாத
ஏதேன் தோட்டம் நோக்கிய
நம் பாதையில்
கலந்திருந்த நம் பெண்மைகள்….என் பறவை

எந்த நிமிடமும் அது நடந்துவிடலாம்
நம்மை கடந்து விடலாம்
நம்மில் கலந்து விடலாம்
அந்த நிமிடம் தேடி
காற்றில் அலைகிறது
என் ஒற்றை சிறகு பறவைகல்லறை காமம்

அறை முழுதும் காதல்
படுக்கை கசங்கலில் வழிந்த காமம்
இறுக தழுவிய உடல்களின் நடுவே ஒளிந்த நட்பு
நீல வியர்வையின் வேட்கை
அனைத்தும் கல்லறையில் தஞசம் புகுந்தது
என் இறுதி கேள்விக்கு எஞ்சிய
உன் மெளனத்தில்


anuradan@gmail.com

Series Navigation

அனுராதா

அனுராதா

கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

பைசால், இலங்கைபுளியம்பழம் பாம்பு அல்லது விரல்

பாம்புகள் வாழும் ஒரு புளியமரத்தில்
உயிரற்று நீளும் பழங்கள்

புளியமரத்தின் கீழ் நிற்பதற்குப் பயம்

எத்தனை விரல்கள்
கிளைகளில் பிடித்துவைத்திருக்கும் பொல்லு

என்னையும் தூக்கி கிளையிலே வைத்துவிடும்

தோல்வேறு சதைவேறாகும் வித்தையாடும்
பறவையும் அதில்
கூடிநின்று புதினம் பார்ப்போர் அதிகம்.

அந்த புளியமரத்தடியில்
சுடப்பட்டு அவன் இறந்து கிடக்கிறான்.
Br>

கண்களால் முறண்டுபிடித்துப் பார்க்கும்
கிளைகளால் இறங்கிவரும் பாம்பு அல்லது புளியம்பழம்

திருடனைப்போல், திருடுவதுபோல்
கண்ணாடிப் பாத்திரங்கள் கீழே விழுந்து
வீட்டுக்காரன் கண் விழிக்காமல் திருடவேண்டும்
சதையை,இரத்தத்தை
என்று கற்றுத்தரும் பறவையது.

தோலொரு குகை
பயணிகளில்லாத ரெயில்ப் பெட்டி
சிறு பூச்சிகளோடு பிச்சைக்காரனும் பாதுகாப்பிற்காக
வாழுமிடம்

என் கற்பிணி மனைவி
மடிநிறைய பாம்புகளை வைத்திருக்கிறாள்
கொஞ்சமும் பயமில்லாமல்
கொஞ்சமும் நினைத்தால்
வாளிபோட்டு அள்ளலாம் வாய்க்குள் உமிழ்நீர்அப்பாவியைத் தூக்கும் ஆயுதப் பறவை

என் உயிரை
கொத்திக் கொண்டுபோகிறது
ஒரு ஆயுதப் பறவை
அதற்கு சப்பாத்துக் கால்கள்

அண்டை வீட்டில்
சப்பாத்துக் கால் கோழி
இரண்டு இருக்கிறது
அது ஊத்தைகளைத்தான் உட்கொள்ளும்.

அப்பாவி
வயலுக்குப் போகும் போதும்
ஆற்றுக்குப் போகும் போதும்
வயல் தொப்பிக்காரன், சால்வக்காரன்
என்று பெயர் சொல்லி
அவதானித்திருக்கிறது அந்த ஆயுதப் பறவை.

மரத்திற்கு கீழ்லிருக்கும்
தேநீர்க் கடையில்
இரத்தத்தை தேநீர் என்கிறான் கடைக்காரன்
என் கனவில்

மழைக்காலங்களில்
இடி மின்னலைக் கண்டால்
வானில்
“சிறுமி பெரிதான பட்டமரமொன்றை
ஒட்டியிருக்கிறாள்”
இப்படிப் பேசுவதற்கு அவனில்லையென்பர் சனம்

அண்டை வீட்டுச் சுவரில்
பல்லிகள் காய்த்திருக்கும்
பழுத்து அல்லது அழுகி கீழே விழுந்த கதை வரப்போகிறது.

சுவர்க்கத்து மர நிழலிருக்கிறதே
அதில் நூறு வருடங்கள்
அவன் நடந்து சென்றாலும் நிழல் முடிவதில்லை
என்று ஆறுதல்படுவர் சனம்


தும்பி ஓட்டி

இதழ்களை நெருக்கி முத்தமிட்டாலும்
அந்த தும்பியோட்டியின் கனவு
எனது அறையெங்கும்
வந்து குதிக்கத்தான் செய்கிறது

தும்பியொன்று பறப்பதாகவும்
தும்பியின் வாலில்
மிருகமொன்று இருப்பதாகவும்
வந்து குதிக்கத்தான் செய்கிறது

அது
எனதூர் மிருகங்களை
வேறு நாட்டிற்கு ஏற்றிச் செல்கிறது.

யார் அந்த தும்பியோட்டி?
நானும் விற்பனைக்குவிடும் மிருகங்களை வைத்திருக்கிறேன்
அழகு பார்த்தவைகள்
ஆளைக் கவ்விக் கொண்டுபோனது
இன்னும் பண்ணைக்குத் திரும்பவில்லை
மல வாடையின் மாற்றத்திலிருந்து
தெரிந்து கொண்டேன்.

என்னிடம் அதிக மிருகங்கள் இருப்பதால்
எதுயெது பண்ணைக்கு வரவில்லை
எதுயெது பண்ணையிலிருக்கிறது
என்று பார்க்க
ஒரு வேலையாளும்

அவன் ஒரு மாதமாக
வேலைக்கு வரவில்லை

நடக்கும் பறவைகள்,
சிரிக்கும் பறவைகள்,
பேசும் பறவைகளும் ஒரு பண்ணையிலிருக்கிறது
இன்னும் வரவில்லையா
அந்த தும்பியோட்டி?

அவர்
மிருகங்களைத்தான் வாங்குகிறார்
என்று
என் மனைவி சொல்லும்போதெல்லாம்
தும்பியோட்டியின் மீது
அவளுக்குக் காதலா?

அவருக்கு ஓய்வில்லையாம்
என்று சொல்லும்போதெல்லாம்
தும்பியோட்டி
அவளின் கணவனா?
என்று எண்ணுகிறேன்

செடிகளில் வந்து ஒட்டுகிற பசைப் பறவைகளை
அவள் தினமும் விரட்டுகிறாள்
பாதுகாப்பு வேலிகளில்
ஒன்றுக்கு மேலொன்று
ஏறிக் கூத்தாடி மகிழ்வதை
அவள்
தினமும் விரட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்
என்பதால் எனக்குச் சந்தேகம்

அது
தன் வாலையோ
அல்லது
சிறகையோ பிய்த்துக் கொண்டு பறந்திருக்கக் கூடும்

அவள் அழுதிருப்பாள்

நான் படுக்கையை விட்டெழுந்திருக்கிறேன்என் பாடசாலைக்கு வாத்தியார் வரும் வாகனம்

வெண்கட்டியைக் கையிலெடுத்தேன்
சுவரில் ஒட்டியிருந்த கரும்பலகை விழுந்தது

துண்டு துண்டாக பிரிந்தது
உடையும்போது
தமிழ் எழுத்துக்களும், கணித எழுத்துக்களும்
சிந்தின நிலமெங்கும்

அத்தனையெழுத்துக்களையும் எடுத்து
வாக்கியங்களும், கணக்கும்
அமைத்துக் காட்டச் சொன்னார் வாத்தியார்

விடிந்தாலும் நான் பாடசாலையில்
வெண்கட்டியைக் கையிலெடுப்பேன்

அவருக்கு பலகையுடைந்தது பற்றி
பரவாயில்லை
சட்டைப் பைக்குள்ளொருதுண்டு
அது வடைவாங்கிய மீதிக் காசு
சிகரெட்டு வாங்குவேன் என்பார்

என் பாடசாலைக்கு
வாத்தியார் வரும் வாகனத்தை
அந்த மர நிழலில் வைப்பார்
இலை விழுந்தாலும் கண்ணாடியுடையும்
காற்றடித்தால் இருக்கை கிழம்பும்

யாரோ முதல் சம்பளத்தில் வாங்கியதை
இவர் முதல் சம்பளத்தில் வாங்கியிருக்கிறார்
வீட்டுச் சமையல் வேலைக்கு தண்ணீர்க்குடம் சுமக்கின்றது
அவருக்கு அது பரவாயில்லை
<


athanaal@gmail.com

Series Navigation

பைசால், இலங்கை

பைசால், இலங்கை

கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

சோ.சுப்புராஜ்


ஒலிக்கிறது கைத்தொலைபேசி
ஒருமுறை கூட
என் கைத்தொலைபேசி
ஒலிக்காத நாளில்
உணர்கிறேன் நான்
இறந்து போனதாய்……
**** **** ****
தனக்குத் தானே
பேசிச் சிரித்து அழுது அரற்றி
கொஞ்சிக் குலவி
சண்டையிட்டு சர்ச்சித்து
தனிவழியே போனவளை
மூளை பிசகியவளோ என்று
யோசித்து முடிப்பதற்குள்
கண்ணில் பட்டது அவளின்
கைத்தொலைபேசியின்
காதுமடல் ஒலிவாங்கி……!
**** **** ****
விழித்திருக்கும் போதெல்லாம்
நிறைய நிறையப் பேசினார்கள்;
குறுஞ்செய்திகளை
குறைவின்றி அனுப்பி மகிழ்ந்தார்கள்;
நேரில் சந்தித்த போதுதான்
பேச எதுவுமற்று மௌனமாய்க்
கலைந்து போனார்கள்
தங்கள் தங்களின்
கைத்தொலைபேசிகளுடன்……..!
**** **** ****
எத்தனை பிரியமானவர்க ளென்றாலும்
கைத்தொலைபேசியில்
அவர்களை அழைக்க
கலக்கமாகவே இருக்கிறது;
அவர்களுக்கு
விருப்பமான பாடலையோ
கடவுளைத் தேடும் இசையையோ
காக்கை எச்சங்களைப் போல – நம்
காதுகளுக்குள் பீய்ச்சி
அடித்து விடுகிறார்களென்பதால்…….!
**** **** ****
அடர்ந்த இருளிலும்
துளியும் பயமின்றி தனியாக
நடந்து போகிறாள் அவள்;
பிரியமானவர்களுடன்
கைத் தொலைபேசியில்
பேசிக் களித்தபடி……!
**** **** ****
எழுதியவர் :
engrsubburaj@yahoo.co.in

Series Navigation