ஹாங்காங்கில் இந்தியப் பண்பாட்டு விழா

ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் மார்ச் 13ஆம் தேதியன்று இந்தியப் பண்பாட்டு மாலை எனும் கலை நிகழ்வை அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் நடத்திக் காட்டியது. இந்தியாவை விட்டு பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழும் இந்தியர்கள் அனைவரும் தத்தம் பண்பாட்டை மறவாமல் நினைவு கூர்வதற்காகவும் இளைய சழுதாயத்திற்கு நம் கலாச்சராத்தின் சாரத்தைக் காட்டுவதற்காகவும், ஹாங்காங்கில் வாழும் இந்திய சழுகத்தினரை இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ள அழைப்பு விடுத்தது. ஹாங்காங் வங்காளச் சங்கம், மஹாராஷ்ர மண்டல், கன்னட சங்கா ஹாங்காங், ஸ்ரீ சக்தி […]