திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060616_Issue

அரசியலும் சமூகமும்

கண்ணகி எதன் அடையாளம்?

பரிமளம்வடமொழியின்றித் தமிழால் தனித்து இயங்க இயலாது என்றும், தமிழிலக்கியங்களும் வட இலக்கியங்களுக்குக் கடன் பட்டவை, இரண்டாந்தரமானவை என்றும் தமிழெதிர்ப்பாளர்கள் நெடுங்காலமாகக் கூறிவந்தனர். தமிழரின் தன்மானத்துக்குச் சவால்விடும் இந்தக் கருத்துகளை அவ்வப்போது பலர் எதிர்கொண்டும் வந்தனர்.…

ஒரு சிலையும் என் சிலம்புதலும்

காஞ்சனா தாமோதரன் மூத்த எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் கண்ணகி பற்றி எழுதியிருந்தது வாசிக்கக் கிடைத்தது. சிலை வைக்கிற அளவுக்கு அவள் அறிவாளியா நெஞ்சில் ஈவிரக்கம் உள்ளவளா எனக் கேட்டு, ஒரு முட்டாள் கதைப்பெண்ணுக்குச்…

தேரா மன்னா! செப்புவது உடையேன்!

நாக.இளங்கோவன்-------------------------- சன்னல் பதிவில் மாலனின் பகுத்தறிவு வெள்ளமாய் ஓடுகிறது. அதுவும் கண்ணகி என்றவுடன் கரைபுரண்டு காட்டு வெள்ளமாயும் ஓடுகிறது. (http://jannal.blogspot.com/2006/06/blog-post.html ) சிலப்பதிகாரம் பெருமிதம் கொண்ட காவியம் என்கிறார். அதில் உள்ள பல கூறுகளைப்…

அரசு ஊழியர்களுக்கு மணி கட்டுவது யார்?

செல்வன் இந்தியன் படம் திரையரங்கில் பார்க்கும்போது லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கமல் அடித்து உதைப்பது போல் காட்சி வரும்.தியேட்டரில் அதற்கு என்ன விசில் சத்தம் என்கிறீர்கள்?ஏன் அப்படி கைதட்டல் எழுந்தது?பால்கனி,தரை,பெஞ்சு என எந்த…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 4. திருமண உறவுகள்

குமரிமைந்தன் திருமண உறவுகள் எனும் போது நாம் திருமணத்தில் பெண்களுக்குள்ள உரிமைகளையே அளவுகோலாகக் கொள்கிறோம். மேற்சாதியினரிடையில் பெண்ணுக்கு மணவிலக்குரிமையோ மறுமணவுரிமையோ கிடையாது. அது மட்டுமல்ல, மணமகனுக்குப் பெருமளவில் சீதனம் கொடுப்பது அங்கு தவிர்க்க முடியாதது.…

கண்ணகியின் கற்பு சாஸ்திரம்..?

புதியமாதவி, மும்பை கவிப்பேரரசு வைரமுத்து முன்னிலையில் மும்பை திருவள்ளுவர் கலையரங்கில் 19-01-2002ல் தமிழினம் என்ற தலைப்பில் ஒரு கவிதை வாசித்தேன். அந்தக் கவிதையிலிருந்து சிலவரிகள்: காட்சிப் பொருளல்ல -என் கண்ணகியின் சிலை -அவள் நீதியைக்…

மன்னரும் மல்லரும்

கோ. தில்லை கோவிந்தராஜன்"மாரத வீரர் மலிந்தநன் னாடுமாமுனி வோர் பலர் வாழ்ந்த பொன்னாடு"- என்பது தீர்க்கதரிசியாம் பார்வுலக தமிழின் சாரதி பாரதியின் வரிகள். வீரம் நிறைந்த இவ்விந்தியாவில் பல்வேறு வீரவிளையாட்டுக்கள் நடைபெற்றன. இவ்வீர விளையாட்டின்…

எடின்பரோ குறிப்புகள் – 18

இரா முருகன்முதல் ஆட்டத்தில் 1 – 0 goal கணக்கில் வெற்றி பெற்று ஒரு வழியாக இங்கிலாந்து உலகக் கோப்பை கால்பந்தாட்டத்துக்குள் நுழைந்திருக்கிறது. ஆட்டம் ஆரம்பித்து மூன்றாம் நிமிடம் விழுந்த கோல் எதிர்பார்த்தபடி டேவிட்…

அறிவிப்புகள்

33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு

அறிவிப்பு லண்டனில் யூலை 22,23ம் (22,23-07-06) திகதிகளில் நடக்கவிருந்த 33வது ஐரோப்பிய இலக்கிய சந்திப்பு ,தவிர்க்க முடியாத சில காரணங்களால் பின் போடப் பட்டிருக்கிறது. கூடிய விரைவில் புதிய திகதிகள் அறிவிக்கப்படும். மேலதிக விபரங்களுக்குத்…

மாப்பிள்ளைமார் கலகமும், இந்துத்துவத்தின் இடியாப்பச் சிக்கலும்

போனபெர்ட் கட்டுரையின் தலைப்பு: நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும் மாப்பிள்ளைமார் கலகம் பற்றி. மாப்பிள்ளைமார் கலகம் பற்றி இடது சாரி வர்க்கப் போராட்டக் கண்ணோட்டமும், வலது சாரி மத வெறிக் கலவரக் கண்ணோட்டமும்…

எச்.முஜீப் ரஹ்மானின் கட்டுரைகள் குறித்து

மலரமுதன் அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, நான் பல வருடமாக திண்ணையின் வாசகராக இருக்கிறேன்.அண்மைகாலமாக திண்ணையில் எழுதி வரும் எச்.முஜீப் ரஹ்மானின் இலக்கிய கட்டுரைகள் குறித்து ஒரு சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.முஜீப் ரஹ்மானின்…

பாரதி பஜனையில் மயங்கும் மக்கள்

கற்பக விநாயகம் 1) ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் இருந்த பாரதியின் கோழைத்தனத்திற்கும், அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்த பாரதியின் நேர்மையற்ற செயலுக்கும், பழியை தமிழ்சமுதாயத்தின் மீது போடுவதென்றால்,…

சர் சி வி ராமன் குறும்படம் வெளியீட்டு விழா

ஜி சாமிநாதன் 14 - 6 -2006 அன்று ரஷ்யன் கலாசார மையத்தில் நடந்த வெளியீட்டு விழாவிலிருந்து இயக்குனர் அம்ஷன் குமார் வரவேற்புரை மேடையில் ஜெயஸ்ரீ , எம் எஸ் சுவாமிநாதன், ஜெயசந்திர சிங்,…

கடிதம் – எஸ். இராமச்சந்திரன் ” இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… “

கற்பக விநாயகம் 1) வெடிமருந்தைச் சீனி எனப்பழம் பாடல் குறிப்பிட்டதனால், அவை சீனிக்கற்களைத் தான் குறிப்பிடுவதாய் ராமச்சந்திரன் கருதுகிறார். வெள்ளைச் சருக்கரையை அப்பகுதி மக்கள் சீனி என்றே வழங்குகின்றனர். நாட்டார் பாடல் ஒன்று, "தென்னையிலே…

கண்ணகி சிலை விவகாரம்: மறக்கப்பட்ட சில உண்மைகள்

திசைகள் அ.வெற்றிவேல் கண்ணகி சிலை மீண்டும் நிறுவப்பட்டது குறித்து, திருவாளர்கள்,சின்னக்கருப்பன்,நாக.இளங்கோவன், ஜடாயு,செல்வன் ஆகியோரின் ஆதரவான கருத்துக்களும்,ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் எதிர்மறையான கருத்துக்களும் வாசித்தேன். கண்ணகி சிலை ஏன் மறுபடியும் நிறுவப்பட வேண்டும் என்று ஜோதிர்லதா…

ஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் கருத்து பற்றி

நவநீதகிருஷ்ணன் ஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் கருத்து பற்றி “ஆக, சோரம் போன கணவனைத் திரும்ப ஏற்றமைக்காகவும், அவன் திரும்பி வந்த நாள் வரையில் தான் சோரம் போகாதிருந்தமைக்காகவும் கண்ணகி “கற்புக்கரசி” என்று போற்றப்படுகிறாள்.” -ஜோதிர்லதா…

25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த ஒன்றுகூடல் தள்ளி வைப்பு

அறிவிப்பு25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த கலை இலக்கிய ஒன்றுகூடல் தவிர்க்கமுடியாத காரணத்தால் ஓகஸ்ட் மாதத்துக்குப் பின்போடப்பட்டுள்ளது. இதுபற்றிய விபரம் பின்னர் அறியத்தருகிறோம். சிரமத்துக்கு மன்னித்துக்கொள்ளுங்கள். நன்றி நட்புடன் ரவி ranr@bluewin.ch

கடிதம்

ஜோதிர்லதா கிரிஜாஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். சகோதரர் பத்ரிநாத் அவர்களின் கடிதம் கண்டேன். தாம் வைத்ததை ஒருவர் அப்புறப்படுத்த, அவர் அப்புறப்படுத்தியதை முன்னவர் மறுபடியும் வைப்பதில் கவுரவப் பிரச்சினையே இல்லையா? இந்த விசயத்தில் “ஜெ”…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செர்நோபில் அணுமின் உலையை மூடக் கட்டிய புதைப்புக் கோட்டை-8

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா "அணுக்கருத் தொடரியக்கத்தின் கண்டுபிடிப்பால் நேரும் மனித இணத்தின் அழிவு, தீப்பொறியை மாந்தர் முதலில் கண்டுபிடித்ததைக் காட்டிலும் எந்த விதத்திலும் மிகையானதன்று! நம்மால் முடிந்தவரை அணுசக்தியை அழிவுசக்தியாகத்…

இலக்கிய கட்டுரைகள்

பேரா.நா.வா.நினைவு கலைஇலக்கிய முகாம்,கன்னியாகுமரி

அழகேந்திரன்குமரிமாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டம் 28 ஆவது வருட பேராசிரியர் நா.வானமாலை(நிறுவனர் ஆராய்ச்சி இதழ்) நினைவு கலை இலக்கிய இரண்டு நாள் முகாம் கன்னியாகுமரி…

தனி மனிதப் பார்வையில் சமூகம், இலக்கியம் பற்றிய குறிப்புகள்

திசைகள் அ.வெற்றிவேல் சமீபத்தில் எனக்கு படிக்கக் கிடைத்த புத்தகம், அமெரிக்க வாழ் தமிழர் பி.கே.சிவகுமார் அவர்கள் இணைய இதழ்களில் பல்வேறு தலைப்புகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான "அட்லாண்டிக்குக்கு அப்பால்" என்ற கட்டுரைத் தொகுப்பு.எனி…

தற்கால இலக்கியம்..வாழ்விடம் கலையாகும் தருணம்

மலர்மன்னன்வாழ்விடங்கள் பற்றிய தகவல் விவரங்கள் ஓர் அட்டவணைக் குரிய எல்லைக் கோடுகளைத் தாண்டி, ஜீவகளை ததும்ப வாசகனை வந்தெய்தும் போது, அவை இலக்கியமாகி விடுகின்றன. அசோகமித்திரனின் ஹைதராபாத்-செகந்தராபாத் இரட்டை நகரங்களும், சுப்ர பாரதி மணியனின்…

சூபி இசை – இதயத்திலிருந்து ஒரு செய்தி

ஹெச்.ஜி.ரசூல் 1. இஸ்லாமிய இசைக்கு சமய வாழ்வின் பின்னணி உண்டு. பொதுவாழ்வின் கூட்டு வழிபாடுகளிலும், தனிமனித உணர்வு நிலைகளிலும் இதன் இயக்கத்தை உணரலாம். அரேபியா, மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்கா, எகிப்து ஈரான்…

மொழியின் கைதிகள்

செல்வன் "மனிதர்கள் உண்மையை உருவாக்குகிறார்கள்,கண்டுபிடிப்பதில்லை" என்று தாமஸ் குன் "கோபர்னிகன் ரிவல்யுஷன்" என்ற புத்தகதில் எழுதினார்.அவர் அறிவியலை மனிதனின் மற்றொரு மொழியாக தான் பார்த்தார்.அறிவியல் மற்றும் மற்ற துறைகள் நமக்கு காட்டும் உலகம் மனிதனால்…

விமர்சனங்களும் எதிர் வினைகளும்

தாஜ் "உங்கள் படைப்புகளின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, நீங்கள் எந்த ஒரு பதிலும் சொல்வதில்லையே?" என்று தி. ஜானகிராமனிடம் கேட்கப்பட்டப்போது "யானையை ஒருவர் தனது கண்ணோட்டத்தில் பார்த்து விவரிக்கும் அந்த பார்வை அவர் அளவில்…

ஞான. ராஜசேகரனின் பாரதி – சில திரைப்படத் திரிபுகள்

ஜடாயு அம்ஷன் குமாரின் பாரதி ஆவணப்படம் பற்றி எழுதியற்காக திரு. மலர்மன்னனுக்கு மிக்க நன்றி. இந்தப் படம் பார்க்க மிகவும் விருப்பம், ஆனால் எப்படி என்று தெரியவில்லை.. DDயிலோ வேறு ஏதாவது சேனல்களிலோ இந்தப்…

கடித இலக்கியம் – 9

வே.சபாநாயகம் நாகராஜம்பட்டி 5-10-76 அன்புள்ள சபா அவர்களுக்கு, வணக்கம். பள்ளி மீண்டும் திறந்திருக்கும். இந்நேரம் பழைய வாழ்க்கை தொடர்ந்திருக்கும். நீங்கள் வராமற் போனது பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்தது. கடிதம் எழுதக்கூடத் தோன்றாமல் மனம் காய்ந்து…

கதைகள்

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 25

ஜோதிர்லதா கிரிஜா அரையாய்ச் சாத்தியிருந்த கூடத்து அறையினுள் துர்க்கா தன் சாமான்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தது காவேரிக்குத் தெரியாது. அவள் பின்கட்டுக்குப் போயிருந்ததாக அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். இருப்பினும், தாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அவள் வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற…

சேர்ந்து வாழலாம், வா! – 7

ரெ கார்த்திகேசுகுறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா! (ரெ.கார்த்திகேசு) 7 "கெட்ட செய்தியும் இருக்கு! நல்ல செய்தியும் இருக்கு!" என்றான். "கெட்ட செய்தியை முதல்ல சொல்லுங்க!" மனதைத் தயார் படுத்திக் கொண்டு சொன்னான்: "அம்மா முடியாதுன்னு…

உறவின் சுவடுகள் ( தெலுங்கு கதை )

பி எஸ் நாராயணா அலுவலகத்திற்குள் நுழைந்தேனோ இல்லையோ, மெலதிகாரி என்னை அழைத்தார். "சந்திசேகர்! இதற்குள் உங்கள் வீட்டிலிருந்து இரண்டு முறை ·போன் வந்துவிட்டது" என்றார். வியப்பபாக இருந்து எனக்கு. வீட்டை விட்டு ஒன்பதரைக்குத்தான் கிளம்பி…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-5) [முன்வாரத் தொடர்ச்சி]

சி. ஜெயபாரதன், கனடா"அவளது கனிவுக்குரல் மொழிகள் வாத்திய இசைக் கருவியின் பல்வேறு நாண் கம்பிகள் போன்றவை. மாந்தரின் முகப்புகழ்ச்சி மொழிகள் நான்கு தரப்பின; ஆனால் அவளிட மிருந்தவையோ ஆயிரம்!" புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர்…

எ ட் டி ய து

ஐ. சாந்தன் பந்தலின் இந்த மூலையில் ஆட்களில்லை. விரித்திருந்த புற்பாயில் படுத்து உருளவேண்டும் போல் ஆசையாய் இருந்தது தண்டுவுக்கு. படுத்ததும் கூரை மேலே போய்விட்டது. கிடுகு ஓட்டையால் வந்த வெளிச்சம், கூரைக்குக் கட்டியிருந்த வெள்ளையில்…

கவிதைகள்

கற்சிலைகள் காலிடறும்!

ஜோதிர்லதா கிரிஜா(18.6.2006 ஆனந்த விகடனில் கவிஞர் வாலி கண்ணகிக்குச் சிலை வைத்ததை ஆதரித்து எழுதிய “கண்ணகி கரடி பொம்மையா?” எனும் கவிதைக்கு எதிரொலி) “கண்ணகி ஒரு கலாசாரக் குறி - இது என்றோ ஏட்டிலே…

ஒரு காடழிப்பு

பட்டுக்கோட்டை தமிழ்மதி ஒரு தீவில் மனிதர்களை விட மரங்களே உயர்ந்து தெரிகின்றன. ஒரு பூங்காவில் மனிதர் நெரிசலாய் மரங்கள் நெருக்கமாய். மனிதனுக்கு மனிதனே தடைக்கல்லாய் கிடக்க நடை தொடர நதியின் குறுக்கே பாலமாய் கிடக்கிறது…

தீய்ந்த பாற்கடல்

சாரங்கா தயானந்தன் பாடும் பறவைகளுக்கு ஏங்காத மனமரம். பொன்மஞ்சள் பூக்களும் மெல்லிலைத் துளிர்த்தலும் அற்று..... கொஞ்சம் நடந்தால் கால் நனைக்கும் கரையுடைத்த நீல நதியே நினை நான் கண்டு பலநாள். நலம் வாழ்க! இப்போதெல்லாம்…

கோமாளிக் காக்கைகள்

பனசை நடராஜன் மயிலின் தோகையழகை பழமையென நகைத்து துடைப்பத்தை வாலில் சொருகிக் கொண்டு அலையும்..! கா...கா...கா...கா... என நீளமாய் கரைந்தால் சாயம் வெளுத்திடுமென 'கா' எனக் கத்தும் - குயில் கூவலை மிஞ்சிய -…

தூங்க மறுக்கின்ற வெய்யில் இரவுகள்

நவஜோதி ஜோகரட்னம் பனிபடிந்த வெண்ணிறத் தெருக்கள் அடிவானம் சூல் கொண்ட பெண்ணின் வெளிறிய முகம் போல் சிவக்கிறது இருள் வளைவுகளில் மௌனத்தை அளக்கும் தியானங்களில் நீலாம்பரி; இசைக்கின்றது…. அரூபத்தில் அது ஒரு தொடுகையாகி வெண்ணிற…

பெரியபுராணம் – 92 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2579. உமக்கு நேர்ந்ததைக் கூறுவீரென்று பரிவுடன் மன்னன் பாண்டியன் உரைக்க கரிய சமணர்கள் வஞ்சகர்கள் “யானை வீரனான மன்னா உன் மதுரை மாநகரில் சைவ வேதியர்கள் வந்து பொருந்தியதால் நாங்கள் இன்று கண்டுமூட்டு…

கீதாஞ்சலி (77) என் சொத்தனைத்தும் உனக்கு!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னிறைவன் நீயே என்பதை நான் அறிவேன்! உன்னை நெருங்காமல் நான் சற்று தள்ளியே தான் நிற்கிறேன்! என்னுடை யவனா நீ என்பதைக் கூட அறியாமல் உன்னை அண்டுகிறேன்! என்…

நகைச்சுவை

ஸீஸன் கச்சேரியும் தொய்வு அளவையும்

அருண் நரசிம்மன் தற்கால சங்கீத கச்சேரிகள் பெரும்பாலானவற்றில், குறிப்பாக ஸீஸன் சமயத்தில் சென்னையிலும் சென்னையைச் சார்ந்த பகுதிகளிலும் நடப்பவைகளில், சில பொது அம்சங்களைக் காணலாம். உதாரணத்திற்கு, இக்கச்சேரிகள் 1 வர்ணம், 1 சப் மெயின்,…

வீட்டுப் பறவைகள்

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா விடியற்காலை ! பல் தேய்த்து விட்டு மூஞ்சியைக் கழுவினேன். அப்பா ! மனுஷன் எப்படி படுத்தறான் பாரு ! என்று கணவனை அன்போடு உரிமையோடு மனதில் நினைத்துக் கொண்டே பாத்திரங்களைத் தேய்க்கக்…