திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080918_Issue

அரசியலும் சமூகமும்

மகா அண்ணா!

வீ.சு.இராமலிங்கம்(ANNA THE GREAT) ஒரு அழகிய தடாகம். தாமரைக் கொடிகள் அடர்ந்திருக்கின்றன. அத்தாமரைக் கொடி மொட்டு விடுகின்றது. மொட்டு வளர்கிறது. ஒரு நாள் மொட்டு விரிந்து தாமரை மலராகிறது. மணம் பரப்புகிறது, ஒளி வீசுகிறது.…

செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…

பி.கே. சிவகுமார் கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் - பி.கே. சிவகுமார் துகாராம் கோபால்ராவ் கார்ட்டூன் வாசகர் கடிதங்கள் ஜூலையில் வெளியான கோபால் ராஜாராமின் அணுசக்தி கேள்வி-பதிலுக்குப் ப்ரவாஹன் எதிர்வினை ப்ரவாஹனுக்குக் கோபால் ராஜாராமின் பதில்…

நினைவுகளின் தடத்தில் – (18)

வெங்கட் சாமிநாதன் செண்டிரல் சினிமாவுக்கு எதிரே மாமாவும் நானும் நின்றுகொண்டிருந்தோம். மாமா அம்பி வாத்தியாரோடு பேசிக்கொண்டிருந்தார். மாமாவுக்கு நிலக்கோட்டையிலிருந்த போதே குடும்பத்தை சம்ரக்ஷ¢க்க முடியாது தவித்துக் கொண்டிருந்தார். இப்போது சின்ன மாமாவின் படிப்புக்காக, வத்தலக்குண்டில்…

மலேசியாவில் கலாச்சார வரவும் செலவும்

ரெ.கார்த்திகேசு () மலேசியா என்னும் என் தாய்நாடு ஒரு பல்லின நாடு என்பதை உலகம் அறிந்துள்ளது. ஆனால் இது மலேசியாவுக்கு மட்டுமே ஆன ஒரு தனிப் பண்பல்ல. உலகின் பல நாடுகள் இப்போது பல்லினங்களைக்…

அறிவிப்புகள்

பாவலரேறு பெருஞ்சித்திரனார்-தாமரையம்மையார் அறக்கட்டளை நான்காம் பொழிவு

அறிவிப்புஇடம்:கருத்தரங்க அறை, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், பிப்மேட் வளாகம்,இலாசுப்பேட்டை,புதுச்சேரி-60 008 நாள் : 20.09.2008 காரி(சனி)க்கிழமை நேரம் : முற்பகல் 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நிகழ்ச்சி…

வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்வணக்கம். கடந்த 14 செப்டம்பர் 2008 அன்று வடக்கு வாசல் மாத இதழின் நான்காம் ஆண்டுத் துவக்க விழா. புது தில்லி இராமகிருஷ்ணபுரத்தில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னாள்…

இணையத்தில் தமிழ் அதிகமாக புழங்குகிறது என்கிற செய்தி மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது

மு.குருமூர்த்திஅய்யா, இணையத்தமிழில் நிறைகளும், குறைகளும், கட்டுரை படித்தேன். ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில் தமிழ்தான் அதிகமாக புழங்குகிறது என்கிற செய்தி மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழ் இதழ்கள் அனைத்தும் யுனிகோட் எழுத்துருவிற்கு மாறுவது இணையத்தமிழ் வளர்ச்சிக்கு இன்னும்…

விழுப்புரம் தமிழ்ச்சங்கம் ஏழாம் ஆண்டுவிழா

அறிவிப்பு நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2039 கன்னி(புரட்டாசி) 5 21-09-2008 ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை. இடம் : குரு திருமண மண்டபம், கன்னியாக்குளம் சாலை, விழுப்புரம். காலை 10-00 மணி…

இலக்கியப் போட்டி 2008

அறிவிப்பு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2008 ======================================================= வென்றோர்கள் =========== சென்ற ஆண்டில் வெளிவந்த நூல்களுக்குப் பரிசுகள்: நவீனம் சுப்ரபாரதிமணியன் (ஓடும்…

கடிதம்

மு.இளங்கோவன்அன்புள்ள ஐயா வணக்கம். திண்ணையில் தருமபுரி நிகழ்ச்சி பற்றிய செய்தி வெளியிட்டமைக்கு நன்றி. படைப்புகள் யாவும் சிறப்பு. தங்கள் அன்புள்ள மு.இளங்கோவன் புதுச்சேரி,இந்தியா

அறிவியலும் தொழில்நுட்பமும்

உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் புரியும் பிரபஞ்சப் படைப்புச் சோதனை !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபூத விரைவாக்கி யந்திரம் புரட்டானை மோத வைத்து உடைக்கும் ! புரட்டான் வயிற்றில் உரித்தெடுக்கும் நுண்துகளை ! பிரபஞ்சப் பெருவெடிப்புக் காட்சியை அரங்கேற்றும் ஆய்வகத்தில் ! கருந்துளையை…

இலக்கிய கட்டுரைகள்

பின்நவீனத்துவத்தின் மரணம்/முடிவு அல்லது பின்னைபின்நவீனத்துவம் அல்லது நிகழ்த்தலியம்

எச்.முஜீப் ரஹ்மா‎‎‎‎‎‎ன்பி‎‎‎ன்நவீனத்துவம் மரணித்து மரணகுழிக்குள் சென்றபின் பின்னை பின்நவீனத்துவம் என்ற கோட்பாடு அறிமுகம் ஆகிறது.ஜெர்மானிய தத்துவவியலாளர் ரவ்வல் செல்மான் புதிய ஒரு கோட்பாட்டிற்க்கு அறிமுகம் குறிக்கிறார்.அந்த கோட்பாட்டின் பெயர் தான் நிகழ்த்தலியம் எனும் பெர்பார்மாட்டிசம்…

தமிழ் விடு தூது – 1

எஸ். ஜெயலட்சுமி உலகப் பொதுமறையாம் திருக்குறளை நமக்களித்த வள்ளுவர் தூது என்பதைப் பற்றி ஒரு அதிகாரமே பாடியுள்ளார்.தூது செல்பவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்,அவனுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்றெல்லாம் வரையறை செய்துள்ளார். ''அன்பு…

கதைகள்

“18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்கள் தேசத்தின் துரோகி”

கே.பாலமுருகன் நூற்றாண்டின் கதையைப் பற்றி சில வரிகள் நூற்றாண்டின் கடைசி கட்டத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அடிமை தேசங்களை வீழ்த்தி நாசப்படுத்தியப் பின் நாடு திரும்பிக் கொண்டிருந்த அரசன் அந்தச் செய்தியைக் கேட்டதும் எல்லையைலேயே…

விஸ்வரூபம் – அத்தியாயம் எட்டு

இரா.முருகன்விஸ்வரூபம் – அத்தியாயம் மங்கலாபுரத்திலிருந்து திரும்பி வந்ததுமே வேதையன் காய்ச்சலில் விழுந்துவிட்டான். அஷ்ட வைத்யன் எடத்வா கேசவன் மூஸ் மூலிகைப் பெட்டியோடு வந்து நாடி பிடித்துப் பார்த்துவிட்டு விஷக் காய்ச்சல் என்று திடமாக அறிவித்தார்.…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 9(சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நான் தீவிர வெறுப்பாளிகளை (Despisers) நேசிக்கிறேன் ! ஏனெனில் அவரே மாபெரும் பாராட்டியாகவும் (Adorers) இருக்கிறார் ! அவரே எதிர்த்த கரைக்குத் துணிந்து செல்ல ஆர்வம் மிக்க ஏவுகணையாகவும்…

இந்த நூற்றாண்டின் மகள்.

துரை பிரபாகரன் -- (நன்றி: மங்களம் 11 ஆகஸ்ட் 2008) ஸாராம்மாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. மிகவும் கவலையாக இருந்தது. மகளிடமிருந்து தகவல் வந்து மூன்று வாரமாகிவிட்டது இன்றைக்கும் செய்தி ஏதுமில்லை. சாதாரணமாக வாரத்திற்கொரு முறையாவது போனில்…

கவிதைகள்

அரபிக்கடலோரம் அறிஞர் அண்ணா

புதியமாதவி, மும்பைஎன்னை என் நிழல் தேடி வந்து தொடரும் முன்பே தொடர்ந்தக் காற்றின் அலைகள். எங்கிருந்து புறப்பட்டு வந்தது இந்த அலைகள்?. கருவில் தொடர்ந்து வந்தக் காற்றின் ஈரமா? மரபணுவில் ஒட்டிக்கொண்டிருந்த உயிரின் வாசமா?.…

தாகூரின் கீதங்கள் – 49 நெஞ்சில் குத்தியது முள் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதொடங்கியது நான்தான் ! உன்னைத் தொட்டுவிட நீட்டினேன் கரங்களை ! "கனவா இதுவென" என்றெனை வினாவினேன் ! உன் பாதங்களை என் இதயத்தில் பின்னி இறுகப் பற்றிக் கொள்ள…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் : காலைக் கவிதை -4

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> நீ என் ராணி யெனக் குறிப்பிட்டேன் ! உன்னை விட உயரமாய் மாதுள்ளாள், உயர மாக ஆம் ! உன்னை விடத் தூயதாய் மாதுள்ளாள் தூய தாக…

வேத வனம் விருட்சம் 4

எஸ்ஸார்சி பாரெங்கும் பார்க்கக்கிடைப்பது எதுவாயினும் நாராயணனே செவியுறக் கேட்கக்கிடைப்பது எதுவாயினும் நாராயணனே உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்திருப்பது அந்நாராயனனே. - தைத்திரிய ஆரண்யகம் 4 10 13 5 எங்கும் வீசும் ஒளி எங்கும்…

சிதறும் பிம்பங்கள்..!

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி எனக்கான பிம்பத்தை நீ எது எதற்கோ உடைப்பதுவும் உனக்கான பிம்பத்தை நான் உள்வைத்தே உறைவதுவும் இழுத்துப் பிடித்திருந்தால் இன்னும் கூட வாழ்ந்திருக்கும் பிம்பங்களில் நிலைப்பதில்லை பேரன்பும் பெருவாழ்வும். SJEGADHE@tebodinme.ae 18-09-2008

உறுத்தல்…!

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி * இருந்தபடியேதான் இருந்தாள் அந்த எழுபது வயதுக் கிழவி. வருவோர் போவோர் தரும் இரண்டிரண்டு பிஸ்கட்கள் அவ்வப்போது யாராவது தரும் - ஒரு அரை டம்ளர் தேநீர் சகிதம் அந்த…

தீராத கேள்விக் கரையோரம் பிலால்

ஹெச்.ஜி.ரசூல் அந்த அபிஸீனிய கறுப்பு நட்சத்திரம் தனதொளியை என்றுமே இருளாக்கியதில்லை சவுக்குகளும் சாட்டையடிகளும் எழுதிய வரிகளில் ரத்தச் சொட்டுக்கள் மிச்சமாயின. சுடுமணற்பரப்பில் புரட்டியெடுத்து இரும்புச் சங்கிலிகளால் பூட்டப்பட்ட அடிமை உடல் வெயில்தீப்பிழம்பில் உருகி வழிந்தது.…

பேருந்துக்கு காத்திருந்தவர் மீது.

தாஜ் தெளிவுற வழிகாட்டி நின்ற கை காட்டிகள் எல்லாம் திசையற்று கவிழ்ந்து கிடக்க பாதசாரிகளுக்கு பாதைகள் என்றும் விடிவதே இல்லை. ஓரப் பாதைகள் தடைகளாகிப் போக புகுந்து புறப்படும் அவசரத்திலும் குண்டும் குழியும் மனிதக்…

ஹைக்கூ – துளிப்பாக்கள்

மாமதயானை[புதுவை] எந்த பனித்துளிக்குள் ஒளிந்துகிடக்கிறது…… என் கவிதை. நிலவை படம்பிடிக்க முடியாத வருத்தத்தில்…… வற்றியகுளம். தெளிந்தநீரில் முகம்பார்த்தபிறகும்…… தெளியாத மனசு. பாவலர்கள் எழுதிவிடுவார்களோ பயந்துமுட்புதரில் மறையும்…… நிலவு. நிசப்தமாய் இரு இசை கேட்கலாம்…… ம…

மூன்று

ரஜித் காக்கவேண்டிய மூன்று கடமை கண்ணியம் கட்டுப்பாடு கழிக்கவேண்டிய மூன்று கவலை கண்ணீர் பயம் போற்றவேண்டிய மூன்று ஊருக்காய் வாழ்தல் உபரியை ஈதல் குடும்பமே ஒரு கோயிலாய் வாழ்தல் புகழவேண்டிய மூன்று எளிமையாய் இருத்தல்…