மதுமிதா ============ முழுவதுமாய் மறந்து விட்டதாய் நினைவு உனக்கு தத்தளிக்கிறாய் தவறு செய்துவிட்டதாய் நான் உன்னை மறக்கவில்லை வெறுக்கவில்லை முழுமனதுடன் மகிழ்வுடன் வாழ்த்துகிறேன் விட்டுவிடு துயரை தூக்கிக் கொண்டு துவளாதே தவறு காலத்தினது நமதல்ல…
புதியமாதவி மார்கழி மகளின் மாக்கோலம் பூசணிப் பூக்களின் புன்னகை இல்லாமல் போனதற்காய் இரவுகள் வாடுவதில்லை. நடுங்கும் பனியில் ஒதுங்கும் சாலையில் வானத்தில் தொட்டில்கட்டி வாகனத்திற்கு கைஅசைத்த புன்னகையைக் காண்பேனா ஏக்கத்திலேயே என் இரவுகள் கம்பளிப்…
நட்சத்ரன் 1.புதிரொலி மிகவும் வினோதமாயிருக்கிறது எங்கிருந்தோ வருமிந்த அநாதி ஒலி அவ்வொலியுள் தெளிவான சொல்லேதும் ஒளிந்திருக்கவில்லை ஆயினும் அதனுள் ஏதோவோர் அர்த்தம் இருப்பதாய்ப்படுகிறது இந்த ஒலிக்கு என்னபேர் வைப்பது இது முனகலா கத்தலா இசையா…
சத்தி சக்திதாசன் எப்போது கறுத்த மேகம் வெளுக்கின்றதோ ? அப்போது மழையும் அங்கே மறைகின்றது. எப்போது உண்மைக்கு வெளிச்சம் கிடைகின்றதோ ? அப்போதே பொய்மை , இருள் எனும் திரைக்குப் பின்னால் நுழைகின்றது. எப்போது…
சத்தி சக்திதாசன் துள்ளித்திரியும் பருவமதில் செல்லக்கிளியே - என்னெஞ்சம் துடிக்குமொரு விசையதனை கூட்டினையே பள்ளி செல்லும் வழியதிலே செல்லக்கிளியே - என்மனதை பறிகொடுத்துச் செல்லவைத்தாய் தினந்தினமே சொல்லி முடிக்க முடிவதில்லை செல்லக்கிளியே - என்னுணர்வை…
மோனிகா போரென்றும் பசியென்றும் பாழாய்போன உலகத்திலே நீயும் நானும்தான் நல்லவற்றின் எச்சமாய் இம்மாஞ்சோடு உலகத்துல இத்துனூண்டு மக்களாய் எழுதியும் பேசியும் எவ்வளவோ வித்தை செய்து உலகத்தை மாத்தலாம்னு கோலியாத்து உலகத்துல டேவிட்டா ஊர்ந்துகிட்டு கையெழுத்தில்…
பவளமணி பிரகாசம் என் உள்ளம் கவர்ந்திடல் எளிதென்றோ நீயும் மனக்கோட்டை கட்டுகிறாய் ? என் மனமெனும் கோட்டையோ கல் போன்றது, கதவு திறவாது, சுற்றிலும் ஆழமாய் ஓர் அகழி அதில் நீந்தும் கொடிய முதலை…
என் சுவாமிநாதன் அருகே அருகே வருகிறாய் நீ அன்புடன் உன்னை விலக்கி நகருகிறேன் நான் இதழோடு இதழ் பதிக்க வருகிறாய் இதற்கேன் இப்போ அவசரம் என்கிறேன் நான் காதோடு வந்து கிசுகிசுக்கிறாய் காதில் விழாதது…
புகாரி அடடா... பருவம் தொட்டு நிற்கும் இளமொட்டு மங்கையைப்போல் மதர்ப்புகளால் சூழப்பட்ட அற்புத நகரம், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள வேங்கூவர். 2002 மே மாதம் டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம்…
கற்பகம் ------------------------ கடற்காற்றின் ஈரம் தேசம் தாண்டித் தீண்ட - நனைகின்ற விழிகள்... நினைவுகளில் பாண்டிச்சேரி நாட்கள்! நடந்த பாதை.. வீசிய தென்றல். கொரித்த நிலக்கடலை மணக்குள வினாயகர் கண்டு வரம் கேட்ட கோயில்.…