திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090528_Issue

அரசியலும் சமூகமும்

கதைசொல்லி சாதத் ஹசன் மண்டோவின் மறுபக்கம்

ஹெச்.ஜி.ரசூல் காஷ்மீர் மூதாதையர் குல குறியீட்டுச் சொல்லாகிய மண்டோ, சதாத் ஹஸன் மண்டோவாக ஓர் உருதுமொழி கதைச் சொல்லியை நமக்கு அறிமுகம் செய்கிறது. இழப்புகளால் நிரப்பப்பட்ட வாழ்க்கையைக் குடித்து தனது நாற்பத்து மூன்று வயது…

மரமணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்-(தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்)

பாவண்ணன் பாரதி புதையல் திரட்டுகளையும் சித்திரபாரதியையும் வழங்கிய பாரதி அறிஞரான ரா.அ.பத்மநாபன் அவர்களின் முயற்சியால் பாரதியாரின் இருபத்துமூன்று கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் தன் மனைவிக்கு எழுதிய ஒரேஒரு கடிதத்தைத் தவிர மற்றவை அனைத்தும் பிறருக்கு…

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 3

நேசகுமார் ஹமீது ஜாஃபர் எனக்கு பதிலளித்து மே 14,2009 திண்ணை இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905123&format=html). கடிதத்தில் இருக்கும் எள்ளல் தொணியையும், பயன்படுத்தியிருக்கின்ற வார்த்தைகளையும் தவிர்த்து விடுகிறேன். இஸ்லாத்தைப் பற்றி எழுதத் துவங்கிய காலத்திலிருந்து…

அறிவிப்புகள்

எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS” நூல்

வெளியீட்டு விழாஎழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS” நூல் வெளியீட்டு விழா இடம் -: மல்வேர்ண் நூலக அரங்கு MALVERN PUBLIC LIBRARY 30 SEWELLS ROAD, SCARBOROUGH காலம் -: எதிர்வரும் யூன்,…

மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு

வெளியீடுகாலம் சஞ்சிகையின் ஆதரவில் சுடர் ஏந்திய தொடர் ஓட்டம் மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சி காலை 10.00 முதல் மாலை 6.00 வரை நிகழும் தொடர்புகளுக்கு: Scarborough Civic Centre…

பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

வெங்கட் சாமிநாதன் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக, திண்ணையில் நடந்து வரும் வாதப் பிரதி வாதங்களைப் பார்த்து வந்தால், ஒரு தரப்பு புதிய பிரச்சினைகளை, கேள்விகளை எழுப்புவதும் எதிர் தரப்பு அவற்றை எதிர்கொள்ளாது அவதூறு…

நாகூர் ரூமியின் இலக்கிய அறிவு

கார்கில் ஜெய் ஸ்ரீ நேசகுமாரைப் பற்றி தூற்றியும் ஹிந்து மதத்தைப் பற்றி பல கேள்விகளைக் கேட்டும் எழுதிய பேராசிரியர் நாகூர் ரூமி அவர்கள், ஏதோ கல்லுரியில் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியராக இருக்கிறாரே என்ற ஆர்வ…

பேராசிரியர் நாகூர் ரூமிக்கு பதில்கள்

கார்கில் ஜெய் உங்களின் கேள்விகளுக்கும் பொய்களுக்கும் வருகிறேன் : // 1.மறைந்திருந்து வாலியைக் கொன்ற ராமனுக்கு நேசனாகத்தான் இருக்க விரும்புகிறீர்களா?// ராமபிரான் ஒன்றும் சரணடைந்தவர்களை முகம்மது நபி போல ஈவு இரக்கமின்றிக் கொல்லவில்லை. ஏன்…

வைகைச் செல்வியின் ஆவணப்படம் வெளியீட்டுப் படங்கள்

அனுப்பியவர் : சி. ஜெயபாரதன், கனடா கவிஞர் வைகைச் செல்வியின் தண்ணீர் பற்றிய ஆவணப்படம் மே மாதம் 9ம் தேதி சென்னையில் எழும்பூர் இக்சா மையத்தில் 10 மணிக்கு வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் :…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றல் படைத்த பூதக் காந்த விண்மீன் புரியும் பாதிப்புகள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றல் படைத்த பூதக் காந்த விண்மீன் புரியும் பாதிப்புகள் . பூதக் காந்த விண்மீன் பூதளச் சூழ்வெளி…

இலக்கிய கட்டுரைகள்

தமிழ் சேவைக்கு இயல் விருது.

தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் சீலி மண்டபத்தில் மே மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல்…

சங்கச் சுரங்கம் – 16: நெடுநல்வாடை

சு. பசுபதி, கனடா டிசம்பர் மாதம்; பனியில் டொராண்டோ உறைந்திருந்தது. நண்பன் ராமசந்திரன் வீட்டில் ஒரு மாலை விருந்து. எல்லா விருந்தினரும் சென்றபின், கையை அப்பளமாகப் பொறிக்கும் சூட்டில் ஒரு 'காபி' டம்ளரை வைத்துக்…

விமர்சனக் கடிதம் – 1 ( திரு.பாரதிமணியின் ‘பல நேரங்களில் பலமனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)

வே.சபாநாயகம் அன்புள்ள பாரதிமணி அவர்களுக்கு, வணக்கம். 'உயிர்மை' வெளியிட்டுள்ள உங்களது 'பல நேரங்களில் பல மனிதர்கள்' கட்டுரைத் தொகுப்பைப் படித்தேன். இதிலுள்ள 23 கட்டுரைகளில் அதிகமும் நான் முன்பே 'உயிர்மை' இதழ்களில் படித்ததுதான். எனினும்…

நிழலாடும் கூத்துகள் : களந்தை பீர்முகம்மது எழுதிய ‘பிறைக்கூத்து’ நூலுக்கு கவிஞர் யுகபாரதியின் முன்னீடு

யுகபாரதி களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதைகள் என் கைக்கு எழுத்துப்பிரதியாகக் கிடைத்தபோது சிறுகதைகள் குறித்து நான் என்ன எழுதிவிட முடியும் என்றுதான் பட்டது. மேலும், கவிதை எழுத முயற்சி செய்கிறவனாக அறியப்பட்ட, சினிமாப் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும்…

மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: “வைக்கம் முகம்மது பஷீர் -காலம் முழுதும் கலை”

பாவண்ணன் மலையாள இலக்கிய உலகத்தில் மாபெரும் படைப்பாளியாக கருதப்படுகிற வைக்கம் முகம்மது பஷீரின் தோற்றம் முதல் மறைவுவரைக்குமான வாழ்க்கை வரலாறு பத்தொன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு காலம் முழுதும் கலை என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இருபதாவது…

கதைகள்

சுவர்க்கம்

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் அந்தப் போட்டோவை வம்சீ மற்றொரு முறை பார்த்தான். பின்னாமல் அப்படியே விட்டுவிட்ட அடர்ததியான கூந்தல், விசாலமான கண்கள், செதுக்கினாற் போன்ற மூக்கு, அழகான இதழ்கள். சரியாய் மேலுதட்டுக்கு மேல் இடதுபக்கமாக சிறிய…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -4

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 The Face of Socrates "கவிஞர் தமது கவிதையைப் படைக்க ஏதுவாக்குவது அவரது தனித்துவ அறிவன்று. ஆழ்ந்த போதனைகள் என்ன பொருளைக் கூறுகின்றன என்று…

“மாற்றம்”

உஷாதீபன். மதுரைஅந்த இடத்திற்கு வந்து வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பியபோதுதான் எனக்கே உறைத்தது. அங்கே அந்தப் பழக் கடை இல்லையென்று! வெட்டிப் போட்ட இளநீர் மட்டைகள் அம்பாரமாய்க் குவிந்து கிடந்தன. அட! அருகேயிருக்கும் அந்த வண்;டியையும்…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஐந்தாவது அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன் --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- . சுகாவ் மெதுவாக சிரித்துக்கொண்டே எழுந்து நின்றான். அவன் பற்களுக்கிடையே இருந்த இடைவெளி 1943இல் உஸ்ட்-இஸ்மாவில்(சுகாவ் முன்னர் இருந்த முகாம்) வாங்கியது. ஆஹா! என்ன ஒரு உதை அது;…

திமிர் பிடிச்சவ

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா ‘ஆமாம். நீ திமிர் பிடிச்சவதான்’ ‘கோபத்தில இப்படியெல்லாம் வார்த்தைகளை அள்ளிக் கொட்டாத்தீங்க’ அவள் குரல் உடைந்திருந்தது. ‘நான் மனசில உள்ளத தான் சொல்றேன்’ ‘ஏன் என்னாச்சி உங்களுக்கு? இப்படியெல்லாம் பேசறீங்க..’ ‘இப்ப…

பட்டறிவு

எஸ்ஸார்சி அப்படி என்ன தவறு செய்துவிட்டான் தருமங்குடி துரைசாமி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தெற்கு வெளி வயலில் நெற் பயிர் எப்படி இருக்கிறது என்ற பெரிய பிள்ளையின் கனம் கூடிய கேள்விக்கு அவன்…

ஞாபக வெளி

க.ரகுநாதன் காற்றைத் தவிர மற்ற அனைத்தும் விற்பனைக்கு வந்துவிட்ட அந்த ஊரில் கான்கிரீட் ராட்சசன் போன்ற அடுக்கு மாடி கட்டடங்களைக் கட்டுவதற்காக அவன் வந்திருந்தான். தனது வேலைகள் முடிய இன்னும் சில தினங்கள் ஆகக்…

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தேழு

இரா.முருகன் 3 அக்டோபர் 1900 - சார்வரி வருஷம் புரட்டாசி 18, புதன்கிழமை சாரட் வண்டி அரசூர் கடை வீதியில் சாவகாசமாக ஊர்ந்து கொண்டிருந்தது. சாயந்திர நேரமானதால் பரபரப்போடு இருந்தது தெரு. ஊரில் சந்தை…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran’s Paintings “The Plunge Together” "உன் தோல்விகளை எடைபோட்டு உனக்கு நியாயம் அளிப்பது, முரணான போக்குகளுக்குக் காரணம் பருவக் காலங்கள் என்று குற்றம் சாட்டுவதை…

வேத வனம் விருட்சம் 36

எஸ்ஸார்சி இந்திரன் நூறுமுறை உதவும் அவன் எங்கள் போருக்கு த்துணை சொர்க்கம் உறுதிப்படும் போரிலே ஆர்யனுக்கு க்காவல் விதிப்படி வாழாக் கருப்பர்களின் தோலைத்துணிப்பவன் பேராசைக்காரர்களை துன்பம் தருவோரை சாம்பலாய்ச் சமைப்போன் -ரிக் 1/130 மனிதர்களைச்செயல்களால்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -38 << ஆயிரம் விழிகள் எனக்கு >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன்னோடு நீ இருப்பது எனக்குள்ளே எத்துணை இழப்பு எண்ணத்தை எழுப்புது அந்தோ ? மானிட வெற்றி வீரர்களில் நானொருவன் ! ஏனெனில் நீ அறிய மாட்டாய் உன்முகம் இதுவரைக்…

மலைகளின் பறத்தல்

மாதங்கி முன்னொரு நாளில் தோன்றியபோதெல்லாம் இறக்கைகளை விரித்துக்கொண்டு பறந்து கொண்டிருந்த மலைகளைக் கெஞ்சிக் கேட்டேன் பறப்பதை நிறுத்திவிடுங்களேன் நிமித்த காரணம் சொல்லலாமே அவை கேட்டன எங்கள் குழந்தைகள் தூக்கத்தில் எழுந்து அலறுகிறார்கள் எங்களுக்கே சோறு…

என்றாலும்…

செல்வராஜ் ஜெகதீசன் படிக்கவென்று சில பிடித்த புத்தகங்கள் நெடுந்துயில் கொள்ளவொரு நீள் பொழுது காணும் நிகழ்வொன்றை கவி புனைய விழையும் மனம் என்றாலும் இனிப்பதில்லை எந்தவொரு விமானப் பயணமும் இடையிடையே முகம் காட்டும் இந்த…

விருட்ச துரோகம்

எம்.ரிஷான் ஷெரீப் தென்றல் சாட்சியாக பிறை நிலவும் தாரகைகளும் சாட்சியாக அல்லிக்குளத்து நீர்ப்பூக்கள் சாட்சியாக விருட்சக் கூட்டுப் பட்சிகளும் சாட்சியாக ராக்குருவியின் மெல்லிசையொன்றோடு இருள் படர்ந்த நடுநிசிப்பொழுதொன்றில் அடர்துயிலில் நிலத்தில் ஒன்றிப்படர்ந்திருந்த பூங்கொடியினைத் தன்…

நகைச்சுவை

வயதாகியும் பொடியன்கள்

அப்துல் கையூம் நடுத்தர வயது ஆசாமிகளுக்கு ஒரு பொது அறிவு போட்டி வைத்து “இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளில் மக்களின் பேராதரவைப் பெற்றது எது?” என்று கேட்டால் சற்றும் தாமதிக்காமல் “கோபால்…