வேதா மஹாலக்ஷ்மி காயும், காயும் என்றெதிர்பார்த்து முற்றிப் போய் பழுக்கவும் அனுமதித்து, தழும்பாகிடாது சீக்கிரமே கிள்ளி எறிய நினைத்து, வலுவில வலியை மறந்திருந்தாலும்..... எதேச்சையாய் விசிறியடிக்கும் நீரலையில் நினைவலையில், முனை கொஞ்சம் அசைந்து வேர்…
சத்தி சக்திதாசன் என்னைத்தேடி நன்மைகள் அற்றுத் தீமைகள் வந்தன இன்பங்கள் இன்றித் துன்பங்கள் வந்தன ஏற்றங்கள் அல்லாமல் ஏக்கங்கள் வந்தன மரியாதையற்ற மாற்றங்கள் வந்தன என்னைத்தேடி நண்பர்கள் போர்வையில் சில நரிகள் வந்தன சொந்தத்தின்…
இளந்திரையன் முக வரிகள் நிறைந்து முறுவலிக்க மறந்த முகம் முதிர்ச்சியாய் கடும் பனியில் கட்டிடக் காட்டினுள் இயந்திரத்துடனான போராட்டத்தில் இறுகிச் சிவந்து வார இறுதியின் வரவுக்கும் மாசம் தவறாத மருட்டும் செலவுக்குமான இடைவிடாத போராட்டத்தில்…
பா. சத்தியமோகன். சிறிது நிதானிக்க முடிந்தால் இந்த நடு வயதில் முழு பலமும் திரட்டிவிடலாம் சிறிது நல் சுவாசம் தருவீராயின் வரவு செலவுகளில் மீண்டு நம்பிக்கை முளைகள் விடலாம். சுமப்பதற்கு ஒரு கனவு வலிப்பதற்கு…
முன்னாள் முதல்வர் மு கருணாநிதி விலை போகாப் புத்தகங்கள் ஏழெட்டு எழுதிவிட்டு விற்பனையாகாமல் ஈயோட்டிக் கொண்டிருக்கும் வெத்துவேட்டு விருதா எழுத்தாளர் சிலபேர் - நூலை வெளியிடுபவர் ஜெயகாந்தன் என்றால் - அந்த ஒளியினாலே உலகிற்குத்…
கற்பகம்-ரமணா நீ இருக்கிறாய்! நிஜமாய், நிச்சயமாய், நிரந்தரமாய். நீ என்றென்றும் இங்கே இருக்கிறாய்! விரிவாய், தெளிவாய், வெளிச்சமாய். இனித் தேட ஏதுமில்லை, நீ இருக்கிறாய், அக்கறையாய், பரிவாய், சரணாலயமாய்! இனி வேண்ட ஏதுமில்லை! நீ…
விக்ரமாதித்யன்-லஷ்மி மணிவண்ணன்-சங்கர ராம சுப்ரமண்யன். கவிதை வரவில்லை கவிதை வரவில்லை கண்மணிகளே கவிதை வரவில்லை கவிதை கண்மணிகளுக்கு வராது கண்மணிகள் கவிதையின் சொரூபங்கள் காற்றில்லாத பொழுது கவிதை எப்படி வரும் காற்று கவிதையின் சொரூபம்…
தமிழ்மணவாளன் உன்னிடம் உரையாடுவதை விட எனக்கு சுகமான தருணமேதும் வாய்ப்பதில்லை. உன் சந்திப்பு நல்கும் மகிழ்ச்சியை வேறெதன் வாயிலாகவும் பெறமுடியாதென்னால். மெல்லிய தூறல் கூடிய ஓர் அந்தியில் நீ வந்து திரும்பியபோது பெருமழை அடிக்கத்தொடங்கியதென்னுள்…
மீனாட்சி வசந்த் கட்டிய ஆடையே கம்பளிப் போர்வையாய், கொட்டும் மழையில் உடல் கழுவி, சுட்டெரிக்கும் வெயிலில் குளிர் காய்ந்து, எதிர்கால கனவுகளை எரிசாரயத்தில் கழுவி, கெட்ட வார்த்தைகளில் ஆற்றாமை கொட்டி, ஏதோ உண்டு, எங்கோ…
கரு.திருவரசு பூத்து மலரு முன்னே - எனைப் பார்த்துச் சிரித்து விட்டாள்! சேர்த்துத் தழுவு முன்னே - வழி பார்த்து நடந்து விட்டாள்! பேசிப் பழகு முன்னே - காதல் பேசப் பழக்கி விட்டாள்!…