தேனம்மை லெக்ஷ்மணன்அன்ன பட்சி:- ********************** பேசத்துவங்குமுன்னே முடிவுக்கு வந்து விடுகின்றன.. நம் உரையாடல்கள்.. கடலில் மூழ்கிய கப்பல்களாய் ஒரு கனவுக்குள் ஆழ்கிறது.. உன் கண்கள்.. அவ்வப்போது கலங்கரை விளக்காய் என் கண் தேடியலைந்து.. புன்னகைக்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ என்னருகில் வராதீர் ! ++++++++++++++ +++++++++++++ பிரிவின் நிழல் ! ++++++++++++++ பிரிவென்றால் நன்றாகத் தெரியும் நமக்கு பிணைப்பு…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நேற்று நாம் உருவக வழிபாட்டுக்கு ஊதுபத்திகளைக் கொளுத்தி உயிர்களைக் கோபப்படும் தெய்வங்களுக்குப் பலியிட்டோம். ஆனால் இன்று நாமே நமக்கு ஊதிபத்தி…
சுந்தராமனசுமுதிராத முன்னிருபதுகளில் மாலையோடு வந்த ஒரு மாபெரும் உறுத்தலுக்கு, மனசுக்குப் பிடிக்காமல் வாழ்க்கைப்பட்டவள் அவள்... காலைகளில் கட்டிய கனவுக்கோட்டை யெல்லாம் மாலையில் சிதையவைக்கும் மந்திரசக்திக்குக் கட்டுப்பட்டு, ஆலையில் அகப்பட்ட கரும்பாகக் கசங்கியவள்... நின்றால் ஒருகுற்றம்…
ராம்ப்ரசாத் அரும்புகையிலேயே வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள் வாசங்களின் சமத்துவங்களை புறந்தள்ளி விடுகின்றன... வாசங்களின் சமத்துவங்களை ஏற்கமுடியாதென வாதம் செய்கின்றன... வாசங்களுக்கப்பால் மொழியை பிரதானமாக்க முயல்கின்றன... வாசங்களைத் தேடி அலையும் சுரும்புகளுக்கு மொழி தேவையற்றதாகிவிடுகிறது... வாசங்களின்…
சத்யானந்தன் 1.வேறெங்குமில்லை தோல் தோலின் நிறம் அடையாளமாய் உரைகல்லாய் பச்சோந்தித் தோலை பாம்புச் சட்டை போல் அணியாவிட்டால் நிர்வாணம் நிறம் சுமக்கும் துணிகளாய் சில கொடிகள் அதிகாரத்தின் தூண்களாய்ப் பல கொடிக்கம்பங்கள் உயர கீழே…
அமைதிச்சாரல் சிக்கித்தவிக்கும் நினைவுகள் மனதின் இடுக்குகளில், பிய்த்தெறியமுடியா சிடுக்குகளாய்; எங்கோ ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இனம்புரியா சஞ்சலங்கள், விடாது பின்வரும் நிழலைப்போல் கேள்விகள்,.. துரத்திக்கொண்டிருக்கும் இன்னவென்று புரிபடாத பதில்களை.. புரிந்துகொள்வதற்கும் புரியவைப்பதற்குமான இடைவெளியில் நூலாம்படையுடன்…
கலாசுரன்--------------------------------------------------- அறை திறக்கப்பட்டது உடன் வந்தவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள் அங்கு பத்திரமாக்கப்பட்டிருந்தது ஒரு பேனாவும் சில காகிதங்களும் ஊன்றி நடப்பதற்கான ஒரு தடியும் இறுதியில் இதமானதொரு நகைப்பு அவன் இதழ்களில் மிச்சப்பட்டிருந்தது .... யாரும்…
கோமதி நடராஜன்---------------- தண்ணீருக்கு இத்தனை பெயரா? உள்ளிருந்து புறப்பட்டால் ஊற்று. விண்ணிலிருந்து வீழ்ந்தால் மழை. உயரத்திலிருந்து இறங்கினால் அருவி. சமதளத்தில் பயணித்தால் ஆறு. தேக்கி வைத்தால் ஏரி. பள்ளம் கண்டு பதுங்கினால் குளம். பயணம்…
க.ஆனந்த்... ஒரு இரகசியத்தை இரகசியமாய் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருக்கும் குழந்தையிடம் இரகசியமாய் ஒரு நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் அது இரகசியமாகவே இருக்குமென்று ... மெல்ல அடியெடுத்து பறக்கும் திசையெல்லாம் சலிக்காமல் பின் தொடர்ந்து பிடித்த வண்ணத்துப்பூச்சியை, உடனே…