திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090618_Issue

அரசியலும் சமூகமும்

இன்னும் சில வார்த்தைகள், நட்புணர்வுடன்

வெங்கட் சாமிநாதன் ஜனாப் 'வஹாபி' அவர்கள், பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்கள் சார்பாக எனக்கு விளக்கம் தர முன்வந்ததற்கும் தந்துள்ள விளக்கங்களுக்கும் அவை வந்துள்ள வரைக்கும் எனது நன்றி. முதன் முறையாக, குரானே…

வார்த்தை ஜூன் 2009 இதழில்

பி.கே. சிவகுமார்குடிமக்கள் சொன்னபடி, குடிவாழ்வு மேன்மையுற - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் விஷக்கோப்பை - யுவன் சந்திரசேகர் அறிஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் 5ஆம்…

சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்!

மலர்மன்னன் மன்மோகன் சிங்கின் முந்தைய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக ஒரு புத்திசாலி இருந்தார். மிக மிக முக்கியமான துறை அது. அங்கிருந்து ஒரு தும்மல் வெளிப்பட்டாலும் அது தேசத்தின் தும்மலாகவே கொள்ளத் தக்க அளவுக்கு…

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 6

நேசகுமார் அடிமை முறை பற்றிய வஹ்ஹாபியின் கட்டுரை/விளக்கம் எனக்கு அதிர்ச்சியையோ, வருத்தத்தையோ ஏற்படுத்தவில்லை. ஜெயமோகன் சொல்லியிருப்பதுபோல, மதவெறியர்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள் என்று ஒற்றை வரியில் உதாசீனப்படுத்திவிட்டு போய்விடவும் முடியவில்லை. வஹ்ஹாபிக்கு தனியே பதில் எழுதுகிறேன்.…

பூவேந்திரன் ஹாங்காங்கில் நிகழ்த்திய 28 மணி நேர யோக சாதனை

சித்ரா சிவகுமார் 2009, ஜூன் 14 ஆம் தேதி, ஹாங்காங்கில் வாழ்ந்த பல தமிழர்களுக்கு ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது. அன்றைய தினம் யோகராஜ் என்று யோக பயிற்சி செய்பவர்களால் அன்பாக அழைக்கப்படும்…

அறிவிப்புகள்

வசதி போலப் பொருள் கொள்ளவா சொற்கள்?

மலர்மன்னன் பெண்களுக்கு இருப்பது மதிமுகம், கயல் விழிகள் என்றோ, இளைஞனைக் காளை என்றோ பழங் காலக் கவிகள் வர்ணனை செய்திருப்பதைப் படித்துவிட்டு அவற்றை முற்றிலுமாக அணு பிசகாமல் அர்த்தப் படுத்திக் கொண்டு குதர்க்கம் செய்யக்…

‘வலக்கர விளக்கம்’

நரேன்அன்புள்ள ஆசிரியருக்கு திண்ணையில் சென்ற வாரம் வெளியான 'வலக்கர விளக்கம்' பற்றிய உரை படித்தேன். சிரிப்பை வரவழைத்தது. மத நம்பிக்கையாளர்கள் எப்படி பட்ட பிற்போக்குத்தனமான நம்பிக்கைகளையும் நியாயப்படுத்துவார்கள் என்பதற்கு எடுத்து காட்டாக இருந்தது. நல்ல…

இஸ்லாம் : திண்ணை விவாதங்கள்

கவிதா ஜெயச்சந்திரன்ஆசிரியருக்கு, வணக்கம். நான் தொடர்ந்து திண்ணை விவாதங்களை படித்து வருகிறேன். வஹ்ஹாபி நியாயமாக எழுதினாலும் இன்றைய நிலையில் அவை எல்லாம் சரி என்று (பிடி)வாதம் செய்வது அதிர்ச்சியாய் இருக்கிறது. அன்று இஸ்லாமிய மதம்…

சொல்வனம் என்ற புதிய மாதமிருமுறை இணைய இதழ்

சொல்வனம்நண்பர்களே, சொல்வனம் என்ற புதிய மாதமிருமுறை இணைய இதழைத் தொடங்கியிருக்கிறோம். இந்த இதழை http://www.solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், புத்தகவிமர்சனம், அறிவியல் சர்ச்சைகள், சமூகம், இசை, வாழ்வியல் ரசனை, மொழிபெயர்ப்பு,…

உலகத் திருக்குறள் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு

அறிவிப்புஉலகத் திருக்குறள் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு வரும் ஜுன் 20-21 ஆகிய இருநாள்களில் வேலூர் இரத்தினகிரியில் நடைபெற உள்ளது, திருவள்ளுவர் சிலை திறப்பு மற்றும் அறிஞர்கள் பாராட்டு- மற்றும் ஆய்வரங்கம் ஆகியன நிகழ…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பரிதி வடுக்களின் காந்த வீச்சுகள் பூமியில் பூகம்பத்தைத் தூண்டுமா ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகாலக் குதிரையின் ஆழியைச் சுற்றுவது பரிதி. ஊழியின் ஓவியக் கரம் கொண்டது ! ஓயாத சூரியனும் ஒருநாள் ஒளியின்றி முடங்கும் ! பூமியின் உட்கருவில் சங்கிலித் தொடரியக்கம்…

இலக்கிய கட்டுரைகள்

சங்கச் சுரங்கம் – 19: ஆடுகள மகள்

சு.பசுபதி, கனடா பனி கொட்டினாலும், புயல் வீசினாலும், 'டாணெ’ன்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காலை பத்து மணிக்கு நீச்சல் குளத்திற்குச் செல்வது என் நண்பர் ஒருவரின் வழக்கம். ஆழமான பகுதியில் நீந்தும் துணிச்சலோ, ஆற்றலோ அவருக்குக்…

“முதலாவது பன்னாட்டுச் செவ்வியல் மாநாடு-2009”

சரவணன் ஆய்வுக்கோவை வெளியீடு ஆய்வுக்கோவை தொடக்க விழாப் பேருரை பேராசிரியர் முனைவர் அம்மன்கிளி முருகதாஸ் அவர்கள் பத்திரிகைச் செய்தி முதலாவது பன்னாட்டுச் செவ்வியல் மொழி மாநாடு – 2009 தமிழகம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு…

“உண்மை இல்லாத புனைவு எது?”

ரெ.கார்த்திகேசு --— "உலகத் தரம்" என நாம் அடிக்கடி சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனால் உலகத் தரம் என்பது என்ன என்பதை யாரும் வரையறுத்துச் சொல்ல முடிவதில்லை. உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் ரசிக்கத்தக்க படைப்புக்களை…

கதைகள்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -7

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig 1 Socrates & Plato "உனது நல்ல பெயரை நீ பெறத்தக்க விலைமிக்க ஓர் ஆபரணமாக மதிப்பிடு ! அந்த வரவுக் கொடை தீயைப் போன்றது…

விசுவாசம்

ராமலக்ஷ்மி, பெங்களூர் 'ஒரு வருசமா ரெண்டு வருசமா..? பத்து வருசமா ராப்பகலா நேரங்காலம் பாக்காம நாயாப் பேயா உழைக்கறேன். ஹூம் அதான் நம்பளப் பாத்தா மனுசனாட்டமே தெரியலியோ என்னவோ' காலையில் இருந்து நினைத்து நினைத்து…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – எட்டாவது அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன் லோவட் நதிவோரமாக இருந்த மருத்துவமனைக்கு தன் தாடை உடைந்தபோதுபோனது டோவுஷ்கின்னின் பனி போன்ற வெள்ளை நிற தொப்பியை பார்த்ததும் நினைவிற்கு வந்தது. என்ன ஒரு மடத்தனம் செய்திருந்தான்! தன் மோவாய்…

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பது

இரா.முருகன் 5 அக்டோபர் 1908 - கீலக வருஷம் புரட்டாசி 20, திங்கள்கிழமை என் கண்ணாட்டி லலிதாம்பிகே. எத்தனை கடுதாசு உனக்கு எழுதி எந்த எந்த மார்க்கமாகவோ எல்லாம் அனுப்பி வைத்து அதெல்லாம் ஒரு…

ஒரு பெண்ணின் டைரி சொல்லும் கதை

க.ராஜம்ரஞ்சனி எனக்கு அழுகை அழுகையாய் வருகின்றது. இன்று நேற்றல்ல. கிட்டத்தட்ட நாற்பதைந்து வருடங்களாக நான் படும் கஷ்டம் என்னுள்ளே புதைந்து நித்தமும் வதை செய்கின்றது. என் மனதில் ஒரு பெண்ணின் மனதைச் சுமந்து நான்…

பேரழகியும்,அறபுநாட்டுப் பாதணிகளும் !

எம்.ரிஷான் ஷெரீப் எனக்கு முன்னால போய்க்கொண்டிருந்த பெண் சடாரெனக் கீழ விழுந்ததுல எனக்குச் சரியான அதிர்ச்சியாகிப் போச்சுது. சொந்த ஊரிலெண்டால் ஓடிப்போய் உதவியிருக்கலாம். என்ரை மனசு ஒரு கணம் பதறிப் போச்சுது. இப்பொழுது என்ன…

மன்னிப்பு

ரா.கிரிதரன்உயரமான கட்டிடங்கள் தேம்ஸ் நதியில் சலனப்பட்டுக்கொண்டிருந்தன. நீளம் தாண்டும் வீரர்களாய் நாங்கள் பயணம் செய்துகொண்டிருந்த பாலம் நீண்டுகொண்டே சென்றது. என் எதிர் ஜன்னல்வழியே தெரிந்த மற்ற வீரர்களைப் போல் சமத்காரம் கொண்ட வீரர்கள் இருமடங்காம்.…

அறிவியல்கதை: வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா

நாகரத்தினம் கிருஷ்ணா நீர் இறைக்கும் எந்திரம்போல சாதுவாய் கேட்ட எஞ்சின் உறுமல் சத்தம் கண்ணம்மாவுக்கு உரியது. போர்டிகோவிற்குள் நுழைந்ததும் சட்டென்று அது அடங்கிபோனது, தொடர்ந்து அவன் கேட்டு பழகிய(?) செருப்படிகள். "பரத்! ரெண்டுலே ஒண்ணு…

அக்கா பையன் சுந்தரம்

கே.பாலமுருகன் யாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து வெளியே பார்த்தேன். என் அக்கா பையன் சுந்தரம் வெளிக்கதவில் சாய்ந்து கொண்டு…

பதவி உயர்வு

தி.சு.பா கிருஷ்ணாவுக்குள் வெந்நீரூற்று ஒன்று கொதித்தெழ இருந்தது. “என்னை என்ன இநா வாநா ன்னு நெனச்சுண்டானா? நாலு வருஷமா ப்ராஜக்ட் லீடரா இருக்கேன் ம்…ஹ்ம்…..ப்ராஜக்ட் லீடராவேஏஏ இருக்கேன்….ஆனா நீ…..வருஷம் தவறாம ப்ரமோஷன் வாங்கிண்டு போற….”…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனிதனின் கானம் >> (முதற் பாகத் தொடர்ச்சி)கவிதை -11 பாகம் -2

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran Paintings “The Uphill Battle of Women” "என் குறிக்கோள், என் மன நிறைவு இரண்டும் எனக்குக் கடவுள். நேற்று நான் உன்னவன், நாளைக்கு…

படைப்பு

ஜி.எஸ். தயாளன் தன் வலியின் உக்கிரத்திற்கு ஏற்ப சிறு குழந்தை உரக்க அழுகிறது தீராத தன்வலி கண்ணீராய் கரையக்கரைய குழந்தை அழுதழுது ஒய்க்கிறது இன்னும் கொஞ்ச நேரத்தில் சிரித்து விளையாடத் தொடங்கும் அக்கணத்தில் கண்டடைந்த…

வேத வனம் -விருட்சம் 38

இந்திரனே பருகு இனிய சோமம் இதோ பாலும் நீரும் சேர்ந்து கற்களிடை இறுகி கம்பளி பிழிபட்டுக்கிடைத்த சோமம் இது சுவாஹா வஷட் சொல்லி எழும் சோமம் இது விண்ணின் மைந்தர்களே புள்ளி க்குதிரை பூட்டிய…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -41 << காதலி இறந்தால் ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா திடீரென நீ வசிக்காமல் போனால் திடீரென நீ வாழாமல் மாண்டால் உயிரோடு வாழ வேண்டும் நான் மட்டும் ! துணிவில்லை எனக்கு எழுதிட ! துணிவில்லை எனக்கு…

வாழ்வின் நீளம்

சக்தி ஆற்றின் ஓரம் நடக்கிறேன் வாழ்வின் நீளத்தை ரசிக்கின்றேன் எந்தையும் தாயும் புரிந்திட்ட விந்தையாய் நானும் விழுந்திட்டேன் தந்தையின் கைகளை பற்றியபடியே தாயின் மடியில் விளையாடிய பொழுதுகள்.... நேற்றைய நினைவுகளில் புதைந்திட்ட வேளைகள் நாளைய…

பருந்துகளும் என் வீட்டுக்கோழிக்குஞ்சும்

கவிதா நோர்வே பலம் படைத்தவன் பூமியில் பாவம் மண்புழு கொத்தித் தின்றது கோழி ஓடும் மீன் ஒற்றைக் காலில் கொக்கு. எங்கள் பின்முற்றத்தில் காணாமல் போனது என் கோழிக்குஞ்சு உயரத்தில் பருந்து. தொலைவில் வேட்டுச்சத்தம்…

இருளில் ஒளி?

உத்தமபுத்திரா மீண்டும் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து என் இருண்ட வீட்டிற்குள்... தேடிய போதுதான் தெரிந்தது எஞ்சியிருந்த எனது ஒரே ஒரு மெழுகுவர்த்தியையும் யாரோ திருடி விட்டார்கள்... தீர்மானித்து விட்டேன் இனி தீக்குச்சிகளே தேவையில்லை…

நிலத்திற்கு மேலே நடப்பவர்களின் கதை

கே.பாலமுருகன் 1 எல்லோரும் நடந்துவிட்டு கொஞ்சம் நிலத்தை எனக்காக விட்டுவைத்திருந்தார்கள். நடந்தேன். தவழ்ந்தேன். பற்றுக்கொண்டேன். பைத்தியமானேன். மீண்டும் சேகரிக்க ஏதுமில்லாததால் முன்னோர்களின் காலடி சப்தங்களை நிலம் முழுக்க ஆராய்ந்தேன். சிலாகித்தேன். கண்டறிந்தேன். மீண்டும் பற்றுக்கொண்டேன்.…

வெண்சங்கு

ஹெச்.ஜி.ரசூல் பாறைப் பள்ளியை திரும்பத் திரும்ப முத்தமிடும் மெளன அலைகள் கடல்தூவல் நுரைகளை வீசித்தெறித்து அல்லும் பகலுமற்ற ஓயாத சலனத்தில் எப்போதும் கடலில் தூக்கி வீசிய போது அலைகளின் அடியாழத்தில் தொலைந்து போனது வெண்சங்கு.…

‘உலகக் கிராமத்து’ மக்களே!

வ.ந.கிரிதரன் அங்கே எனது மண்ணில் மக்கள் மெளனித்திருக்கின்றார்கள். மெளனமாக்கப்பட்டிருக்கின்றார்கள். இரவும், பகலுமென ஓடியோடி அவர்கள் உருக்குலைந்து விட்டார்கள். நிலப்பொந்துகளுக்குள் வாழும் முயல்களுக்கோ அல்லது மண்ணெலிகளுக்கோ கிடைக்கும் தூக்கத்தைக் கூட , நிம்மதியைக் கூட அவர்கள்…