திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020428_Issue

அரசியலும் சமூகமும்

அடையாளம் காண்கிற தற்காப்பு

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) ஏன் நீங்கள் உங்களை இன்னொருவருடன் அல்லது ஒரு குழுவுடன், இயக்கத்துடன் அல்லது ஒரு தேசத்துடன் இணைத்து அடையாளம் காண்கிறீர்கள், அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள் ? ஏன் நீங்கள் உங்களை…

ஹைதராபாத்தில் பார்க்க வேண்டிய இடம்.

கோமதி நடராஜன் அன்புள்ள அனைவருக்கும் சில எண்ணங்களைத் நமக்குள்ளேயே வைத்து ரசித்துக் கொள்ளத் தோன்றும்,சிலவற்றை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள தோன்றும்.அப்படி ஒரு விஷயத்தைதான்இந்தக் கடிதம் மூலம் உங்களுக்கு சொல்ல இருக்கிறேன். நாம் எல்லோரும் தெய்வத்தின்…

கத்தோலிக்கப் பாதிரியார்கள் : அமெரிக்கா-ஐரோப்பாவில் உருவாகி இருக்கும் பெரும் பிரசினையும் இந்திய பத்திரிகை உலகமும்

மஞ்சுளா நவநீதன் நான் தொடர்ந்து, இந்து, எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிக்கைகளைப் படித்துவருகிறேன். கூடவே, அமெரிக்கப் பத்திரிக்கைகளையும், இங்கிலாந்து தினசரிகளையும் படித்து வருகிறேன். இந்தியாவின் ஆங்கில தினசரிகள் பெரும்பாலும்…

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி – 3 (அத்தியாயம் 3 : இந்துத்துவத்தின் பரிணாமம் – ஒரு வரலாற்றுக் குறிப்பு)

மஞ்சுளா நவநீதன் இந்த அத்தியாயத்தில் மார்க்ஸ் இன்றைய ஆர் எஸ் எஸ்-இன் பிதாமகர்கள் என்று இவர் கருதும் சில இயக்கங்களைப் பற்றிச் சொல்கிறார். இதனுடன் கூடவே இந்து 'மேல்சாதிக் காரர்கள் ' இந்து மதத்தில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

விண்வெளி ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரெளன்

சி. ஜெயபாரதன், கனடா அண்ட வெளி யுகம் பிறந்தது அண்டவெளி யுகமும், அணுசக்தி யுகமும் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில், போர் அழிவியல் விஞ்ஞானத்தால் [Science of Destruction] விளைந்த சரித்திரப் புகழ் பெற்ற…

முதல் விலங்கியல் அறிவியலாளர் அரிஸ்டாட்டில் (Aristotle)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி அறிவியல் உலகிற்கு கிரேக்க மண்ணின் நன்கொடை அளவிடற்கரியது. தத்துவ மேதை சாக்ரடாஸும், அவர்தம் மாணவர் பிளேட்டோவும் இம்மண்ணில் தோன்றிய பேரறிஞர்களாவர். பிளேட்டோவின் மாணவர்…

விஞ்ஞானியைப் போல் சிந்திப்பாயாக

கென்னி ஃபெல்டர் ஒரு கதை சொல்லி விஞ்ஞானச் சிந்தனையைப் புரியலாம். இந்தக் கதையால் அறியப்படுவது யாதெனில் விஞ்ஞானிகள் சிந்திக்கு முறை எப்படி என்பதாகும். முதலில் கதை பிறகு கதை சொல்லும் சேதி ஒரே ஒரு…

பிரபஞ்சம் ஒரு முடிவற்ற சுழற்சியில்

இந்த பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு அறிவியலாளர்கள் பிரபஞ்சத்தை விளக்கவும், இது எங்கு செல்கிறது என்பதை விவரிக்கவும் புதிய மாதிரியமைப்பை முன்வைத்திருக்கிறார்கள். பிரபஞ்சத்தில் எல்லாப்பொருட்களும்…

சுழற்சியில் பிரபஞ்சம் ( ‘cyclic ‘ Universe) – கேள்வி பதில்கள்

டாக்டர் டேவிட் ஒயிட்ஹவுஸ் கேள்வி :பிரபஞ்சம் ஆரம்பிக்கவில்லை என்றால், அது எப்படி இப்போது இருக்கிறது ? பதில்: இப்போது பிரபஞ்சம் இருக்கிறது என்பதற்காக அதற்கு ஒரு ஆரம்பம் இருக்கவேண்டும் என அவசியமில்லை. காலம்காலமாக இருந்துகொண்டே…

இலக்கிய கட்டுரைகள்

வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல் ( ஜெயமோகன் எழுதிய ‘பின்தொடரும் நிழலின் குரல் ‘ நாவல் விமர்சனம்)

க . மோகனரங்கன் ஓர் இலக்கியப்படைப்பு மகத்தானது என்று கருதப்பட அடிப்படையாக அமைகின்ற கூறுகள் எவை ?வேறு ஒருதேசத்தில் ,வேறு ஒரு சூழலில் ,வேறு ஒரு மொழியில் நிகழும் படைப்பு எவ்விதத்தில் அந்நியோன்னியமான ஒன்றாக…

பழங்காலத்திலிருந்து நவீன காலம் வரை சிங்களக் கவிதைகள்

லங்காநெட் இணையப்பத்திரிக்கையிலிருந்து ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. கவிதை ஒரு நாட்டின் உயிர்நாடி. அது ஒரு நாட்டின் உலகப்பார்வையையும், கலாச்சாரப்பிடிப்புகளையும், அதன் கல்வியையும், காதலையும் தெரிவிக்கிறது. கவிதை வழியே தெரிவது கலாச்சாரமுள்ள ஒரு நாடு. சிங்களர்கள் கவிதையில்…

கதைகள்

‘ஆபிாிக்க அமொிக்கக் கனேடியக் குடிவரவாளன் ‘

வ.ந.கிாிதரன் தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நுாலகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாாி. அடிக்கடி நுாலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நுாலகத்தின் சிறுவர்…

நாடியை நாடி……

நாராயணன் ஸ்வாமிநாதன் டாக்டர் ஜெயராமன் என்னுடைய நீண்ட நாள் நண்பர். தமிழ் இலக்கியம், சித்த வைத்தியம், நாடி ஜோசியம் இவற்றில் அவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. ஓய்வு கிடைத்தபோது அவரிடம் போய் பேசிக் கொண்டிருப்பதுண்டு.…

தவசிகள்

முனைவர். செண்பகம் ராமசுவாமி கூட்டம் மெளனமாகிக் கிடப்பது ஒரு அரிய காட்சிதான்! எவ்வளவு உரக்கக் கூக்க்குரலிட்டும் ஆரவாரித்தும் திரியக் கூடிய ஒரு மனிதக்கூட்டம் இது! ஓசையிட்டே வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கரைத்துக் கொண்டிருக்கும் சப்தக்கூட்டமல்லவா இது!…

மிஸ். ரமா அமெண்டா

கே.ஆர்.ஐயங்கார் தொலைபேசி பிண்ணனிப் பாடகி ஹரிணியின் குரலில் கொஞ்சிக் கொஞ்சிக் கூப்பிட்டது. ராமபத்ரன் தூக்கக் கலக்கத்துடன் போனை எடுத்தார் 'ஹலாவ்வ்வ் ' 'ஹலோ நான் சுபத்ரா பேசறேன் ' மறுமுனையில் அவர் மனைவி 'என்னடி…

கலைகள்

மாட்டுக்கறி பிரியாணி

தேவையான பொருட்கள் 1 கிலோ மாட்டுக்கறி அரை லிட்டர் (அல்லது 1 பைண்ட்) தயிர் 3 நடுத்தர வெங்காயங்கள் 4 அங்குல நீளமுள்ள இஞ்சி 1 சிறு கொத்து புதினா கால் கிலோ அரிசி…

கோவா முறை பன்றிக்கறி விண்டலூ

தேவையான பொருட்கள் காரம் விரும்புபவர்கள், கூட கொஞ்சம் மிளகாய்களைச் சேர்த்துக்கொள்ளலாம். 2 தேக்கரண்டி முழு ஜீரகங்கள் 2 அல்லது 3 காய்ந்த சிவப்பு மிளகாய்கள் 1 தேக்கரண்டி கறுப்பு மிளகுகள் 1 தேக்கரண்டி ஏலக்காய்…

சிங்கள அச்சரு (சிங்கள காய்கறி ஊறுகாய்)

தேவையான பொருட்கள் 15-20 சின்ன வெங்காயங்கள் 10-15 சின்ன பச்சை மிளகாய்கள் (இரண்டாக நடுவில் கிழிக்கப்பட்டது) 2 பெரிய காரெட்டுகள் (சின்ன நீள துண்டங்களாக வெட்டப்பட்டது) 1 சின்ன டர்னிப் (முக்கோண வடிவில் மெல்லிய…

கவிதைகள்

மெளனமாய் நான்

புஷ்பா கிறிஸ்ாி காற்று மெதுவாக பேசியது தென்றலாய் சிாித்தது மழை தட்டுத் தடுமாறியது சின்னத் துளிகளாய் சிதறியது வானத்து மேகங்கள் ஊர்வலம் போயின வண்ணக் கலவை வர்ணங்களோடு பச்சைப் புல்வெளி பசுமையாய் பேசியது துளித்…

ஓடிவா! ஓடிவா! தேவன்மடி!

புஹாரி, கனடா எத்தனைக் காலம்நான் ஏங்கினேன் எத்தனைக் கனவினில் மூழ்கினேன் எத்திசை நோக்கினும் நீயின்றி என்விழி கண்டது வேறில்லை அத்தனை ஆசையும் தேக்கிவைத்து அன்பே நானின்று ஓடிவந்தேன் பித்தனைப் போலே ஆடுகின்றேன் பேசுவுன் மொழியில்…

நீர் நினைவுகள்

எஸ். வைதேஹி. ஜன்னல் கண்ணாடிகளின் வெளியே உதிர்ந்து விழும் மழை சுவற்றின் பக்கங்களில் உறைந்து அமிழ்ந்து நிறம் மாற்றம் கொள்ளும் நீர் கொட்டும் மழை சாலையில் நெளியும் சாரை போல தவளையுடன் மிதக்கும் நீர்…

அந்த நாட்கள்

ஆனந்தன் காலையில் எழுப்பி குளியலிட்டு, தலை சீவி அலங்கரித்து, பசி தனித்து பள்ளி அனுப்பி வரும் வரையில் தவம் கிடந்து, வந்தபின் கலைப்பேடுத்து, உன்னோடு தானும் படித்து படிக்காத பட்டதாரியானர், பெற்றோர்! அகத்தின் அழகை…

பூக்கள் பேசுவதில்லையா ?

சேவியர். நான் தான் பூ பேசுகிறேன். மொட்டுக்குள் இருந்தபோதே முட்டி முட்டிப் பேசியவைகள் தான் எல்லாமே. ஆனாலும் உங்கள் திறவாச் செவிகளுக்குள் விழுந்திருக்க வாய்ப்பில்லை. என் விலா எலும்புவரை வண்டுகள் வந்து கடப்பாரை இறக்கிச்…

நான் கணினி வாங்கிய கதை

அனந்த் (அனந்தநாராயணன்) கணிசமாய்த் தள்ளுபடி கண்டிடுவீ ரென்ற வணிகரின் வார்த்தையை வேதமென நம்பிக் கணினிக் கடைமுன்னே காலை முதலே துணிசுற்றித் தீவைத்த தீயவரைத் தாக்கத் தணியாமல் நீண்டிட்ட தூயவனின் வால்போல் அணிவகுத்து நின்ற அனைவருடன்…

நகர் வெண்பா – இன்னும் நான்கு

மத்தளராயன் இரண்டாம் மாடி பால்கனி வெள்ளென மேல்குளித்த வீட்டுப்பெண் கீழ்த்தளத்தில் உள்ளுடையு லர்த்தத் தயங்குகிறாள் -பள்ளியில் ஓதும் இசைகேட்கப் பால்கனியின் நின்றது போதுமே உள்ளே நட. வேலை நாள் மரணம் மேலேநேர் மாடிக் கிழவனார்…

கவிதையைத் தேடுகிறேன்

சதீஷ் முன் போல கவிதை மலர்கள் மலர்வதில்லை. தென்றலாய் நீ வருடியபோது வசந்தமாய் வந்த கவிதைகள் இப்போதெல்லாம் வருவதேயில்லை. நீ அருகில் இருந்தபோது பீறிட்ட கவிதை ஊற்றின் சுவடே தொியவில்லை இப்போது. வறண்ட இதயத்தின்…