பனசை நடராஜன் நினைவுப் பெட்டகங்கள் நிறைந்திருக்கும் சுரங்கம், கனவுகளை நனவாக்க கற்றுத்தரும் அரங்கம்! இரக்கமும், வன்மமும் சுரக்கின்ற கேணி ! முயல முனைவோரை முன்னேற்றும் ஏணி ! பயிர்வாடக் கண்டு பதறுகின்ற பண்பினர்கள், உயிர்போகக்…
மாலதி ---- கோடி மணி நிலை ஒன்று அசையுமென்று பார்த்திருந்தேன். கதவு திறந்தபின்பு அழகுப் பொன்மணிகளிலே அசையவென்று நாக்கில்லை. ரஜபுதனப் பச்சையில் வைரப்புள்ளி ராஜாங்கச்சிவப்போடு ஊதாப்பட்டு மஞ்சள் சோளிக்கொரு மயிலாங்கி பாக்தாத் நகர்வீதிக் கடையோரம்…
சத்தி சக்திதாசன் சொல்லத் தெரியவில்லை சொல்லியும் தெரிவதில்லை சொந்தங்களின் நினைவுகளை சோதனை என்றும் தள்ள முடியவில்லை மண்ணுக்கும் விண்ணுக்கும் மனதால் ஒரு பாலம் கட்டி மந்திரவாசல் தன்னை திறந்து மயங்கும் நினைவுகளை ஏனொ மறக்கும்…
பட்டுக்கோட்டை தமிழ்மதி “எதற்கிந்த மல்லுக்கட்டல் ? எதற்கிந்தப் போராட்டம் ?” * கல்லைப் புரட்டி கல்லாகிப் போனவர்களே.... உங்களுக்கு நெம்புகோல் தத்துவம் தெரியுமா ? கல்புரட்டும் கம்பிக்கு சிறுகல்லால் முட்டுக்கொடுக்கும் உத்தி புதியுள்ளவனின் புரட்டு…
நாகூர் ரூமி அப்பாவுக்கு ரொம்ப வருத்தம் அவரைப்போல நானில்லை என அம்மாவுக்கும் ரொம்ப வருத்தம் அவளைப்போல நானில்லை என இப்படியெல்லாம் வருத்தப்பட வேறெவரும் வரமாட்டார் என்றாலும் எனக்குண்டு எப்போதும் சந்தோஷம் என்னைப்போலவே நானிருப்பதில். ----
நளாயினி தாமரைச்செல்வன் ! ____ உன் மெளனமான காதலே எனை வதை செய்யும் போது..! போதும்.... நீ மெளனமாகவே இருந்துவிடு. அழுவதாக சிாிப்பதாக சிந்திப்பதாக நாணுவதாக உனக்குள் நீயே என்னோடு பேசிக்கொள்வதாக அடடே எத்தனை…
தமிழவன் நேற்று அறைக்குள் நுழைகையில் எதிர்பாராத விதமாய் மண்டைஓடு கொண்டுவந்தார் நண்பர். கவிதை எழுதும் காலமல்ல இது என்றார். தனக்கு அடிக்கடி குனிந்து காலணிக்கு லேசு கட்டுபவர்களைப் பிடிக்காது சளிகட்டாமல் இருமுபவர்களையும் சேர்த்து என்றார்.…
தீபம் கோபி இதயங்கள் இணையும் முன்பே உடல்கள் உரசியதால் உயிர்தோன்றிய சிசுவுக்கு.... கருவோடு கல்லறை...! ---- dewwinds@yahoo.com
பனசை நடராஜன் நீ குடிப்பதில்லை, புகைப்பதில்லை, 'வேறெதுவுமா ' இல்லையென்று கண்சிமிட்டி நண்பன் கேட்டான்! சற்றுத் மெளனித்தாலும் அவனாகவே தவறாக அர்த்தம் கொண்டுவிடுவானென்று அவசரமாய் 'இல்லை 'யென்றேன், 'வேடம் போடாதே..பொய்யனே! ' என்று விருட்டென்று…
அருண்பிரசாத் கானலின் தெளிவற்ற பிம்பங்கள் கொடிய பாலையின் நிகழ் வீதிகளில். சிறகு முளைக்கும் சக்கரங்களாய் வேட்கையின் கிளர்வுகள். நீர்மை அடர்ந்த மயிற்பீலிகளின் எடையேற்றங்களில் அச்சு முறிகிறது. அருண்பிரசாத் everminnal@yahoo.com