திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20011104_Issue

அரசியலும் சமூகமும்

பெரியாரியம் — தத்துவத்தை அடையாளப் படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் — ஆய்விற்கான முன்வரைவுகள்

ராஜன்குறை (நிறப்பிரிகை 1993 ஏப்ரல்) முன்னுரையாகச் சில முக்கியமான குறிப்புகள் : இக்கட்டுரை ஆய்வு நடந்தபின் எழுதப்படுவதல்ல. ஆய்விற்கான தயாரிப்பாக எழுதப்படுவது. இதில் கூறப்படும் கருத்துக்கள் ஆய்வின் முடிவுகள் (Findings) அல்ல, ஆய்விற்கான முன்…

இந்த வாரம் இப்படி – நவம்பர் 4 ,2001 (வளைக்கரங்கள், ப.த.ச, மூன்றாமணி, முட்டை, பெளத்தம், கிறுஸ்தவர்கள், மின்னஞ்சல் மிரட்டல்)

மஞ்சுளா நவநீதன் வளைக்கரமும் பர்வேஸ் முஷரஃபும் 'நான் ஒன்றும் வளையல் போட்டுக் கொண்டிருக்கவில்லை ' என்று தெரிவிக்கிறார் பாகிஸ்தானின் சர்வாதிகாரி பர்வேஸ் முஷரஃப். இந்தியா படையெடுக்குமானால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று தெரிவிக்கிற…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மனத்தின் வைரஸ்கள்

ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Viruses of the Mind , Richard Dawkins, 1991) மீம்கள் தங்கி வசிக்கும் இடம் மனித மனம். ஆனால், மீம்கள் தாங்கள் வசிக்க வசதியாக கட்டிய ஒரு வாசஸ்தலமே மனித…

இலக்கிய கட்டுரைகள்

பாவண்ணனின் சிறுகதைகள் : வடிவமும் ஆக்கமும் ((Structure and Fabrication)

க. நாகராசன். வீரியமான விதைகள் மண்ணிலிருந்து தங்களை வெளிப்படுத்திக் கொண்டு செடியாகவும், கொடியாகவும் உருவெடுக்கின்றன. பூக்கவும் காய்க்கவும் செய்கின்றன. பல மாதங்களுக்கும், வருடங்களுக்கும் பின் முழு வளர்ச்சி பெற்று கிளைகளுடன் பல்கிப்பெருகி மரமாக விஸ்வரூபம்…

கதைகள்

சகீனாவின் வளையல்கள்

ஜாஹீரா சையது (லெமார்-அஃப்தாப் என்ற ஆஃப்கானிஸ்தானிய இலக்கிய இதழிலிருந்து) எனக்கு வயது பத்தாக இருந்தபோது, எனக்கு சகீனா என்ற ஒரு தோழி இருந்தாள். அவளுக்கும் அதே வயது. அப்போது நாங்கள் நண்பர்களாக இருந்தகாலத்தில், எங்கள்…

அத்தனை ஒளவையும் பாட்டிதான்

இன்குலாப் (ஒளவை ' யிலிருந்து) (மேடையின் மையப்பகுதியில் சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்கார்ந்து கொன்றை வேந்தனை ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுமி ஒருத்தி நடுவில் நின்று கொன்றை வேந்தனின் வரிகளைச் சொல்ல ஏனையோர் திருப்பிச் சொல்கின்றனர்.)…

கலைகள்

ஒரிஸ்ஸா – தோஹி மச்சா (தயிர் மீன் குழம்பு)

தேவையான பொருட்கள் 1/2 கிலோ (முள் அதிகம் இல்லாத) மீன் 1 கோப்பை கெட்டித் தயிர் 1 பட்டை துண்டு 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் 2-3 பச்சை மிளகாய்கள் 1 தேக்கரண்டி அரிசிமாவு…

ஒரிஸ்ஸா – மச்சா தர்காரி (காய்கறி மீன் குழம்பு)

தேவையான பொருட்கள் 1/2 கிலோ மீன் 4 பெரிய வெங்காயங்கள் 2 பெரிய உருளைக்கிழங்குகள் 1 பெரிய தக்காளி 2-3 கறி இலைகள் (பே லீவ்ஸ்) 2 தேக்கரண்டி ஜீரகத் தூள் 3 சிறு…

கவிதைகள்

மண் தின்னும் மண்

கோகுல கிருஷ்ணன் மலர்ந்து புல்லாக மாறி நிற்கிறது மண். மண் தின்று அசை போடுகின்றன மாடுகள். மாடுகளின் மடியில் மண் கறந்து குடிக்கின்றனர் மனிதர்கள். மனிதர்களைச் சிதைத்து, மண் தின்று மறுபடியும் மலர்கிறது மண்.

உந்தன் பின்னால்…

கு.முனியசாமி எனக்கும் உனக்கும் ஏழரை வருட இடைவெளி... நான் பிறந்தவுடன் நலிவடைந்த கோள்கள் எல்லாம் நீ பிறந்தவுடன் நிமிர்ந்து நின்றதனால் அப்பாவுக்குப் பதவி உயர்வு அப்பார்ட்மெண்ட் வாங்கும் வசதி... அமுதா ராசியான பொண்ணு ஆனந்த்…

எனக்கொரு வரம்

'அனந்த் ' அனந்தநாராயணன் ஐயா! என்னைப் படைத்தவனே! அடியேன் பணிந்தோர் வரம்கேட்பேன்: கையால் ஆகா நிலையிலுள்ளேன் கடவுள் நீதான் கதியெனக்கு மெய்யாய்க் கவனம் செலுத்திடநீ வேண்டு மிலையேல் சொலமாட்டேன்! பொய்யாய் எதையும் புனைந்துரைக்கும் புன்மைப்…

நலமா

சேவியர் நலமா, எனும் விசாரிப்புகள் தொடரும். செவிப்பறைகள் பதில் வருமுன் பூட்டிக் கொள்ளும். உன்னைப் பார்த்ததில் மனசு மகிழ்கிறது எனும்போதும், கண்கள் தூக்கக் கலக்கத்தில் விழிக்கும். மிச்சமிருப்பதெல்லாம் சொற்களுக்கும் பற்களுக்குமான உறவு... இமைகள் கூட…

ஞானச்சுடரே! நீ எங்கு போயொளிந்தனையோ ?

வ.ந.கிாிதரன் - 'காங்ாீட் '! காங்ாீட் '! காங்ாீட் ' சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங் கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள். 'சீமெந்து ' சிாிக்கும் நடைபாதைகள். அஞ்சா நெஞ்சத் தூண்களின் அரவணைப்பில் மயங்கிக் கிடக்கும் இட வெளிகள்.…

இப்படியாய் கழியும் பொழுதுகள்

தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி நேருக்கு நேராய் நினைப் பார்க்க விழைகிறேன் பின் ஏனோ விழிகளைத் தழைக்கிறேன் உன்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறேன் ஆனால் இதழ் புதைத்து மெளனம் காக்கிறேன் வளைக்கரத்தை மெல்ல வருட நினைக்கிறேன்…

நகைச்சுவை

தோத்தப்பல் (TOTFL)

Test of Tamil as a Foreign Language ஜூ...ட் கேள்விகள் 1) குஜிலியோடு பண்ணும் விஷயம் எது ? அ) குஜல்ஸ் ஆ) கில்மா இ) கில்பன்ஸ் ஈ) கலீஜ் 2) ஜுஜூபி…