-நடராஜா முரளிதரன்-எழுந்து நடக்கும் என்னிருப்பைத் தக்க வைத்தது என் மொழி என்பாய் அந்த மொழியின் கழுத்தைத் திருகி மூச்சுக்குழல் வாய் இறங்கி அகத்தைப் புறத்தே உருக்கி வார்ப்பதற்காய் எழுதுவேன் ஒரு கவிதை தொன்மங்களின் சுகானுபவம்…
யூசுப் ராவுத்தர் ரஜித் மலையின் பங்கென்ன? மழையின் பங்கென்ன? அருவியில் காற்றின் பங்கென்ன? சிறகின் பங்கென்ன? பறவையில் வெள்ளையின் பங்கென்ன? மஞ்சளின் பங்கென்ன? முட்டையில் இடதின் பங்கென்ன? வலதின் பங்கென்ன? தராசில் மன்னனின் பங்கென்ன?…
செல்வராஜ் ஜெகதீசன் ரசிக்கத்தக்கதாகவே இருந்தது அது. தேர்ந்த புல்லாங்குழல் கலைஞன் ஒருவனின் அத்தனை குழைவுடன் ஒரு ராகமாய் இழுத்துப் பேசும் மகனின் குழலிசைப் பேச்சு சக பள்ளித் தோழன் ஒருவனும் சங்கீதமாய் பேசிக் கேட்க…
ஆறுமுகம் முருகேசன்.. மற்றவைகளிலடங்கும் போதையெனில், காகிதப்பூவையோ கழிவறையையோ அண்டியிருக்கலாம்.. வெங்காயக்காதல், கண்ணீரிடம்தான் மடலாடல், மீதிவரிகளுக்கு.. அவளிடம் விருப்பமேதும் அறிகுறியில்லாபட்சத்தில் முடித்து வைக்கிறேன் தோல்வியின் புள்ளியை.!
ப.திருநாவுக்கரசு வேண்டாத வெளிச்சத்தால் இருள் வேண்டுவேன்; வேண்டிய இருளுக்குள் ஒளிப் பொறி தேடும் கண்கள். நாடிய திசை சென்று நடுக்கம் எய்துவேன்; நாற்றிசையும் சென்றதையே கவிதையாக்குவேன். ஓடிமுடித்த நதிமணலில் ஓடியாடி அயரும்போது ஒட்டிவிட்ட சட்டை…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "எதிர்காலத்தை நோக்கி எண்ணற்ற மானிடர் இயற்கை அன்னை இதயத்தை வேண்டி வழிபாடு செய்து கொண்டிருக்கிறார். அவரது முகங்கள் காலை ஒளிச்சுடரில்…
நட்சத்திரவாசிஉனது கீழ் பாய்தலில் எனது மேனி நடுங்குகிறது கழன்று போகிறதென் அகம் விழும் ஒவ்வொரு சுவடும் மேதாவி நீயோ என கேலி செய்கிறது கண்மூடி நின்றிருக்கிறேன் இமைதொட்டு நாபி தொட்டு நெஞ்சை பிடித்திழுக்கும் ஒரு…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ உருகும் பனியாக இரு ++++++++++++++++++++++++ என் காதற் பித்தை ஏற்றுக் கொள் வாயா ? ஆமென்று சொல் !…
குமரி எஸ்.நீலகண்டன்.. சிறைக்கு வெளியே குற்றத்தின் நாற்றத்தால் சிறை மூக்கை பிடித்துக் கொண்டு உள்ளே கைதிகளைப் பார்த்து பெரு மூச்சு விடுகிறது. குற்றம் செய்த கரங்களானாலும் பற்றிக் கொள்ள உயர்ந்து உறுதியுடன் துணையாய் நிற்கும்…
கலாசுரன் * முகம் தெரியா இம்சைகளை மூழ்கடித்த வார்த்தைகளும் தற்பொழுது முக்காட்டுக்குள் மறைந்து கொள்கின்றன...... துயிலெழ்த் தூண்டுவது புனைவு எனினும் விழிக்க மறுக்கிறது இறையாண்மையின் கூரான கருக்குகள்.... அவை மென்மை கொணர்ந்த இளைப்பாறுதலின் தூக்கத்தைச்…