திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040520_Issue

அரசியலும் சமூகமும்

‘இண்டியாவின் ‘ இறக்குமதி பிரதமரின் திறமை

அரவிந்தன் நீலகண்டன் இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA) நவம்பர் 19 ஆம் தியதி 1985 இல் ராஜீவ் தலைமையிலான இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. அதற்கு மார்ச் 24 ஆம் தியதி 1987…

வாழ்க மதச்சார்பின்மை

அரவிந்தன் நீலகண்டன் பாஜகவின் இந்த படுதோல்விக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன ? பிரமோத் மகாஜன் 'தனக்கு தெரியவில்லை ' என்றார். தொடக்கத்தில் பாஜக வெற்றி சர்வ நிச்சயம் எனும் நிலையில் களம் இறங்கியது.…

தேர்தல்களும் முடிவுகளும் எண்ணங்களும்

சின்னக்கருப்பன் *** டாக்டர் மன்மோகன் சிங் (உண்மையிலேயே பல்கலைக்கழகத்தில் படித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை சமர்ப்பித்து மேலும் படிப்பறிந்தோர் அங்கீகரித்து கொடுத்த டாக்டர் பட்டம்) பிரதமராகிறார். வாழ்த்துக்கள். இதனை தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தால், காங்கிரஸ்…

பணம் – ஒரு பால பாடம்

இராம கி 'பணம் 'னா என்னாண்ணே ? ' 'என்ன கேள்வி இது இந்த நேரத்துலே ? எங்கே பாத்தாலும் இந்த வருசம் மழையே இல்லை, வெள்ளாமை சுத்தறவாப் போச்சுன்னு நான் உக்காந்திருக்கிற நேரத்துலே,…

ஈரோட்டுப் பாதை சரியா ? – 2

ப. ஜீவானந்தம் சுயமரியாதை இயக்கம்: பார்ப்பனரல்லாத சமூக சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்ற பேர் தாங்கிற்று. பார்ப்பனீயம் - வருணாஸ்ரம தர்மம், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவைகளையும் அவைகளுக்குக் காரணமான வேதசாத்திர புராணங்களையும், குறிப்பாக…

நைஜீரியா 1 : நைஜீரிய இனக்கலவரங்களில் முஸ்லீம்கள் மீது கிருஸ்துவர்கள் தாக்குதலைத் தொடர்ந்து யெல்வாவில் 50 கிருஸ்துவர்கள் கொலை

பெப்ரவரி 27, 2004 மத்திய நைஜீரியாவில் இனக்கலவரங்கள் காரணமாக சுமார் 50 பேர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றுதெரியவந்திருக்கிறது. பெரும்பான்மை கிரிஸ்துவ சமூகத்தினரை ஆயுதம் தாங்கிய முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்கி கொன்றார்கள் என்று யெல்வா போலீஸார் தெரிவித்தார்கள்.…

நைஜீரியா -2: கிரிஸ்துவ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம்கள்

மே 11, 2004 UN Integrated Regional Information Networks ஐக்கியநாடுகள் அமைப்பின் பிராந்திய செய்தித்தொடர்பு மே 11, 2004 Kano மே மாதம் 11ஆம் தேதி, ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கோபத்துடன் கானோ நகரத்தின்…

நைஜீரியா 3 : ஆப்ரிக்கா கிருஸ்துவர்-முஸ்லிம் கலவரம் : நைஜீரியா கானோ நகரத்தில் 500-600 கிரிஸ்தவர்கள் கொலை

நைஜீரியா நகரான கானோ நகரத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக முஸ்லீம்கள் நடத்திவரும் கலவரத்தில் 500 இலிருந்து 600 பெரும்பான்மை கிரிஸ்தவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கிரிஸ்துவ சமூகத் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். ரெவரண்ட் ஆண்ட்ரூ யுபா அவர்கள்…

நைஜீரியா 4:நைஜீரியாவின் வன்முறைக்குப் பின்னே மதமல்ல , பொருளாதாரம் – ஒரு ஆராய்ச்சி

டான் இஸாக்ஸ், பிபிஸி நைஜீரியா ஜனநாயகத்துக்குத் திரும்பிய வருடம் 1999. அதற்குப் பின்னர் சுமார் 10000 மக்கள் நாடெங்கும் இன - மதக் கலவரங்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் இந்தக் கலவரங்களின் எண்ணிக்கை சற்றே குறைய…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் — 6

பி.கே.சிவகுமார் காலச்சுவடில் ராஜ் கெளதமன் நேர்காணல்: காலச்சுவடு இதழுக்கு எழுத்தாளர் ராஜ் கெளதமன் அளித்த நேர்காணலை தமிழ்.சிபி.காம் இணையதளத்தில் வாசித்தேன். ராஜ் கெளதமனின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அவரை…

அறிவிப்புகள்

கடிதங்கள்- மே 20,2004

ஹுமாயுன் - பி.கே.சிவகுமார் -கோச்சா (எ) கோவிந்த் - ராஜேஷ் பி.எஸ் - மயிலாடுதுறை சிவா. இந்தியா ஒளிர்கின்றது மிக அருமையான முடிவு தமிழக மக்களிடமிருந்து கிடைத்திருக்கிறது. என்ன செய்தாலும் மக்கள் மறந்துவிட்டு தனக்கே…

தமிழ் இலக்கியக் கூட்டமும் புத்தகக் கண்காட்சியும்

முக்கிய விருந்தினர்: கலை இலக்கிய விமர்சகர், திரு. வெங்கட் சாமிநாதன் டொராண்டோ வாழும்தமிழ் ஆதரவில் தமிழில் இன்றைய இயல், இசை, நாடகஙக்ள் பற்றிய ஒரு கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. அது சமயம் தரமான தமிழ்ப் புத்தகங்கள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கீழ்படிதல் குறித்த ஒரு உளவியல் பரிசோதனை

அரவிந்தன் நீலகண்டன் நவம்பர் 20 1945, நியூரம்பர்க்கில் ஒரு விசாரணை ஆரம்பித்தது. 24 மனிதர்கள் மானுடத்திற்கு எதிராக அவர்கள் இழைத்த கொடுங்குற்றங்களுக்காக விசாரிக்கப்படலாயினர். ருடால்ப் ஹெஸ், வில்ஹெம் ஹோரிங் போன்ற நாசித்தலைவர்கள் அந்த 24…

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து

அரவிந்தன் நீலகண்டன் இப்பூமியில் காணப்படும் உயிரினங்களின் பன்மைச் செழிப்பு என்றென்றும் மானுட மனங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 'புல்லாகிப் பூடாய், புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி ' மனிதராயும் ஆகி நிற்கும் இவ்வுயிரினப்பன்மையின் செழிப்பினை…

அமெரிக்கக் கூட்டு மாநிலங்களின் விடுதலைப் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய சுதந்திரச் சிலை [American War of Independence Centennial S

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால் போற்றி நின்னைப் புதுநிலை எய்தினர்! கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும் நின் பேற்றினைப் பெறுவே மெனல் பேணினர்! தேவி! நின்…

இலக்கிய கட்டுரைகள்

சமீபத்தில் படித்தவை -3 : உமா மகேஸ்வரி , சுஜாதா, மனுஷ்ய புத்திரன் , யசுநாரி கவபத்தா, வெ சாமிநாதன் , நாஞ்சில் நாடன்

ஜெயமோகன் யாரும் யாருடனும் இல்லை [நாவல்] உமா மகேஸ்வரி தமிழினி வெளியீடு உமாமகேஸ்வரி கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் ஏற்கனவே கவனிக்கப்பட்டவர் .அவரது முதல் நாவல் இது. இந்நாவலின் முக்கியமான சிறப்பம்சம் இது பெண்களுக்கு மட்டுமே உரிய…

தண்ணீர் தேடும் தமிழகம்

என் எஸ் நடேசன் ' 'எத்தனை குழந்தைகள் ? ' ' ' 'மூத்தபெண்ணுக்கு பதினாறு. கேரளத்தில் ஒரு டாக்டர் வீட்டில் வேலை செய்யுது. இஇரண்டாவது வீட்டில் இருக்கிறது. இந்தா, இவன் மூன்றாவது பத்துவயது…

மூங்கில் இலைப் படகுகள்

பிரதாப ருத்ரன்,தருமபுரி. நோபல் பரிசு (1969) பெற்ற முதல் ஜப்பானிய எழுத்தாளரான யாசுனாரி கவாபட்டா-வின் தேர்ந்தெடுத்த கதைகளையும், நோபல் உரையையும் லதா ராமகிருஷ்ணன் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். லதா ராமகிருஷ்ணன் எற்கனவே கவாபட்டாவின் ‘தூங்கும்…

கதைகள்

கா ற் று த் த ட ம்

சைதன்யா ---- ஆனால் கடந்தவற்றை நினைத்துப் பார்ப்பது என்பது சோகங்களை அலையெனப் புரட்டுவதாகவே இருக்கிறது. அல்லது நினைவுகள் சோகத்தின் மீளாத் தாலாட்டில் அலைக்கழிக்கப் படுகின்றன. மெளனம் நீண்ட கடற்கரை வெளுபோல உலவக் கிடக்கிறது. சிறு…

மஸ்னவி கதை – 08-கீரை வியாபாரியும் கிளியும்

தமிழில் : நாகூர் ரூமி ==== இனிமை கொஞ்சப் பேசும் பச்சைக்கிளியொன்றை வளர்த்து வந்தான் ஒரு கீரை வியாபாரி. எஜமான் இல்லாத நேரத்தில் மேஜையில் அமர்ந்து அது கடையைக் கவனித்துக்கொள்ளும். கடைக்கு வருபவர்களிடம் கனிவாகப்…

பழையன கழிதலும் புதியன புகுதலும்

புதியமாதவி, மும்பை. 'ஏன்.. ஏன் டா இப்படி எல்லாத்தையும் எடுத்திட்டுப் போகவிட்டே ? ' 'போம்மா..இதெல்லாம் பார்த்தா என்னோட இமேஜ் என்ன வாகும் ? அவ்வளவுதான்.. கிரிஜாவோடா அப்பா இந்த மியுசியத்தை எல்லாம் பார்த்தா…

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-20

நாகரத்தினம் கிருஷ்ணா கண்டதனைக் கண்டு கலக்கம் தவிரெனவே விண்ட பெருமானையும்நான் மேவுவனோ பைங்கிளியே - தாயுமானவர் பெர்னார் குளோதனுக்கு ஒன்றுக்குப்பின்னொன்றாய் இந்திய தேசத்தில் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாய் இருந்தன. துபாஷ் பலராம்பிள்ளை கள்ளிப்…

உறவுக்காக ஏங்கும் இதயங்கள்….

தில்லைநாயகி திருநாவுக்கரசு. ஆழ்ந்து உறங்கிப் போயிருக்கும் சந்தியா தன் குழந்தைகளை ஒருகணம்; வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றாள். “என் குழந்தைகளை ஒரு மாதத்துக்கு பிரிந்து கொண்டு இருப்பதாஸ ? சுகந்தன் ஜெயந்தனை விட்டு…

பிறந்த மண்ணுக்கு – 3

அ முகம்மது இஸ்மாயில் 3. அப்படி இப்படின்னு ஒரு 20, 22 வருஷம் ஓடிப் போயிடுச்சு.. இந்த இடைப்பட்ட காலத்துல எவ்வளவோ நடந்து போச்சு.. ரவிக்குமாரின் திருமணம், தாமோதரணின் மரணம் இப்படி எவ்வளவோ நடந்து…

என் அண்ணனின் புகைப்படம்

அ.முத்துலிங்கம் அமைதியாக இருந்த எங்கள் கிராமத்தை கெடுக்கும் விதமாக ஒரு நாள் புகைப்படக்காரர் ஒருவர் அங்கே நுழைந்தார். எதோ தும்பு மிட்டாய் விற்க வந்தவரைப்போல சிறுவர்கள் அவரை சூழ்ந்துகொண்டார்கள். மூன்று கால்கள் வைத்த பெட்டியை…

கவிதைகள்

அன்புடன் இதயம் – 18. நாணமே நீயிடும் அரிதாரம்

புகாரி நீ வைகறைப் பனிவிழும் புல்மடியோ - மலை வாழையில் வெடித்தபொற் கனிநிலவோ - அந்தி வானத்துச் சந்தன ஒவியமோ - நதி கடலுக்குச் சூட்டிடும் நுரைச்சரமோ - முழு நிலவு உன் கூந்தலில்…

ஓவிய ரசனை

ஸ்ரீமங்கை ஓவியங்களை நான் ரசிப்பதில்லை, தனது ஓவியங்களை அழித்து, ஓவியத்திரையினைக் கிழித்துக்கொண்டிருந்த அந்த முதியவனைச் சந்தித்ததிலிருந்து. 'குருர ஓவியனே! நீ வரைந்த ஓவியங்கள் ரசிகர்களைப் பார்க்குமுன்னே, ஏன் இப்படி அழிக்கிறாய் ?. ' 'அனைத்த்தையும்…

தமிழவன் கவிதைகள்-ஆறு

தமிழவன் ஒரு ரோஜாத்தோட்டம். விழுகிறது, மஞ்சளளவு இளம்வெயில். பறக்கும் வண்ணத்துப் பூச்சியின் மெலிதான நிழல் பட்டு ஆடுகிறது புல்லின் பச்சைநிறம். ஆழத்திலிருந்து பீறிடுகிறது அழைப்பு. மெதுவாய் நடைபயில்கிறது அழுக்காடையுடன் நேற்று அமர்ந்து அழுத தீண்டத்தகாதவனின்…

ஊழ்வினை

வை.ஈ. மணி பழியொரு பக்கம் பாவமொரு பக்கமென பழமொழி கூறும் பொருளது பொய்யன்று தந்தைதாய் செய்தபழி சேய்தனைச் சாருமென்று சிந்தனையில் வேரூன்ற சான்றொன்று காண்போம் செல்வம் படைத்த செருக்கில் நாரணனும் கல்விக் கரசியின் கணவனும்…

ஆர்வம்

பவளமணி பிரகாசம் விட்டேன் பற்றை என்று ஏமாறாமல் கெட்டேன் இதனால் என்று குமுறாமல் கேட்டேன் முன்பே என்று ஒதுக்காமல் தட்டேன் இந்தக் கணத்து ஆர்வத்தை. ---- pavalamani_pragasam@yahoo.com

நீர் வளர்ப்பீர்

சாந்தி மனோகரன் வெட்டி வீழ்த்தப்பட்டு-மரங்கள் தரைமட்டம் ஆக்கப்படும்போது நீர்மட்டம் குறையத்தான் செய்கிறது-ஆம் வேர்க்காதலன் இல்லாத இடத்தில் நீர்க்காதலி வசிப்பதில்லை வேரிடம் வெற்றிடமாகையில் வேறிடம் பெயர்கிறாள்..காதலி காடு மரங்கள் தொலைத்திடும் நிலம் சுடுகாட்டில் கணவனை தொலைத்திடல்…

பிரிவினை

மாலதி ---- கோயில் விட்டுத் தள்ளிப் போகும் சாமிக்குக் கத்துங்கடல் ரொம்பத்தூரம். கூப்பிட்டுத் தாள் பணியும் ஆணவமறுத்த கடல் கூவியழும் கண்ணீர்க்கடல் முத்துமணி பவளம் போல் மூத்திரமும் பொங்கவிடும் மறைவிடமில்லாத கடல் சப்பரத்தில் அடங்கிய…

நட்பாகுமா ?

பனசை. நடராஜன் தேர் நேராய் செல்லாமல் திசை கொஞ்சம் மாறினால் தடைப் போட்டுத் திருப்பாமல் தடம் புரளச் செய்யவோ! நீர்மூடிய சேற்றினில் - நீ நீராட இறங்கையில் 'நில் ' என்று சொல்லாமல் நீந்தென்று…

வாழ்க்கை

சாந்தி மனோகரன் நடப்பதை நிறுத்திவிட்டு நின்று பார்த்தபோது பாதையின் முடிவில் நானிருந்தேன்.... நடந்து வந்த பாதையை திரும்பிபார்த்தால்..அதுவும் நான் கடந்து வந்த பின்னே உடைந்தோ இல்லை கரைந்தோ தொலைந்து போயிருந்தது... விளிம்பினிற்கு வந்துவிட்டோமோ எனவெண்ணி…

தனிமை

நாவாந்துறை டானியல்ஜீவா- தனித்து விடப்பட்ட தீவில் நான் ஒரு வசந்தத்தின் தேடலுக்காக.... உண்மையான உலகத்தைத்தேடி பொய்யான முகங்களிற்குள் புதைந்து போனேன். சொல்லிதயங்களெல்லாம் நல்லிதயங்களில்லாதல் நளிந்தும்.... மெலிந்தும் போனேன். விரக்தி என்னிடம் விடாப்பிடியாய்; என் கூடவா…

நகைச்சுவை

பட தலைப்புகள்

யாழினி அதிமுக - Home Alone கருணாநிதி - God Father சோனியா & co - Snow White and the Seven dwarfs பா.ஜ.க - The Big Sleep காங்கிரஸ்…

‘ஒரு பொன்விழா கொண்டாட்டம் ‘ தொடர்ச்சி

சித்ரா ரமேஷ் 1. கோட்டூர்புரம் கூவம் வழியாக அடையாறு வரை ஒருவர் நடந்து போனால் வாழ்க்கையின் பெரும் பகுதி மலேரியா காய்ச்சலில் கழிந்து விடும் என்ற பேருண்மை புலப்பட்டு விடும்.கண்ணும் செவியும் போதிய அளவிற்கு…