திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090604_Issue

அரசியலும் சமூகமும்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)

நேசகுமார். கடந்த திண்ணை இதழில், சமகாலத்தய இலக்கியவாதியும், இலக்கிய விமர்சகர் என்று இந்தியா முழுவதும் அறியப்படுபவருமான திரு.வெங்கட் சாமிநாதன் காபாவின் உள்ளே இருக்கும் கம்பத் தெய்வங்கள் பற்றி நான் குறிப்பிட்டுருப்பதை குறித்து எழுதியிருக்கிறார். அதைப்…

நினைவுகளின் தடத்தில் – (32)

வெங்கட் சாமிநாதன் இவையெல்லாம் பின்னர் நான் தெரிந்து கொண்டவை. படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு பிரசித்தமான இடங்களாகத் தெரிய வந்தவை, உடையாளூர் வாசிகளுக்குச் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்ளக் கூடியவை சில உண்டு. ஒன்று, ஒரு…

செத்தும் கிழித்த கமலா சுரையா

வஹ்ஹாபி'கமலாதாஸ்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகளும் 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாள மொழியில் சிறுகதைகளும் சுயசரிதமும் எழுதிய 75 வயதான கமலா சுரையா, கடந்த 31.06.2009 அதிகாலை 2 மணியளவில் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில்…

வாழ்க ஜனநாயகம் !

சு.செ.வே தேர்தல் முடிவுகள் வெளி வந்து விட்டன. முதல் நாள் பெய்த கோடை மழையை விட அற்புதமான, னால் வரவேற்கத்தக்க முடிவுகள். குடியரசு தலைவர் (அல்லது தலைவி) மிகவும் கவனத்துடன் மறுபடி படித்த இந்திய…

வார்த்தை ஜூன் 2009 இதழில்

பி.கே. சிவகுமார்குடிமக்கள் சொன்னபடி, குடிவாழ்வு மேன்மையுற - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் விஷக்கோப்பை - யுவன் சந்திரசேகர் அறிஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் 5ஆம்…

விளம்பர இடைவேளைகள்

எஸ். ஷங்கரநாராயணன் பத்தாண்டு கால அளவில் ஒரு சமுதாயத்தில் மதிப்பீடுகளும், போக்குகளும் மாறும் என்பது பொது கணிப்பு. அதைவிட வேகமாக மாற்றங்கள் உட்புகும் காலம் இது. இன்றைய சூழல் எப்படி இருக்கிறது? இது தகவல்…

அறிவிப்புகள்

கடிதம்

சி.சேகர்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, ஹெச்.ஜி.ரசூலின் சாதக் ஹசனின் கட்டுரை பல புதிய அனுபவங்களைக் கொண்டதாக இருந்தது. புதிய விவரங்களை வரலாற்று தகவலென்றாலும் மிகவும் அற்புதமான நடையில் இருந்தது. சுவர்க்கம் வம்சி படித்து முடித்த பல…

நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்

அறிவிப்புஅன்புடன் அழைக்கிறோம் நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம் (ஒரு புரிதலை நோக்கிய பயணம்) நாள் : 14 ஜூன் 2009, ஞாயிற்றுக்கிழமை நேரம் : 4.00PM ~ 6.30PM இடம்…

விரைவில் வெளிவரவிருக்கும் கூர் 2009

கூர் கலை, இலக்கிய வட்டம் கனடா தமிழ் கலை, இலக்கியத் தொகுப்புக்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. கவிதை, சிறுகதை, கட்டுரை எதுவாயினும் ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். தொடர்புகளுக்கு:…

நர்கிஸ் – மல்லாரி சிறுகதை/ கவிதை போட்டி

அறிவிப்புநர்கிஸ் - மல்லாரி இணைந்து நடத்தும் "முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு" சிறுகதை/ கவிதை போட்டி முதல் பரிசு: ரூபாய் 5000/- இரண்டாம் பரிசு: 3000/- மூன்றாம் பரிசு: 2000/ 10 ஆறுதல்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா ?(கட்டுரை: 59)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபூமியின் காந்த துருவங்கள் திசை மாறும் ! வட துருவம் மாறி தென் துருவ மாகும் ! பூமியின் சுழலோட்டம் நின்று எதிர்த் திசையில் ஓடும் !…

இலக்கிய கட்டுரைகள்

சங்கச் சுரங்கம் – 17: குருதிப் பூ

சு. பசுபதி, கனடா என் வீட்டுக்கு வந்து, சோபாவில் 'தொப்'பென்று சோர்வுடன் விழுந்த என் இளம் நண்பன் நம்பியை "எந்தக் கப்பல் கவிழ்ந்தது?" என்று பரிவுடன் விசாரித்தேன். அன்று காலை, தன் காதலி கோதையின்…

மெட்ரோ பட்டாம்பூச்சி கே ஆர் மணி கவிதைகள் – முன்னுரை

ஞானக்கூத்தன் திரு கே.ஆர்.மணியின் கவிதைத் தொகுப்பு 'மெட்ரோ பட்டாம்பூச்சி' என்ற பெயரைத் தாங்கி உள்ளது. பெயரே கவிதைகள் சுட்டிக்காட்டும் உலகின் தன்மையை உணர்த்துகிறது. அதிலும் 'மெட்ரோ' என்ற சொல். உலகில் இலக்கியம் உள்ள மொழிகள்…

விமர்சனக் கடிதம் – 2

வே.சபாநாயகம் அன்புள்ள பாரதிமணி அவர்களுக்கு, 'சிரிப்புத்தான் வருகுதையா' என்ற இரண்டாவது கட்டுரையில், தங்களது 50 ஆண்டு தில்லி வாசத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடனான உங்களது நட்பையும் அவர்கள் தொடர்பான பல ரசமான தகவல்களையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.அதோடு…

கதைகள்

சத்தமின்றிப் பூக்கும் பூ

ஒளியவன் - சிறுகதை இரக்கமற்ற இறந்த காலம் தகித்துக் கொண்டிருக்கும் எண்ணங்களைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு அவன் இரவில் தனிமையை விசும்பலாக்கிக் கொண்டிருந்தது, அதில் வழியும் கண்ணீரில் இரக்கமில்லாத ஒருத்தியின் இரும்புக் கரம் பற்றி…

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தெட்டு

இரா.முருகன் 5 அக்டோபர் 1900 - சார்வரி வருஷம் புரட்டாசி 20, வெள்ளிக்கிழமை எவண்டா அங்கே ஒண்ணுக்கடிக்கறது? ராஜா இரைந்து கொண்டிருந்தது எட்டூருக்குக் கேட்டிருக்கும். வருடம் முழுக்க அரண்மனைக் கதவை இழுத்துச் சார்த்தித்தான் வைத்திருக்கிற…

முட்டர்பாஸ் Mutterpass

பொ.கருணாகரமூர்த்தி Mutterpass [முட்டர்பாஸ் என்பது தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பகால கண்காணிப்பு மருத்துவரால் வழங்கப்படும் ஒரு ஆவணம். அதில் தாய், சேய்களின் ஆரோக்கியம், நீளம் நிறைமன்ன பௌதீக தகவல்களுடன் அவரின் ஒவ்வொரு பிரசவத்தின்போதும்…

அப்பா

அதிரை தங்க செல்வராஜன் "நான் செத்தாலும், என் முகத்திலே முழிக்காதே போ" எல்லா தர்க்கங்களின் முடிவிலும் அப்பாவின் பிரம்மாஸ்த்திரமிது. இந்த கோபம் 12 மணி நேரத்துக்கு மேல் நீடிக்காது. காலையில் சென்னையில் இறங்கியவுடன் முதலில்…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates & his Wife Xanthippe in The Market Place "ஞானம் நமக்கு உண்டாகிறது, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும்,…

தகவல்

தமிழ்மகன் வானத்தில் இருந்து தேவதூதன் யாரும் காட்சி தரவில்லை. வழக்கமான விடியல்தான். எப்போதும்போல ஐந்து நிமிட தாமதம் அதைச் சரிகட்ட ஓட்டம். ஓடும்போது டிபன் பாக்ஸ் திறந்து கொண்டு சாப்பாடு கூடையில் கொட்டிக் கொண்டது.…

மூன்றாவது நாற்காலியின் வெற்றிடம்

கே.பாலமுருகன் 1 வாங்கய்யா. . எப்ப வந்தீங்க? வீட்டுல எல்லாம் நல்லாருக்காங்களா? வீட்டுப் பக்கமே வரமாட்டுறீங்க? ஆமாம். . என்னைலாம் பாக்க வந்துட்டாலும் அன்னிக்கு மழையா பெய்து வெள்ளம் வந்து 10 பேரு செத்துப்…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஆறாவது அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன். சாப்பாடு என்றுமே அதேதான்.அந்த மாதத்தில் விளையும் காய்கறிதான் கிடைக்கும். போன வரும் முழுவதும் காரட் மட்டுமே கிடைத்தது. அதனால் கடந்த செப்டம்பரிலிருந்து இந்த ஜூன் மாதம் வரை காரட் மட்டுமே…

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -39 உன் விழிகள் என் கொடி உயர்த்தும்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னைத் தவிர மிகுதியாய் வேறு எவரும் விரும்பு வதில்லை உன் கண்ணிமைகள் தலையணை மீதிருந்து உலகை எனக்குத் தெரியாமல் மூடி இருப்பதை ! அங்கும் உனது இனிய…

பனித்துளி புகட்டிடும் பாடம்

சத்திதாசன் பச்சைப் பசேலெனும் பசும் புற்தரையினில் பொன்னொளி பூத்தது போலொரு பனித்துளி மின்னுது நுனியில் உள்ளத்தின் விசாலம் உருவத்தில் இல்லை உண்மை அதனை உணர்த்திடும் பனித்துளி சின்னஞ்சிறிய பனித்துளியினுள் அழகாய்த் தெரியுது ஆலமரத்தின் அழகிய…

ஆதமி

ஹெச்.ஜி.ரசூல் எப்போதும் மலையின் தனிமை நிழலை அணைத்துக் கொள்கிறது. பனிப் பொழிவுகளின் பெய்தலில் நிலவின் புன்னகையைச் சூடி இருளின் கண்சிமிட்டலைப் பொதிந்து நீண்ட இரவின் பொறியில் தன்னைத்தானே சுழன்றாடவிடுகிறது. நிழலுக்கும் இருளுக்கும் எங்கும் நிறைந்திருக்கும்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10 பாகம் -2

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran Paintings “Les Miserables” "எனது உயிர்வாழ்வு மலர்ச்சியில் காதல் முடிவு நிகழ் காலத்தை கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் இணைப்பாக்கி உள்ளது." கலில் கிப்ரான். காதலைப்…