திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100530_Issue

அரசியலும் சமூகமும்

இத்தனை வருடங்களும் – இப்படித்தான்

மஞ்சுளா நவநீதன்இந்த வாரம் இப்படி என்று தான் தலைப்பிடலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், நான் எழுதாமல் இருந்த இடைப்பட்ட வருடங்களில் எல்லா வாரங்களும் இப்படித்தான் என்பதாக ஒரு மாற்றமில்லாத அபத்த நாடகமாக உலக அரங்கிலும்,…

அங்காடி தெரு காட்டும் கண்ணாடி

சின்னக்கருப்பன்அங்காடி தெரு சமீபத்தில் நான் பார்த்த தமிழ் திரைப்படங்களிலேயே உண்மைக்கு அருகில் வந்த ஒரு படம். நிகழ்கால வாழ்வின் அபத்தங்கள், அனர்த்தங்கள், தாழ்வுகள், உயர்வுகள், கசப்பானவைகளிலிருந்து மீண்டு எழும், எழவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளான மனித…

எலி வீஸல் – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதான தூதுவர்

வெங்கட் சாமிநாதன் மனித சிந்தனையும் ஆளுமையும் புறச்சூழல்களினாலும், வாழ்க்கை அனுபவங்களாலும் உருவாவதாக நமக்குச் சொல்ல்பபட்டு வந்திருக்கிறது. பெருமாலும் இது உண்மையென்றே நம் அனுபவங்களிலிருந்தும் பார்த்து நாம் இச்சிந்தாந்தத்தை ஏற்று வந்திருக்கிறோம். ஆனால் மனித மனத்தின்…

அறிவிப்புகள்

அறிவியலும் தொழில்நுட்பமும்

புளுடோவைக் கடந்து கியூப்பர் வளையத்தை உளவப் போகும் புதுத் தொடுவான் விண்கப்பல் ! (கட்டுரை -1) (New Horizon Spacecraft)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா First Image New Horizon Spaceship near Jupiter புதுத் தொடுவான் விண்கப்பல் பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பாற்றலில் உந்திச் சென்று விரைவாய் உளவப்…

குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது

டாக்டர். B.செல்வராஜ் Ph.D. தட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சனை இல்லை. வாயும் தொண்டையும் நன்றாக இருக்கும் போதே பலருக்கு திக்குவாய் ஏற்பட்டிருக்கிறது. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சனையின்…

இலக்கிய கட்டுரைகள்

அற்புதமான ஒரு படைப்பாளி அமரர் அனுராதாரமணன்

குரு அரவிந்தன்அனுராதாரமணன் என்ற அற்புதமான படைப்பாளி எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை நினைக்கவே வேதனையாக இருக்கிறது. சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர், சென்ற ஞாயிற்றுக்கிழமை 16-05-2010, இருதய நோய் காரணமாக அடையார் மருத்துவமனையில் தனது 62வது…

ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – பிரபஞ்சன்

கே.பாலமுருகன் ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – மறுக்க முடியாத தமிழ்லக்கிய அடையாளம் பிரபஞ்சன் உயிர் எழுத்து மே மாத இதழில் பிரபஞனின் நேர்காணல் முக்கியத்துவப்படுத்தப்பட்டு சிறப்புப் பக்கங்களாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை…

சிஙக்ப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்

வெங்கட் சாமிநாதன்/ ஜெயந்தி சங்கரை எனக்கு கடந்த ஒரு சில வருடங்களாகத் தான் தெரியும். இது அவர் குற்றமில்லை. எனது தான். இரண்டு மூன்று வருடங்களாகவே அவர் புத்தகங்கள் சில என்னிடம் இருந்த போதிலும்,…

ஓசைகள் பலவிதம்

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail: Malar.sethu@gmail.com ஓசைகள் பலவிதம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக எழும். இடத்திற்கேற்ப ஓசைகள் தோன்றுகின்றன. அவற்றுள் காற்று, கடல், ஆறு, அருவி,…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -16

சீதாலட்சுமிநிலாரசிகனும் சஹாராத் தென்றலும் குழுமம் கொடுத்த செல்லப் பிள்ளைகள். இருவரும் கவிஞர்கள். எங்கு சென்றாலும் இக்கவிதைகளைப் பிடித்துக் கொண்டுதான் நடப்பேன். ஜெயகாந்தன் இல்லத்திற்கும் அப்படியே சென்றேன். ஏற்கனவே ஒரு முறை நிலாரசிகனை அங்கு அனுப்பியிருக்கின்றேன்.…

கதைகள்

முதல் சம்பளம்

எஸ் ஜெயலட்சுமிகாமாக்ஷியின் மனம் குமுறிக் கொண்டிருந்தது. தன் உணர்ச்சிகளை பஸ்ஸில் யாராவது பார்த்து விடுவார்களோ என்று தோன்றியது .கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். முகத்தைத் தான் துடைக்க முடிந்ததே தவிர மனத்தைத் துடைக்க முடியவில்லை.…

விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திமூன்று

இரா.முருகன் 1915 ஆகஸ்ட் 14 - ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை ஏண்டா பரதேசிங்களா என்ன ஊருடா இது? ராஜா சத்தமாகக் கேட்டார். இருமலில் பிசிறடிக்காமல், கபத்தை முழுங்கிக் கொண்டு கொழகொழவென்று எதிரொலிக்காமல்…

கட்டைக்குரல்

சூர்யா லட்சுமிநாராயணன்அவர் குரல் ஏன் கட்டையாகிப் போனது தெரியுமா? நாதிக்கமலத்திலிருந்து காற்றானது தொண்டைக்குழி வழியாக பயணம் செய்து, கன்னம் இரண்டும் வீங்க உதடுகளை குவித்து குறும்புயல் போல காற்றை வெளிப்படுத்திய போது அவர் விசில்…

சொல்லப்படாதவைகள்

உஷாதீபன் இன்று காலையிலிருந்தே மனது சரியில்லை. போட்டுக் குடைந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. மறப்போம் என்று எவ்வளவு முயன்றாலும் முடியவில்லை.அப்படி நினைக்க நினைக்கத்தான் அளவுக்கதிகமாக அது நின¨வுக்கு வருகிறது. சாதாரண விஷயம். பைசாப் பெறாது. இதுக்கெல்லாமா…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -19

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "ரஷ்யரையும், ஆங்கிலேயரையும் அவமதிக்கும் எந்த ஓர் வாய்ப்பையும் ஒருவர் விட்டுவிடக் கூடாது." "புதுப்புது வெற்றிச் சின்னங்கள் எழுப்ப…

ஒரு விபத்து; சில நிகழ்வுகள்

சோ.சுப்புராஜ் மறக்கவே முடியாதபடி மனதில் ஆழப் பதிந்து போனது இந்த வருஷ ‘ஹோலிப் பண்டிகை’. ஹோலி; ஹோலி என்று ஜாலியாய்க் கூவியபடி ஆண்களும் பெண்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை வாரி இறைத்தும்,…

அறிவியல் புனைகதை:- நீர் மேல் எழுத்து

ரெ.கார்த்திகேசு கார்த்தியாயினி தனது சுகமான இருக்கை/படுக்கையில் கொஞ்சம் புரண்டபோது ‘நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்’ என்ற கருத்து அவர் பிரக்ஞையுள் குதித்தது. அதோடு தூக்கமும் கலைந்தது. என்ன இது? சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ‘நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்?’ இப்படித்…

களம் ஒன்று கதை பத்து – 2 -பாருக்குள்ளே நாலுபேர்

ம.காமுத்துரை “எனக்கெல்லா இருவத்தஞ்சு முடிஞ்சிர்ச்சு, இருவத்தாறுலதே கல்யாணம். எந்தம்பிக்கு முப்பது...” மனோகரன் ரெண்டாவது பாட்டிலின் மூடியைத் திருகியபடி சொன்னான். டேபிளில் மாங்கா ஊறுகாய், மிளகாய் பொடி தடவலில் ரத்தத்தில் முக்கி எடுத்தது போல இருந்தது.…

முள்பாதை 31

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com கிளப்பின் ஆண்டுவிழா அன்று மாலையில்தான் நடக்கப் போகிறது. முதல்நாள் இரவு அம்மா வீட்டுக்கு வரும்போதே இரவு ஒரு மணி ஆகிவிட்டது. காலையில் எப்போ…

கவிதைகள்

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா-- எரிந்தழியும் மெழுகுவர்த்தி -- எரிந்த ழியவே உருவாக்கப் பட்டிருப்பது ஒரு மெழுகு வர்த்தி ! அந்த அழிவுக் கோலச் சந்தர்ப்…

தெரிக்கும் உவமைகள்…

ராம்ப்ரசாத் அடைமழைக்குப் பிறகு தேங்கி நிற்கும் மழை நீரில் தலை நனைக்கும் சிட்டுக்குருவிகளின் தலையுதறலில் தெரிக்கிறது ஒரு கவிதைக்கான‌ உவமை... உன் குளியல்களில் நனைந்து தோட்டத்து கொடிகளில் காயும் துணிகளை நீ உதறுகையில் அவ்வுவமைகள்…

ஒரு மனமுடைதலின் தாக்கத்திலிருந்து

கலாசுரன்....ஒரு மனமுடைதலின் தாக்கத்திலிருந்து சொல்லத் தொடங்குகிறான் தொடத் தகாத நிழல்களோடும் இனம் புரியாத கவலைகளோடும் உள்புகும் ஒவ்வொரு வார்த்தைகளும் உருமாற்றங்கள் விரும்பாது அடிமனதில் நெளிகின்றன தோல்விகளுக்காக அல்ல விற்றிகளின் சோகங்களை சந்தித்தமைக்காக ... பலதரப்பு…

நிராகரிப்பு

ஸ் ரீபன் காய்ந்துபோன ஒரு குவளைக்குள் விழும் ஒரு புதிய கண்ணீர்த்துளியின் சத்தமும் இலைகள் தேடி அலுத்துப்போன ஒரு ஆட்டுக்குட்டியின் விலகலும் ஒரு புதிய சோகத்தின் வரவை பறைசாற்ற போதுமானதாக இருக்கலாம் மரங்கள் பிடித்துக்கொண்ட…

அஜ்னபி கவிதைகள்

அஜ்னபிe=mc2 சமவெளிகள் தாண்டிய மலைச்சரிவு நோக்கிப் புறப்பட்ட வைக்கோல் நிறத்து வண்ணத்துப்பூச்சியின் அலை கோட்டுப் பயணத்தில் சகநிகழ்வாய்க் குறுக்கிட்ட ஓடும் கடுகதி ரயிலின் திறந்த ஜன்னல் வழி நுழைந்து மறுபுறத்து ஜன்னல் வழி வெளியேறியதான…

நள்ளிரவின் பாடல்

எம்.ரிஷான் ஷெரீப் நடுத்தெருவில் விளையாடும் பூனைக்குட்டிகளைப் பார்த்திருக்கும் இரவொன்றின் பாடலை நான் கேட்டேன் மோதிச் செல்லக் கூடிய நகர்வன பற்றிய எந்தப் பதற்றமுமின்றி துள்ளுமவற்றைத் தாங்கிக் கூட விளையாடுகிறது சலனமற்ற தெரு யாருமற்ற வீட்டின்…

மழைகள்

சேரல்வெளியில் நனையும் மழை ------------------- மழை வந்துவிட்டது போலிருக்கும் பொழுதின் முந்தைய கணங்களில் வீடு சேரும் முனைப்பிலிருக்கிறேன் மழை, மழை கோட், ரோஜா வர்ணக்குடை, மழைக்கதை பேசும் தோழி, எப்போதோ மறந்துவிட்டு நனைந்துபோன கொடியுலர்த்திய…

ரிஷியின் கவிதைகள்:

ரிஷி விசாரணைகள் 1 அப்படியொரு மூர்க்கத்தோடு என்னைத் தாக்குகிறாய். அது காலத்தின் கட்டாயம் என்று தத்துவமாக்குகிறாய். நீக்குப்போக்குத் தெரிந்து நடந்துகொள்வதெனில் நான் என்னை ஒரு கொலைகாரியாகப் புரிந்துகொண்டு நீ மூட்டும் தீக்கிரையாக்கிக்கொள்ள வேண்டும் இன்றைய…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "பைத்தியம் என்று சொல்லும் அளவுக்கு மீறி வெறி கொண்டவர் அவர். அவர் ஒரு பூரணவாதி (Idealist) ஆன போதிலும் அவரது…

வேத வனம் விருட்சம்- 87

எஸ்ஸார்சி மலை தோன்றும் குட்டச்செடியே வா சுரம் போக்கும் மூலிகை நீ செவியுற்றவர்கள் நின்னிடம் விரைகிறார்கள் மூன்றாவது விண்ணகத்தில்தான் அரச மரம் இருக்கிறது தேவர்கள் அங்கே குட்டமூலிகை பெற்றார்கள் விண்ணிலே தங்கக்கப்பலில் அமுத மலர்தரு…