திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20041028_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் அக்டோபர் 28,2004 –

மத்தளராயன் வெங்கட்நாராயணா தெருவுக்குச் சில விசேஷங்கள் உண்டு. விடிகாலையில் வீட்டு பால்கனியில் கையில் காப்பி கோப்பையோடு நின்று எட்டிப் பார்த்தால், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு லால்குடி ஜெயராமனும் எதிர்த்திசையில், சிவப்பு நிற டிராக் சூட்…

திசை மாறும் திருமாவளவன்

ஜெ. ரஜினி ராம்கி அம்பேத்காருக்கு பின்னர் அனைத்து தலித் மக்களின் நம்பிக்கையையும் பெற்ற தலைவர்கள் இன்று வரை உருவாகாத சூழலில் நாடெங்கும் பிரிந்து கிடக்கும் தலித் அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தால்…

புலம்பல் – பக்கம்:1 வெள்ளியும் மழையும் இன்ன பிற புலம்பல்களும்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் காலக் கணக்குகளை அளந்தறியும் பொய்யா மாக்கள் குறித்து முல்லைப்பாட்டு கூறுகிறது.(பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் -முல்லை.55) புறநானூறு இயற்கையை அளவிடல் குறித்து பின்வருமாறு கூறுகிறது: இரு முந்நீர்க்குட்டமும், வியல்…

சீனி பூசிய தாலிபானிசம் – ரூமியின் ‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘

சூரியா நேசக்குமாரின் கட்டுரையைப் படித்தேன். ரூமியின் இந்தப் புத்தகத்தைப்பற்றிய இந்த மனஓட்டத்தை என்னிடம் வெளிப்படுத்தியவர்கள் இதற்குமுன்னால் மூவர். மூவருமே எலக்டிரிக் ரயிலில் புத்தகம் படிப்பவர்கள் ஒருவருக்கொருவர் புத்தகம் கொடுப்பார்கள். ஒரே புத்தகம்தான் என்று நினைக்கிறேன்.…

சொற்களின் சீனப்பெருஞ்சுவர்

நாகூர் ரூமி இப்படித் தொடங்கினால் எப்படி ? ஆவதும் சொல்லாலே, அழிவதும் சொல்லாலே. ஆம். உண்மைதான். சாதாரண உண்மையல்ல இது. இது சத்தியம் என்று உங்கள் தலையில் அடித்துச் சத்தியம் செய்வேன். ஆவதும் பெண்ணாலே,…

தனியார் ஊடகங்களுக்குத் தேவை – தணிக்கை!

தஞ்சாவூரான் ==== ஒரு சிறுவனும், 'முள்ளம்பன்றித்தலை ' சிறுமியும் lift-ல் நுழைகிறார்கள். ஒரு வகை இனிப்புக்கட்டியை சாப்பிட்டவுடன், அவர்களுக்கு மற்றவர்கள் என்ன மனதில் நினைக்கிறார்கள் என்பது தெரிந்துவிடுகிறது. சிறுவன் lift-ஐ விட்டு வெளியில் வருகிறான்.…

அறிவிப்புகள்

கடிதம் அக்டோபர் 28,2004

K.ரவி ஸ்ரீநிவாஸ் தின்ணை ஆசிரியர் குழுவினருக்கு, திண்ணையில் நான் அண்மையில் காலமான கிஷன் பட்நாயக் குறித்து எழுதியிருந்தேன். அவரைப் பற்றிய ஒரு கட்டுரை, பேராசிரியர் மனோரஞ்சன் மொகந்தி எழுதியது இந்த வார எக்னாமிக் அண்ட்…

கடிதம் அக்டோபர் 28,2004

அ. முஹம்மது இஸ்மாயில் அனைவருக்கும் என் ஸலாம்.. காமாலை கன்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அதை போல இங்கே ஒருவரது பார்வை மஞ்சளாக மங்கலாக தெரிந்திருப்பது அவரின் பார்வையை படித்தால் தெரியும்.. திருக்குரான் வசனம்…

கடிதம் அக்டோபர் 28,2004 – பெயர் சூட்டும் பெருந்தகையோரே!

இப்னு பஷீர் கிணற்றுத்தவளைகள் லோகஸ்ட் பூச்சிகள் மெமிட்டிக்( ?) க்ளோன்கள் வகாபிய க்ளவுன்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் இவையெல்லாம் சமீப காலத்தில் சில அறிவார்ந்த பெருமக்களால் ‘திண்ணை’யில் வைத்து சூட்டப்பட்ட பெயர்கள். ஒரு குட்டிக்கதை நினைவுக்கு…

கடிதம் அக்டோபர் 28,2004 – விடுதலை க. இராசேந்திரன் எழுதிய வீர( ?) சாவர்க்கர்: புதைக்கப் பட்ட உண்மைகள் ‘

அருளடியான் -நூல் அறிமுகம்- சாவர்க்கரைப் பற்றி திண்ணையில் தொடர்ந்து எழும் விவாதத்தை நாம் படித்து வருகிறோம். ஆங்கிலத்திலும், தமிழிலும் சாவர்க்கரை ஆதரித்தும், எதிர்த்தும் வந்துள்ள அனைத்து கருத்துகளின் சாரமும் திண்ணையில் மறுபதிப்பு செய்யப் பட்டு…

கடிதம் அக்டோபர் 28,2004 – தமிழில் குர்ஆன்

அருளடியான் அன்புள்ள ஆசிரியருக்கு, நான் முஸ்லிமாக இருந்தும் குர்ஆனுடன், பைபிள், கீதை ஆகிய நூல்களையும் படித்துள்ளேன். ஆனால், திண்ணையில் குர் ஆனை விமர்சிக்கும் எத்தனை பேர் குர்ஆனைப் படித்துள்ளார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஐசாக் அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் சமயம்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் “There is no Master but the Master and QT-1 is his prophet” [ஐசாக் அஸிமாவ்வின் 'Reason ' எனும் சிறுகதையிலிருந்து] 'அஸிமாவ்வின் எழுத்துக்களில் சமயம் '…

டிராக்கின் மின்னணுக்குழிக் கோட்பாடு.(Dirac ‘s hole theory)

இ.பரமசிவன் சார்பியலற்ற (non-relativistic) 'அளவியல் ' கோட்பாட்டில் தன்னாற்றல் (self energy) இல்லாத 'புள்ளி அழுத்தம் ' (Point-charge) மட்டுமே உடைய ஒரு 'ஒற்றை மின்னணு ' வாக (single-electron) வைத்து மின்னணு நகர்ச்சி…

DRDO வெள்ளை யானையா ?

வந்தியத்தேவன் DRDO 'ல் அரசு செய்யும் முதலீட்டிற்கு தக்க பலன்கள் கிட்டவில்லை என்று அவுட்லுக்கில் 18 அக்டோபர் 04 'ல் எழுதியிருக்கின்றார்கள். கட்டுரையை இணையத்திலும் படிக்கலாம் . (http://www.outlookindia.com/full.asp ?fodname=20041018&fname=Cover+Story+%28F%29&sid=1). இந்திய விமானப்படையின் விங்…

இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (6)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா வானகம் முட்டும் இமயமால் வரையும், ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும், காத்திடும் நாடு! கங்கையும், சிந்துவும் தூத்திரை யமுனையும், சுனைகளும், புனல்களும் இன்னரும் பொழில்களும், இணையிலா…

இலக்கிய கட்டுரைகள்

நேசகுமார்களுக்கு நேசமுடன்

நாகூர் ரூமி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதித் தூதர் என்பது முஸ்லிம்கள் அடிப்படையான நம்பிக்கை. அப்படி ஒரு விஷயமே திருக்குர்ஆனில் இல்லை என்றும், 'இந்த வாசகம் திருக்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் இடம் பெறவில்லை…

தஞ்சைப் பெரியகோவிலின் புத்தர் சிற்பங்களும், திபெத்திய புத்த சித்தர்களும்

நேச குமார் சமீபத்தில் ஹிந்து நாளிதழில் [அக்டோபர் 10, 2004], தியோடர் பாஸ்கரன், தஞ்சைப் பெரிய கோவில் பிரகாரங்களில் புத்தர் வாழ்வைச் சிந்தரிக்கும் சிற்பங்கள் இருப்பது குறித்து விரிவாக அலசியிருந்தார். அவரது நன்பர் டாக்டர்…

உரத்த சிந்தனைகள்- 5 – தொடரும் அவலங்கள்

ராமச்சந்திரன் உஷா சில வாரங்களுக்கு முன்பு டைரக்டர் பாலுமகேந்திராவின் பேட்டி ஆனந்தவிகடனில் வந்திருந்தது. அதைப் படித்த சில நண்பர்கள் எப்பேர்பட்ட இயக்குனர் கதி இப்படி ஆகிவிட்டதே என்று வேதனைப்பட்டனர். சிலரோ மெளனிக்கா, ஷோபா, அர்ச்சனா…

அ.முத்துலிங்கம் பரம்பரை -6

சிவஸ்ரீ வந்திருந்த மின்மடல்களில் இருந்த யூகங்களை வைத்தே அனுப்பியவர்கள் எல்லாரும் ஆண்கள் என்பதையும் 'மகளிர் மட்டும் ' பேருந்தில் பயணம் செய்த அனுபவமே இல்லாதவர்கள் என்பதையும் கண்டுபிடித்து விட்டேன். பெண்களுக்குப் இப்பவெல்லாம் பதில் சொல்வது…

மக்கள்தெய்வங்களின் கதைகள் 7

அ. கா. பெருமாள் வெங்கலராசன் கதை [இக்கதை நாடார்குலத்தைப்பற்றிய முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது] சோழநாடு சோறு நிறைந்த நாடு . காவிரி ஓடுவதனால் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த செழிப்பான நாடு. அங்கு புட்டாபுரம் என்ற…

மெய்மையின் மயக்கம்-23

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) ஒரு சில கதைகள் எவ் வளவோ அருமையாகத் தமிழில் எத்தனையோ கதைகள் எழுதப் பட்டு வந்து இருக்கலாம்; சிறந்த கதைஞர்களாக எத்தனையோ…

கதைகள்

யாதனின் யாதனின்….

பத்ரிநாத் அவள் மாநிறத்தவளானாலும், அவள் முகத்தின் தேஜஸ் மனதை அட்டை போல் கவ்வியது.. கன்னக் கதுப்புகளில் தெரியும் செழுமை.. செதுக்கப்பட்டதைப் போல இருக்கும் உதடுகள்.. அதிலும் அதிகமானச் சதைப் பற்றுள்ள கீழுதடு.. ஓவியம் போல…

வடிகால்

க்ருஷாங்கினி நேற்று திடாரென்று நீ கொதித்ததால் என் மனம் கடினமாகிவிட்டது. ஏமாற்றம்! ஏமாந்துவிட்டேனோ என்று முதல் முறையான தயக்கம். எதிர் பார்த்திருந்தால் அவை எதிர்பார்ப்புக்கள். ஆனால் எதிர்பாராததால் இது ஏமாற்றம். நீ கேட்டாயே, உன்னை…

விருந்தாளிகள் புலம்(பல்)

சந்திரவதனா தொலைபேசி கிணுகிணுக்கிறது. ஒஆரது இந்த நேரம் ? ஞாயிறும் அதுவுமா ? நல்ல வெயில் எறிக்குது. உடுப்புகளை விரிச்சு முடிச்சுப் போடுவம் எண்டு பார்த்தன்.ஒ முணுமுணுத்தபடி தயங்கிய மனதுடன்தான் பல்கணியிலிருந்து ஓடி வந்து…

தேவதரிசனம்! (அறிவியற் கதை!)

வ.ந.கிரிதரன் கண்ணுக்கெட்டியதூரம் வரையில் விரிந்து பரந்திருந்தது இரவு வான். அந்த இரவின் கருமையினைக் கிழித்துக் கொண்டு முழுநிலா. அடிவானில் தெரிந்த வட்டநிலா உண்மையில் நகரின் இன்னுமொரு தெருவிளக்காகத் தொலைவில் தெரிந்தது. அருகில் கட்டிலில் குழந்தையை…

கவிதைகள்

கீதாஞ்சலி (2) (வழிப்போக்கன்) (மூலம் கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா. அத்தமன மாகி இன்றைய பொழுது சாய்ந்து விட்டால், கானம் பாடாது நிரந்தரமாய், பறவையினம் மெளன மாகி விட்டால், கால்கள் ஓய்வாகி காற்று களைத்துக் கொடி காட்டி விட்டால், காரிருள்…

பேதமை

பவளமணி பிரகாசம் வெள்ளிப் படகிலேறி கருங்கடலில் வலை வீசினேன் துள்ளின வைர மீன்கள் மணக்க மணக்க குழம்பு வைத்து ருசிக்க ருசிக்க உண்டிட ஏனோ மனம் வரவில்லை மடியில் வைத்து ரசித்தேன் துடித்து முடிந்தது…

களை பல….

நெப்போலியன் விளையும் பயிர் களையிலேயே தெரியும்... குட்டிச்சாமி ! அகத்தின் களை முகத்திலா தெரியும் ? அரசியல்வாதி. ஐந்தின் களை ஐம்பதிலும் களையாது... சினிமா நட்சத்திரம் ! கற்பனையில் களைத்து நிஜத்தின் வியர்வை சொல்வான்...…

நீயா அவள்

பாஷா சீண்டலாய் நான் தீண்டியபோது தாங்காமல் தலைகவிழ்ந்து கேவினாயே நீயா அவள் ? நீயென்னை பார்ப்பதை நான் பார்த்துவிட்டால் வான் பார்ப்பாயே நீயா அவள் ? உன் கண்களின் ஊடுருவலில் நான் நிலைதடுமாறி வார்த்தைகளை…

பெரியபுராணம் – 15 ( இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )

பா சத்தியமோகன் 261. தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருப்புகூர் தலம் அமர்ந்த இறைவரிடம் உண்டான பேரன்பு மிக உணர்ந்து அடிபணிந்தார் தமிழ் பாடினார் மானைக் கையில் கொண்ட சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கஞ்சானூர் திருவாரூர்…

எங்கெங்கும்

நாகூர் ரூமி மலைமுகட்டிலிருந்து கீழிறங்குகிறது ஒளி ஆரஞ்சு -- முக்காடிட்ட உன் முகம். சிமிட்டிக்கொண்டே இருக்கின்றன நட்சத்திரங்கள் -- உன் கண்கள். நூல் நூலாக இறங்குகிறது மழை -- உன் பார்வை. வைட்டமின் 'டி…

வெறுமை

ஈழநாதன் எதையும் கொள்ளக் கூடியது வெறுமையென்றறியா ஒருவன், எதுவுமே இல்லாதது வெறுமையென்று சொல்லிப் போனான். அவசர அவசரமாக எதையாவது கொண்டு நிரப்பிவிடப்பட்ட மண்டையோடுகளுக்கு புரிவதேயில்லை. வெறுமையின் அருமை; எதையாவது கொண்டு நிரப்பி விடப்பட்ட பாத்திரத்தை…

களை பல….

நெப்போலியன் விளையும் பயிர் களையிலேயே தெரியும்... குட்டிச்சாமி ! அகத்தின் களை முகத்திலா தெரியும் ? அரசியல்வாதி. ஐந்தின் களை ஐம்பதிலும் களையாது... சினிமா நட்சத்திரம் ! கற்பனையில் களைத்து நிஜத்தின் வியர்வை சொல்வான்...…

கருப்புக் குதிரை கூட்டுரோட்டில் காலைச் சாப்பாட்டு நேரம்

அருண் கொலட்கர் (தமிழில் : இரா முருகன்) இப்போ டோக்கியோவிலே ராத்திரியாக இருக்கும். தெரு எதிர்வரிசையிலே வெள்ளைக்காரன் பெயர் வச்ச கடியாரக் கடையில் பார்வையா மாட்டியிருக்குதே பாட்டனுக்குப் பூட்டன் கடியாரம், அதுக்குத் தெரியும் நான்…

தனியாய் ஓர் ரயில் பயணம்

ஜெயந்தி நினைவுகளை கிளறிவிடும் நிலாக்களமிது நிற்காத ரயில் ஒரு நினைவுக்கூடம் செப்பு வைத்து விளையாடிய சிரிப்புகளும் சைக்கிள் ஓட்டிய இரட்டைஜடை நினைவுகளுமாய் சந்தோஷங்கள் சிறைப்படும் உதட்டுப் புன்னகையில்.. நேரம் செல்ல செல்ல நெருஞ்சிகளும் தலைதூக்கும்…