திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040318_Issue

அரசியலும் சமூகமும்

தமிழினக் காவலர் பில் கேட்ஸ்

ஆசாரகீனன் தமிழில் கலைச் சொல் திட்டம் பற்றி மைக்ரோசாப்டின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பைக் கண்டேன். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்காக அந் நிறுவனத்தால் நடத்தப்படும் இணைய தளத்தில் (http://www.bhashaindia.com/CGW/TA/Tamil.aspx) சொல்லப்பட்டிருக்கும் தகவல்களோ அதிர்ச்சி தருகின்றன.…

இந்தியா இருமுகிறது!

நாக.இளங்கோவன் இந்தியா ஒளிர்கிறது என்று ஒரே இரைச்சல்!; ஒளி எப்படி இரைச்சலாகும் என்பதற்கு அண்மைக்காலத்தில் பா.ச.க அரசு பரிசோதனை செய்து காண்பித்தது. மக்கள் வரிப்பணத்தில் 'உங்க நாடு ஒளிர்கிறது, உங்க வீடு ஒளிர்கிறது '…

வாரபலன் – மார்ச் 18- எழுத்தாணி தொழில், வழக்கு, பெக்கம், சமணச்சிலை, கோடாலித்தைலம்

மத்தளராயன் இங்கிலாந்தில் டபிள்யூ எச் ஸ்மித் போன்ற பெரிய புத்தகக் கடைகள் நகரம் தோறும் புத்தக விற்பனையில் மும்முரமாக இருந்தாலும் டிஸ்கோ, செயின்ஸ்பெறி போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கொலுப்படி வைத்து சாஸ்திரத்துக்கு நாலு புத்தகம்…

தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1

நா. மம்மது பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன் [இப்பேட்டி சொல் புதிது 9 வது இதழில் வெளியானது . இப்பேட்டியை விரிவாக புரிந்துகொள்ள உதவக்கூடிய இரு கட்டுரைகள்…

மதச்சார்பின்மையும், அரசியல் கட்சிகளும்

ஆர் ரமேஷ் தேர்தல் வந்து விட்டது. அரசியல் கட்சிகளினால், நாடு முழுவதும் மதச்சார்பின்மை படாத படுகிறது. பா.ஜ.க. மதவாதக்கட்சி என்று வசைமாரி பொழியப்படுகிறது. பா.ஜ.க. ஒரு மதச்சார்புள்ள கட்சிதான் என்பதில் யாருக்கும் எள்ளளவு ஐயமும்…

ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது

தந்தை பெரியார் பெரிய பணக்கார வீடுகளில் நடக்கும் திருமணங்களைப் பார்த்துவிட்டு எல்லோரும் அது மாதிரி செய்ய ஆசைப்படுகிறார்கள். சொத்துரிமை இல்லையென்றால் யார் கவலைப்படுகிறார்கள் ? இரஷ்யா போன்ற நாடுகளில் திருமணம் செய்து கொண்டால் சந்தோஷப்படுவதுதான்…

தமிழ் எழுத்தாளன் : ஓர் அவல வரலாறு

கோ ராஜாராம் தொண்ணூறுகளின் முதல் பகுதியில் நடந்தது இது. இந்தியா டுடேவிற்கு சிறுகதை எழுதி அனுப்பிய நண்பர் ஒருவர், இந்தியா டுடேயிலிருந்து வந்த காசோலையை அலட்சியமாய்த் தூக்கிப் போட்டவர் - என்ன பிசாத்து நூறு…

முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 1

மைக்கேல் ஸ்காட் டொரான் (தமிழில்: ஆசாரகீனன்) இரட்டை மன்னராட்சி ரியாத் நகரில், 2003ம் வருடம் நவம்பர் மாத ஆரம்பத்தில் ஒரு குடியிருப்பு வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். 122 பேர்…

அறிவிப்புகள்

கடிதங்கள் மார்ச் 18 2004

நரேந்திரன், மதூ, நாக. இளங்கோவன். ஜெயமோகன், பொறையாறு நந்தன் நண்பர் பாலாஜி அவர்களுக்கு, திண்ணையில் உங்கள் எதிர்வினை கண்டேன். நெற்றிக் கண் திறந்திருக்கிறீர்கள். குற்றம், குற்றமே என ஆமோதிக்கிறேன். மாலிபூவும் கலிஃபோர்னியாவில்தானே இருக்கிறது ?…

கடிதம் – அரவிந்தன் நீலகண்டன், தலிபன் , ஜெயமோகன் ஸ்ரீதரன் பற்றி

பித்தன் திரு.அரவிந்தன் நீலகண்டனின் கடிதம் கண்டேன். புதிதாக ஒன்றும் இல்லை. இதுவரை அவர் எழுதிய எதிர் வினைகளையே சுருக்கியிருக்கிறார். குறிப்பாக 2 கருத்துக்களையே வைத்துக்கொண்டிருக்கிறார். ஒன்று, சமஸ்கிருதம் தேவையான மொழி என்று யாரோ எப்போதோ…

சாதிப்பிரச்சனையின் ஆழங்கள் (1)

பித்தன் திரு. விஸ்வாமித்ராவுக்கு, தங்கள் கடிதம் கண்டேன். 'சென்ற இதழில் திரு.பித்தன் ஜெயமோகனுக்கு எழுப்பியுள்ள ஒரு வினாவில் ஜெயமோகனுக்கு ஈவேராவைப் பிடிக்காதக் காரணம் என்ன என வினவுகிறார். ' என்று நீங்கள் ஆரம்பிக்கும் போதே…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நூல் அறிமுகம்: புற்றுநோயை வெல்லுங்கள். ஆசிரியர்: மா.செ.மதிவாணன்

புதியமாதவி, மும்பை. மருத்துவ விழிப்புணர்ச்சி நூலை மருத்துவத்துறையைச் சாராத ஒருவர் எழுதியிருப்பதே இந்நூலின் மிகப்பெரிய சிறப்பு. புற்றுநோயைப் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒரு மருத்துவர் பார்வையில் வைக்கப்பட்டிருந்தால் அந்நூல் இந்தளவுக்கு எளிமையாக, எழுதப் படிக்கத்…

பிரபஞ்சத்தில் பால்மய வீதி கோடான கோடிப் பரிதிகள் கொண்ட ஒரு விண்வெளித் தீவு (Our Milky Way Galaxy)

சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: சென்ற வாரத் திண்ணை [மார்ச் 11, 2004] அரசியல் கட்டுரையில் திருமதி மஞ்சுளா நவநீதன் தினமலரில் பால்மய வீதியைப் பற்றி வெளிவந்த விஞ்ஞானத் தகவலில் பெயர் தவறொன்றைக் காட்டி…

வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்

சந்திரலேகா வாமதேவா இளம் பிள்ளைகள் இல்லாத வீடுகள் மிகக் குறைவு. Adolescent பருவத்தில் அதாவது வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவத்தில் பிள்ளைகளைச் சமாளiத்துச் சரியான வழியில் வளர்ப்பது என்பது பெற்றோருக்கு மிகவும் கடினமான வேலை.…

ஜெய்ப்பூரின் செயற்கைக்கால்கள்

அரவிந்தன் நீலகண்டன் எல்லோருமமர நிலையெய்து நன்முறையை இந்தியா உலகுகளிக்கும் - ஆம் இந்தியா உலகுகளிக்கும் - ஆம் ஆம் இந்தியா உலகுகளிக்கும் - வாழ்க என்றார் பாரதி. மகாகவி வாக்கு பொய்ப்பதில்லை. அமர வாழ்வு…

இலக்கிய கட்டுரைகள்

ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு – 02

தமிழில் : நாகூர் ரூமி ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கையை அவருடைய தந்தையாரிடமிருந்து துவக்குவதே பொருத்தமானதாகும். ஏனெனில் தந்தையிடமிருந்து ரூமி இரண்டு முக்கியமான விஷயங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். ஒன்று மார்க்க அறிவு. இரண்டாவது இறைநேசம். ரூமியின் தந்தை…

கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை

பிரதாப ருத்ரன் இதாலிய எழுத்தாளரான இடாலோ கால்வினோவின் பதினெட்டு கதைகளையும், ஒரு கட்டுரையையும் தேர்ந்தெடுத்து திரு.பிரம்மராஜன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இச்சிறுகதைகள் பல்வேறு காலகட்டங்களில், பல மொழிபெயர்ப்பாளர்களால் இதாலிய மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டவை. நிலவின்…

A Mighty Wind (2003)

மாது கல்யாணம், கிடா வெட்டு, கஞ்சி ஊத்துதல், மஞ்சள் நீராட்டு விழா, கருமாதி - நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நிகழ்ச்சிக்குள் மூழ்காமல் சற்றே ஒதுங்கி நின்று நிகழ்வுகளை…

அமெரிக்காவில் ஒரு ‘தனுஷ் ‘

சித்ரா ரமேஷ் சிங்கப்பூர் பாட்டுப் பாடி பரிசு வாங்குபவர்கள் உண்டு. பாட்டில் குற்றம் சொல்லியே பரிசு வாங்குபவர்களும் உண்டு. இதைச் சொன்ன தருமியும் நக்கீரன் அளவிற்கு நம் மனதில் நின்றவர்தான். இதே போல் அமெரிக்காவில்…

வைரமுத்துவின் இதிகாசம்

ஜெயமோகன் வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. அதை சிபாரிசு செய்த ' வல்லிக்கண்ணன் அதை தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று என்கிறார். ஏற்கனவே அகிலனின் சித்திரப்பாவையை பேரிலக்கியம் என்று சொன்ன…

யானை பிழைத்த வேல்

க. மோகனரங்கன் 'ஒரு காலத்தில் எழுத்தாளனாக இருப்பதற்காக எல்லாவற்றையும் துறந்துவிடத் தயாராக இருந்த மு. தளையசிங்கம் பிறகு இலக்கியத்திலிருந்து விாித்து கொண்ட தன் தேடலின் மூலம் ஒரு தத்துவவாதியாக பாிணமிக்கும் நிலையில் அவ்விலக்கியத்தையே துறக்குமளவிற்கு…

கதைகள்

எதிர்ப்பு

மாலதி எதிர்ப்பு பலமாக இருந்தது. அந்த எதிர்ப்பின் பலம் அது பரவலானதில் இருந்தது. அப்படிப்பட்ட எதிர்ப்பின் அவசியம் என்ன என்று சகலமும் வியந்தது. பூமி நகர்கிற படியே நகர்ந்து வந்தால் என்ன ஆகிவிடும் என்ற…

கனவான இனிமைகள்

சந்திரவதனா செல்வகுமாரன்.யேர்மனி இன்றைய சுமதியின் கனவு மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. வழமையான கனவுகள் போல கட்டிலில் இருந்து தொப்பென்று விழுவதாயோ திடுக்கிட்டு விழித்து அழுவதாயோ இருக்கவில்லை. நேற்றிரவு படுக்கையிலேயே சுமதிக்கும் அவள் கணவனுக்கும் காரசாரமான…

திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16

எஸ் ஷங்கரநாராயணன் /9/ தனுஷ்கோடி பெருமூச்சு விட்டான்- நிலைமை தலைகீழாகி விட்டது. அவள் வாழ்க்கை அவளுக்குப் போதாததாய் இருக்கிறது. திருப்தியுறாததாய் இருக்கிறது. அவனால் என்ன முயன்றும் அவளைத் திருப்திமட்டத்தில் வைக்க முடியாது போயிற்று. நிலைமை…

உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை

எஸ் . ராமகிருஷ்ணன் பிரபவ வருடம் சித்திரை இரண்டாம் நாள் முகாம். திருவாவடுதுறை , தேவரீர் பண்டிதமணி துரைச்சாமி முதலியார் சமூகத்திற்கு, தங்கள் அடிப்பொடியான் வலசைஏகாம்பரநாதன் எழுதும் மடல் திருப்புல்லணி பால்வண்ணசாமி எழுதிய பசுபதி…

கேண்மை

ஜெயந்தி சங்கர் சாயங்காலம் ஜவஹர் வந்திருந்தான். சேஷுவைப் பார்க்காமல், அவனால் ஒரு வாரத்தைக்கூட ஓட்டமுடியாது. சின்ன சமாச்சாரம் முதல் பெரிய சமாச்சாரம் வரை அவனிடம் கலந்தாலோசிப்பது தான் ஜவஹரின் வழக்கம். சீக்கிரமே அவனுக்குக் கல்யாணம்.…

நான் ஊட்டிக்கு வரமாட்டேன்..

செங்காளி நான் இந்தப் புதிய நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களாகிவிட்டன. பல ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த நிறுவனம், கடந்த சில வருடங்களாக மேல் நாட்டு முதலீட்டினால் விரிவடைந்து பெரிய அளவில் மேல் நாட்டு பாணியிலேயே…

ஆத்தி

பொ.கருணாகரமூர்த்தி அந்த மரத்தை ஆத்தி என்று அவ்வூரில் சொன்னார்கள். எமக்கு வவுனிக்குள நீர்ப்பாசன நிலக்குடியேற்றத்திட்டத்தின் மூலம் யோகபுரத்தில் கிடைத்த காணியில் அரசே கட்டித்தந்த சிறிய வீட்டு முன்றலில் நின்றது. நெடிதுயர்ந்த பெரிய விருட்ஷமென்று சொல்லமுடியாது.…

அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பது

இரா முருகன் கல்யாணம் விசாரிக்க யாராவது வந்த மணியமாகவே இருந்தார்கள். சீர்வரிசையோடு கொண்டு வந்த அதிரசமும், தேங்குழலும் கைமுறுக்கும் எண்ணெய்க் காறலில் கசப்புத் தட்டும்வரை தின்று தீர்க்கவும் வந்தவர்களுக்கு இலை நறுக்கில் பொதிந்து தாம்பூலத்தோடு…

கவிதைகள்

துளிகள்.

அருண்பிரசாத் இளமென்காற்றில் இருவேறு திசைகளில் நீந்துகின்றன அதீத நீலம் உட்கொண்ட இரு கண்ணீர் துளிகள். குவியக்கூர்மையுடன் ஒட்டியே உறைந்து நிற்கும் அவற்றின் அறியப்படா ஈரங்கள் ஒவ்வொரு பிரிவிலும், கூடலிலும் மென்மேலும் கூடும் நீலத்துடன். அருண்பிரசாத்…

நிஜக்கனவு

மாலதி கனவில் ஒரு வீட்டை வாங்கியிருந்தேன். நிறைய புழக்கம் இருந்த தெருவின் இரண்டாவது வீடு கோலம் போட அழகான சதுரத்துடன். வீடு கொஞ்சம் பழசு சுவர்கள் உறுதி பரணில் ஏகப்பட்டவை இருந்தன எப்போதும் குறுகுறுக்க…

அம்மா தூங்க மறுக்கிறார்

புஷ்பா கிறிஸ்ரி அம்மா தூங்க முயல்கிறார். கண்கள் தூங்க மறுக்கின்றன இன்னும் பொழுது விடியவில்லைத் தான் தூரத்துக் காரொன்று உறுமுகின்றது இரவு வேலை முடித்த அதிகாலை உழைப்பாளி போலும் அம்மா திரும்பிப் படுக்கிறார் பகல்…

ஏழாவது வார்டு

அனந்த் *** ஏழாவது வார்டின் மூன்றாவது மாடி அறைகளைக் கெட்டியாகப் பூட்டிநிற்கும் இரும்புக் கம்பிக்கதவுகள் உள்ளிருக்கும் உன்மத்தங்களின் இரகசியங்களை மறைக்க இயலாமல் தவிக்க, கீழே, அடர்த்தியான மரக்கிளைகளை ஊடுருவும் அவல ஓலங்களும் கீச்சிட்டுத் தாவும்…

அந்தி மாலைப் போது

அனந்த் .... அந்திமாலைப் போதிலே .... அழகிஎன்றன் காதிலே வந்துசொன்னாள் வாலிபத்தின் சேதியை -அதில் மறந்துவிட்டேன் நான்பிறந்த தேதியை! ... ஆரவளோ வான்மகள் ... அறிந்திலேன்அப் பூநிகர் நாரிமணம் தொட்டதென்றன் நாசியை - உடன்…

பிசாசின் தன்வரலாறு – 1 (நெடுங்கவிதை)

மாலதி நேற்று தான் மரித்துப் போனேன் நான். இறப்பின் மிச்சங்களைத் தேடி நேற்றைய நாள் கழிந்து போயிற்று. அவை கொலையின் மிச்சங்களும் என்பதால். உயிர்த்திருக்க ஆசையில்லாமல் யாருமில்லை. மரித்த இரவின் நாழிகைகளில் உணர்வின் உடலுள்…

‘கவி ஓவியம் ‘

கவிமாமணி டாக்டர் சவகர்லால் கலத்திலே சோறு நெய்வழியப் பிசைந்தது; உளத்திலே பாசம் உயிர்வழியக் கலந்தது; .நடைவந்த குழந்தைக்கு நெய்யன்னம் ஊட்டத் . தடைப்படா வாஞ்சையொடு தாயின் முயற்சி! நடைபயிலும் சிறுகிளி தன்சிறு கால்களை இடைப்பட…

முற்றுப் பெறாத….

மீ.வசந்த்,டென்மார்க் ஓரு சில வரிகளோடு நிறைந்து கிடக்கின்றன முற்றுப்பெறாத கவிதைகள். சந்தோஷத்தில் தெறித்த சிரிப்புச் சிதறல்கள் துக்கத்தில் பதிந்த கண்ணீர் சுவடுகள், வெடிக்க காத்திருக்கும் உள்மனதின் அழுத்தங்கள், ஹார்மோன்கள் துரத்திய காதல் விசாரிப்புகள், உறங்காமல்…

அவளும்

பத்மநாதன் குறைந்தது அறுபது வருசம் சமைத்திருப்பாள்... இருபது வருசம் வெற்றிலை இடித்தும் மென்றிறுப்பாள்...இருந்தும் அவ்வப்போது அருகில் அமர்த்தி வெற்றிலை இடிச்சித்தா வெங்காயம் உறிச்சித்தாவென தொந்தரவு செய்வாள்.... என்னடா தொல்லையிது என்றெண்ணி உதவிடும் வேளையில் கண்களால்…

அன்புடன் இதயம் – 11 – தண்ணீர்

புகாரி தாகத்தைக் கொண்டுவிட்டுத் தண்ணீரைக் கண்டோமா தண்ணீரைக் கண்டுவிட்டுத் தாகத்தைக் கொண்டோமா கடலோடும் நதியோடும் மழையோடும் அருவியோடும் சலிப்பின்றி விழிபேச அலுப்பேனோ வருவதில்லையே சுற்றுகின்ற உலகமிதில் சூழ்ந்ததெலாம் தண்ணீரே சூரியனும் விழுங்கிடாமல் காப்பதுவும் தண்ணீரே…