திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060421_Issue

அரசியலும் சமூகமும்

ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2

மலர் மன்னன் பொது நலனில் மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாடுகொண்டு, மக்கள் நலனுக்காக உழைக்க முன்வருபவர்களை வியப்புடன் பார்ப்பதும், அவர்களைப் பலவாறு புகழ்ந்து பாராட்டுவதும் நமது இயல்பு. இதனால் காலப்போக்கில் அத்தகையோரின் செயல்களை விவாதிப்பதே…

பயங்கர மனநோயாளிகள்

செழியன்பயங்கர மனநோயாளிகள் (psychopath) “I wanted to be most prolific killer in Canadian history” - நீதிபதியிடமே தன்னுடைய குரூரமான கனவினை வெளிப்படுத்தியவன் தான் Ferrier. ஒரு போதும் குணப்படுத்த முடியாத…

தொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்

நக்கீரன்ஒருவழியாக பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களின் 7 நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. வங்கி ஊழியர்கள் அவர்களின் ஓய்வூதியத்திற்காக போராடி வெற்றியும் பெற்றுள்ளனர். மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த ஏழு நாட்களும் மக்கள்…

புலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்

இளைய அப்துல்லாஹ் சிங்கப்பூர் எப்பொழுதும் ஒழுங்குக்கும்; நேர்த்திக்கும் பெயர் போன இடம் என்று தான் கேள்விப்பட்டோம். அங்கு விமானத்தில் வந்து இறங்கி பாதைக்கு வந்த பொழுது அது சரி என்றுபட்டது. அங்கு நின்ற குறுகிய…

‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது?

கற்பக விநாயகம் அளவுக்கு அதிகமாய் விஸ்வாமித்ரா என்பவரால் திண்ணையில் பல இடங்களில் சொல்லிச் சிலாகிக்கப்பட்ட 'ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்' எனும் புத்தகம் பற்றி சென்ற திண்ணை இதழில் கூட விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மிகப்பெரும் ஆய்வு…

வளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்

அரவிந்தன் நீலகண்டன் ஹிந்து தெய்வங்களுக்கு நீங்கள் வழங்கும் மலர்கள் மென்மேலும் ஆயிரம் மலர்கள் மலரவும் மண் வளமடையவும் உதவிடக் கூடும். மும்பையின் சித்தி விநாயகர் கோவிலுக்கு அளிக்கப்படும் மலர்கள் செம்பருத்தி முதல் அருகம் புல்…

இவை எழுதப்பட்ட காலங்கள்–1

காஞ்சனா தாமோதரன் கடந்த பல மாதங்களிலான கத்ரீனா நிவாரணப்பணி இடங்களில் தொடர்புத் தொழில்நுட்ப வசதிகள் அதிகம் இல்லை. உடல் உழைப்பு தரும் நிறைவுடனும் அசதியுடனும் சாயும் பொழுதுகளில், மனிதமுள்ள மனங்களும் காத்திரமான புத்தகங்களும் பல்துறைச்…

கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3

அரவிந்தன் நீலகண்டன் மிசோரம்: ரியாங்குகள் “நாங்கள் அனைத்து மனிதர்களும் இயற்கையாகவும் தமது தேர்வினாலும் பாவிகள் என நம்புகிறோம். எனவே அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்களின் இரட்சிப்பு இம்மண்ணிலும் வானின் கீழெங்கும் ஏசுவின் மீதான நம்பிக்கையலான்றி வேறெவராலும்…

ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1

மலர் மன்னன் திண்ணை வாசகர்களிடமிருந்து வரும் மின் அஞ்சல்கள் பலவும் நான் ஆன்மிகம் குறித்தும் எழுத வேண்டும் எனப் பணிக்கின்றன. ஆன்மிகம் ஓர் அந்தரங்கமான விஷயம்; அதனை எழுத்தால் உணர்த்துதல் உசிதமல்ல, சாத்தியமும் அல்ல…

கரை மேல் பிறக்க வைத்தார்

வந்தியத்தேவன் இலங்கை கடற்படை சுட்டு இந்திய மீனவர்கள் பலியான சம்பவம் குறித்து வலைப்பதிவுகளில் விவாதங்கள் நடந்து வருகின்றது. இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை திண்ணை வாசகர்கள் முன் வைக்கின்றேன்.…

அறிவிப்புகள்

கடிதம்

சுகுமாரன்எடின்பரோ குறிப்புகளில் சின்னதாக ஒட்டுவேலை செய்ய உத்தேசம். தேவராஜன் மாஸ்டரும் ஓ.என்.வியும் இணைந்து நாடக கானங்களை சராசரி மலையாளியின் தேசிய கீதங்களாக மாற்றியது ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும். எழுபதுகளில் இரண்டு மாஸ்டர்களும் சினிமாவில் சூப்பர் தாரகைகளாகி…

திரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்

அரவிந்தன் நீலகண்டன் திரு.சீ.இராமச்சந்திரனின் 'கழகக் கந்தனும் பரிஷத் முருகனும்' எனும் கட்டுரை அடிக்குறிப்பில் "வைதிக சமயத்தின் தத்துவத் தலைவனாக அல்லது வேதகாலத்து ஞான காண்ட முதல்வனாகக் கருதத்தக்க வருணனின் செல்வ வளத்தன்மை பாற்கடலாக உருவகிக்கப்…

கடிதம்

பெஞ்சமின் லெபோதுருக்கிக் கவிஞரின் கவிதையைச் சொல்லித்தன் விரலைக் கடித்தார் தேவ மைந்தன் கடிபட்டது அவர்விரல் மட்டுமா இல்லை அடியேன் உள்ளமும் தானே! அன்பன் பெஞ்சமின் லெபோ (பிரான்சு) Benjamin LE BEAU [benjaminlebeau@yahoo.fr]

எதிர்மறைகள்

வஹ்ஹாபி சென்ற வாரத் திண்ணையில் ஒரு வித்தையைக் http://www.thinnai.com/pl0414062.htm காண நேர்ந்தது. 'தவ்ஹீது பிராமணீயம்' என்ற மொட்டைத் தலையில் சடை பிண்ணி அதை முழங்காலுக்கு முடிச்சுப் போட முயன்றதை வெறும் வித்தை என்று கூறுவதைவிட…

“வலைப்பதிவர்களுக்கான” மாதாந்திரப் போட்டி

பாலாஜிTamil Bloggers Competition -------------------------------- வலைப்பதிவுகளின் தொகுப்பகம் தேன்கூடு (http://www.thenkoodu.com)ம் இணைய இதழ் தமிழோவியமும் (http://www.tamiloviam.com/) "வலைப்பதிவர்களுக்கான" மாதாந்திரப் போட்டி நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். தலைப்பு : தேர்தல் 2060 * கவனிக்க:தேர்தல் 2006 அல்ல…

கடிதம்

அரவிந்தன் நீலகண்டன்அவுரங்கசீப்பின் ஆட்சிக்கும், ஹிட்லரின் யூத வெறுப்புக்கும் வக்காலத்து வாங்கியுள்ள ஹமீது ஜா·பர் எனக்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். நன்றி ஜா·பர். சகோதரர் ஜா·பர் நிச்சயமாக எனது அவுரங்கசீப் குறித்த கட்டுரையை மீண்டும் ஒருமுறை…

கடிதம்

மு. சுந்தரமூர்த்தி1. நினைவிலிருந்ததை வைத்து நான் எழுதியதை சரிபார்த்துக் கொள்ள மீண்டும் மலர் மன்னனின் கடிதங்களைப் படித்தேன். "திண்ணை'யில் வெளிவந்த என் எழுத்துகளைப் படித்துவிட்டு நான் தொடர்ந்து எழுத வேண்டும் எனக் கேட்டு தினமும்…

கடிதம்

இஸ்ஸத்அன்புள்ள ஆசிரியருக்கு, உங்கள் வலை பத்திரிகையை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். படைப்புகள் மிகவும் சிறப்பாகவுள்ளன. குறிப்பாக இஸ்லாமிய படைப்பாளிகளின் அறிவுபூர்வமான கட்டுரைகள் நம்பிக்கை கொடுப்பதாக இருக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய படைப்பாளிகள் இன்றைய இந்திய…

கடிதம்

மு.சுந்தரமூர்த்திமார்ச் 12 ஆம் தேதி வெளியான திண்ணை இதழில் "சுந்தரமூர்த்திகளுக்கு" பி.கே. சிவகுமார் எழுதியுள்ள கடிதத்தை புரிந்துகொள்ள உதவியாக நான் இதுவரை அவருடன் விவாதித்த-/உரையாடிய-, அவருடைய பெயரைக் குறிப்பிட்டு எழுதிய-, அவருடைய வணிக நிறுவனத்தைக்…

விஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்

பரிமளம்விஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் பரிமளம் கடந்த வாரம் ம.வெங்கடேசனின் நூல் கிடைக்குமிடம் பற்றிய கடிதத்தில் விஸ்வாமித்ரா இவ்வாறு எழுதுகிறார். {ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா [The Approaching Global Thermageddon] எங்கெங்கு காணினும் புகை மூட்டமடா! ஈராக் எண்ணைக் கேணிகள் தீப்புகை எழுப்புதடா! தவறு செய்யும் மனிதர் கூட்டம் தப்பிக் கொள்ளப்…

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

செல்வன் By:செல்வன் டார்வின் 1871'ல் The Descent of Man and selection in relation to sex என்ற புத்தகத்தை எழுதினார்.அதில் அன்றைய விஞ்ஞானிகள் மனிதன் ஒரு குரங்கு என்பதை ஒத்துக்கொள்ள மறுத்ததை…

சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்

ஸ்ரீஷிவ் இந்தக்கட்டுரையில் சினைமுட்டைப்பை (ovary)மாற்று சிகிச்சை பற்றி பார்ப்போம், குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளாகக்கருதப்படும் இந்தியா, சீனா, சப்பான் போன்ற நாடுகளில் இந்த விஞ்ஞான முன்னேற்றம் மிக மெதுவாகவே இருக்கின்றது.சீனாவில் சென்ற 2002ஆம் ஆண்டு பிப்ரவரி…

பென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)

இ.பரமசிவன் நாம் ஏற்கனவே டாக்டர் ரோகர் பென்ரோஸின் (Dr.Rogar Penrose) "பிரபஞ்சத்தணிக்கை" (cosmic censorship) பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம்.பிரபஞ்சத்தில் இந்த பிரபஞ்சத்தாலேயே பார்க்க முடியாத அளவுக்கு கத்தரிக்கோல் போடக்கூடிய வல்லமை ஒற்றைப்புள்ளியாய் சுருங்கிப்…

இலக்கிய கட்டுரைகள்

உறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”

பாவண்ணன்உறைதலும் உயிர்ப்பித்தலும் - இரா.முருகனின் "மூன்று விரல்" பாவண்ணன் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் இயங்கிவரும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் இரா.முருகன். பல சிறுகதைகள்மூலம் இலக்கிய உலகில் ஏற்கனவே அழுத்தமான தடங்களைப் பதித்தவர். கணிப்பொறி உலகைச்…

சங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்

முனைவர் க.துரையரசன் நோக்கம்: தமிழக மக்கள் பெரிதும் வேளாண் தொழிலையே நம்பியுள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வேளாண் உற்பத்திப் பெரும் பங்காற்றி வருகிறது. இதனால்தான், அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வேளாண் தொழிலை வளர்ப்பதில்…

பூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்

புதியமாதவி, மும்பை பரிணாமமும் பரிமாணமும் கை கோக்கிறபோது கவிதை முழுமையடைகிறது கவிதை கவிதையாகிறது என்று கவிதைகளைப் பற்றிய கருத்துகளுடன் கவிதைகள் படைப்பவர் கவிஞர்.பிச்சினிக்காடு இளங்கோ. சிங்கையிலிருந்து அவர் எழுதியிருக்கும் கவிதைகள் புலம்பெயர்ந்த வாழ்வியலில் தமிழர்கள்…

நூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்

புதுவை ஞானம்இன்று மாலையில் பார்த்தது போல என்றும் பார்த்தது இல்லை வானத்தை ! அந்தி மாலையின் இருள் சூழும் நேரத்தில் நகரத்தில் இருந்து வந்து கொண்டிருந்தேன். நெடுஞ்சாலையின் இரைச்சலையும் அமளியையும் விடுத்து.................. இறுதியாய் இருந்த…

கதைகள்

அ வ னா ன வ ன்

மு. முருகேஷ்வண்டியை நிறுத்தி ஸ்டாண்டைப் போட்டான். அப்படியே முன்வந்து கண்ணாடியைப் பார்த்தான். கலைந்த தலைமுடியை சரி செய்தான். முகம் சாதாரணமாய் இருந்தது. தாடையை ஆட்டி, கண்களைச் சுருக்கி, பல்லைக் கடித்தான். கண்ணாடியில் விரிசல் விழுவது…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17

ஜோதிர்லதா கிரிஜா அத்தியாயம் - 17 பங்கஜத்தை அடையாளம் தெரிந்துகொண்டவளைப் போல் வள்ளியும் நடப்பதை நிறுத்திவிட்டு அவளை உற்றுப் பார்த்தாள். “என்னம்மா? தெரியல்லீங்களா? நான்தாம்மா, வள்ளி. சின்னக்கொளத்துல நீங்க இருந்தப்ப, உங்க வீட்டுல அரிசி…

உம்மும்மா நேசித்த ஊசிக்கிணறு

ஹெச்.ஜி.ரசூல் ஊசிக்கிணற்றிற்கு பலமானதாக சுவர்கள் இல்லை. ஐந்தடி உயரச் சுற்று சுவரில் முண்டியடித்து முட்டிக் கொண்டு நெருக்கினால் போதும் உடைந்து விழுகிற துண்டுகளுடன் குழந்தைகள், பெண்கள், குட்டி இபுலீசுகளென பேதங்களற்று எல்லா உடல்களும் துண்டுப்…

டர்மெரின் – 2

ஸ்ரீ மங்கை------------------- மும்பையின் மே மாத வெயில் எட்டுமணிக்கே தெரியத் தொடங்கியிருந்தது. அந்த நீல நிற மாருதிக்கு நெடுஞ்சாலையில் விரைவது அன்று சிரமமாக இல்லை. "இன்னும் ஒரு மணி நேரம்தான் "- அபிஜீத் நினைத்துக்கொண்டான்.…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடாமயிலாடிக் கேட்கு மிங்கே! மன்னருக்கு அதிர்ச்சி யிங்கே! மான் விழையும் பரிசை எங்கே? மன்னர் தர மறுப்ப திங்கே! வீணாகப் பிடிவாத மிங்கே வெள்ளித் தட்டில் சிரசு எங்கே? தேனாகப் பேசி…

கவிதைகள்

மிஸ் இந்தியா

சி. ஜெயபாரதன், கனடா பாதச் சிலம்புக்கு பதியைப் பலி கொடுத்து பாண்டிய னுக்கு நீதி சொன்ன காண்டீபப் பெண் ணில்லை! எமனிடம் வாதாடி குமரன் உயிர் மீட்ட உமையவ ளில்லை! கண்கண்ட தெய்வத்தைக் குன்றின்…

கீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அதுவே என் வாழ்க்கை நதி, பகலிர வெல்லாம் குருதி யோட்டக் குழல்களின் வழியோடிச் சுற்றி வந்து தாரணியில் நர்த்தனம் புரியும், சீரிசைத் தாளத்துக் கேற்ப! அதே அந்த வாழ்க்கை…

பாயடி பாரதமே! பாய் !

பசுபதி காட்டிலுறு சட்டமொன்றே காக்கும்உனைச் சந்தையில்; வேட்டைக் களமிறங்கி வென்றுவா! -- போட்டிபல ஆயினும் வாணிகத்தில் 'ஆசியா வேங்கை'யெனப் பாயடி பாரதமே! பாய். விந்தைநீர் உன்றன் வியர்வையைப் பாய்ச்சிடின் சந்தைவனம் தந்திடும் சாதனைகள் !…

பெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன்.2362. திருத்தோணிப்புரத்தில் (சீகாழி) தோன்றிய பிள்ளையாரை அந்த நீலநக்கரின் பெரிய நட்பை மகிழ்ந்து மனதில் வைத்து நான்முகனுக்கும் திருமாலுக்கும் அரியவரான சிவபெருமானின் பதிகள் பலப்பலவும் சென்றார் வணங்கினார் துதித்தார் பாடினார் பரமர் திருத்தொண்டர்…

நீங்கள் மகத்தானவர்!

கலைவாணி இராஜகுமாரன் வெண்மணல் படர் வெளிகள் பார்க்கையில் இன்னும் வாராத நதிகளையிட்டு வருத்தப்படுகிறீர்கள் காதுகுடையும் பஞ்சு, மஞ்சள் துணி, பூ இன்னபிற விற்கும் குழந்தைகளின் சின்னக்குரலும் கெஞ்சலும் போகுமிடங்களெல்லாம் நிழல்போல நீள்கிறது கைக்குழந்தைப் பிச்சைக்காரிக்கு…