திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021124_Issue

அரசியலும் சமூகமும்

சிந்து சமவெளி நாகரிகமும் சாதிய சமுதாய அமைப்பும்

அரவிந்தன் நீலகண்டன் மிகுந்த சர்ச்சைக்கான அனைத்து விதைகளையும் உள்ளடக்கிய ஒரு கேள்வி சாதிய சமுதாய அமைப்பின் உதயம் குறித்தது. பல தலித் விடுதலை கருத்தியல்களில் ஆரிய படையெடுப்பில் இந்திய பூர்விகக்குடிகள் அடிமைப்படுத்தப்பட்டு சமுதாயத்தில் கீழ்…

மறக்கப்பட்டவர்கள் : மலேசியாவில் ஏழைகள் இந்திய வம்சாவளியினரே

சாந்தா ஊர்ஜிதம் பாஞ்சாலை வெங்கட்ராமன் என்ற விதவைப் பெண்மணிக்கு வயது 60. செலாங்கோர் மானிலத்தில் முன்னாள் ரப்பரத் தோட்ட்டத்தில் தன் மகன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். 1993-ல் ரப்பர் எஸ்டேட் வீடுகள் கட்டும் ஒரு…

பாட்டிகளின் மகத்துவம்

நடாலி அஞ்சியர் பாட்டி என்ற சொல்லுக்கே ஒரு பிம்பம் மனத்தில் தோன்றும். குழந்தைகளுக்கும், இந்த சொல், 'நான் சரியான காலின் சரியான செருப்பை போடுவதாலேயே என்னை பெரும் புத்திசாலி என்று நினைக்கும், அம்மாவும் அப்பாவும்…

தண்ணீர் யாருக்குச் சொந்தம் ?

மாட் பார்லோ / டோனி க்ளார்க் (இவர்கள் எழுதிய புத்தகம் : 'நீலத் தங்கம்: உலகத் தண்ணீரை திருடும் கம்பெனிகளைத் தடுப்பது எப்படி ? ' ) '20ம் நூற்றாண்டில் எண்ணெய் இருந்த இடத்தை,…

தண்ணீர் இனவெறி

மாட் பார்லோ / டோனி க்ளார்க் உலகில் தென் ஆப்பிரிக்கா நாடு ஒன்றில் தான் சட்ட அமைப்பிலேயே தண்ணீர் அடிப்ப்டை உரிமை என வரையப் பட்டுள்ளது. ஜோகன்ச்பர்க், டர்பன் நகரங்கள் தண்ணீர் உரிமைக்கான போராட்டத்தில்…

தண்ணீர் : பொலிவியாவில் எதிர்ப்புகள்

மாட் பார்லோ / டோனி க்ளார்க் 1998-ல் உலக வங்கி பொலிவிய அரசுக்குத் தெரிவித்தது : கொச்சகம்பா என்ற நகரின் தண்ணீர் வினியோகம் தனியார் கைகளில் சென்றால் தான் 25 மில்லியன் டாலர் கடன்…

இந்த வாரம் இப்படி – நவம்பர் 24 2002

மஞ்சுளா நவநீதன் போக்குவரத்துத் துறை - தனியார்மயம் ஜெயலலிதாவின் தயவால் போக்குவரத்துத் துறை தனியார் மயமாகிறது. ஒரு புறம் வரவேற்கவேண்டும் என்று எண்ணினாலும் , இன்னொருபுறம் கட்டண உயர்வு மற்றும் வேலை வாய்ப்பு இழப்பு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

புதிய வகை உயிரை உருவாக்க அறிவியலாளர்கள் முனைகிறார்கள்.

மனித மரபணுவை (genome ) படித்து விரிக்க உதவிபுரிந்த தலைசிறந்த ஒரு முன்னோடி அறிவியலாளரும், நோபல் பரிசு பெற்ற உயிரியல் அறிவியலறிஞர் ஒருவரும் இணைந்து சென்ற வியாழக்கிழமை (நவம்பர் 14) புதிய வகை உயிரினத்தை…

அறிவியல் மேதைகள் ஆல்ஃப்ரெட் பெர்னார்ட் நோபல் (Alfred Bernard Nobel)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது; எனவே அதற்கு வயது நூறாண்டு முடிவடைகிறது. இப்பரிசைத் தோற்றுவித்தவர் ஆல்ஃப்ரெட் பெர்னார்ட்…

விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன் [Carl Sagan] (1934-1996)

சி. ஜெயபாரதன், கனடா அண்ட கோள ஆராய்ச்சியில் பங்கெடுத்த அமெரிக்க விஞ்ஞானி 1957 ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் அணுக்கருப் பெளதிகம் [Nuclear Physics] படித்துக் கொண்டிருந்த ஒரு வானியல் பெளதிக [Astrophysics]…

பாட்டிகளின் மகத்துவம்

நடாலி அஞ்சியர் பாட்டி என்ற சொல்லுக்கே ஒரு பிம்பம் மனத்தில் தோன்றும். குழந்தைகளுக்கும், இந்த சொல், 'நான் சரியான காலின் சரியான செருப்பை போடுவதாலேயே என்னை பெரும் புத்திசாலி என்று நினைக்கும், அம்மாவும் அப்பாவும்…

இலக்கிய கட்டுரைகள்

ராங்கேய ராகவின் படைப்புலகம்

எச். பீர்முஹம்மது. கடந்துபோன படைப்பாளியின் படைப்புகளைப் பற்றி மதிப்பீடு செய்வது ஒரு நேர்மையான செயல்பாடு. குறிப்பிட்ட கோட்டுத்துண்டில் அவன் நகர்ந்து சென்ற வேகம் ஏற்படுத்திய பாதிப்பு காலத்தை முன்னோக்கி நகர்த்த கூடியது. சிலாின் படைப்புகள்…

சந்தேகத்துக்கு மருந்தில்லை (எனக்குப் பிடித்த கதைகள்- 37 -லா.ச.ராமாமிருதத்தின் ‘ஸர்ப்பம் ‘)

பாவண்ணன் ஊரிலிருந்து வந்திருந்த பெண் நண்பரொருவர் மாலை நடையின்போது 'சந்தேகம் என்றால் என்ன ? ' என்று ஒரு கேள்வியைக் கேட்டார். 'தெரியாத ஒன்றைத்தான் சந்தேகம் என்று சொல்கிறோம் ' என்று சொன்னேன். நான்…

கதைகள்

நாட்டு நாய்களும் நகரத்து நாய்களும்

சைதன்யா ஆத்து நிறையத் தண்ணி ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கணும் ? இதுல மேற்கத்திய நாய் நம்மூர் நாய்ன்னெல்லாம் ஒண்ணில்லப்போவ். குரைத்தலிலும் மேற்கத்திய குரைப்பு, நம்மூர்க் குரைப்புன்னெல்லாம் வர்க்க வித்தியாசம் வந்தாச்சி. இதுல இன்னொரு…

கவிதா:

கே ஆர் விஜய் மீண்டும் கவிதாவை சந்திக்கப் போகிறோம் என்று நினைக்கும்போதே உடல் முழுவதும் ஏதோ ஒரு சிலிர்ப்பு பரவியது.சின்ன பய அலை ஒன்று நெஞ்சிலிருந்து ஆரம்பித்து வயிற்றின் அடிப்பகுதி வரை சென்று மீண்டும்…

ஞானோபதேசம்

ராமசந்திரன் உஷா டென்ஷன்,டென்ஷன் என்று நாலாபக்கத்தில் இருந்து வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் தவித்துப்போனார் கிருஷ்ணன்.நண்பர் வெங்கடேசனிடம் யோசனை கேட்கலாம் என்று அவர் வீட்டுக்கதவைத்தட்டினார்.அவர் மருமகள் தான் கதவை திறந்தாள். என்னமா விசேஷம் ?…

கவிதைகள்

நினைவு

ஆனந்தி ஆர். காற்றில் வரும் பாட்டு எங்கிருந்தோ கேட்கும் சிரிப்பின் ஒலி மழையினால் வரும் ஆனந்தம் மனிதர்களின் பளீர் புன்னகை பைக்கில் போகும் இளம் ஜோடி அனைத்தும் தூண்டும் உன் ஞாபகத்தை வருகிறதா உனக்கு…

குறை தீர்ந்த குழந்தைகள்

அனந்த் 1. துள்ளும் மானினைப்போல் சுழன்றோடும் மீனினைப்போல் கள்ளந் தெரியாது களித்திருக்கும் வயதினிலே உள்ளம் மிகநொந்து உடல்வருத்தும் ஊனமுடன் எள்ளிப் பிறர்நகைப்பும் ஏற்றுநிற்றல் சிலர்விதியோ ? 2. ஒரு சிறுமி: என்னைப் பெற்ற ஏழையர்தம்…

அப்பாவின் ஓவியம்

பாலகணேசன் தாமோதரம்பிள்ளை வர்ணச் சோக்குகட்டிகளால் குழந்தை ஓவியமொன்று வரைந்திருந்தான் அவனது தந்தையின் பிறந்த நாளின் பரிசாக் ஒடுக்கப்பட்டவனுக்கான ஆடையை வர்ணங்களால் நெய்த அந்தச் சின்னக் கையை தாய் முத்தமிட்டாள். அவ்வோவியத்தில் மூன்று கால்களும், இரண்டு…

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது – 5 (தொடர்கவிதை)

சேவியர் 5 பாலாவும், பிரியாவும் பாலர்கள் அல்ல. வெப்பத்தின் தெப்பம் தேடும் மனக் கிளர்ச்சி விரிய வைத்த மலர்களுமல்ல. அவர்கள், நிஜ வாழ்வில் நிற்பவர்கள். எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் நீளல் தான் என்பதை உணர்ந்தவர்கள்.…

பூவும் நாரும்

புதியமாதவி ஓடும் வண்டியில் உரசியது வெட்பம் சூடிய பூக்களில் சூடு பரவியது கைகள் தாள்களைப் புரட்டிய போது பதவியின் கண்கள் தாவணியைப் புரட்டியது..! குளிர் அறையின் வெட்பம் தாங்காமல் வெள்ளை நிறப்பூக்கள் வெதும்பிக் கருத்தது…

கவர்ச்சி காட்டும் கண்ணகி

புதியமாதவி மரபுக் கவிதையில் மறைந்திருந்த கண்ணகியை புதுக் கவிதையில்- என் பூமிக்கு இழுத்தேன் கவிதை அரங்கேறியது காற்சிலம்பே ஆடையான கவர்ச்சிப் படத்துடன் நீதி கேட்டேன் பத்திரிகை பாண்டியன் பதறாமல் சொன்னார் ' நல்ல கவிதையிது…

மனமெங்கும் வாசமோ ?

வேதா. மனசு முழுக்க நீ .. ...................... தவளையின் கத்தலில் தாளங்கள் கேட்கிறேன்! மழைநீரின் சலசலப்பு உன் கிண்டல் தொனி! இலைகளின் துளி எல்லாம் ஈரமாய் இதயத்தில்! இதுவரை பார்த்திராத மஞ்சள் நிலா வானத்தில்...…

கனவு நாடு

பசுபதி என்றன் இனிய கானடா! . . இன்பக் கனவு நாடடா! தந்தை தேசப் புகழினைத் . . தாயின் மொழியில் சொல்லடா! (1) கழுகு நாட்டு நேசனாம்; . . கனடா என்ற…

சா(சோ)தனை

வை.ஈ மணி அன்னை அருகில் அணுகவும் ஆசை பொங்கி அன்புடன் மின்னல் என்று துள்ளிடும் மழலை கூறும் குழவியின் என்னை வெல்ல யாருளர் என்று சொல்லும் நோக்கினில் மின்னும் வெற்றிக் குறியுடன் மிளிரும் அரிய…

புகை

அபுல் கலாம் ஆசாத் நேற்று, தொலைத்துத் தலை முழுகிவிட்டேன். நுரையீரலுக்குள் நெருப்பு வீசிக்கொண்டிருந்த உலைக்களத்தை உடைத்துவிட்டேன். அது என்ன ஆள்காட்டி விரலா அறுத்து எறியத் தயங்க ? விரல்களுக்கிடையில் செருகப்பட்ட வெள்ளை விஷம்தானே, பிடுங்கி…