திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021124_Issue

அரசியலும் சமூகமும்

சிந்து சமவெளி நாகரிகமும் சாதிய சமுதாய அமைப்பும்

அரவிந்தன் நீலகண்டன் மிகுந்த சர்ச்சைக்கான அனைத்து விதைகளையும் உள்ளடக்கிய ஒரு கேள்வி சாதிய சமுதாய அமைப்பின் உதயம் குறித்தது. பல தலித் விடுதலை கருத்தியல்களில் ஆரிய படையெடுப்பில் இந்திய பூர்விகக்குடிகள் அடிமைப்படுத்தப்பட்டு சமுதாயத்தில் கீழ்…

மறக்கப்பட்டவர்கள் : மலேசியாவில் ஏழைகள் இந்திய வம்சாவளியினரே

சாந்தா ஊர்ஜிதம் பாஞ்சாலை வெங்கட்ராமன் என்ற விதவைப் பெண்மணிக்கு வயது 60. செலாங்கோர் மானிலத்தில் முன்னாள் ரப்பரத் தோட்ட்டத்தில் தன் மகன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். 1993-ல் ரப்பர் எஸ்டேட் வீடுகள் கட்டும் ஒரு…

பாட்டிகளின் மகத்துவம்

நடாலி அஞ்சியர் பாட்டி என்ற சொல்லுக்கே ஒரு பிம்பம் மனத்தில் தோன்றும். குழந்தைகளுக்கும், இந்த சொல், 'நான் சரியான காலின் சரியான செருப்பை போடுவதாலேயே என்னை பெரும் புத்திசாலி என்று நினைக்கும், அம்மாவும் அப்பாவும்…

தண்ணீர் யாருக்குச் சொந்தம் ?

மாட் பார்லோ / டோனி க்ளார்க் (இவர்கள் எழுதிய புத்தகம் : 'நீலத் தங்கம்: உலகத் தண்ணீரை திருடும் கம்பெனிகளைத் தடுப்பது எப்படி ? ' ) '20ம் நூற்றாண்டில் எண்ணெய் இருந்த இடத்தை,…

தண்ணீர் இனவெறி

மாட் பார்லோ / டோனி க்ளார்க் உலகில் தென் ஆப்பிரிக்கா நாடு ஒன்றில் தான் சட்ட அமைப்பிலேயே தண்ணீர் அடிப்ப்டை உரிமை என வரையப் பட்டுள்ளது. ஜோகன்ச்பர்க், டர்பன் நகரங்கள் தண்ணீர் உரிமைக்கான போராட்டத்தில்…

தண்ணீர் : பொலிவியாவில் எதிர்ப்புகள்

மாட் பார்லோ / டோனி க்ளார்க் 1998-ல் உலக வங்கி பொலிவிய அரசுக்குத் தெரிவித்தது : கொச்சகம்பா என்ற நகரின் தண்ணீர் வினியோகம் தனியார் கைகளில் சென்றால் தான் 25 மில்லியன் டாலர் கடன்…

இந்த வாரம் இப்படி – நவம்பர் 24 2002

மஞ்சுளா நவநீதன் போக்குவரத்துத் துறை - தனியார்மயம் ஜெயலலிதாவின் தயவால் போக்குவரத்துத் துறை தனியார் மயமாகிறது. ஒரு புறம் வரவேற்கவேண்டும் என்று எண்ணினாலும் , இன்னொருபுறம் கட்டண உயர்வு மற்றும் வேலை வாய்ப்பு இழப்பு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் ஆல்ஃப்ரெட் பெர்னார்ட் நோபல் (Alfred Bernard Nobel)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது; எனவே அதற்கு வயது நூறாண்டு முடிவடைகிறது. இப்பரிசைத் தோற்றுவித்தவர் ஆல்ஃப்ரெட் பெர்னார்ட்…

விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன் [Carl Sagan] (1934-1996)

சி. ஜெயபாரதன், கனடா அண்ட கோள ஆராய்ச்சியில் பங்கெடுத்த அமெரிக்க விஞ்ஞானி 1957 ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் அணுக்கருப் பெளதிகம் [Nuclear Physics] படித்துக் கொண்டிருந்த ஒரு வானியல் பெளதிக [Astrophysics]…

பாட்டிகளின் மகத்துவம்

நடாலி அஞ்சியர் பாட்டி என்ற சொல்லுக்கே ஒரு பிம்பம் மனத்தில் தோன்றும். குழந்தைகளுக்கும், இந்த சொல், 'நான் சரியான காலின் சரியான செருப்பை போடுவதாலேயே என்னை பெரும் புத்திசாலி என்று நினைக்கும், அம்மாவும் அப்பாவும்…

புதிய வகை உயிரை உருவாக்க அறிவியலாளர்கள் முனைகிறார்கள்.

மனித மரபணுவை (genome ) படித்து விரிக்க உதவிபுரிந்த தலைசிறந்த ஒரு முன்னோடி அறிவியலாளரும், நோபல் பரிசு பெற்ற உயிரியல் அறிவியலறிஞர் ஒருவரும் இணைந்து சென்ற வியாழக்கிழமை (நவம்பர் 14) புதிய வகை உயிரினத்தை…

இலக்கிய கட்டுரைகள்

ராங்கேய ராகவின் படைப்புலகம்

எச். பீர்முஹம்மது. கடந்துபோன படைப்பாளியின் படைப்புகளைப் பற்றி மதிப்பீடு செய்வது ஒரு நேர்மையான செயல்பாடு. குறிப்பிட்ட கோட்டுத்துண்டில் அவன் நகர்ந்து சென்ற வேகம் ஏற்படுத்திய பாதிப்பு காலத்தை முன்னோக்கி நகர்த்த கூடியது. சிலாின் படைப்புகள்…

சந்தேகத்துக்கு மருந்தில்லை (எனக்குப் பிடித்த கதைகள்- 37 -லா.ச.ராமாமிருதத்தின் ‘ஸர்ப்பம் ‘)

பாவண்ணன் ஊரிலிருந்து வந்திருந்த பெண் நண்பரொருவர் மாலை நடையின்போது 'சந்தேகம் என்றால் என்ன ? ' என்று ஒரு கேள்வியைக் கேட்டார். 'தெரியாத ஒன்றைத்தான் சந்தேகம் என்று சொல்கிறோம் ' என்று சொன்னேன். நான்…

கதைகள்

நாட்டு நாய்களும் நகரத்து நாய்களும்

சைதன்யா ஆத்து நிறையத் தண்ணி ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கணும் ? இதுல மேற்கத்திய நாய் நம்மூர் நாய்ன்னெல்லாம் ஒண்ணில்லப்போவ். குரைத்தலிலும் மேற்கத்திய குரைப்பு, நம்மூர்க் குரைப்புன்னெல்லாம் வர்க்க வித்தியாசம் வந்தாச்சி. இதுல இன்னொரு…

கவிதா:

கே ஆர் விஜய் மீண்டும் கவிதாவை சந்திக்கப் போகிறோம் என்று நினைக்கும்போதே உடல் முழுவதும் ஏதோ ஒரு சிலிர்ப்பு பரவியது.சின்ன பய அலை ஒன்று நெஞ்சிலிருந்து ஆரம்பித்து வயிற்றின் அடிப்பகுதி வரை சென்று மீண்டும்…

ஞானோபதேசம்

ராமசந்திரன் உஷா டென்ஷன்,டென்ஷன் என்று நாலாபக்கத்தில் இருந்து வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் தவித்துப்போனார் கிருஷ்ணன்.நண்பர் வெங்கடேசனிடம் யோசனை கேட்கலாம் என்று அவர் வீட்டுக்கதவைத்தட்டினார்.அவர் மருமகள் தான் கதவை திறந்தாள். என்னமா விசேஷம் ?…

கவிதைகள்

சா(சோ)தனை

வை.ஈ மணி அன்னை அருகில் அணுகவும் ஆசை பொங்கி அன்புடன் மின்னல் என்று துள்ளிடும் மழலை கூறும் குழவியின் என்னை வெல்ல யாருளர் என்று சொல்லும் நோக்கினில் மின்னும் வெற்றிக் குறியுடன் மிளிரும் அரிய…

புகை

அபுல் கலாம் ஆசாத் நேற்று, தொலைத்துத் தலை முழுகிவிட்டேன். நுரையீரலுக்குள் நெருப்பு வீசிக்கொண்டிருந்த உலைக்களத்தை உடைத்துவிட்டேன். அது என்ன ஆள்காட்டி விரலா அறுத்து எறியத் தயங்க ? விரல்களுக்கிடையில் செருகப்பட்ட வெள்ளை விஷம்தானே, பிடுங்கி…

மத்யமர்(சுஜாதா மன்னிப்பாராக….)

வசீகர் நாகராஜன் காலை உற்சாக விழிப்பு காலாற கடற்கரை உலா அன்னபூர்ணா இரவு உணவு அழகே கழியும் ஓர் ஞாயிறு விடிந்திடும் காலை திங்கள் விரட்டித்துரத்தும் ஆறு நாட்கள் மீளமுடியா சாலை நெரிசல் மீட்சியில்லா…

பிரியங்களுடன்

- வேதா. உன் தீண்டலில் நனைந்து கரைந்துவிட்ட காற்றோ ? நீ தொட்ட நீர்க்குமிழியாய் நான்! சிதறிய நீர்த்துளியும், சிறைபட்ட காற்றும் போல், எதுவும் நிரந்திரமில்லை! அசையாத மேகம், அழகான வானம், அலைந்து திரியும்…

காணிக்கை!

புகாரி, கனடா அன்பே... உன் விழிகளில் விளக்கேற்றி என் இதய அறைக்குள் வெளிச்சமிடு...! சிறு இதழ்களில் பூப்பூத்து என் எண்ணங்களை மணக்க விடு...! தினம் வெட்கப்பட்டு... வெட்கப்பட்டு... என் விழிகளுக்குள் கனவுகளைத் தூவிவிடு...! உன்…

கூலியில்லா வேலைக்காரி

ராஜி மனையில் உள்ளபோது மனதைக் குழப்புவோம், இனையல் குறையாதோ என்றும் சிந்திப்போம்! சீட்டு விளையாட்டில் செலவிடும் கொடுமை.... வீட்டுச் சுமையின் வேலைக்கு நாமடிமை! 'காலையில் எழுந்து, காபி கலந்து, குழந்தையைக் குளிப்பாட்டி, சாலையில் விரையும்…

யாரிந்த தீவிரவாதி ?

வ.ந.கிரிதரன் வானணை தகர்த்த இந்தத் தீவிரவாதி யார் ? நீரைக் கொட்டி, நெருப்பைக் கக்கி நிலத்தை நடுக்கி நீ புரியும் படுகொலைகள் தானெத்தனை ? மறைந்திருந்து வல்லமையுடன் தாக்குவதில் உனக்கு நிகர் நீயேதான். குழந்தைகள்,…

பொதுவுடமை.

சேவியர். 0 எப்போதும் காணக் கிடைக்கிறது கழிப்பறைகளில் கிறுக்கல்கள், நிர்வாண மனதின் அடையாளங்களற்ற வார்த்தைக் குறியீடுகள். முகமூடிகளை முகங்களே திருடிக் கொண்டு, உண்மைகளை ஒப்புவிக்குமிடங்களாய் பக்கச் சுவர்கள். நகர்ப்புறத்துக் கட்டணக் கழிப்பிடங்களில் மட்டுமல்ல, அமெரிக்காவின்…

ரசிக்க பிடித்தன..

மோஹனலட்சுமி வேகமாய் மண்னை முத்தமிட்டு உயிர் துறக்கும் சிறு பனித்துளிகள்.. பூமி பெண்ணிற்கு வெள்ளை ஆடை அநிவித்து மகிழும் முதிர் பனிகள்.. புத்தாடை வேண்டி தன் உடை களைந்து காத்து நிற்கும் இலை இல்லா…

நீச்சல் பயிற்சி

புஷ்பா கிறிஸ்ரி நீருக்குள்ளே ஓர் நிதர்சனம் கால்களாலும், கைகளாலும் நீரை அடித்து, உதைத்து முன்னேறிச் சென்று வாழ்க்கைக் கரையை அடைந்திட செய்யும் புதிய முயற்சி.. அது விடாமுயற்சி.. விவேக முயற்சி.. துயரத்திலே கிடந்து தத்தளித்துக்…