கவர்ச்சி காட்டும் கண்ணகி
புதியமாதவி

மரபுக் கவிதையில்
மறைந்திருந்த கண்ணகியை
புதுக் கவிதையில்- என்
பூமிக்கு இழுத்தேன்
கவிதை அரங்கேறியது
காற்சிலம்பே ஆடையான
கவர்ச்சிப் படத்துடன்
நீதி கேட்டேன்
பத்திரிகை பாண்டியன்
பதறாமல் சொன்னார்
‘ நல்ல கவிதையிது
எல்லோரும் இதைப்படிக்க
இதைவிட்டால் என்னவழி.. ?
***
புதியமாதவி
மும்பைய்- இந்தியா
puthiyamaadhavi@hotmail.com