அமைதிச்சாரல் மரணத்தின் வாசம் நிரம்பிய சிதறிக்கிடக்கும் துளிகளினூடே.. வீதியெங்கும் என் விருட்சங்கள் இழுத்துச்செல்லப்படும்போதும் பரபரத்துப்பதறி பற்றிட நினைக்கும் என் கைகள் வெட்டப்படும்போதும் நானெழுப்பும் கூக்குரல் ஏனோ.. உங்கள் காதுகளை வந்தடைவதில்லை. கருவறையே கல்லறையாவது பெண்களுக்கு…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மெதுவாய் நடப்பது உன் வழக்கம் பல்லாண்டு களாய் உனக்கு மன வெறுப்புண்டு ! அந்த மனச் சுமையில் எப்படி அமைதி…
குமரி எஸ். நீலகண்டன் பசுமையற்ற காங்கிரீட் காடுகளினிடையே விலங்குகள் விலக்கிய வீச்சம் நிறைந்த வீதி நதிகளின் விஷ வாசத்தினூடே நான்கு சக்கர கால்களுடன் காட்டுக் கத்தலில் நகர்ந்து செல்கிற சிங்கங்கள், புலிகள், காட்டு யானைகள்,…
ஹேமா(சுவிஸ்)*********************************** உதறிவிட்ட கைகளில் திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்கிறது ஒற்றை இறகோடு இலையான் ஒன்று தோலைத் துளைக்க மறந்ததோ இல்லை இயலாமையோ இருக்கிறது அசையாமல். குப்பையாய் கூட்டி அள்ளிய சொற்கூட்டம் இலக்கியங்கள் வல்லின மெல்லினங்கள் யாப்பு…
இரவி ஸ்ரீகுமார்! ---- -------------------------------------------------------------------- நீரைப்போல நாமும் இருந்தால் வானும் மண்ணும் ஒன்றாய் தெரியும்! கசடும் கழிவும் அகிலும் மணமும் நீரில் எல்லாம் ஒன்றாய் கலக்கும்! பிரித்து கழித்து ஒதுக்கி என்றில்லாமல் வருவதையெல்லாம் தன்னுள்…
லறீனா அப்துல் ஹக் (இலங்கை)- மௌனத்தின் இடைவெளிகள் நீளும் போதெல்லாம்.... நசிந்து போகின்றது உறவென்று நினைத்துவிட்டாய், நீ. உனக்கான வாழ்தலின் நெருடல்களை நீவுதற்கும் உறுத்தல்கள் எதுவுமின்றி உத்தரவாதப்படுத்துதற்குமாய் - நீ அறுத்துப் பலியிட்டதென்னவோ என்னுடைய…
இலெ.அ. விஜயபாரதி ஏர்பூட்டி காளைகள் உழுத நிலங்களில் இன்று குதிரைத்திறன் கொண்ட இயந்திரக்கொழு குழவை போட்ட குரல்வளைகளை நெரித்துவிட்டு வயல்வரப்பில் பாடும் பண்பலை வானொலி மாட்டுச் சாணத்தில் பிள்ளையார் பிடித்துவிட்டு தொழிற்சாலையின் வயிறுகளில் தயாராகும்…
துரோணா இன்று, மெழுகுவர்த்தியின் கடைசித்துளி தீயின் மேல் விழுந்த மழையின் முதற் தூரலில் நான் உன்னுடைய முகத்தைக் கண்டேன். அது என்னுடைய முகம் இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதே. ஒருவேளை இதுவரை நீயேக்கூட பார்த்திராத…
சின்னப்பயல் எனது எண்ணங்கள் என்னால் வடிவமைக்கப்படுவதில்லை. எனது கருத்தாக்கங்கள் யாராலோ கூறப்பட்டு எனக்குள் ஊறிக்கிடக்கின்றன. எனது சித்தாந்தங்கள் எங்கிருந்தோ எனக்குள் புகுத்தப்பட்டவை. எனது சிந்தனைகள் திட்டமிட்டு,வெகுவாகவே முன் ஒத்திகையுடன் சரிபார்க்கப்பட்டு பிறரால் என்னுள் செலுத்தப்பட்டவை.…
ந.மயூரரூபன் வயிற்றால் ஊர மனமின்றி நெகிழ்ந்து படுத்திருக்கிறது பாம்பு. வீங்கிய வயிற்றுள் செந்நீர் வற்றுமென் அங்கங்கழற்றிய பொறிகளைந்தும் பதனமழியக் கிடக்கிறது. தனிமை நெடுத்துப் புலம்பியழும் புலன்களினோடை மூச்சறியாக் காற்றுவெளியிடை இறங்குகிறது. பறவைகளிறங்காப் புதர்கள் என்…