நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“குமரிப் பெண்ணே ! நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை ! வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது ! நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் ! வேறு வழியில்லை எமக்கு ! ஓடிப் போய் நீ குகைக்குள் ஒளிந்து கொள் !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (ஹெக்டர், நெஞ்சை முறிக்கும் இல்லம்)

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பது தான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங் களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தை களின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரை போல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்களின் துயர்க் கொடுமைகள் ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் முதல் உலகப் போர் வான வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் அரிய கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது) (மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.

7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

(மூன்றாம் அங்கம் – முடிவுக் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : நள்ளிரவு

அரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது. ஒருவரை ஒருவர் வக்கணை அடித்து நக்கல் செய்து வரும் போது வானிலிருந்து திடீரென்று பெரு வெடிப்புகள் அடுத்தடுத்து எழுகின்றன. எல்லோரும் பரபரப்படைந்து ஓடி ஒளிகிறார். முதல் உலகப் போர் விமானத் தாக்குதலின் ஆரம்பக் கட்டத்தோடு நாடகம் முடிகிறது.

++++++++++++++++++++

அங்கம் -3 பாகம் -11

(மூன்றாம் அங்கம் : இறுதிக் காட்சி)

(பெருத்த வெடிச் சத்தம் தூரத்திலிருந்து மீண்டும் மீண்டும் வானில் எழுவது கேட்கிறது. அனைவரும் அதிர்ச்சியும், பரபரப்பும் அடைந்து ஓடுகிறார். திடீரென்று மின்சார விளக்குகள் அணைந்து, மீண்டும் எரிகின்றன.)

மாஜினி: (பரபரப்பாக) இந்த வான வெடிப்புத் தாக்கலில் மிஸ்டர் மாங்கன் எங்காவது வழியில் சிக்கிக் கொண்டாரா ?

ஹெஸியோன்: இல்லை. மிஸ்டர் மாங்கன் தோட்டத்துக் குகையில் ஒளிந்து கொண்டிருக்கிறார். வெடிப்புச் சத்தம் கேட்டதும் வெளியே போகவில்லை.

காப்டன்: என் வெடிமருந்தும் அங்குதான் இருக்கிறது. அது மாங்கனைக் கவர்ந்திருக்க வேண்டும்.

ஹெக்டர்: பாதி வெளிச்சம் தெரியுது. வானத்துக்கு நாம் நெருப்பு வைத்து விட்டோமா ?

மிஸ். எல்லி: (எரிச்சலோடு) ஹெக்டர் ! வீட்டுக்கு நெருப்பு வைப்பது நீதான் !

ஹெஸியோன்: வேண்டாம் ஹெக்டர், எங்கள் இல்லம் இது !

ஹெக்டர்: எனக்குத் தெரியும். ஆனால் இப்போது நேரம் சரியாக இல்லை அது.

காப்டன்: (வெடிப்புச் சத்தத்துக்கு அஞ்சி) தீர்ப்பு நாள் வந்து விட்டது ! வெறும் மன ஊக்கம் மட்டும் உம்மைப் பாதுகாக்காது ! ஆனால் உமது ஆத்மா இன்னும் உயிரோடு இருப்பதை நினைவூட்டும்.

ஹெஸியோன்: பேச்சை நிறுத்துங்கள் ! கேட்டீரா மீண்டும் வெடிச் சத்தத்தை ?

(எல்லாரும் மேல் நோக்கி வானைப் பார்க்கிறார்.)

ஹெக்டர்: (மிஸ். எல்லியை நெருங்கிப் பரிவுடன்) குமரிப் பெண்ணே ! நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை ! வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது ! நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் ! வேறு வழியில்லை எமக்கு ! ஓடிப் போய் நீ குகைக்குள் ஒளிந்து கொள் !

மிஸ். எல்லி: (அஞ்சாமல்) நான் காப்டனை விட்டுவிட்டு எங்கும் போக மாட்டேன்.

மாஜினி: கண்மணி எல்லி ! குகைக்குள் ஒளிந்து கொள்வதில் எந்தவித அவமதிப்பும் இல்லை. ஒரு படை அதிகாரி படை வீரரைப் பாதுகாப்பு இடத்துக்குப் போக உத்தரவு செய்வதில்லையா ? ஹெக்டர் கற்றுக்குட்டி போல் அறிவற்று நடமாடி வருகிறார். மிஸ்டர் மாங்கனும், திருடனும் அறிவோடு குகையில் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவர் இருவரும்தான் இந்த வெடிகளுக்குத் தப்பிப் பிழைக்கப் போகிறார். நீயும் போய் ஒளிந்து கொள் !

மிஸ். எல்லி: (மாஜினியைப் பார்த்து) நானும் கற்றுக்குட்டி போல் நடந்து வருகிறேன். ஆனால் நீங்கள் ஏன் இங்கு பலியாக உமது தலையைக் கொடுக்கிறீர் ?

மாஜினி: ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர் படும் வேதனையைப் பார் !

(அடுத்தோர் பயங்கர வெடிச் சத்தம் வானைப் பிளக்கிறது. அத்தனை பேரும் அலை மோதிக் கொண்டு இங்குமங்கும் ஓடி மறை விடத்தைத் தேடிப் போகிறார். வீட்டுச் சாளரங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறுகின்றன.)

மாஜினி: (அடியில் ஒதுங்கிக் கொண்டு) யாராது வெடியில் காய மடைந்தாரா ?

ஹெக்டர்: வெடி எங்கே தாக்கி யுள்ளது என்றே தெரியவில்லை ?

பணி மாது கின்னஸ்: சில வினாடிகளுக்கு முன் வெடி புதைக்குழி அருகே விழுந்ததைப் பார்த்தேன் ! ஓ கடவுளே ! குகைக்குள் இருந்தவர் அடிபட்டுப் போயிருப்பார். அங்கிருந்த என் பதியும் மிஸ்டர் மாங்கனும் என்ன வானாரோ ? தெரியவில்லை ! (அலறிக் கொண்டு புதைக்குழி நோக்கி ஓடுகிறாள்)

ஹெக்டர்: முதல் கள்வன் பலி ! மரணம் ! ஏன்தான் இந்த இல்லத்தில் திருட வந்தானோ ? பரிதாபம் !

காப்டன்: முப்பது பவுண்டு வெடி மருந்து வீணானது ! போயும் போயும் இந்தத் திருடன் மீதா வெடி விழ வேண்டும் ?

மாஜினி: பாவம் மிஸ்டர் மாங்கன் ! என்ன வாயிற்றோ அவருக்கு ?

ஹெக்டர்: யாரும் நிரந்தரமாய் வாழப் போவதுண்டா ? அடுத்த வெடி விழப் போவது நம் தலைமீது தான் ! எங்கே போய் ஒளிவது ? இந்த இல்லத்தில் எதையும் பாதுகாக்க முடியாது !

(மேலும் மெதுவான ஒரு வெடிப்பு வானில் கேட்கிறது. ஹெஸியோனும், மிஸ் எல்லியும் பரிவோடும், பயத்தோடும் அணைத்துக் கொள்கிறார்)

எரியட்னி: நல்ல காலம் ! வான வெடி நம்மைத் தாண்டிச் செல்கிறது ! இப்போது பயமில்லை ! ரான்டல் நீ தூங்கப் போகலாம் ! புல்லாங் குழலை நாளைக்கு ஊதலாம் நீ உயிரோடி இருந்தால் !

காப்டன்: கடவுள் நம்மைக் காப்பாற்றி விட்டார். திரும்பி வாருங்கள் ! என் கப்பலுக்கு அபாயம் இல்லை. கப்பல் நம்மைக் காப்பாற்றி விட்டது. (நாற்காலியில் ஓய்வாகச் சாய்ந்து கொள்கிறார்)

மிஸ். எல்லி: (வியப்புடன்) அபாயம் அப்பால் போய் விட்டதா ?

ஹெக்டர்: (வெறுப்புடன்) ஆமாம் ! இப்போது அபாயம் இல்லைதான். திடீரென்று வானம் விழித்துக் கொண்டு வெடிமேல் வெடி விட்டு ஊரே மாறிப் போய் விட்டது ! உடைந்த கண்ணாடித் துண்டுகளை நாம் ஒன்று சேர்க்க முடியாது !

மாஜினி: நான் எல்லியிடம் சொன்னது தவறு ! பிழைத்தது நாமெல்லாம் ! ஆனால் மாண்டது மாங்கனும், திருடனும் ! என் கண்மணி எல்லியும் குகையில் தங்கி இருந்தால் இப்போது செத்திருப்பாள் !

ஹெக்டர்: செத்தது ஒரு திருடன் இல்லை ! இரு திருடர்கள் !

எரியட்னி: இல்லை ! இரு பெரும் வாணிபத் தீரர்கள் ! அனுபவ மானிடர் !

மாஜினி: பாவம், இருவரும் இறந்து விட்டார் ! பரிதாபப் பாதிரியார் இல்லமும் வெடியில் இடிந்து பொடியானது ! ஐயோ இடிந்த போன இல்லங்கள் எத்தனை ! எத்தனை !

ஹெஸியோன்: போரால் என்ன கோரமான விளைவுகள் ? மிஸ்டர் மாங்கனைக் கைப்பிடிக்க எத்தனை பேர் இச்சை யுற்றார் ? எல்லாருக்கும் ஏமாற்றம் ! பெருத்த ஏமாற்றம் ! நாமொன்று நினைக்க நடப்ப தொன்று உலகில் !

காப்டன்: (கவலையோடு) கட்டப் பட்டவை இடிக்கப்படும் ! தகர்க்கப் பட்டவை மீண்டும் நிறுவப்படும். புயலடித்துக் கப்பல் பாறையில் மோதினால் கடலில் மூழ்கிப் போய்விடும் ! மீண்டும் அது உயிர் பெற்று எழாது !

(முற்றும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 11, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“வெடியில் நீயும் மரணம் அடைவாய் ரான்டல் ! இங்கிருக்கும் எல்லாரும் மரணம் அடைவர் ! கவலைப் படாதே ! நீ அச்சம் அடையவில்லை என்பதற்கு அடையாளமாக உன் புல்லாங்குழலில் இசை பாடு ! நல்லவனாய் இரு ! எங்கள் முன்பாகப் பாடி இந்த இல்லத்தில் கணப்பு அடுப்புகள் எரிந்து வெப்பம் உண்டாக்கட்டும் !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (எரியட்னி, நெஞ்சை முறிக்கும் இல்லம்)

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பது தான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங் களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தை களின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரை போல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்களின் துயர்க் கொடுமைகள் ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது) (மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.

7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

(மூன்றாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : நள்ளிரவு

அரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது.

++++++++++++++++++++

அங்கம் -3 பாகம் -10

(மூன்றாம் அங்கம்)

(ஒரு பெருத்த வெடிச் சத்தம் வெகு தூரத்திலிருந்து எழுவது கேட்கிறது. அனைவரும் அதிர்ச்சியும், பரபரப்பும் அடைகிறார். திடீரென்று மின்சார விளக்குகள் அணைந்து போகின்றன.)

ஹெக்டர்: என்ன சத்தம் அது ? வானிடிந்து வீழுதா ? அடி வயறு கலங்குது !

காப்டன்: ஆம் என்னமோ நிகழுது ! (தன்னிடம் இருந்த விசிலை ஊதுகிறார்) அபாயம் வருது ! அபாயம் வருது ஆகாயத்தில் ! இதற்கு முன்பு கேளாத வான வெடி ! நகரைத் தகர்ப்போர் வந்து விட்டார் !

ஹெக்டர்: (ஆவேசமாக எழுந்தோடி) யார் விளக்குகளை அணைத்தது ? யாருக்குள்ளது இந்த ஊக்கம் ?

பணிமாது கின்னஸ்: (ஓடிவந்து) நான்தான் செய்தேன் ஐயா ! போலீஸ்காரர் போன் பண்ணினார் விளக்குகளை அணைக்கச் சொல்லி ! அப்படிச் செய்யாதவர் சிறைக்குள் தள்ளப் படுவார் என்றும் எச்சரிக்கை செய்தார். தெருவில் எங்கும் விளக்கொளி இல்லை.

ஹெக்டர்: என்ன தெருவில் எங்கும் விளக்குகள் அணைந்து போய் விட்டனவா ? என்ன நடக்கிறது வானத்திலே ?

பணிமாது கின்னஸ்: பாதிரியார் இல்லம் தகர்ந்து போய் செங்கல் குவியலாய்ப் போய் விட்டது என்று கூறுகிறார் ! நமது இல்லத்தில்தான் இன்றிரவு பாதிரிக்குப் படுக்கையும் உணவும் அளிக்க வேண்டும் !

காப்டன்: கிறித்துவ ஆலயத்தின் மீது பாறாங்கல் விழுந்து தகர்ந்து விட்டதா ? நான் முன்பே கூறினேன்: கடவுளின் பரந்த கடலைத் தேடாது சென்றால் அது இப்படித்தான் தூளாகும் என்று !

பணிமாது கின்னஸ்: (அதிர்ச்சியோடு) ஓடுங்கள் ! ஓடுங்கள் ! ஓடிப் பாதாள அறைகளில் முடங்கிக் கொள்ளுங்கள்.

காப்டன்: கின்னஸ் ! நீயும் போ ! எல்லாரும் ஒளிந்து கொள்வீர் ! மறக்காமல் மரத் தாழ்ப்பளைப் போட்டுக் கொள்வீர் !

பணிமாது கின்னஸ்: ஆனால் பதுங்கிக் கொண்டுள்ள என் கோழைப் பதியின் பக்கத்தில் நீங்கள் நெருங்கிக் கொள்ள வேண்டும் ! நான் மேற் கூரையில் ஏறிப் பார்க்கிறேன் முதலில் ! (விளக்குகள் மீண்டும் எரிகின்றன) அதோ விளக்குகள் வந்து விட்டன. மிஸ்டர் ஹெக்டர் குசபிதான் விசையைத் தட்டி இருக்க வேண்டும்.

திருடன்: (ஓடிவந்து மனைவி கின்னஸைப் பார்த்துத் தவிப்புடன்) எங்குள்ளது அந்தப் பாதாள அறை ? நானும் போகிறேன். தோட்டக் காரன் சொல்கிறான் மணற்குழி அருகே ஒரு புதைக் குகை இருப்பதாக ? உண்மையா காப்டன் ? சொல்லுங்கள் !

பணிமாது கின்னஸ்: (கோபமாக) நேராகத் தோட்டத்தை நோக்கிப் போ ! போய் நீ பாதாளக் குழியிலே விழுந்து உன் கழுத்தை முறித்துக் கொள் !

(அடுத்தோர் பெரிய வெடிப்புச் சத்தம் கேட்கிறது. திருடன் தயங்கிக் கொண்டு நடுங்குகிறான்)

மிஸ். எல்லி: இடிச் சத்தம் இப்போது பக்கத்தில் கேட்கிறது. எனக்குப் பயமாக இருக்கிறது !

காப்டன்: அடுத்த வெடி தாக்கப் போவது நம்மைத்தான் ! (எழுந்து நிற்கிறார்) எல்லாரும் தயாராய் இருப்பீர் ! தீர்ப்பு நாள் வந்து விட்டது நமக்கெல்லாம் !

திருடன்: அட கடவுளே ! தீர்ப்பு நாளா ? உங்களுக்குமா ? நான் ஒருவன்தான் என்று நினைத்தேன் ! தப்பி ஓட வேண்டும் நான் (தோட்டத்தை நோக்கி ஓடுகிறான்)

ஹெஸியோன்: (ஓடி வந்து) எல்லாரும் வெடிச் சத்தத்தைக் கேட்டீரா ? இருமுறை என் காத்தில் விழுந்தது ! யார் தோட்டத்தை நோக்கி ஓடுவது ? (எல்லியைப் பார்த்து) உனக்கு வெடிச் சத்தம் கேட்டதா ? வானத்தில் மறுபடியும் இடி முழக்கம் ! இசைஞானி பீத்தோவன் (Beethoven) இனிய கானமாகக் கேட்டது எனக்கு !

மிஸ் எல்லி: பீத்தோவன் கான இசையா இது ஹெஸியோன் ? (எல்லியும் ஹெஸியோனும் இருவரும் நெருங்கி அணைத்துக் கொள்கிறார்)

மாஜினி: இப்போது மங்கிய விளக்கொளி மிகையாகி வருகிறது.

கின்னஸ்: மிஸ்டர் குசபி வீட்டு விளக்குகள் எல்லாம் எரியத் தட்டி விடுகிறார். பாருங்கள், சாளரத் திரைகளைக் கீழ் இழுத்து விடுகிறார்.

ரான்டல்: (ஒரு கையில் புல்லாங்குழல் ஏந்தி இரவு அங்கியோடு எரியட்னி அருகில் வருகிறான்.) என் ஆத்ம ராணி எரியட்னி ! என்னருமை எரியட்னி ! நீயும் பாதாள அறைக்கு ஓடிப் போய்ப் பதுங்கிக் கொள் ! உனக்கு விபத்து நேர்ந்தால் என்னால் தாங்கிக் கொள்ள இயலாது !

ஹெஸியோன்: (அமைதியாக) பகட்டுச் சகோதரி மீது ரான்டலுக்குள்ள பரிவைப் பார் ! எங்கள் மீது வெடி வீழ்ந்தால் நியாயமாகுமா ? கவர்னர் மனைவி பாதாள அறையில் வேலைக்காரருடன் பதுங்கி இருப்பதா ? அது தவறாகத் தெரிய வில்லையா ரான்டல் ?

ரான்டல்: (இரக்கமுடன் எரியட்னியைப் பார்த்து) கண்மணி ! நீ மரணம் அடைந்தால் நான் என்ன செய்வேன் ? இந்த உலகில் நான் எப்படி வாழ்வேன் ?

எரியட்னி: (அலட்சியமாக) வெடியில் நீயும் மரணம் அடைவாய் ரான்டல் ! இங்கிருக்கும் எல்லாரும் மரணம் அடைவர் ! கவலைப் படாதே ! நீ அச்சம் அடையவில்லை என்பதற்கு அடையாளமாக உன் புல்லாங் குழலில் இசை பாடு ! நல்லவனாய் இரு ! எங்கள் முன்பாகப் பாடி இந்த இல்லத்தில் கணப்பு அடுப்புகள் எரிந்து வெப்பம் உண்டாக் கட்டும் !

காப்டன்: வெளியே வெடிச் சத்தம் கேட்கும் போது வீட்டுக்குள் புல்லாங்குழல் வாசிப்பதா ? ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் வீணை வாசித்தானாம் ! நல்ல வேடிக்கை எரியட்னி !

பணிமாது கின்னஸ்: கணப்பு அடுப்பை வீட்டில் கண்காணிப்பது என் வேலை ! இந்த வேலையில் என்னோடு யாருக்கும் பங்கும் கிடையாது ! போட்டியும் கிடையாது !

ரான்டல்: வெடிச் சத்தம் கேட்டு என் கை கால்கள் நடுங்குகின்றன ! இதழ் துடிக்கிறது ! எப்படி நான் புல்லாங்குழல் வாசிப்பது ? வாயிலிருந்து நாதம் எழுக் கூடத் தயங்குகிறது !

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 5, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

கப்பல் காப்டன் தன் குகை அறையில் சாக்கடைத் தண்ணீரைப் புட்டியில் குடித்துக் கொண்டிருக்கிறான். கப்பல் குழுவினர் வரவேற்பறையில் சூதாடிக் கொண்டிருக்கிறார் ! இப்போது கப்பல் பாறையில் மோதிப் பிளந்து மூழ்கப் போகிறது ! நீ இங்கிலாந்தில் பிறந்த காரணத்தால் அதன் சார்பாகக் கடவுளின் விதிகள் உன்னை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் என்று நீ நினைக்கிறாயா ?

ஜார்ஜ் பெர்னாட் ஷா (காப்டன், நெஞ்சை முறிக்கும் இல்லம்)

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பது தான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரை போல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது) (மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.

7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

(மூன்றாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : நள்ளிரவு

அரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது.

++++++++++++++++++++

அங்கம் -3 பாகம் -9

(மூன்றாம் அங்கம்)

எரியட்னி: மாஜினி ! உம்மை விடவும், மிஸ்டர் மாங்கனை விடவும் சாமர்த்தியமான மனிதர் ஒருவர் மெய்வருந்தி எப்போதும் உழைத்து வருகிறார்.

மாஜினி: அப்படி இருக்கலாம். எதையும் நம்பாதே என்று வளர்க்கப் பட்ட நான், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நியதி மூலம் நம்மைக் கட்டுப்படுத்தும் கடவுளை (Overruling Providence) ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லவா ?

எரியட்னி: என்ன கடவுளா ? நான் சொல்ல வந்தது என் கணவர் ஹேஸ்டிங்ஸைப் பற்றி.

மாஜினி: எரியட்னி என்ன சொல்கிறாய் நீ ஹேஸ்டிங்ஸைப் பற்றி ?

எரியட்னி: என் தந்தைக்கு எதிராய் உள்ள என் கணவர் நல்ல மனிதர் என்று சொல்ல வருகிறேன்.

காப்டன்: ஒவ்வொரு குடிகாரப் படகோட்டியும் (Skipper) கடவுளை நம்புகிறான். ஆனால் கடவுள் படகோட்டிக்குச் செய்யும் பல தொல்லைகளில் ஒன்று, அவரைப் பாறை மீது மோத வைப்பது !

மாஜினி: கடல் பயணங்களில் அப்படி நேர்வது உண்டு. ஆனால் அரசியல் குட்டையில் அப்படி நடப்ப தில்லையே !

காப்டன்: படகோட்டி போகும் போது கடலுக்கு ஒன்றும் ஆவதில்லை. மேலே வானத்துக்கு ஒன்றும் நேர்வதில்லை. கிழக்கில் சூரியன் உதிக்கிறது. மேற்கில் அத்தமிக்கிறது. சந்திரன் மங்கிய சுளைபோல் எழுந்து விளக்கொளி வீசுகிறது. பிறகு மேகம் சூழ்ந்து இருட்டாகிறது. சில வேளை சூறாவளி அடித்து வெளியே எறியப்படும் மீன்கள் சூரிய வெளிச்சத்தில் மின்னி மின்னி பளிச்சிடுகின்றன. அவை யாவும் ஒன்று கூடி வாழ்வதைப் பார்த்தால் நமக்கு விந்தையாக உள்ளது. ஆனால் அவற்றிடையே வருந்தத் தக்க நிகழ்ச்சியும் நேர்கிறது.

மிஸ். எல்லி: என்ன நிகழ்ச்சி அது காப்டன் ?

காப்டன்: (கோபமாக) அதுதான் முன்பே நான் சொன்னேனே குடிகாரப் படகோட்டியின் படகு பாறையில் மோதித் துண்டு துண்டாய்ச் சிதறிப் பயணிகள் அனைவரும் மூழ்கிப் போவார் என்று.

மிஸ். எல்லி: அது சொல்லும் நீதி ? ரம்மைக் (Rum) குடித்துக் கொண்டு படகை ஓட்டாதே என்பது !

காப்டன்: (வெறுப்போடு) அது உண்மை இல்லை சின்னப் பெண்ணே ! ஒரு நாளைக்கு ஒருத்தன் பத்து பீப்பா ரம் குடித்தாலும் அவன் தாறுமாறாய்ப் போவது வரைக் குடிகாரன் ஆக மாட்டான் ! நேராக அவன் படகை ஓட்டிப் போனால் அவன் குடிகாரன் இல்லை. தன் குடிசையில் முடங்கிக் குடித்துக் கொண்டு கடவுளை நம்பி வருபவனைத்தான் குடிகாரப் படகோட்டி என்று கூறுவேன் நான் !

மிஸ். எல்லி: மெச்சுகிறேன் காப்டன் ! இந்த ஒரு மணி நேரமாக நீங்கள் ஒரு சொட்டு மதுவைக் கூடத் தொடவில்லை. பார்த்தீரா மது தேவை யில்லை உங்களுக்கு ! உங்கள் ஆன்மா களைத்துப் போகவில்லை !

காப்டன்: இவை யெல்லாம் வெறும் வரட்டு எதிரொலிதான் !

ஹெக்டர்: நீங்கள் குறிப்பிடும் இந்தக் கப்பலில் நாமெல்லாம் பயணம் செய்கிறோமா ? ஆத்மாவின் சிறை இந்த இங்கிலாந்து ! அங்கே நாமெல்லாம் வசிக்கிறோமா காப்டன் ?

காப்டன்: கப்பல் காப்டன் தன் குகை அறையில் சாக்கடைத் தண்ணீரைப் புட்டியில் குடித்துக் கொண்டிருக்கிறான். கப்பல் குழுவினர் வரவேற்பறையில் சூதாடிக் கொண்டிருக்கிறார் ! இப்போது கப்பல் பாறையில் மோதிப் பிளந்து மூழ்கப் போகிறது ! நீ இங்கிலாந்தில் பிறந்த காரணத்தால் அதன் சார்பாகக் கடவுளின் விதிகள் உன்னை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் என்று நீ நினைக்கிறாயா ?

ஹெக்டர்: நான் அந்த எலிக் கூண்டில் சிக்கி மூழ்கிட விரும்பவில்லை. இன்னும் நீண்ட காலம் நான் வாழ விழைகிறேன். என்ன செய்ய வேண்டும் நான் அதற்கு ?

காப்டன்: என்ன செய்ய வேண்டுமா ? சுளுவாக எதுவும் இருக்கப் போவதில்லை ! ஒரு பிரிட்டிஷ்காரன் போல் வாணிப யுக்தியைக் கற்றுக் கொள் !

ஹெக்டர்: தயவு செய்து சொல்வீரா பிரிட்டிஷ்காரன் புரியும் வாணிபம் என்ன வென்று ?

காப்டன்: வாணிபக் கப்பல் பயணம் (Business Navigation) ! அதைக் கற்றுக் கொண்டு வாழ் அல்லது கற்காது நாசமாய்ப் போ !

மிஸ். எல்லி: போதும் காப்டன் ! மூச்சு விடாமல் பேசுகிறீர் ! சிறிது ஓய்வெடுப்பீர் காப்டன் !

காப்டன்: நான் பூரண ஓய்வெடுக்கும் காலம் நெருங்கி விட்டது.

மாஜினி: காப்டன் ! நீங்கள் சொல்வ தெல்லாம் செய்து விட்டேன் நான் ! ஒன்றும் பயனில்லை !

(ஒரு பெருத்த வெடிச் சத்தம் தூரத்திலிருந்து வருவது கேட்கிறது. அனைவரும் அதிர்ச்சி அடைகிறார். மின்சார விளக்குகள் அணைந்து போகின்றன.)

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 28, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -8

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“ஊர்ச் சமூகக் குழுக்களில் சேர்ந்து பணியாற்றி உள்ளேன். கூட்டங்களில் பேச்சுரை நிகழ்த்தித் தாள்களில் கருத்துக்களை எழுதிப் பரப்பி வந்திருக்கிறேன். அவ்வளவுதான் என்னால் செய்ய முடியும். எங்களிடம் போதுமான காசு, பணம் கிடையாது. சாதாரண மனிதர் நாங்கள். நானொரு புரட்சியை எதிர்பார்த்தேன் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழ வில்லை. முடிவில் நடந்தது என்ன ? குடி, குற்றம், கொந்தளிப்பு, ஏழ்மை தவிர எதுவும் தோன்ற வில்லை. புரட்சி நிகழாது இனிமேல் ! எப்படி நாம் வாழ்ந்து வருகிறோம் என்பது விந்தையாய் உள்ளது !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (மாஜினி, நெஞ்சை முறிக்கும் இல்லம்)

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பது தான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரை போல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது) (மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.

7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

(மூன்றாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : நள்ளிரவு

அரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது.

++++++++++++++++++++

அங்கம் -3 பாகம் -8

(மூன்றாம் அங்கம்)

எரியட்னி: (சிரித்துக் கொண்டு) ஏனென்றால் ரான்டலுக்கு வேலையே இதுதான் ! மாற்றான் மனைவியை நேசித்துத் தன் நெஞ்சை முறித்துக் கொள்வதைத் தவிர வேறு வேலை கிடையாது ! ஹெக்டர் அவனது தோழர் ! அனுதாபப் பட்டு அவனுக்கு ஆதரவு தருகிறார் ! ரான்டலின் அனுதாபிகள் விழிகளில் கண்ணீர் இருந்தால் சிந்துங்கள் ! ஐயோ பாபம் ரான்டல் !

ஹெக்டர்: என் மனைவி ஹெஸியோன் நேசித்து மிஸ்டர் மாங்கன் நெஞ்சை முறித்தால் அவர் ஓலமிடுகிறார். அதுபோல் எரியட்னி நேசிப்பதாய்க் காட்டி ரான்டல் நெஞ்சைப் பிளந்து அவனைக் கூக்குரல் இட வைக்கிறாள். இந்த இல்லத்தில் என் மனைவி ஹெஸியோனும் அவள் சகோதரி எரியட்னியும் நேசிப்போர் நெஞ்சைப் பிளக்கும் நீலிகள் !

காப்டன்: இறுதியில் பார்க்கப் போனால் ஊதாரிப் பயலே (Numskull) இவற்றில் எல்லாம் வெற்றி அடைகிறான் !

எரியட்னி: தந்தையே ! ஊதாரி என்று நீங்கள் தூற்றிய என் கணவனிடம்தான் நான் மீண்டும் போகிறேன், உங்களைப் போன்ற உன்னத மனிதரை விட்டுவிட்டு ! அதுவே பூரண திருப்தி அளிக்கும் எனக்கு. ஆறுதல் தரும். உங்கள் எல்லோரிடமும் பேசிப் பேசிச் சலித்து விட்டேன் நான் !

மாங்கன்: நான் எப்போதும் சாமர்த்திய மனிதன் என்று பீற்றிக் கொள்வதில்லை !

எரியட்னி: ஓ உம்மை மறந்து விட்டேன் மிஸ்டர் மாங்கன் ! நீர் சாமர்த்திய மனிதர் இல்லை ஆயினும் வாணிகத்தில் சாதித்து வெற்றி பெற்றவர்.

மாங்கன்: வாணிப வெற்றியாளன் என்னும் மதிப்பீடு வேண்டாம் எனக்கு ! பிறரைப் போல் எனக்கும் கற்பனா சக்தி உள்ளது. முன்யூகம் செய்யும் திறமையும் உள்ளது.

ஹெஸியோன்: மிஸ்டர் மாங்கன் ! உம்மை யாரென்று ஊகிக்க முடியாது யாராலும் ! போதும் உம்மை நீரே மதிப்பீடு செய்வது ! உமக்காக என்னை அர்ப்பணிக்க நானிங்கு காத்திருக்கிறேன். உமது உரையாடல் சலிப்பைத் தருகிறது எனக்கு ! வாருங்கள் வெளியே போகலாம் இருவரும். இந்த மௌன இரவின் விண்மீன்கள் முன்பு நீ எனக்குக் கவிதைகளைப் பொழிந்து தள்ளுங்கள் ! நான் கேட்டு மகிழ்கிறேன். (மாங்கனை இழுத்துக் கொண்டு போகிறாள்)

மாங்கன்: (வருத்தமோடு) என்னைக் கேலி செய்தது போதாதா ? சரி போகலாம் !

(ஹெஸியோன், மாங்கன் இருவரும் வெளியே போகிறார்)

ஹெக்டர்: இந்த மோக மாந்தர் இரவு எப்படி விடியும் ?

மாஜினி: அது ஒரு தொடர் கதை ! முடிவில்லை அதற்கு !

மிஸ் எல்லி: அது தொடர்ந்து போய்க் கொண்டே இருக்காது ! எப்போதும் நான் ஒன்றை எதிர்பார்க்கிறேன். அது என்ன வென்று தெரிய வில்லை. ஆனால் வாழ்வுக்கு என்றாவது ஒருநாள் முற்றுப் புள்ளி உண்டு !

எரியட்னி: உன்னைப் போன்ற இளவயது நங்கைக்கு முற்றுப் புள்ளி ஒரு கைக் குழந்தை தெரியுமா ?

ஹெக்டர்: தொல்லை தீர்ந்ததது ! எனக்கும் அந்த ஆசைதான் ! ஆனால் இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்ள நான் எதுவும் செய்ய இயலாது.

எரியட்னி: நீவீர் தத்தெடுத்துக் கொள்ளலாம் ஹெக்டர் !

ஹெக்டர்: எனக்குப் பிள்ளைகள் உள்ளன. அந்தத் தொல்லைகள் எல்லாம் முடிந்து விட்டன எனக்கு ! இங்கு அமர்ந்து நாமெல்லாம் மிஸ்டர் மாங்கன் செய்யும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் தர்க்க மிடுகிறோம். சமூகத்தில் ஆற்றல் மிக்க கோமான் மாங்கனும் அவரது பரிவாரக் கூட்டாளிகளும் கூடி நாட்டை நாசமாக்கும் கோட்டித் தனத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். இளமையில் முறையாக வளர்க்கப் படாத கயவர் கைவசமுள்ள ஒரு பீரங்கியை வைத்து பூகம்பம் உண்டாக்குவது போல் பைத்திய மாந்தர் பலர் செய்யும் சமூகப் பேரழிவுகள் அவை எல்லாம் !

மாஜினி: அது உண்மைதான். நான் வாலிபனாய் இருந்த போது அப்படிப் பீரங்கியை வைத்தடிக்க நினைத்தவன்தான் நானும் !

ஹெக்டர்: அப்படி நீவீர் நினைத்தது உண்டா ? அல்லது அப்படி நீவீர் செய்தது உண்டா ? நாட்டுக்கு ஏதாவது சமூகப் பணிகளைச் செய்துள்ளீரா ?

மாஜினி: ஆம் செய்திருக்கிறேன். ஊர்ச் சமூகக் குழுக்களில் சேர்ந்து பணியாற்றி உள்ளேன். கூட்டங்களில் பேச்சுரை நிகழ்த்தித் தாள்களில் கருத்துக்களை எழுதிப் பரப்பி வந்திருக்கிறேன். அவ்வளவு தான் என்னால் செய்ய முடியும். எங்களிடம் போதுமான காசு, பணம் கிடையாது. சாதாரண மனிதர் நாங்கள். நானொரு புரட்சியை எதிர்பார்த்தேன் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழ வில்லை. முடிவில் நடந்தது என்ன ? குடி, குற்றம், கொந்தளிப்பு, ஏழ்மை தவிர எதுவும் தோன்ற வில்லை. புரட்சி நிகழாது இனிமேல் ! எப்படி நாம் வாழ்ந்து வருகிறோம் என்பது விந்தையாய் உள்ளது !

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 21, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -7

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

எனது பரிவான மீட்சிக்கு இந்த இல்லத்தில் வரவேற்பில்லை ! தந்தை என்னைத் தெரியாதது போல் நடந்து கொண்டார் ! இந்த இல்லத்தில் நான் மறக்கப் பட்டேன் ! வெறுக்கப் பட்டேன் ! ஒதுக்கப் பட்டேன் !

ஜார்ஜ் பெர்னாட் ஷா (எரியட்னி, நெஞ்சை முறிக்கும் இல்லம்)

ஆடவர் நெஞ்சைப் பிளப்பவள் இந்த இல்லத்தைச் சேர்ந்த எரியட்னி ! திருமணம் ஆனதும் கணவனோடு ஓடிப் போய்த் தந்தையின் நெஞ்சைப் பிளந்தாள் ! பல்லாண்டுக்குப் பிறகு இப்போது மீண்டும் இந்த வீட்டில் தடம் வைத்து தந்தையின் நெஞ்சை மேலும் முறித்தாள் ! மீசை மேல் ஆசை காட்டி என் நெஞ்சைப் பிளந்தாள் ! ரான்டல் நெஞ்சைப் பிளந்தவளும் இந்த நீலிதான் ! பாவம், புல்லாங்குழல் ஊதிக் கொண்டு மனப் புண்ணை ஆற்றிக் கொள்கிறான் ரான்டல் ! பரிதாபப் படுகிறேன் நான் அவனுக்கு !

ஜார்ஜ் பெர்னாட் ஷா (ஹெக்டர், நெஞ்சை முறிக்கும் இல்லம்)

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பது தான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப் புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரை போல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சி யாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது) (மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.

7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

(மூன்றாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : நள்ளிரவு

அரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது.

++++++++++++++++++++

அங்கம் -3 பாகம் -7

(மூன்றாம் அங்கம்)

ஹெக்டர்: உமது வீட்டுக்கு முறிந்த இல்லம் என்று பெயரிடுவதை நீர் ஏற்றுக் கொள்வீரா காப்டன் ?

காப்டன்: (கோபமாக) இது என் இல்லம் இல்லை ! எனது நாய்க் கொட்டம் (Kennel) !

ஹெக்டர்: இந்த வீட்டில் வெகு நாட்களாய்த் நாங்கள் தங்கி வருகிறோம் ! ஆனால் இங்கே நாங்கள் வசிக்க வில்லை. மாறாக இதைப் பிசாசு வீடாக ஆக்கி வந்திருக்கிறோம்.

எரியட்னி: (வேதனையோடு) நான் இந்த வீட்டை விட்டுச் சென்று உலகம் சுற்றும் போது நீங்கள் எல்லாம் எப்படி வாழ்ந்தீர் என்று நினைப்பதே பயங்கரமாக இருக்கிறது. இளமையிலேயே நான் இந்த இல்லத்தை விட்டு வெளியேறி விட்டேன். ஆனால் இப்போது என்னைக் கவர்ந்து இழுத்து வந்து விட்டது இந்த வீடு. ஒரு சமயம்,எனது நெஞ்சையும் பிளக்க முனைந்தது இந்த வீடு. ஆனால் முடியவில்லை. நானிந்த வீட்டை ஒதுக்கி வெகுதூரம் சென்றேன். இப்போது நான் திரும்பி வந்தது தவறு. மீண்டும் நான் தந்தையைப் பார்க்க நினைத்தேன் ! சகோதரி ஹெஸியோனைக் காண விரும்பினேன். அவர்கள் இருவரும் என்னை மறைமுகமாக அழைப்பதாய் உணர்ந்தேன்.

மாஜினி: எத்தனைக் கனிவான மனித நேயம் உனக்கு எரியட்னி ! பாராட்டுகிறேன் உன்னை !

எரியட்னி: அப்படித்தான் நானும் உணர்ந்தேன் மாஜினி ! ஆனால் எனது பரிவான மீட்சிக்கு இந்த இல்லத்தில் வரவேற்பில்லை ! தந்தை என்னைத் தெரியாதது போல் நடந்து கொண்டார் ! இந்த இல்லத்தில் நான் மறக்கப் பட்டேன் ! வெறுக்கப் பட்டேன் ! ஒதுக்கப் பட்டேன் !

காப்டன்: இந்த இல்லத்தை விட்டு நீ செல்லக் காரணம் நீ என்னை விரும்பாதது ! உன் திருமணத்தை நான் ஏற்றுக் கொள்ளாதது ! அதில் உன் தந்தைக்கு மனமுடைய வில்லையா ? நீ வெறுப்படைந்து போய் எம்மை விட்டு ஒதுங்கிக் கொண்டாய் ! உன்னை நாங்கள் மறந்து போனது உண்மை ! இப்போது ஏன் திரும்பி வந்து நீ எங்கள் பழைய காயத்தைத் தோண்டி உளவுகிறாய் ? அதற்கு என்ன உரிமை உள்ளது உனக்கு ?

ஹெஸியோன்: நானின்று முதலில் உன்னைக் கண்ட போது நீ முற்றிலும் ஓர் அந்நிய மாதாகக் காணப் பட்டாய் ! ஆனால் இப்போது நீ விலகிச் சென்றது போல் தெரிய வில்லை எனக்கு.

எரியட்னி: மிக்க நன்றி ஹெஸியோன் ! என் மனக் கொதிப்பு தெளிந்தது. இந்த வீடு நெஞ்சை முறிக்கும் இல்லமாக இருக்கலாம் உனக்கு, மிஸ். எல்லிக்கு, ஈதோ இந்த நிலை கெட்ட கோமானுக்கு ! ஆனால் எனக்குத் தோன்றுவது இப்படி: இது ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லாத வீடு ! அழுக்கடைந்த வீடு ! குதிரைகள் இல்லாத கொட்டம் !

ஹெக்டர்: இந்த இல்லத்தில் குடியிருப்பவர் யார் யார் ?

மிஸ். எல்லி: தெரிந்து கொள் ! சொல்கிறேன், கிறுக்குக் கிழமான ஒரு கடற்படைக் காப்டனும், அவரைப் போற்றும் ஓரிளம் பாடகியும் வசிக்கும் இல்லமிது !

ஹெஸியோன்: (கோபமாக) கன்னம் தொங்கிய பழுத்த கிழத்தை – ஒரு விடுதலைப் பிறவி வீரரை வீணாய் மயக்கிப் பிடித்த நெறிகெட்ட ஓரிளம் பெண் வாழும் இல்லம் என்று நான் சொல்கிறேன் !

மாஜினி: அப்படியா கதை ? என்னால் நம்ப முடியவில்லையே !

மாங்கன்: பிரிட்டீஷ் அரசாங்கத்தின் முத்திரை பெற்ற ராயல் உறுப்பினர் ஒருவர் உன் முன் நிற்பதை மறக்காதே ஹெஸியோன் !

எரியட்னி: அடடா ! என்ன தற்புகழ்ச்சி மிஸ்டர் மாங்கன் ! நீங்கள் ஒரு கவர்ச்சி மனிதர் ! உங்கள் குறிக்கோள், முதல் வேலை என் சகோதரி ஹெஸியோனைத் திருமணம் செய்து கொள்வது ! இல்லையா மிஸ்டர் மாங்கன் !

மாங்கன்: உன் சகோதரிதான் என் பின்னால் வருகிறாள் ! நான் அவளைத் தேடிப் போக வில்லை ! அதைத் தெரிந்து கொள் முதலில் !

ஹெக்டர்: மாங்கன் – ஹெஸியோன் இருவரும் இதயம் உடைந்து போன மாந்தர் ! மன நோயாளிகள் !

மாஜினி: நிச்சயமாக இல்லை ! இருவரும் நமது பிரிட்டிஷ் கலாச்சாரத்தில் ஊறிப் போன ஒப்பிலா உதாரண மாதிரிகள் என்று சொல்வேன். நாகரீகமும், நளினமும் கலந்த முற்போக்காளார் ! விருப்பு வெறுப்பில்லாதவர் ! வெளிப்படையாகப் பேசுபவர் ! குடியரசைப் போற்றும் மாந்தர் ! விடுதலைச் சிந்தனையாளர் ! நற்குணம் நிரம்பப் பெற்றவர் !

ஹெஸியோன்: எமக்குப் பெருமை தரும் உமது பாராட்டுகள் ! நன்றி மாஜினி !

மாஜினி: நான் முகத்துதி பாடவில்லை ஹெஸியோன் ! உண்மையைத்தான் சொன்னேன் ! நான் சில சமயம் கனவு காண்கிறேன் ஒரு நவயுக நாகரீகக் குடும்பதார் இடையே நான் வாழ்ந்து வருவதாக !

எரியட்னி: மாஜினி அவர்களே ! உண்மை இதுதான் ! நீங்கள் இப்போது நவயுக நாகரீகச் சமூகத்ததோடு உலவ வில்லை ! என் இல்லத்தில் நீங்கள் வசித்தால் தடுமாற்றம் அடைந்து திக்குமுக்காடி போவீர் !

மாஜினி: எரியட்னி ! உமது இல்லத்தில் தடம் வைக்காது நான் தப்பித்துக் கொள்வேன்.

எரியட்னி: நீங்கள் நினைப்பது தவறு மாஜினி ! நீங்கள் என் இல்லத்துக்கு வந்தால் நான் எல்லா வசதிகளும் செய்து வைப்பேன். கவலை வேண்டாம் ! வாழ்க்கை தன்னை எளிமைப் படுத்தாது அதில் நீவீர் சிக்கலை உண்டாக்கி வருகிறீர். இது என்ன வேடிக்கை !

மிஸ். எல்லி: உனது இல்லமும் நெஞ்சை முறிக்கும் ஓர் இல்லம்தானே எரியட்னி ! இல்லா விட்டால் நீ ஏன் கணவனை விட்டு இப்போது இங்கே வருகிறாய் ?

ஹெக்டர்: (கோபமாக) ஆடவர் நெஞ்சைப் பிளப்பவள் இந்த இல்லத்தைச் சேர்ந்த எரியட்னி ! திருமணம் ஆனதும் கணவனோடு ஓடிப் போய்த் தந்தையின் நெஞ்சைப் பிளந்தாள் ! பல்லாண்டுக்குப் பிறகு இப்போது மீண்டும் இந்த வீட்டில் தடம் வைத்து தந்தையின் நெஞ்சை மேலும் முறித்தாள் ! மீசை மேல் ஆசை காட்டி என் நெஞ்சைப் பிளந்தாள் ! ரான்டல் நெஞ்சைப் பிளந்தவளும் இந்த நீலிதான் ! பாவம், புல்லாங்குழல் ஊதிக் கொண்டு மனப் புண்ணை ஆற்றிக் கொள்கிறான் ரான்டல் ! பரிதாபப் படுகிறேன் நான் அவனுக்கு !

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 14, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -6

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

இது ஓர் விந்தையான வீடு ! மர்மான மகிழ்ச்சி வீடு இது ! இந்த வீட்டுக்கு ஓர் அத்திவாரம் கிடையாது. இந்த இழிந்த இல்லத்தை நான் நெஞ்சை முறிக்கும் இல்லம் என்று சொல்வேன் ! இதன் நிழலில் வருபவர் எவரும் நெஞ்சு நிமிர்ந்து நிற்க முடியாது. அவமானப் பட்டுக் கூன் விழுந்து போவார். மனதைத் திடப்படுத்திக் கொள்வீர் மிஸ்டர் மாங்கன் !

ஜார்ஜ் பெர்னாட் ஷா (மிஸ். எல்லி நெஞ்சை முறிக்கும் இல்லம்)

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பது தான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரை போல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது) (மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.

7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

(மூன்றாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : நள்ளிரவு

அரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது.

+++++++++++++++++++++

அங்கம் -3 பாகம் -6

(மூன்றாம் அங்கம்)

மிஸ். எல்லி: (புன்முறுவலோடு) வாழ்க்கையே நமக்கு ஓர் ஆசிர்வாதம்தான் ! அதை நான் விரும்புகிறேன். இப்போதுதான் எனக்குத் தெரியுது மெய்யான காரணம், நான் ஏன் மிஸ்டர் மாங்கனை மணஞ் செய்யவில்லை என்று. அந்தச் செல்வத் திருமணம் எனக்கு ஆசீர்வாதம் அளிக்காது. உடைந்து போன என் இதயத்துக்கு ஓர் ஆசீர்வாதம் காத்து இருந்திருக்கிறது. ஹெஸியோன் ! உன் உள்ளழகில் ஓர் ஆசீர்வாதம் உள்ளது. இன்று நீ ஏன் என்னை இங்கு வரவழைத்தாய் என்று இப்போது காரணம் புரியது. எல்லாம் ஓர் அரிய ஆசீர்வாதம் பெறத்தான் ! ஹெஸியோன் ! உன் தந்தையின் உன்னத ஆன்மாவுக்கு ஓர் ஆசீர்வாதம் உள்ளது. மார்கஸ் கூறும் பொய்களில் ஓர் ஆசீர்வாதம் உள்ளது. ஆனால் கோமான் மாங்கனின் செல்வச் சேமிப்பில் எந்த ஓர் ஆசீர்வாதமும் இல்லை.

மாங்கன்: மிஸ். எல்லி சொல்வது எதுவும் எனக்குப் புரிய வில்லை ! ஆசீர்வாதம் என்றால் என்ன ? காப்டனுக்கு இளங் குமரி எல்லி ஓர் வெகுமதி ! ஏமாறப் போகும் எல்லிக்கு மூப்படைந்த காப்டன் ஒரு கானல் நீர்த் தோற்றம் !

மிஸ். எல்லி: எனக்குப் புரிய வில்லை மிஸ்டர் மாங்கன் பேசுவது ! நான் வெகுமதியும் இல்லை ! காப்டன் கானல் நீருமில்லை !

மாங்கன்: நமது திருமணத்தை ஓர் ஆசீர்வாதமில்லை என்று நீ எப்படிச் சொல்வாய் எல்லி ! நான் தயாராக இருந்தேன் ஒரு பாதிரியாரை அழைத்து நமது திருமணத்தை நடத்தி வைக்க ! நீதான் கள்ளத்தனமாக நழுவி விட்டாய் ! நம்பிய என்னை ஏமாற்றி விட்டாய் !

ஹெஸியோன்: மிஸ்டர் மாங்கன் மூடத்தனமாய்ப் பேசுகிறார் இல்லையா எல்லி ?

ஹெக்டர்: மிஸ்டர் மாங்கனை இகழாதே ஹெஸியோன் ! நாமெல்லாம் மூடர்தான் ! பலியானது மிஸ்டர் மாங்கன் ! பரிதாபப் பட வேண்டும் நாம் அவருக்கு ! பசப்பி மிஸ். எல்லி ! மிஸ்டர் மாங்கன் மேல் ஆசை காட்டி மோசம் செய்து அவர் முகத்தில் அறைந்தவள் எல்லிதான் !

(அப்போது எல்லியின் தந்தை மாஜினி டன் வருகிறார்)

ஹெஸியோன்: (மாஜினியைப் பார்த்து) ஈதோ வருகிறார், என்னை நிராகரித்த ஒரே ஒரு மனிதர் ! என்ன மிஸ்டர் மாஜினி ! ஏன் ஓடி வருகிறீர் ? வீடு தீப்பற்றி எரிகிறதா ?

மாஜினி: (வந்து கொண்டே) அப்படி இல்லை ! என்னால் தூங்க முடிய வில்லை ! ஜன்னல் திறந்துள்ளதால் நீங்கள் பேசும் சுவையான வசனங்கள் காதில் விழுந்து என் உறக்கத்தைக் கலைத்தன ! நானும் கலந்து கொள்கிறேன் இந்த இனிய இரவில் ! எதைப் பற்றி இங்கு தர்க்கம் நடக்குது ?

ஹெஸியோன்: மாஜினி ! விந்தையான செயல்கள் ! வேடிக்கை மனிதர்கள் ! வானுலகத் திருமணம் ! கேட்டீரா கதையை ? செல்வந்தர் மாங்கன் கையில் ஒரு பவுண் நாணயம் கூடக் கிடையாது !

ஹெக்டர்: மாங்கன் கோமாளித்தனமாக தன் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு இங்கு அவரது அம்மணக் காட்சியை அரங்கேற்ற நின்றார் ! நல்ல வேளை ! நாங்கள் யாவரும் உடனே தடுத்து அந்த அலங்கோலக் காட்சியை நிறுத்தினோம் !

மாஜினி: அது சரி ! வானுலகத் திருமணம் இங்கே எப்படி நடந்தது ? யாருக்கு நடந்தது ?

எரியட்னி: மாஜினி ! உமது அருமை மகள் எல்லிக்குத் திருமணம் நடந்தேறி விட்டது தெரியமா ? மணமக்களுக்கு வாழ்த்துக் கூற வாருங்கள் மாஜினி ! கால தாமம் ஆகி விடவில்லை ! சிறிது நேரத்துக்கு முன்புதான் நடந்திருக்கிறது ! எவருக்கும் தெரியாத இந்தத் திருமணம் வானுலகில் நடந்திருக்கிறது !

மாஜினி: எல்லிக்குத் திருமணம் நடந்தேறி விட்டதா ? வேடிக்கையாய் இருக்குதே ! (எல்லியைப் பார்த்து) யாரை மணந்திருக்கிறாய் எல்லி ? செல்வந்தர் மாங்கனைத் தானே ?

ஹெக்டர்: இல்லை ! மேலும் மாங்கன் செல்வச் சீமான் இல்லை என்றும் அறிந்தோம் !

மாங்கன்: ஹெக்டர் ! எனக்கு ஒன்றுமில்லை என்று சொல்ல வராதீர் ! நான் விளக்கிச் சொல்லவா ?

ஹெக்டர்: நீர் எமக்கு விளக்கம் தர வேண்டாம். சுமார் இரண்டாயிரம் பவுண்டு சேமிப்புச் சீட்டுகள் உம்மிடம் இருக்கிறது. 50,000 பங்குச் சீட்டுகள் வேறு உள்ளன ! ஒரு டஜன் பங்கு மதிப்பு பத்துப் பென்சுக்கு மேல் விலை பெறாது !

மாஜினி: அப்படி மோசமான வணிகர் அல்லர் மிஸ்டர் மாங்கன் ! அவர் நேர்மையான வணிகர்தான். அவர் சொல்வதை நாம் நம்பலாம்.

ஹெக்டர்: அவர் மாபெரும் மோசடி வணிகர் என்பது எனக்குத் தோன்றுது ! நேர்மையான மனிதராகத் தெரியவில்லை எனக்கு !

மாங்கன்: அப்படி நினைப்பது உமது குறைபாடு ! நேர்மையான மனிதருக்குத்தான் என்னைப் போன்ற நேர்மையான வணிகர் தென்படுவார்.

எரியட்னி: உம்மைப் புகழ்வதற்காகச் சொல்லவில்லை மிஸ்டர் மாங்கன். நீவீர் ஏழையும் அல்லர், மாபெரும் செல்வந்தரும் அல்லர் ! நேர்மையான மனிதரும் அல்லர். மோசடி மனிதரும் அல்லர் ! இது என்னுடைய யூகிப்பு !

மாங்கன்: ஈதோ மறுபடியும் அதே குற்றச் சாட்டைச் சொல்கிறாய். என்னை ஒரு மூடனாக்க முற்படுகிறாய். நான் நல்லவன் ! வல்லவன் ! உன் கண்களுக்குத்தான் பொல்லாதவனாய்த் தோன்றுகிறேன்.

மிஸ். எல்லி: (அழுத்தமாக) மிஸ்டர் மாங்கன் ! இது ஓர் விந்தை யான வீடு ! மர்மான மகிழ்ச்சி வீடு இது ! இந்த வீட்டுக்கு ஓர் அத்திவாரம் கிடையாது. இந்த இழிந்த இல்லத்தை நான் நெஞ்சை முறிக்கும் இல்லம் என்று சொல்வேன் ! இதன் நிழலில் வருபவர் எவரும் நெஞ்சு நிமிர்ந்து நிற்க முடியாது. அவமானப் பட்டுக் கூன் விழுந்து போவார். மனதைத் திடப்படுத்திக் கொள்வீர் மிஸ்டர் மாங்கன் !

ஹெஸியோன்: நிறுத்து எல்லி ! போதும் உன் முத்திரை ! நீ நிறுத்த விட்டால் நான் “ஓ” வென்று ஓநாய் போல் ஓலம் இடுவேன் ! எங்கள் இல்லத்தைப் பற்றி நீ இகழ்ந்து பேசாதே !

மாங்கன்: (முகத்தை மூடி விம்மி அழுகிறார்)

மிஸ். எல்லி: மிஸ்டர் மாங்கன் விம்முவதைக் காண நான் ஆசைப் படுகிறேன்.

காப்டன்: அமைதி ! அமைதி ! (மாங்கன் அழுவதை நிறுத்துகிறார்) மாங்கன் விம்மும் போது சும்மா இருங்கள் ! அவரது நெஞ்சம் முறிந்து போவது அமைதியாக நிகழட்டும் ! ஆரவாரம் வேண்டாம் !

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 7, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

ஆணும் பெண்ணும் கண்ணாடிக் கூடாரங்களில் வளர்க்கப் பட வேண்டிய மென்மை யான செடிகள். நமது குடும்ப வழக்கம் எல்லாத் திசையிலும் கல்லை விட்டெறிந்து கூடாரத்தில் ஓட்டை யிட்டுக் குளிர்ந்த காற்றை உள்ளே அனுமதிப்பது ! அது ஏற்றுக் கொள்ள முடியாதக் கொடூரச் செயல் ! அபாயகர மானது ! குளிரடித்துச் சலிபிடிக்கும் உமக்குக் கோட்டை கழட்டி விட்டால் ! ஆகவே உமது அம்மண நாடகத்தை நிறுத்துவீர் சிறுவன் போல் அடம் பிடிக்காது !

ஜார்ஜ் பெர்னாட் ஷா (நெஞ்சை முறிக்கும் இல்லம்)

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பது தான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரை போல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.

7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

(மூன்றாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : நள்ளிரவு

அரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது.

+++++++++++++++++++++

அங்கம் -3 பாகம் -5

(மூன்றாம் அங்கம்)

எரியட்னி: அனுதாபப் படுகிறேன் உமக்கு மிஸ்டர் மாங்கன் ! இவற்றில் எனக்கு அனுபவம் உள்ளது. ஆணும் பெண்ணும் கண்ணாடிக் கூடாரங்களில் வளர்க்கப் பட வேண்டிய மென்மையான செடிகள். நமது குடும்ப வழக்கம் எல்லாத் திசையிலும் கல்லை விட்டெறிந்து கூடாரத்தில் ஓட்டை யிட்டுக் குளிர்ந்த காற்றை உள்ளே அனுமதிப்பது ! அது ஏற்றுக் கொள்ள முடியாதக் கொடூரச் செயல் ! அபாயகர மானது ! குளிரடித்துச் சலிபிடிக்கும் உமக்குக் கோட்டை கழட்டி விட்டால் ! ஆகவே உமது அம்மண நாடகத்தை நிறுத்துவீர் சிறுவன் போல் அடம் பிடிக்காது !

மாங்கன்: நான் நினைப்பதை நான் செய்வேன் ! நான் என்ன குழந்தையா அல்லது முதிர்ச்சியில்லா மனிதனா ? இந்த அன்னை ஆதிக்கத்தை நான் தாங்கிக் கொள்ள முடியாது ! என்னை விட்டு விலகிச் செல்லுங்கள். நான் திரும்பிச் செல்கிறேன் நகரத்துக்கு ! அங்குதான் எனக்கு மதிப்பு அதிகம் ! (போகிறார்)

ஹெஸியோன்: போய் வாருங்கள் மிஸ்டர் மாங்கன் ! ஆனால் எம்மைப் பற்றி நினைத்துக் கொள்ளுங்கள் இடையிடையே ! மிஸ். எல்லியின் இளமையை நினைத்துப் பார்ப்பீர் ! ஹெக்டரின் அறிவுரையை மறக்காதீர் ! காப்டனின் எச்சரிக்கையை மனதில் வைப்பீர் ! எங்கள் மேற்பார்வை தேவை உமக்கு !

மிஸ். எல்லி: அதே சமயம் ஹெஸியோனின் காந்தக் கண்களையும் கருங் கூந்தலையும் மறக்காதீர் மிஸ்டர் மாங்கன் !

காப்டன்: இந்த வீட்டு இனிய தோட்டத்தை நினைத்துக் கொள் ! இங்கே உமது உயர்ந்த உரையாற்றலை ஒரு நாய்க் குலைப்பாக யாரும் ஒதுக்க வில்லை !

ஹெக்டர்: மிஸ்டர் மாங்கன் ! எரியட்னியின் எழிலை மறந்துவிடப் போகிறீரா ? அறிவோடு பேசுபவள் அந்த மாது ! நளினமுடைய நாகரீக மாது அவள் !

மாங்கன்: (சற்று விட்டுக் கொடுத்து) அப்படியானால் சரி ! நான் போக வில்லை நகருக்கு ! இங்கேயே இன்று தங்குகிறேன் ! உங்கள் அறிவுரைக்கு அடிபணிகிறேன் ! ஆனால் எனக்கு நீங்கள் தொல்லை தரக் கூடாது ! இங்கு எனக்கு விடுதலை வேண்டும் ! உமது விருப்பப்படி நான் மிஸ். எல்லியை மணந்து கொள்கிறேன் ! நான் இங்கு எதுவும் செய்யத் தயார், யாரும் என்னைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால் ! உமக்கெல்லாம் இப்போது திருப்திதானே !

மிஸ். எல்லி: இல்லை மிஸ்டர் மாங்கன் ! உம்மை நான் மணக்க விரும்ப வில்லை ! எப்போதும் விரும்பிய தில்லை ! என் ஆத்மா விரும்புவது உம்மை யல்ல ! எனது கவர்ச்சி சக்தியை நான் உம்மிடம் சோதித்துப் பார்த்தேன் ! நான் விரித்த வலையில் நீங்கள் விழுவீரா என்று பகடை ஆடினேன் ! அதில் வெற்றி பெற்றேன் ! உம்மை விட ஆற்றல் மிக்கவள் நான்தான் ! நான் உம்மை எப்போதே நிராகரித்து விட்டேன் !

மாங்கன்: என்ன ? ஆணழகன் என்னை நீ நிராகரிக்கிறாயா ? நானும் பேரழகி உன்னை மண முடிக்கத் தீர்மானிக்க வில்லை தெரியுமா ? நான் என்றும் உன்னை நேசித்ததில்லை உன் அழகில் மயங்கினாலும் !

எரியட்னி: இப்படி விரைவாய்த் தூக்கிப் போடாதே மிஸ். எல்லி ! உன்னைத் தேடி வரும் ஓர் அதிட்டத்தை ஏற்றுக் கொள் ! மிஸ்டர் மாங்கனின் வாணிபம் எப்போதும் நட்டமடையாது ! நொடித்துப் போகாது ! சாகுவரை உனக்குச் சல்லாப வாழ்க்கை ! தொல்லை யற்ற வாழ்க்கை ! மிஸ்டர் மாங்கனின் புகழ்ப் பெயரில் நீ வாழ்நாள் முழுவதும் குளிர் காயலாம் !

மிஸ். எல்லி: (எழுந்து நின்று) நான் இரு கணவரை மணக்க முடியாது எரியட்னி !

ஹெஸியோன், ஹெக்டர், எரியட்னி, மாங்கன்: (முன்பு வந்து ஒன்றாக) என்ன சொல்கிறாய் நீ ? இரு கணவரா மிஸ் எல்லி ?

மிஸ். எல்லி: அரை மணி நேரத்துக்கு முன்புதான் நான் காப்டன் ஷொட்டோவரின் மனைவியாக மாறினேன் ! வெள்ளைக்கார மனைவி ! என் பெயர் இப்போது எல்லி ஷொடோவர் ! எல்லி டன் இல்லை !

ஹெஸியோன்: எல்லி ! அறிவில்லாமல் பேசுகிறாய் ! எங்கே நடந்தது உங்கள் திருமணம் ? எங்களுக்குத் தெரியாமல் இந்த இல்லத்தில் எப்படி நடந்தது ?

மிஸ். எல்லி: வானுலகில் ! அங்குதானே எல்லாத் திருமணங்களும் நிச்சயமாகின்றன !

எரியட்னி: இது உண்மையா தந்தையே ! இது உண்மையா எல்லி ? என்னால் நம்ப முடியவில்லை !

மாங்கன்: உன் அப்பன் என்னை மூப்படைந்தன் என்று கேலி செய்தார் ! இப்போது இடுகாட்டுக்குக் காத்திருக்கும் கிழவர் இளமங்கையின் கரத்தைப் பற்றுகிறார் ! அறிவில்லாதவர் யார் ! காப்டன் அப்பாவிப் பெண்ணைக் கடத்திக் கொண்டு போகிறார் !

ஹெக்டர்: (ஷெல்லியின் கவிதையை நினைந்து)

புல்தரைப் பலி பீடம் அவனுக்குப்
புறத்தே விரிந்து கிடக்குது !
மெல்ல முணுக்கும் காற்று அவனது
மேன்மைப் பாதிரி போல் நடக்குது !

எல்லி: ஆம் ! உண்மைதான் ! எல்லி டன் தன் முறிந்த இதயத்தையும் உறுதியான ஆத்மாவையும் இந்த இயல்பான காப்டனுக்கு அளித்து விட்டாள் ! காப்டன் ஷொடோவரே என் ஆன்மீகக் கணவர் ! எனது இரண்டாவது தந்தை ! (காப்டன் கரத்தை ஆசையாய்ப் பற்றிக் கொள்கிறாள்)

ஹெஸியோன்: வெகு சாமர்த்தியம் குட்டிப் பெண்ணே ! நல்ல வழிகாட்டி எல்லி ! மிஸ்டர் மாங்கன் ! உமது முயற்சி போதாது. அது தோற்றுப் போனது ! எல்லி எதிர்பார்த்ததை உம்மால் அளிக்க முடியவில்லை ! அவள் உமக்குக் கிடைக்க வில்லை. இப்போது என்னைக் கொஞ்சம் ஏறிட்டு நோக்கு.

மாங்கன்: (அழுகையை அடக்கிக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) மிஸ். எல்லி ஏமாற்றி விட்டாள் என்னை ! விளையாட்டுப் பெண் ! (துக்கம் தொண்டையை அடைக்கிறது)

எரியட்னி: போக்கிரிப் பெண் இந்த எல்லி ! ஐயோ பாவம் இந்த மாங்கன் ! அவரது கனவுகளை முறித்தவள் இந்த எல்லி ! எல்லியைப் போன்ற ஒரு வஞ்சகப் பெண்ணை நான் இதுவரைக் கண்டதில்லை.

ஹெஸியோன்: எல்லி வஞ்சகி இல்லை. நிச்சயம் இல்லை சகோதரி !.

மிஸ். எல்லி: எனது வலிமையை இப்போது தெரிந்து கொண்டேன் ஹெஸியோன் !

மாங்கன்: நீ ஒரு பித்தளைச் சிலை மிஸ் எல்லி ! உணர்ச்சி இல்லாத சிலை ! பிறர் மனதைப் புண்படுத்தும் போக்கிரி மங்கை ! நல்ல வேளை நான் உன்னை மணக்க வில்லை !

ஹெஸியோன்: அது கொடூரக் குற்றச் சாட்டு மிஸ்டர் மாங்கன் ! வானுலகில் நிச்சயமான இந்தத் திருமண இரவு எத்தகைய இனிமை அளிக்கிறது ! கண்களை திறந்து பார் ! கன்னிப் பெண் எல்லியும், கவின் மாது எரியட்னியும் எந்தக் கல் மனது ஆடவனையும் கவர்ந்திடுவார் ! நாம் வசிக்கிறோம் ! நாம் நேசிக்கிறோம் ! எந்தக் கவலையு மின்றி இங்கே இனிதாய் வாழ்கிறோம் ! மாதராகிய நாங்கள் இவற்றை எல்லாம் உமக்கு அளித்து வந்தோம். கவலை யுற்று ஏன் இப்படிக் கண்ணீர் வடிக்கிறீர் மிஸ்டர் மாங்கன் ?

காப்டன்: வாழ்க்கையில் வெறும் ஆனந்தம் மட்டும் போதாது ! பாதி உயிருடன் வாழும் போதுதான் நீங்கள் பூரிப்பாக வாழ முடியும் ! நான் இப்போது ஆனந்தமாய் இருக்கிறேன் ஒரு கால் இல்லத்திலும் ஒரு கால் இடுகாட்டிலும் உள்ள போது ! வாலிபத்தில் நான் இருந்த போது இல்லை இந்த இன்பம் ! (எல்லியைக் கனிவாய்ப் பார்க்கிறார்) ஆனால் என் ஆனந்த வாழ்வுக்கு உம்மிடமிருந்து ஆசிர்வாதம் வர வில்லை !

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 31, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“இந்த இல்லத்தில் யாருக்கு நாணம் உள்ளது ? நாம் எல்லோரும் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு அம்மணக் காட்சியில் நின்றால் என்ன ? நான் முதலில் எனது உடுப்புக்களைக் களைகிறேன் ! என்னைப் பின்பற்றுங்கள் ! நாமெல்லாம் ஒழுக்க நெறி தவறி ஏற்கனவே நமது இதயங்கள் அம்மணமாய் ஆகி விட்டன. வெளி உடல் மட்டும் ஏன் ஆடையால் மூடப்பட வேண்டும் ? என்னால் இந்த உடம்போடு ஒட்டி வாழ முடிய வில்லை ! நானதைத் தண்டிக்க வேண்டும் ! நெறி தவறி நடப்பதால் நீங்களும் உமது உடம்பைத் தண்டிக்க வேண்டும். நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். உமது பழிகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்குது என்னுள்ளம் ! ஒவ்வொரு முறையும் உங்களில் ஒருவர் வாயைத் திறக்கும் போது என் கையும் மெய்யும் இப்படிக் கோணிப் போகுது !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (கோமான் மாங்கன், நெஞ்சை முறிக்கும் இல்லம்)

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பது தான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர்.

நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரை போல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.

7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

(மூன்றாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : நள்ளிரவு

அரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது.

+++++++++++++++++++++

அங்கம் -3 பாகம் -4

(மூன்றாம் அங்கம்)

ஹெக்டர்: மிஸ்டர் மாங்கன் ! நீங்கள் யாரைக் காப்பி அடிக்கிறீர் ?

மாங்கன்: பிறரைப் போலின்றித் தனிப்பட்டு நானொரு மேதை போல் தெரிவதே என் சாதனைக்கு ஒரு சான்று அல்லவா ?

ஹெக்டர்: இது பித்தர் பேச்சு ! இது இங்கிலாந்து தேசமா ? அல்லது பித்தர் இல்லமா ?

எரியட்னி: அரசாங்க நிபுணராய் இந்த தேசத்தைப் பாதுகாக்கப் போகிறீரா மிஸ்டர் மாங்கன் ?

மாங்கன்: அந்த வேலை செய்ய என்னைத் தவிர இங்கே வேறு யார் இருக்கிறார் ? உமக்குத் தெரிந்த ரான்டல் காப்பாற்றுவாரா ?

எரியட்னி: என்ன ? அந்த ஊதாரி மைனர் ரான்டலா ? நிச்சயம் இல்லை !

மாங்கன்: உனது கத்தி மீசை மைத்துனர் ஹெக்டர் தேசத்தைப் பாதுகாப்பார் தனது பேச்சுத் திறமையால் !

ஹெக்டர்: ஆம். நான் நிச்சயம் பாதுகாப்பேன், என்னைச் செய்ய விட்டால் !

மாங்கன்: உன்னை யார் விடப் போகிறார் ?

ஹெக்டர்: அதற்குத்தான் உன்னை அரசாங்கத்தில் முன்பே தேர்ந் தெடுத்து விட்டார் ! எனக்கு இடமில்லை.

மாங்கன்: ஆகவே எனக்கு நீ மதிப்பளிக்க வேண்டும் ! நீங்கள் எல்லாரும் மதிப்பளிக்க வேண்டும். கேலி செய்யாமல் நாகரீகமாக என்னை நீங்கள் நடத்த வேண்டும். என்னைத் தவிர வேறு யார் இருக்கிறார் இங்கு நாட்டைக் காப்பற்ற ?

எரியட்னி: என் கணவர் ஹேஸ்டிங்ஸ் இருக்கிறார். நகைப்புக் கிடமான உமது கோணக் குடியரசுக் கோட்பாட்டை உதறித் தள்ளு ! என் கணவருக்கு அதிகாரமும் ஆதரவும் அளித்து ஒரு மூங்கில் கம்பைக் கையில் கொடுத்தால் பிரிட்டிஷ் பூர்வீகக் குடிமக்களுக்குப் புத்தி வரச் செய்வார் ! அப்படிச் சிரமமின்றி தேசத்தைக் காப்பார்.

காப்டன்: அது தோல்வியில்தான் போய் முடியும். எந்த முட்டாளும் தடியைக் கையில் ஏந்திக் கொண்டு அரசாங்கத்தை நடத்த முடியும். நான் கூட அப்படி அரசாள முடியும் ! ஆனால் அது கடவுள் வழி இல்லை ! உன் கணவன் ஒரு முழு மூடன் !

எரியட்னி: என் கணவர் மூடர் அல்லர் தந்தையே ! இங்கிருப் போரை எல்லாம் ஒருவராக்கினால் அவருக்கு ஒப்பாவார் என் கணவர். இல்லையா மிஸ். எல்லி ?

மிஸ் எல்லி: என் தந்தை வல்லமைசாலி ! அவரைத் தொழிற் சாலையில் எல்லாரும் ஏமாற்றினர் ! வேலைப் பளுவை முதுகில் மிகையாக ஏற்றினர் !

மாங்கன்: மிஸ் எல்லி ! உன் தந்தை மாஜினி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் புகுந்திட முனைகிறார். அல்லது அரசாங்கப் பணியில் நுழைய முயல்கிறார். நாம் அந்த உயர் நிலைக்கு இன்னும் வரவில்லை. இல்லையா ஹெஸியோன் ?

ஹெஸியோன்: அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. யார் ஆண்டால் என்ன ? யார் போனால் என்ன ? நீங்கள் அரசாங்கத்தில் நுழையாமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

ஹெக்டர்: நாம் என்றால் யார் யார் ?

ஹெஸியோன்: தெரிய வில்லையா ? சாத்தானின் பேத்திகள் மைத்துனரே ! அதாவது எம்மைப் போன்ற பேரழகிகள் !

ஹெக்டர்: (படுத்தவன் எழுந்து கைகளைத் தூக்கி) கேடு காலம் வருகுது ! கடவுளே ! எம்மைக் காத்திடு இந்த சாத்தான் தூண்டியிலிருந்து !

மிஸ். எல்லி: இந்த உலகில் நேர்மையான மனிதர் எவரும் இல்லை, என் தந்தை, ஷேக்ஸ்பியரைத் தவிர ! மிஸ்டர் மாங்கனின் செல்வம் மெய்யல்ல ! ஹெஸியோனின் குணாதிசயம் மெய்யல்ல அவளது அழகிய கருங் கூந்தலைத் தவிர ! மேடம் எரியட்னி மேனி எழிலும் மெய்யான தில்லை.

ஹெக்டர்: ஷேக்ஸ்பியர் எங்கே இருக்கிறார் ?

எரியட்னி:: என் முடி பொய்முடி யல்ல ! நிஜ முடி நிறத்தைத் தவிர !

மாங்கன்: (திடீரென்று கோட்டைக் கழட்டிக் கொண்டு கவனத்தைத் திருப்ப) எல்லாரும் பாருங்கள் ! நான் இங்கே அம்மணமாய் நிற்கப் போகிறேன் !

எரியட்னி, காப்டன், ஹெக்டர், எல்லி: (அலறி எழுந்து நின்று) வேண்டாம் மிஸ்டர் மாங்கன் ! நிறுத்து ! கோட்டை எடுக்காதீர் !

ஹெஸியோன்: (சிரித்துக் கொண்டு) உமக்குப் பைத்தியம் பிடித்து விட்டது மிஸ்டர் மாங்கன் ! உம்மைச் சுற்றி மூன்று மாதர் நிற்பது கூட உமக்குத் தெரிய வில்லை ! வயதாக, வயதாக உமக்கு மூளைக் கோளாறு உண்டாகுது ! நாணம் இல்லையா உமக்கு ?

மாங்கன்: நாணமா ? சொல் ! இந்த இல்லத்தில் யாருக்கு நாணம் உள்ளது ? நாம் எல்லோரும் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு அம்மணக் காட்சியில் நின்றால் என்ன ? நான் முதலில் எனது உடுப்புக்களைக் களைகிறேன் ! என்னைப் பின்பற்றுங்கள் ! நாமெல்லாம் ஒழுக்க நெறி தவறி ஏற்கனவே நமது இதயங்கள் அம்மணமாய் ஆகி விட்டன. வெளி உடல் மட்டும் ஏன் ஆடையால் மூடப்பட வேண்டும் ? என்னால் இந்த உடம்போடு ஒட்டி வாழ முடிய வில்லை ! நானதைத் தண்டிக்க வேண்டும் ! நெறி தவறி நடப்பதால் நீங்களும் உமது உடம்பைத் தண்டிக்க வேண்டும். நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். உமது பழிகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்குது என்னுள்ளம் ! ஒவ்வொரு முறையும் உங்களில் ஒருவர் வாயைத் திறக்கும் போது என் கையும் மெய்யும் இப்படிக் கோணிப் போகுது !

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 24, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“நானொரு தொழிற்சாலை நெப்போலியன் என்று நினைக்கிறார். அதனால்தான் மிஸ். எல்லி கூட என்னை மணக்க விரும்புகிறாள். ஆனால் மெய்யாக என்னிடம் பணமில்லை.”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (கோமான் மாங்கன், நெஞ்சை முறிக்கும் இல்லம்)

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.

7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

***************************

(மூன்றாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : நள்ளிரவு

அரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது.

+++++++++++++++++++++

அங்கம் -3 பாகம் -3

(மூன்றாம் அங்கம்)

மாங்கன்: மிஸ். எல்லி ! எவ்வளவு பணம் நீ சேர்த்து வைத்திருக்கிறாய் ?

மிஸ். எல்லி: ஒன்றுமில்லை என் வசம் !

எரியட்னி: மிஸ்டர் மாங்கன் ! எல்லி சொல்லி விட்டாள் இப்போது நீங்கள்தான் சொல்ல வேண்டும். எவ்வளவு பணம் உங்கள் கைவசம் உள்ளது ?

மாங்கன்: நீ தெரிந்து கொள்ள வேண்டுமா ? என் கையில் ஒன்றுமில்லை !

ஹெஸியோன்: பொய் சொல்லக் கூடாது. பாங்கில் பண மூட்டை எவ்வளவு உள்ளது ? ஓன்று மில்லாதாவன் என்று கதை விடாதீர் !

மாங்கன்: நான் கதை சொல்ல வில்லை ! உண்மையைச் சொல்கிறேன். ஒன்று மில்லாதவனை எவளும் மணம் செய்து கொள்ள மாட்டாள். இல்லானை எவளும் வேண்டாள்.

எரியட்னி: பணமின்றி எப்படி நீவீர் உண்டு, உறங்கி, உடுத்தி வருகிறீர் ?

மாங்கன்: எனது பிரயாணச் செலவுக்குக் கிடைக்கும் பணத்தில் !

காப்டன்: நமது வாழ்க்கைப் பயணத்துக்குச் செலவாகும் பணத்தை எப்படிச் சம்பாதிப்பது ? நமது பயணம் நீண்டது ! வழிச் செலவுப் பணம் வாழ்க்கைகுப் போதுமா ? நாற்பது மைல் தூரத்தில் இல்லை நமது பயணம்.

ஹெஸியோன்: மிஸ்டர் மாங்கன் ! உங்களுக்குத் தொழிற்சாலை வருமானம் வருகிறதே ! வருவாய் இல்லை என்று எப்படிச் சொல்கிறீர் ?

மாங்கன்: அப்படித்தான் எல்லோரும் என்னை நினைக்கிறார். நானொரு தொழிற்சாலை நெப்போலியன் என்று நினைக்கிறார். அதனால்தான் மிஸ். எல்லி கூட என்னை மணக்க விரும்புகிறாள். ஆனால் மெய்யாக என்னிடம் பணமில்லை. காசில்லாத சீமான் !

மிஸ். எல்லி: என்ன ? உங்களுக்குத் தொழிற்சாலை கூட இல்லையா ?

மாங்கன்: தொழிற்சாலைகள் உள்ளன ! ஆனால் அவை என்னுடை யவை அல்ல ! அவை பணம் போட்ட பங்குதாருக்குச் சொந்தமானவை. அவரிடமிருந்து எனக்கு வருமானம் மட்டும் வருது. அங்கே மிஸ். எல்லியின் தந்தை போன்றோருக்கு வேலை கிடைக்குது. நல்ல ஊதியம் கிடைக்குது எல்லோருக்கும் ! ஆனால் எனக்கு எதுவும் சொந்தம் இல்லை.

ஹெஸியோன்: போதும் போதும் மிஸ்டர் மாங்கன் பொய் புரட்டுகள் ! மிஸ். எல்லியை விரட்ட நல்ல கதை அளக்கிறீர் !

மாங்கன்: நான் முதல் முறையாகச் சொல்கிறேன். என் செல்வ நிலையைப் பற்றி உண்மையைச் சொல்கிறேன். நீங்கள் யாரும் நம்பாவிட்டால் எனக்குக் கவலை இல்லை !

எரியட்னி: வறியவரான உம்மைப் பற்றி வருத்தப் படுகிறேன் மிஸ்டர் மாங்கன் ! ஏன் நீங்கள் அரசியல் பணியில் நுழையக் கூடாது ?

மாங்கன்: அரசியல் பணியில் நுழைய வேண்டுமா ? எரியட்னி ! நீ எங்கே வாழ்கிறாய் ? நான் அரசியல் பணியில்தான் இருக்கிறேன் !

எரியட்னி: அப்படியா ? உங்கள் அரசியல் பணியைப் பற்றி நான் கேள்விப் பட்டதில்லை. என்ன பணி ?

மாங்கன்: இப்போது சொல்கிறேன். கேளுங்கள் மேடம் எரியட்னி ! இந்த நாட்டுப் பிரதம மந்திரி என்னை அழைத்து முட்டாள்தனமான தேர்தல் முறையில் வராமலே ஒரு பெரிய நிர்வாகத் துறைக்கு டைரக்டராக நியமித்து அரசாங்கத்தில் சேரச் சொன்னார்.

எரியட்னி: எந்தக் கட்சியைச் சேர்ந்தது ? கன்சர்வேடிவ் கட்சியா ? லிபரல் கட்சியா ?

மாங்கன்: அந்தக் கோமாளிக் கட்சிகளில் என் பணி இல்லை ! தனிப் பட்ட ஓர் அனுபவத் தொழிற்துறை நிபுணராக அழைக்கப் பட்டேன் ! (எல்லாரும் கொல்லென்று சிரிப்பில் அதிர்ச்சி உண்டாக்குகிறார்) என்ன சிரிப்பு இருக்குது இதிலே ? எதற்காகச் சிரிக்கிறீர் ?

ஹெஸியோன்: ஓ மாங்கன் ! பரிதாபம் ! பரிதாபம் ! இந்த வேலைக்கு வேண்டாம் தேர்தல் ?

எரியட்னி: அனுபவத் தொழிற்துறை நிபுணரா நீங்கள் ? சில நிமிடங்களுக்கு முன்பு உமக்குத் தொழிற்சாலையே இல்லை என்று சொல்லி வந்தீர் ! இப்போது தொழிற்துறை நிபுணர் என்று தோளை உயர்த்திக் கொள்கிறீர் !

மிஸ். எல்லி: தொழிற்சாலையில் எல்லா வேலைகளையும் என் தந்தைதான் செய்ய வேண்டும் என்று அதிகாரம் செய்தவர் !

ஹெஸியோன்: மிஸ்டர் மாங்கன் ! உம்மைக் கண்டால் தொழிற்சாலைத் தூண்களே நடுங்கும் என்று நான் கேள்விப்படுவது உண்மையா ?

ஹெக்டர்: மிஸ்டர் மாங்கன் நடந்தால் பூமியே அதிரும் ! ஆனால் உன்னைக் கண்டால் மாதர் உள்:ளம் உருகி உன் நிழலாகி விடுகிறார் ! இந்த வீட்டில் இன்று மாலையில் மூன்று மாதர் உன்னோடு பூனை எலி விளையாட்டில் பங்கெடுத்துள்ளார் !

எரியட்னி: மிஸ்டர் மாங்கன் ! அரசியல் கட்சிக்கு அண்டாக் கணக்கில் பணத்தைக் அள்ளிக் கொடுத்திருப்பீர் அல்லவா ?

மாங்கன்: ஒரு பென்னி கூட நான் கொடுத்ததில்லை ! எல்லாம் என் கம்பேனி நிர்வாகி கவனித்துக் கொள்வார்.

எரியட்னி: இனிதாய் இருக்குது, உங்கள் அனுபவம் மிஸ்டர் மாங்கள் ! உங்கள் தொழில் நுணுக்கச் சாதனைகளைச் சிறிது சொல்லுங்கள்.

மாங்கன்: சாதிப்புகளா ? நீ சாதனை என்று நினைப்பதென்ன ? என் தொழிற்சாலையில் நடக்கும் கோமாளித்தனமான கேளிக்கைகளை நிறுத்தினேன். ஒவ்வோர் ஊழியனும் தான்தான் நாட்டை மேம்படுத்து வதாக பீற்றிக் கொண்டான் ! எனக்கு என் தொற்சாலை யந்திரங்களைப் பற்றித் தெரியாமல் இருக்கலாம் ! ஆனால் ஊழியர் உடலை வளைத்து வில்லாய் முடுக்கி வேலை வாங்கத் தெரியும் எனக்கு !

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 17, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -2

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

இங்கிலாந்தில் இருக்கும் மேற்குடி மக்கள் இரு வகைப்படும் ! குதிரை நிபுணர் வகுப்பு (Equestrian Class) & நரம்பு நோய் வகுப்பு (Neurotic Class) ! அதாவது குதிரை சவாரி செய்து வேட்டை ஆடுவோர் உயர்ந்த மனிதர் ! வேட்டை ஆடாதவர் தாழ்ந்த மனிதர் !

ஜார்ஜ் பெர்னாட் ஷா (எரியட்னி, நெஞ்சை முறிக்கும் இல்லம்)

இந்த வீட்டை ஏன் விற்க விட முடிய வில்லை தெரியுமா ? இங்கே தேவையான ஒரு குதிரைக் கொட்டமில்லை (Stable) ! திருப்தியாக வாழும் நற்குணமுள்ள இயல்பான மக்கள் வசிக்கும் இங்கிலாந்தில் எங்கெங்கு சென்றாலும் நீ அங்கு பார்ப்ப தென்ன ? குதிரைத் தொழுவமே வீட்டு மையத்தில் மெய்யாக இருக்கும் !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (எரியட்னி, நெஞ்சை முறிக்கும் இல்லம்)

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங் களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தை களின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.
7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன்.
எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

(மூன்றாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : நள்ளிரவு

அரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது.

+++++++++++++++++++++

அங்கம் -3 பாகம் -2

(மூன்றாம் அங்கம்)

எரியட்னி: ஆமாம் பழுதுள்ளது அப்பா இந்தக் கப்பலில் ! உங்கள் கண்களுக்குத் தெரிய வில்லை ! என் கணவருக்கு முதலில் தெரிந்தது.

ஹெஸியோன்: என்ன வென்று சொல் ! உயர்ச்சி செய்யாமல் சொல் !

ஹெக்டர்: நான் சொல்கிறேன் ! இந்த வீட்டுப் புதல்வியர் இருவரும் அரக்கிகள் (Demons) ! ஸான்ஸிபார் சூனியக்காரிகள் (Zanzibar* witches) !

எரியட்னி: தப்பான யூகம் ! இந்த நலமான இல்லத்தைப் பிறர் தேட, இல்லத்துக்கு நல்லுணர்வு ஊட்ட, இரவில் சுகமாக நாம் தூங்கத் தேவையானவை குதிரைகள் !

ஹெஸியோன்: குதிரைகளா ? புதிராக இருக்கிறது ! அறிவில்லாத ஆலோசனை !

எரியட்னி: ஆம் குதிரைகள்தான் தேவை ! இந்த வீட்டை ஏன் வாடகைக்கு விட முடிய வில்லை தெரியுமா ? இந்த வீட்டை ஏன் விற்க விட முடிய வில்லை தெரியுமா ? இங்கே தேவையான ஒரு குதிரைக் கொட்டமில்லை (Stable) ! திருப்தியாக வாழும் நற்குணமுள்ள இயல்பான மக்கள் வசிக்கும் இங்கிலாந்தில் எங்கெங்கு சென்றாலும் நீ அங்கு பார்ப்ப தென்ன ? குதிரைத் தொழுவமே வீட்டு மையத்தில் மெய்யாக இருக்கும் ! விருந்தாளி யாராவது வீட்டுப் பியானோவை வாசிக்க விழைந்தால், அறை பூராவும் அலங்கோலமாகும். காரணம் பியானோ மீது பலவிதச் சாமான்கள் ஏற்றப் பட்டிருக்கும் ! குதிரைச் சவாரியைக் கற்றுக் கொண்ட பிறகுதான் என் வாழ்வு மலர்ச்சி யுற்றது. ஆயினும் சிறு வயதில் கற்றுக் கொள்ளாத தால் நான் சரிவரச் சவாரி செய்ய முடிய வில்லை.

ஹெக்டர்: அப்படியானால் நீங்கள் எல்லாம் மேல் வகுப்பு மக்களா ?

எரியட்னி: இங்கிலாந்தில் இருக்கும் மேற்குடி மக்கள் இரு வகைப்படும் ! குதிரை நிபுணர் வகுப்பு (Equestrian Class) & நரம்பு நோய் வகுப்பு (Neurotic Class) ! அதாவது குதிரை சவாரி செய்து வேட்டை ஆடுவோர் உயர்ந்த மனிதர் ! வேட்டை ஆடாதவர் தாழ்ந்த மனிதர் !

காப்டன்: இந்தச் சொற்களில் ஓரளவு உண்மை உள்ளது ! என்னை ஓர் மனிதனாய் ஆக்கியது இந்த இல்லக் கப்பல்தான் ! காரணம் கப்பல் என்பது ஒரு கடல் குதிரை ! நானந்தக் குதிரையில் சவாரி செய்தவன் ! ஆனால் அதிலேறி நான் வேட்டை ஆடுபவன் அல்லன் !

எரியட்னி: நீங்கள் எத்தகைய கண்ணியவான் என்று என் கணவர்தான் கண்டுபிடித்துச் சொன்னார் !

காப்டன்: பரவாயில்லை ! ஒரு முட்டாளுக்குக் கூடச் சில சமயம் அறிவிருக்கிறதே ! அடுத்த முறை நீ இங்கு வரும்போது உன்னுடன் அழைத்துவா உன் கணவனை ! நான் பேச வேண்டும் அவனுடன் !

எரியட்னி: (கோபமாக) என் கணவர் ஒரு முட்டாள் இல்லை அப்பா ! ரான்டல்தான் மூடராய்த் தெரிகிறது எனக்கு !

காப்டன்: அண்ணன் தம்பி இருவரில் யார் நல்ல முட்டாள் என்று நீயே சொல் ! உனக்குத்தான் அவர் இருவரைப் பற்றியும் தெரியும்.

எரியட்னி: ரான்டல்தான் பளிச்செனத் தெரியும் ஓர் ஊதாரி வாலிபர் ! பார்க்கப் போனால் ரான்டல் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். உயர்நிலைக் கல்விக் கூடத்தில் சேர்ந்து பல்கலைக் கழகத்துக்குச் சென்றவர். வெளிநாட்டு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர். பெரிய மனிதர் பலரது நட்பைப் பெற்றவர். அவரோடு பழகி உறவாடி வந்தவர். இவை யெல்லாம் இருந்தும் பிறர் ஏன் அவரைப் பழிக்கிறார் ? வெறுக்கிறார் ? ஒரு வேலைகாரன் கூடச் சில மாதங்கள் இருந்து அவரிடம் வேலை செய்வதில்லை. காரணம் அவர் ஒரு சோம்பேறியாய் இருப்பதாலா ? மேற்குடி மக்கள் போல் வேட்டை ஆடுவதில் விருப்பம் காட்டுவதாலா ? அல்லது காம மோகத்துடன் மாதர் பின்னே சுற்றுவதாலா ? அதுவும் திருமணமான மாதர் பின்னே ! ரான்டல் நிரம்பக் கவிதைகள் படிக்கிறார் ! இலக்கிய நூல்களை வாசிக்கிறார். புல்லாங் குழலில் இனிய இசை எழுப்புகிறார். ஆனால் என் வீட்டுக்குள் புல்லாங் குழலுடன் வர நான் அவரை அனுமதிப்ப தில்லை !

(அப்போது எரியட்னி பேசுவதைக் கவனிக்காமல் பின்னே ரான்டல் பால்கனியில் புல்லாங் குழலை வாசிக்கத் துவங்கிறார்)

எரியட்னி : (எழுந்து முன் நடந்து) ரான்டல் ! தூங்கிக் போன நீ எப்படி எழுந்து வந்து புல்லாங் குழல் வாசிக்கிறாய் ? எப்போது நீ விழித்து எழுந்தாய் ? உன்னைப் பற்றி நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாயா ?

ஹெக்டர்: எரியட்னி ! நீ உன் கவர்ச்சி உடலைக் காட்டிக் கொண்டு இப்படி இரவில் நடமாடினால் எந்த வாலிபனுக்கு தூக்கம் வரும் ? ஏக்கம்தான் வரும் !

எரியட்னி: (புன்னகையோடு) ஓ ! என் அழகுதான் காரணமா ?

ஹெஸியோன்: (பேச்சை மாற்றக் கருதி) எரியட்னி ! நீயே சொல் ! மிஸ் எல்லி
அப்பாவி மாங்கனை அவரது பணத்துக்காக மணக்க வேண்டுமா ?

மாங்கன்: (கோபம் அடைந்து) என்ன கேள்வி இது ஹெஸியோன் ? என் தனிப்பட்ட பிரச்சனைகள் இப்படி அப்பட்டமாக எல்லோர் முன்பும் விவாதிக்கப் பட வேண்டுமா ?

ஹெக்டர்: செல்வந்தர் வீட்டில்தான் பிரச்சனைகள் உருவாகும் ! அவற்றைப் பற்றி மனிதர் எப்படிப் பேசாமல் இருப்பது ?

எனியட்னி: நான் சொவது ரான்டல் காதில் விழுவதாகத் தெரிய வில்லை.

மாங்கன்: எல்லாரது காதிலும் விழுகிறது ! என்னப் பற்றி நீங்கள் பேசுவது தவறு !

ஹெஸியோன்: நாம் பேசுவது மிஸ் எல்லிக்குத் தவறாகத் தெரியவில்லை ! எல்லி ! நான் உன் திருமணம் பற்றி விவாதிப்பது சரிதானே !

மிஸ். எல்லி: எனக்கு மறுப்பில்லை ஹெஸியோன் ! எரியட்னி ! உன் கருத்தை அறிய ஆவல் ! நான் கோமான் மாங்கனைப் பணத்துக்காக மணப்பது நல்லதுதானே !

மாங்கன்: என்னை மணக்காமல் மிஸ். எல்லி என் பணத்தை மணப்பது சரியில்லை !

எரியட்னி: மிஸ்டர் மாங்கன் ! உம்மிடம் எவ்வளவு செல்வம் உள்ளது ?

மாங்கன்: (கோபமாக) இம்மாதிரிக் கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது !

எரியட்னி: ஏன் சொல்லக் கூடாது ? உமது சொத்துக்கள் மதிப்பையும் சம்பாதிக்கும் செல்வத்தையும் அறிந்து கொள்ள பல மாதர் இங்கு காத்திருக்கிறார் ! மிஸ். எல்லி ஒருத்தி மட்டுமில்லை மிஸ்டர் மாங்கன் !

+++++++++++++
Zanzibar* – An Island on the Indian Ocean near Tanzania, Africa)

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 11, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“ஓ பெண்களே ! ஊமைப் பெண்களே ! இரக்கமற்ற பெண்களே ! காலக் கடிகாரத்தை முடுக்குபவர் நீங்கள்தான் ! இந்த உலகத்தை இயக்குபவரும் நீங்கள்தான் ! உங்களைப் படைத்த பிறகு கடவுளும் அன்று முதல் இன்றுவரை ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கிறான் !”

ஹெக்டர் (நெஞ்சை முறிக்கும் இல்லம்)

“உன் பேனா எழுத்து உனக்குக் குடிபோதை ஏற்றுகிறது ! உன் தொப்பியை வைத்துக் கொண்டு சாவித் துளையைத் தேடுகிறாய் ! உனக்குப் பரிவு கிடையாது. நீ உன் நாடகப் பாத்திரங்களின் மானிட மதிப்பை இழந்து விடுகிறாய். அது முதுகு எலும்பற்ற நகரும் வாகனத்தை நாசமாக்கிறது. நாடகத்தில் பொதுச் சேவை புரிய மக்கள் உனக்கு வாய்ச் சங்காக மாறி விடுகிறார் ! ஆனால் என்னை ஓர் முட்டாளாக எண்ணுகிறாய் நீ !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (Letter to Stella Campbell)

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.

7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

***************************

(மூன்றாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : நள்ளிரவு

அரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது.

+++++++++++++++++++++

அங்கம் -3 பாகம் -1

(மூன்றாம் அங்கம்)

எரியட்னி: எத்தகைய இனிமையான இரவு இது ! புத்துணர்வு அளிக்கும் பொன்னிரவு ! தங்க முலாம் பூசிடும் நிலா மேகத்தில் ஒளிந்து கொண்டு நம்மை மெல்ல எட்டிப் பார்க்கிறது ! இன்று நமக்காக வந்த நளின இரவு இது !

ஹெக்டர்: (தோட்டத்துப் பெஞ்சில் அமர்ந்து) இரவு நம்மைப் பற்றிக் கவலைப்படுவ தில்லை ! நமக்கும் இரவுக்கும் என்ன உறவு உள்ளது ? நீ யார் மீதோ காதல் கொண்டு கனவு காணுகிறாய் ! அது யாரென்று சொல்வாயா எரியட்னி ?

எரியட்னி: கொள்ளை கொண்ட அந்த ஆணழகன் யாரென்று நான் சொல்லப் போவதில்லை !

மிஸ். எல்லி: (காப்டனை உரசிக் கொண்டு, குழைவாய்) என் நாடி நரம்புகளில் இன்ப இசை ஊறிப் பொங்கி வருகிறது இந்தக் காரிருளில் ! காலை உதயம் புலராமல் இந்த மயக்க இரவே நீடிக்கட்டும் ! மௌன இரவு முதுமைக்குச் சுகம் அளிக்கிறது. இளமைக்குக் கனல் மூட்டுகிறது.

ஹெக்டர்: இது உன் குரலா ? அல்லது பின் குரலா ?

மிஸ். எல்லி: இல்லை ! தூங்கப் போகும் முன்பு காப்டன் என்னிடம் மொழிந்த பொன்னுரைகள் இவை !

காப்டன்: (விழித்துக் கொண்டு) நான் தூங்க வில்லை எல்லி ! கண்கள் மூடிக் காதுகள் திறந்துள்ளன !

ஹெக்டர்: (கேலியாக) மிஸ். எல்லி இப்படி தோள் மீது ஒட்டிக் கொண்டிருந்தால் எப்படித் தூக்கம் வரும் காப்டனுக்கு ? இந்த இனிய இரவில் தூங்கும் ஒரே மனிதன் ரான்டல்தான் ! ஓ ! மிஸ்டர் மாஜினி டன்னும் உறங்குகிறார். மிஸ்டர் மாங்கனும் தூங்குகிறாரா ? அல்லது தூங்கிக் கொண்டு நடக்கிறாரா ?

மாங்கன்: எனக்கு இன்று தூக்கம் வராது ! எத்தனை காயங்கள் எனக்கு ?

ஹெக்டர்: மிஸ்டர் மாங்கன் மீது ஏவப்பட்ட கணைகளின் காயத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறார். ஓ ! மிஸ்டர் மாங்கன் ! ஹெஸியோன் உன்னை தூங்க வைத்திருப்பாள் என்றல்லவா நினைத்தேன் ! பிசாசுகள் இரவில் தூங்க மாட்டா !

எரியட்னி: (எழுந்து முன்வந்து மாங்கனை நெருங்கி) மிஸ்டர் மாங்கனைப் போல் அனுதாபம் மீது பேராசை வைத்த மனிதர் வேறு யாருமில்லை ! தான் சாகப் போவதாக முன்னுணர்வு (Presentiment) கொண்டு குழப்பம் அடைபவர் அவர் ! இப்போது யாரும் அவரைக் காப்பாற முடியாது !

மாங்கன்: (ஆச்சரியம் அடைந்து) என்ன ? எனக்கு முன்னுணர்வு உள்ளதா ? ஆம் எனக்கு இருக்கலாம் ! ஆனால் அது உன் காதில் விழவில்லை.

எரியட்னி: என் காதில் விழுந்தது வேறு ! டுப்டுப்பென வான வெடிச் சத்தங்கள் கேட்டன ! அடுத்தடுத்து எனக்குக் கேட்டன ! வெகு தூரத்திலிருந்து வருவதாய்க் கேட்டன. ஆனால் அது அப்படியே தணிந்து விட்டது ! உங்களில் யாருக்காவது அப்படி அரவம் செவியில் கேட்டதா ?

மாங்கன்: அது ரயில் ஓடும் சத்தம் !

எரியட்னி: மிஸ்டர் மாங்கன் ! இந்த நட்ட நிசியில் எந்த ரயிலும் இந்தப் பகுதியில் ஓடுவதில்லை ! கடேசியாகப் போகும் ரயில் பத்து மணிக்கே போய் விட்டது !

மாங்கன்: அது பாரம் ஏற்றிச் செல்லும் பளு ரயிலாக இருக்கலாம் !

எரியட்னி: இங்கே பளு வண்டி பயண வண்டியுடன் இணைக்கப் படும் ! அந்த வான வெடிச் சத்தம் என்னவாக இருக்க முடியும் ஹெக்டர் நீ சொல் ?

ஹெக்டர்: வானகம் நம்மை வெறுத்து இடி முழக்கி மிரட்டி வருகிறது ! நான் சொல்கிறேன் ! இரண்டில் ஒன்று நேரலாம். விலங்கினத் துக்கு நேர்ந்தது போல் காரிருளிலிருந்து ஏதோ ஓர் புதிய படைப்பு உருவாக்கிப் புகுத்தப் படலாம் ! அல்லது வானமே இடித்து நம்மீது விழுந்து நம்மையே அழித்துவிடலாம் !

எரியட்னி: (பணிவாக) நாம் எந்த விலங்குக்கும் ஒரு புதிய படைப்பைப் புகுத்தவில்லை ஹெக்டர் ! ஏன் வானகம் இந்த இல்லத்தில் வாழ்வோர் மீது இடிந்து விழ வேண்டும் ? என் சகோதரி ஹெஸியோனுக்கு எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்தால் இங்கே பிழைத்துக் கொள்வாள் ! அப்படி இந்த இல்லத்தில் நேரும் அநீதிகள் என்ன ?

ஹெக்டர்: நாம் அனைவரும் அநியாயம் இழைத்தவர் ! நமக்கு அறிவில்லை ! நம்மால் யாருக்கும் இங்கு பயனில்லை, நாம் பிறருக்கு ஆபத்தை விளைவிப்பவர். நாம் ஒருங்கே அழிக்கப்பட வேண்டும் வான வெடியால் !

எரியட்னி: இருபத்தி நான்கு வருடத்துக்கு முன்பு என்னைத் திருமணம் புரிந்த என் கணவர் இந்த இல்லத்தில் சீர்கேடுகள் இருப்பதாய் எடுத்துக் காட்டினார் !

காப்டன்: (திடீரெனத் திரும்பி) அந்த முழு மூடனா இந்த இல்லத்தில் சீர்கேடு உள்ளதெனக் கூறினான் ?

எரியட்னி: என் கணவர் ஹேஸ்டிங்ஸ் மூடர் அல்லர் ! இந்த இல்லம் சீர் கெட்டது என்றவர் கூறியது உண்மை. அதனால்தான் திருமணத்துக்குப் பிறகு அவர் இந்த இல்லத்திற்கு வந்ததில்லை ! நானும் வரவில்லை ! இருபத்தி நான்கு வருடங்கள் ஓடிவிட்டன !

காப்டன்: இந்த வீட்டில் உள்ள சீர்கேடுகள் என்ன வென்று சொல் ! நீயும் உன் பதியும் மீளாமல் போனதால் சீர்கேடுகள் இல்லாமல் மறைந்தன ! ஏன் உன் பதி இந்த வீட்டில் மீண்டும் தடம் வைக்க வில்லை ? நீயும் ஏனிந்த இல்லத்தில் கால் வைக்க வில்லை ? இருபத்தி நான்கு வருடம் கழித்து இப்போது ஏன் இங்கு வந்தாய் ? வந்த பின் ஏன் இல்லாத சண்டையை மூட்டுகிறாய் ? இந்தக் கப்பலில் எந்தப் பழுது மில்லை ! நான் காப்டனாக இருப்பது வரை இந்தக் கப்பல் சீராகப் போகும் !

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 2, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -19

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

தோழா ! காப்டனின் புதல்வியர் ஆடவர் மீது இரண்டு அதிசய ஆதிக்க சக்தி கொண்டவர் ! ஒன்று அவரைத் தன்னவர் ஆக்க நேசிக்கலாம் ! அல்லது அவரைச் சின்னவர் ஆக்க அழ அழ வைக்கலாம் ! அது அவரது ஆக்கிரமிப்புச் சக்தி ! கடவுளுக்கு நன்றி சொல் ! நல்ல வேளை ! நீ எவளையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஜார்ஜ் பெர்னாட் ஷா (Hector in The Heartbreak House)

உனது மிக உன்னத நாடகத்தைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டேன் என்று சொல்ல நான் தயங்கமாட்டேன். முதல் அங்கம் பூரிப்பை அளித்தது. நீ உனது நாடகக் கர்த்தாக்களை கடவுளாகப் படைக்கிறாய். ஆனால் போகப் போக அவரது எலும்பின் மதிப்பை நீ இழந்து விடுகிறாய்.

ஜார்ஜ் பெர்னாட் ஷா (Letter to Stella Campbell)

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.
7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன்.
எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

***************************

(இரண்டாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). அதே இல்லம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : இரவு

அரங்க அமைப்பு : திரை தூக்கியதும் மிஸ் எல்லி முன்னே வர, கோமான் மாங்கன் பின்னே வருகிறார். இரவு விருத்துக்கு எடுப்பான ஆடை அணிந்துள்ளார். எல்லி மணக்கப் போவதில்லை என்று மாங்கன் சொல்லாமல் சொல்கிறார். எல்லியும் தான் வேறு ஒருவரை நேசிப்பதாகச் சொல்லும்போது மாங்கன் அதிர்ச்சி அடைந்து நாற்காலில் சாய்கிறார். மிஸ் எல்லி மாங்கன் நெற்றியைத் தடவித் தூங்க வைத்து வெளியேறுகிறாள். வேலைக்காரி மாஜினி, ஹெஸியோன் மூவரும் மாங்கன் மரித்து விட்டதாகக் கருதுகிறார். மயக்க முற்றது போல் பாசாங்கு செய்யும் மாங்கன் எழுந்ததும் தன்னை இகழ்ந்தோரை வெறுத்து வெளியேற விரும்புகிறார். அப்போது காப்டன் வீட்டில் ஒரு திருடன் நுழைகிறான். திருடனை முன்பு மணந்த வேலைக்காரி கின்னஸ் அவனை அழைத்துச் செல்கிறாள். திருடன் போனதும் மிஸ் எல்லியும் காப்டனும் தனியே உரையாடுகிறார். அப்போது ஹெக்டரும், ரான்டலும் நுழைகிறார். அவரோடு உரையாட ஏரியட்னி அழைக்கப் படுகிறாள்.

+++++++++++++++++++++

அங்கம் -2 பாகம் -19

(மூவங்க நாடகம்)

(சென்ற வாரத் தொடர்ச்சி)

எரியட்னி: (சிரித்துக் கொண்டு) அழு ரான்டல் ! அழு ! நன்றாக அழு ! ஊளையிடும் ஆளை நான் இதுவரைப் பார்த்த தில்லை ! ஊளை இட்டால் மூளை அழுத்தம் குறையும் ! அமைதி அடையும் !

ஹெக்டர்: தோழா ! காப்டனின் புதல்வியர் ஆடவர் மீது இரண்டு அதிசய ஆதிக்க சக்தி கொண்டவர் ! ஒன்று அவரைத் தன்னவர் ஆக்க நேசிக்கலாம் ! அல்லது அவரைச் சின்னவர் ஆக்க அழ அழ வைக்கலாம் ! அது அவரது ஆக்கிரமிப்புச் சக்தி ! கடவுளுக்கு நன்றி சொல் ! நல்ல வேளை ! நீ எவளையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

எரியட்னி: வாயை மூடு ஹெக்டர் ! எரியட்னி ! உன்னை என் சகோதரன் நேசிக்கவும் இல்லை ! அழ வைக்கவும் இல்லை ! கட்டுக்கடங்காத காளை மாட்டை அவிழ்த்து விட்டாள் உன் சகோதரி ஹெஸியோன் ! அந்த சுதந்திரம் மாதருக்கு அளிப்பவர் நாங்கள் ! மாதரை அடிமைப் படுத்தும் ஆடவர் நாங்கள் இல்லை !

ஹெக்டர்: (கோபம் மிகுந்து எரியட்னி கையைப் பிடித்து இழுத்துக் கழுத்தில் கரம் வைத்து) நானா கட்டுக்கடங்காத காளை ? நீங்கள் தான் கட்டு மீறிய காதகர் ! பிசாசு வடிவத்தில் நடமாடும் பெண்கள் ! இப்படிப் புகார் நீ செய்து வந்தால் நான் உன்னைக் கொல்லவும் தயங்க மாட்டேன் ! இந்தப் பூனை எலி விளையாட்டை என்னிடம் விளையாடாதே ! உன் கழுத்தைத் திருவி முறித்திடுவேன் ! (அவளைப் பிடித்து சோ•பாவில் தள்ளுகிறான்) (அழுத்தமாக) பெண்ணை வக்கணை அடிப்பது சோம்பேறியின் வேலை என்று மட்டும் நெப்போலியன் சொல்ல வில்லை ! அதற்கு மேலும் அவன் தொடர்ந்து கூறினான் : பெண் ஒரு போர்வீரனின் பொழுதுபோக்கு ! ஆம் ! அந்தப் போர்வீரன் நான்தான் ! கவனமாய் இரு !

எரியட்னி: (புன்னகையோடு) என்னருமை ஹெக்டர் ! நீ விரும்பியதைத்தான் நான் செய்து வருகிறேன்.

ஹெக்டர்: அதைச் சற்று விளக்கமாய்ச் சொல் !

எரியட்னி: நீ என்னை எதற்காக அழைத்தாய் சொல் ? ரான்டலை ஆட்டி அடக்க ! உன்னால்தான் அவரைக் கட்டுப்படுத்த இயல்வில்லையே !

ஹெக்டர்: ஆனால் நீ அவனைப் பைத்தியமாக்கி அழ வைத்து விட்டாய் ! அப்படி நான் அவனை அவமதிக்கச் சொன்னேனா ?

எரியட்னி: அவன் பைத்தியம் ஆக வில்லை ஹெக்டர் ! ஆனால் நான் அவனை அழ வைத்தது சரிதான் ! நீ ஒரு தாயானால் இது உனக்குப் புரியும்.

ஹெக்டர்: என்ன அர்த்தத்தில் அப்படிச் சொல்கிறாய் ? எனக்குப் புரியவில்லை !

எரியட்னி: புரிவதற்கு எளியது. சிறு பிள்ளைகள் குறும்பு செய்தால், முதுகில் நானோர் அடி கொடுத்து அழ வைப்பேன். ஓர் அதிர்ச்சியைக் கொடுப்பேன். பிறகு அவர் அமைதியாகத் தூங்கப் போவார். பொழுது புலர்ந்து எழுந்ததும் ஒழுங்காய் இருப்பர் ! உனக்குத் தெரியும். நான் ரான்டலை உதைக்க முடியாது. பெரிய ஆசாமி அவர் ! ஆகவே அவர் குறும்பு செய்தால் வக்கணை அடித்து (Rag) அழ வைக்கிறேன். எல்லாம் பிறகு சீராகி விடும் ! ஈதோ ஒழுங்காய் அமைதியாகி விட்டார் ! பாதி உறக்கத்தில் விழித்தி ருக்கிறார் சோ•பாவில் ! அல்லது பாதி விழிப்பில் தூங்கிறார் என்று எடுத்துக்கொள் !

ரான்டல்: (திடீரென எழுந்து) நான் பாதி விழிப்பில் தூங்கவில்லை ! நீ ஓர் அரக்கி ! கொடுமைக்காரி எரியட்னி ! உன்னை நான் இப்போது மன்னிக்கிறேன் !

எரியட்னி: போர் வீரரே ! பாருங்கள், இந்தக் குழைவு சரிதானா ? அவரது பரிவுக் கண் மீண்டும் என் மீது திரும்புகிறது ! இதுதான் அவரது யுக்தி ! வக்கிரப் புத்தி ! என் காலில் விழுந்தால் நான் தழுவிக் கொள்வேன் என்று கனவு காண்கிறார் !

ஹெக்டர்: எரியட்னி ! உன் பிதற்றலை நீ இப்படியே தொடர்ந்தால் ஒருநாள் நான் உன்னைக் கொன்று விடுவேன் ! எச்சரிக்கை செய்கிறேன் ! நீ ஒரு முட்டாள் !

எரியட்னி: ரான்டல் ! நீ போய்த் தூங்கு ! காலையில் உன் மூளை தெளியும் ! நீ நல்ல பையன் ஆவாய் மீண்டும் !

ரான்டல்: (கோபத்துடன்) நீ என் தாய்போல் என்னைத் தாலாட்டாதே ! நீ என் தாய் இல்லை ! எப்போது தூங்குவது என்பதை நான் முடிவு செய்வேன் ! இன்னும் மணி பத்தாக வில்லை.

எரியட்னி: மணி பத்தாகி வெகு நேரம் ஆகி விட்டது ! உனக்கு நேரம் கூடத் தெரிய வில்லை ! ஹெக்டர் ! ரான்டலை தூங்க வைப்பது உன் பொறுப்பு ! என் வேலை முடிந்து விட்டது ! நான் போகிறேன் (தோட்டத்தை நோக்கிப் போகிறாள்).

ஹெக்டர்: இந்த மாதிரி ஆண் பெண்ணுக்கு கீழ்ப்படியும் அடிமைத்தனம் உலகில் வேறெங்கும் உள்ளதா ?

ரான்டல்: (கோபமாக) பார் ! இனி நான் எரியட்னியுடன் ஒரு வாரம் பேசப் போவதில்லை ! அதுதான் நான் இடும் தண்டனை அவளுக்கு ! சரியான பாடம் கற்பிக்கப் போகிறேன் ! குட் நைட் போடாமலே நான் போகிறேன். (கதவருகில் போக முயல்கிறான்.)

ஹெக்டர்: (அவனைத் தடுத்து) ரான்டல் ! உன்னை ஓர் மந்திர சக்தி ஆட்டிப் படைக்கிறது. கிழவர் காப்டனின் கிறுக்குத்தனம் அவரது இரண்டு புதல்விகளின் கோட்டித்தனமாய் இறங்கியுள்ளது. நான்தான் தெரியாமல் போய் மூத்த மகள் ஹெஸியோனின் பாவாடை நாடாவில் மாட்டிக் கொண்டேன் ! நானவளை அறவே வெறுத்தாலும், வீட்டுக்கு வெளியே சதி பதியாய்க் காட்டிக் கொள்கிறோம். ஆனால் நீ ஏன் கைப் பொம்மையாய் இந்தப் பேயிடம் மாட்டிக் கொள்ள காலில் விழுந்து யாசிக்கிறாய் ? எரியட்னி சொல்வது போல் நீ பத்து வயதுப் பாலகன்தான் ! உன் மடமையிலிருந்து வெளியே வா ! நீ நேசித்தாலும் அவள் உன்னை நேசிக்கிறாளா ?

ரான்டல்: ஹெக்டர் ! உனக்குக் காதலைப் பற்றி தெரியாது. என் காதல் ஆன்மீகக் காதல் (Platonic Love) ! உன்னதக் காதல் !

ஹெக்டர்: (ஏளனமாகச் சிரித்து) பூ ! ஆன்மீகக் காதலா ? உன்னை அவள் வேலைக்காரனாய் வைத்திருக்கிறாள் ! நீ அவள் காதல் அடிமை ! அவளுக்குக் காலணி ! உன்னை மணந்த பிறகு பார், அவள் உன்னை ஏமாற்றுவாள் ! உன்னை விடச் செல்வனை, அழகனைக் கண்டால் உன்னை உதறி விடுவாள் ! அவனைத் தொடர்வாள் ! அழகிய மாதரிடம் ஆன்மீகக் காதல் உதிப்பதில்லை ! அது போலிக் காதல் ! அவளை விட்டுவிடு ! மறந்து விடு !

ரான்டல்: அது என் விருப்பம் ஹெக்டர் ! அதில் நீ தலையிடாதே ! ஆன்மீகக் காதல் என்றால் உனக்கு அர்த்தம் தெரியாது. என் இச்சைக்கு உடன்படாத அவளை நான் தண்டிக்கப் போகிறேன் ! பலிவாங்கப் போகிறேன் ! அதை நீ பார்க்கப் போகிறாய். அவளை எப்படி மடக்குவது என்று எனக்குத் தெரியும் ! நான் இப்போது ஓய்வெடுக்கப் போகிறேன். நாளை சந்திப்போம் ! குட் நைட் ஹெக்டர் ! (வேகமாய்ப் போகிறான்)

ஹெக்டர்: (தனியாக) அனுதாபப் படுகிறேன் ரான்டலுக்கு ! இன்று அவனக்கு உறக்கம் வராது ! ஐயோ பாவம் ! ஓ பெண்களே ! ஊமைப் பெண்களே ! இரக்கமற்ற பெண்களே ! காலக் கடிகாரத்தை முடுக்குபவர் நீங்கள்தான் ! இந்த உலகத்தை இயக்குபவரும் நீங்கள்தான் ! உங்களைப் படைத்த கடவுளும் அன்று முதல் இன்றுவரை ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கிறான் !

(இரண்டாம் அங்கம் முடிவு)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 23, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“சிற்றின்ப மாயினும் பாலுறவை நான் விரும்புவதற்குக் காரணம் : அதனுடைய மகத்தான சக்தி தெய்வீகப் புலன் உணர்ச்சி வெள்ளத்தைப் பொங்க வைக்கிறது ! மேலும் அது மானிடக் கூட்டு வசிப்பை மேன்மைப் படுத்துகிறது !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா

“மாதரை வக்கணை அடிப்பது சோம்பேறிகளின் தொழில் என்று நெப்போலியன் அப்போது சொன்னது சரிதான் !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (Ariadne in The Heartbreak House)

++++++++++++++++

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனை களோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.

7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

***************************

(இரண்டாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). அதே இல்லம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : இரவு

அரங்க அமைப்பு : திரை தூக்கியதும் மிஸ் எல்லி முன்னே வர, கோமான் மாங்கன் பின்னே வருகிறார். இரவு விருத்துக்கு எடுப்பான ஆடை அணிந்துள்ளார். எல்லி மணக்கப் போவதில்லை என்று மாங்கன் சொல்லாமல் சொல்கிறார். எல்லியும் தான் வேறு ஒருவரை நேசிப்பதாகச் சொல்லும்போது மாங்கன் அதிர்ச்சி அடைந்து நாற்காலில் சாய்கிறார். மிஸ் எல்லி மாங்கன் நெற்றியைத் தடவித் தூங்க வைத்து வெளியேறுகிறாள். வேலைக்காரி மாஜினி, ஹெஸியோன் மூவரும் மாங்கன் மரித்து விட்டதாகக் கருதுகிறார். மயக்க முற்றது போல் பாசாங்கு செய்யும் மாங்கன் எழுந்ததும் தன்னை இகழ்ந்தோரை வெறுத்து வெளியேற விரும்புகிறார். அப்போது காப்டன் வீட்டில் ஒரு திருடன் நுழைகிறான். திருடனை முன்பு மணந்த வேலைக்காரி கின்னஸ் அவனை அழைத்துச் செல்கிறாள். திருடன் போனதும் மிஸ் எல்லியும் காப்டனும் தனியே உரையாடுகிறார். அப்போது ஹெக்டரும், ரான்டலும் நுழைகிறார்.

+++++++++++++++++++++

அங்கம் -2 பாகம் -18

(மூவங்க நாடகம்)

(சென்ற வாரத் தொடர்ச்சி)

ஹெக்டர்: இன்னும் என்ன கேட்கப் போகிறாய் ரான்டல் ?

எரியட்னி: (கோபமாக நடந்து) எதற்காக உன் கைப்பலத்தை இங்கே காட்டுகிறாய் ரான்டல் ? என்னவாயிற்று உனக்கு ?

ஹெக்டர்: எரியட்னி ! இங்கு வந்து உன் தோழன் ரான்டலை கொஞ்சம் அடக்கி வை ! உன்னால்தான் அது முடியும் !

எரியட்னி: ரான்டல் ! உன் கோமாளித்தனத்தை வழக்கம் போல் இங்கும் நீ காட்டுகிறாயா ? உன் மூஞ்சைப் பார்த்தாலே அது தெரியுதே ! உண்மையாகவே நீ ஓர் ஊர்ந்து செல்லும் புழுதான் !

ரான்டல்: (வருத்தமோடு) எரியட்னி ! உனக்குத் தெரியம் என்னை ! நான் எப்போதாவது உன்னிடம் கீழ்த்தனமாய் நடந்திருக்கிறேனா ? நாகரீத மனிதனாகத்தான் நானிங்கு பிறரிடம் பழகி வருகிறேன் ! பொறுமையாகப் பேசுகிறேன். திருடனைக் கூட கண்ணியமாக நடத்தினேன். உணர்ச்சி வசப்படுவதில்லை. அதுவே எனக்கு வலிமை ! ஆனால் என்னை நீ மதிக்க வேண்டும் என்று உன்னை நான் அழத்தமாய்க் கேட்பேன். ஹெக்டர் என்னை அவமதிக்க நான் விடப் போவதில்லை. நீ அவனை ஊக்குவிப்பதும் தவறு !

ஹெக்டர்: எரியட்னி ! இந்த மனிதனுக்கு உள்ளார ஒரு கற்பனை எண்ணம் உள்ளது, அவன் உனது கணவன் என்று சொல்கிறான் !

எரியட்னி: எனக்குத் தெரியும். அவருக்குப் பொறாமை பொங்கி வழிகிறது. என்னை உரிமை கொண்டாட அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. எல்லா இடங்களிலும் நான்தான் அவரது மனைவி என்று சொல்லிக் கொண்டு திரிகிறார் ! நிறுத்து அதை, ரான்டல் ! நான் அதை அனுமதிக்க மாட்டேன் ! என்ன நினைத்துக் கொண்டு என்னை உரிமை கொண்டாடுகிறாய் ! என்னை விரும்ப உனக்கு எந்தத் தகுதியும் இல்லை ! நீ எப்படி என்னைப் பற்றி ஹெக்டரிடம் பேசலாம் ? ஆடவரோடு என்னை ஒட்ட வைத்துப் பேச நான் சகித்துக் கொள்ள மாட்டேன் !

ஹெக்டர்: நியாயமாகப் பேசு எரியட்னி ! கண்டோரைக் கொல்லும் உன் கவர்ச்சி ஆடவரைப் பேச வைக்கிறது ! தூண்டி விடுகிறது ! உன் அழகில் மயங்காதவர் யார் ?

எரியட்னி: (ஹெக்டர் அருகில் நெருங்கி) உன் கம்பீரத் தோற்றம் பெண்டிரை மயக்குவதை நானும் எடுத்துச் சொல்வேன் ஹெக்டர் !

ஹெக்டர்: (பூரிப்படைந்து) அப்படியா ? நான் எப்படி அதைக் கட்டுப் படுத்துவது ?

எரியட்னி: உன் மீசையைச் சிரைத்து விடலாம் ! ஆனால் அழகிய என் மூக்கை நான் அறுத்து விட முடியாது ! என்னைக் காதலித்த ஆண்களிடம் நான் இதுவரைப் பட்ட பாடு போதும் ஹெக்டர் ! என் பின்னால் ஆடவர் தொடர்வதை நான் எப்படித் தடுப்பது ? ஆனால் நான்தான் ஆடவர் பின்னே சுற்றுவதாக ரான்டல் புகார் செய்கிறார் !

ரான்டல்: யார் ? நானா அப்படிச் சொன்னது ?

எரியட்னி: ஆம் ! நீதான் என்னைப் பற்றி பிறரிடம் பொய், புரளி, புளுகு விடுவது ! மாதரைப் பற்றி வக்கணை பேசுவதைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லையா உனக்கு ? மாதரை வக்கணை அடிப்பது சோம்பேறிகளின் தொழில் என்று நெப்போலியன் அப்போது சொன்னது சரிதான் ! அப்படி ஒரு சோம்பேறி இருக்கிறார் என்றால் அவர்தான் மிஸ்டர் ரான்டல் அட்டர்வுட் !

ரான்டல்: (வருத்தமாக) அப்படிச் சொல்லாதே எரியட்னி ! நாம் பெண்டிர் பின்னால் சுற்றிச் சோம்பித் திரிபவன் அல்லன் ! உன்னை மட்டும் நேசிப்பவன் நான் !

எரியட்னி: அப்படித்தான் என்னைக் காதலிக்கும் ஒவ்வோர் ஆடவனும் சொல்கிறான் ! என்ன செய்திருக்கிறாய் நீ இதுவரை ? உன்னால் இந்த ஊருக்கு என்ன ஆதாயம் உள்ளது ? நீ இன்னும் பத்து வயதுப் பாலகன்தான் ! வாலிப முதிர்ச்சி உனக்கு இன்னும் வரவில்லை ! வேலைக்காரன் இல்லாமல் உம்மால் வீட்டில் எதுவும் செய்ய முடியாது !

ரான்டல்: அப்படி அவமானம் செய்யாதே எரியட்னி !

எரியட்னி: ரான்டல் ! நீ சோம்பேறி என்பதை மறுத்தாலும் உன் சோம்பேறிதனம் உன்னை விட்டுப் போகாது. அடுத்த பிறப்பிலும் உன் நிழலாய் வரும். நீ ஒரு சுயநலக்காரன் ! ஒருவிதக் கவர்ச்சியும் இல்லாத ஆண்மகன் நீ ! உன்னைப் போல் ஓர் வாலிபன் இந்த ஊரில் கிடையாது ! (ஹெக்டரைப் பார்த்து) இப்படிப் பட்ட ஆடவனை எப்படி அழைப்பார் ?

ஹெக்டர்: ஊதாரி மனிதன் என்று !

எரியட்னி: நல்ல பெயர் ! ஊதாரி ! ஊதாரி மனிதன் ரான்டல் !

ரான்டல்: (தொண்டை அடைக்க) இந்த இழிச் சொல்லை, பழிச் சொல்லை நான் சகித்துக் கொள்ள முடியாது எரியட்னி ! போதும் புகார்கள் ! நீ ஒரு வஞ்சகி !

எரியட்னி: பிடித்தால் கண்மணி ! பிடிக்கா விட்டால் வஞ்சகி ! என்ன பட்டம் அளிப்பு இது ? சீச்சீ ! இந்தப் பழம் புளிக்கும் என்னும் நரியின் புகாரா ?

ரான்டல்: எரியட்னி ! நீ ஒரு பெண் மிருகம் ! உலகிலே பெண்தான் வெறுக்கத் தக்க விலங்கு ! நீ பைத்தியம் பிடித்த ஒரு பெண் பேய் ! (ஹெக்டரைப் பார்த்து) நான் உன்னிடம் சொல்கிறேன் ஓர் உண்மையை ஹெக்டர் ! நீ நம்ப மாட்டாய் ! என் வாழ்வு பூராவும் நானிந்தப் பெண் பேயைத்தான் நேசித்தேன் ! அதனால் எனக்குப் பேரிழப்பு ஏற்பட்டது ! அது கடவுளுக்குத்தான் தெரியும் ! (நாற்காலில் அமர்ந்து அழுகிறான்).

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 18, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -17

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“எனது ஐரிஷ் சகாக்கள் ஒப்பாரி வைக்கும் ஓர் வாழ்க்கைப் பிரச்சனையை ஆராயும் போது நான் அதைத் தர்க்க வழிமுறையில் (Logical System) தொடர்வேன். பிறகு அது தானாகவே, தவிர்க்க இயலாத நிலையில் ஓர் இன்பத் தீர்வாக முடியும்.”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (About the Celtic Movement)

“இந்த இல்லத்தில் அநேக ஆண்டுகள் அவரது (காப்டன் வம்சாவளிக்குப்) பலியாடாக நான் தலை கொடுத்திருக்கிறேன். எனக்கது பழக்கமாகி விட்டது ! இறுதியில் நானும் அவரைப் போல் பிறரை ஆட்டிப் படைக்கக் கற்றுக் கொண்டு விட்டேன் !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (Hectot Hushabye in The Heartbreak House)

++++++++++++++++

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனை களோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.

7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

***************************

(இரண்டாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). அதே இல்லம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : இரவு

அரங்க அமைப்பு : திரை தூக்கியதும் மிஸ் எல்லி முன்னே வர, கோமான் மாங்கன் பின்னே வருகிறார். இரவு விருத்துக்கு எடுப்பான ஆடை அணிந்துள்ளார். எல்லி மணக்கப் போவதில்லை என்று மாங்கன் சொல்லாமல் சொல்கிறார். எல்லியும் தான் வேறு ஒருவரை நேசிப்பதாகச் சொல்லும்போது மாங்கன் அதிர்ச்சி அடைந்து நாற்காலில் சாய்கிறார். மிஸ் எல்லி மாங்கன் நெற்றியைத் தடவித் தூங்க வைத்து வெளியேறுகிறாள். வேலைக்காரி மாஜினி, ஹெஸியோன் மூவரும் மாங்கன் மரித்து விட்டதாகக் கருதுகிறார். மயக்க முற்றது போல் பாசாங்கு செய்யும் மாங்கன் எழுந்ததும் தன்னை இகழ்ந்தோரை வெறுத்து வெளியேற விரும்புகிறார். அப்போது காப்டன் வீட்டில் ஒரு திருடன் நுழைகிறான். திருடனை முன்பு மணந்த வேலைக்காரி கின்னஸ் அவனை அழைத்துச் செல்கிறாள். திருடன் போனதும் மிஸ் எல்லியும் காப்டனும் தனியே உரையாடுகிறார். அப்போது ஹெக்டரும், ரான்டலும் நுழைகிறார்.

+++++++++++++++++++++

அங்கம் -2 பாகம் -17

(மூவங்க நாடகம்)

(சென்ற வாரத் தொடர்ச்சி)

ரான்டல்: இப்போது எல்லாரும் போய்விட்டார். தனியாகத் தோழர்களாய் நாம் பேசுவோமா ?

ஹெக்டர்: என் வீடு என்று இப்போது சொல்லிக் கொள்ளும் இங்கே நான் தனியாக உரையாடத் தயார்.

ரான்டல்: இது தனிப்பட்ட ஒரு மாதைப் பற்றி. நான் வெளிப் படையாகப் பேச வேண்டும். மேடம் ஏரியட்னி அட்டர்வுட்டைப் பற்றித்தான் !

ஹெக்டர்: எரியட்னியைப் பற்றி வெளிப்படையாகப் பேச எதுவும் என்னிடம் இல்லை. இன்றுதான் நான் முதன்முறையாக அந்த மாதைக் கண்டேன். இதற்கு முன்பு நான் பார்த்த தில்லை, என் மனைவிக்கு சகோதரி ஒருத்தி இருக்கிறாள் என்று அறிந்ததைத் தவிர ! பல வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் அவளும் தந்தை வீட்டில் தடம் வைத்திருக்கிறாள்.

ரான்டல்: என்ன வியப்பாக இருக்கிறதே ! நீங்கள் அவளுடைய சகோதரி ஹெஸியோனின் கணவன் அல்லவா ?

ஹெக்டர்: ஆமாம் ! அப்படிப் பார்த்தால் நீவீர் அவளது கணவன் ஹேஸ்டிங்ஸின் சகோதரன் அல்லவா ?

ரான்டல்: ஆனால் நீவீர் எரியட்னியுடன் ஓர் அந்தரங்க உறவு வைத்திருக்கிறீர்.

ஹெக்டர்: அப்படிப் பார்த்தால் நீவீரும் அவளோடு உறவு வைத்துள்ளீர்.

ரான்டல்: உண்மைதான் ! ஆனால் நான் அந்தரங்க உறவு அவளோடு கொண்டிருப்பது பல்லாண்டுகள் ! அவளை முன்பே தெரியும் எனக்கு !

ஹெக்டர்: உன்னோடு பல்லாண்டுகள் உறவாடி வருவது இன்று என்னோடு ஐந்து பத்து நிமிடங்கள் அவள் உறவு கொண்டதற்கு ஒப்பானது !

ரான்டல்: (கோபத்தோடு) உமக்குத் தெரியாது, மேடம் எரியட்னி ஒரு முழு மோசடிக்காரி !

ஹெக்டர்: (சாந்தமாக) நான் மனைவியிடம் கூறினேன் : உன் சகோதரி ஓர் சாமர்த்தியக்காரி. உறுதி மிக்க மாது ! பெண்டிருள் திறமை பெற்றவள் !

ரான்டல்: (சிரித்துக் கொண்டு ) ஹெக்டர் ! மாதரெல்லாம் உன்னை ஒரு பெண் மயக்கி என்று எண்ணுகிறார் !

ஹெக்டர்: (கர்வமாக) எனக்குத் தெரியும் ! அந்த முத்திரைத் தோற்றத்தை நித்தியமாக்கச் செய்தவளே என் மனைவி ஹெஸியோன்தான் ! இம்மாதிரிக் கோமாளித்தனமான ஆடைகளை நான் அணிய வேண்டு மென்று (தன் அரபிக் ஆடையைக் காட்டி) என்னை வற்புறுத்துவதும் என் மனைவிதான்.

ரான்டல்: அதாவது நீ உன் மனைவிக்கு அடிபணிகிறாய் ! வேடிக்கைதான் ! உன் மீது எனக்குப் பொறாமை இல்லை, ஏரியட்னியோடு நீ அந்தரங்கத் தொடர்பு கொண்டிருந்தாலும் !

ஹெக்டர்: அதைப் பற்றிக் கவலை இல்லை எனக்கு ! ஏரியட்னியின் கணவன் எப்படி ஏற்றுக் கொள்வான் என்பதுதான் பிரச்சனை !

ரான்டல்: என்ன என் சகோதரன் ஹேஸ்டிங்ஸா ? அவனை நினைத்து அஞ்சாதே நீ ! அவன் கருமமே கண்ணானவன் ! அனுதினமும் பதினாறு மணி நேரம் அவனுக்குச் சதா வேலைதான் ! மனைவியிடம் கொஞ்சிப் பேச நேரம் கிடையாது ! அவன் உண்டு உறங்கினால் போதும் என்று எண்ணுபவள் ஏரியட்னி ! யாராவது அவளைப் பூரிக்க வைத்தால் போதும் என்று ஹேஸ்டிங்ஸ் அவருக்கு நன்றி கூறுபவன் !

ஹெக்டர்: ஏரியட்னிக்கு ஷாட்டோவர் வம்சாவளிப் பண்பு இறங்கி யுள்ள போது அவளை விரட்டிச் செல்வோர் போட்டியில் ஆடவர் எண்ணிக்கை நீளமாய் இருக்கும் !

ரான்டல்: தனக்காகப் போட்டி போடுவோரை ஊக்கிவிக்கிறாள் அந்த மேடம் ! அவளது நடத்தை அவதூறானது ! அநாகரிக மானது ! அவமதிப்புக் குள்ளாவது ! என்னுடன் போட்டி போடுவோர் மீது எனக்கு இம்மி அளவு பொறாமை கூடக் கிடையாது ! அறிகெட்டுப் போய் அவள் போகும் இடமெல்லாம் தூற்றப் படுகிறாள் ! அவளைப் பின்தொடர்பவர் மீது அவளுக்கு அக்கறை இல்லை ! அது யாருக்குத் தெரியும் ? அவளை மணந்த என் சகோதரனுக்கு அந்தப் புகார் நியாய மில்லை ! அவளை நேசிக்கும் எனக்கும், உனக்கும் கூட அது நியாய மில்லை !

ஹெக்டர்: அவளது போக்கு பூரண நேர்மையானது என்று கர்வப் படுபவள் அவள் !

ரான்டல்: பூரண மானதா ? அது போலித்தனம் ! காலை முதல் இரவு வரை போகும் இடமெல்லாம் காதலிப்பவருக்குள் அவள் போர் மூட்டி விடுவாள் ! கவனமாய்ப் பழகு அவளுடன் தோழனே ! உன்னைப் பேரிடருக்குள் தள்ளி விடுவாள் அவள் கவனம் உன் மீது தாவினால் !

ஹெக்டர்: ஆமாம் அழகிய மாது ஒரு முள்ளம்பன்றி போன்றவள் ! கவனமாக இருக்க வேண்டியது ஆடவர் கடமை !

ரான்டல்: எத்தனை ஆடவர் தன்னை நேசிப்பது என்று கூட்டுக் கணக்குப் போட்டுக் களிப்படைவள் அவள் ! அதற்குப் பலியாகாதே ஹெக்டர் ! உன் படகு எப்போது கவிழும் என்று உனக்குத் தெரியாது ! நீருக்குள் மூழ்கும் போதுதான் நீ அறிவாய் ! கவனமாய் இரு அவளிடம் !

ஹெக்டர்: பொறாமையில்தான் நீ எச்சரிக்கை செய்கிறாயா ?

ரான்டல்: பொறாமையா ? ஆம் பொறாமைதான் ! பெண் புலியிடமிருந்து உன்னைக் காப்பது நான் எதற்காக என்று நீயே புரிந்து கொள்வாய் !

ஹெக்டர்: மேடம் எரியட்னி என்னிடம் என்ன கூறினாள் தெரியுமா ? அவள் காதலருக்குள் சண்டைக் காட்சியை ஒருபோதும் உண்டாக்க மாட்டாளாம் ! நான் விட்டு ஓடுவதில்லை. என் மீது பொறாமை கொள்ளாதே ரான்டல் ! எனக்கு எச்சரிகை விடுத்து எரியட்னியை என்னிடனிருந்து பறித்துக் கொள்ளலாம் என்று கனவு காணாதே !

ரான்டல்: அவள் உன்னை வெறுத்து விரட்டினால் அடுத்து நானிருக்கிறேன் காத்துக் கொண்டு ! அவளுக்கு அது தெரிந்தால் போதும் ! இந்த வீட்டில் நீ புரிந்த விளையாட்டுகள் எனக்கு வேதனை தருகின்றன ! அதை நீ தெரிந்து கொள் !

ஹெக்டர்: இந்த இல்லத்தில் அநேக ஆண்டுகள் அவரது (காப்டன் வம்சாவளிக்குப்) பலியாடாய் நான் தலை கொடுத்திருக்கிறேன். எனக்கது பழக்கமாகி விட்டது ! இறுதியில் நானும் அவரைப் போல் பிறரை ஆட்டிப் படைக்கக் கற்றுக் கொண்டு விட்டேன் !

ரான்டல்: ஹெக்டர் ! அந்த விளையாட்டை நீ என்னிடம் காட்டாதே ! என்னைப் பற்றி உனக்குத் தெரியாது !

ஹெக்டர்: மேடம் எரியட்னியைப் பற்றி நீ இழிவாகப் பேசினால் நான் விட்டுவிடுவேன் என்று எதிர்பார்க்காதே ! நீ ஏமாறுவாய் !

ரான்டல்: நான் எரியட்னியைப் பற்றி எதுவும் இழிவாகப் பேச வில்லையே !

ஹெக்டர்: நான் இப்போது எரியட்னியை இங்கே வரும்படி அழைக்கிறேன் ! நம் இருவரில் யாரை அவள் நாடுகிறாள் என்று நான் தெரிந்தாக வேண்டும். (உரத்த குரலில்) எரியட்னி ! எரியட்னி ! இங்கே வா ! உடனே வா ! எரியட்னி !

ரான்டல்: ஏன் அவளை இங்கு விளிக்கிறாய் ? உன்னுடன் நான் இன்னும் பேச வேண்டியது இருக்கிறது ஹெக்டர் ! அவளைக் கூப்பிடாதே !

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 10, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“நான் குடி வெறியன் அல்லன். எனக்குக் குடிப்பது ஒரு மனப்போக்கு ! குடித்து விட்டுக் கனவு காண்பது ! உடலை மென்மையாக்கி மிதக்க வைப்பது மது ! குடி மயக்கத்தில் எளிதாய் நாம் ஏமாந்து போகலாம் ! களிப்படையலாம். பெண்களின் வலையில் வீழ்ந்திடலாம் ! நீயோ வாலிப மங்கை ! இரவில் ஆழ்ந்து தூங்குகிறாய் நீ. எனக்குத் தூக்கம் வருவதில்லை ! நான் குடிப்பது என் மனத் தெளிவுக்கு ! மன விழிப்புக்கு !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (Captain Shotover in The Heartbreak House)

“இங்கிலாந்தில் எங்கு வேண்டுமானாலும் போய் இயல்பான குணமோடு திருப்தியுடன் வாழும் ஒருமைப்பாடுள்ள இனிய ஆங்கில மக்களைப் பார்த்தால் என்ன காண்பீர் ? குதிரைக் கொட்டமே அவரது வீட்டு மையத்தில் அடைத்திருக்கும்.”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (Captain Shotover in The Heartbreak House)

++++++++++++++++

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனை களோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.
7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன்

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

***************************

(இரண்டாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). அதே இல்லம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : இரவு

அரங்க அமைப்பு : திரை தூக்கியதும் மிஸ் எல்லி முன்னே வர, கோமான் மாங்கன் பின்னே வருகிறார். இரவு விருத்துக்கு எடுப்பான ஆடை அணிந்துள்ளார். எல்லி மணக்கப் போவதில்லை என்று மாங்கன் சொல்லாமல் சொல்கிறார். எல்லியும் தான் வேறு ஒருவரை நேசிப்பதாகச் சொல்லும்போது மாங்கன் அதிர்ச்சி அடைந்து நாற்காலில் சாய்கிறார். மிஸ் எல்லி மாங்கன் நெற்றியைத் தடவித் தூங்க வைத்து வெளியேறுகிறாள். வேலைக்காரி மாஜினி, ஹெஸியோன் மூவரும் மாங்கன் மரித்து விட்டதாகக் கருதுகிறார். மயக்க முற்றது போல் பாசாங்கு செய்யும் மாங்கன் எழுந்ததும் தன்னை இகழ்ந்தோரை வெறுத்து வெளியேற விரும்புகிறார். அப்போது காப்டன் வீட்டில் ஒரு திருடன் நுழைகிறான். திருடனை முன்பு மணந்த வேலைக்காரி கின்னஸ் அவனை அழைத்துச் செல்கிறாள். திருடன் போனதும் மிஸ் எல்லியும் காப்டனும் தனியே உரையாடுகிறார்.

+++++++++++++++++++++

அங்கம் -2 பாகம் -16

(மூவங்க நாடகம்)

(சென்ற வாரத் தொடர்ச்சி)

காப்டன்: நான் தூங்கப் போகவில்லை எல்லி ! ஒரு கிளாஸ் ரம் மது அருந்த வேண்டும்.

மிஸ். எல்லி: அருவருப்பாய் இருக்கிறது காப்டன் ! நீங்கள் ஒரு குடிகாரரா ? குடித்து விட்டுப் போதையில் மயங்கிக் கிடப்பவரா ?

காப்டன்: இல்லை எல்லி ! நான் குடி வெறியன் அல்லன். எனக்குக் குடிப்பது ஒரு மனப்போக்கு ! குடித்து விட்டுக் கனவு காண்பது ! உடலை மென்மையாக்கி மிதக்க வைப்பது மது ! குடி மயக்கத்தில் எளிதாய் நாம் ஏமாந்து போகலாம் ! களிப்படையலாம். பெண்களின் வலையில் வீழ்ந்திடலாம் ! நீயோ வாலிப மங்கை ! இரவில் ஆழ்ந்து தூங்குகிறாய் நீ. எனக்குத் தூக்கம் வருவதில்லை ! நான் குடிப்பது என் மனத் தெளிவுக்கு ! மன விழிப்புக்கு ! மனத்தை மங்க வைப்பதற்கு அல்ல ! இதுவரை இன்று பத்து கிளாஸ் ரம் குடித்து விட்டேன். போய் இன்னொரு கிளாஸ் ரம் வாங்கிக் கொண்டு வா. கேட்டால் வேலைக்காரி கின்னஸ் தருவாள்.

மிஸ். எல்லி: காப்டன் ! நீங்கள் குடிகாரர் ஆகக் கூடாது. குடிபோதை உமது உடல் நலத்தை நாச மாக்கும். கனவு காணுவது சரி ! மெய்யான உலகில் நீங்கள் இருக்கக் கூடாது என்னுடன் பேசும் போது.

காப்டன்: இன்று நான் களைத்து விட்டேன் எல்லி ! உன்னோடு நான் போராட முடியாது. நான் வலுவிழந்து நிற்கிறேன் இந்த வயோதிக நிலையில் ! இப்போது நான் இரண்டாம் பிள்ளைப் பிராயத்தில் இருக்கிறேன். உன் மெய்யான உள்ளம் எனக்குத் தெரியவில்லை. என் மெய்யான நிலையை என்னால் அறிய முடியவில்லை. வேதனைக் களிப்பின் பயமுறுத்தலைத் தவிர வேறொன்றும் நான் உணரவில்லை.

மிஸ். எல்லி: காப்டன் ! என் வாலிபக் கனவுகள் எல்லாம் விண்டு போயின துண்டுகளாய் ! நானொரு வயோதிகச் செல்வந்தரை மணக்க வேண்டும் ! (சிரித்துக் கொண்டு) உங்களை மணந்து கொள்ள விழைகிறேன் ! முரடர் மாங்கனை விட்டுவிட்டு பரிவுள்ள உங்களை மணப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். நீங்கள் ஒரு செல்வந்தரா ? சொல்லுங்கள் !

காப்டன்: இல்லை ! கையிக்கும் வாயிக்கும் பணம் பற்றாதவன் நான் ! எனக்கொரு மனைவி எங்கோ ஜமெய்காவில் இருக்கிறாள். கறுப்பி எனது முதல் மனைவி. அவள் இன்னும் உயிரோடு இருந்தால் என்ன செய்வது ?

மிஸ். எல்லி: என்னே பரிதாபம் உங்கள் வாழ்வு ! முதல் மனைவி கறுப்பி ! இரண்டாம் மனைவி வெள்ளை ! மூன்றாவது மனைவி ? எனக்கு விருப்பம்தான் ! ஏற்றுக் கொள்வீரா ? (காப்டன் கையைப் பற்றித் தடவுகிறாள்) எனக்கு இனிமேல் மகிழ்ச்சி இல்லை என்பதை அறிவேன் நான் !

காப்டன்: என் காலம் முடிந்து விட்டது எல்லி ! உன்னை மணப்பதால் என் ஆயுள் நீடிக்குமா ? ஏன் உனக்கினி மகிழ்ச்சி இல்லை என்று சொல்கிறாய் ?

மிஸ். எல்லி: நான் காதலித்தேன் ஹெக்டரை ! ஆனால் என் தந்தை விரும்புவது மாங்கனை ! மாங்கன் விழைவது ஹெஸியோனை ! ஹெக்டர் மணமானவர் என்பது எனக்குத் தெரியாமல் போனது ! பெருத்த ஏமாற்றம் எனக்கு.

காப்டன்: என்ன தூக்கு மீசைக்காரன் ஹெக்டரையா நீ நேசிக்கிறாய் ? மரத்துக்கு மரம் தாவும் மந்தி அவன் ! அவன் பின்னே செல்ல முடியாது உன்னால். போக்கிரிஹெக்டருக்குத் தனது மனைவி ஹெஸியோன் மீது ஆசை அற்றுப் போனது ! இப்போது ஹெஸியோன் மாங்கனை விரட்டிச் செல்கிறாள் ! உனக்கு ஒருவனும் இல்லை இப்போது. வருத்தமாக இருக்கிறது எல்லி !

மிஸ் எல்லி: அப்படித்தான் தெரியுது எனக்கு ! ஆனால் என்னால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. ! இப்போது எனக்கு யாரும் வேண்டாம் என்று முடிவுக்கு வந்து விட்டேன்.

காப்டன்: அதுதான் உனக்கு வலிமை எல்லி ! அதுதான் உன் தனித்துவ சக்தி ! யாரையும் நீ தேடாததால், பல ஆடவர் உன்னை இப்போது நாடி வருவார் !

மிஸ். எல்லி: (கூர்ந்து நோக்கி) யாரா வரும் குரல் கேட்கிறது.

(ஹெக்டரும் ரான்டலும் தோட்டதிலிருந்து வருகிறார்)

ஹெக்டர்: யாரும் இங்கிருப்பதாகத் தெரிய வில்லை ரான்டல். உட்கார்ந்து பேசலாம்.

மிஸ் எல்லி: (எழுந்து கொண்டே) அதாவது அந்தப் புலி வேட்டையைப் பற்றி மிஸ்டர் ரான்டலுக்குச் சொல்லப் போகிறீர் அல்லவா காப்டன் ? வேண்டாம். வாருங்கள் காப்டன் போகலாம் உள்ளே. என் தந்தையிடம் நான் பேச வேண்டும். என்னுடன் நீங்களும் இருப்பது நல்லது அப்போது.

காப்டன்: வேண்டாம். உன் தந்தை படுக்கையில் தூங்குகிறார் எல்லி.

மிஸ் எல்லி: ஆஹா மாட்டிக் கொண்டீர், என் மெய்யான தந்தை தூங்கி விட்டார். ஆனால் நீவீர் காட்டிய என் தந்தை சமையல் அறையில் வேலைக்காரியோடு இருக்கிறார். வாருங்கள் போகலாம். (எல்லியும், காப்டனும் தோட்டத்தை நோக்கிப் போகிறார்கள்)

ஹெக்டர்: அதோ போகிறாளே அந்த எழில் மங்கை மிகவும் சாமர்த்தியக்காரி. அந்த வயோதிகக் கப்பலோட்டியைத் தன் கைப் பொம்மையாக வைத்திருக்கிறாள். அவள் போ என்றாள் காப்டன் போகிறார். வா என்றால் வருகிறார். மங்கையின் அழகில் மயங்கிக் கிடக்கிறார் காப்டன் !

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 2, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -15

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“மதத்தை எதிர்க்கும் தீவிரப் பகைவனும் இதுவரை எழுதப் பட்ட நூற்களில் பைபிள் மிகத் தாழ்வான புளுகு மூட்டை என்று கூறமாட்டான்.”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (தன் தந்தை நினைவில்)

“என் பூர்வீக ஞானத்தை நானுனக்குப் போதிக்கலம். என் தனிப்பட்ட விருப்ப வேலைகளே இப்போது என் மன இச்சைகள். என் புதல்விகளும் அவரது கண்வன்மாரும் முசுடுகளாய் சுகபோக வாழ்வில் மூழ்கி போலிப் பகட்டில் காலத்தை வீணாக்கி வருவதைக் காண்கிறேன். இளைய வாரிசுகள் பணத்தைத் தேடியும் பாவையரைச் சுற்றியும் உலக அறிவின்றித் திரிவதைப் பார்க்கிறேன்.”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (Captain Shotover in The Heartbreak House)

++++++++++++++++

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனை களோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.
7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன்

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

***************************

(இரண்டாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). அதே இல்லம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : இரவு

அரங்க அமைப்பு : திரை தூக்கியதும் மிஸ் எல்லி முன்னே வர, கோமான் மாங்கன் பின்னே வருகிறார். இரவு விருத்துக்கு எடுப்பான ஆடை அணிந்துள்ளார். எல்லி மணக்கப் போவதில்லை என்று மாங்கன் சொல்லாமல் சொல்கிறார். எல்லியும் தான் வேறு ஒருவரை நேசிப்பதாகச் சொல்லும்போது மாங்கன் அதிர்ச்சி அடைந்து நாற்காலில் சாய்கிறார். மிஸ் எல்லி மாங்கன் நெற்றியைத் தடவித் தூங்க வைத்து வெளியேறுகிறாள். வேலைக்காரி மாஜினி, ஹெஸியோன் மூவரும் மாங்கன் மரித்து விட்டதாகக் கருதுகிறார். மயக்க முற்றது போல் பாசாங்கு செய்யும் மாங்கன் எழுந்ததும் தன்னை இகழ்ந்தோரை வெறுத்து வெளியேற விரும்புகிறார். அப்போது காப்டன் வீட்டில் ஒரு திருடன் நுழைகிறான். திருடனை முன்பு மணந்த வேலைக்காரி கின்னஸ் அவனை அழைத்துச் செல்கிறாள். திருடன் போனதும் மிஸ் எல்லியும் காப்டனும் தனியே உரையாடுகிறார்.

+++++++++++++++++++++

அங்கம் -2 பாகம் -15

(மூவங்க நாடகம்)

(சென்ற வாரத் தொடர்ச்சி)

காப்டன்: பணச் செழிப்பு உன்னைப் பாதாளப் படுகுழியில் தள்ளி விடும் ! உன் உடம்பையும் வலுவாக்காது ! ஆத்மாவையும் மேம்படுத்தாது !

மிஸ். எல்லி: மிகவும் புறம்போக்காக இருக்கிறீர் காப்டன் ! இதெல்லாம் பழைய அறிவுரை ! எனக்குத் தேவை யில்லை இவை ! என்னுடைய சிற்றறிவு : ஆத்மாவே உடம்பு ! உடம்பே ஆத்மா ! இரண்டும் வெவ்வேறானவை என்று ஞானியர் சொல்கிறார். ஆத்மாவைக் கட்டுப்படுத்தி உடலின் அடிமையாய் நம்மை ஆக்கலாம் என்றவர் நமக்கு வற்புறுத்துகிறார். ஆத்மா உடம்பை மாற்றுகிறது ! உடம்பை ஆத்மா மாற்றுகிறது ! உங்கள் அறிவுரையால் எனக்கொரு பயனில்லை காப்டன் !

காப்டன்: நீ யாரை எதிர்பார்க்கிறாய் ? உன்னைக் காப்பாற்றும் ஒரு போதகரையா ? அப்படி வருவார் என்று எண்ணும் நீ ஒரு பிற்போக்கு மங்கையா ?

மிஸ் எல்லி: இல்லை ! உங்களை ஒரு ஞானி என்று நினைத்தேன். எனக்கு உதவி செய்வீர் என்று நினைத்தேன் ! இப்போது யார் நீங்கள் என்று தெரிந்து விட்டது எனக்கு. எப்போதும் வேலை மும்முரத்தில் இருப்பதாய்ப் பாசாங்கு செய்கிறீர். உயர்ந்த சிந்தனைகளை உரைக்கிறீர். அவற்றைக் கொட்டி விட்டு அங்கும் இங்கும் ஓடுகிறீர் அதிசயமாய் ! பிறர் பதில் கூறுவதற்குள் நழுவிப் போகிறீர் !

காப்டன்: இந்த வாழ்க்கைச் சூழ்நிலை என்னைக் குழப்பி அடிக்கிறது ! என்னைப் பிடித்து இழுக்கிறது முன்னே செல்ல முடியாது. இந்தக் காலத்து ஆடவரையும், மாதரையும் நான் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. நான் அவரை ஒதுக்கி ஓடவே விழைகிறேன். இப்போது உன்னை விட்டு நான் ஓட வேண்டும் ! (போக எழுகிறார்)

மிஸ் எல்லி: (கையைப் பிடித்து நிறுத்தி மீண்டும் அமர வைத்து) என்னை விட்டு ஓடாதீர் காப்டன் ! மாங்கனைப் போல் உம்மை மயக்க உறக்கத்தில் தள்ளி விடுவேன். நான் உங்கள் ஒருவரிடம்தான் என்னுள்ளத்தைத் திறந்து காட்ட முடியும். என் விருப்பத்தை வெளிப்படையாய்க் கூற முடியும். என்னை உங்களுக்குப் பிடிக்கிறது. உண்மைதானே, உட்காருங்கள். (சோபாவில் அமர வைக்கிறாள்.)

காப்டன்: (விட்டுக் கொடுத்து) கவனித்துக் கொள். எனக்கு முதிய வயது. வயதான கிழவர் ஆபத்தை உண்டாக்குவார் ! வெளி உலகில் என்ன நடக்கு தென்று அவர் கவலைப் படாதவர்.

மிஸ் எல்லி: உலகில் என்ன நடந்தாலும் வயதானோர்க்கு அதைப் பற்றி ஓர் அக்கறையும் கிடையாது. உலகுக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப் படார் !

காப்டன்: ஒரு மனிதனின் ஆசை அவனுக்குத் தனிப்பட்டுப் பொங்கி வழிவது. நீ சிறுமியாய் உள்ள போது உன் படகு நிரம்பி இருக்காது. ஆதலால் உன் சுய இச்சை ஒன்றே முக்கியம் ஆகிறது. நடுவயதில் அரசியல்வாதி, வேதாந்தி, இயற்கை நோக்காளி, தீவிரப் புரட்சி யாளியாக ஆகும் போது உன் படகு நிரம்பி வழிகிறது. பிறகு முதிய வயதில் உன் படகு ஓய்ந்து ஒடுங்கிவிடும் ! மறுபடியும் நீ சிறுமி ஆகிறாய் ! என் பூர்வீக ஞானத்தை நானுனக்குப் போதிக்கலம். என் தனிப்பட்ட விருப்ப வேலைகளே இப்போது என் மன இச்சைகள். என் புதல்விகளும் அவரது கண்வன்மாரும் முசுடுகளாய் சுகபோக வாழ்வில் மூழ்கி போலிப் பகட்டில் காலத்தை வீணாக்கி வருவதைக் காண்கிறேன். இளைய வாரிசுகள் பணத்தைத் தேடியும் பாவையரைச் சுற்றியும் உலக அறிவின்றித் திரிவதைப் பார்க்கிறேன்.

மிஸ் எல்லி: சுற்றி வளைக்காமல் நேரே சுருக்கமாய்ச் சொல்லுங்கள்.

காப்டன்: நீ ஒரு பணக்காரக் கணவனைத் தேடிப் போகிறாய். அந்த வாழ்வில் உனக்கு மூன்று வேளை உணவு நிச்சயம் கிடைக்கும். ஆனால் வாழ்க்கை சூனியமாகிவிடும் ! உன் வயதில் நான் மெய் வருந்தி உழைத்தேன். பயங்கர ஆபத்து மரணம் ஆகியவற்றிலிருந்து தப்பிப் பிழைக்கத் தவித்துக் கொண்டிருந்தேன். ஆகவே மரண அச்சம் என்னைப் பாதிக்க வில்லை. ஆனால் வறுமை அச்சம் உன்னை வாட்டி வதக்க நீ வழி செய்கிறாய்.

மிஸ். எல்லி: உம்மைப் போல் ஒரு பெண் காப்டனாக முடியாது இந்த தேசத்தில் ! நானொரு கடற்பணிப் பெண்ணாவதில் (Stewardess) உமக்கு விருப்பமா ?

காப்டன்: அது மிகவும் கடுமையான வேலை எல்லி ! கடற்பணிப் பெண்டிர் காப்டன் பூட்ஸைத் துடைக்கும் அடிமைகளாய் வேலை செய்ய வேண்டும். வருடத்தில் ஒன்பது மாதம் கடலில் காற்றைச் சுவாசித்துக் கொண்டு கப்பல் தீவில் வசிப்பாய் ! நான்கு புறமும் கொந்தளிக்கும் கடல் ! நங்கூரம் இல்லாத வாழ்க்கை ! அமைதி இல்லாத வாழ்க்கை. சலித்துப் போகும் வாழ்வு ! அது நங்கைக்கு ஏற்றதல்ல !

மிஸ் எல்லி: நான் கடற்பணிக்கு உகந்த நங்கை யல்ல ! கடற் கரையில் நானொரு செல்வந்தனை மணக்க ஒரு வழி சொல்லுங்கள் காப்டன் !

காப்டன்: எனக்கு வயதாகி விட்டது ! இதெல்லாம் எனக்குத் தெரியாது. புறாவுக்கு இறக்கைதான் கொடுக்கப்படும். அது எப்படிப் பறக்கும் எங்கே கூடு கட்டும் என்று யாரும் சொல்லிக் கொடுப்ப தில்லை ! நான் ஓய்வெடுக்க வேண்டும். போய் வருகிறேன் ! (போக எழுகிறார்)

மிஸ். எல்லி: (பிடித்து உட்கார வைத்து) நீங்கள் எனக்கொரு வழி கூறாமல் போகக் கூடாது ! ஓய்வெடுப்பதை ஒத்திப் போடுவீர் !

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 28, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

பெருந்தீனி தின்பது என் ஆத்மா ! அது இன்னிசையைத் தின்னும், ஓவியத்தைத் தின்னும் ! உயர்ந்த புத்தகங்களைத் தின்னும் ! அழகிய ஆடை ஆபரணங்களைத் தின்னும் ! குன்றுகள், ஏரிகள் உள்ள இயற்கைக் காட்சிகளைத் தின்னும் ! இந்த நாட்டில் பணச் செழிப்பின்றி எதையும் நாம் வாங்க முடியாது ! அதனால்தான் நமது ஆத்மாவின் கோரப் பசி அடங்குவதில்லை !

ஜார்ஜ் பெர்னாட் ஷா (Ms. Ellie in The Heartbreak House)

மேதமைத்தனம் பற்றிய என் கருத்து இன்னலுற்றுத் தியாகம் புரியும் ஓரளவு மானிடத் துன்பியலைக் குறிக்கிறது. நேர்மைப்பாடு சுமைப்புக்கு முழுப் பொறுப்பு ஏற்ற டால்ஸ்டாயின் முறிந்த தசைகள், நரகரத்தில் சிக்கிய ஸ்டிரின்ட்பெர்க், சிந்தனைச் சிலுவையில் இறந்த நியட்சேயின் தியாக மரணம் ஆகியவையே துன்பியல் மதிப்புக்கு நம்மை ஊக்குவிக்கறது. ஆனால் அவ்விதம் பெர்னாட் ஷாவின் வாழ்க்கையில் நிகழவில்லை. அவற்றுக் கெல்லாம் அவர் அப்பாற் பட்டவரா ? அல்லது அவை யெல்லம் அவருக்கு அப்பாற் பட்டவையா ?

தாமஸ் மான் (Thomas Mann) ஜார்ஜ் பெர்னாட் ஷாவைப் பற்றி

++++++++++++++++

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனை களோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.
7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன்

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

***************************

(இரண்டாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). அதே இல்லம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : இரவு

அரங்க அமைப்பு : திரை தூக்கியதும் மிஸ் எல்லி முன்னே வர, கோமான் மாங்கன் பின்னே வருகிறார். இரவு விருத்துக்கு எடுப்பான ஆடை அணிந்துள்ளார். எல்லி மணக்கப் போவதில்லை என்று மாங்கன் சொல்லாமல் சொல்கிறார். எல்லியும் தான் வேறு ஒருவரை நேசிப்பதாகச் சொல்லும்போது மாங்கன் அதிர்ச்சி அடைந்து நாற்காலில் சாய்கிறார். மிஸ் எல்லி மாங்கன் நெற்றியைத் தடவித் தூங்க வைத்து வெளியேறுகிறாள். வேலைக்காரி மாஜினி, ஹெஸியோன் மூவரும் மாங்கன் மரித்து விட்டதாகக் கருதுகிறார். மயக்க முற்றது போல் பாசாங்கு செய்யும் மாங்கன் எழுந்ததும் தன்னை இகழ்ந்தோரை வெறுத்து வெளியேற விரும்புகிறார். அப்போது காப்டன் வீட்டில் ஒரு திருடன் நுழைகிறான். திருடனை முன்பு மணந்த வேலைக்காரி கின்னஸ் அவனை அழைத்துச் செல்கிறாள். திருடன் போனதும் மிஸ் எல்லியும் காப்டனும் தனியே உரையாடுகிறார்.

+++++++++++++++++++++

அங்கம் -2 பாகம் -14

(மூவங்க நாடகம்)

(சென்ற வாரத் தொடர்ச்சி)

காப்டன்: என் மகளின் கணவரைப் போலிருக்கும் ஒருவனை மணப்பது மிகவும் அபாயகர மானது மிஸ் எல்லி ! அவன் எப்போதும் வீட்டு நரகத்துக் குள்ளே முடங்கிக் கிடப்பான், சாபம் இடப்பட்டுச் சிதைந்த ஆத்மாவைப் போல் !

மிஸ். எல்லி: அதைப் பற்றி நான் நினைத்துக் கூடப் பார்த்த தில்லை !

காப்டன்: நீ பணத்துக்காக ஒரு வணிகனை மணந்தால், உன் வாழ்வு வணிகமாக மாறிப் போவதை திருத்த முடியாது.

மிஸ் எல்லி: சொல்லுவீர் காப்டன் ! ஏன் மாதர் எப்போதும் மற்ற மாதரின் கணவனையே விரும்புகிறார் ?

காப்டன்: குதிரை திருடுவோன் ஏன் காட்டுக் குதிரைக்குப் பதிலாக கையில் பிடிபட்ட குதிரையை விரும்புகிறான் ?

மிஸ் எல்லி: எப்படிக் கேடு கெட்டுப் போனது இந்த உலகம் ?

காப்டன்: அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை ! நானதைக் கைகழுவி விட்டேன் !

மிஸ் எல்லி: அப்படி நான் அறிந்து கொள்வது எனக்கு ஆரம்ப நிலையே!

காப்டன்: ஆதலால் மேல் நோக்கிச் செல் எல்லி ! உலகத்தைக் கைக் கொண்டு உன்னத ஆத்மாவை இழப்பது ஒருவருக்குச் சாத்தியமாகும் ! ஆனால் இதை மறக்காதே ! உன் ஆத்மா உன்னோடு ஒட்டிக் கொள்ளும், நீ அத்துடன் ஒட்டிக் கொண்டால் ! ஆனாலும் இந்த உலகம் எப்படியாவது உன் விரல்களுக்கு இடையே நழுவிப் போய் விடும்.

மிஸ் எல்லி: அப்படி யெல்லாம் என்னிடம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை ! பண்டை நாகரீகத்தில் வாழும் பாமரனால் ஒரு பயனும் கிடையாது. பழைய பாமரன் நினைக்கிறான் பணமின்றி ஆத்மாவைப் பராமரிக்கலாம் என்று ! சிறிது பணம் இருந்தால் பெரிதாய் ஆத்மாவை வளர்க்கலாம் என்று நினைக்கிறான். ஆத்மாவை வளர்ப்பது, பராமரிப்பது, வைத்துக் கொள்வது விலை மிக்கது ! ஒரு மோட்டர் வாகனம் ஓட்டுவதை விடச் செலவானது !

காப்டன்: அப்படியா ? உன் ஆத்மா தினமும் எவ்வளவு தீனியைத் தின்னும் ?

மிஸ். எல்லி: பெருந்தீனி தின்பது என் ஆத்மா ! அது இன்னிசையைத் தின்னும், ஓவியத்தைத் தின்னும் ! உயர்ந்த புத்தகங்களைத் தின்னும் ! அழகிய ஆடை ஆபரணங்களைத் தின்னும் ! குன்றுகள், ஏரிகள் உள்ள இயற்கைக் காட்சிகளைத் தின்னும் ! இந்த நாட்டில் பணச் செழிப்பின்றி எதையும் நாம் வாங்க முடியாது ! அதனால்தான் நமது ஆத்மாவின் கோரப் பசி அடங்குவதில்லை !

காப்டன்: பணக்காரர் மாங்கனின் ஆத்மா பன்றித் தீவனத்தில் வளர்கிறது !

மிஸ். எல்லி: ஆமாம் அது உண்மை காப்டன் ! அவரிடம் பணத்துக்கு மேல் பணம் குவிகிறது. அவரது ஆத்மா சிறு வயது முதலே தீரப் பசியில் வாடியதாய்த் தெரிகிறது. ஆனால் அவர் என்மீது பணத்தை வீசி எறிய மாட்டார் ! பணத்துக்காகத்தான் நான் அவரை மணக்கிறேன் ! நான் செய்வது நியாய மானது ! அப்படிச் செய்து நான் என் ஆத்மாவைக் காப்பாற்றுவேன் ! அறிவுள்ள மாதர்தான் அப்படிச் செய்வார்.

காப்டன்: பணத்தைத் தேட பல வழிகள் உள்ளன ! நீ ஏன் திருடக் கூடாது ?

மிஸ். எல்லி: (சிரித்துக் கொண்டு) நான் சிறைக்குச் செல்ல விரும்ப வில்லை !

காப்டன்: அந்த ஒரு காரணத்துக்காகத்தான் நீ திருடப் போவதில்லையா ? நேர்மைத்தனம் என்பது ஒன்று இருப்பது உனக்குத் தெரியாதா ?

மிஸ். எல்லி (புன்னகையோடு) நீங்கள் பண்டைக் காலத்து மனிதர் காப்டன் ! எந்த நவீனப் பெண்ணாவது நம்புவாளா சட்டப்படி பெறும் செல்வம் நேர்மையானதாய் இருக்கு மென்று ? மிஸ்டர் மாங்கள் என் தந்தையிடம் திருடினார் ! என் தந்தையின் நண்பரிடமும் களவாடினார் ! நான் மாங்கனின் எல்லாப் பணத்தையும் திருட வேண்டும், போலீசார் அனுமதித்தால் ! போலீஸ் அனுமதிக்கப் போவதில்லை. ஆதலால் நானவரை மணந்து கொண்டு அந்த பணத்தை எல்லாம் பறிக்க வேண்டும் !

காப்டன்: நான் வாதாடப் போவதில்லை ! வயதாகி விட்டது எனக்கு ! என் மனம் தீர்மானித்து முடிவு செய்து விட்டது. பழைய முறையோ, நவீன முறையோ, உன்னை நீயே விற்றுக் கொண்டால் உன் ஆத்மாவுக்குச் சவுக்கடி கொடுக்கிறாய் ! உனது இன்னிசை, ஓவியம், உயர்ந்த நூல், இயற்கைக் காட்சி, இசைக் கச்சேரிகள் எல்லாம் உன்னைக் குணப்படுத்த முடியாது ! (எழுந்து தோட்டத்தின் பக்கம் நடக்கிறார்)

மிஸ். எல்லி: (காப்டனைப் பின்தொடர்ந்து சட்டையைப் பற்றிக் கொண்டு) அப்படி யானால் ஏன் நீங்கள் ஸான்ஸிபார் பிசாசுக்கு (Devil in Zanzibar) உம்மை விற்றுக் கொண்டீர் ?

காப்டன்: என்ன ? ஒன்றும் புரிய வில்லை நீ சொல்வது. நான் போகிறேன்.

மிஸ். எல்லி: எனக்குப் பதில் சொல்லாமல் ஓடாதீர் ! நீவீர் செய்யும் குசும்புத்தனம் இது ! எனக்குத் தெரியும் இந்த யுக்தி ! நீங்கள் உம்மைப் பிறருக்கு விற்கும் போது நான் ஏன் என்னைத் திருமணத்துக்கு விற்கக் கூடது.

காப்டன்: என்னிடம் ஊழியம் செய்தோரில் சிலர் அயோக்கியர் ! அவர் சொற்படி நடக்க மாட்டார். நான் அசிங்கமாக அவரைத் திட்ட வேண்டிய தருணம் வந்தது ! ஆதலால் நான் அவரைத் திட்டினேன் ! கைமுட்டியால் அவரது மூக்கை உடைத்தேன் ! எட்டி உதைத்தேன் ! கன்னத்தில் அறைந்தேன் ! சில முட்டாள்கள் திருடரைக் காப்பாற்றினார். அவரைப் பிடித்துக் கொண்டு போய் கப்பல் பயிற்சி நிலையத்தில் சேர்த்தார். அங்கே அவரை எல்லாம் பிரம்புக்கு அஞ்ச வைத்தார், கடவுளுக்கு அல்ல ! அவரை நான் காலால் எற்றி வாயால் பழித்து என் ஆத்மாவைக் காப்பாற்றிக் கொண்டேன் ! அந்தச் சம்பவம் என் நெஞ்சை இன்னும் உறுத்துகிறது !

மிஸ். எல்லி: சீமான் மங்கனுக்கு என்னை விற்றதாய் நான் பாசாங்கு செய்ய வேண்டும். அப்போது என் ஆத்மா வறுமையிலிருந்து காப்பாற்றப் படும் ! வறுமை என் நெஞ்சை இன்னும் உறுத்துகிறது !

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 20, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“ஒவ்வொரு நையாண்டி விகடமும் காலக் கருவின் மெய்யான நிகழ்ச்சிதான் ! ஒரு சம்பவம் நகைப்பை உண்டாக்கினால், அதனுள் ஒளிந்திருக்கும் உண்மையைத் தேடு.”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (On Immaturity)

“உன்னிதயம் முறியும் போது உன் படகுகள் எரிக்கப் படுகின்றன. அதற்குப் பிறகு எதற்கும் உயிர்ப்பில்லை ! அதுவே ஆனந்த வாழ்வின் முடிவு. வெறுமை அமைதிக்கு ஆரம்ப காலம்.”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (Ms. Ellie in The Heartbreak House)

++++++++++++++++

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனை களோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.
7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன்

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

***************************

(இரண்டாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). அதே இல்லம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : இரவு

அரங்க அமைப்பு : திரை தூக்கியதும் மிஸ் எல்லி முன்னே வர, கோமான் மாங்கன் பின்னே வருகிறார். இரவு விருத்துக்கு எடுப்பான ஆடை அணிந்துள்ளார். எல்லி மணக்கப் போவதில்லை என்று மாங்கன் சொல்லாமல் சொல்கிறார். எல்லியும் தான் வேறு ஒருவரை நேசிப்பதாகச் சொல்லும்போது மாங்கன் அதிர்ச்சி அடைந்து நாற்காலில் சாய்கிறார். மிஸ் எல்லி மாங்கன் நெற்றியைத் தடவித் தூங்க வைத்து வெளியேறுகிறாள். வேலைக்காரி மாஜினி, ஹெஸியோன் மூவரும் மாங்கன் மரித்து விட்டதாகக் கருதுகிறார். மயக்க முற்றது போல் பாசாங்கு செய்யும் மாங்கன் எழுந்ததும் தன்னை இகழ்ந்தோரை வெறுத்து வெளியேற விரும்புகிறார். அப்போது காப்டன் வீட்டில் ஒரு திருடன் நுழைகிறான். திருடனை முன்பு மணந்த வேலைக்காரி கின்னஸ் அவனை அழைத்துச் செல்கிறாள்.

+++++++++++++++++++++

அங்கம் -2 பாகம் -13

(மூவங்க நாடகம்)

(சென்ற வாரத் தொடர்ச்சி)

மிஸ். எல்லி: மிஸ்டர் மாங்கனின் இதயம் பிளந்து கொண்டு வருகிறது. இது எனக்கோர் நூதன உணர்ச்சி. உணர்ச்சி தாங்க முடியாதபடி இம்மாதிரி வேதனை என்னைத் தவிக்க வைக்கிறது. உன்னிதயம் முறியும் போது உன் படகுகள் எரிக்கப் படுகின்றன. அதற்குப் பிறகு எதற்கும் உயிர்ப்பில்லை ! அதுவே ஆனந்த வாழ்வின் முடிவு. வெறுமை அமைதிக்கு ஆரம்ப காலம்.

எரியட்னி: என்ன திமிர் இருந்தால் நீ இப்படி பேசுவாய் ?

ஹெக்டர்: அட கடவுளே ! என்ன வாயிற்று ?

மிஸ் எல்லி: (வியப்புடன்) உன்னைப் பற்றி நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை எரியட்னி ! என்னை இப்படித் திமிர்ப் பிடித்தவள் என்று யாரும் குத்திக் காட்டிய தில்லை.

ஏரியட்னி: ஆமாம் இருக்க முடியாதுதான். நீ எப்படி மோசமாக வளர்க்கப் பட்டவள் என்பது நன்றாகவே தெரியுது.

மாஜினி: அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் ஏரியட்னி.

ஏரியட்னி: நீவீர் சொல்வது புரியுது எனக்கு. ஆயினும் இப்படித் திமிர்ப் பிடித்த ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை.

மிஸ். எல்லி: நீ என்ன அர்த்தத்தில் அப்படிப் பேசுகிறாய் ?

காப்டன்: ஏரியட்னி சொல்வது என்ன வென்றால், அவளது இதயம் பிளக்காது. வாழ்நாள் முழுவதும் அவள் ஒருவன் மீது ஆசைப் பட்டாள். ஏமாந்தாள் ! இதயம் நொறுங்கியது. இறுதியாக அவள் அஞ்சுவது : யாருமில்லை இப்போது அவள் இதயத்தைப் பிளக்க என்பதே !

ஏரிட்னி: (ஓடிப் போய் தந்தை முன் மண்டியிட்டு) அப்பா ! எனக்கு இதயம் இல்லை யென்று சொல்லாதீர் ! என் இதயமும் நொறுங்கி யுள்ளது !

காபடன்: (சற்று அழுத்தமாக) மகளே ! உனக்கு இதயமே இல்லாத போது அது எப்படி நொறுங்கும் ?

ஹெக்டர்: (குரலை உயர்த்தி) மேடம் அட்டர்வுட் ! உன்னை யாரும் நம்பக்கூடாது ! இங்கே நீ ஒரு நாடகக் காட்சியைக் காட்டி விட்டாய் ! (ஹெக்டர் வேகமாகப் போகிறான்)

ஏரியட்னி: (ஹெக்டர் பின்னால் ஓடி) ஹெக்டர் ! ஹெக்டர் ! அப்படிச் சொல்லாதே !

மாஜினி: என்ன வேதனைக் காட்சி ! நான் ஏதாவது உதவி செய்யலாமா ?

காப்டன்: தேவை இருக்காது ! தூங்கப் போ நீ ! யாருக்கும் உன் உதவி தேவை யிலை !

(மாஜினி போகிறார். காப்டன், எல்லியைத் தவிர மற்ற எல்லாரும் செல்கிறார். காப்டன் ஒரு மேஜை முன்னின்று ஏதோ வரைகிறார்.)

மிஸ் எல்லி: காப்டன் ஐயா ! உங்கள் வேலையை எதுவும் பாதிக்காதா ?

காப்டன்: இல்லை ! ஒரு சூறாவளிப் புயலில் நானொரு பாலத்தின் மீது பதினெட்டு மணி நேரம் தவித்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கையே ஒரு புயல்தான் ! நானதைத் தாங்கிக் கொள்ள முடியும்.

மிஸ். எல்லி: நீங்கள் என்ன நினைக்கிறீர் நான் மாங்கனை மணப்பது பற்றி ?

காப்டன்: படகு மோதிக் கொள்ளும் ஒரு கல்பாறைக் மற்றொன்றைப் போன்றதுதான் !

மிஸ். எல்லி: நான் மிஸ்டர் மாங்கனை நேசிக்க வில்லை காப்டன் !

காப்டன்: நீ நேசிப்பதாய் யார் நினைக்கிறார் ?

மிஸ். எல்லி: உங்களுக்கு வியப்பூட்ட வில்லையா ?

காப்டன்: இந்த வயதில் எனக்கு வியப்பு உண்டாகாது எல்லி !

மிஸ். எல்லி: இது எனக்கு மனப் போராட்டம். மாங்கன் என்னிடம் விரும்புவது ஒன்று ! நான் மாங்கனை விரும்புவது வேறு ஒன்றுக்காக !

காப்டன்: பணத்துக்குத் தானே !

மிஸ். எல்லி: ஆமாம் காப்டன் !

காப்டன்: ஒருத்தி கன்னத்தைக் காட்டுகிறாள் ! மற்றொருவன் அந்தக் கன்னத்தில் முத்தம் இடுகிறான் ! ஒருவன் பணத்தை அளிக்கிறான் ! மற்றொருத்தி அதைச் செலவழிக்கிறாள்.

மிஸ். எல்லி: அப்படியானால் இந்த கூட்டுறவில் யாருக்கு மிக்க ஆதாயம் ?

காப்டன்: இவரெல்லாம் பகல் வேளையில் ஆபீசில் பணிபுரிபவர். மாலை உணவு முதல் காலை உண்டி வரை அவரை நீ சகித்துக் கொள்ள வேண்டும். இரவில் நீண்ட நேரம் இருவரும் தூங்குவீர். பகல் முழுவதும் பிரிந்திருப்பீர். அப்போது அவன் பணத்தை நீ கடைகளில் செலவழிப்பாய். அம்மாதிரி இல்வாழ்க்கை உனக்குப் பிடிக்க வில்லை என்றால் நீ ஒரு கடற்படை ஆடவனை மணந்து கொள் ! ஓராண்டில் மூன்று வாரங்கள் தான் நீ அவனோடு உறவாடுவாய் !

மிஸ். எல்லி: அம்மாதிரி வாழ்க்கை பெரும்பாலோருக்கு ஏற்றதுதான் காப்டன்.

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 13, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சை முறிக்கும் இல்லம்
(Heartbreak House)

மூவங்க நாடகம்

(இரண்டாம் காட்சி)
அங்கம் -2 பாகம் -12

“அவள் யாரையும் வெறுக்கவும் இல்லை; எவரையும் நேசிக்கவும் இல்லை. குறிப்பாக தாய்மைப் பாசமே அவளிடம் மேலோங்கி இருபது வயதில் இறந்த என்னிளைய தங்கை மீது சிறிதளவு இருந்தது. ஆனால் அந்தத் தாய்ப் பாசம் தன் மகளை இழந்த பிறகு அவளை உலுக்கி விட்டது. எங்கள் மீது அவளுக்குக் கவலை இல்லாமல் போனது.”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (தன் தாயைப் பற்றி) (Play : You Can Never Tell)

இருவித டன் (Dunn) இனம் இருக்குது ! ஒன்று குடிக்கும் டன் இனம். இன்னொன்று சிந்திக்கும் டன் இனம் ! அவரவர் தனித்தனிப் பாதையில் போவார். நான் குடிகார டன் ! அவர் சிந்தனை டன். அதனால் அவர் என்னைச் சுட வேண்டும் என்ற உரிமை அவருக்கு இல்லை.

ஜார்ஜ் பெர்னாட் ஷா (Burglar in The Heartbreak House)

++++++++++++++++

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனை களோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.
7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன்

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

***************************

(இரண்டாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). அதே இல்லம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : இரவு

அரங்க அமைப்பு : திரை தூக்கியதும் மிஸ் எல்லி முன்னே வர, கோமான் மாங்கன் பின்னே வருகிறார். இரவு விருத்துக்கு எடுப்பான ஆடை அணிந்துள்ளார். எல்லி மணக்கப் போவதில்லை என்று மாங்கன் சொல்லாமல் சொல்கிறார். எல்லியும் தான் வேறு ஒருவரை நேசிப்பதாகச் சொல்லும்போது மாங்கன் அதிர்ச்சி அடைந்து நாற்காலில் சாய்கிறார். மிஸ் எல்லி மாங்கன் நெற்றியைத் தடவித் தூங்க வைத்து வெளியேறுகிறாள். வேலைக்காரி மாஜினி, ஹெஸியோன் மூவரும் மாங்கன் மரித்து விட்டதாகக் கருதுகிறார். மயக்க முற்றது போல் பாசாங்கு செய்யும் மாங்கன் எழுந்ததும் தன்னை இகழ்ந்தோரை வெறுத்து வெளியேற விரும்புகிறார். அப்போது காப்டன் வீட்டில் ஒரு திருடன் நுழைகிறான்.

+++++++++++++++++++++

அங்கம் -2 பாகம் -12

(மூவங்க நாடகம்)

(சென்ற வாரத் தொடர்ச்சி)

திருடன்: காப்டன் ஐயா ! எங்கள் பரம்பரை மனிதன் இல்லை இவர் ! இருவித டன் (Dunn) இனம் இருக்குது ! ஒன்று குடிக்கும் டன் இனம். இன்னொன்று சிந்திக்கும் டன் இனம் ! அவரவர் தனித்தனிப் பாதையில் போவார். நான் குடிகார டன் ! அவர் சிந்தனை டன். அதனால் அவர் என்னைச் சுட வேண்டும் என்ற உரிமை அவருக்கு இல்லை.

காப்டன்: நீ அதனால்தான் திருடனாய் மாறிவிட்டாய் ! இல்லையா ?

திருடன்: இல்லை காப்டன் ஐயா ! நாமிருவரும் கடற்படைப் பயிற்சிக் கூடத்தில் படித்தவர் ! திருடனாகி அத்துறையை நான் அவமதிப்பேனா ? நானொரு திருடன் இல்லை ஐயா !

ஏரியட்னி: (முன்வந்து) பின் ஏன் என் வைர அணியைத் திருட வந்தாய் ?

திருடன்: அவை வைரக் கற்களா அல்லது போலிக் கற்களா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் கோபக்கார கோமான் டன் என்னைச் சுட்டுக் காயப் படுத்தி விட்டார்.

வேலைக்காரி கின்னஸ்: (ஓடிவந்து) நீ திருடனாய் இருந்ததால்தானே வீட்டைத் திறந்து யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்தாய் ?

ரான்டல்: இது உன் சொந்த இல்லம் என்று நினைத்து ஜன்னல் வழியே ஏறி வந்தாயா ?

திருடன்: உங்களிடம் பொய் சொல்லிப் பயனில்லை. மற்ற எல்லாக் காப்டன்கள் வீட்டிலும் நான் களவு புரியலாம். ஆனால் இன்று நானிந்தக் காப்டன் ஷொடோவர் வீட்டில் திருட வந்தது தவறுதான் ! காரணம் காப்டன் ஸான்ஸிபார் தீவின் பிசாசுக்குத் தன்னை விற்று விட்டவர் ! கூர்ந்து நோக்கி மனித இதயத்தில் ஒளிந்திருக்கும் உண்மையைக் கண்டு விடுவார். ஆனால் நானொரு திருடன் இல்லை காப்டன் !

காப்டன்: நீ ஓர் நேர்மையான மனிதனா ?

திருடன்: நான் சமூகத்தில் என் சகபாடிகளை விட நல்லவனாக உலவ வில்லை. ஒருபோதும் நான் அப்படி நடிப்பதில்லை காப்டன். நான் செய்பவை அப்பாவித்தன மானது. வழிபாடு போன்றது. நல்லவர் வாழும் இல்லத்தைத் தேடிச் செல்வேன் ! இங்கே செய்தது போல் அங்கே செய்வேன் ! அதாவது வீட்டுக்குள் தெரியாமல் நுழைவேன். சில கரண்டிகள், வைர அணிகள் ஆகியவற்றை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு ஓர் சத்தமிடுவேன் ! சிலவற்றைக் களவாடிக் கொண்டு ஓடுவேன். பிறகு அகப்பட்டுக் கொண்டு விழிப்பேன் ! தப்பிச் செல்லும் போது சிக்கிக் கொள்வது எப்படிக் கடினமானது என்று தெரியுமா ? மேஜை நாற்காலிகளில் இடித்துக் கொண்டு காயத்துடன் யாரும் காணாமல் ஓடுவது எனக்கொரு கைதேர்ந்த கலை !

ரான்டல்: நீ சிக்கிக் கொண்ட பிறகு என்ன செய்வாய் ? எடுத்த வைரங்களையும் கரண்டிகளையும் திருப்பிக் கொடுப்பாயா ?

திருடன்: கடவுள் முன்பாக நான் ஓடிப் போக முடியாது தூக்கிக் கொண்டு.

காப்டன்: (வேலைக்காரியைப் பார்த்து) கின்னஸ் ! இந்த மனிதனை உனக்கு நினைவிருக்கிறதா ?

கின்னஸ்: நினைவிருக்குது எனக்கு. இந்த அயோக்கியனை நான் மணந்திருந்தேன் ஒருகாலத்தில் !

ஹெஸியோன், ஏரியட்னி: (இருவரும் சேர்ந்து) என்ன கின்னஸ் ? இந்தப் போக்கிரித் திருடனை மணந்தவளா நீ ?

திருடன்: இவள் சட்டப்படி என் மனைவி இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள வில்லை. அதைக் கிளற வேண்டாம்.

காப்டன்: இவனை நீ வெளியே இழுத்துச் செல் கின்னஸ் !

கின்னஸ்: திருடனோடு வேலைக்காரி நடமாட வேண்டுமா ?

காப்டன்: கடற் கொள்ளைக் காரனுக்கும், ஊர்க் களவாடிக்கும் ஒரே குருதி ஒரே தசைதான் உள்ளது. இருவரும் வீட்டை விட்டு வெளியே போவீர்.

திருடன்: உங்கள் ஆணைப்படியே செய்கிறேன் காப்டன். (போகிறான்)

மாஜினி: இந்த வீட்டில் திருடனோடு வாழ்ந்த வேலைக்காரி வேலை செய்வதா ?

கின்னஸ்: மிஸ்டர் டன் ! நீங்கள் ஏன் அவனைச் சுட்டுக் காயப் படுத்தினீர் ? என்னிடம் விட்டிருக்க வேண்டும். எனக்கு யாரென்று முதலில் தெரிந்திருந்தால், நானே முன்வந்து இந்த போக்கிரியைச் சுட்டிருப்பேன் ! (போகிறாள்.)

(எல்லாரும் ஒதுங்கிச் செல்கிறார், எல்லியைத் தவிர. மாஜினி அமர்கிறார்.)

ஹெஸியோன்: அப்படியனால் அப்பாவி கின்னஸ் இந்த அயோக்கக் கள்வனின் காதலியா ?

ரான்டல்: இரு தம்பதிகளும் இப்போது தம் பழைய சண்டைகளைப் புதிதாய் விரித்துக் கொண்டு வாதாடலாம் !

ஏரியட்னி: ரான்டல் ! திருமணம் ஆகாதவன் நீ ! உனக்கென்ன தெரியும் இல்வாழ்வைப் பற்றி ? வாயை மூடிக் கொண்டு சும்மா இரு !

ரான்டல்: அடக்குமுறைக்காரி நீ ஏரியட்னி !

ஹெஸியோன்: இன்று எல்லோரும் களைத்துப் போயிருக்கிறோம். போதும் இந்த உரையாடல். போகலாம் நாமெல்லாம் தூங்க !

ரான்டல்: இன்னொரு திருடன் நுழைவான் !

மாஜினி: நிச்சயம் வரப் போவதில்லை.

ரான்டல்: ஏன் வரமாட்டான் ? இங்கிலாந்தில் ஏராளமான திருடர் உள்ளார் !

ஹெஸியோன்: (மாங்கனைப் பார்த்து) இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர் ?

மாங்கன்: (வெறுப்புடன்) இந்தத் திருடன் இங்கு வந்து என் மூக்கை உடைத்து விடான் ! சற்று தோட்டத்தில் உலவி நான் புதுக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் !

ஹெஸியோன்: (ஓடி வந்து) நல்ல யோசனை ! நானும் உம்மோடு வரலாமா ? தோட்டத்தில் வெண்ணிலவு பொங்கி பொழிகிறது நம்மை வரவேற்க !

மிஸ். எல்லி: போவீர் மிஸ்டர் மாங்கன் ! போ நீயும் ஹெஸியோன் ! உங்கள் இருவருக்கும் சுவாசிக்க புதுக் காற்று தேவை. போய் வாருங்கள் !

(ஹெஸியோன் மாங்கன் கரத்தோடு தன் கரத்தைக் கோர்த்துக் கொண்டு மகிழ்ச்சியாகப் போகிறாள்.)

மாங்கன்: ஹெஸியோன் ! உன் கல் நெஞ்சிக்குள் நேசிக்கும் கனிவும் இருக்கிறதா ?

ஏர்யட்னி: (ஹெஸியோனைப் பார்த்து) என்ன கோலாகலக் காட்சி நடக்குது இங்கே ? இந்த மாங்கனுக்கும் ஹெஸியோனுக்கும் என்ன நேர்ந்து விட்டது ? விந்தையான ஜோடிகள் !

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 7, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா