ஒரு சொட்டுத் தண்ணீர்
ராம்ப்ரசாத்

நாவை எட்டிவிடும்
ஒரு அசட்டு வார்த்தை
தலைக்குப்புற விழ
எத்தனிப்பதுபோல
குழாய் நுனியினின்றும்
விழ எத்தனிக்கிறது
ஒரு சொட்டுத் தண்ணீர்…
சன்னலூடே வழிந்துவிழும்
ஒளிக்கற்றைகளில் எவற்றுக்கெல்லாமது
தங்க வீடளித்ததென்று
கணக்கிட இயலவில்லை
பளீரென்ற ஒளித்திரளில்…
விரித்ததும் தெரித்துவிடாத
தின்மை நிறைந்த காற்றில்
மெல்லத் தலைதூக்கிப்
பார்க்கிறது ஒர் எதிர்பார்ப்பு…
– ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)