திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20071129_Issue

அரசியலும் சமூகமும்

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்

வாஸந்தி "இந்திரா காந்தி கொல்லப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லையா என்று கேட்கிறாய் ! இல்லவே இல்லை! என்ன நடக்கவேண்டுமோ அதுதான் நடந்தது." நான் எனது நாவலுக்காகக்[மௌனப்புயல்] கள ஆய்வு செய்யப் பஞ்சாபுக்குச் சென்ற போது…

குறிப்பேட்டுப் பதிவுகள் – 3

வ.ந.கிரிதரன் [அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக்…

படித்ததும் புரிந்ததும்..(12) வன்முறை – உதிரிப்பூக்கள் – மீடியர்

விஜயன் 12) நவம்பர் 24; லக்னோ, வாரனாசி, பைசாபத்தில் ஒரே நேரத்தில் கோர்ட்டில் குண்டு வெடித்து 15 பேர் பலி. வக்கீல்களை பழிவாங்க தீவிரவாதிகள் கைவரிசை. நவம்பர் 26; சட்டநாள் உரையில் என் சிந்தனைகள்.…

ஜெகத் ஜால ஜப்பான் – 2. ஓஹாயோ கோசைமாஸ்

சித்ரா சிவகுமார் காலை வணக்கத்தை ஜப்பானியர்கள் இப்படிக் கூறுகின்றனர். ஜப்பானின் தட்ப வெப்ப நிலை மிகவும் மோசமானது என்றே சொல்லலாம். வடக்குப் பகுதியில் குளிர்காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும். மத்திய கீழ் பகுதிகளில் சற்றே…

மும்பைத் தமிழர் அரசியலும் தாதாக்களும் : (2)

புதியமாதவி சென்ற வாரம் பெரியவர் வரதராசமுதலியார் குறித்து சில செய்திகளைப் பதிவு செய்திருந்தேன். இவ்வளவு செய்திகள் இருக்கிறதா என்று பலரின் மடல்கள். நான் அவர் பற்றி அறிந்ததில் சொல்லக்கூடிய சில செய்திகளை மட்டுமே சொல்லியிருந்தேன்.…

டிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள்

மலர் மன்னன் (எச் ஐ வி / எய்ட்ஸ் தொடர்பான கல்வி, ஆய்வு, ஆலோசனை, பரிசோதனை மற்றும் மருத்துவ சேவையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஒய் ஆர் ஜி கேர் தொண்டு…

நூலகம் எனும் அன்னை

ஜெயமோகன்அருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர், இந்த நூலகத்தில்தான்…

“பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை

அருணகிரி - மார்வின் ஹாரிஸ் எழுதிய இந்தப்புத்தகம் குறித்து திண்ணையில் வந்த கட்டுரைகளைப் படித்தபின் இதனைப்படிக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஆங்கில மூலத்திலேயே சில வாரங்களுக்கு முன் படித்து முடித்தேன். அருமையான நூல்.…

சூரன் போர்

அ.முத்துலிங்கம் ஐந்தாம் வகுப்பு சரித்திரப் பாடப் புத்தகத்தில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ், இந்தியாவுக்கு கடல்மூலம் பயணம் செய்தது வாஸ்கொடகாமா, உலகத்தை முதன்முதல் சுற்றியது மகெல்லன் என்றெல்லாம் படித்திருக்கிறோம். மகெல்லனுடைய நீண்ட பயணத்தைப் பற்றிய புத்தகம்…

அறிவிப்புகள்

மலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு

அருளடியான்மலேஷியாவில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு, மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் அந்நாட்டு குடிமக்கள். இவர்கள் மீது மலேஷிய காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனை…

கடிதம்

ச.சிவபாலமுருகன்மதிப்பிற்குரிய திண்ணை பதிப்பாளருக்கு,வணக்கம்... நான் திருக்குவளை அருகில் உள்ள குண்டையூரை சேர்ந்தவன்..சேக்கிழாரின் பெரியபுராணத்தில் வரும் சிவ பக்தர் குண்டையூர்க் கிழார் பரம்பரையை சேர்ந்தவன்..கிழார் பற்றிய வரலாற்றில் இன்னும் அவரின் பரம்பரையினர் (அமரர் மினக்ஷிசுந்தரம் குடும்பத்தினர்)…

கடிதம்

ஜடாயுஅன்புள்ள முத்துலிங்கம் ஐயா, 49-வது அகலக் கோடு என்ற அந்தக் கதை அருமையாக இருந்தது.. உங்கள் ஒவ்வொரு கதையும், கடைசி வரியைப் படிக்கையில் ஒரு பெருமூச்சு, ஒரு குறுநகை அல்லது ஒரு விகசிப்பை வரவழைக்கும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சச் சிற்பியின் மர்மச் செங்கல் கண்ணுக்குத் தெரியாத கருமைப் பிண்டம் ! கண்ணுக்குப் புலப்படாத கருமைச் சக்தி, பிரபஞ்சச் சிற்பியின் குதிரைச் சக்தி ! கவர்ச்சி…

இலக்கிய கட்டுரைகள்

பெருஞ்சித்திரனாரின் பள்ளிப்பறவைகள்

முனைவர் மு.இளங்கோவன் தமிழ்த்தேசியப் பாவலர்களுள் குறிப்பிடத்தகுந்த பெருமைக்கு உரியவர் பெருஞ்சித்திரனார் ஆவார். இவர் உரைநடை வரைவதிலும் பாட்டு வடிப்பதிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமைக்கு உரியவர். பாவேந்தருக்குப் பின் தமிழர்கள் எழுச்சிபெறத்தக்கப் பாட்டுகளைப் பல்வேறு…

‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 1 -தேவன்

வே.சபாநாயகம் 1. எழுத்தாளன் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். பேனாவைச் சற்று ஒதுக்குப் புறமாக வைத்து ஓய்வு கொடுத்து விட்டால் அப்புறம் அதன் அருகில் கையைக் கொண்டு போவது சிரமம். பேனாவும் கனக்கும். அதைக்…

விமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல

மலர்மன்னன்தலைமுறைகள் தோறும் லா. ச. ரா. அவர்களின் எழுத்தை ஆராதிப்பவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள் என்பதை அறிந்துள்ளேன். ஒரு தலைமுறை ஆராதனையாளர் அடுத்த கட்டத்திற்குச் சென்றதும், பின் வரும் தலைமுறையில் புதிய ஆராதனையாளர்கள் வந்த வண்ணமிருப்பார்கள்.…

அறிஞர் மு.சண்முகம் பிள்ளை தமிழகராதி – தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி

தேவமைந்தன் தமிழ்மாமணி மு.இறைவிழியனார், 'நற்றமிழ்' என்னும் இலக்கிய இலக்கணத் திங்களிதழை நிறுவியவர். இன்னும் தொடர்ந்து அது நடந்து வருகிறது. அவர் தமிழுக்குப் பல தளங்களிலும் தொண்டு புரிந்தவர். ஒரு முறை என் இல்லத்துக்கு அவர்…

சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும்

எஸ்.ஷங்கரநாராயணன் சிறுகதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்று, காலந்தோறும் அதன் வரையறைகளையும் எல்லைகளையும் விரித்தும் சுருக்கியும் மாற்றியும், பரோட்டா மாவு பிசைகிறாப்போல எதாவது உருட்டிப் புரட்டிக்கொண்டே வருகிறார்கள். ஒரே விஷயத்தை மையமிட்டு அது…

கதைகள்

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாபொய் உரைத்தால் இறைவனே என்னை அடித்துக் கொல்லட்டும் சொன்னதைப் பிறருக்கு உறுதிப் படுத்த ! இதயமும் இதயமும் தழுவிக் கொண்டு பேசிக் கொள்ள அனுமதி தா ! உனது நட்பரங்கினில்…

அத்தையம்மா!

நவநீ “வாம்மா! புண்ணியவதி! வா! வரும்போதே தூக்கி முழுங்கிட்டு வந்திருக்கியே வா! வந்து வெளக்கேத்தி வய்யிம்மா வெளக்கேத்தி வைய்யி! தலை தலையாய அடிச்சுக்கிட்டனே கேட்டானா அந்தப் படுபாவி! போச்சே! எல்லாம் போச்சே! கொள்ளி வைக்கிற…

வளரும் வலிகள்

ஜெயந்தி சங்கர் கொஞ்ச நாட்களாகவே ரூபிணி கமலா வீட்டுக்கு அடிக்கடி போய்வருகிறாள். ஒரு வேளை ரூபிணி அங்கு போயிருப்பளோ. கமலா வீட்டுத் தொலைபேசி எடுக்க ஆளில்லாமல் அடித்துக் கொண்டே இருந்தது. குட்டி பிறந்த போது…

தைவான் நாடோடிக் கதைகள் (2)

தமிழில் - மதுமிதா >>> 2. கலங்கிய ஏரியின் கதை தைவானின் நீண்ட நதியை உங்களுக்குத்தெரியுமா? ம்ஹ¤ம்? சரி விடை சூவோ ஷ¥ க்சீ. இந்நதி நேங் கா வோ ஷான் லிருந்து அடர்ந்த…

மாத்தா ஹரி அத்தியாயம் -38

நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணிக்கு நினைவு தெரிந்து நவம்பர் மாதத்தில் இப்படியொரு கால நிலையைக் கண்டதில்லை. திடீரென்று குளிர் கூடுவதும், அடுத்தநாள் குறைவதுமாக இருக்கிறது. அரவிந்தனுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு மாறாக பாரீஸ¤க்கு அவளால் ஞாயிற்றுகிழமை காலையில்தான்…

கவிதைகள்

கனவில் நிகழுகிற பயங்கர உலகம்

தீபச்செல்வன் 01. எனது கனவுகள் ஏன் பயங்கரமானவையாக இருக்கின்றன? முதலில் இரவு பயங்கரமாக வருகிறது மிக தாமதமாகவே தூக்கம் வருகிறது முழு தூக்கத்தையும் பயங்கர கனவுகள் விழுங்கி விடுகின்றன. 02 ஆற்றங்கரை குடிசைகளை வெள்ளம்…

பூக்கள்

அப்துல் கையூம் இறைவன் பிரசுரிக்கும் இணையில்லா பத்திரிக்கை இந்த பூக்கள். வெல்வெட் இதழ்கள்; வண்ண வண்ண எழுத்துக்கள். அச்சுப்பிழை இலக்கணப்பிழை இல்லாத அழகிய படைப்பு. காலை பதிப்புமுண்டு மாலை பதிப்புமுண்டு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட பிரதிகள்…

மனித வேட்டை

கே.பாலமுருகன் சக மனிதர்களின் உணர்வைப் பற்றி அக்கறைகள் கொள்ளாத மனித வேட்டை நிகழ்ந்து கொண்டிருக்கிறது! சிறுமைப்படுத்தி அகம் தாழ்ந்து கொள்வது எந்தக் கடவுளுக்கு மனிதப் பலி கொடுப்பதற்கு? தன்மூப்புத்தனமும் அதிகாரத்தனமும் எழுந்து வந்து முகங்களாக…

மூழ்கும் காதல்

சக்தி சக்திதாசன் கண்மணியே என்னெஞ்சம் காதலினால் கட்டுண்டது நிந்தன் நினைவுகள் தந்த குளிர்மை உடலை வாட்ட உந்தன் கனவுகள் எனும் உஷ்ணப் போர்வை தழுவியதே விழிகள் என்னும் அம்பு விட்டெறிந்த பார்வைக் கணைகள் கடந்து…

அக்கினிப் பூக்கள் – 2

சி. ஜெயபாரதன், கனடா ஈராக்கில் ஆஹாவென எழுந்தான் விடுதலைச் சூரியன் ! குடிமக்கள் நிம்மதியாகத் தூங்கினர் எல்லைக் கூடாரத்தில் ஞானப் பெண்ணே ! செருப்பைத் தைத்துக் கொண்டு பாதம் குறுக்கப் போனான் ! காலைக்…

தாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமூலையிலே அமர்ந்து நண்பரிடம் என் கதையைச் சொல்வதில் மூழ்கிப் போனேன் ! வீட்டுச் சம்பவங்களை முற்றப் படிகளில் நின்று நான் பகிர்ந்து கொண்டேன் ! என் வாக்கு மொழிகளைச்…

பாத்திரத்தில் இல்லை

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) இன்னும் ஒரு மாயையில்தான் உலகம் இயங்குகிறது காலத்திற்கேற்ப மாயையின் பெயர் மாறியிருக்கிறதேயொழிய மாயை மாறவில்லை ஏதோ ஒரு தனிச்சாயம் பூசிக்கொண்டு தனித்துநிற்பதாய் மனப்பாலில் மயங்கி மனக்குரங்கு முடியாமைக்கும் பற்றாக்குறைக்கும் குறைபாட்டிற்கும்…

தாழ் படுக்கைகள்

நிஷாந்தன் இருப்புப் பாதை வண்டியின் தாழ் படுக்கைகள் எப்போதுமே வசீகரமானவை சன்னலோரத்தின் காற்றுக்காகவும் சில சமயங்களில் காட்சிக்காகவும். பெரும்பாலும் அவை சினேகம் கொண்டிருப்பது இயலாதவர்களுடன் தான். எப்போதாவது தாழ் படுக்கைகள் இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டால் அவை…

நகைச்சுவை

காதலர் தின’த்தில் ஒரு பேட்டி!

கிரிஜா மணாளன் (கற்பனை: கிரிஜா மணாளன், திருச்சி.) ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (~உடான்ஸ் டி.வி|யில் ஒரு காதல் மன்னரைப் பேட்டி (GUEST MEET) காண்கிறார் செய்தி வாசிப்பாளர்.) பேட்டியாளர்: காதலைப்பற்றி கரைகண்டவரும், தனது ~காதல் முயற்சி|களில் நூறுமுறை…