திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070726_Issue

அரசியலும் சமூகமும்

மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்

ஜடாயு 1993-ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி என்னால் மறக்க முடியாத ஒன்று. அப்போது நான் புனே நகரில் பணிபுரிந்து வந்தேன். விநாயக சதுர்த்தியை 10 நாட்கள் சமூக விழாவாக மிக விமரிசையாகக் கொண்டாடும் கலாசாரம்…

அறிவிப்புகள்

கடிதம்

திசைகள் அ.வெற்றிவேல் அன்புள்ள நண்பர் திரு.குருராகவேந்திரன் அவர்களுக்கு நன்றியுடன் வணக்கம். எனது கட்டுரை குறித்து தங்களின் கடிதம் கண்டேன். கட்டுரையின் நோக்கம் "மக்கள் தொலைக்காட்சியின்" மக்கள் பணிகள் பற்றியே.அது ஒரு மொழி ஆராய்ச்சிக் கட்டுரை…

கடிதம்

செல்விஅன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு. 1.மஞ்சுளா நவநீதன் அவர்கள் எழுதிய சிவாஜியை வரவேற்ப்போம் என்ற கட்டுரையில் 1500 ரூபாய் கொடுத்து இப்படத்தை பார்ப்பது சட்டத்தை மீறிய செயல் இல்லை என்கிறார். பின்னர் ஏன் பிளாக் டிக்கெட்…

அரவிந்தன் நீலகண்டனின் அற நெறி!?

தாஜ் முடிவடையாத தேடலுக்குள்... சதா சஞ்சரிக்கும் சாதாரன மனிதனின் தவிர்க்க முடியாமல்போகும் எதிர்வினையாக மட்டுமே இதை இங்கே பதிவு செய்கிறேன். யார் இந்த அரவிந்தன் நீலகண்டன்? இந்தியப்பத்திரிகைகளையும், அறிவு ஜீவிகளையும், இஸ்லாமியரையும், இஸ்லாம் மதத்தையும்…

தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது

அறிவிப்பு கனடாவில், லாப நோக்கமற்ற குழுவாகப் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைக்களுக்காக…

நல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:

எண்கோணம் மரியாதைக்குரிய மலர்மன்னன் பற்றி கட்டுரை எழுதி, இஸ்லாமிய தீவிரவாதத்தை இஸ்லாமிய தீவிரவாதம் என சொல்லக்கூடாது என்று கூறியுள்ள நல்லடியாருக்கு நான்கு கேள்விகள்: 1. முகம்மதியர் அல்லாதவர்கள் முகம்மதியர்களுக்குத் தலைவர்களாக வருவதை எதிர்க்கிறீர்களா? 2.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூட்டு யுகப் பிரளயம் ! ஈரோப்பில் வேனிற் புயல் ! இங்கிலாந்தில் பேய்மழை ! -6

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஈரோப்பில் சூட்டுப் பிரளயம் எழுந்தது ! பேரளவு பேய்மழைப் பொழிவு ஓரிடத்தில் ஒருநாள் ! வீரிய வேனிற் காலப்புயல் வேறிடங்களில் ! மீறிய வெப்பக் கனலால் தானாகக்…

இலக்கிய கட்டுரைகள்

கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு

பிரியங்காமனித உரிமைச் செயற்பாட்டாளரும் கலை இலக்கிய அரசியல் மாற்றுச் சஞ்சிகையான உயிர் நிழலில் ஸ்தாபகருமான நண்பன் கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு பாரிசில் 15.07.2007 நடைபெற்றது. தோழரும் கவிஞருமான அருந்ததி அவர்களின்…

புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்

தேவமைந்தன்'புலமைக் காய்ச்சல்' என்பது புலமை தோன்றிய மறுகணமே தானும் உண்டாகியிருக்கும் போலிருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை தமிழில் 'புலமைக் காய்ச்சல்' என்பதற்கான சான்றுகள் சோழர் காலத்திலிருந்துதான் கிடைக்கக்கூடும். ஆங்கிலத்தில் எலிசபெத் காலத்திலிருந்து இதே புலமைக்காய்ச்சல் தோன்றியிருக்கிறது.…

சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்

ஜெயமோகன்[Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ] திருநெல்வேலியைப்பற்றி அறிவதற்கான முதல் வரலாற்று நூலாக இருப்பது பிஷப் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம். 1916ல் சென்னை ஆளுனரின் ஆணைக்கேற்ப நெல்லை ஆட்சியர் ஹெச்.ஆர்.பேட்…

பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9

கரு.திருவரசு கடைபிடி - கடைப்பிடி கடை என்பதன் பொருள் என்ன? இதற்குப் பல பொருள்கள் இருந்தாலும் நாம் இங்கே காணும் சொற்புணர்ச்சிச் சொற்களின் விளக்கத்திற்காக ஒரு பொருளைமட்டும் காண்போம். அதாவது, பொருள் விற்கும் கடை,…

ஒரு தாயின் புலம்பல்

எஸ் ஜெயலட்சுமி . ''மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை தானே தாம் வாழும் நாளே" என்கிறான் பாண்டியன் அறிவுடைநம்பி. யாரையாவது வாழ்த்தும் போதும் 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.பதினாறு பேறுகளுள்…

அன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’

வளவ துரையன் "ஒரு நவீன கவிதை, அதற்குப்பின் அக்கவிதையின் மையத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ உணர்த்துவது போல் 'நச்'சென்று ஒரு ஹைக்கூ" இதுதான் ஹைபுன்னின் வடிவம். அன்பாதவனின் 'மாயவரம்'தான் தமிழில் வெளிவந்துள்ள தனிப் படைப்பாளியின் முதல்…

கதைகள்

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)

சி. ஜெயபாரதன், கனடாஉன்னைப் பற்றி உரைத்துள்ளார் ஆண்டனி, நம்பத் தகுந்த நபரென்று ! உமது தளபதி என்னை ஏமாற்றி னாலும் ஏற்புடைத்தே ! எகிப்த் அரசியைப் பிச்சை எடுக்க வைத்தால் இப்படிக் கேட்பாள் என்று…

போர் நாய்

ராகவன் தம்பி பல வாரங்களாக வீரர்கள் பதுங்கு குழிகளில் தயார் நிலையில் காத்திருந்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. எந்த சண்டையும் நிகழவில்லை. யாரும் யாரையும் சுட்டு வீழ்த்தவில்லை. ஏதோ சடங்குக்காக செய்வது போல, சில ரவுண்டுகள்…

தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!

வ.ந.கிரிதரன் அடுத்த மூன்று வாரங்களும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் ஹரிபாபுவுடன் கழிந்தது. ஹரிபாபு கூறியபடியே அவர்களுக்குமொரு நடைபாதைக் கடையினை கிறிஸ்தோபர் வீதியும், நான்காம் வீதி மேற்கும் சந்திக்குமிடத்தில் போட்டுக் கொடுத்துவிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி மற்றும்…

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 16

வே.சபாநாயகம் கண்ணம்மாவின் பெரியம்மாவுக்குக் குழந்தை இல்லாததால், அவளைக் கைக்குழந்தையாய் இருக்கும்போதே அவள் அம்மாவிடமிருந்து தூக்கி வந்து வளர்த்து வந்தார். ஆரம்பப் பள்ளியில் சிதம்பரம் அரிச்சுவடி வகுப்பில் சேர்ந்த அன்றைக்குத்தான் கண்ணம்மாவும் அவரது வகுப்பில் சேர்ந்தாள்.…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 20

நாகரத்தினம் கிருஷ்ணா - வேன்சான் கொலைகளம் பூத்துக்குலுங்கும் வெர்வேன் இரவை பகல் எழுப்பும்வேளை கொலைமரத்தில் தோட்டாக்களால் துளைக்கப்படவென்று கண்கள் கட்டுண்டவளாக பிரியத்துக்குகந்த பெண் உளவாளி; காணச் சகியாமல் கண்களை மூடி "ஆகட்டும்" என இரைந்தான்,…

தீர்வு

கௌரிகிருபானந்தன் தன்னுடைய கோபத்தையும், எரிச்சலையும் பாத்திரங்கள் மீது காட்டியபடி வேகமாக தேய்த்துக் கொண்டிருந்தாள் ராக்காயி. கணவனை நினைத்தால் அவளுக்கு ஆத்திரத்தில் உடல் பற்றி எரிவது போல் இருந்தது. இந்த வயதில், இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக…

நாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு!

தாஜ் ஜன்னல் வழியே வானம் கறுத்துக் கிடக்க; மழை சரளமாக பெய்தது. அவ்வப்போது ஒளி நடனமாய் மின்னலின் நர்த்தனம். இடி தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தது. நேற்று ஊர்கூடி பஞ்சாயத்து துவங்கிய நேரத்தில் பிடித்த மழை!…

புரிந்துகொள்ளல்

அசை சிவதாசன்Hi எனது பெயர் Andy. அப்படித்தான் எனக்கு என்னை அழைக்க விருப்பம். ஆனால் என் அம்மா என்னை ஆனந்தன் என்றே அழைக்க விரும்புகின்றாள். போகட்டும். அவளது ஆசையை நான் நிறைவேற்றியே ஆகவேண்டும். பாடசாலையில்…

மைதாஸ்

சிறில் அலெக்ஸ் மைக்கேல் தாஸ் பங்களாவிலிருந்து வெளிவந்தார் ஜேசுராஜன். 'இங்கேர்ந்து ஆட்டொவுல போணும்னா நாப்பது அம்பது ரூவாயாது ஆவும்' யோசித்தார். "தம்பி ரிக்சா வருமா?" "எங்க சார்?" "எக்மோர்." "ஸ்டேசனுக்கா?" "ம்." "வாங்க." அதுவரை…

கலைகள்

ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்

பாண்டித்துரை22.02.2007 ஞாயிறு அன்று சிங்கப்பூரில் அமைந்துள்ள அமோக்கிய நூலகப்பிரிவில் தீவிர இலக்கியவாசிப்பில் ஈடுபட்டிருக்கும் வாசகர் வட்டம் ஓவியர் கா. பாஸ்கர் அவர்களுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது . அந்நிகழ்வின் பதிவினை திண்ணை வாகர்களுக்காக பதிவுசெய்துள்ளேன்.…

கவிதைகள்

விநாயகர் துதி!

ஆதிராஜ் பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தரவா? கூலிக்கு மாடாய் உழைத்து மடியும் மனிதன் நான்! பாடாய்ப் படுத்தாதே பார்! ஞாலம் வலம் வந்து நல்ல பழம் உண்பதற்கு வேலன்…

மரணம் அழகானது

புதிய மாதவிமரணம் அழகானது ஆடைகளின்றி அலங்காரமின்றி உயிர்த்துடிப்பை பிடித்து இழுத்து அணைத்து வாழ்க்கையைப் பிரசவிக்கும் மரணம் அழகானது. அம்மா.. கருப்பைச் சுமக்கும் உன் உடல்மட்டும்தான் உனக்கும் எனக்குமான உறவின் மிச்சம் என்ற என் கணக்குத்…

காதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவருகிறாய் நீ ! வருகை அறிவிப்பு வார்த்தை இன்றி ! உன் பார்வைக்குத் தெரியும்படி உட்கார்ந் துள்ளேன், உள்ளாரக் குறும்போடு முறுவலிக்கும் கண்ணிமைகள் பரிதி நோக்கிப் பகற் பொழுதில்…

வெள்ளை மாளிகை வல்லரசர் !

சி. ஜெயபாரதன், கனடா வெட்டிப் போரில் சடுகுடு விளையாடிப் பெட்டி பெட்டியாய்த் தோளில் சுமக்க வைத்து நினைவுச் சின்னங்களைத் தினமும் அனுப்பி வருகிறது வெடியரசு ஈராக் ! குருதியில் மூழ்கிக் குளிர்ந்து போன சடலங்கள்…

வீராயி

தமிழ் ஒளி வீராயி சிதைந்த சேரி. மழைபிடித்துப் பெய்கிறது ஐப்பசியில் ; ஏழை மனங்குமுறும் விதம் போலும் இடிக்கிறது வானில்! தழை பிடித்த மரமெல்லாம் குளிர் பிடித்துப் போக தலை நீட்ட முடியாமல் பறவையெலாம்…

நகைச்சுவை

கவிதை சுடும் !

ஸ்ரீனி கவிஞர் முடி வெட்டானும் இயக்குனர் வெளக்குமாரும்... கவிஞரே நான் பீல்டுக்கு புதுசு,நீங்கதான் நம்ப சீனுக்கு தக்க மாதிரி பாட்டு ரெடி பண்ணனும்? எழுதிட்டாப் போச்சு..கவிதையெல்லாம் நமக்கு ரொம்ப ஈஸியாச்சே.. அப்படிங்களா.. என்ன அப்படிங்களா..சும்மா…