திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030918_Issue

அரசியலும் சமூகமும்

ஆனந்தியின் டயரி : காதலா காவலா ?

ஆனந்தி ஒரு வழியாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் அண்ணா நகர்ல போலீஸ் செய்தது தவறுதான்னு ஒப்புதல் வாக்குமூலம் குடுத்துட்டாரு. அதனால காதலர்கள் சார்பா அவரை மன்னிக்கறேன். ஆனாலும் மனசு ஆறல. இதுவே…

கல்பாக்கம்

ஞாநி ிகல்பாக்கம் அணு உலைகள் நிரந்தர ஆபத்தாக இருந்து வருவது பற்றியும், அங்கு வேலைசெய்யும் ஊழியர்களுக்கு ஏற்பட்டு வரும் உடல் நல ஆபத்துகள் குறித்தும் ஜனவரியின் நடைபெற்ற ஒரு விபத்து பற்றியும் ஏப்ரல் இதழில்…

நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா ?

பத்ரி சேஷாத்ரி போன வாரம் இந்திய விமானப் படை சென்னைக் கடற்கரையில் போர்ச் சாகசங்களை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் மறைந்த வழக்கறிஞர் மற்றும் வரித்துறை நிபுணர் நானி பால்கிவாலா நினைவாக மற்றுமொரு…

தமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்

ஜடாயு தமிழக அரசின் இந்த சமீபத்திய சட்டம் அதீத ஆர்வக் கோளாறின் விளைவு போலவே தெரிகிறது. இல்லையென்றால் பசு வதைத் தடைச் சட்டத்தை வெகு தீவிரமாக நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் மத்திய பிரதேச காங்கிரஸ்…

கறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை

ரவிக்குமார் முன்னுரை கவனிப்பது - சொற்களையல்ல, ஒரு சொல்லிலிருந்து மற்றொன்றுக்குச் சொற்களினூடாக முடிவற்றுப் பாயும் துயரத்தைக் கவனிப்பது ' - மாரீஸ் ப்ளான்ஷொ (The Step not beyond) யதார்த்தத்தைக் கவித்துவத்தோடு மாற்றியமைப்பதுதான் நல்ல…

வாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)

மத்தளராயன் ஒவ்வொருத்தருக்கும் வாய்த்த இந்து பத்திரிகை அனுபவம் தனியானது. என்னுடையது இது. 'விஷ்ணுபுரம் ' குறுநாவலில் இருந்து. 60-களில் நிகழ்ந்ததாக ஒரு சின்னப் பையன் (நான் தான்) பார்வையில் சொல்லப்படும் கதை இது. 'இண்டு…

பூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்

வெங்கட்ரமணன் இன்று காலை தி ஹிந்துவின் மின்பதிப்பில் ஓவியர் திரு பூபேன் காக்கரின் மறைவு குறித்து படிக்க நேர்ந்தது. எழுத்தாளர், நாடக ஆசிரியர், சமூக விமர்சகர் என்று பல முகங்களைக் கொண்ட அறிவாளி திரு…

கடிதங்கள்

செப்டம்பர் 18, 2003 இந்து இதழ் பற்றி மஞ்சுளா நவநீதன் எழுதிய கட்டுரை நன்றாக இருந்தது . ஒரே ஒரு விஷயம் தவிர. இந்து இதழின் இனக்குழு மனநிலை பற்றி அவர் சொல்லியிருந்தார் .இந்து…

பலிகொடுத்து வழிபடுவதைப் பற்றி…

மு. சுந்தரமூர்த்தி ஒரு காலத்தில் திண்ணன் என்கிற வேடன் திருக்காளத்தியில் தான் வேட்டையாடிய மிருகங்களின் இறைச்சியை சிவலிங்கத்துக்கு படைத்து வழிபட்டதும், வெறும் தாவர உணவுகளை மட்டும் உண்ணும் அந்தணர் ஒருவர் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல்…

கற்றதனாலாய பயனென்கொல்

பரிமளம் மாணவர்கள் சிலரால் சிறப்பாகக் கல்வி கற்க முடிவதற்கும் வேறு சிலரால் இயலாமல் போவதற்கும் காரணம் என்னவென்று உறுதியாகக் கூற முடியாது. பெற்றோர் படித்திருந்தால் பிள்ளைகளும் நன்றாகப் படிப்பார்கள் என்று ஒரு காரணத்தைக் கூறினால்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்

கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம் எடுக்க உலகத்திலேயே மிகப்பெரிய பரிசோதனை நிலையத்தை கட்ட ஏப்ரல் மாதம் 2003ஆம் தேதியிலிருந்து தூத்துக்குடியில் ஜப்பானின் சாகா பல்கலைக்கழகமும் இந்திய அரசாங்கமும் இணைந்து துவக்கியிருக்கின்றன. சுத்தமான மின்சார சக்தியை உருவாக்கவும்…

கடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்

காற்று சக்தியையும், கடல் தண்ணீரையும் சேர்த்து மழையை உருவாக்கி பாலைவனங்களை பசுமையாக்கும் ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எடின்பரா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஸ்டாபன் ஸால்டர் அவர்களது ஆராய்ச்சிக்குழு 40 மீட்டர் விட்டம் உடைய காற்றால்…

இலக்கிய கட்டுரைகள்

அகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)

பாவண்ணன் உலக அழகி பட்டம் பெற்றவரும் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யாராய் அவர்களுடைய நேர்காணல் ஒன்று சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வார இதழில் இடம்பெற்றிருந்தது. அந்த நேர்காணலில் அவர்…

கிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை

யுவன் சந்திரசேகர் படைப்பிலக்கியம் போலவே, மொழிபெயர்ப்பும் ஒரு சிருஷ்டிகர மனோநிலையைக் கோருவதுதான். படைப்பிலக்கிய முயற்சிகளுக் குக் கிடைக்கும் கெளரவமும், அங்கீகாரமும் மொழிபெயர்ப்புக்குக் கிடைப்பதில்லை என்றபோதும், மொழிபெயர்ப்புப் பணிக்குப் பின்னாலுள்ள அர்ப்பணிப்புணர்வு மிகுந்த மதிப்புக்குரியது. தான்…

என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும்

சுந்தர ராமசாமி வாசகர்களை நேரடியாகச் சந்திக்கும் அனுபவங்களை அதிகம் நான் பெற்றதில்லை. அச்சந்திப்புகளைக் கூடுமான வரையிலும் தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன். வாசிப்பினூடேயே வாசகன் படைப்பாளியுடன் முழுமையான உறவைக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறேன். வாசகனுக்கும்…

கவிதை மொழியும் உரை நடை மொழியும்

நாகூர் ரூமி மீட்சி, 32/1990 கவிதை, உரை நடை போன்ற இலக்கிய வடிவங்களின் மொழிபற்றிய சிந்தனையை, கேள்விகளை எழுப்பும்போது அவை மறை முகமாக கவிதை அல்லது உரை நடை பற்றிய கேள்விகளாகவும் ஆகிவிடுவது தவிர்க்க…

ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்

இகாரஸ் பிரகாஷ் தமிழில் மட்டும்தான் பேச்சுத்தமிழ் ஒன்றாகவும் , எழுத்துத் தமிழ் ஒன்றாகவும் இருக்கிறது என்றும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் அளவில்லாதது என்று அண்மையில் பொதுமடல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இது உண்மைதான். இதன்…

கதைகள்

ஹே பக்வான்

நாகூர் ரூமி நான் அப்போது என்ன செய்து கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. தூங்கிக்கொண்டிருக்கவில்லை என்பது மட்டும் நிச்சயம். 'டாடி, பக்வான் டி.வி.லேர்ந்து யாரோ கூப்புடுறாங்க ' மகள் சொன்னபோது முதலில் புரியவில்லை. பக்வான் டிவி…

விடியும்! நாவல் – (14)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 14 கொக் கொக் கொக்கோக்கோ நேரத்தைப் பார்த்தான் செல்வம். இரவு பத்தரை மணி. என்ன சின்னம்மா இந்த நேரத்தில கூவுது. முந்தி கிழக்கு வெளிக்கிறதைப் பார்த்து கூவும். இப்ப குண்டு…

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு

இரா முருகன் 24 சாமிநாதன் நிறுத்தி நிதானமாக வீட்டுக்குள் ஒவ்வொரு இடமாகச் சுற்றி வந்தான். வேதபாடசாலை வித்தியார்த்திகளுக்கு ஆக்கும் போது, இரண்டு அகப்பை அதிகமாகப் போட்டுச் சமைத்து எடுத்து வந்து வைத்துப் போய்விட்டாள் ராமலச்சுமிப்…

கங்காணி

மணி வேலுப்பிள்ளை குண்டுச் சத்தம் ஒருவாறாக ஓய்ந்தது. முதல் வேலையாக நாங்கள் கங்காணியைத் தேடிப் புறப்பட்டோம். அவனுடைய வேப்பமரம் கண்டதுண்டமாய்ச் சிதைந்து கிடந்தது. சுற்றுவேலி அரைகுறையாய் எரிந்து புகைந்தது. மரத்தடி மணலில் அவன் அலங்கோலமாயக்…

வேலை

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர். இனிமையான மாலைப்பொழுது . வேலை முடிந்த களைப்பையும் மீறி சண்முகத்துக்கு உற்சாகத்தை ஊட்டவே செய்கிறது. குறித்த நேரத்திற்குக் கிளம்பி விடமுடிந்ததும் கூட,அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அடுத்த வாரத்திலிருந்து இதை அனுபவிக்க…

பச்சைக்கிளி

நம்பி மணிவேல் கிட்டத்தட்ட எல்லா முனைகளிலும் தோற்கடிக்கப்பட்டிருந்தான். மூன்று வருடங்களாக இவனைத்தான் கல்யாணம் செய்வேன் என்றவள் வசதியான வரன் வரவே சொல்லாமல் போய்விட்டாள். சிதைந்த கவனத்தைப் பயன்படுத்தி செய்யாத குற்றத்திற்காக இருந்த வேலையும் போயிற்று.…

ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2

நாகரத்தினம் கிருஷ்ணா சென்ற வாரத் தொடர்ச்சி.... 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ந்தேதி பிற்பகல் மணி 2 விபத்து நடந்து நான்கு மணி நேரம் ஆகியிருந்தது..கொளுத்தும் வெய்யிலில், தார்ச்சாலையில் கிடந்த ராமசாமியின் உடல் கருத்து…

கவிதைகள்

பாராட்டு

புகாரி பாராட்டு! உன் பாராட்டால் தமிழா - நம் தமிழுக்குச் சோறூட்டு! O பாராட்டும் போது வரும் பெளர்ணமி நிறைவும் அதைக் கேட்ட கணமே கம்பி மத்தாப்பு கொளுத்திக்கொள்ளும் கண்களைச் சந்திக்கும் இதய நெகிழ்வும்…

இருவர்

ஜி செந்தில்நாதன் இருவர் ஓருவராக கடற்கரை மணலில் தெரிந்தார்கள் இவன் சிரித்தான். அவள் காதலிக்கிறா இவனை. இவன் காதலிக்கவில்லை. அவள் இவன் நண்பனை காதலிக்கிறா மற்ற நண்பர்கள் இவனிடம கேட்டார்கள், ' உன் காதலை…

வைரமுத்துவே வானம்

வானவன் கவலைப்படாதீர்கள் வைரமுத்து. உங்கள் ஏணிகளின் நீளம் கொசுக்களைக் கொஞ்சம் குசு குசுக்க வைப்பதும், உங்கள் ஏரிகளின் ஆழம் நீச்சல் தெரியா நரிகளை வெல வெலக்க வைப்பதும் சகஜம் தான். உங்கள் விரல்களில் வழியும்…

திருவிழா

பவளமணி பிரகாசம் கிழமைகள் ஏழை புரவியாய் பூட்டி வலம் வரும் பரிதி வெள்ளை ஒளியை இழையாய் பிரித்து வன்ணங்கள் ஏழை வில்லாய் வளைத்து தோரணம் கட்டி பன்னீர் தூவி நடக்குது திருவிழா. pavalamani_pragasam@yahoo.com

காதல் கருக்கலைப்பு

புதியமாதவி, மும்பை உன்னைக் காதலித்தேன் உன் காதல்தான் எனக்கு கவிதையானது. வண்ணத்துப் பூச்சியாய் உன் தோட்டத்தைச் சுற்றியே என் பூமிவிடியல்கள் காதல் கல்யாணத்தில் நம் சூரியப்பூமியில் நட்சத்திரங்கள் மட்டுமே கண்சிமிட்டின. முதல் வருடம் குறைப்பிரசவம்.…

பாரதீ…

புதியமாதவி. மும்பை பாரதி.. 'நீ படி ' என்றாய் படித்தோம் 'பட்டங்களை எடு ' என்றாய் எடுத்து முடித்தோம். பட்டமும் பதவியும் எங்கள் நிலையை உயர்த்தும் என்றாய் உயர்த்தியது எங்கள் விலையை உ ய…

‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3

இரா.முருகன் 401 ---- தலையலங் கானத்துச் செருவில் பொருத நடந்த படையில் ஒருத்தன் வழியில் வயிற்றுப் போக்கால் இறந்து பட்டான். விழுப்புண் இன்றித் துஞ்சிய சங்கதி வெண்புறாக் காலில் விரைந்து பறந்தது. குப்பைக் கோழிகள்…

மார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்!

ஜோதிர்லதா கிரிஜா, சென்னை. அடுத்தவர் கவனத்தை அதிகமாய்க் கவர்ந்திழுக்க நடுத்தெருவில் உடையவிழ்த்து நாணங்கெட்டு நடப்பவர் போல் அடுக்கடுக்காய்ப் பாலுவுறவுக் கதை - படங்கள் படைக்காதீர்! கெடுக்காதீர் இளவயது உடம்புகளை, அடுக்காது ! தாவிடுவீர் பிறர்…

காலத்தின் கட்டாயம்

ராமலக்ஷ்மி வேலைக்காக போனீங்க இன்டர்வ்யூ, ஏ பி சி டி தெரிஞ்சுக்கவே எங்களுக்கு இண்டர்வ்யூ! * நலுங்காமல் நாலு வயசில் நர்ஸரியிலே ஆரம்பிச்சிங்க! நாலைந்து நோட்டுதான் நாலாவது வகுப்பு வரை. * எம் மழலை…

மனம்

நாகரத்தினம் கிருஷ்ணா நித்தமொரு பித்தமுடன் சித்தமதிற் சீழ்பிடித்து கத்தும்கடல் போல வீணில் வாழும் - வாழ்வில் சத்தமின்றி ஓய்ந்து மெல்லச் சோரும் -மனம் சோரும் நத்தமென்றும் கொத்தமென்றும் நாள்முழுக்க ஏர்பிடித்து சுத்த சன்மார்க்க நெறிபேசும்…

நகைச்சுவை

அரசியல் : ஒரு விளக்கம்

ஒரே ஒரு ஊரில் ஒரு சின்னப்பையன் தன்னுடைய அப்பாவிடம் சென்று 'அரசியல் என்றால் என்ன அப்பா ' என்று கேட்டான். அப்பா சொன்னார். 'பையா. இப்படி உனக்கு விளக்க முயற்சிக்கிறேன். நான் தான் இந்த…

மொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு

தினகப்ஸா சிறப்பிதழ் - வழங்குபவர் சொதப்பப்பா அழகைக் கெடுக்கிறது மொட்டை - போட வருகிறது தடை இன்று காலை கண்விழித்த ஜெயலலிதா தன் மாளிகையில் பணிபுரியும் ஒருவர் சமயபுரத்தில் மொட்டை போட்டுக்கொண்டு வந்திருந்ததை கண்டு…