ஒரு மத்தியான நேரத்து சிந்தனை..
Published September 18, 2003 • By
ஸ்ரீனி
ஸ்ரீனி.

உனக்கும் எனக்குமான
நெருக்கங்களில்
காற்று கூட மூச்சிரைத்துப் போகும்.
உனக்கும் எனக்குமான
பரிச்சயங்களில்
புல் நுனி தாண்டி பனித்துளிகள் சறுக்கும்.
உனக்கும் எனக்குமான
ஈர்ப்புகளில்
ஓராயிரம் சிலிர்ப்புகள் பிறக்கும்.
எனக்கும் உனக்கும் பிடித்தவையும்
எனக்கும் உனக்கும் பிடிக்காதவையும்
தனித்தே எதிர்மறையில் நின்றதில்லை.
தோற்றுப்போகும் நிலைகள் தாண்டி
தொடர்கிறது நம் உறவு,
உனக்கும் எனக்கும் பிடித்த படி.
உந்தன்
உறக்கத்தின் அமைதியில் பிறக்கும்
எனக்கான நிம்மதிகள்.
– ஸ்ரீனி.
Srinivasan.Ramachandran@in.efunds.com