திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080522_Issue

அரசியலும் சமூகமும்

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -6

நாகரத்தினம் கிருஷ்ணாஒலிம்பிக் விளையாட்டின் வரலாறு ஆதி கிரேக்கர்களின் வரலாற்றோடு சம்பந்தப்பட்டது, உணர்விலும், பங்கேற்ற விதத்திலும் அந்த நாள் கிரேக்கர்கள், இன்றைய ஒலிம்பிக் நடைமுறைகளினின்று பெரிதும் மாறுபட்டிருக்கின்றனர். இன்றைக்கும் பங்கேற்கும் நாடுகளுக்கு அந்நாடுகளைச் சேர்ந்த வீரர்களால்…

நிகழ்கால குறிப்புகள் – மே 2008 -1

ரவி ஸ்ரீநிவாஸ்நிகழ்கால குறிப்புகள் - மே 2008 1) அரசியல் கைதிகள்-பினாயக் சென்-அ.மார்க்ஸ்: ஒரு எச்சரிக்கைக் குறிப்பு மருத்துவர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக் கோரி மனி உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர். நோபல்…

நிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2

ரவி ஸ்ரீநிவாஸ் 7)இரண்டு தீர்ப்புகள் - ஒரு வழக்கு- ஒரு கேள்வி எம்.எப்.ஹீசைன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டாக்டர் வேணுகோபாலை AIIMS இயக்குனர் பதவியிலிருந்து நீக்க வழி செய்த…

தேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)

முனைவர் மு. பழனியப்பன் தமிழ் ஒரு மொழி மட்டும் அன்று. அது தமிழ் இனத்தின் அடையாளம். தமிழரின் பண்பாடு,கலை,அரசியல், நாகரீகம் முதலானவற்றின் ஒட்டு மொத்த கூட்டு அடையாளத்தின் பெயர் தமிழ். இந்தக் கூட்டு அடையாளம்…

மும்பை விசிட்-சில தகவல்கள்

உஷாதீபன்சமீபத்தில் மும்பை சென்று வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. முதன் முறையாக. மும்பையைப் பார்த்தபின், சென்னை ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. எவ்வளவு பெரிய நகரம் என்று பிரமிக்க வைத்தது. இரு சக்கர வாகனங்களே அதிகம்…

அறிவிப்புகள்

” நாளை பிறந்து இன்று வந்தவள் ” மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு

அறிவிப்பு இடம்: தேசிய நூலகம் (5 வது தளம்) 100, விக்டோரியா தெரு, சிங்கப்பூர் நாள் : ஜூன் 1 2008 நேரம்: மாலை 5 மணி தலைமையுரை மற்றும் நூல் வெளியீடு: திரு…

மலர் மன்னனுக்கு பதில்!

இப்னு பஷீர் "பிரஸ்தாப ஆங்கிலச் சொல்லான 'பாப்புலர்' என்பதன் சரியான பொருள் "பிரபலம்' என்பதாகும். "ஆதரவு' என்று மொழியாக்கம் செய்வதானால் ஆங்கிலச் சொல் "ஸப்போர்ட்' என்பதாக இருக்க வேண்டும்." என்கிறார் மலர் மன்னன். தமிழ்…

முஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை

அபூ முஹை இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம்மை வணங்கும்படிக் கட்டளையிட்டிருந்தால் முஸ்லிம்கள் முஹம்மத் நபியை வணங்கியிருப்பார்கள். மறாக, இறைவன் ஒருவன் மட்டுமே வணங்கத் தகுதியானவன் என்று ஓரிறைவனையே நபியும் வணங்கி முஸ்லிம்களும் வணங்க…

மலர்மன்னன்

இறை நேசன்வேண்டுமானால் ஒன்று கேட்டுப் பார்ப்போம். "எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல' என்று இப்னு பஷீரோ அவரது ஆதரவாளர்களோ அறிவிப்பார்களா? அப்படி அறிவித்தால் அவர்களின் பெயர்களேகூட…

கடிதம்

துல் பிகர் பல மாதங்களாக திண்ணையில் தொடரும் இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் அதற்கு மறுத்துரைகளை படிக்காமல் நிறுத்தி இருந்தேன். (ஆனால் என்னோட போறாத காலம்), இந்த திங்களில் அண்ணன் மலர்மன்னன் �பெயரை..� பற்றி எழுதிய…

கடிதம்

அடியார்க்கன்பன் ..அன்புடையீர்! வணக்கம். முத்தமிழ்ச் சங்கம் 08 05 2008 அன்று பிரான்சில் நடத்திய தமிழ்த் தாத்தா விழா வருணனயைத் தங்கள் இணைய தளத்தில் அழகாகப் படங்களுடன் வெளியிட்டமைக்காக எங்கள் உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.…

திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி

அறிவிப்புசென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு கிளை நூலகம் கபிலர் தெரு, மாதவரம் நெடுஞ்சாலை செம்பியம் சென்னை-11 (பிருந்தா திரையரங்கம் எதிரில்) வாசகர் வட்டம் நாள் 24.5.08 சனி மாலை 5.30 மணிக்கு இடம் நூலக…

உள்ளூர் கோயபல்ஸ்கள்!

நல்லடியார் முஸ்லிம்: ஐயா உங்க பேரென்ன? மலர் மன்னன்! முஸ்லிம்: நீங்க எந்த ஊரு? கும்பகோணம்! முஸ்லிம்: கும்பகோணத்துல எந்த இடம்? மேல அக்ரஹாரம்! முஸ்லிம்: உங்களை நான் காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர்…

எவ்வித ஆதாரமும் சொல்லாமல்

வஹ்ஹாபி "இங்குப் புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டலாம்" என்று போர்டு வைத்திருப்பதாக எண்ணிக் கொண்டு "பெயரின் முக்கியத்துவம் பற்றி" சென்ற வாரத் திண்ணையில் அவிழ்த்துக் கொட்டி இருக்கிறார் மலர் மன்னன். எவ்வித ஆதாரமும் சொல்லாமல்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா. பிண்டம் ! சக்தி ! அணுப்பிணைவுச் சக்தி பிண்டமும் சக்தியும் ஒன்றே என்று கணித்தார் ஐன்ஸ்டைன் நூறாண்டுக்கு முன்னே ! சக்தி அழியாதது ! பிண்டம்…

இலக்கிய கட்டுரைகள்

லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமின் தமிழ் சேவைக்கு இயல் விருது.

அ. முத்துலிங்கம் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் சீலி மண்டபத்தில் மே 18ம் தேதி மாலை நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது…

விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு

தமிழநம்பி விழுப்புரத்தில் 11-05-2008 ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் நிகழ்வாக நடைமபெற்ற 'தமிழ்க் கணிப்பொறி' வலைப்பதிவர் பயிலரங்கு பற்றிய முழுமையான செய்திகளைத் தொகுத் தளிக்கின்றோம். செய்திகள் விடுபட் டிருப்பின் அறிந்தோர் தெரிவிக்க வேண்டுகிறோம். 'தமிழ்க் கணிப்பொறி' வலைப்பதிவர்…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 21 மகாகவி பாரதியார்

வே.சபாநாயகம் 1. தம்பி, உள்ளத்தில் உண்மை இருந்தால், கையில் எழுதுகோலை எடுத்துக் கொள், எழுது. 2. கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினலும் சரி, ஒரு…

தெய்வ மரணம் – 2

எஸ். ஜெயலட்சுமி சூர்ப்பனகை வருகை ஒரு நாள் வஞ்ச மகள் சூர்ப்பனகை பஞ்சவடிக்கு வருகிறாள்.இராமனைப் பார்த்து அவன் அழகில் ஈடுபடுகிறாள்.அதிசயிக்கிறாள்.இவன் யார்?மும்மூர்த்திகளுள் ஒருவனோ?அப்படியானால் இவனிடம் சங்கு சக்கரமோ சூலமோ இல்லையே.ஒருவேளை மன்மதனோ? அவந்தான் மீண்டும்…

அன்புள்ள விலங்குகள் : என்.எஸ்.நடேசனின் “வாழும் சுவடுகள்”

பாவண்ணன் கால்நடை மருத்துவராகப் பணிபுரியும் நடேசன் தன் மருத்துவமனை அனுபவங்களை இருபது கட்டுரைகளாக இத்தொகுதியில் பதிவு செய்துள்ளார். துறைசார்ந்த ஈடுபாடும் பற்றும் மிகுதியாகும்போது, ஒருவருடைய கண்ணோட்டம் தானாகவே விரிவடைகிறது. சம்பளத்துக்காக ஒரு துறையில் வேலை…

கடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்

பாவண்ணன் கனவும் கற்பனையும் குழைந்த சிறுகதைகளைப் படைப்பதில் ஆர்வம் மிகுந்தவராக தன்னை முன்னிறுத்திக்கொண்ட காலபைரவன் தன் இரண்டாம் தொகுதியிலும் அதேவகையிலான சிறுகதைகளை மேலும் சிறப்பான முறையில் படைத்துள்ளார். இச்சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது 'கடக்க முடியாமையின்…

உலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள்

தேவமைந்தன் இன்றைக்கு அறுபத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகப்போர்க் காலத்தில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று, தொகுதிகளாகப் பதிப்பிக்கப் பெற்றது. 'கதைக் கோவை' என்று அதற்குப் பெயர். பதிப்புத் துறையில் முதற்பெயர் பெற்ற அல்லயன்ஸ் கம்பெனி…

‘திருக்குர்ஆனும் நானும்….’ – சுஜாதா : அஞ்சலி

தாஜ் சுஜாதாவின் மரணத்திற்கு என் சகாக்கள் எல்லாம் இரங்கல் செய்துவிட்டார்கள். நான்தான் பாக்கி. தாமதம் தாமதம் என்று மாதங்கள் ஆகிவிட்டது. என்றாலும், அவருக்கு இரங்கல் செய்யாது என் மனம் ஆறாது! அவரிடம் நான் கற்றவைகளும்…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 8 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாதேச நோக்கத்தில் சிந்தித்தால் நாமெல்லாம் நமது (ஆன்மீகத்) தனித்துவத்தை இழந்துவிட்டோம். அதுவே நமது தீவினைகளுக்குக் காரணம். நாமிழந்துவிட்ட ஆன்மீகத் தனித்துவத்தை மீண்டும் தூண்டிவிட்டுத் தேச மக்களுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும்.…

மனிதம் நசுங்கிய தெரு !

எம்.ரிஷான் ஷெரீப் SHORT STORY FONT - UNICODE / LATHA வீட்டினை நெருங்கும் முன்பே ஏதோ ஒரு விபரீதம் நிகழ்ந்திருப்பது புரிந்து போயிற்று.வீட்டின் பக்கவாட்டால் செல்லும் பாதையை நோக்கி மக்கள் கலவரம் போர்த்திய…

மீட்சி

ஷைலஜா டிசம்பர் 2004ல் நடந்த சுனாமிக்குப்பிறகு இப்போதுதான் நாகப்பட்டிணத்துக்கு வந்திருக்கிறான், பத்ரி. சுனாமி நடந்த அந்ததினம்,.... 'இன்று' என்னும்தொலைக்காட்சியின் சிறப்பு ஒளிப்பதிவாளராய் தன் குழுவோடு வந்தான், பத்ரி. நாகப்பட்டிணத்திற்குள் அவன் வந்த கார் நுழையும்போதே…

நீளக்கூந்தல்கா¡¢யின் அழகானச் செருப்பு

எஸ். அர்ஷியா சீயக்காயுடன் சேர்த்தரைக்கக் கஸ்தூ¡¢மஞ்சள், பூலாங்கிழங்கு, வெந்தயம், பூந்திக்கொட்டை, காய்ந்த எலுமிச்சம் பழத்தோலுடன் செம்பருத்தி, ரோஜாப் பூவிதழ்களையும் பார்வதியம்மா தனித்தனியாய் எடுத்து வைத்திருந்தாள். இதையெல்லாம் காயவைத்து, அவற்றை ஒன்றாகச் சேர்த்தரைத்து, அந்தத்தூளை வடித்தக்கஞ்சியில்…

போதி மரம்

குரு அரவிந்தன்……………………………………………………………………………… அமரர் பிரிகேடியர் பால்ராஜின் நினைவாக இச்சிறுகதை மறுபிரசுரம் செய்யப்படுகிறது. ஆனையிறவு சமரில் தலைமைதாங்கி வெற்றிவாகை சூடி தமிழர்களின் தன்மானங்காத்த நிகழ்வை (22-ஏப்ரல்-2000) ஆவணப்படுத்துவதற்காக அன்று சிறுகதை எழுத்தாளர் குரு அரவிந்தனால் தமிழகத்தில்…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 12

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் வசந்தி வெறுமே கட்டில் மீது படுத்துக் கொண்டிருந்தாள். முன் அறையில் இருபது பேர் வரையில் இடுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பெண்களும், பையன்களும் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். காலை பதினோரு…

கலைகள்

அதிசய மனைவி லட்சுமியும், மோகன்லாலின் இரு படங்களும்

க சண்முகேஸ்வரி மோகன்லால் சமீபத்தில் மேஜிக் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருக்க பல பிரார்த்தனைகள் நடைபெற்றன. பிரார்த்தனைகள் வெற்றியும் பெற்றன. அவர் வெற்றிப்படங்கள் தந்து சில வருடங்கள் ஆகின்றன.கடைசியாக ஆறுதல் வெற்றி தந்த அவரது…

கவிதைகள்

காற்றினிலே வரும் கீதங்கள் – 20 ஏழையின் காதலன் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில் எங்கிருந்தோ வந்தான், "இடைச்சாதி நான்" என்றான். "மாடு கன்று மேய்த்திடுவேன் ! மக்களை நான் காத்திடுவேன். வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன். .…

தாகூரின் கீதங்கள் – 31 உன் உன்னத அழைப்பு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉலகத்து நாயகியே ! ஒருநாள் வெற்றி வந்திடும் ! வெல்வதற்கு உள்ளன இன்னும் ! அஞ்சுவ தில்லை நான் ! என் மகாராணியே ! நின் அழைப்பை ஏற்றுக்…

புரண்டு படுத்த அன்னை

சித்ரா சிவகுமார் செய்வதைச் செய்யட்டும் அமைதி காப்போம் எத்தனை தூரம் போக முடியும் என்றே இருந்த இயற்கை அன்னை சற்றே புரண்டு படுத்தது தெரியும் - அதனால் சென்றன பல உயிர்கள் மண்ணுக்குள். தந்தையைத்…

வானம்

“மீன்கொடி” கோவிந்தராசு வாயுக்களால் வடிமைக்கப்பட்ட கூரை! புவிஈர்ப்பு விசைக்கெதிராய் புறப்பட்ட தாவரங்கள் தொட்டு விடத் துடிக்கும் தொட முடியாத் திரை! நிலத்தைப் பசுமையாக்கும் நெடுந்தூரத்து நீலம்! ஒட்டுத்துணிகளால் தைக்கப்பட்ட ஊதா நிற ஓட்டைக் குடை!…

தனிமை

சு.சுபமுகி 1. என் தனிமை எனக்காக விதிக்கப்பட்டதோ ஒரு வேளை இது நானே உருவாக்கிக் கொண்டதோ புரியவில்லை. எங்கு சென்றாலும் பின் தொடர்கிறது இந்த தனிமை தனிப் பிரதேசத்திலும் ஜனநடமாட்டத்திலும் கூட என்னை தனியனாய்…

செப்புவோம் இவ்வன்னை சீர்

அ. கி. வரதராஜன்சீனாவில், நிலநடுக்கத் துயர் துடைப்புப் பணிகளில் பலர் தொண்டாற்றி வருகிறார்கள். அவர்களின் சேவை ஞாலத்தின் மாணப் பெரிது. காவல் துறையில் பணியாற்றிவரும் ஒரு தாய், எண்ணிப் பார்க்கவும் இயலாத பெருந் தியாகம்…

தாஜ் கவிதைகள்

தாஜ் செயல். எழு நில் நட ஓடு வேகம் பிடி உயர் பற..... முடியுமென்றாவது நினை முயற்சி செய் தோல்வியும் நிகழலாம் பரவாயில்லை போராடு கட்டாயம் முடவனிடமிருந்து மாறுபடு. வித்தியாசப்படு. எல்லோரும் கத்திரிக்காய் வாங்கினால்…

துவம்சம்” அல்லது நினைவறா நாள்

மா.சித்திவினாயகம்KUMUTHINI-குமுதினி சிங்கள இனவெறியரசின் கூலிப்படைகளால் கடல்ப் பெருவெளியில் கொன்றொழிக்கப்பட்ட எம் நெடுந்தீவகத்து உடன் பிறப்புகளினை நாம் இழந்து 15-05-2008 இன்றுடன் 23 வருடங்களாகின்றன. இலங்கையரசினால் வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்டு கிடப்பிலே போடப்பட்டிருக்கும் இக்கோர மரணங்களின் மர்மங்களை…

நகைச்சுவை

அகரம்..அமுதாவின் வெண்பாக்கள்!

அகரம்.அமுதா அஞ்சி வருஷம் அரசாள வேண்டியே அஞ்சோபத் தோலஞ்சம் தந்தீர்!அதை -மிஞ்ச ஒருடி.வி தந்தீர்! இரும்!கொடுத்த வாக்கை நிறைவேற்றித் தந்தீரா நீர்? புட்டிக்கு ‘பார்’திறந் தோங்கு புகழ்பெற்றீர்! குட்டிக்கு லாட்ஜ்திறக்கக் கூடாதா? -சட்டம் மதுவிலக்கை…