திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040115_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள் – ஜனவரி 15,2004

நாகூர் ரூமி - சூர்யா - சண்முகசுந்தரம் - சோதிப் பிரகாசம் -நரேந்திரன் - K.ரவி ஸ்ரீநிவாஸ் - கலவை வெங்கட் - அரவிந்தன் நீலகண்டன் பித்தன் அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பதில் :…

ஒரு கலாச்சார ஒடுக்குமுறை

ஜெயமோகன் சென்ற சில நாட்களுக்கு முன் தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கு சில கடுமையான நடத்தை விதிகளை விதித்துள்ளது. இவ்விதிகளில் பல ஏற்கனவே உள்ளவையே. உண்மையில் அவை சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய உணர்வை…

மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்

இறுதிநாள் : பிப்ரவரி 15, 2004 மரத்தடி இணைய இதழும் (http://www.maraththadi.com) மரத்தடி யாஹூ குழுமமும் (http://groups.yahoo.com/group/maraththadi) திண்ணை வாசகர்கள் அறிந்ததே. திண்ணை இணையதளத்தில் மரத்தடி இணையதளத்திற்கான முகவரியை இட்டு எங்களை வாழ்த்திய திண்ணை…

அன்புள்ள செயலலிதா (தொடர்ச்சி)

பொறையாறு நந்தன் இந்தியாவின் எதிர்கால பிரதமரே! நவீன இந்தியாவின் இரும்பு மனிதன் என்று ஒரு சில 'தகரடப்பா ' தலைவர்களாலும், நேற்று முளைத்த 'அயோத்தி/பாப்ரி மஸ்ஜித் ' பிரச்சினயால் இன்று அரசியல்வாதியாகிவிட்ட இந்துத்வ (எந்தத்துவ…

போலி அறிவியல் சாயல்

முனைவர்.எம்.வேதசகாயகுமார் ரவி சீனிவாஸின் கட்டுரை படித்தேன். ஏற்கனவே இப்பகுதியில் நான் சொல்லியிருந்த விஷயங்களை மேலும் விளக்க உதாரணமான ஒரு சந்தர்ப்பம் இது என்று பட்டதனால் இதை எழுதுகிறேன் ரவி சீனிவாஸ் ஆரம்பம் முதலே புரிந்துகொள்ள…

உலகமயமாக்கலும் வளரும் நாடுகளில் உள்ள பெண்களின் மீது தாக்கமும்

செந்தில் பொருளாதார வளர்ச்சியும், உலக மயமாதலும் வளரும் நாடுகளில் உள்ள பெண்களிடம் இருவித தாக்கங்களை ஏர்ப்படுத்தியுள்ளது. ஒரு பக்கம், வளரும் நாடுகளில்,சாதி, இனம், வகுப்பு ஆகியவற்றால் பின்னடைந்துள்ள பெண்கள் இந்த பொருளாதார மாற்றங்களால் மிகப்பெரிய…

வாரபலன் – புத்தக விழாவில் தூசியில்லாமல் -எங்கும் சுற்றி தமிழையே சேவி- ராசி விஷம பலன் – எண்கணிதம் தமிழையா கையில்

மத்தளராயன் அண்ணாசாலை நெரிசலைக் கடந்து ஏழரை மணிக்குக் காயிதே மில்லத் கல்லூரிக்குள் நுழைந்தால் நாலு சக்கர வண்டிகளுக்கு அனுமதி இல்லை. பின் வழியாக வரவேணும். ஆணியடித்துக் கட்டை விரலைச் சூப்பிக் கொண்டு பலகை பொருத்திப்…

இன்னுமொரு சமாதானப் பகடையாட்டம்

கே.பி.எஸ்.கில் எத்தனை முறை இந்தியாவும் பாகிஸ்தானும் 'பேசுவதற்கு ஒப்புக்கொண்டன ', அவை தோல்வியில் முடிந்தன, மீண்டும் வன்முறை பொங்கியது என்று எண்ணுவதும் அலுப்புத் தரக்கூடியது. இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி, சென்ற தென்…

அமெரிக்க குடியரசுக் கட்சிக்குப் பெண்களுடன் உள்ள பிரச்சினை

ரிச்சர்ட் மொரின் (தமிழில் : ஆசாரகீனன்) [வாஷிங்டன் போஸ்ட் ஜனவரி 11, 2004 இதழில் Richard Morin எழுதிய கட்டுரையின் மொழி பெயர்ப்பு. மொழி பெயர்ப்பில் ஆங்காங்கே சில குறிப்புகள் தரப்படுகின்றன. தமிழரில் அமெரிக்கா…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வட அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் நேரும் ஸான் பிரான்ஸிஸ்கோ பூகம்பம்!

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'புயலுக்குப் பின் பூகம்பம்! பூகம்பத்துக்குப் பின் கிளம்பும் தீப்பொரிகள்! தீக்கனலுக்குப் பிறகு அடங்கும் மெல்லிய குரல்கள்! என்னை உனக்கு அடையாளம் தெரிகிறதா ? ' கிங்கிஸ்…

இலக்கிய கட்டுரைகள்

வெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக் கழக தென்னாசிய மையமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து உலகத்துச் சிறந்த தமிழ் இலக்கியவாதிகளுக்கு வாழ்நாள் இலக்கியச் சேவைக்கான 'இயல் விருது ' வழங்கி வந்திருக்கின்றன.…

எதிர் வினை அல்லது எழுத்து என்னும் உந்துதல்

ஹரி கிருஷ்ணன் 'ஹரின்னு பேரு வச்சிருக்கிறவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது ' என்று இப்போதுதான் முருகனுடைய மடல் ஒன்று வந்து விழுந்தது. இந்த வாக்கியம் என்ன சொல்வதுபோல் தோன்றுகிறது, ஆனால் என்ன சொல்கிறது என்பது…

மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்

மரத்தடி இணைய இதழும் (http://www.maraththadi.com) மரத்தடி யாஹூ குழுமமும் (http://groups.yahoo.com/group/maraththadi) திண்ணை வாசகர்கள் அறிந்ததே. திண்ணை இணையதளத்தில் மரத்தடி இணையதளத்திற்கான முகவரியை இட்டு எங்களை வாழ்த்திய திண்ணை ஆசிரியர் குழுவுக்கு நன்றிகள். வாழ்வின்பாலும், வாழ்கின்ற…

எனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘

பாவண்ணன் திருமண வீட்டுக்குச் சென்றால் தானே மாப்பிள்ளையாக இருக்கவேண்டும் என்றும் சாவு வீட்டுக்குச் சென்றால் தானே பிணமாக இருக்கவேண்டும் என்றும் நினைப்பவன் அவன் என எல்லா ஊர்களிலும் யாராவது ஒருவரைச் சுட்டிக்காட்டி மக்கள் சொல்வதுண்டு.…

கிருஷ்ணா கிருஷ்ணா

இரா முருகன் அசோகமித்திரனை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு அனுதாபங்களோடு தொடங்கலாம். அமி என்ற சிற்பிக்குப் பதில் அம்மி கொத்துகிற முருகன் ஐந்து பத்து நிமிடம் ஏதோ பேசி ஒப்பேத்துகிறேன். பொறுமை காக்கவும். தினசரி டைடல் பார்க்…

கதைகள்

தனிமை

கவிநயா வழக்கம் போல் அன்று காலையும் ஐந்தரை மணிக்கே விழிப்பு வந்து விட்டது. ஆனால் இன்று அவசரமாக எழுந்திருக்க வேண்டாம். நினப்பே சுகமாக இருக்க, போர்வையை இன்னும் நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டாள், லலிதா.…

விடியும்!: நாவல் – (31)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் கதைத்துவிட்டுப் போகிற போது, செல்லத்தம்பி மாஸ்றர் வாசலில் நின்று தன்னைப் பார்த்து பல்லுத் தெரியாமல் சிரித்த சிரிப்பு வெற்றிலைக்குள் மடித்துக் கொடுத்த கைவியளம் மாதிரி அவனுக்கு இருந்தது. வெற்றிலைக்குள் மடித்துக்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்று

இரா முருகன் இந்தப் பக்கம் தச்சன் இழைப்புளியை வைத்து ஏதோ மரப் பலகையை இழைத்து இழைத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறான். அந்தப் பக்கம் கருமான் ஒருத்தன் மண்ணில் குழித்து நெருப்பு மூட்டி இரும்புக் கம்பியை அடித்து…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -7)

எஸ். ஷங்கரநாராயணன் ---- மூன்றாம் பகுதி - தொடர்ச்சி ---- தனுவுக்கு ஓய்வுநேரம் என்பது கூட அங்கே மறுக்கப் பட்டது. பெரிய புண்ணியவான் போல மதியச் சாப்பாட்டுக்குப் பொட்டலம் வரவழைத்துத் தந்து விடுகிறார் முதலாளி.…

பர்வதத்துக்கு ஒரு மாப்பிள்ளை…

செங்காளி (என் தாயார் அவர்களின் நினைவாக) வெள்ளிகிழமை..மாலை ஆறு மணியளவு. 'பர்வதம்.. பர்வதம்.. ' என்று கூப்பிட்டுக்கொண்டே சமையலறையிலிருந்து வெளியே வந்த அம்மா, வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு வந்து கதவைத்…

இடி

சின்னக் கண்ணன்,மஸ்கட் ***************************** (மேடை அமைப்பு: நான்கு தூண்கள் சற்றே நடுவில் இருப்பது போல வைத்துக் கொள்ளலாம். பின்புலத்தில் பாழடைந்த மண்டபம் போல வரைந்திருக்கலாம்..இன்னும் சில தூண்கள் இருப்பது போல்..சற்றே மங்கலான வெண்ணிற ஒளி…

கவிதைகள்

கயிறுகள்

அருண்பிரசாத் தாவிப் பிடிக்கையில் தாங்கும் சில கயிறுகள். மாலையென மகிழ்கையில் மெல்ல கழுத்திறுக்கும் ஒரு சில. ஊசலின் நீள அகல மதிப்பீடுகளால் கைவிடுவன மற்றும் சில. உள்ளே விழுதாகும் நம்பிக்கையின் உறுதியுடன் வெகு சில.…

பேச்சிழப்பு, ஹிம்ஸினி

மாலதி _________ பேச்சிழப்பு பேச்சு முறிந்த இந்த மெள்னம் நிம்மதியும் நிரந்தரமும் பூசிக்கொண்டது பேசிக்கொள்ள இன்னமும் ஏதுமில்லை என்பதால். மேலும் மேலும் சத்தச் செய்திகள் இதன் வழு வழு பரப்பை நெருடிக் கிழித்து விடக்கூடும்…

பொங்கல் ஏக்கம் – மெய்மையும் கனவும்

இராம.கி. பொங்கலென்ன பொங்கலிது, பொல்லாத பொங்கலிது, முங்கி முழுகியதாய் மூணாம் வருசமிது; இந்த வருசமினி எம்நிலைமை மாறுமின்னு புந்தி புறக்கிட்டு போனகதை எங்குசொல்ல ? மூணுவட்டி தான்கொடுத்து மொத்தப் பணம்போட்டு வீணாய் உழுது, விதைநெல்…

புதிர்

பவளமணி பிரகாசம் விட்டது எதை பற்றியது எதை விளங்கவில்லை இன்று வரை கேட்டது எதை கேளாதது எதை கணக்கிட்டு பார்க்கவில்லை பட்டது எதை படாதது எதை புலப்படவில்லை புத்தியில் இட்டது எதை இடாதது எதை…

இது போன்ற…

கற்பகம் -------------- தனிமையுடன் தனித்துக்கிடந்து தழுதழுப்பும் தென்படவிடாது விக்கல் வெளிவரக் கூடாது விம்மல் விழுந்துவிடக் கூடாது என்று, மரணத்தை மோனத்தில் மறைத்து வாய்கிழித்து இதயம் பிளந்து கதறவிடா இது போன்ற துயரம் மட்டும் துடைத்துவிடு...…

பனித்துளியின் தொட்டில்

புதியமாதவி ஆகாயப் படுக்கையில் விளையாடும் மேகங்கள் சிந்தியது பனித்துளிகள் சிலிர்த்துப் போனது கால் நகங்கள் கருப்பைக்கு வெளியே கரு அறுவைச் சிகிச்சையில் பிரசவம் ஆடுகின்றது தொட்டில் ஆட்டுவது புயலா ? இல்லை ஆடுவதே புயலா…

சூரியனின் சோக அலறல்

அவதானி கஜன் -------------------------------------- நானா உதிப்பது நானா மறைவது கானா படித்து காலம் கழிக்கும் மனிதனே தானாக சுற்றுது தரணி என்னையும் சுற்றுது மானாக மீனாக மரமாக எதற்கும் என்நன்மையே தையில் மட்டும் தருவாயோ…

தவறித் தெறித்த சொல்!

ஜோதிர்லதா கிரிஜா இருமனம் கலந்தால் திருமணம் என்பது ன்றோர் வாக்கு இருப்பினும் என் மகளைக் காதலிப்பவன் - சரியான புறம்போக்கு! வரதட்சிணை ஈதல் நலம் என்றான் ! ஏனென்றால், வெறுங்கை வீசிவரும் மருமகளைத் தன்…

என் ஒற்றைக் குருவி

ரமா சங்கரன் ஜன்னலைத் திறந்தால் தனியே அமர்ந்திருக்கிறது ஒற்றைக் குருவி ஸ்பிலிட் ஏர்கண்டிஷன் மெக்கானிக் சிதைத்த கூட்டுக்குள் போக மனமில்லை மாடிப்படி அரட்டை சங்கத்தில் யாரோ யாரையோத் திட்டுவது போல பணிப்பெண்கள் வாய் ஒயாமல்…

கால ரதம்

பசுபதி கால ரதம்வேண்டும் -- இறைவா! கால ரதம்வேண்டும் ! சோலைக் கிளிமொழியாள்-- உடலெரி . . சூட்டில் சிடுசிடுத்தாள் -- அணியக் கோல நகைபலவும் -- கொடுத்தால் . . கோபம் குறையுமென்றாள்!…