அர்ஜெண்டைனாவின் பிரச்னைகள்

அர்ஜெண்டைனா தென் அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெரிய நாடு. இந்த நாட்டில் சென்றவாரமும் இந்த வாரமும் நடந்த சாப்பாட்டுக் கலவரங்களால் ஜனாதிபதி ராஜினாமா செய்தார். ஏராளமான மக்கள் வேலைஇழந்ததாலும், திடாரென்று வந்த பண நெருக்கடியாலும், பொருளாதாரச் சிக்கலாலும் பொது மக்கள் நகரத்தின் கடைகளை உடைத்து அங்கிருக்கும் உணவுப்பொருள்களை திருட ஆரம்பித்து பலத்த கலவரத்திலும், நாடு பெரும் மக்கள் கலவரத்தில் இறங்கியது. ராணுவ வீரர்கள் பொதுமக்களை அமைதிப்படுத்தவும் கலவரங்களை நிறுத்தவும் தெருவுக்கு வந்ததில் பல மக்கள் உயிரிழந்தார்கள். இதனால் […]