பிக்காசோ: அசைவற்ற வாழ்வும் அணிலும்

This entry is part [part not set] of 21 in the series 20011229_Issue

அல் பேர்டி ( Al Purdy) தமிழில்: வ.ந.கிாிதரன்


பாாிசிலுள்ள *பிராக்கின் ஸ்டூடியோவில்:
புகையிலைக் குழற் கட்டையும்
சீட்டுக் கட்டுடனும் கூடிய
அசைவற்ற வாழ்வை வரைந்து
கொண்டிருக்கும் குயூபிஸ்ட் ஓவியர்கள்.

பிக்காசோ: ‘எனது இரங்கத் தக்க நண்பனே!
இது பயங்கரமானது.
உன்னுடைய கித்தான் துணியில்
நான் அணிலைக் காண்கின்றேன் ‘.
பிராக்: ‘அது சாத்தியமில்லை ‘.
பிக்காசோ: ‘அது எனக்குத் தொியும்.
ஆனால், இது நடைபெறுகிறது.
நான் அணிலைக் காண்கின்றேன்.
அந்தக் கித்தான் துணி
ஓவியமாவதற்காக உருவாக்கப் பட்டது.
பார்வையின் மாயவிளையாட்டாக
உருவாவதற்காக அல்ல.
நீ வரைந்து கொண்டிருக்கும்
புகையிலைக் கட்டையும்
ஏனைய பொருட்களையும்
அவர்கள் பார்க்க வேண்டுமென்பது தான்
உனது விருப்பம்.
ஆனால் கடவுளுக்காகவாவது
அந்த அணிலை நீக்கி விடு. ‘
பிராக்கிற்கு மிகவும் சந்தேகம்.
ஏனென்றால் இது அவனுடைய
ஓவியம். அவனுக்குத் தொியும்
அவன் எதை அவனது மனதிலிருந்து
எடுத்துக் கொள்கிறானென்பதை.
மேலும் அவனது மனதில்
எந்தவொரு அணிலும் இல்லை.
ஆகவே ஓவியத்திலும்
இருக்கக் கூடாது.
பிராக் மீண்டுமொருமுறை தனது
மனதின் உள்ளே பார்த்தான்.
அணிலில்லை.
மீண்டுமொருமுறை இந்த முறை
தனது ஓவியத்தை மிக அவதானமாகப்
பார்த்தான். அடக் கடவுளே!
அங்கே இருந்ததே/இருக்கிறதே
அந்த நாசமாய்ப் போன அணில்.
பிக்காசோ: ‘ஒவ்வொரு நாளும்
பிராக் அணிலுடன் சண்டையிட்டான்.
அவன் வடிவமைப்பை, ஒளியினை, கலவையைச்
மாற்றினான். ஆனால்
அந்த அணில் எப்பொழுதுமே திரும்பவும்
வந்து கொண்டிருந்தது.
ஒருமுறை அது எங்களது
மனதிலிருந்தது.
அதனை வெளியேற்றுவதே பெரும்பாடாகப் போய்
விட்டது. வடிவங்கள் எவ்வளவுதான்
வித்தியாசமானவையாகவிருந்தாலும்
எப்பொழுதும் அணில் மீண்டும் திரும்புவதில்
வெற்றியடைந்து கொண்டிருந்தது.
இறுதியாக, எட்டோ அல்லது பத்து
நாட்களின் பின், பிராக்கின் தந்திரம் ஒருமாதிாி
வெற்றியடைந்தது. கித்தான் துணி
புகையிலைப் ‘பக்கற்று ‘ம் சீட்டுக்கட்டுமாக
எல்லாவற்றிற்கும் மேலாக
அது ஒரு கியூபிஸ்ட் ஓவியாமாகவுமானது ‘.
– நிச்சயம் அந்தப் பேய் அணில்
இன்னும் அங்கு இருக்கத்தான் செய்கிறது
பார்வைப்புலத்தின் எல்லைக்குச் சற்று அப்பால்.

*Braque
[ Al Purdyயின் To Paris never again கவிதைத் தொகுப்பிலுள்ள Picasso: Stll Life with Squirrel கவிதையின் தமிழாக்கம். வூலர், ஒண்டாாியோ, கனடாவில்
1918இல் பிறந்த ‘அல் பேர்டி ‘ முப்பதுக்கும் மேலான கவிதைத் தொகுதிகளின் சொந்தக்காரர். தேசாதிபதி விருது , Order of Canada விருது பெற்றவர்.
சுயசாிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டவர்.]

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்