திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030323_Issue

அரசியலும் சமூகமும்

போர் நாட்குறிப்பு

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் வரும் வராது வரும் என்று ஆடுபுலியாட்டம் ஆடிக் கொண்டிருந்த மீடியா பண்டிதர்கள் மகிழவும் காமிராவுக்கு முன்னால் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு வருந்தவும் போர் வந்தே விட்டது. ஐக்கிய நாடுகள்…

நினைத்தேன்…சொல்கிறேன். கூத்தணங்கும், கருணைத் தம்பிரானும் பற்றி

PS நரேந்திரன் கைலாயத்தில் இறைவன் கவலையில் இருந்தார். நாட்டின் தென் பகுதியிலிருந்து வரும் 'ஓலம் ' அவரை நிஷ்டை செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. 'ஓம் ' என்ற ஓங்கார நாதத்தின் ஒலியை மட்டுமே…

அணுஉலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து: 3 பாரதத்தில் சாண எரிவாயு தொழில்நுட்பத்தின் பரிணாமமும் பரவுதலும்

அரவிந்தன் நீலகண்டன் சாண எரிவாயு அடிப்படையில் மீத்தேன் மற்றும் கார்பன் டைஆக்ஸைட் ஆகியவற்றின் கலவையாகும். சிறிதளவே ஹைட்ரஜன் சல்பைட்டும் அமோனியாவும் இருக்கும். இவற்றின் பொதுவான கலவை விழுக்காடு: மீத்தேன் : 65% கார்பன் டை…

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 16 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

மஞ்சுளா நவநீதன் கேள்வி 23 : நீங்கள் சொல்வதெல்லாம் சரி போலத் தான் தோன்றுகிறது, என்றாலும் இசுலாமியர் மத்தியில் மற்றவர்களைக் காட்டிலும் மத அடிப்ப்டையிலான ஒற்றுமை கூடுதலாக இருக்கிறதே ? அவர்களின் நாட்டுப் பற்றை…

பன்முகத் தன்மை (pluralism) பற்றி

ஐசையா பெர்லின் நம்முடைய லட்சியங்கள் பலதரப் பட்டவை என்ற முடிவிற்கு நான் வந்தேன் - கலாசாரமும், மனித உணர்வுகளும் பலதரப்பட்டது போலவே தான் இதுவும். நான் 'relativist ' அல்ல. அதாவது, ' எனக்கு…

அயோத்தி -அகழ்வாராய்ச்சி -அமெரிக்கா இராக் மற்றும் சில கக்கூஸ்கள்

ஞாநி அமெரிக்க அதிபர் புஷ்ஷும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் சேர்ந்து தமிழ் சினிமாவில் டான்ஸ் ஆட நேரிட்டால் அந்தப் பாட்டின் பல்லவி ' தோண்டறாங்க தோண்டறாங்க ' என்றுதான் இருக்க முடியும். புஷ்ஷின் சார்பாக இராக்கில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் துளிகள்-19

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 73. நீண்ட நேர உடற்பயிற்சிக்குப் பின்னரும், கடின உழைப்புக்குப் பின்னரும் உடல் முழுதும் வலியுண்டாவது ஏன் ? கடின உழைப்பு, நீண்ட உடற்பயிற்சி…

கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா 1986 ஆம் ஆண்டு செர்நோபிள் அணுமின் உலை வெடித்துச் சீர்குலைந்த இரண்டு ஆண்டுக்குள் தேர்ந் தெடுக்கப் பட்ட ரஷ்யப் பூத அணுமின் உலை இது!…

இலக்கிய கட்டுரைகள்

நிலையற்ற வாழ்வும் நிறைவேறாத கனவும் (வ.அ.இராசரத்தினத்தின் ‘தோணி ‘- எனக்குப் பிடித்த கதைகள்-53)

பாவண்ணன் கல்லுாரித் தேர்வுகளின் முடிவுக்காகக் காத்திருந்த நேரம். நட்பின் இழப்பை வலியுடன் மனம் ஏற்றுக்கொண்ட சமயம். கூட இருந்த நண்பர்கள் அனைவரும் தத்தம் கிராமங்களுக்கும் மாற்று இடங்களுக்கும் பறந்து போய்விட்டார்கள். ஒரே ஒரு நண்பனை…

கதைகள்

ஆலமரம்.

எம்.கே.குமார். அந்த வீட்டிற்கு தெரிந்தவர்களும் சொந்தக்காரர்களும் தனித்தனியாகவும் கூட்டமாகவும் வந்துகொண்டிருந்தனர். ஊரின் முக்கியமான 'மீட்டிங் ஸ்பாட்களான ' அந்த பூவரசு மரத்தடியிலும் அந்த ஊருக்கே சிறப்பம்சமான வள்ளிமயில் டாக்கடையிலும் மற்றும் வழக்கம்போல குடிநீர்க்குழாய் அடியிலும்…

பியர் ரிஷார்

நாகரத்தினம் கிருஷ்ணா பியர் ரிஷாரைத் தெரியுமா ' ? பார்த்திருக்கீங்களான்னு ? கேட்டா, உங்கக்கிட்ட இல்லங்கற பதில்தான் வரும். பிரான்சுல இருந்துகிட்டு உங்களைப் பார்த்து இப்படிக் கேட்பது அபத்தமாகப் படலாம். சரியாச் சொல்ல்லணும்னா, ஒரு…

உடைந்த மனிதனும் ‘உடைந்த காலும் ‘

வ.ந.கிரிதரன் அதிகம் நடமாட்டமில்லாமலிருந்தது அந்த 'பார் '. வியாழன் வெள்ளியென்றால் களை கட்டி விடும். திங்களென்றபடியால் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஓரிருவர்களேயிருந்தார்கள். 'சிக்கன் விங்S 'உம் 'பட்வைசர் ' பியரையும் கொண்டுவரும்படி 'வெயிட்டரிடம் '…

வாயு – அத்தியாயம் ஆறு (இறுதிப்பகுதி)

இரா முருகன் அவர் இறந்துபோய் அரை மணி நேரமாகி விட்டது. மருத்துவர் யாரிடமோ சொல்லியபடியே உள்ளேயிருந்து வந்தார். குளோரியா அம்மாளும் கறுப்பியும் வாசலுக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தார்கள். மருத்துவர் அவர்களைப் பார்த்தபடியே காரில்…

யுத்தம்

இரவி ஸ்ரீகுமார். ரகு, தன்னுடையக் கம்பெனியின் பிரதிநிதியாக பாக்தாத்திற்கு வந்திருக்கிறான். ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் புரொஜக்ட் மேனேஜர். பாக்தாத்தில் ஒரு பெட்ரோலியக் கம்பெனிக்கு மென்பொருள் தயார் செய்வதைப்பற்றி பேச வந்திருக்கிறான். ஒரு ஐந்து நட்சத்திர…

கவிதைகள்

சுடும்வரையில் நெருப்பு…

மணவழகன். ஆ அன்போ, கோவமோ உள்ளத்து உணர்வுகளை ஒளிக்காமல் காட்டிவிட்டால்... சின்னப்பிள்ளை புத்தி என்பீர் 'சிடுமூஞ்சி ' இவன் என்பீர்... பணம் மட்டும் வாழ்க்கை இல்லை, பக்குவமாய்ச் சொன்னாலும்... உதவாது வாதம் என்பீர்.. 'ஊதாரி…

கனவாய்…

மண்ணாந்தை ஆதிப்பெருமனதின் கனவு வெளியதனில் ஒருமைச் சூல் கொண்ட மேகங்கள் உள்ளூடே மென்அலகு கனவதிர்வில் பிரபஞ்சங்கள், காலங்கள் காலவெளியதனில் உறைந்திடும் மாறிலிகள் பிறப்பெடுக்கும். பிறப்புற்ற பின்னர் அவை வேக விரிவேகும். மாறிலிகள் விதி பற்றி…

நசுக்கப்பட்ட ஆல விதைகளில்…

மண்ணாந்தை சீறும் எரிமலைகளின் கந்தகம் நிரப்பும் மெலிதான அவ்வளி மண்டலம் ஊடே ஊடுருவும் ஆற்றலுடை கதிரியக்கம் இளம் புவியின் ஆதி கடல்களில் நெளியும் கரிம மூலக்கூறிழைகள் நோக்கங்கள் இன்றி திசை நோக்கும் போக்கின்றி பிணைந்து…

வஞ்சம்

பசுபதி கண்ணிழந்த வெஞ்சினத்தார் கண்பறிக்க முற்பட்டால் மண்ணில் குருடரன்றோ வாழ்ந்திடுவர் ? -- விண்டறிவாய் பாமரனே! வஞ்சப் பயணம் தொடங்குமுன்னே ஈமத் தழல்இரண்(டு) ஏற்று. சின்ன நியாயமெனும் தென்றலாய்த் தோன்றிடும்; பின்னர் பெருந்தவறாய்ப் பேய்ச்சூறைக்…

முற்றுப் புள்ளியாகாது முரன்பாடுகள்

மோகனா கற்பூரமாக சில மூளைகளும் ஈர விறகுகளாக சில மூளைகளும் இருக்க தான் செய்கின்றன. தெளிந்த நீரோடையாக சிலருக்கும் குழம்பிய குட்டையாக பலருக்கும் எண்ணங்கள் அமைந்து தான் போகிறது. அழகிய பூ கோலமாக சிலரின்…

நம்பு

பவளமணி பிரகாசம் அனைத்தும் அனர்த்தமோ என்று அலைமோதும் மனமே நில்லு- நிராசையேன் கொள்கிறாய் ? நிலை குலைந்து ஏன் போகிறாய் ? நாளையும் உண்டு நமக்கு, நல்லதே நடக்கும் நம்பு, நட்டவன் ஒருவன் இருக்கிறான்,…

நீ

மலர்வனம் என் துக்கத்திலும் கண்ணீராய் நீ............ என் தூக்கத்திலும் கனவாய் நீ........... என் மகிழ்ச்சியிலும் சிரிப்பாய் நீ....... என் மடியிலும் மழலையாய் நீ........... என் கவிதையிலும் கருவாய் நீ......... என் கருவிலும் உருவாய் நீ...........…

லண்டனுக்கு வெகு அருகில் மிக மலிவாக – உரைவெண்பா

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் சென்னையில் புறநகர்ப் பகுதியில் வீட்டுமனை விற்கிறவர்கள் தினப்பத்திரிகையில் விளம்பரம் செய்வார்கள் - 'சென்னைக்கு மிக அருகில் உள்ள செங்கல்பட்டுக்கு நாலே முக்கால் கிலோமீட்டர் தள்ளி சுவையான குடிநீர், அருமையான சாலைகள்.…

மீண்டும் பசுமை..

புஷ்பா கிறிஸ்ரி இறந்து போன இலைகள் பழுத்து, கறுத்து மரத்தை விட்டு பிரிந்து மடிந்து நிலத்தில் வீழ்ந்து மண்ணோடு மண்ணாகி தொலைந்து போயின பனிக்குவியலில்... மீண்டும் தெரிய போகும் பசுமைத் தன்மை.. மரணித்துப் போன…

‘எல்லாமே கூற்று! ‘

கரு. திருவரசு மணக்கும் குழலில் மலர்செருகும் போதென் மனத்தையும் சேர்த்தெடுத்து வாகாய்ச் செருகினையோ! நெற்றிக்குக் கூர்வேல் நிழல்காட்டும் பொட்டிட்ட தெற்றுக்கோ! நெஞ்சில் எடுத்தெறிய ஏற்பாடோ! ஓரவிழிப் பார்வை உணர்த்திடுவ தென்னோ!என் வீரத்தைச் சாய்த்துநீ வெற்றிபெறும்…