ருத்ரா ஒரு கோடு. அதன் தலையில் இன்னொரு கோடு. நீண்ட கூட்டல் குறி. செங்குத்தாய் நிமிர்ந்து விறைத்து.. கோட்டை ஒட்டிக்கோண்டு இரு வட்டக்கோளங்கள். அப்புறம் அதைச்சுற்றி குறுக்கும் நெடுக்குமாய் சின்ன வட்டங்கள் பெரிய வட்டங்கள்.…
பவளமணி பிரகாசம் அது ஒரு ரகசியம் அனைவரும் அறிந்த விசயம் ரகசியமாய் வைத்திருக்க ரகசிய ஒப்பந்தம் ஒன்றுண்டு புரியாத சேதியில்லை பூடகமாய் ஊமை மொழியில் கண்களின் சந்திப்பில் கைகளின் கோர்த்தலில் பரிமாறும் பழைய செய்தி…
பா.சத்தியமோகன். எதனையும் சட்டெனத் தொடங்கித் தொடங்கிவிடு - காத்திராத காலம்தான் எதிரே நிற்கிறது ... இன்றாகி ஓடுகிறது எதிரே ஓடுகிறது ... நாளையாகிக் காய்கிறது ரகசியமாகக் கடக்கிறது பழுக்கிறது யாருடைய சாதனையும் அல்ல இதுவரை…
சேவியர் எங்கோ பார்த்தபடி விரியும் இந்தப் பார்வையின் நீட்சியாய் என்னை நெருங்குவாய், பின் என் கண்கள் சிரிக்கிறதென்று கண்டிப்பாய் சொல்வாய். வாரங்கள் போனபின் வருடுவாய் விரல்களை. பின் தொடுதலின் எல்லையை விரிதாக்கி என் பலங்களை…
சிக்கந்தர் பாட்சா என்னுள் நீ உடைந்து நொறுங்கிய தருணத்தில் உனக்கான என் உணர்வுகள் கற்பிழந்துவிட்டிருந்தது என் தன்மானத்தில் தலையிலெறி குத்தி கிழித்து குதறி கோரதாண்டவமாடியிருந்தாய் உனக்காய் செலவழிந்த நொடிகள் கழிவுப் பொருள்களாய் காற்றில் இரையப்பட்டிருந்தது…
சேவியர் 0 ஆளில்லாத தீவிலெனில் இந்த சில்மிஷம் இத்தனை சுவையாய் இருந்திருக்குமா ? விரலில் வழியும் தேனுக்கு இருக்கும் சுவை தேனில் அமிழ்ந்திருந்தால் கிடைத்திருக்குமா ? கவசங்களே தேவைப்படாத காதல் இனித்திருக்குமா ? பின்னிருக்கைப்…
நெப்போலியன் சிங்கப்பூர் கிழக்கே களப்பு வடக்கே வன்னி நடுவே பதட்டமாய் வருகல் ஆறு. கரையோர அதிர்வுகள் கண்களுள் அபாயமிட கண்ணீர் நுரைப்புடன் வருகல் ஆறு. இலை தளை சுமந்த என் மேல் உடம்பில் இனி…
எஸ். பாபு. பேசிக்கொண்டிருந்துவிட்டுப் புறப்படும்போது நேரம் போனதே தெரியவில்லையென்று விடைபெறுபவர்களைப் பார்த்திருக்கிறேன் காத்திருக்கும் பொழுதுகளில் நிமிட முள்ளின் மெத்தன நகர்வு குறித்த குற்றச்சாட்டுகள் அனேகரிடமும் உண்டு ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் சீக்கிரம் முடிந்துவிடுவதாக சலித்துக் கொள்கிறான்…
கி. சீராளன் (1) .... மின்புறா .... தகவல் தொழில்நுட்ப புரட்சி, காதலருக்கோர் மிரட்சி, புறாக்களின் தூதுக்குப் பின் இதுதான் தொல்லையில்லா தந்தி, ஆளில்லை அம்பு இல்லை, இவ்வூடகத்தில் எதிரியில்லை. முகம்தெரியாப் பெண்ணோடு முட்டாள்…
சத்தி சக்திதாசன் கானம் பாடும் காலை புதிதாய்ப் பிறந்தது இந்தக் காலை புதிதாய் மலரும் பூக்களும் ஆதவன் ஒளிமழை பொழிய இளங்குயில் அழகாய்க் கவிபாட கலங்கிய வெண்திரை போலே பனி படிந்த வண்ணம் உதித்ததிந்தக்…