திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031127_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள் – நவம்பர் 27,2003

பித்தன் - பரிமளம் - ரோஸா வசந்த் நாக.இளங்கோவனின் 'காசி யாத்திரை ' படித்தேன். உண்மையான கரிசனங்கள். நியாயமான கேள்விகள். ஆனாலும் 'இந்து ' ராமுக்கு ஒரு நியாயம், கலைஞருக்கு ஒரு நியாயமா என…

சமற்கிருதம் வாங்கலியோ சமற்கிருதம்

நாக இளங்கோவன்!!! www.google.com என்ற தளத்திற்குச் சென்று 'sanskrit ' என்று சொல்லித் தேடினால், நூற்றுக் கணக்கான சமற்கிருதம் குறித்த பக்கங்களின் தகவல் நமக்கு வருகிறது. அவையாவுமே சமற்கிருத இலக்கியம் அல்லது இலக்கணம் குறித்தவை…

‘முரசொலி ‘ மாறன் (1934-2003)

காஞ்சனா தாமோதரன் மறைந்த திரு. 'முரசொலி ' மாறன் அரசியல்வாதி, தொழிலதிபர், பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்-இயக்குநர்-வசனகர்த்தா என்று பன்முகம் வாய்ந்தவர். திரு. மாறனின் முக்கியப் பங்களிப்புகள் உள்நாட்டு அரசியல் விளையாட்டுகளுக்கு அப்பாற்பட்டு, அவரது…

ஜெயகாந்தனின் அரசியல் முரண்பாடுகள்

சொ.சங்கரபாண்டி சிவக்குமார் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது புரிந்து கொள்ளாமல் இருப்பது போல நடிக்கிறாரா என்று தெரியவில்லை. ஒற்றைப் பரிமாணம் பற்றிப் பேசும் சிவக்குமார் முதலில் மீண்டும் ஒரு முறை நான் எழுதியவற்றையும், அவர் எழுதியவற்றையும்…

குறிப்புகள் சில-27 நவம்பர் 2003-பாரம்பரிய நெல் வகை-உலக மக்கள் தொகை-தேகம் திரைப்படம்-தமிழில் என் வலைக்குறிப்பேடு

K.ரவி ஸ்ரீநிவாஸ் ----------------------- தினமணியில்(26 நவம்பர் 2003) ஆர்.எஸ்.நாராயணன் பாரம்பரிய நெல் வகைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அவரது ஆதங்கம் நியாயமானதே.விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை கிட்டதட்ட தொலைத்தே விட்டோம்.வெறும் நெல் வகைகளா அவை ? இல்லை…

வாகோ சோகக்கதை (1994)

ஜேம்ஸ் ஏ ஹாட் (ஃப்ரீ என்கொயரி பத்திரிக்கையில் 1994 கோடைக்கால இதழில் வெளிவந்தது) வாகோ மதக்குழு விசாரணை முடிந்துவிட்டது. அந்த சோகக்கதை நடந்து ஒரு வருடத்துக்குப் பின்னர் இந்த விசாரணை முடிந்திருக்கிறது. ஆனால், இந்தக்கதை…

ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 1

ஜியோஃப்ரே ஹெர்ட் ஏன் ஜார்ஜ் புஷ் ஈராக்குடன் யுத்தமிட்டே தீருவேன் என்று பிடிவாதமாய் இருக்கிறார் ? ஈராக் மேற்கொள்ளும் சாதகமான நடவடிக்கைகளையும் என் ஜார்ஜ் புஷ் நிர்வாகம் நிராகரிக்கிறது ? ஈராக்குடன் போரிடாவிட்டால் அமெரிக்காவிற்கு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்புக்கான முதன்மை ஜீனைக் கண்டறிந்துள்ளார்கள்

பால் ரேசர் அமெரிக்காவில் இருக்கும் ஐயோவா மாநிலத்தில் இருக்கும் ஒரு பெரிய குடும்பத்தில் அடிக்கடி நடக்கும் மாரடைப்புகளை வைத்து, மாரடைப்புக்கு என்று இருக்கும் ஒரு ஜீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த ஜீன் MEF2A என்று…

பிரபஞ்சத்தின் ஏழு அற்புதங்களை விளக்கிய இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc. [பி-1938]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'பிரபஞ்சத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் ஆழ்ந்த ஆய்வுகளுக்குப் பிறகு சிறிது வெளிப்படக் காலம் வரும்! வாழ்க்கை முழுவதிலும் மூழ்கி பிரபஞ்சத்தை ஆராய்ந்தாலும், பேரளவு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்ய…

பனிப்பாறைகள் உருக உருக பல கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர் கொள்கிறார்கள் –

சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இந்த வியாழக்கிழமையன்று ஒரு தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்கள். உலக வெப்பமாதல் அதிகரிக்க அதிகரிக்க, உலகத்தின் இரண்டு மூலைகளிலும் இருக்கும் பனிப்பாறைகள் உருக உருக பல கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையையும் பல…

இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கு அனடோலிய வேர்கள்

இன்று துருக்கியில் இருக்கும் அனடோலியா பிரதேசத்தில் இருக்கும் விவசாயிகளே முதன் முதலில் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என வழங்கும் மொழிகளின் மூல வார்த்தைகளை சுமார் 8000 வருடங்களுக்கு முன்னர் பேசியிருப்பார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்தோ-ஐரோப்பிய…

இலக்கிய கட்டுரைகள்

எனக்குப் பிடித்த கதைகள் – 87-குகைக்குள் ஒரு பயணம்-ஆர்.ராஜேந்திரசோழனின் ‘கோணல் வடிவங்கள் ‘

பாவண்ணன் துங்கபத்ரா நதிக்கரையில் ஒரு குன்றோரமாக நானும் நண்பரும் பேசியபடி அந்தி சாயும் வேளையில் நடந்துகொண்டிருந்தோம். அவர் காவல் துறை அதிகாரி. அன்று மாலைதான் எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு சாவுச் சடங்கில் பங்கெடுத்துவிட்டுத்…

முப்பருண்மையோடு நீர்கீழ் நிழலும் பிரும்மராஜன் எழுத்தும்

மாலதி 'புரிந்து புரிந்து புரியாதிருந்து இகழ்ந்து எக்காளமிட்டு புனையப்படாமல் கிடக்கும் கச்சாப்பார்வை களையப்படாதிருக்கும் போலி நான்கள் ' இந்த வரிகள் கவிதைத்தளத்திலிருந்து பிய்ந்து வேறிடத்தில் விழுந்து வேறெதையோ கூட புரிய வைப்பதாகலாம். இருப்பதற்கும் கண்டுபிடிக்கப்பட்டதற்குமான…

கருணாநிதியும் நவீன தமிழ் இலக்கியமும்

தாஜ் பழுத்த அசல் அரசியல்வாதியான திரு. மு. கருணாநிதிக்கு பல முகங்கள். அதில் ஒன்றுதான் இலக்கியம். மூத்த இலக்கியவாதி. மறுக்க முடியாது. அவர் ஈடுபாடு கொள்ளும் பண்டைய இலக்கியச் சங்கதிகளில் இந்த வயதிலும் தொடர்ந்து…

தமிழ் சினிமா.. உல்டா படலம்…

ராஜு ரஜினியின் அந்தக் கதை 'அருணாச்சலம் '. படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பது போல், ரஜினி செயல். உல்டாக்கள் இப்படி நிறைய இருக்கிறது. 'விசில் ' படம் 'URBAN LEGEND '…

முகங்கள் – அலென் வியோம் – கவிஞர் வைத்தீஸ்வரன்

நாகரத்தினம் கிருஷ்ணா ஓடும்மனம் நம்மினுடன் உறவுசெயுமாகில் உள்ளநிலை மெல்ல உணர்வு ஆகிவரு மாகில் நாடும்இடம் எங்கும் அறிவு ஆகிவிடு மாகில் நல்லகுரல் நல்லதிசை சொல்லுசிறுபல்லி -(பல்லிப்பாட்டு - தத்துவராயர்) முகமற்ற உயிரை கற்பனை செய்ய…

கதைகள்

விடியும்!(நாவல்) – (24)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செவ்வந்திக்குப் பின்னால் வெள்ளைக்காரரைக் கண்டதும் புட்டுத்தட்டை அரைகுறையில் அப்படியே வைத்துவிட்டு கையைக் கழுவிக் கொண்டு அறைக்குள் ஓடினான் செல்வம். அவனும் பார்த்திருக்கிறான் - ஆரும் வெளி ஆக்கள் அதிலும், முன்னபின்ன…

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து நான்கு

இரா முருகன் என்ன அய்யர்சாமி, காலையிலே வருவீஹன்னு பாத்தேன். தலையே தட்டுப்படலே. கருத்தான் கேட்டான். நேரமாயிடுச்சு கருப்பா. சங்கரன் கடைக்கு முன்னால் பொருத்தியிருந்த பலகையில் உட்கார்ந்தபடிக்குச் சொன்னான். எதிர்ப் பலகையில் அந்த தெலுங்குப் பிராமணன்…

காய்ச்சல்

நாகூர் ரூமி ---------------- சாலை, வீடு, தாழ்வாரம், முற்றம் -- எங்கு பார்த்தாலும் அதன் ஆக்கிரமிப்பு. நான் போகமுடியாத இடமுண்டா ? என்று கேட்டுக்கொண்டே மேலேறி வந்தது. ஒவ்வொரு நாளும் இப்படித்தானா ? நான்…

கனவின் கால்கள் – பாகம் 2

கோச்சா சென்றவார இறுதி வரிகள்: பரிமாறுபவரோ பக்கத்திலிருப்பவரைக் காண்பித்து 'இவரு மாப்பிள்ளையோடா சித்தப்பா... மாப்பிள்ளை அப்பா பேரச் சொல்லு.. இவரே சரியான்னு சொல்வார்... ' கரண்டியால் சாம்பாரை கலக்கியவாறே கேட்டார். சித்தார்த்துக்கு அப்படியே மறைந்து…

மேட் ரிக்ஸ் டே..

புதியமாதவி, மும்பை -நிஜாமாவே வர்றியாம்மா..வருண் கேட்டான் -ஆமாண்டா..எனக்கும் இன்னிக்கி ரொம்பவே போரடிச்சு போச்சுடா நானும் வர்றேண்டா.. -அம்மா.. இங்கிலிஸ் படம். முதல் இரண்டு பார்ட் பார்த்தவுங்களுக்குத்தான் புரியும் அப்புறம் நீ வந்துட்டு ஏன் வந்தோம்னு…

யானை

சுந்தர்,மஸ்கட் வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில் அமளிதுமளி பட்டது. மக்கள் எங்கும் நிறைந்திருக்க, அனைவரும் முயற்சியில்லாமலே நகர்ந்தனர் - கூட்டம் நெருக்கியடித்தது. மந்திரங்கள் ஒலிபெருக்கிகளில் முழங்க, ஆங்காங்கே கற்பூரம் எரிந்துகொண்டிருந்தது. சுவரில் எண்ணைப் பிசுக்குடன்…

தொழில்

அபுல் கலாம் ஆஸாத் திருவல்லிக்கேணியைச் சுற்றி இருக்கின்ற அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை காலை எட்டு மணிக்கு மேல்தான் ஆரம்பமாகும். கடற்கரையிலென்றால் ஒன்பது ஆகிவிடும். அவையெல்லாம் பப்பூர்ஸ் மொம்மதுக்கு சரிப்பட்டு வராது. தொழு கை…

அம்பி

இரா முருகன் அம்பியைக் கடைசியாகத்தான் சேர்த்துக் கொண்டார்கள். மூன்று பேராகப் போக வேண்டாம் என்று சேஷப்பா சொன்னதாலேயே அவனுக்கு வரமுடிந்தது. 'இதுக்கென்ன மூணும் நாலும் .. ஆயுசு பூரா நாள் நட்சத்திரம் பாத்து என்ன…

கவிதைகள்

வேலைக்காரன்

அவதானி கஜன் ----------------- ஒடுக்கிடும் மனிதர் வீட்டில் . . . ஒதுக்கிடம் ஒன்றைத் தேடி அடுக்கடுக் காக என்றும் . . . அவதியில் வாழும் பிள்ளை படித்திடும் வயதில் பஞ்சைப் .…

கண்டதும் கொண்டதும்

விக்ரமாதித்யன் நம்பி என்ன செய்யவென்றே தெரியவில்லை ஏதாவது செய்து கொண்டிருக்கிறான் என்ன சொல்லவென்றே புரியவில்லை என்னவாவது பேசிக்கொண்டிருக்கிறான் எங்கு போகவென்றே திட்டமில்லை எங்கேயாவது போய்க் கொண்டிருக்கிறான் என்ன சாப்பிட எப்படி தூங்க எவ்வாறு பணம்…

பி.ச.குப்புசாமி கவிதைகள்

பி. ச. குப்புசாமி சந்திரிகை: இந்த முகம் அன்றொருநாள் ......என்னருகே வந்தமுகம் மந்தநகை யோடென்றன் ......மார்பினில்பு தைந்தமுகம் ! இந்த முகம் நான்சொன்ன ......இன்மொழிகள் கேட்டமுகம் சிந்தனைகள் பிறிதின்றிச் ......சிரித்தருகி ருந்தமுகம் ! இந்தமுகம்…

கடலில்

விக்ரமாதித்யன் ( 'கவிதைக்கணம் ' இரண்டில் படித்த கவிதை) அநேகம் தீவுகள் ஒரு தீவில் ஒரு ராக்ஷஸன் தன் இனிய ராக்ஷஸியோடு ஒரு தீவில் கடவுள்கள் தங்கள்தங்கள் தேவியருடன் ஒரு தீவில் சாத்தான் யாரைத்…

புரிசை கண்ணப்ப தம்பிரான் நினைவில்

வ.ஐ.ச.ஜெயபாலன் ------------------------ சோழமண்டல் ஓவியர் சேரியில் அந்த வெண்நிலவும் களிகொண்ட இரவில் தாழமும் இசையும் பணிய அம்பலத்தரசே நீ ஆடிய தெருக்கூத்தில் எமை பாரதப் போர்க்களத்து யுக நேற்றில் ஒருகணமும் கட்டியங்காரனோடு இன்றில் மறுகணமுமாய்…

காற்று –வீடுகுறித்த என் ஏழாவது கவிதை

விக்ரமாதித்யன் நம்பி 'மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதை சும்மா இருக்கவிடாது ' வீட்டிலேயே இருக்கத்தான் விருப்பம் வெளிவேலைகள் விரட்டிக்கொண்டே இருக்கின்றன எந்நாளும் பதற்றங்கள் சுழல்களாய் உள்வாங்கிக் கொண்டே இருக்கின்றன எப்பொழுதும் வீட்டைத் தவிர…

நிலை

பா.சத்தியமோகன். --------------------------- பெரும்பாலான மக்கள் தவறாகத்தான் நம்புகின்றனர் தவறாகத்தான் செல்கின்றனர் தவறுக்குள் ஒரு சரியைக் கண்டடைய ஓயாது வாழ்கின்றனர் ஓயாது வாழ்ந்து இறக்கும் போது அவர்களது வழித்தோன்றல்களுக்கு விட்டுச் செல்கின்றனர் மீளவே முடியாத பல்லாயிரக்கணக்கான…

தெரிந்தாலும் சொல்லாதிரு

கரு திருவரசு ----------------- 1. உருவம் தெரியாமல் ஓசையே இன்றி அருவமாய் அஃது வரும் 2. பலவித ஓசையில் பைய உரக்க எழும(து) எவருக்கும் உண்டு 3. அடக்க முயன்றும் அடங்காது பாயும் அடக்குதல்…

நான்

வேதா மஹாலக்ஷ்மி உன் ஒவ்வொரு அசைவிலும் எனக்குள் ஓராயிரம் மவுனங்கள்... ஒவ்வொரு மவுனத்திலும் உறங்காத மன அலைகள்.... உண்மை பிரித்தெடுக்கும் உலகிற்குப் புரிந்ததும், உனக்குப் புரிந்ததுமாய்! அழகிலும் ஆற்றாமையிலும் உன் அன்பு மட்டுமே அச்சாணியாய்!…

நலம்

பவளமணி பிரகாசம் வாய்ச்சொல் தேவையில்லை வார்த்தையில் சாரமில்லை வாதத்தில் புரிவதில்லை வேதத்தில் விளக்கவில்லை மோனத்தில் மூழ்கிடு “நான் யார் ?” என்றிடு மனதை மூடிவை நினைவை நிறுத்திடு நிச்சலனம் பழகிடு நித்தியத்தில் கலந்திடு- உலகின்…