திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020414_Issue

அரசியலும் சமூகமும்

ஜெயமோகனுக்கு மறுப்பு

சாரு நிவேதிதா (சில வரிகள் நீக்கப் பட்டிருக்கின்றன. - திண்ணை ஆசிரியர் குழு) என்னிடம் கம்ப்யூட்டர் வசதி இல்லாததால் இணைய இதழ்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. ஒருநாள் நண்பரின் அலுவலகத்தில் சந்தர்ப்பவசமாக திண்ணை இணைய…

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்

பவளமணி பிரகாசம் புது மில்லினியத்தில், மிக வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொடர்பு யுகத்தில், தூரங்கள் சுருங்கி, உலகம் சிறிய கிராமம் போலாகி விட்டது. ராட்சஸ அளவில் மாறுதல்கள் ஏற்படும் போது மக்கள் வாழ்க்கைத்தரமும்,…

மறுபக்கம்: என் அமெரிக்கப் பயணம்

ஞாநி தீம்தரிகிட ஏப்ரல் 2002 இதழில் வெளியான கட்டுரை இது ஒரு வித்தியாசமான பயண அனுபவம். இதில் அமெரிக்காவில் எங்கே இட்லி சாம்பார், புதினா சட்டினி கிடைக்கும் என்ற தகவல் கிடையாது; கிடைக்காது. பயணங்களை…

7 அனுபவ மொழிகள்

கோமதி நடராஜன் 1# பிறரைப் பற்றிய உங்கள் கணிப்பை,உங்கள் அபிப்பிராயத்தை ,அது சாியோ தவறோ,அதை உங்கள் குழந்தைகள் உள்ளத்தில் விதைக்காதீர்கள்.இளம் நெஞ்சங்களில் நீங்கள் விதைத்த வித்துக்கள்,விஷ வித்துக்களாக இருந்தால் அதனால் பாதிக்கப் படப்போவது உங்கள்…

பொறாமை

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) எதிரேயிருந்த வெள்ளைச் சுவரின் மீது வெயில் விழுந்து பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் கண் கூசுகிற வெளிச்சத்தில், அங்கே இருந்தவர்களின் முகங்கள் தெளிவற்றும் மங்கலாகவும் தெரிந்தன. தாயின் அனுமதியோ,…

இந்த வாரம் இப்படி, ஏப்ரல் 14, 2002 (ஹ்யூகோ சாவெஸ் பதவி இறக்கம், மீண்டும் ஏற்பு, நாயுடுவும் பாஜகவும், ஈழத்து இஸ்லாமியத் தமிழர்கள்

மஞ்சுளா நவநீதன் ஹ்யூகோ சாவெஸ் அதிரடி பதவி இறக்கம் ஆலண்டே போல ஒரு அதிரடி ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா வெனிசூவெலாவில் நடத்துவதாக சிலர் பேசுகிறார்கள். வெனிசூவெலா ஜனாதிபதி அமெரிக்காவுக்குப் பிடிக்காத எல்லா உலகத்தலைவர்களுக்கும் நெருங்கிய…

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி -2

மஞ்சுளா நவநீதன் (இந்துத்துவம் - ஒரு பன்முக ஆய்வு : அ மார்க்ஸ் வெளியீடு : அடையாளம், எச் 15/193, 2-வது தளம் , கருப்பூர் சாலை, புத்தா நத்தம் 621310) இரண்டாவது அத்தியாயம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் – அலெக்சாண்டர் கிரகம் பெல் (Alexander Graham Bell)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி அலெக்சாண்டர் கிரகம் பெல், ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள எடின்பர்க் நகரில் 1847 ஆம் ஆண்டு மார்ச்சு 3 ஆம் நாள் தோன்றினார். இவரது பாட்டனார்…

அமெரிக்கா இயந்திர போர்வீரனை உருவாக்க முனைகிறது

எதிர்கால போர்வீரன், பெரும் கட்டடங்களை எளிதில் தாண்டக்கூடியவனாக்வும், தன்னுடைய புண்களைதானே குணப்படுத்திக்கொள்பவனாகவும், எதிரே வரும் துப்பாக்கிக் குண்டுகளின் பாதையிலிருந்து எளிதில் விலகிக்கொள்பவனாகவும், நினைத்த நேரத்தில் கண்ணுக்குத் தெரியாதவனாகவும் ஆகும் திறமை படைத்தவனாக இருப்பான். இதெல்லாம்…

இலக்கிய கட்டுரைகள்

எனக்குப் பிடித்த கதைகள் – 9 -சுந்தர ராமசாமியின் ‘பள்ளம் ‘ (மோகமும் மூர்க்கமும்)

பாவண்ணன் கல்லுாரிக் காலம். நானும் நண்பர்களும் விரும்பிப் படித்த எழுத்தாளர்களுள் ஒருவர் ஜெயகாந்தன். அப்போதுதான் நுாலகத்துக்கு வந்திருந்த 'சினிமாவுக்குப் போன சித்தாளு ' நாவலை எடுத்திருந்தோம். மாற்றி மாறற்ிப் படித்து விட்டு அதை எப்படி…

காந்தியின் குரங்குகளும் தலித்திய – கறுப்பு அடையாளங்களும். ( ‘மகாத்மாவின் பொம்மைகள் ‘ சிறுகதை விமர்சனம்)

காளிதாஸ் ஒரு முன்மாதிரி வாழ்வியல் தொடர்பாக ஒவ்வொரு மனிதனுருக்குள்ளும் ஒரு கனவு, ஒரு தேடல் இருந்துவிட்டுப் போகிறது. அது இலட்சிய வகைப்ப்பட்டதாகவோ அல்லது ஏதோ வகையில் சிறப்புக் கொண்டதாகவோ இருந்து விடுகிறது. வாழும் வாழ்வு…

கதைகள்

பேரன்

அ. எக்பர்ட் சச்சிதானந்தம் பஸ் நம்பர் 27, எத்தனை விட்டாலும் கூட்டம் குறையாதுபோல. நல்லவேளை உட்கார இடம் கெடைச்சது. நெரிசல்லருந்து தப்பிச்சேன். இன்னும் ஒரு ஸ்டாப்.. விஜயா அப்பாவும் வீட்ல இருக்கணும். ஆயிற்று இந்த…

உயிர்

கந்தர்வன் ஒரு உச்சி வெயிலில் கடலோடித் திரும்பிய மீனவர் ஒருவர் தான் போட் ஜெட்டியில் அந்த சேதியைச் சொன்னார். தீவில் ஒரு திமிங்கலம் ஒதுங்கிக் கிடப்பதாக. சேதி கிராமத்தின் வழியாகச் செல்லும் பஸ்களிலும் லாரிகளிலும்…

கலைகள்

அவியல்

உருளைக்கிழங்கு --1 (பெரியது) சேப்பங்கிழங்கு --4 பூசனிக்காய் --சிறிய துண்டு பீன்ஸ் --5 காரட் --1 கொத்தவரைக்காய் --5 பெங்களூர்க் கத்தரிக்காய் --1/4பாகம் கத்தரிக்காய் --2 புளித்த தயிர் --கால் ஆழாக்கு பச்சை மிளகாய்…

பறங்கிக்காய் பால் கூட்டு

பறங்கிக்காய் --அரை பத்தை பால் --அரைக் கரண்டி வெல்லம் --1எலுமிச்சை அளவு தேங்காய்த்துருவல் --2ஸ்பூன் உப்பு --1சிட்டிகை உளுத்தம்பருப்பு --அரை ஸ்பூன் பறங்கிக்காயைக் கால் ஆழாக்குத் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைக்கவும்.…

கவிதைகள்

யாரைத் தேடி ஒடுகிறது நதி ?

புஸ்பா கிறிஸ்ாி யாரைத் தேடி ஒடுகிறது நதி ? மழை பெய்த நிலத்தில் தன்னை விட்டு ஓடுகிறது தண்ணீர் எங்கே போகிறாய் என்றது காற்று காற்றின் திசையுடன் ஓடியது தண்ணீர் வழியில் குறுக்கிட்ட மரத்தில்…

ஆசை

கு.முனியசாமி எம்ப்பீசி எடுத்து என்ஜினியரிங் சேருகையில் பைப்பீசி மீது ஒரு ப்ரிதாபமாய் ஆசை... மெக்கானிக்கல் சேர்ந்து மேலாக முடித்தாலும் எலக்ட்ரானிக் மீது ஏனோ ஒரு ஆசை... கம்பனி வேலை கையில் இருந்தாலும் எம்டெக் படிக்க…

ஊடகம்

சிவசங்கரன் சாத்திரம் படைக்கும் கைகள் பாத்திரம் துலக்க பலவழி பாயாசம் மணக்க பாதாம் அல்வா கிளற பல குறிப்போடு மகளிர் பக்கம் ... நடிகைகள் நடுபக்கத்தை நாடே ரசிக்க எங்களின் நடுப்பக்கம் .. ஜிலுஜிலு…

புத்தாண்டுப் பொலிவு

வே.ச. அனந்தநாராயணன் 1. பாடிடும் வண்டுடன் வானிலே - என்றும் பறந்திடும் புள்ளினம் விலங்குகள் நாடொறும் புதுமையைத் தந்துநம் - வாழ்வு நலம்பெறச் செய்வதை எண்ணிடின் கோடியாய்ப் பரந்துள ஆலைகள் - புகை கொட்டிடப்…

இன்னொரு இருள் தேடும்….

திலகபாமா,சிவகாசி செருகும் கண்களுக்குள் உருகும் பனியதனில் நனைந்த மலரொன்று காதலென்று கனவில் வந்து காதோடு கதைத்தது பற்றிய விரல்களோடு பயணித்தது சிகரம் நோக்கி உச்சியில் சென்றது மெல்ல உருமாறி மணமாய் நிறைந்து மறைந்து போக…

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புஹாரி, கனடா வளர வளர நீ மட்டும் புதுசு...! உன்னால்... இன்று நான் மேலும் பழசு...! * புது நரையாய் வருத்தம் வலுக்கட்டாயமானாலும்... இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று உன்னோடு நானும் எண்ணும்போது... உன்னைக்…

இன்னும் ஓர் தீர்மானம்

கணேஷ் குட்டி இதோ இன்னும் ஓர் தீர்மானம் பிறக்க போகிறது இலங்கை தமிழருக்காக!!!! போர் விமானங்களின் இரைச்சல்களை மட்டும் கேட்டு வந்த அவர்களின் செவிகள் இனிமேல் பறவைகளின் சங்கீதங்களை கேட்கட்டும்!!! குண்டு வீச்சுகளை மட்டுமே…

மரண வாக்குமூலம்.

எஸ். வைதேஹி. வார்த்தைகள் யில்லாமல் ரகசியம் பேசியது, சாகும் போது நான் பார்த்த ஒரே ஒரு வண்ணத்துப்பூச்சி. அம்மாவின் கறுப்பு நிற சீலையில் நழுவிடும் ஒற்றை நிலா முகம் கரைந்து போனது. பழைய நினைவுகளை…

தொலைந்து போனோம்.

எஸ்.வைதேஹி. எனக்கும் உனக்குமான பரிமாற்றங்களும், பேச்சுவார்த்தைகளும் ஸ்வாரஸ்யமற்றுப் போயின. யினி ஒன்றுமேயில்லை என்றானதும், கோடுகளை அழித்து புள்ளிகள் ஆக்குவதும், யிருத்தலை தவிர்ப்பதுமான பாவனைகள் ஏற்று, நம் நிழல்கள் தரையிரங்கி நடந்தன. நேற்றுகூட விடை தேடி…

அழகு

வை. ஈ. மணி அன்புற் றீந்தான் இறைவனவன் .... அகிலம் முழுதும் அழகினையே இன்பம் பெறவே மனிதற்கு .... இரண்டாய் அதனைப் பாகித்தான் (1) ஒன்று அகமென் றறிந்திடுவோம் .... ஒப்பில் லாகுணப் பெட்டகமாம்…

நகைச்சுவை

தூரத்திலிருந்து பார்த்தேன்

தமிழில் வைஷாலி. (ஹிந்தி கிண்டல்கவிதையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது, இதைப் படிக்கையில் ஷெர்வானி கவிதைகள் ஞாபகத்திற்கு வந்தால், ஒவ்வொன்று முடிந்தபிறகு 'வாஹ் வாஹ் ' சொல்லிக் கொள்ளுங்கள்) தூரத்திலிருந்து பார்த்தேன் ஒன்றும் தெரியவில்லை தூரத்திலிருந்து பார்த்தேன் ஒன்றும்…

பாப்பா பாட்டு

வைஷாலி பறவை பறவை வானத்திலே ஏன் நீ பூ பூ என் கண்களிலே நான் வெட்கப்படவில்லை, அழவில்லை நன்றி இறைவா, பசுக்கள் பறப்பதில்லை.