இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புஹாரி, கனடா

வளர வளர
நீ மட்டும் புதுசு…!
உன்னால்…
இன்று நான்
மேலும் பழசு…!
*
புது நரையாய்
வருத்தம்
வலுக்கட்டாயமானாலும்…
இன்று
புதிதாய்ப் பிறந்தோம்
என்று
உன்னோடு நானும்
எண்ணும்போது…
உன்னைக்
குதூகலமாய்க்
கொண்டாடுகிறேன்
புத்தாண்டே…!
*
மண் மலை முகில்
மரம் செடி கொடி
மீன் பறவை வண்டு
விலங்குகள் மனிதர்கள்
யாவருக்கும்
என்
அழகு தமிழ்ப்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
**
buhari2000@hotmail.com