This entry is in the series 20020414_Issue

எஸ்.வைதேஹி.


எனக்கும் உனக்குமான
பரிமாற்றங்களும், பேச்சுவார்த்தைகளும்
ஸ்வாரஸ்யமற்றுப் போயின.

யினி ஒன்றுமேயில்லை என்றானதும்,
கோடுகளை அழித்து புள்ளிகள்
ஆக்குவதும், யிருத்தலை தவிர்ப்பதுமான
பாவனைகள் ஏற்று,
நம் நிழல்கள் தரையிரங்கி
நடந்தன.

நேற்றுகூட விடை தேடி
உன் காலடித்தடங்களின்
சுமைகளில் என்
பழைய அத்தியாயங்களைத் தேடிக்
கொண்டிருந்தேன்.

நெளிந்த சாரைப் போன்ற முடிவற்ற
தெருவின் நடுவில்
கிடைத்தது
நாம் என்றோ தொலைத்த
என் முகமும், உன் மனமும்.
****

Series Navigation