சாந்தி மனோகரன் இலவச சேலையும் இல்லாது போய்விடுமோ என்றெண்ணி மிருகமாய் மாறிய என்மக்கள் கவனக்குறைவால் தடுமாறிய உன்னை முகம் முதுகு மார்பு வயிற்றில் மிதித்து உயிர் உடைத்தனர்... சேலை வாங்க போன ஆத்தா செத்துப்போனாள்…
சத்தி சக்திதாசன் நதியின் ஓரங்களில் நடந்து கொண்டே நான் நினைந்த எண்ணங்கள் நிறைந்தே நின்றன நெஞ்சத்தில் கரையோரங்களில் பதிந்த காலடிகளை கரைக்கவென கரைபுரண்டோடும் நதியின் வெள்ளம் காலத்தின் கோலம் காகிதக் கப்பல். துள்ளிப் பாடுமந்த…
புகாரி ஊரலசி உறவலசி உண்மையான நட்பலசி பாரலசிப் பார்த்துவொரு பசுங்கிளியக் கண்டெடுத்து வேரலசி விழுதலசி வெளியெங்கும் கேட்டலசி ஆறேழு உறவோடு அணிவகுப்பார் பெண்பார்க்க மூடிவச்ச முக்காடு முழுநிலவோ தெரியாது தேடிவந்த ஆண்விழிக்கு தரிசனமும் கிடையாது…
பசுபதி அன்றொருநாள் ராமபிரான் அனுமனிடம் கேட்டார்; 'என்னைப் பற்றியென்ன எண்ணுகிறாய் எப்போதும் ? ' தாழ்மையுடன் மாருதியும் தயங்கிப்பின் பதிலிறுத்தான்: 'ஆழ்ஞானம் தேடுமுன் அரசன்நீ; அடிமைநான். ' ஞானம் மலர்நிலையில் ஞாலம்நீ ; துகள்நான்;…
பா. சத்தியமோகன் யூகித்தேன் கடவுளின் மூச்சு பச்சைப் பசும்புல்வெளியின் தோகை அசைவு போல அத்தனை இதமாக இருக்குமென. மயிலிறகின் மேல் நழுவும் பனிக்கட்டியின் நகர்வோ எனவும் இருக்கலாம் விடாமல் பொழியும் மழைத்தாரைகளின் குள்ளக் குளிர்…
தமிழவன் பூ விற்பவன் சிரித்தபடி விற்கிறான் சட்டையின்றி தோல்சுருங்கிய வெயில் உடம்புடன். மங்கிய நினைவில் கலவரம். வயல்வரப்பில் இருவரை வெட்டினர். செந்நீரில் ஓடும் கால்வாய் நீர். ஒருவேளை மூவரோ அது. கிணற்றோரம் இளைஞன் கிடந்தான்…
அனந்த் அண்டப் ப்ரபஞ்சங்கள் அண்டிப் பெருத்தகனம் .... உற்றுக் கரும்புள்ளியாய் (1) மண்டிக் கிடந்தபினர் மாயம் இதுவெனவே ... மீண்டும் பலப்பட்டவாய் விண்டுப் பிறக்குமொரு விந்தை நடக்குமுறை ... விஞ்ஞான வேதாந்திகள் கண்டிங் குரைத்ததைநம்…
அருண்பிரசாத் உடைந்த முட்டை ஓடு வழியே மலங்க மலங்க விழித்தபடி தாயைத் தேடும் ஒரு குஞ்சைப் போல உன்னைத் தேடுகிறேன். இன்னும் சிறிதாக ஒரு விரிசல் தேவைப்படுகிறது முழுவதுமாய் வெளியேறி ஈரத்துடன் கூடிய கதகதப்பான…
பாரிஸ் அகிலன். நீயும் நானும் இல்லாதிருந்தபோது, பல மில்லியன் வருடங்களாக, எண்ணிலடங்காப் பிரக்ஞைகள் தோன்றி மறைந்தன. நீயும் நானும் இல்லாமற் போகும்போது, இன்னமும் நீண்ட காலத்திற்கு இன்னமும் எண்ணிக்கையற்ற பிரக்ஞைகள் தோன்றி மறையும். நீயும்…
மாலதி ---- இயலாதபோது நேசமும் இயலாததை நேசிப்பதும் என் இயலாமையோ ? எப்படி என் அமைதிப் பெரு வெளியிடையே ஆசை விண்மீன் விதைத்தாய் ? ஏன் என் மெளன நெடுமதில் எங்கும் நேசவெடி வேர்…