ஜெயகாந்தனுடன் ஓர் உரையாடல் – 1

(திண்ணைக்கென்று ஜெயகாந்தன் பிரத்தியேகமாக அளித்த பேட்டி இது. ) திண்ணை : இந்தப் பேட்டியின் அமைப்பு கேள்வி பதிலாக இருப்பினும், கேள்விக்குப் பதிலாக மட்டுமல்லாமல், நீங்கள் தொடர்ந்து அபிப்பிராயம் சொல்ல வேண்டுமென்றாலும் சொல்லலாம். முதன் முதலில் நான் கேட்கப் போகும் கேள்வி ‘ஒரு மனிதன் ஒரு வீடு உலகம் ‘ பற்றியது. நான் எங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, கிளாஸிக்குகள் பொதுவாகவே துன்பியல் வடிவில் தான் நிறைய எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றி விவாதித்திருக்கிறோம். உதாரணமாக […]

எத்தனை முறை படித்தாலும் தமிழர்களுக்கு அலுக்காத தமிழ் ஜோக்குகள்

ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது மாணவன் : தெரியாது சார் ஆசிரியர் : பென்ஜின் மேல் ஏறி நில்லுடா மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார். ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ? மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும். கண் டாக்டர் : அந்த போர்டில் உள்ள எழுத்துக்களை படிங்க நோயாளி : போர்டு எங்க டாக்டர் இருக்கு ? சோ, […]

தேவதச்சன் கவிதைகள்

நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன் ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன சட்டையை தொளதொள வென்றோ இறுக்கமாகவோ போடுகிறாய் தலைமுடியை நீளமாகவோ குறுகவோ தரிக்கிறாய் உன்னிடமிருந்து பறந்து சென்ற இருபது வயது என்னும் மயில் உன் மகளின் தோள் மீது தோகை விரித்தாடுவதை தொலைவிலிருந்து பார்க்கிறாய் காலியான கிளைகளில் மெல்ல நிரம்புகின்றன, அஸ்தமனங்கள், சூரியோதயங்கள் மற்றும் அன்பின் பதட்டம் * கைலாசத்தில் புதரோரம் ஒட்டாமல் கிடந்த சிவனின் இடது பாகமும் பார்வதியின் வலதும் சரிந்து பூமியில் விழுந்தன […]

அப்பாவின் பிறந்த நாள்

சூசன் அவனுக்கு ஏதேச்சையாகத்தான் தெரிந்தது நாளை அப்பாவின் பிறந்த நாள் என்று. இரவு படுக்கச் செல்கையில் தினமும் அடுத்த நாள் தேதியை மாற்றி வைப்பது அவன் பழக்கம். அப்படி இன்றும் மாற்றி வைக்கப் போனபோது தான் தெரிந்தது நாளை மே1ம் தேதி என்று. அது அப்பாவின் பிறந்தநாள். வீதி முழுக்க மே தினத் தோரணங்கள் தொங்கும். கமபங்களெங்கும் ஒலிபெருக்கிகளில் உழைப்பாளிகள் பாட்டுகள் ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால் அப்பா இத்தனை களேபரங்களுக்கிடையில் தன் பிறந்த நாளை அமைதியாகக் கொண்டாடுவார். […]

சட்டை

– ஷாராஜ் அவன்தானா ? சட்டெனத் தோற்றம் வர நாற்காலியிலிருந்து எழுகிறார் அப்பாதுரை. வெளியே போய் நிலைப்படியோரம் நின்று தெருவில் பார்வையோட்டுகிறார். காணவில்லை. குரல் கேட்ட மாதிரி இருந்ததே ?…..யோசனையாய் திரும்பி நாற்காலியில் பதிகிறார். சமையலறையிலிருந்து சாரதாம்பாவின் முகம் எட்டிப் பார்த்து விலகுகிறது. அவருக்கு ஒரு புதுசட்டை வேண்டியிருக்கிறது. இது பழையதாகிவிட்டதில் நைந்து போய்விட்டது. கனத்தில் அதன் வியர்ப்பு வாசம் சகிக்க முடியவில்லை. சுருக்கம் விழுந்து, பித்தான்கள் அறுந்து, சில இடங்களில் கிழிசலை ஒட்டுப் போட்ட தையல்களுடன் […]