திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060602_Issue

அரசியலும் சமூகமும்

எடின்பரோ குறிப்புகள் – 17

இரா.முருகன்‘விழுந்தால் வீட்டுக்கு. விழாவிட்டால் நாட்டுக்கு’. இது பல வருடம் முன்னால் தமிழக அரசு லாட்டரியை அறிமுகப்படுத்தியபோது செய்த விளம்பரம். எப்படியோ இதைத் தேடிப்பிடித்து அறிந்துகொண்டு அட்சர சுத்தமாகக் கடைப்பிடிக்கும் இங்கிலாந்து அரசு, வெற்றிகரமாக லாட்டரிச்…

புலம்பெயர் வாழ்வு 13

இளைய அப்துல்லாஹ் இங்கு எமது வீடுகளின் கோடிக்குள் இருக்கும் மூன்று சாமானகள் அம்மிகுளவி, ஆட்டுக்கல், உரல் உலக்கை. உரல் மர உரலும் இருக்கிறது, கல் உரலும் இருக்கிறது. எம தூரில் உரல் குடையுறதில் மணியண்ணை…

பழைய பாண்டம் – புதிய பண்டம்

குமரிமைந்தன். குமரிமைந்தன் (Geetham.net இணையதளத்தில் குமரி நாடு என்ற தலைப்பில் வெளியான கார்க்கி மற்றும் அனைத்து நண்பர்களின் கருத்தாடல்களின் விளைவு இக்கட்டுரை.) முக்கழகங்களும் தமிழ் இலக்கியம் கூறும் இரு கடற்கோள்களும் அன்றி அவற்றுக்கு முன்னும்…

குவேரா வழங்கிய அருங்கொடை

புதுவை ஞானம் அவனுடன் இணைந்து ....................* எவனொருவன் இடர் பட்டிருக்கின்றானோ சித்திரவதைக்கு ஆளாகி இருக்கின்றானோ எவனொருவன் யுத்த களத்தில் இழப்புகளை ஏற்படுத்தியும் இழப்புகளை ஏற்றுக்கொண்டும் அடிகள் கொடுத்தும் அடி வாங்கியும் இருக்கின்றானோ எவெனொருவன் தனது…

டாவின்சி கோட்… டான் பிரவுன்… பாரதி !

ஜடாயு DaVinci Code திரைப்படம் ஒரு வாரம் உலகெங்கும் சக்கைப் போடு போட்டு ஓடிய பின், நமது மதச்சார்பற்ற காங்கிரஸ் அரசு ஒருவழியாக இந்தத் திரைப் படத்தை இந்தியாவில் திரையிட அனுமதி வழங்கியிருக்கிறது, அதுவும்…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 2. சமயம்

குமரிமைந்தன் தமிழகத்தில் இரு வேறு சமயப் போக்குகள் உள்ளன. அவற்றுக்குப் பெருநெறி, சிறுநெறி என்று மேலை மாந்தநூலார் பெயர் சூட்டினர். மேற்சாதியினர் பார்ப்பனர் மூலமாகக் கடவுளை வணங்கும் முறையைப் பெருநெறி என்றும் கீழ்ச்சாதியினர் தாமே…

இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா?

குழலி இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி முன்னேறியவர்களே மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்துகிறார்கள், சரியாக வார்த்தைகளை கவனிக்கவும் பயன்படுத்துகிறார்கள் பயன்படுத்துவார்கள் என சொல்லவில்லை, பயன்படுத்துகிறார்கள் என்று…

காக்க… காக்க… சுற்றுச் சூழல் காக்க

முனைவர் க.துரையரசன் உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் சீர்கேடு நிலவி வருவதை அனைவரும் அறிவோம். ஆயினும் சுற்றுச் சூழல் சீர்கேட்டைக் களைவதைப் பற்றியோ அல்லது அது பற்றிய விழிப்புணர்வோ நமக்கு இருப்பதில்லை. இந்த ஆதங்கத்தின்…

கண்ணகிக்குச் சிலை தேவையா?

ஜோதிர்லதா கிரிஜா கடைசியில் ஒரு வழியாய்க் கலைஞர் அவர்கள் முன்னர் முதலமைச்சாராக இருந்த போது மிகுந்த ஆர்வத்துடன் திறந்து வைத்த - ஆனால் இடையில் அதன் மேடையிலிருந்து அப்புறப் படுத்தப் பட்டு விட்டிருந்த -…

கலைஞருக்கு பாராட்டுக்களும் மேலும் சில பாராட்டுக்களும்

சின்னக்கருப்பன் சமீபத்தில் ஆட்சிப்பொறுப்பேற்றதும், கலைஞரின் அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இருந்திருக்கின்றன. சட்டமன்றத்தில் அவர் மைக்கை இறுக்கமாகப் பிடித்து எழுதி வைத்திருப்பதை திருத்தமாக படித்து கூறிய சட்டங்களில் பல…

அறிவிப்புகள்

திருக்குரானின் எதிர் கொள்ளல்கள்

ஹெச்.ஜி.ரசூல் தமிழில் ஐவேளைத் தொழுகை நடத்துவது தொடர்பான சூபி முகமது விவாதத்தில் ஹமீது ஜாபர் ஒரு முக்கிய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். திருக்குரானிய தமிழ் மொழிபெயர்ப்பு அ.கா.அப்துல் ஹமீதுபாகவி அப்துல்வகாபு, ஐ.எப்.டியின் மெளதூதி, காதியானிப்பிரிவு, வகாபிகுழுமத்தின்…

கடிதம்

ரெ.கா.இரா.மு.வின் எடின்பரோ குறிப்புகளில் கவிஞர் சந்திப்பு அங்கமும் அதை அவர் சொல்லியிருந்த விதமும் மிக அழகு. ப்ரையன் ஜோன்ஸ்டனின் அவரின் அப்பா பற்றிய கவிதையும் மிக அருமையாக இருந்தது. பார்க்கும்போது தமிழில் வரும் நவீன…

மிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து …

வஹ்ஹாபிமிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து ... வஹ்ஹாபி கடந்த வாரத் திண்ணை (25.05.2006) இதழில் 'அறிவு ஜீவிகள்.........?!' என்ற தலைப்பில் ஒரு கடிதம் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80605263&format=html) வெளியாகி இருந்தது. அதில், "இஸ்லாம் என்றால் என்ன பொருள் என்றே தெரியாமல்…

எது மோசடி?

இப்னு பஷீர் 1. "இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும்." என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு சொன்ன ஹெச்.ஜி. ரசூல் சென்ற…

நாளை நாடக அரங்கப்பட்டறை

அறிவிப்புநாளை நாடக அரங்கப்பட்டறையின் 2006ம் ஆண்டுக்கான அளிக்கை யூன் மாதம் 3ம், 4ம் திகதிகளி;ல் ரொரன்டோவில் இடம்பெற இருக்கிறது. இம் முறை "ஒரு காலத்தின் உயிர்ப்பு" எனும் நாடகத்தை அரங்கேற்றுகிறோம். இவ் நாடகத்தில் திரு.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செர்நோபில் அணுமின் உலை விபத்து எவ்விதம் தூண்டப்பட்டது? -6

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா "மனிதக் கைகள் மூளைக்குத் தெரியாமல் செய்த தவறை அறிந்தவுடனே அவசரமாய்த் திருத்த தாவிச் செல்கையில் அடுத்தும் ஒரு தவறைப் புரிகின்றன! பிறகு இரண்டு தவறுகள் நான்கு…

இலக்கிய கட்டுரைகள்

வாசகரும் எழுத்தாளரும்

க.நா. சுப்ரமணியம்இது ஜனநாயக யுகம் - அதனால் வாசகனுக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையில் அப்படியில்லை. உலகில் முதல் எழுத்தாளன் தோன்றிய முதலே வாசகர்களின் முக்கியத்துவமும் தொடங்கிவிட்டது என்றுதான்…

முன்னோட்டம்

ஜெயகாந்தன்('ஞானரதம்' முதல் இதழில் ஜனவரி 1970-இல் ஜெயகாந்தன் முன்னோட்டம் பகுதியில் எழுதியது.) தமிழ் இலக்கிய உலகில் படைப்புக்களை விடவும் படைப்புக்களைப் பற்றிய சிந்தனைகளும் விவாதங்களும் பெருகி மண்டி வருகிற ஒரு சூழ்நிலையில் இந்த 'ஞானரதம்'…

துரோபதி திருக்கலியாணம்

புதுவை ஞானம் --------------------------------------- (அமரர் சத்யஜித் ரே அவர்களின் புகழ் மிகு திரைக்காவியமான 'ஜல் ஸாகர் ' (MUSIC HALL ) மாளிகை உங்களுக்கு நினவுக்கு வருகிறதா ? அப்படிப்பட்ட கம்பீரமானதொரு மாளிகை நான்…

மெட்டாபிலிம் (Metafilm)

எச்.முஜீப் ரஹ்மான் மெட்டாபிலிம் அல்லது மெட்டாமுவீ அல்லது மெட்டாசினிமா என்பது தற்சுட்டு (self-referential) திரைப்படம் ஆகும்.மெட்டாபிக்ஸன் என்பது வாசகர்கள் நூலை வாசிக்கிறார்கள் என்ற உணர்வை மறக்கடிக்கச் செய்யாமல் இருப்பதை போல மெட்டாபிலிம் பார்வையாளனை தாங்கள்…

விந்தையான யாத்திரிகர்கள்

காப்ரியல் கார்சியா மார்க்கே----------------------------------------------- [இது காப்ரியல் கார்சியா மார்க்கே(Gabriel Garcia Marquez) எழுதிய Strange Pilgrims எனும் சிறுகதை தொகுப்பின் முன்னுரை. இந்த கதைகளுக்கான கருக்கள் தோன்றிய விதமும், அவை பயணித்த பாதைகளும் விந்தையானவை.இந்த…

கல்முலைகள் சுரக்கும் தாய்ப்பால் : ” கைலாசபதி தளமும் வளமும் ” – நு¡ல் பற்றி

ஹெச்.ஜி.ரசூல் ஈழத்து மகாகவியின் ''கடல் மணலைக் குவித்தாற்போல இருக்கும் கல்முலைகளைச் செதுக்கும் காலச்சிற்பி'' கவிதை வரிகளின் அழகியலை சிலாகித்த கைலாசபதிக்கு இவ்வரிகளை திரும்பவும் பொருத்திப் பார்க்கலாம். ஆனால் ஒரு வித்தியாசம் இந்த கல்முலைகள் தன்…

கடித இலக்கியம் – 7

வே.சபாநாயகம்கடிதம் - 7 நாகராஜம்பட்டி 6 - 4 - 76 அன்புமிக்க சபாவுக்கு, தாங்கள் என்மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறீர்கள்.(அது என் பாக்கியங்களுள் ஒன்று) அதனாலேயே என் கடிதம் வராத காலத்தும், திடீரென்று…

கதைகள்

குறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா! – 5

ரெ.கார்த்திகேசு மாலையில் அம்மா வீட்டுக்கு வெளியே கிடந்த ஊஞ்சலில் உட்கார்ந்து அந்த வாரத்து இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த ஓய்வான வேளையில் அந்த விஷயத்தைத் தொடங்கினான். அம்மாவின் முன்தலையில் ஒரு பிடி நரை புஸ்ஸென்றிருந்தது. அதை…

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 8)

கரு.திருவரசு காட்சி- 11 காட்சி நிகழும் இடம்: அழகிய மலைச்சாரல். காட்சியில் வருவோர். கவிஞர், புலவர் பக்குடுக்கை நன்கணியார். காட்சி நிலை. இருவரும் ஒரு குன்றின்மேல் அமர்ந்திருக்கின்றனர். கவிஞர்- புலவரே! ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் தாங்கள்…

இ ன் னி சை வி ரு ந் து

பத்மா நாராயணன் கார் கதவை அறைந்து சாத்தினாள் சுமதி. சந்திரனின் முகம் இறுக்கம் குறையாமல் அப்படியே இருந்தது. காரிலிருந்து இறங்கிய சுமதியும் ஏதும் பேசாமல் அந்த சிறிய கட்டிடத்தினுள் நுழைந்தாள். கார் வேகமாகக் கிளம்பிச்செல்லும்…

பெற்ற கடன்

சாரதா "திருமண சந்தடி முடிந்து வீடு வெறிச்சோடிவிட்டது இல்லையா?" மனைவி சுமதியிடம் சொன்னார் ராஜன். அவர்களுடைய இரண்டாவது மகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் முடித்தார்கள். பொறுப்புகள் முடிந்துவிட்டது என்ற சந்தோஷத்தில் இருந்தார்கள். கணவன் மனைவி இருவரும்…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 23

ஜோதிர்லதா கிரிஜா பத்மநாபன் கேட்ட கேள்வியில் தொனித்த கிண்டலைப் புரிந்துகொள்ளாத தேவராஜன், “என்ன சொல்றேள், பத்மநாபன்?” என்றார் விழிகள் விரிய. “தயவு பண்ணி நான் பேசப்போறதை நீங்க தப்பா எடுத்துக்கப்படாது.” “இல்லே. சொல்லுங்கோ.” “பொண்களோட…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-3)

சி. ஜெயபாரதன், கனடாஅவளது கண்கள் தீவிர சக்தி வாய்ந்தவை! அணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை! வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவை! வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்! ஜான் டிரைடென் [John Dryden, Drama: All…

கலைகள்

கவிதைகள்

நவீனத்தில் ஒரு திசைச்சொல் ஆளுமைக் குறித்த விமர்சனம்

தாஜ் அது ஒரு கிளிக்காலம் விடுப்பட்டுப் பறப்பதிலன்று இஷ்ட வயதெனக்கு அவன்தான் காட்டினான் கூட்டிலிருந்து தனது முதல் பறப்பை கண் கொட்டாமல் ரசித்தேன் கூக்குரல் அற்ற சூழல் கவனத்தைக் கூர்மையாக்கியது. அவனது சலசலப்பு கிளர்த்தெழுந்தபோது…

கறிவேம்பில் நிலவு

டீன்கபூர்நிலவு மணத்தது எனக்கு. பூமரத்தில் தெத்தி புpன் கறிவேம்பில் தங்கியதை நிலவின் மணத்தில் அறிந்தேன். வாசலில் நிலவு முடிகிளறியது. பேன் பொறுக்க காக்கையை அரட்டியது. நிலவுக்கு பிரியமுள்ள இடம். அந்தப்புற நாயகியோடு சங்கமித்து ….…

வெவ்வேறு

ஹெச்.ஜி.ரசூல் அணில்களும் சிட்டுக்குருவிகளும் அடிக்கடி வந்துபோகும் ஜன்னல் கொஞ்சகாலமாய் மூடியேகிடந்தது மீண்டும் திறந்தபோது அணில்களும் சிட்டுக்குருவிகளும் வெளியேபோவது தெரிந்தது வெவ்வேறு ஜன்னல்வழி கடலோரம் நின்று கடலை தன் அலகால் கொத்திக் கொண்டிருந்தது வலியச் சென்று…

புறப்படு

கவிஞர் புகாரி புறப்படும்போது நதிகள் யாவும் திசை தெரியாமலேயே புறப்படுகின்றன எங்கே நகர்கிறோம் என்ற இலக்கறியாமலேயே நகர்கின்றன ஆயினும் அவையனைத்தும் மிகச் சரியாகக் கடலையே சேர்கின்றன o முடிவு பற்றிய பயத்தில் பயணம் துறப்பது…

விரல் சூப்பும் சிறுவனும் வறுத்த கச்சானும்

றகுமான் ஏ. ஜெமில் மூக்கும் ஓடி விரலும் சூப்பியபடியாக படுக்கையிலும் மூத்திரம் அடித்து சோறும் பிசைந்து தீத்தச்சொல்லி அடம்பிடித்து அம்மாவின் சேலைத்தலைப்பில் தொங்கி சிணுங்கி செல்லம் காட்டும்படியான பராயம் நட்சத்திரங்களும் சடைத்து பூத்து நிலாவும்…

பெரியபுராணம் – 90 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2517. மங்கல மலர்கள் மழையெனப் பொழிய மங்கல வாழ்த்துக்கள் இனிதாக இசைக்க பூக்கள் இட்ட மணமுடைய நீர் நிறைந்த குடங்களையும் அழகிய விளக்குகளை தூபமுடன் ஏந்தியும் நீண்ட தோரணங்கள் வரிசையாய் அமைத்து அடியார்கள்…

நிலா மட்டும்…

பனசை நடராஜன் ஓடினாலும் கூட வந்து சோறு ஊட்டும் அம்மா.., விரல் பிடித்து பள்ளிக்கூடம் அழைத்துப் போகும் அப்பா.., துரத்தி வந்து சண்டை போட்டு அழவைக்கும் அண்ணா.., ரெண்டுநாள் லீவுக்கு போய் மாமாவோடு திரும்பினப்போ…

சிறுவரை பள்ளிக்கு அனுப்புவோம்

தியாகு எட்டு வயதிலே -நீ இலையெடுக்க வந்தியா பள்ளிக்கு போலைய படிப்புத்தான் வரலையா? இலையெடுக்க நீ வந்தால் சோறுதான்எடுக்குமோ -தம்பி நீ மேசையை துடைக்கையில் தேச மானந்தான் போகுதடா! பிழைக்கத்தான் வேலையா பிழைப்பே வேலையா…

கீதாஞ்சலி (75) நீ எமக்களித்த கொடைகள்!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எமது எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி வைக்கும், நீ எமக்களித்த மனிதக் கொடைகள்! எனினும் நாங்கள் ஓடி வருவோம் உன்னிடம் மீண்டும், கொடைகள் வற்றாத போதும்! வயல்புறம், ஊர்ப்புறம் வழியாகக்…

நகைச்சுவை

பேந்தா !

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா ஜோதிகாவின் கண்களைப் பார் கோலிக் குண்டுகள் மாதிரி ! கோலிக் குண்டு கண்ணை வைத்துக் கொண்டு இப்படியும் அப்படியும் பார்க்கிறாள் பார் ! குழந்தை என்ன அழகு ? கோலிக் குண்டு…

பகுத்தறிவாளர் கழகத்தில் பான்டேஜ் பாண்டியன்

செல்வன்பான்டேஜ் பாண்டியன் ப.க (பகுத்தறிவாளர் கழகம்) ஆபிஸ் சென்றபோது வைரமணி விடுதலை படித்துக் கொண்டிருந்தார்.பாண்டியனை பார்த்ததும் "வாய்யா பாண்டியா.எல்லா கட்சிகளுக்கும் ஒரு ரவுண்டு போயிட்டே.எங்களை மறந்துட்டியோன்னு நினைச்சேன்" என அட்டகாசமாக சிரித்தபடி பாண்டியனை வரவேற்றார்.…

‘ஜிம்மி டைம்ஸின் வானம்பாடியின் கரண்டி’

சித்ரா ரமேஷ் தொலைக்காட்சித் தொடர்களில் கதை எழுதி பிரபலமடைய வேண்டும் என்று துடிக்கும் கதாசிரியர்களுக்கு சுலபமாக 'தொடர்கதை' எழுதும் திறன் வளமடையவும், மேலும் வளர்த்துக்கொள்ளவும் உதவும் தன்னம்பிக்கையூட்டும் ஒரு கட்டுரை இது. முதலில் கதையை…