திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031023_Issue

அரசியலும் சமூகமும்

உதயமூர்த்தி சுவாமிகள்

பரிமளம் சமையல் நூல்களுக்கடுத்தபடியாகத் தன்முன்னேற்ற நூல்கள் தமிழில் அதிகம் விற்பனையாவதாகத் தெரிகிறது. அப்துற்-றஹீம் நீண்ட காலமாக ஆங்கிலத் தன்முன்னேற்ற நூல்களைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டு வந்தாலும் வெகுசனப்பத்திரிகை வழியாகப் பரந்துபட்ட வாசகர்களைப் பெற்றவர் என்னும் பெருமை…

பகுத்தறிவு குறித்த மூடநம்பிக்கைகள் – குறுகிய கண்ணோட்டம்

பித்தன் 'பகுத்தறிவு குறித்த மூடநம்பிக்கைகள் ' என்ற ரவி.K.ஸ்ரீநிவாசின் கட்டுரை ஒரு குறைபாடுள்ள கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறுகிய கண்ணோட்டத்தில் பெரியாரையும், அவர் கொள்கைகளையும், பகுத்தறிவையும் பார்ப்பதுபோல இருப்பதால், அதைப்பற்றிய என் எண்ண ஓட்டத்தை…

காரேட் ஹார்டின்(1915-2003)

ரவி ஸ்ரீநிவாஸ் செப்டம்பர் 2003ல் காரேட் ஹார்டினும், அவரது மனைவியும் சேர்ந்து உயிர் விட்டனர்.வாழ்வின் இறுதியை சுயதெரிவாக உயிர் நீத்தனர். ஹார்டின் என்ற பெயர் பலருக்குத் தெரியாமலிருக்கலாம்.The Tragedy of the Commons என்ற…

பொது இடம், தனிமனித இடம் ,சமூகக் குழுவின் தகுதரங்கள்

மஞ்சுளா நவநீதன் (இந்தக் கட்டுரையை எழுத முனைப்பாக இருந்தது 'பாய் ? ' படம் பற்றிய விவாதங்களும் விமர்சனங்களும். ஆனால் இதில் பாய்ஸ் படம் பற்றிய விமர்சனம் இல்லை. பாய்ஸ் பட விமர்சனங்கள் சுட்டும்…

கடிதங்கள் – அக்டோபர் 23,2003

திரு.ஜெயபாரதன் அவர்களுடைய கட்டுரையின் ஒரு பகுதி குறித்து... {ஜெ.பா: முன்பு ஒருமுறைத் தெரியாமல் ‘பாலா’ என்பவரைப் பெண்ணென்று சொல்லிவிட்டதில், அவருக்கு என்மீது தாங்க முடியாத கோபம்! ‘பரிமளா என்ற பெயரைக் கொண்ட நான் ஓர்…

திரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது

ஜெயகாந்தன் இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த திரு.அண்ணாதுரை காலமானார். ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும். ஆனால், அண்ணாதுரை விஷயத்தில்…

ஒரு மலையாளியின் மன நோயாளியின் உளறல்கள்…

இளையபாரதி -------------------------------------------------------------------------- ' 'கலைஞருக்கு இலக்கியத்தில் இடமில்லை. ' ' ' 'இன்குலாப் எழுதுவது ஒருவரிக் கூட கவிதை இல்லை. ' ' ' 'க.நா.சு.வைவிட நானே சிறந்த விமர்சகன். ' ' '…

பாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.

யமுனா ராஜேந்திரன் 'சீ போடா பொறுக்கி ' என்பது பாய்ஸ் படத்தில் வருகிற வசனம். சங்கரையும் சுஜாதாவையும் யாரும் இன்னும் இவ்வளவு நாகரீகமாக விமர்சிக்கவில்லை எனச் சந்தோசப்படலாம். இன்பம் சந்தோசம் பாலுறவுக் கொண்டாட்டம் போன்ற…

குருட்டுச் சட்டம்

PS நரேந்திரன் சமீபத்தில் தமிழ்நாட்டு அரசாங்கம் கோவில்களில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்குத் தடை விதித்து சட்டம் இயற்றியிருப்பதையும், 'திண்ணையில் ' அது குறித்த விவாதங்களையும் படிக்க நேர்ந்தது. அதன் பாதிப்பில் எழுதுப் பட்டது இந்தக்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நிபுளாக்கள்!

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா [Milky Way Galaxy, Nebulae Discovery By John Herschel (1792-1871)] 'புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித…

இலக்கிய கட்டுரைகள்

கவிதையின் புதிய உலகங்கள்

விக்ரமாதித்யன் நம்பி நமது தமிழ்மொழி உலகிலுள்ள செவ்வியல் மொழிகளில் ஒன்று. நீண்ட நெடிய கவிதை மரபு கொண்டது. அகிலத்தின் சிறந்த கவிதைகளுக்கு ஈடு இணையான கவிதை வளம் நிரம்பியது. காலத்தாலும் அழிக்க முடியாத இலக்கியப்…

தாமரைத் திருவிழா-ஒரு கலைச் சங்கமம்

K.ரவி ஸ்ரீநிவாஸ்1 லத்தின் அமெரிக்க இசையும்,இந்திய இசையும் சேர்ந்து இசைக்கப்பட்டால், அமெரிக்காவில் ஒரு சிறிய நகரில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த தால் படத்திலிருந்து ஒரு பாடல் ஒரு இசைக் குழுவால பாடப்பட்டால், ரகீ இசையும்…

எனக்குப் பிடித்த கதைகள் – 82- மனத்தின் மறுபக்கம்- ந.முத்துசாமியின் ‘இழப்பு ‘

பாவண்ணன் அப்போது என் மகன் குழந்தையாக இருந்தான். ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்த நான் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். கூடத்தில் பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தான் அவன். கதவைத் திறந்து உள்ளே நுழையும்போதே ஆவலால் அவன் பெயரைச்…

தி விண்ட் வில் ஃபால்- இரானிய திரைப் படம்.

அம்மாளு மாமி. பாய்ஸ் பாத்துட்டு ஆபாசம் சரி தப்புன்னு ஏதாவது சொல்லலாம்னா, தூக்கம் கண்ண அமட்டிண்டு வந்துடுத்து. நாச்சியார் மடத்துலருந்து பாய்ஸ் வரைக்கும் ஆபாசம் ரைட் ராங்க்னு சொல்ல நமக்கு முடியறதுன்னா ஆபாசம்னு பொதுவா…

மீராவின் கனவுகள்

பாவண்ணன் கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்த நேரம். நல்ல கவிதைகளை எழுதுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். எழுதி முடிக்கும் ஒவ்வொரு கவிதையையும் என் ஆசிரியராக இருந்த தங்கப்பாவிடம் வாசிக்கக்கொடுப்பேன். படித்தபிறகு அவர் சொல்லும் வார்த்தைகள் தொடக்கத்தில் என்…

பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிஷெல் ஹூல்பெக் (Michel Houellebecq)

நாகரத்தினம் கிருஷ்ணா 'நீ வாழும் சமூகத்தின் நோக்கம் உன்னை அழிப்பது..... அப்படி அழிப்பதற்கு இச்சமூகம் கையிலெடுக்கும் ஆயுதம் உன்னை ஒரு பொருட்டாக கொள்ள மறுப்பது.. அதனை அனுமதித்துவிடாதே. எதிர் கொள் '.- ஹூல்பெக் ஹூல்பெக்…

கதைகள்

இது தாண்டா ஆஃபீஸ்!

ஜோதிர்லதா கிரிஜா அந்த மைய அரசு அலுவலகத்துள் வீணா காலடி எடுத்து வைத்த போது சரியாக மணி 8.50. மின் தடங்கலால் மின் தூக்கி (lift) வேலை செய்யவில்லை. எனவே, கால்கள் வலிக்க வலிக்க,…

நேரம்

ஜெயந்தி சங்கர் சிங்கப்பூர் வியர்க்க விறுவிறுக்க பள்ளியிலிருந்து திரும்பி வீட்டினுள் நுழைந்தவன், உள் அறையிலிருந்து மிதந்து வந்த 'ஒலி ' யின் அரவம் கேட்டுத் திகைத்து ஒரு கணம் நின்றேன். உள் மனமோ, '…

விடியும்!- (19)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அடைமழை இன்னும் இரண்டொரு நாட்கள் தொடரப் போவது நிச்சயம். ஒவ்வொரு துளியும் வரிவரியாக தடிதடியாக கூட்டாளிப் பேரிரைச்சலோடு சாய்ந்தபடி இறங்குவதைப் பார்க்க கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. சில்லென்றடித்த மழைக் கூதலில்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்பது

இரா முருகன் விடிகாலையிலேயே வந்துவிடுவான் என்று சொன்னார்கள்.ராஜா காத்துக் கொண்டிருக்கிறார். எழவெடுப்பான் வரும் வழியாகக் காணோம் இன்னும். நடுச் சாமத்திலிருந்து தூக்கம் போனது ராஜாவுக்கு. ராணியோடு சீமை தேசங்களிலெதிலோ யாத்திரையாகிறது போல சொப்பனம். தழையத்…

ே ப ய்

எஸ். ஷங்கரநாராயணன் ஃ ரமணி பேயைப் பார்த்து விட்டதாய்ச் சொன்னது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. பேய்வீட்டை நெருங்குகையில் திடுமெனத் தெருவிளக்குகள் அணைந்து விடுகின்றன. பெரும் இருள் கவ்வி விடுகிறது. முக்கியமாகப் பேய்கள் நமக்குத் தெரிந்த…

அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை

அ.முத்துலிங்கம் வாரத்தில் ஏழு நாட்கள் இருப்பதில்தான் முதல் பிரச்சினை ஆரம்பமானது. இதை மாற்றுவது அவனுடைய ஆற்றலுக்கு அப்பால் பட்டது. வாரத்தில் ஆறு நாட்கள் இருந்திருக்கலாம்; எட்டு நாட்கள் கூட பரவாயில்லை. ஒற்றைப் படையாக ஏழு…

தீபாவளிப் பரிசு

புதியமாதவி, மும்பை மும்பை நகரமே வெளிச்சத்தில் நனைந்துக்கிடந்தது. வரப்போகும் தீபாவளிக்கு இது வெறும் ஒத்திகைதான் என்று அங்கங்கே வெடிக்கும் வெடிச்சத்தங்கள் பறைச்சாற்றிக்கொண்டிருந்தன. ஸ்டேஷனில் யார்க்கையில் பார்த்தாலும் தீபாவளிப்பரிசுப் பெட்டிகள். அவரவர் உத்தியோகத்துக்கு ஏற்ப பரிசுகளின்…

குட்டியாப்பா

நாகூர் ரூமி 1 பின் சீட்டின் இடது ஓரமாக நான். வலது பக்க ஓரமாக நஜீ. முன் சீட்டில் தம்பி தீனும் நண்பர் பிலாலும். நஜீ இன்னும் ஓய்ந்தபாடில்லை. அது இப்போது ஓயவும் செய்யாது.…

கவிதைகள்

கவிதைகள்

சேவியர் பறிக்கப்பட்டவைகள் --------------------------------------- 0 மங்களமா இருக்கும் வாங்கிக்கோங்க, கக்கத்தில் இடுக்கிய கூடை நிறைய வாசனையோடு நிற்பாள் பூக்காரி. பூக்களுக்கே வலிக்காமல் பூக்களை பூ போல அள்ளிக் கொள்தல் அவளுக்கு விரல் வரம். பூக்களைச்…

இசை அசுரன்

நாகூர் ரூமி யானையின் கண்களைப்போன்ற கீறல் விழுந்த உனது சின்ன குரல் முதன் முதலாய் என் செவிகளில் விழுந்தபோது எனக்குப் பிடிக்கவே இல்லை உன்னை! அபஸ்வரமாய் பட்டது உன் பெரிய ஆகிருதி எனக்கு! வெறும்…

தீபாவழி

சத்தி சக்திதாசன் தீபத்தினால் ஒளி ஏற்றிடுவார் தீபாவளியாய் ஆக்கிடுவார் வானத்தை வெளிச்சமாக்கிடுவார்# வாணவேடிக்கைகள் நடத்திவார் அரக்கனை அழித்த தினமாம் இது அன்றே வாழ்க்கை ஆனந்தமாயிற்றாம் எதனை உலகில் அழித்தால் இன்று ஏழ்மை என்றொரு அரக்கன்…

கொடை கேட்கும் சிறு பெண்தெய்வங்கள்

விக்ரமாதித்யன் பேச்சி கொடை கேட்கிறாள் பொல்லாத இசக்கி கொடை கேட்கிறாள் வண்டிமலைச்சி கொடை கேட்கிறாள் முப்புடாதி கொடை கேட்கிறாள் மாடத்தி கொடை கேட்கிறாள் சுடலி கொடை கேட்கிறாள் கொடை கொடுத்தால்தான் பிரீதியாகி சாந்தம்கொள்ளும் பிடிகொடுத்தே…

அன்னை தெரேஸாவின் அமுத மொழிகள் (1910-1997)

சி. ஜெயபாரதன், கனடா என்றும் தன்நலம் பேணி, ஏது காரண மின்றி தாறுமாறாய் எவ்வித நியாயமு மின்றி ஒவ்வாது நடப்பர் மாந்தர்! ஆயினும் மன்னித்து விடுக மாந்தரை! அருட்பணி செய்துநீ வருகையில், சுயநலம் பேணி…

மீண்டும் மீளும் அந்தத் தெரு.

நாகரத்தினம் கிருஷ்ணா என்னுள் இருக்கும் அந்தத் தெரு சோம்பல் முறித்த அதிகாலைக்கு தேத்தண்ணி விநியோகிக்கும் காசாம்பின் கைப்பட்ட இட்டலியை சூட்டில் வருந்தும் தாமரை இலையிலிட்டு மீன் குழம்பை அபிஷேகிக்கும் குமரிகள் கைபட்ட கூடுதல் சந்தோஷத்தை…

வணக்கம் தமிழ்த்தாயே !

புகாரி கணினித் திரைநிறைத்துக் கற்கண்டாய்க் குவிந்தாயே இணைய வலைகிழித்துப் பொற்பாதம் சுழன்றாயே அழியும் மொழிகளுக்குள் தமிழிருக்கும் என்றாரே ஒளியாய் ஒளிப்பிழப்பாய் உச்சத்தை வென்றாயே துள்ளும் நடைபோட்டுத் தொழில்நுட்பம் தாண்டுகின்றாய் மெல்லச் சாவதினிச் சொன்னவனின் மொழியென்றாய்…

கவிதைகள்

அ.முஹம்மது இஸ்மாயில் ரமலானே வருக! இறையருளை தருக!! உலகம் அழிக்கும் மடமை ஒழிக்க உலகம் வியக்கும் மறையை வழங்கிய உயர்வான ரமலானே வருக! இறையருளை தருக!! உலகம் அழிக்கும் மூடநம்பிக்கை ஒழிக்க உலகம் காக்கும்…

அலைகளின் காதல்

கற்பகம் ------------------- உறுமிக்கொண்டு...புரண்டுத் திரண்டு, காதுகளைக் கிழிக்கும் கர்ஜனையுடன் கரைதனைத் தேடி மீண்டும் மீண்டும் வருகின்றன அலைகள்! பக்குவமில்லாத பார்வையில் இது சண்டை போலவும், ஒரு போர் போலவும் தோன்றக் கூடும்! இடி விழுவது…

தாண்டவன்

அருண்பிரசாத் ஓய்வின்றி ஆடுகின்றான் தாண்டவன். ஒற்றைக் காலில் வெறுமையின் உக்கிரம் தாளாமல். தேவியின் பாத சலங்கை பின்னணி இசை நினைவு அம்பலத்தில். மற்றுமொரு மானசரோவராய் உருவெடுக்கும் வியர்வை பிரளயங்களின் வெடிப்புகளை நிரப்புகிறது. =================== everminnal@yahoo.com.