திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050106_Issue

அரசியலும் சமூகமும்

பேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்

ஸ்ரீமங்கை ---- நாச அலைகளின் கோரத்தாண்டவதின் அழிவை சீரமைக்கும் பணி தீவிரமாகியுள்ளது. உளவியல் ரீதியான சீரமைப்பு குறித்து விவரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இங்கு தன்னார்வக் குழு நண்பர்களைக் கேட்டபோது, அதன் முக்கியத்துவத்தை பல…

ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசாரகீனன் நவம்பர் 11, 2004 திண்ணையில் இரான் மற்றும் நைஜீரியா போன்ற தீவிர இஸ்லாமிய சட்டங்களைக் கடைபிடிக்கும் நாடுகளில் முறை தவறிய உறவு வைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படும் பெண்கள் ஷரியா அடிப்படை நீதி…

சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்

ஜெயமோகன் சுனாமி தாக்கிய இரண்டாவதுநாள் நான் மனம் சரியில்லாத நிலையில் ஒருநாள்முழுக்க அர்த்தமில்லாமல் சுற்றிக் கொண்டு சாப்பிடாமல் இருந்தேன். என்னைச் சந்திக்க வந்து சென்ற கேரளநண்பர்கள் என்ன ஆனார்கள் என்ற ஐயம். அவர்கள் முட்டம்…

உதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு

ப.வி.ஸ்ரீரங்கன் ' யுத்தங்களினது விருத்தியானது ஊனமாக்கிய சிறார்களில் தனது தடத்தைப் பதித்தது சுனாமியோ சும்மாகிடந்த கடலைச் சீறவைத்து பூமியினது அமைப்பையே மாற்றியது ' உலகந்தோறும் யுத்தங்கள். இயற்கைப்பேரழிவுகள். ஊனமிக்க எதிர்காலத்தை இந்த உலகு எதிர்கொள்ள…

சுனாமி உதவி

வரதன்பல காலமாக சமூக சேவையே தங்கள் பணியாக கொண்ட தொண்டுள்ளங்கள், மற்றும் அமைப்புகள் ஒரு பக்கம் களமிறங்கி சுனாமி துயர் துடைக்க வேலை பார்க்க, தற்போது பல அமைப்புகள் சுனாமி சேவைக்காக புதிதாய் இறங்கியுள்ளன.…

வன்முறை : பாலுறவு : தணிக்கை

யமுனா ராஜேந்திரன் 1 தமிழ் சினிமா மீதான இருவிதமான அரசியல் தலையீடுகள் முனைப்புப் பெற்று வருகிறது. முதலாவதாக தமிழ் தேசிய அரசியலின் வேட்கையாக சினிமாத் தலைப்புகள் தூய தமிழில் வைக்கப்பட வேண்டும் எனும் அழுத்தம்…

கலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா ?

ராமசந்திரன் உஷா நம் சமுதாயத்தில் பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்களா, மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றுப் பார்க்கும்பொழுது முன்னேற்றம் நன்றாக தெரிகிறது. பெண் சிசு கொலை என்பது இன்னும் கிராமங்களில் இருக்கிறது என்றாலும், தொழிற்சார்ந்த பெண்கல்வி பெருகுவதால்…

அறிவிப்புகள்

tsunami aid

yaazhini Words wont be enough to describe the calamity caused by the tsunami that hit the South India. Tamilnadu, which faced great devastation, is in…

இஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்

நேச குமார் 'கயமை வேண்டாம் ' என்று டிசம்பர் 23 திண்ணையில்[01] எழுதியிருக்கும் ஹமீது ஜாஃபர் பல விஷயங்களை முன்வைத்துள்ளார். அவர் விடுத்துள்ள மிரட்டல்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஏனைய வாத ங்களை பார்த்தோமானால், அதன் சாராம்சம்…

கடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்

பா.ரெங்கதுரை திண்ணை வாசகனான நான் அமெரிக்க பசிபிக் நேரப்படி ஒவ்வொரு வியாழன் இரவும் திண்ணை வலையேறியதும் முதலில் படிப்பது சோதிப் பிரகாசம் அவர்களின் மெய்மையின் மயக்கம் கட்டுரைத் தொடரையே. இந்தத் தொடரை அவர் 32…

கடிதம் ஜனவரி 6,2005

நேச குமார் சலாஹுதீன் அவர்கள் எனக்குப் பதிலளிக்குமுகமாக டிசம்பர் 23 திகதியிட்ட மடலில்[1] பல விஷயங்களை முன்வைத்துள்ளார். அவரது வாதங்கள், வேண்டுகோள்கள் ஒரு புறமிருக்க, அவர் குறிப்பாக என்னிடம் வைத்துள்ள ஓர் வேண்டுகோளுக்கு மட்டும்…

கடிதம் ஜனவரி 6,2005

ராதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, திரு.அரவிந்தன் நீலகண்டன் தான் எழுதியது தகவல் பிழை என்று சாதிக்கிறார்.அவர் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.மார்க்சியத்தினை வெறுப்பவர் எப்படி சோவியத் மார்சியர் தரும் சான்றுகளை ஏற்றார், அதுவும் அவை…

உயிர்மை அரங்கில் சந்திப்பு

அறிவிப்பு நண்பர்களுக்கு, சென்னை புத்தகக் கண்காட்சி வரும் 7-1-05 முதல் 17-1-05 வரை சென்னை காயிதேமில்லத் கல்லூரி அரங்கில் நடைபெறவுள்ளது. அதில் வரும் 13- 1-05 அன்று உயிர்மை அரங்கில் நான் நண்பர்களை சந்திக்க…

கடிதம் ஜனவரி 6,2005

அருள் செல்வன் கந்தசுவாமி அன்புள்ள திரு. சோதிப் பிரகாசம், முதலில் நான் ஒன்றை தெளிவாகச் சொல்லி விடுகிறேன். நான் மொழியியலிலோ, அகழ்வாராய்ச்சியிலிலோ இன்னபிற ஹுமானிடாஸ் துறைகளிலோ வல்லுனன் அல்லன். நான் ஒரு பொறியியலாளன். அறிவியலில்…

கடிதம் ஜனவரி 6,2005

அசுரன் இனிய நண்பர்களே!, அணுஉலைகள் போன்ற பேரபாய கட்டமைப்புகள் நம் நாட்டில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சூழலில், பேரழிவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்த ஆய்வுரைகளைத் தொடர்ந்து வெளியிடுவது என்று எண்ணியிருந்தோம். கும்பகோணம் கொடூரம்…

கடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து

பி கே சிவகுமார் நாம் சொல்ல நினைக்கிற விஷயங்கள் பலவற்றைச் சொல்ல முடியாமல் போவது உண்டு. சொல்வதற்கேற்ற சரியான வார்த்தைகள் கிடைப்பதில்லை என்பது ஒரு காரணம். எப்படிச் சொல்வது என்று தெரியாமல் இருக்கிற குழப்பம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா சுனாமி வரும் பின்னே! சுருதியோலம் வரும் முன்னே! பூகம்ப உடுக்கடித்துக் கடல்மடியில் பொங்கும் அலைப் பாம்புகள் நெளிந்து நாகப் படமெடுத்து நரபலிகள் நேருமுன் நடுக்கத்தின் அதிர்வு…

மஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.

அமி நார்ட்டன் மசாலாவில் மஞ்சள் நிறம் வரவழைக்க உபயோகப்படுத்தப்படும் மஞ்சள்தூள் (turmeric), அல்ஜைமர் வியாதி உடையவர்களின் மூளையில் இருக்கும் அழுக்குக்களை நீக்குவதாக ஆரம்ப ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மஞ்சள்தூளில் இருக்கும் குர்குமின் curcumin என்ற ஒரு…

கோடெலும் ஐன்ஸ்டைனும்

பாலி யூர்க்ரா (தமிழில் : ராமன் ராஜா) 1942 ன் கோடைக் காலம்; மைன் கடற்கரையெங்கும் ஜெர்மனியின் போர்ப்படகுகள் ஓநாய்க் கூட்டம் போல் வெறி பிடித்து உலவிக் கொண்டிருந்த நேரம். இடம் : நீலமலைப்…

இலக்கிய கட்டுரைகள்

முட்டாள்களின் பெட்டகம்

புதுவை ஞானம் தவிர்க்க இயலாமல் நாம் தூங்கும்போது தவிர நம்மையும் நம் குடும்பத்தினரையும் ஆட்கொண்டு ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கின்ற தொலைக்காட்சிக்கு ஆங்கிலத்தில் IDIOT BOX என்று பெயர். இந்தப் பெயரை யார் சூட்டினார்கள், எதற்காக சூட்டினார்கள்…

சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி

கி. உமாமகேஸ்வரி நாடே துக்கத்துடன் டிவி முன் குவிந்திருந்த வேளையில் சன் டிவியில் தோன்றி கவிதாஞ்சலி செலுத்தி தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்ட கவிஞர் வைரமுத்துவின் கவிதை வரிகளை ரசித்திருப்பவர்களில் நீங்கள்கூட ஒருவராக இருக்கலாம். என்னமா…

ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்

மோனிகா “ஜெர்மனியை விட்டு நீங்கள் வெளியேறக் காரணம் என்ன ?” என்று ஒரு முறை ஜார்ஜிடம் கேட்டபோது, “நானும் ஹிட்லரும் ஓவியர்கள். ஒரு நேரத்தில் எங்களில் ஒருவர் மட்டுமே அங்கு வாழக்கூடும். அதனால்தான் நான்…

உயர்பாவை 3

மாலதி 9.தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய 'Is it better for a woman to marry a man who loves her than a man she loves ? '…

விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்

மதியழகன் சுப்பையா எவற்றின் சேர்க்கையால் புள்ளிகள் தோன்றும் என்று நமக்குச் சொல்லித் தரப் படவில்லை. ஆனால் புள்ளிகள் சேர்ந்து கோடுகள் உருவாகிறது என படிப்பிக்கப் பட்டுள்ளோம். கோடுகளின் வகைகள் பல. புள்ளியில் துவங்கி நீள்கின்றது…

மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை

அ கா பெருமாள் 16. ஆந்திரமுடையார் கதை களைக்காட்டூர் என்ற ஊரில் மாடன் நாயர் என்பவர் வாழ்ந்து வந்தார். அந்த ஊரில் எருக்கலை, புல்புதர்களை வெட்டி சீர்திருத்திப் பயிர் செய்து செல்வந்தனாக வாழ்ந்தார் அவர்.…

‘விளக்கு விருது ‘ விழா

சி.அண்ணாமலை விருதுடன் சர்ச்சையும் இயல்பாகிப் போன தமிழ்ச்சூழலில் அதிலிருந்து தப்பிய விருதுகளில் ஒன்று விளக்கு விருது. அதனால் மிகவும் மதிக்கப்படுவதோடு, விருதைப் பெறுபவர்கள் ஆத்மார்த்தமாய் உணர்கிறார்கள். ஆகவே, தொகை, விழாக்களை விட விருதின் மதிப்பு…

தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)

புதுவை ஞானம் சோதிடம் மிக நுட்பமான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும், பதார்த்தசாரம் என்ற சமண நூல் Pre Biotric Evolution பற்றி பேசுகிறது எனவும் கடந்த கட்டுரையை முடித்திருந்தேன் அல்லவா. அதில் பயன்படுத்தி…

கதைகள்

அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு

ஜெயமோகன் கேக் ஒரு பெண்ணின் முகம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் சிவந்த உதடுகள் மீது ஒரு செர்ரி. கிருஷ்ணன் அந்த செர்ரியை எடுத்தபடி ' ' அப்துல் லதீஃப் அல் பக்தாதியைப்பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா…

நிழல் அழைத்துச்சென்ற இடங்கள்

எஸ். ஷங்கரநாராயணன் ---- வேதகிரி பட்டத்துக்கு வந்தபோது இளம்பிரகாச ஆசான் என நாமரூபணம் ஆயிற்று. நல்ல அழகன். முன்சிரைத்த குடுமி. காதில் கடுக்கன்கள் ரோஜா பூத்தாப்போல. கண்ணில் காந்தம். திமிர்ந்த தோளில் வசீகர வாலிபம்.…

நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53

நாகரத்தினம் கிருஷ்ணா கோலித் திகழ்கிற(கு) ஒன்றின் ஒடுக்கிப் பெடைக் குருகு பாலித் திரும்பனி பார்ப்பொடு சேவல் பயிலஇரவின் மாலித் தனையறி யாமறை யோன்உறை அம்பலமே போலித் திருநுத லாட்(கு)என்ன தாங்கொல்என் போதரவே. -(திருக்கோவையார்)- மாணிக்கவாசகர்…

மறுபிறவி

ரம்யா நாகேஸ்வரன் “நான் யாருக்குமே உபயோகம் இல்லாதவன்.” மீண்டும் அதே எண்ணம். எப்பொழுதாவது தோன்றும் எண்ணம் தான். ஆட்குறைப்பு காரணமாக இன்னும் மூன்று மாதத்தில் வேலை போய்விடப் போகிறது. இது தெரிந்த இந்த இரண்டு…

கவிதைகள்

‘சுனாமி ‘

பா.ஸ்ரீராம் உன் மடியின் ஓரம் வாழ்ந்த உயிர்கள் உன் பிடியில் சிக்கி பிணங்களாக... கடலுக்குள் போனவணை காணவில்லை... கண்ணிமைக்கும் நேரத்திலே ஊருமில்லை... யார் யார் எங்கே என்றும் தெரியவில்லை... யாருக்கும் எதுவுமே புரியவில்லை... உறவினை…

சுனாமி என்றொரு பினாமி.

ருத்ரா 'புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி ' நீரில் மலர்ச்சி தந்து கதிரவன் புத்தொளியில் கைகோர்த்து விளையாடிவரும் கடற்பூங்காற்றே இப்படியொரு கடல் பூதத்தை எப்போது கர்ப்பம் தரித்தாய் ? சுநாமியே நீ என்ன அந்த…

ஊழி

பவளமணி பிரகாசம் அலையாலே தாலாட்டி அருந்துயிலை தந்தவளே வேசமாய் இழுத்தின்று பெருந்துயிலில் ழ்த்தியதேன் ? வயிற்றை கழுவ வழியானவளே வயிறு நிறைய விழுங்கியதேன் ? வெறியாட்டம் டியதேன் ? காயசண்டிகை னதேன் ? பட்டும்…

கிழித்து வந்த காலமே!

- சிவஸ்ரீ நாள்காட்டிகளைக் கிழித்துப் போட்டுத் தீர்ந்ததும் திடுமென வருவாய் வழக்கமாய்... நரம்புகளை கிழித்துப் போட்டு நாடுகளைக் குலுக்கிப் போட்டு நாட்டெல்லைகளை மாற்றிப் போட்டு நெஞ்சங்களை உலுக்கிப் போட்டுக் கடல்களை ஏவிவிட்டு உடல்களைக் காவிக்…

உலகமே

விசிதா உலகமே அழியும் போதும் அன்றும் உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக... நேற்று வெளியான படத்தில் நடித்த நடிகையின் பேட்டி தொலைக்காட்சிகளில் கமல் படம்,ரஜனி படம் வேண்டுமன்றோ தமிழருக்கு இழவு வீட்டிலும் வேண்டும் சினிமா…

பிதாவே..எங்களை மன்னியும்!

புதியமாதவி ==== பரமப்பிதாவே.. எங்களை மன்னியும் பிழைத்திருப்பதற்க்காக நன்றி சொல்ல எங்களால் முடியாது. பிழைத்திருப்பதே பிழையாகிப்போனதால் அச்சுப்பிழையில் அர்த்தமிழந்துவிட்டது உன் வாசகம். பரமப்பிதாவே எங்களை மன்னியும் கோழிமிதித்து குஞ்சுகள் மாண்டன கருவறையே கல்லறையானது முலைப்பாலில்…

கடலுக்கு மடல்

கோவி.கண்ணன் 1. கடல் தாயே! என்றழைத்த எங்களுக்கு இதுதான் உன் அசுர அணைப்பா ? உப்புக்கு உன்னிடம் பஞ்சமா ? எங்கள் கண்ணீரையும் சேர்த்தெடுத்து சென்றாய்! கொடுவாய் மீன் தெரிந்த எம்மக்களுக்கு ! உன்…

பெரியபுராணம் – 25

பா.சத்தியமோகன் 550. சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி தாமரையில் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் காணுதற்கு அரிய சிவபெருமான் பலரும் புகழும் திருவெண்ணெய்நல்லூரில் (ஆவண) ஓலையின் பழைமை காட்டி உலகம் உய்வதற்காக ஆளப்பட்ட நம்பியாரூரர் திருவடிகள்…

என் வேள்வி

நாகூர் ரூமி ==== சில கேள்விகளை ஊற்ற ஊற்ற வளருகின்றன பதில்கள். சில பதில்களை ஊற்ற ஊற்ற முளைக்கின்றன கேள்விகள். சில கேள்விகளை தரையில் கேட்டால் விடை சொல்கிறது வானம். சில கேள்விகளை வானத்திடம்…

அலைப் போர்

ரவி இன்னுமென்னால் கற்பனை பண்ண முடியவில்லை நாளுக்கு நாள் பெருகும் செய்திகளினுாடு நான் பயணித்துக் கொண்டுதானிருக்கிறேன். முடியவில்லை, இந்தக் காட்சியை கற்பனையுள் வார்த்துக் கொள்ள. அலைகள் இராட்சதித்து மண்ணில் புகுந்து நிகழ்த்தியாயிற்று ஒரு அலைப்…