திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050422_Issue

அரசியலும் சமூகமும்

கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! ( பகுதி:4)

ப.வி.ஸ்ரீரங்கன் ' மூலதனத்தின் கருப்பையில் சமாதனம் கருக்கொள்வதென்பது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிடுவதாகும். ' இன்று நாம் காணும் அமெரிக்கா வெறும் வர்த்தக முன்னணி நாடாகயில்லை,மாறாக வர்த்தகத்தால் மனித விரோதங்களைச் செய்யுங்காட்டாட்சியுடைய நாடு.அமெரிக்க மூலதனமானது…

பாவேந்தரின் பதறல்கள்!

நாக.இளங்கோவன் தமிழ் என்பதைத் தவிர நெஞ்சத்தில் மற்றோர் குறிக்கோளுக்கு இடம் தரா நெஞ்சினர் பாவேந்தர். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாளான ஏப்ரல் 21க்கும், பிறந்தநாளான ஏப்ரல் 29க்கும் இடைப்பட்ட நாள்களில் ஒன்றேனும் தமிழ்…

அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்

ஜோதிர்லதா கிரிஜா முன் குறிப்பு - அண்மையில் துக்ளக் வார இதழில் ஓர் அன்பர் ‘பெண்களால் உருவாகியுள்ள ச்மூகப் பிரச்சினை’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி யிருந்தார். அதற்கு நாம் அனுப்பிய பதில்…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1

கே ஜே ரமேஷ் 'நான் ஒரு கையில் சமாதானத்தின் சின்னமாக ஆலிவ் கிளையும் மற்றொரு கையில் சுதந்திரப் போராட்ட வீரனின் துப்பாக்கியுடனும் வந்திருக்கிறேன். என் கையிலிருந்து ஆலிவ் கிளையை விழுந்து விடச் செய்யாதீர்கள் '…

மீனம் போய் மேடம்

இரா முருகன் இது விஷுக்காலம். மீன மாதச் சூடே பொறுக்க முடியாமல் தகித்துக் கொண்டிருக்க, இன்னும் பெரிய அனல் அலையை கட்டியம் சொல்லிக்கொண்டு மேட மாதம் வந்து சேர்ந்தது. புது வருடத் தொடக்க விஷு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம் (9)

சி. ஜெயபாரதன் B.E.(Hons), P.Eng (Nuclear), கனடா மூன்று மாதம் தூங்கி விழும் துருவம் பூண்ட, மூன்று மாதம் கண்மூடா வெளிச்சம் கொண்ட தென்கோடிக் கண்டம், இந்தியக் கண்டத்தின் தோழி! பனிக்கண்டமாய் தனிக்கண்டமாய்ப் பிரிவதற்கு…

மெல்லக் கொல்லும் விஷங்கள் …

தஞ்சாவூரான் குடிக்கத் தண்ணீரில்லாத நமது நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து எழுப்பப்படும் தொழிற்சாலைகள். பணம் பார்ப்பதே லட்சியம் என்று ஆலாய்ப்பறக்கும் கனவுத் தொழிற்சாலையின் உருப்படியில்லாப் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படும் மூலப்பொருட்களான நடிகர்,…

இலக்கிய கட்டுரைகள்

சந்திரமுகி க(வ)லையா ? – அறியா விஷயம் ஆயிரம் புரியும்

பாஸ்டன் பாலாஜி (இந்த அனுபவப் பகிர்வில் படம் குறித்த முக்கிய திருப்பங்களும் தகவல்களும் இருக்கிறது. சம்பவங்களை முன்பே அறியாமல், சந்திரமுகியை பார்க்க விரும்புவோர் இந்தப் பதிவை தவிர்க்கலாம்.) சுமார் இருநூறு இருக்கைகள் மட்டுமே இருக்கக்கூடிய…

சருகுகளோடு கொஞ்ச துாரம்

எஸ். ஷங்கரநாராயணன் 14 02 1997 நேற்று இன்றல்ல நாளை - நாவலுக்கு அக்னி அட்சர விருது - ஏற்புரை ---- வாழ்க்கை பேரனுபவமாய் இருக்கிறது. வாயளவுக்கும் அதிக உணவு அது. காலத்தின் கெடுபிடியில்,…

தன்னலக் குரலின் எதிரொலி

பாவண்ணன் மிகச்சிறந்த அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஜாக் லண்டன். அவருடைய புகழைப் பலமடங்காக்கிப் பெருக்கி உறுதிப்படுத்திய படைப்பு 'கானகத்தின் குரல் '. இது ஒரு நாயைச் சுற்றிப் புனையப்பட்ட கதையே என்றாலும் படித்து முடித்ததும்…

டென்மார்க்கின் தனிப்பெரும் இலக்கியவாதி கிாிஸ்ாியன் அண்டர்சன்

என் எஸ் நடேசன் ஒரு காலத்தில் வாழ்ந்த அரசன் தனது செல்வத்தையெல்லாம் நவின மோஸ்தாில் உடைகளை அணிவதில் விரயமாக்கினான். அவனது நேரம் இராச்சிய விடயங்களை விட்டு, உடையலங்காரத்தில் கழிந்தது. ஒரு நாள் அவனது சபைக்கு…

பிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும்

எஸ். அரவிந்தன் நீலகண்டன் முன்குறிப்பு: [மாண்டூக்ய உபநிடதம் குறித்த அனைத்துக் கருத்துகளும், உபநிடத வாக்கிய மொழிப்பெயர்ப்புகளும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின், துறவி சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்களது 'மாண்டூக்ய உபநிடதம் ' எனும் விளக்க…

கார்ல் பாப்பரின் வெங்காயம்-7

சோதிப் பிரகாசம் ஆட்சித் தலைவர்கள் எழுதப் படாத தாள் என்று உழவர்களின் மூளைகளைச் சித்தரித்து இருந்தார் மாவோ! ஆனால், உழவர்களின் கருத்துகளைத் தமது மூளையில் பதித்துக் கொண்டதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டு…

கதைகள்

வாரம் ஒரு குறுங்கதை – ஈசல்கள்

சாரங்கா தயாநந்தன் மழை. திடார்ப்பாய்ச்சல் தான். முன்னறிவிப்பு ஏதுமின்றி. வானப்பெண் முந்தானைக்குள் சேர்த்து வைத்த நீர் விசிறியிருக்க வேண்டும். மழை துளிநிலையிலில்லை. அடர்ந்தது. மண் தொட்டதும் 'வெள்ளம் ' என்றாகிப் பள்ளம் பார்த்துப் பாய்ந்தோடிற்று.…

மரண வாக்குமூலம்

ஜோசப் கோவில் தர்மகர்த்தா ஏகாம்பரம் வீடு என்றால் அந்த ஊரில் தெரியாதவர்களே இல்லை. ஆகவே, சிதம்பரம் பஸ்சிலிருந்து இறங்கி ஊருக்குள் நுழைந்து அவருடைய பெயர் சொல்லி விசாரித்தபோது அவனை எல்லோரும் ஏற இறங்க பார்த்தார்கள்.…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது)

சி. ஜெயபாரதன், கனடா 'கடவுளின் மகளே! செல்! முன்னே செல்! முன்னேறிச் செல்! எனது உதவி உனக்குக் கிடைக்கும்! முன்னேறிச் செல்! இந்த அசரீரி குரலைக் கேட்டதும், எப்போதும் அக்குரலைக் கேட்க வேண்டுமென்று என்…

கிருஸ்ணபிள்ளை

அம்ாிதா ஏயெம் டேய், அந்த டம்ளரெல்லாத்தையும் கெதியாய் எடுத்து வாடா ? என்ற அரக்கச் சத்தம் கிருஸ்ணபிள்ளையை நோக்கி அந்த தடியன் முதலாளியின் பானை வயிற்றிலிருந்து வந்தது. கெதியாய் எடுத்துக் கொடுக்க வேணும், இல்லாட்டி…

மழலைச்சொல் கேளாதவர் ( அறிவியல் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)

என். சொக்கன் பிரசவித்த களைப்பில் மதுமிதாவும், பிறந்த களைப்பில் அவளது குழந்தையும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஒரு சாய்வு நாற்காலியில் தளர்ந்து படுத்திருந்தான் அஷ்வின். இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துப் பிறந்திருக்கவேண்டிய குழந்தை.…

அவர்கள் வரவில்லை

சந்திரவதனா காற்றோடு கை கோர்த்து ஊர்க்கோலம் போகின்ற மகரந்தத் துகள்களுக்கு என் நாசித்துவாரமும் பாதையாகிப் போனதில் தொண்டைக்குழி வரை மசமசத்தது. விடுப்புப் பார்ப்பதே வேலையாக இருந்ததில் விழிகளும் சிவந்தன. 'அக்கா சித்திரைக்குப் பொங்கியாச்சே... '…

கடப்பாரை

அருள்ராஜ் நவமணி அதோ அந்த ஆலமரத்தின் அடியில் இருக்கும் சதுரமான சிமெண்ட் மேடையில்ி நாள்ி முழுவதும் அவரைப்பார்க்கலாம். எங்கள் அலுவலக வளாகத்திலே ஒரு புதிய கட்டடம் கட்ட இருந்தோம். அந்த இடத்தில் இருந்த பழைய…

கவிதைகள்

தூங்கலாமா தம்பி தூங்கலாமா… பேருந்தில்

நெப்போலியன் விழித்திருக்கும் பொழுதே எரித்து விடுகிறார்கள்.... தூங்கலாமா தம்பி தூங்கலாமா ? பேருந்தில் ! யாத்திரைகளில் நித்திரை நிரந்தரமற்றது பயணங்களில் தூக்கம் தவிர்க்கமுடியாதது நடத்துனரும் - ஓட்டுனரும் தூங்காமலிருத்தலால்தான் சுகமான பிரயாணத்தின் நிம்மதி நிறுத்தங்கள்.…

சிறுவாயளைந்த அமிர்தம்

சாரங்கா தயாநந்தன் புதுவசந்தத்தின் பொன்வண்ண மலராய் அசைந்தாடி நடக்கிறான் குழந்தை அவன் சிந்திய சிரிப்புக்களில் நட்சத்திரத்தோட்டமாய் நம் வீடு இங்குதான் என்வாழ்வின் மகிழ்வு உச்சம் உதித்தது. அந்த அற்புதமான பொழுது, என் மகன் மகாராஜனாக…

மழைக்குடை மொழி

சாரங்கா தயாநந்தன் (தமிழாக்க வடிவக்கற்பனை) மழைக்குடையாக என் மனசிலுலவுகிறது ஒரு மொழி. தேவை கருதி மட்டும் நான் விரிக்கும் திருமொழி. அது எனது தாய் பேசியது அது என் தந்தை பேசியது அழகிய அதன்…

தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ) ஆங்கில மூலம்: கரோலின்ரைட்

தமிழில்: சிபிச்செல்வன் பகையில் ஆரம்பம் மனித இயல்பு இவையெல்லாம் நீ உட்கார்ந்தால், அவர்கள் சொல்வார்கள் - “உட்காரக் கூடாது”. நீ நின்றால், “எதற்காக நிற்கிறாய், நட!” நீ நடந்தால், “இது உனக்கு அவமானம், உட்கார்!”…

கீதாஞ்சலி (19) பேராசைப் பிடியிலிருந்து விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என் ஆசைகள் மிகையானவை! அவற்றுக்கு ஏங்கித் தவிக்கும் என் கூக்குரல் இரங்கத் தக்கது! தர மறுக்கும் உன் தீவிர எதிர்ப்புகள் என்னைப் பாதுகாப்பன, எப்போதும்! அக்கறையுடன் என்மீது அவ்விதம்…

பெரியபுராணம்-37

பா. சத்தியமோகன் 992. இவ்வாறு உலகில் அடியவர்க்குத் தொண்டு செய்து மிக்க உயர்வுடைய நல்லோர்கள் சிவனது உலகில் சார்வது போல சிவனாரின் அடியவரைத் துன்புறுத்திய தீயவன் கொடிய நரகத்தில் விரைவாய் வீழ்ந்தான். 993. முழுதும்…

நெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்

விஜிலி சகலதும் அந்நியப்பட்டு மறைவதாய் நமக்குள்ள பெரும் பிரமை ஆனந்தமும் சுவாரஸ்யமும் கனதிப்பட்டாலும் ஆக்கிரமித்தலும் நெருக்குவாரமும் இழுபடுவதாய் நெஞ்சுமுட்டியது போலவே மனது நிறைந்துள்ளது! ஆனாலும்; சில நொடியில் வெறுமைப்பட்டுவிடும் ஊடல்; வாய்ச் சவடலில் எல்லாமே…

நெடுந்தீவு ஆச்சிக்கு

வ.ஐ.ச.ஜெயபாலன் அலைகளின்மீது பனைக்கரம் உயர எப்போதும் இருக்கிற என்னுடைய ஆச்சி காலம் காலமாய் உன்னைப் பிடித்த பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின போத்துக்கீசரின் எலும்புகள் மீதும் தென்னம் தோப்பு நானும் என் தோழரும் செவ்விளநீர்…