இந்தி சினிமாவின் பத்துவிதிகள்

1. இரண்டு சகோதரர்கள் பால்யகாலத்தில் பிரிந்தார்கள் என்றால், அவர்களில் ஒருவன் போலீஸால் துரத்தப்படுபவனாகவும், இன்னொருவன் போலீஸ்காரனாகவும் இருக்கவேண்டும். போலீஸால் துரத்தப்படுபவன் கடைசிக்காட்சியில் திடாரென்று திருந்தி உண்மையான வில்லனை அடித்து நொறுக்கவேண்டும். இந்த சகோதரனுக்கு ஹீரோயின் இருந்தால் மட்டும், இறுதியில் குடும்பம் இணைந்து போஸ் கொடுப்பதற்கு அவனது குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும். (விதி இரண்டைப் பார்க்கவும்) 2. ஹீரோக்களின் எண்ணிக்கை ஹீரோயின் எண்ணிக்கைக்கு சமமாக இல்லையெனில் உபரியான ஹீரோக்கள் அல்லது ஹீரோயின்கள் அ) இறக்கவேண்டும் ஆ) செஞ்சிலுவைச் சங்கம், ராமகிருஷ்ணா […]