திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110508_Issue

அரசியலும் சமூகமும்

கணையாழியும் கஸ்தூரிரங்கனும்

பாவண்ணன்எண்பதுகளில் இலக்கிய உலகில் அடியெடுத்து வைப்பதற்கு ஒரு வாசலாக இருந்த முக்கியமான இதழ் கணையாழி. அதன் நிர்வாக ஆசிரியராக இருந்து நடத்தியவர் கி.கஸ்தூரிரங்கன். தொடக்கத்தில் சிறிது காலம் தி.ஜானகிராமன் இதன் ஆசிரியராக இருந்து நடத்தினார்.…

ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)

நல்லான் முதலாவதாக ஒரு முக்கிய செய்தி: இஸ்லாமாபாதிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், மிகப் பாதுகாப்புகள் நிறைந்த அபெட்டாபாத் (Abbottabad) பாகிஸ்தான் மிலிட்டரி அகாடமியின் அருகாமையில் இருக்கும் கட்டடத்தில், பிரத்யேக அமெரிக்கப் படையின்…

அஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)

ஸிந்துஜா கஸ்தூரிரங்கனை நான் 1974ம் வருஷம் ஒரு மார்ச் மாத மத்தியான நேரத்தில் சந்தித்தேன். என்னை அவரிடம் இந்திரா பார்த்தசாரதி அழைத்துச் சென்றிருந்தார். மதுரையிலிருந்து, வேலை கிடைத்ததால் புது தில்லிக்குச் சென்று சில நாட்களே…

யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்

K.W. ஜனரஞ்சன தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், சோபாக்க எனும் பிக்குவிடம் ஒருமுறை 'முதன்மையானது என்றால் என்ன?' என புத்தர் கேட்டாராம். அதற்கு அவர் 'எல்லா உயிரினங்களுக்கும் உணவே பிரதானமானதாகும்' என்றாராம். இந்தக் கதையையே…

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது

நிஸார் அகமதுகவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது பத்மநாபபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு - கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வசிக்கும் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மற்றும் அவர்தம்…

வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்

வெங்கட் சாமிநாதன்மலர் மன்னனின் புத்தகம் வந்தேமாதரம் நமக்கு சற்று முன் இஸ்லாமியர்கள் எழுப்பிய பிரசினை யின் சரித்திரம் முழுதையும் ஆதியோடந்தமாக எடுத்துச் சொல்கிறது. இது போல அவ்வப்போது எழும் பிரசினைகளின் முழு வரலாறும் சொல்லப்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3 (ஜூலை 17, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் உலகெங்கும் விபத்துக்கள் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன ! முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது…

இலக்கிய கட்டுரைகள்

செம்மொழித் தமிழின் பொதுமை

முனைவர் மு. பழனியப்பன் தமிழ் நிலத்தில் பேசக்கூடிய மொழி தமிழ் என்றாலும் அத்தமிழ்மொழி உலகப் பொதுமை நோக்கிய பல செய்திகளைக் கொண்டு விளங்குகின்றது. மக்கள் அனைவரும் ஓர் நிறை, ஓர் நிலை என்று எண்ணி…

புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!

வ.ந.கிரிதரன்[இந்தக் கட்டுரை எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகவும், எழுத்தாளர் டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டு தோறும் வெளிவரும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலருக்காக எழுதப்பட்டது. கூர் 2011 கனடாக் கலை…

நிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.

தேனம்மை லெக்ஷ்மணன்தகிதா பதிப்பகம் இந்த வருடம் வெளியிட்ட பத்து நூல்களில் ஒன்று கவிஞர் வைரஸின் நிறைய அமுதம். ஒரு துளி விஷம். கல்லூரி மாணவனான வைரஸின் கவிதைகளில் இளமை மிளிர்கிறது..பதிப்பாளர் மணிவண்ணன் கூறியபடி படிக்கும்…

அலை மோதும் நினைவுகள்

வெங்கட் சாமிநாதன் விஜய பாஸ்கரனைப் பற்றி நினைக்கும்போது, அவரை நான் கண்டடைந்த பாதையைச் சொல்ல வேண்டும். அது வேடிக்கை யாகத் தான் இருக்கிறது. எங்கோ அந்த தொடக்கப் புள்ளி இருக்கும். அந்தப் புள்ளி விஜய…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9

சத்யானந்தன் யுத்த காண்டம் - மூன்றாம் பகுதி "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது…

பறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்

பாவண்ணன் கோட்டோவியமாக ஒரு கருங்குருவியின் சித்திரம். மழையில் நனைந்ததைப்போன்ற அதன் இறகுகள். தரையில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகள். அருகில் ஒரு வேலித்தடுப்பு. வெளிர்மஞ்சள் நிறப்பின்னணியில் இக்காட்சி. படிப்பதற்கு இத்தொகுப்பை கையில் எடுத்ததுமே இந்தப் படம்தான்…

பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்

ஹெச்.ஜி.ரசூல் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியங்களில் சிங்களப் பேரினவாத அரச அதிகார வன்முறையால் பாதிக்கப்படும் தமிழினத்தின் சாவுகள், துயரங்கள் உள்ளீடாக நிரம்பி வழிகின்றன. தமிழ்ச் சகோதரப் போராளிக் குழுக்களிடையே வன்மமாக வளர்ந்துவிட்ட பகை சொந்த இனத்தின்…

தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரின் சுவடுகளைப் பற்றிக் கொண்டு ‘பாரதி கவிதா மண்டலத்தின்’ மூன்றாவது தலைமுறையில் முத்திரைப் பதித்த…

கதைகள்

பெருங்கிழவனின் மரணம்

துரோணாதாத்தா தனது தோளில் கிடந்த சிமென்ட் நிற துண்டினை வலதும் இடதுமாக அசைத்தப் படியே மாடிப் படி ஏறினார். காய்ந்த மா இலைகள் படிக்கட்டுகளில் அலைந்துக் கொண்டிருந்தன.நான்,சுருட்டிய பாயினையும் தலயணையினையும் கைகளில் ஏந்திக்கொண்டு அவரைத்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "வெடியில் நீயும் மரணம் அடைவாய் ரான்டல் ! இங்கிருக்கும் எல்லாரும் மரணம் அடைவர் ! கவலைப்…

இவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்

வே.சபாநாயகம். 1. எனக்கு எழுதணுமென்னு ஒரு உந்துதல் வந்ததில்லாதே எழுத மாட்டேன். ஊற்று வற்றிப்போனா அதுக்கு நம்மொ பொறுப்பில்லெ. அதுக்கு நான் வருத்தப்படவுமில்லே. பின்னாலே எழுத முடியாத ஒரு காலமும் வந்தது. என்னதான் உந்தித்…

மனசு

ப. இரமேஷ் அந்தி சாயும் நேரம் கணேசன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் என்னங்க, என்னங்க என்று அவரது மனைவியின் குரல் கேட்டு எழுந்தார். “இந்தாங்க, டீ வைச்சிருக்கேன் குடிங்க” என்றாள் சரோஜா. டீயைக் குடித்துக்…

யார் கொலையாளி? – துப்பறியும் சிறுக‌தை

ராம்ப்ரசாத்மதிய வெயில் சுரீரென்று காற்றை பொசுக்கிக்கொண்டிருக்க, ஈ.சி.ஆர் ரோட்டில் சற்றே தாழ உள்ளடங்கிய லக்ஸர் ரிசார்டின் வாசலில் ரோட்டோரமானதான ரிசார்டின் தென்னை மரங்களின் நிழலில் கிரீச்சிட்டு நின்றது அந்த போலீஸ் ஜீப். உள்ளிருந்து விரைப்பாய்…

ஊட்டவுட்டுத் தொரத்தோணும்

பாரதிதேவராஜ்.எம்.ஏ., மஞ்கள் கதிரவன் கண்ணைக் கரித்தது. மணி நாலிருக்கும் போலிருந்தது. அடுப்பு ஈரவெறகால் புகையைக்கிளப்பியது. கமலா கண்ணைக்கசக்கியபடி முள்ளுக்கட்டை ஒன்றை சொருகினாள். அடுத்த கணம், “மடோர்” என்று பானை உடைந்து மூணு படி, நெருச்சுபோட்டு…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35

ரேவதி மணியன் இந்த வாரம் यदा - तदा (yadā - tadā) when - then என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம். வாக்கியம் எக்காலத்தில் இருந்தாலும் यदा - तदा என்பது உருமாற்றம் பெறாது…

கவிதைகள்

அறை இருள்

ராம்ப்ரசாத் வெளிச்சங்களை விரட்டிவிட்டு இருள் ஆக்ரோஷமாய் மூலை முடுக்கெல்லாம் எதையோ தேடிக்கொண்டிருந்தது... அது தேடிக்கொண்டிருந்தது என் மெளனத்தைத்தானென்று அறியாமல் இருளையே வெறித்திருந்தேன் நான்... - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

இரட்டை ரோஜா இரவு

தேனு சத்தமாக ஒரு உரையாடல் மௌனித்திருந்த வேளையில், இரு உடல்களுடன் தனிமை நாற்றமும் அறை முழுக்க கட்டவிழ்க்கப்பட்டிருந்தது.. . மௌனித்திருந்த உரையாடலின் முன்குறிப்பு ஒற்றை இரவிலோ, ஒற்றை கவிதையிலோ நிச்சயமாக நிறையாது எனக்கு.. .…

அதனதன் தனிமைகள்

வளத்தூர் தி .ராஜேஷ்-- சீற்றமிகு தனிமையின் விளைவை தன் மவுனத்தில் வெளிவருவதை என் அழுகை காட்டி கொடுத்து விடுகிறது . பரிமாணத்தின் பரிசுத்த அக்கண்ணீர் இக்கணம் திரவத்தின் தலைவன் ஆனது. அக்கண்ணீர் தன் இயக்கத்தின்…

குதிரைகள் இறங்கும் குளம்

ந.மயூரரூபன் வார்தைகள் நிலையழிந்து முட்டித்திரியும் என் கனவுக்குளத்தின் கரைகளில் காட்டுக்குதிரையொன்று திமிர்த்து நடைபயில்கிறது. கருப்பு வௌ்ளைக் காட்சித் திரையாய் நிரம்ப முடியாக்குளம் கருநிழல் சாய்ந்த அக்குதிரையின் கனைப்பொலி நிறைத்து இன்னொன்றிற்காய் காத்திருக்கின்றது. உன்நினைவுகள் முளைத்தவெளியை…

அப்படியாகிலும் இப்படியாகிலும் …

சித்ரா ___________________ தூக்க சொல்லி கால் சுற்றி வந்து புடவை கொசுவத்தில் முகம் புதைக்கிற வேளைகளில்.. தூக்குகிற அம்மாவாயிருந்தால் தோளில் சாய்ந்து விரல் சப்பலாம்.. தூக்காத நேரங்களில் !!! தூக்காத நேரங்களிலும் அழாமல் இருக்க…

என் மண்!

வ.ந.கிரிதரன் நான் பிறந்த, நான் தவழ்ந்த, நான் வளர்ந்த மண். ஒரு தலைமுறைதான் ஓடி விட்டது பிரிந்து. நீங்கியது நேற்றுத்தான் போலிருக்கிறது. கழிவிரக்கத்தில் கழிகின்றது நிகழ். இப்பொழுதும் பல சமயங்களில் எனக்கு என் மண்மீதான…

பிரச்சாரம்

ரவிசந்திரன் சிறுமை கண்டு மேடையில் பொங்கி கிழே சில்லறைக்கு சிண்டு பிடி சமத்துவ புரத்திலும் சாதி சண்டை பாக பிரிவினையில் வட மொழி மேல் போர் செய்ய தாய் மொழிக்கு நவீன கல்லறை நீதி,…

அதுவரை பயணம்.

செண்பக ஜெகதீசன் ஆனந்தம் அளிக்கிறது அறிவியல் வளர்ச்சி, அச்சம் அளிக்கிறது அமைதியின் வீழ்ச்சி.., பாரெலாம் நடுங்குது பயத்தில், நனைகிறது கண்ணீரில், கேட்கிறது கூக்குரல்கள், அது தெருச் சண்டையாலா, வாய்பிளக்கும் வன்முறையாலா, வலியவரும் போராலா..? மாறித்தான்…

களங்கமில்லாமல்..

தேனம்மை லெக்ஷ்மணன்********************************* மனம் ஒவ்வொரு உருவமாக உன்னை வனைந்து பார்க்கிறது.. நீ பிரதிபிம்பங்களுக்குள் அடங்காமல் மஹிமா லகிமா அணிமாவாய் எங்கேயோ அமர்ந்து என்னை நானறியாமல் பார்ப்பாயோவென்ற எதிர்பார்ப்போடு கழிகிறது நொடிகள்.. எப்போதாவது நீயறியாமல் உன்னை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நான் பணி செய்யப் போகும் போது திருவாளர் பிதற்றுவாய் என் பின்னால் வருவார் ! என் மூளை உணர்வைக் கிளரிவிட்டுச்…