திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030828_Issue

அரசியலும் சமூகமும்

குறிப்புகள் சில – 28 ஆகஸ்ட் 2003 தி ஹிந்து-குளிர் பானங்கள்-வணிக முத்திரை,பதிப்புரிமையும் கருத்துச்சுதந்திரமும்

K.ரவி ஸ்ரீநிவாஸ் 125 ஆண்டுகளை எட்டியிருக்கும் தி ஹிந்துவில் சமீபத்தில் கடந்த கால செயல்பாடுகள், நிகழ்கால சவால்கள், எதிர்கால கண்ணோட்டம் குறித்து விரிவாக ஒரு தலையங்கம் வெளியாயிருந்தது. இது N.ராம் எழுதியது என யூகிக்கமுடிகிறது.…

பேய் அரசுசெய்தால்

ஞாநி பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது பாரதியின் கவிதை. பாஞ்சாலி சபதம் காவியத்தில் பாஞ்சாலியை அரசவைக்கு இழுத்து வந்து துகிலுரிந்த கட்டத்தில், என்னை சூது வைத்து இழக்க என் கணவனுக்கேது…

வாரபலன் ஆகஸ்ட் 22 (பெல்ஜிய அதிகாரிகள், விபச்சார வர்த்தகம், காந்தர்வம்)

மத்தளராயன் நாலடுக்கு டிபன் காரியரில் வழிய வழியக் கொண்டு வந்ததையோ, காண்டானில் அரக்கப் பரக்க இலை முழுக்க வட்டித்ததையோ சாப்பிட்டு, மரமேஜைக்குப் பின்னால் ஏப்பம் விட்டபடி குண்டூசியால் பல் குத்திக் கொண்டு பிற்பகல் சாயாக்காரனை…

40 சீனில் என்ன செய்யமுடியும் ?

சூரியா தமிழ் சினிமாவின் சிக்கல்களினைப்பற்றிய பரிமளம் அவர்களின் கட்டுரை நன்றாக எழுதபட்டிருந்தது. ஆனால் சினிமாக்காரர்களை கோமாளிகளோ ஒன்றும் அறியாதவர்களோ ஆக காட்டக் கூடிய பார்வை பொதுவாக அறிவுஜீவிகளிடம் இருக்கிறது. அது சரியல்ல. சினிமாக்காரர்கள் ஃபீட்பேக்…

மறைந்த எழுத்தாளருக்கான மரியாதையும் மதிப்பீடுகளும்

பாரதிராமன். கடந்த 23 ஆகஸ்டு, 2003 அன்று சென்னை பாரதியார் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தை ஒரு முன்மாதிரியான கூட்டமென்று சொல்லலாம். அரங்கு நிறைந்திருந்தது மட்டுமல்ல, அதை நிறைத்தவர்கள் இலக்கியப் படைப்பாளிகளும் தீவிர வாசகர்களும்தான். கூடியிருந்தது…

பண்பெனப்படுவது யாதெனக் கேட்பின்….

பரிமளம் பட்டிக்காட்டான் X நகரத்தான், குடும்பப்பெண் X படித்தபெண், இந்தியப்பண்பாடு X மேலைநாட்டு அநாகரிகம் என்று கற்பனையான முரண்பாடுகளை முன்வைத்துப் பல திரைப்படங்கள் வழக்கம்போல் பொய்களை அவிழ்த்துவிட்ட காலம் ஒன்றிருந்தது. இவற்றுள் முதலிரண்டும் ஏறத்தாழ…

ஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை, மணப்பெண் சொத்துரிமை, மணப்பெண் வயது, வரதட்சணைக்கு அஞ்சி பெண்சிசுக்கள் கருஅழிப்பு!

சி. ஜெயபாரதன், கனடா ஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை சுதந்திரம் அடைந்த ஆன்மீக இந்தியாவில் தற்போது பெண் பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து வாலிபத்தில் திருமணம் முடித்து, இல்வாழ்வில் தள்ளுவது பெற்றோருக்கு ஒரு பெரும் சுமையாகத்…

ஜேனஸின் முகங்கள் : 20 ஆம் நூற்றாண்டில் மார்க்சியமும் பாசிஸமும்

நூல் மதிப்பீடு: பேராசிரியர்.ரிச்சர்ட்.எம்.ஈபிலிங் 1947 இல் ஆஸ்திரிய பொருளியலாளர் லுட்விக் வான் மைஸஸ் 'திட்டமிடப்பட்ட குழப்பங்கள் ' எனும் சிறிய நூலை வெளியிட்டார். முதல் உலகப் போரின் பின் மேற்கத்திய உலகில் உருவாகி இயங்கி…

எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி

எழுத்தாளர் கோபி கிருஷ்ணனுக்கு நிதி உதவி அளித்தவர்களின் பட்டியல் இது. இந்தத் தொகை கோபி கிருஷ்ணன் மனைவிக்கு அளிக்கப் பட்டுவிட்டது. இனி உதவி செய்ய எண்ணுபவர்கள் கோபி கிருஷ்ணனின் குடும்பத்தினரைக் கீழ்க்கண்ட முகவரியில் நேரடியாய்த்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவுத்திறத்தின் பரிணாமம்- செடி SETI மற்றும் விண்வெளி உயிரியலின் இன்றியமையா பகுதி

லோரி மரினோ, எமரி பல்கலைக்கழகம் விண்வெளி உயிரியலின் முக்கியமான கேள்வி, உயிர் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கும் கிரகங்களில் 'அறிவு ' இருக்குமா என்பது. 'அறிவு ' இருக்குமா என்பதைக் காண நாம் அளவிடக்கூடிய அறிவுடன்…

வியாழனைச் சுற்றிய காலிலியோ விண்வெளிக் கப்பல் [Galileo Spaceship that orbited Jupiter (1989-2003)]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை! நாமறியாதவை கணக்கில் எண்ணற்றவை! புரிந்து கொள்ள முடியாத கரையற்ற ஒரு கடல் நடுவே, சிறு தீவு ஒன்றில் அறிவு படைத்த நாம்…

இலக்கிய கட்டுரைகள்

யார் எழுதலாம் எவ்வளவு எழுதலாம் ?

எம் வேதசகாயகுமார், முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் தமிழ்துறை, திருவனந்தபுரம் பல்கலை கழகம். சென்ற இதழில் ரவி சீனிவாஸ் பற்றிய என் குறிப்பை சிலருக்கு அனுப்பியியும் நேரிலும் பல நண்பர்களுடன் விவாதித்தேன். திண்ணை இதழில் வெளிவந்த பிறகு…

கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி

ஜெயமோகன் கு.ப.ராஜகோபாலனின் படைப்புகளைப்பற்றி மிகுந்த பிரேமை கொண்ட ஒரு எழுத்தாள நண்பரும் நானும் பேசிக் கொண்டிருதோம். கு. ப. ராஜகோபாலன்தான் தமிழிலக்கியத்தின் உச்சம் என்ற எண்ணம் கொண்டவர் அந்நண்பர். 'ஒவ்வொரு சொல்லையும் செதுக்கிச் செதுக்கி…

முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும்

K.ரவி ஸ்ரீநிவாஸ் பயாஸ்கோப்பும் ஃபிலிமும்டாக்டர்.எம். வேதசகாயகுமார், முதுநிலை ஆய்வுப்பேராசிரியர், தமிழ்த்துறை, திருவனந்தபுரம் பல்கலைக் கழகக் கல்லூரி http://www.thinnai.com/ar0822031.html என்ற கட்டுரையை முன்வைத்து நான் இதை எழுதுகிறேன். இக்கட்டுரை மூலம் சில கருத்துக்கள், கேள்விகளை முன்வைக்க…

அறிவியல் புனைவுகள் – ஓர் எளிய அறிமுக வரலாறு

அரவிந்தன் நீலகண்டன் அறிவியல் புனைவுகள் என்பவை என்ன ? பொதுவாக வெகு அண்மைக்காலம் வரை அவை ஒருவித 'தப்புதலுக்கான இலக்கியம் ' 'அதீத கற்பனையை கொண்ட இலக்கிய தரமற்ற படைப்புக்கள் ' என்பதாகவே அறியப்பட்டு…

ஆவேசமும் குழந்தைமையும் -வில்லியம் பாக்னரின் ‘இரு சிப்பாய்கள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 74 )

பாவண்ணன் பத்தாண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. அப்போதுதான் பெங்களூருக்கு மாற்றலாகி வந்திருந்தேன். காவேரி நதிப்பிரச்சனை உச்சத்தில் இருந்த நேரம். இரண்டு மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுவிட்டது. அலுவலகத்துக்குச் செல்ல நகரப் பேருந்தொன்றில் பயணம் செய்துகொண்டிருந்தேன். உட்கார…

கதைகள்

குயவன் (குறுநாவல்)

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர். (அ) 1941 ஆம் வருடம் மலேயாவிற்குச் சோதனை ஆரம்பமான நேரம். ‘புலி வருது புலி வருது’, என்கிற கதையாய் ‘ஜப்பான் காரன் தோ வரான், அதோ வரான்’ என்று எங்கும்…

…காற்று தீரும் வரை

நம்பி. அவள் ஏன் சாகவேண்டும் ?. அதுவும் அழகாய் பிறந்துவிட்டு. பின் என்னைக் காதலித்துவிட்டு. அவள் செய்த தவறுதான் என்ன ?. மல்லிகை பூவையும், பாஸந்தியையும் விரும்பியதைத் தவிர ? எனக்கு பிடித்தமான வேளைகளில்…

யாதுமாகி நின்றாய் பராசக்தி…….

இளந்திரையன் எல்லாம் முடிந்து விட்டது. வீடே வெறிச்சென்றிருக்கிறது. துக்கத்திற்கு வந்திருந்த உறவுகளெல்லாம் கலைந்து விட்டிருந்தன. தன்னையும் அறியாமல் 'கமலம் ....... கமலம் ' என்று பல முறை அழைத்து விட்டார். இருபது வருடங்கள் அவரின்…

விடியும்! நாவல் – (11)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் ஒழுங்கை தூரத்தில் தெரிந்ததும் கொஞ்சம் இருட்டுப் பட்டபின் வந்திருந்தால் வசதியாயிருந்திருக்கும் என நினைத்தான் செல்வம். ஒன்றரை நாள் பிரயாண அலுப்பு. தண்ணி வெண்ணியோ சாப்பாடோ இப்போது தேவையில்லை. உடுப்பைக் கழட்டியெறிஞ்சு…

ஜாதிகள் ஜாக்கிரதை

ராமலக்ஷ்மி 'அப்பா ப்ளீஸ், அப்பா ப்ளீஸ் ' 'ஏண்டா இப்படிக் கிளம்புற நேரத்தில் உயிரை வாங்கிற! சொன்னா சொன்னதுதான். ' பெட்டிகளை வேனில் ஏற்றுவதில் மும்முரமாக இருந்த ரகுபதி சுள்ளென்று எரிந்து விழுந்தார். முரளிக்கு…

பிறகு….

நாகரத்தினம் கிருஷ்ணா 'அருண் நில்லுங்கோ. நான் சொல்லுறதைக் கேளுங்கோ. உங்கட மனசிலை ஏதேதோ கற்பனை செய்யுறீங்க என்று நினைக்கிறன். வேண்டாம். அதை கலைத்துவிடுங்கோ. குழம்ப வேண்டாம். என்மீதும் குற்றமிருக்கு. மேற்கத்திய சூழல்கள்ல இருக்கின்ற ஆணும்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்று

இரா முருகன் அத்தியாயம் இருபத்தொன்று சுந்தர கனபாடிகள் வைகை நதியோடு போய்க் கொண்டிருந்தார். சுத்த ஜலம் பிரவாகமாக இரு கரையையும் அடைத்துக் கொண்டு நுங்கும் நுரைப்புமாகப் பொங்கி வழிந்து ஓடியதன் சுவடுகள் ஈர மணலில்…

கவிதைகள்

வானம் காலடியில்

புதியமாதவி, மும்பை 400 042 வானவில்லின் பாலங்கள் உடை. மழைமகள் கருக்குடம் திற ஆண்-பெண் கணவன் - மனைவி ஆதாம் - ஏவாள் சட்டைகள் எறி உயிர் உடல் ஆன்மா வேடங்கள் களை நட…

தெய்வமனம் அமைந்திடுமோ!

கரு.திருவரசு பார்வையிலோர் ஓவியமும் பவளவிதழ் சிரிக்கின்ற பான்மையிலோர் காவியமும் பதுமையென இயிஇருக்கின்ற சீர்மையிலோர் சிற்பமதும் செய்திடுவேன்! அவையெல்லாம் சிந்திடுமோ மழலைமொழி சிறுகுழந்தாய் உனைப்போலே! தடுமாறும் நடைகண்டு தரமான நாட்டியமும் தடதடெனத் தளிர்க்கைகள் தட்டுவதில் தாளங்களும்…

பிக்பாக்கெட்

பொன்னி வளவன் பெண்ணே! பல்லவன் பேருந்தில் கருப்பு மை தீட்டிய உன் கயல் விழிகள் பேசிய காதல் மொழிகளில் கனநேரம் மயங்கி நின்ற நான்... பயணச்சீட்டு எடுப்பதற்காக பாக்கெட்டில் கை வைத்தவுடன் பதறிப்போனேன் பணம்…

நந்தா விளக்கு !

ஜோதிர்லதா கிரிஜா சொந்தமாய் வீடொன்று இருந்தாலும் தந்திரமாய் மறுத்துப் பொய்யுரைத்து நந்தவனம், நீச்சல் குளம் சூழ்ந்திட்ட அந்தமிகு அரண்மனை போல் வீடு கேட்டு இந்திய அரசினையே இம்மியும் கூசாமல் தொந்தரவு செய்கின்ற தலைவரிடையே 'இந்தா,…

பச்சோந்த்ி வாழ்வு

திலகபாமா, சிவகாசி வெட்டியெடுக்கப் பட்ட கிளைகள் போக உயிரிழந்திருந்த வேர் பற்றியிருந்த கரம்பை மண் கட்டியிடுக்கிலும் கருவேலமரங்களின் கால் ஊடாக பயணிக்கும் பச்சோந்தி மாறும் வாழ்வதனில் மாறாது நகழும் மானுடம் சுழலும் புவி வேகத்தில்…

யேன் செய்ததில்லை ?

பி.கே சிவகுமார் வாசல்விளக்கைச் சுற்றிவந்து விழுந்து மடியும் விட்டிலுக்கு ஆயுள்காலம் அற்பம்தான் ஆனாலும் ஏனொருமுறை கூட விட்டிலைப் பார்த்தபின்னே ஜன்னலை மூடாமல் விளக்கணைக்க விரும்பியதில்லை அந்தத் தெருநாய் நண்பனுமில்லை பகைவனுமில்லை ஆனாலும் பார்க்கும்போதெல்லாம் பார்வையால்…

இறுதி

தி கோபாலகிருஷ்ணன், திருச்சி ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியுமா இறுதி வரை ? நிச்சயமாக இருக்க முடியும் - அந்த இறுதி வரும் வரை யாருமற்ற தனிமையில் தற்செயலாக சந்திக்க நேர்ந்து இருவருமே…

தாரகை

பவளமணி பிரகாசம் திருத்தமான வட்ட முகமொன்றை வானத்திரையில் வரைந்து விட்டு வெள்ளை வண்ணம் குழைத்துப் பூசி ரசித்த ஓவியனும் திருட்டி கழிந்திட ஒத்தையாய் கருப்பில் ஒரு பொட்டு வைத்திட மறந்ததால் பதறினான் பிடித்திட்ட தூரிகையை…

அசல் வரிகள்

பா. சத்தியமோகன் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை மிக லேசானது மிக மிக லேசானது ஆதலால் எடையற்றது எனவே தூக்கவே முடியாத கனம் உடையது பார்க்கவும் முடியாது சொல்லுங்கள் வாழ்க்கை லேசானது ஆதலால் பிறருக்குக் காட்டவும்…

சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கிறேன்

இளந்திரையன் - சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கிறேன் என்னைப் பற்றியும் என் வேர் பற்றியும் யாரும் கவனிக்கவில்லை அவரவர்க்கு அவரவர் அவசரம் யாருக்கும் நேரமில்லை மண்ணின் வாசனை மனங்களின் நேசம் மலர்களின் வாசம் மலரும்…