வானம் காலடியில்
புதியமாதவி, மும்பை 400 042

வானவில்லின்
பாலங்கள்
உடை.
மழைமகள்
கருக்குடம்
திற
ஆண்-பெண்
கணவன் – மனைவி
ஆதாம் – ஏவாள்
சட்டைகள்
எறி
உயிர்
உடல்
ஆன்மா
வேடங்கள்
களை
நட
நட
உணர்வுகள்
ஊர்தி
உறவுகள்
ஊமை
சின்னத்துளி
நெஞ்சில்
ஈரப்பசை
குடைப்பிடிக்காதே
நனை.
குளிர்காயாதே
எரி
நட
நட
நட
வானம்
காலடியில்
பூமி
புழுதி
காற்றை
கைப்பிடி
இனி-
நட
நட
நட
வானம்
காலடியில்
நடுங்க
நட
அன்புடன்,
புதியமாதவி,
மும்பை 400 042
puthiyamaadhavi@hotmail.com