கடிதங்கள்

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

அக்டோபர் 16,2003


ஆசிரியருக்கு,

சென்னையில் உள்ள பெரும்பாலான எழுத்தாளர்களைப்போல நானும் ஜெயமோகன், கலைஞர் இருகூட்டத்துக்கும் போயிருந்தேன். அதைப்பற்றிய பதிவுகளை படித்தேன். சென்னையில் இப்போது இதுதான் பெரிய பேச்சு. ஒரு கும்பல் ஜெயமோகனை மலையாளி என்று சொல்லி அவர் எப்படி தமிழின தலைவரை விமரிசிக்கலாம் என்று கேட்டு ஒரு மனுவில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது . அதில் பல சிற்றிதழாளர்களும் இருக்கிறர்கள். கனிமொழியிடம் நல்லபேர் வாங்க ஒரு சந்தர்ப்பமாகவே இதை பலர் காண்பதாக பேசிக் கொள்கிறார்கள். என் அசல் பேரில் நானும் அதில் கையெழுத்து போட்டேன். [நான் செய்யும் தொழில்தளம் அப்படி]

தமிழ் மணவாளன் கலைஞரின் கூட்டத்தை ‘ அரசியலில் இலக்கியம் ‘ என்று சொல்லக்கூடியவர் என்றால் வேறுவழி இல்லை, அவருக்கு ஜெயமோகனின் கூட்டம் ‘இலக்கிய அரசியல் ‘தான். ஆனால் நடந்தது வேறு ,அதை திண்ணையில் ஜெயமோகன் உரையே உணர்த்துகிறது.

கலைஞர் கூட்டம் இலக்கியக் கூட்டமாக நட்க்கவில்லை. அப்படி நடக்காது என்று கடந்த 50 வருட தமிழக அரசியலை அறிந்தவர்களுக்கு தெரியும். அது ஒரு துதிபாடி விழா. வெளியிடப்பட்ட நூல்களில் இரண்டு நூல்கள் முழுக்கவே கலைஞரின் துதியைப்பாடக்கூடிய நூல்கள். ஒன்று அதை எழுதியவரை பல எழுத்தாளர்கள் துதிபாடிய நூல். ஆகவே வேறு வழி இல்லை.

வண்ணதாசன் பேசியது எனக்கும் அதிர்ச்சியே. ‘கலைஞர் போட்டுச்சென்றபேனாவால் எழுதியவர் ‘ என்று நான் இன்றுவரை வண்ணதாசனை எண்ணியது இல்லை. அவரது எழுத்துமுறை வேறு. அதில் அடுக்குமொழி ஆர்ப்பாட்டமான உணர்ச்சிகள் இல்லை. ஆனால் அந்தமேடையில் வண்ணதாசன் அப்படி சொன்னார். அதைக்கேட்ட எல்லா மனங்களிலும் எழுந்த கேள்வியே இதுவரை அதை ஏன் வண்ணதாசன் எங்கும் அப்படி சொல்லவில்லை என்பதுதான். வண்ணதாசனின் அன்றைய உரை அடுக்குமொழியும் துதிகளும் மண்டிய ஒன்று. வண்ணதாசனின் மென்மையான எழுத்தை படித்த எவருக்குமே அது கூச்சத்தைத்தான் அளித்திருக்கும். ஒன்றுமே தெரியாமல் கேட்பவர்களுக்கு அதுவழக்கமான உரைதான். கலாப்ரியாவைப்பற்றியும் அதைத்தான் சொல்லவேண்டும். அவருக்கு சின்னவயதில் கலைஞர்தான் ஆதர்சம் என்றால் அதில் பிரச்சினை இல்லை. இன்று அவர் கலைஞரை தன் ஆதர்ச எழுத்தாளராக தன் தமிழுக்கு சொந்தக்காரராக எண்ணுகிறார் என்றால்தான் அவரது வாசகர்கள் அதைப்பற்றி ஐயப்படவேண்டியுள்ளது. ஏன் அவர் இன்றுவரை ஒரு நூலில்கூட அதை சொல்லவில்லை ? ஏன் திராவிட இயக்கத்தை சார்ந்து அதன் கொள்கைகளை எழுதவில்லை/ ிசரி, அது ஒரு வேகத்தில் சொன்னது என்றால் இப்போதாவது இவர்கள் அதை மறுத்து எழுதலாமே.

ஞானக்கூத்தன் சொன்ன சொற்களை தமிழ்மணவாளன் திரிக்கிறார் என்றே எனக்கு பட்டது வாஜ்பாயையும் கலைஞரையும் தொட்டபோது எப்படி ஒரேவகையான ‘ சிலிர்ப்பு ‘ ஏற்பட்டது என்றுதான் அவர் சொன்னார்.

ஜெயமோகன் குறிப்பிட்டதுபோல புரட்சிக்கவிஞர் இங்குலாப் முற்போக்கு எழுத்தாளர் சங்க பேச்சாளர்கள் வேல ராமமூர்த்தி , பா கிருஷ்ணகுமார் போன்றவர்கள் கலைஞரைப்பற்றிச் சொன்ன புகழ்மொழிகளை லெனினைப்பற்றிக் கூட சொல்லமாட்டார்கள். அந்தமேடையில் அவர்கள் பேசிய பேச்சு இடதுசாரிகள் மேடையில் பேசும் பேச்சே அல்ல. தநிநபர்வழிபாடு மேலோங்கிய பேச்சு அது. திமுகபேச்சாளர்கள் பேசுவதை விட தரம் தாழ்ந்தது.

ஜெயமோகன் சொல்வதை மறுப்பவர்கள் இனிமேலாவாது தாங்கள் துதிபடவில்லை என்றும் துதிபாடவும் மாட்டோம் என்றும் ஒரு அறிக்கைவெளியிடலாமே . செய்வார்களா ? அதைவிட்டுவிட்டு அப்பை இப்படி என்று பேசினால் என்ன அர்த்தம் ?

அதேபோல அசோகமித்திரனைப்பற்றி ஜெயமோகன் ஒன்றும் சொல்லவில்லை என்று சொல்வது பொய். அந்த கூட்டத்தில் கலைஞரின் புகழைபாடாதவர் அசோகமித்திரன் மட்டுமே. குரசோவா, குருதத் பற்றி இரு நூல்கள் வந்தது நல்லது என்று மட்டுமே அவர் சொன்னார். அவற்றிலும் பிழைகளை சுட்டிக் காட்டினார். அக்கூட்டத்துக்கு போனது தவறாக போய்விட்டது என்று ஜெயமோகனின் மேடையிலேயே சொல்லவும் செய்தார்[ என்ன பண்ரது வேணுமானால் இப்ப ஓ ‘ண்ணு அழலாம் ] ஆனால் அவரை மேடையில் வைத்துக் கொண்டே ஜெயமோகன் அவர் அந்த மேடையில் அமர்ந்திருந்ததே கூச்சம் அளிப்பது என்று சொன்னார்.

தமிழ்மணவாளன் திரித்துச்சொல்லும் ஒரு விஷயம் உண்டு. சிலர் கலைஞரை துதிபாடியது அல்ல ஜெயமோகனின் பிரச்சினை. அதை ஒட்டுமொத்த இலக்கியவாதிகள் சேர்ந்து வந்து தங்கள் காலில் விழுந்துவிட்டதாக அப்துல் ரகுமான் சொன்னதுதான். அதை அங்குவந்த பலரும் கூச்சமாக உணரத்தான் செய்தார்கள். ஆனால் தீவிர இலக்கியத்தளத்துக்கு வெளியே உள்ளவர்கள் அதை கொண்டாடினார்கள். அந்த கொண்டாட்டத்தைத்தான் நாம் தமிழ்மணவாளன் குரலிலும் கேட்கிறோம்.

இந்த கூட்டம் ஒரு திருப்புமுனை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. சென்னையில் அங்கிங்காக சிலர் மேடையேறி அரசியல்வாதிகளையும் சினிமாக்காரர்களையும் புகழ்வது நடந்துவருவதுதான். ஆனால் இத்தனைபேர் இத்தனை கூச்சமின்றி துதிபாடியதும் , அதை சிற்றிதழ் சார்ந்து நடந்துவரக்கூடிய [முந்நூறுபேர் முணுமுணுக்கக் கூடிய ] இலக்கியத்தின் கடைசி வீழ்ச்சியாக மேடையில் சொன்னதும் இதுதான் முதல்தடவை. அனைவருமே அதை உணர்ந்து வருத்தம் அடைந்தார்கள். ஆனால் எவரும் அதை பகிரங்கமாக சொல்ல துணியவில்லை. சொல்ல மாட்டார்கள். நேற்றுகூட அதை சொல்லும் துணிவு ஜெயகாந்தனுக்கு மட்டும்தான் இருந்தது..

ஜெயமோகன் அப்படி ஆணித்தரமாக சொன்னது அவரது இயல்புக்கு பொருத்தமானதே. அவர் ஏற்கனவே சொல்லி வந்ததுக்கு தொடர்ச்சிதான் இது. அவரை பெரும்பாலானவர்கள் உள்ளூர பாராட்டுவார்கள், சொன்னது சரிதான் என்று நினைப்பார்கள். காரணம் உண்மை நிலை எல்லாருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஒருசிலராவது இந்த காகாபிடிக்கும் கலாச்சாரத்துக்கு வெளியே நிற்கமாட்டார்களா என்றுதான் எல்லாருமே நினைப்பார்கள். ஆனால் சிலர் மட்டுமே அதை சொல்வார்கள்.அவர் மீதான கோபங்களை வெளிப்படுத்த இதை ஒரு தருணமாக சிலர் பயன்படுத்தலாம். பலருடைய சிறுமையையும் சுயநலப்போக்கையும் மேடையில் போட்டு உடைத்த அவரை மிச்சபேர்களும் சேர்ந்து தாக்குவது இயல்புதான். சிலருக்காவது துதிபாடுவதில் என்ன தப்புறிதற்குப்போய் ஏன் கலாட்டா என்று தோன்றலாம்– தம்ழி மணவாலனுக்கு தோன்றுவதுபோல. இன்னொன்று இப்படி ஒருவர் ஆணித்தரமாக சொன்னால் அவரை அனைவரும் கவனிப்பதும் பேசுவதும் இயல்புதான். அப்படி ஆணித்தரமாக சொல்லும் துணிவும் இல்லாமல் அதேசமயம் நான்குபேர் பேசுவதைக் கண்டு பொறாமைதாங்கவும் முடியாமல் எழுதுபவர்கள்தான் இனி அதிகமாக குரல்கொடுப்பார்கள்.

ஆனால் இந்த கூச்சல்கள் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். பிறகு எல்லாருக்கும் உள்ளூரதெரிந்துள்ள உண்மைதான் நிற்கும். வசைகளைப்பொருட்படுத்தாமல் தன் மனமறிந்த உண்மைகளை சொல்ல ஒரு திராணிவேண்டும். ஆகவே ஜெயகாந்தன்சரியாகவே சொல்லியிருக்கிறார்.

சூரியா

suurayaa@rediffmail.com


***

அன்புள்ள ரோசா, முதலில் ஒன்று. நான் அதே கார்திக் தான், நாயேன் பேயேன் என்ற பெயரில் திண்ணை விவாததில் எழுதினேன். திண்ணை அப்போது எனக்கு அறிமுகமான சமயம், நான் ஆறாம் திருமுறையை படித்து கொண்டிருன்தேன். எனவே திண்ணையில் பெயர் வைக்க அதிலிருந்து ஒரு வார்த்தையை கையாண்டேன்.

மேலும் நான், ஜெயமோகனுடைய ‘ஜால்ரா ‘ இல்லை என்பதை இப்போதும், எப்போதும் சொல்லிக்கொள்வேன். உங்களைபோல் நானும் ஜெயமோகனுடை எழுத்துக்களை மதிக்கும் ஒருவன். அவருடனும்(உங்களை போல ? ?!!) ஒரு கருத்து மோதலில்தான் அறிமுகம் ஆனேன், இன்னும் கூட அவருக்கும் எனக்கும் எழுத்து மூலமாகவும்,ஒலி நாடா மூலம்தான் அறிமுகம் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்.

மேலும் ஜெய மோகனுடைய கட்டுரை, எனக்கு எந்த ஞானத்தையோ, அருளையோ தரவில்லை, அதனால் தரவும் முடியாது என்பதும் எனக்கு தெரியும். அக்கட்டுஅரையில் நான் அவரை பாரட்டியது அவருடைய சிரத்தையான, பெரிய பதில் எழுதிய உழைப்பையே.அவரது உழைப்பைஏ ராஜனாயகம் விவகாரததிலும் பராட்டினேன். நான் பேசும் தளம் இறையியலையும்,இறையையும் நிரூபிக்கும் தளம். அத்தளத்திற்கு ஜெயமோகனை இட்டு செல்லவே , அந்த கடிதங்களை எழுதினேன். பின்னர் இதை அவரிடம் கடிதம் மூலமாக தெரிவித்தேன். அதனை தொடர்ந்து சில கடிதஙகளும் அவருக்கு எழுதினேன். துரத்ஷ்ட வசமாக அந்த உரையாடல் பாதில் நிற்கிறது. அதனை நான் இந்தியா செல்லும் போது நேரில் சந்த்தித்து தெரிவிப்பேன்.

என்னை பொறுத்தவரை, னிருபிக்கப்படாத இறையும், இறைவார்த்தையும், கோவில்களும்,அங்குள்ள கற்களும் குப்பைகளே. அவ்விதத்தில் விஷ்ணுபுரமும் அப்படித்தான்.

ஆனால், விஷ்ணுபுரத்தில் பெரும் உழைப்பும், தத்துவார்த்த சிந்தனைகளும் நிரம்பி உள்ளன என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஏனெனில் அது தத்துவ னூல்களின் சாரத்தில் எழுதப்பட்டு, அவற்றிக்கு எதிர் வினையும் வைக்கபட்டுள்ளது…..

நான் அவரை சரியாக புரிந்துகொள்ளவில்லை என அவர் சொன்ன ஒருகாரணத்திற்காகவும், அது இறை பற்றியதாகவும் இருப்பதாலும் மட்டுமே, விஷ்ணுபுரத்தை இந்தியாவிலிருந்து, வரவழைத்து படித்தேன். இப்போது இரண்டாம் முறையாக வாசித்துகொண்டுள்ளேன். விஷ்ணுபுரமே நான் படித்த படிக்கும் முதல் நாவல்.

மேலும் னான் ரோட்டில் முத்தமிடுவதை ஆதரிப்பவன்(அதானால் வன்முறை,சீர்கேடு எழாதவரை). பாலியல் தொழிலாளர்களையும் , சமூகத்திற்கு அவர்களால் உண்டாகும் பயன்களை¢யும் ஆதரிப்பவன். இவ்விஷயங்களை படத்தில் காட்டுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள்தான் என் FOCUS.

மேலும் பாய்ஸ் குறித்து என்னுடைய கேள்வி மிகவும் சாதாரணமானது, பாய்சின் தாக்கம் என்ன எனபது, அதனாலான் சமூக விளைவுகளையும் குற்த்த ஒரு பார்வையை எழசெய்வதே. இதே கேள்வியை ஜெமோகனையும் கேட்டிருந்தேன்.

கோத்தா என்பது தென்மாவட்டங்களில் ஒரு ‘மரியாதை ‘ வார்த்தையாக இருக்கலாம். ஆனால் அந்த அர்த்தத்தில் அது ‘பாய்சில் ‘ உபயோகிக்க படவில்லை. அது ஒரு ‘F*CK ‘ என்ற மாதிரிதான் பயன்படுத்த பட்டுள்ளது. இதை உங்களால் மறுக்கமுடியுமா ?

உதாரணத்திற்கு ‘PEA ‘ கொடு என்று, தமிழ்னாட்டிலுள்ள காய்கறி கடையில் கேட்டால் என்ன புரிந்துகொள்ளப்படும். அதன் அர்த்தத்தை விட்டு, அது வேறு ஒரு இடத்தில் நல்ல வார்த்தை என்று கூறுவது, உங்கள் வார்த்தை ஜாலத்தை காட்டுகிறது.

பரத்தை என்பது, ஒரு tamil male chauvinist வார்த்தை என்ப்து நான் அறியாதது, இதற்கு நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். இந்த ஒரு வார்த்தை எப்படி புண்படுத்தியதோ அது போலதான், உஙகள் ‘உரசல் ‘ குறித்த கருத்துக்களும், பாய்சும் எத்தனை யோ பென்களை புண்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளும் ‘அறிவு ‘ உங்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்கிறேன், பார்ப்பேன்.

எத்தனை யோ கருத்துக்களை நாம் ஏற்ககூடும், ஆனால் அதை செயல் படுத்துவதில் தடங்கல் இருக்கும். இந்த இரு விஷயங்களும் சந்திக்கும் புள்ளியே சமூகயதார்த்தம் அல்லது இன்றைய நடைமுறை சமூகமாக நமக்கு முன் இருப்பது.

அமெரிக்க பழக்கத்தை, தமிழ் சமூகத்தில் பிரயோகிப்பதும், அதன் எதிர்மறையும் (vice versa)ஒரு பைத்தியக்காரத்தனமே. ஆனாலும் அந்த பழக்க்த்தினால் விளைவது நண்மையாக இருக்கும் பட்சத்தில் அது ‘forced ‘ ஆக கூட பிரயோகிக்கலாம். சஙகர்,சுஜாதா தன் கற்பனையில் கண்டதை, இன்றைய சமூகம் என வர்ணிப்பதும் ஒரு முட்டாள்த்தன்மே…

முட்டாள்தனத்தை முட்டாள்த்தனம் என்று எஙும் உரைக்கும் மனோ தைர்யம் எனக்கு உள்ளது..

உஙகள் பதிவுகள் விவாத்த்தை படிப்பேன்.

னண்றி,

(no persanal feelings)

இறா. கார்த்திகேயன்.

karthikramas@yahoo.com


***

ரோஸாவசந்த்-ன் கடிதம் படித்தேன். இப்படி அரைகுறையாக படித்துவிட்டு (அ) புரிந்துகொண்டு கடிதம் எழுதும் உங்களைப் போன்றோடு வாதிக்க எனக்கும் ஏதுமில்லை. வீணும் கூட. எனினும், இந்த ஒரு தடவை விலக்களித்து, சில விளக்கங்கள். முதலாவது, ‘ரோட்டில் முத்தமிட்டால் உள்ளே போடுவதை-போட்டதை- நியாயப்படுத்திய ‘-வன் என்று என்னை கூறியிருப்பது, நீங்கள் கட்டுரையை, அதன் அர்த்தத்தை புரிந்துகொள்ளவில்லை எனக் காட்டுகிறது. ‘ரோட்டில் முத்தமிட்டதை போலீஸ் கண்டிக்கிறது, ஆனால் சினிமாவில் இதுபோன்ற காட்சிகளைக் காட்டுவதை போலீஸ் ஏன் கண்டுகொள்வதில்லை என்றும், தணிக்கை எப்படி அனுமதிக்கிறது ‘ என்பதும் தான் வாதமே. ரோட்டில் முத்தமிடுவது தவறா இல்லையா என்பது பொது வாதத்திற்குரியது.

இரண்டாவது, ‘என் மகளை இல்லை, மனைவியை யாரும் ‘இழுத்துக்கொண்டு ஓடினாலும் ‘ – அதில் வன்முறை எதுவும் இல்லாதபட்சத்தில்- எனக்கு பொறுத்துக்கொள்ளாமலிருக்க ஏதுமில்லை. ‘ என நீங்கள் எழுதியிருப்பது. ஓடிப்போவது தவறு என்று நான் சொல்லவில்லை. முறையான காதலர்கள், நியாயமான காரணங்களுக்காக, ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்வது முழுமையான தவறல்ல. முன்பின் அறிமுகமில்லாத ஒரு ஆணையோ, பெண்ணையோ பார்த்து ‘ஓடிப் போயிடலாமா ‘ எனக் கேட்பதுதான் தவறு. (டாஸிங்-கும் கூட). அதைத்தான் மணிரத்னம் காட்டியிருக்கிறார் என கண்டித்துக் கூறியிருக்கிறேன். மேலும் இரத்தம் வந்தால் தான் வன்முறை என நீங்கள் நினைத்தால், உங்களுக்கு வன்முறையின் அர்த்தம் புரியவில்லை. வன்முறை என்பது பிறருக்கு இழைக்கப் படும் தீங்கு, அநீதி. உங்கள் மனைவியை யாரும் இழுத்துக்கொண்டு ஓடினால் உங்களுக்கு ஏற்படும் அநீதிதான் வன்முறை. ஒழுக்கக்கேட்டைப் போல மோசமான வன்முறை ஏதுமில்லை. உங்கள் மனைவி யாரோடோ ஓடினால் அதுவும் ஒருவகையில் வன்முறையே. உங்களுக்கு ஏதுமில்லாமலிருக்கலாம் (!), ஆனால் சமூகத்தில் அப்படி நடந்தால் அது கண்டிக்கத்தக்கதுதான் என்பதில் எனக்கு ஐயமில்லை. உங்களோடு வாழப்பிடிக்காமல் வேரொருவருடன் செல்ல உங்கள் மனைவிக்கு நியாயமான காரணங்களிருக்கலாம்; எனின், உங்களிடமிருந்து விவாகரத்து வாங்கிக்கொண்டு பின் செல்வதுதான் முறையான செயலாக இருக்கும்.

‘தமிழ் கலாச்சாரக் காவலர் ‘ என எனக்கு பட்டம் வழங்கியமைக்கு நன்றி.கலாச்சாரம் போன்ற சமுதாயக் கோட்பாடுகளில் தான் நம்பிக்கையில்லை என நினைத்தால், ‘மானம், மரியாதை, ஒழுக்கம் ‘ போன்ற தனிமனிதப் பண்புகளிலேயும் உங்களுக்கு நம்பிக்கையிருப்பதாகத் தெரியவில்லை. உங்களைப்போல ஏதுமில்லாதவர்களும், ‘எதை வேண்டுமானாலும் செய்யலாம் அதுதான் சுதந்திரம் ‘ என சுதந்திரத்தின் பொருள் தெரியாமல் உளறும் சாரு நிவேதிதா போன்ற அறை வேக்காடுகளும் இருக்கும் வரை சுஜாதக்களுக்கும், ஷங்கர்-மணிரத்னங்களுக்கும், கமல்களுக்கும் ஒரு குறைவுமில்லை. என்றாலும் எங்களைப் போன்ற கலாச்சார மதிப்பு கொண்டவர்களுக்கு கலாச்சார சீர்கேடுகளைக் கண்டித்து போராடிக்கொண்டே இருப்பதுதான் கடமை. ——————————

அயோக்கியர்களும் முட்டாள்களும் பற்றிய ஞாநியின் கட்டுரை மிக அருமை. நல்ல கரு.

————————————-

மஞ்சுளா நவநீதன் எழுதியிருக்கும் சமஸ்கிருத வெறுப்பு பற்றிய கட்டுரையும் அருமை. சங்கரமட எதிர்ப்பாளர்கள் சிந்திக்கவேண்டிய கருத்து. எனினும் எனக்கு சில வேறுபாட்டுச்சிந்தனைகள். சமஸ்கிருத வெறுப்பு என்று சொல்வதைவிட சமஸ்கிருத எதிர்ப்பு என்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். சமஸ்கிருதம் தமிழுக்கு பெரிய பங்களிப்பு செய்திருக்கிறது என்பது ஒப்புக்கொள்ள கூடியதல்ல. வேதங்களும், உபநிஷங்களும், இராமாயணமும், மகாபாரதமும் சமஸ்கிருத்தின் பங்களிப்புகள். சந்தேகமில்லை. அனைத்து மக்களுக்கும்- தமிழர்களையும் சேர்த்து- பங்களித்தது என்று சொல்லலாம். ஆனால் தமிழுக்குப் பெரிய பங்களிப்பு என்று சொல்வது சரியல்ல. தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள், அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம் இப்படி எதுவும் சமஸ்கிருத அன்பளிப்பல்ல. கம்பராமாயணம் தமிழுக்கு ஒரு பெரும் காப்பியம்தான். ஆனால் அது கம்பரின் பங்களிப்பு என்று சொல்வதுதான் தகும். கரு மட்டுமே சம்ஸ்கிருதம் வழங்கியது. கம்பரைப் போன்ற கவிச்சக்ரவர்த்தி எந்த கருவைக் கொண்டும் இப்படிப்பட்ட காப்பியங்களை கொடுக்கமுடியும். தமிழையும் சமஸ்கிருதத்தையும் ஒப்பிடுவதே சரியா என எனக்கு தெரியவில்லை. தமிழ், இலக்கியங்களில் மட்டுமல்ல, சமுதாயத்திலும் மக்களால் பேசப்பட்டுவந்த முழுமையான மொழி. சமஸ்கிருதம் மக்களால் பேசப்பட்டதாக எந்த சரித்திர ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த கட்டுரை சமஸ்கிருத மொழியை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது கடவுளை மட்டுமே கருத்தில் கொண்டு பெரியாரின் கொள்கைகளைப் பார்ப்பது போல. முழுமையான பார்வையல்ல. பெரியாரின் கடவுள் எதிர்ப்பு சமூக ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மட்டுமே கடவுளை பூஜிக்கலாம், அவர்கள் உயர்ந்த வகை மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை ஏனெனில் அவர்கள் தாழ்ந்தவர்கள். உயர்ந்தவர்களாக தங்களை சொல்லி கொள்பவர்களின் தெருவுக்குள் மற்றவர்கள் வரக்கூடாது. என்பது போன்ற கேவலமான கருத்துக்கள் கொண்ட பார்ப்பனீயர்களின் அநீதியைக் கண்டு பொறுக்காமல், இப்படி சமுதாய வேறுபாடுகளிலும், மனு (அ)நீதியிலும் உடன்பட்டு தான் கடவுள் இருக்கிறார் என்றால் அப்படிப்பட்ட கடவுள் தேவையில்லை, என்றுதான் பெரியார் எதிர்த்தார். இந்த கருத்தோட்டத்தில் பார்த்தால் சமஸ்கிருத எதிர்ப்பும் முற்றிலும் தவறானது என்றும் கருதமுடியாது. தமிழக மக்கள் தொகையில் 2 அல்லது 3 சதவிகிதம் பேரே அந்தணர்கள். அந்த சதவிகிதத்தில் 3 அ 4 சதவிகிதமே சமஸ்கிருதம் படிப்பர். அதிலும் பாராயணம் மட்டும் செய்பவர்களே அதிகம். முழு அர்த்தமும் அறிந்து படிப்பவர்கள் மிகக்குறைவே. இப்படி மொத்த மக்கள்தொகையில் சுமாராக 0.00009 சதவிகிதம் பேருக்கு குறைவாகவே சமஸ்கிருதம் தெரியும். இப்படி யாருக்குமே தெரியாத மொழியில் அர்ச்சனை செய்தால்தான் கடவுளுக்கு உகந்தது என்பது எவ்வளவு பெரிய பைத்தியகாரத்தனம். அப்படி செய்தால்தான் கடவுள் ஏற்றுக்கொள்வார் என்றால் அது மூட நம்பிக்கையே. இப்படி சொல்வதை அந்த கடவுளே ஏற்றுக்கொள்ள மாட்டார். சங்கராச்சாரிகளின் சமஸ்கிருத வெறிக்கு முக்கிய காரணம் அவர்களின் ஜாதி வெறிக்கு அது உதவுவதால்தான். இதையே காரணம் காட்டி வெறு இனத்தவர்கள் பூஜை செய்யும் உரிமையை தடுப்பதற்கே இந்த சமஸ்கிருத வெறி. குடமுழுக்கு என்று கூட ‘அவா ‘ யரும் சொல்வதில்லை. வெண்டுமென்றே ‘கும்பாபிஷேகம் ‘ என்றுதான் கூறுவர். இப்படி ஜாதிவெறியை நிலைநிறுத்தவும், எங்கள் கடவுளை நாங்கள் அடிபணிந்து வாழ்த்த தடையாகவும் இருப்பதற்குதான் ஒரு மொழி என்றால் அப்படிப்பட்ட சமஸ்கிருதம் எங்களுக்குத் தேவையில்லை, என்று கூறுவது எப்படி தவறாகும் ? இதை சமஸ்கிருதம் என்ற ஒரு மொழியின் எதிர்ப்பு என்றோ, வெறுப்பு என்றோ கருதுவது தவறான கண்ணோட்டம். (மட)சங்கர எதிர்ப்பாளர்களின் கருத்து இதையொட்டியே இருப்பதாகவே கருதவேண்டும். அவர்களின் வார்த்தைகளும் விளக்கங்களும் ஒரு வேலை முழுமையாக இல்லாதிருக்கலாம். அவ்வளவே. கடவுள் எல்லா மதத்தினருக்கும் உரியவர். எல்லா இன, மொழி, கலாச்சார மக்களுக்கும் உரியவர். இனிய தேவாரப்பண்களையும், ஆழ்வார் பாசுரங்களையும் பாடி துதித்தால் மகிழ்ச்சியாக கடவுள் ஏற்றுக்கொள்வார் என்பதோடு, மக்களுக்கும் புரியும் தமிழ் ஆர்வமும் பெருகும் என்பதில் சந்தேகமில்லை.

– பித்தன்.

piththaa@yahoo.com


*

மஞ்சுளா நவநீதனின் கட்டுரை குறித்து. தமிழ் நாட்டில் இருந்துகொண்டு ‘வடமொழியே தெய்வமொழி ‘ என்று சொல்பவர்களுக்கு ஆதரவாக ‘இவர்கள் சம்ஸ்கிருதத்தைத்தான் உயர்த்திச் சொல்கிறார்களே தவிர தமிழைப் பழிக்கவில்லை ‘ என்று ஒரு பக்கம் பூசி மெழுகுவது.

இந்தியாவின் பிரண்ட்லைன் இதழ் சீனத்தரப்பு வாதத்தை எடுத்துவைத்தால் ‘அவர் சீனாவைப் புகழ்கிறாரே தவிர இந்தியாவைப் பழிக்கவில்லை ‘ என்று சமாதானம் அடையாமல், ‘ராம் சீன அடிவருடி ‘ என்று மற்றொரு பக்கம் திட்ட வேண்டியது.

*** ‘ஐந்தெழுத்தால் ஆன ஒரு பாடையென்று அறையவும் நாணுவர் அறிவுடையோரே ‘ என்பது தமிழை இகழ்வதற்காகச் சொல்லப்பட்டதல்ல என்று விளக்குவதுகூட மஞ்சுளா நவநீதனுக்கு எளிதாக இருக்கலாம்.

பரிமளம்

janaparimalam@yahoo.com **


அம்பீ சின்ன கருப்பா, என்ன வருஷத்துக்கோர் தடவை போடற நாட்டுச்சாராயம் அடிச்சுட்டு ஏய்த வந்தீயா ? ஒளரி கொட்டி இருக்கியே. மாமிக்கு சாராயம் குடிக்கிற விசேஷம் போன வாரம்தான் ஆச்சு. (நவராத்திரிக்கு சாரயம் நைவேத்தியம் பண்ணனும்னு ஐதீகம்). இன்னோர் உயிரைக் கொல்லாம ஆகாதுன்னு இப்போ சொல்றை. ஏதோ ஒரு காந்தி ஜெயந்தில காந்தி ஒரு புது பரிமாணம். தன் இனம் வாழ அஹிம்சை பண்ணச் சொன்ன மகாத்மான்னுலாம் நீ இதே திண்ணைல ஒக்காந்துண்டு பேசினதா நினைவு. யூத, கிறிஸ்தவ சதின்னு அப்போ தோணலையா.. சத்திய சோதனைலாம் பண்ணவர். விலாவாரியா சொல்லப்போரதில்லை.

பாரு அம்பீ, நீ பேசாம அம்மா சமைச்சுப் போட்ட ஆட்டுக்கறி மம்மம் சாப்டுண்டு இருக்க வேண்டியதுதானே ? என்னத்துக்கு பாவம் நல்ல புரோட்டானை விட்டாய் ? புரோட்டான் இல்லாம மூளை தப்பா வேலை செய்யறதோன்னு பயமா இருக்கு. யூதாளை (ஸ்கோல்ல படிக்கும்போது பாட்டிட்ட பாட்டி, பாட்டி, யூதாள்ளாம் ஆருன்னு கேட்டேன். கலியாணத்துக்கு னாயனம் ஊதறவாளை செந்தமிழ்ல யூதாள்னு எழுதுவான்னு சொன்னா. எங்க பிராமண குடிம்பங்கள்ள ஆனாலும் இவ்வளவு யூத தாக்கம் கூடாதுதான்), கிறிஸ்தவாளைலாம் இழுத்துருக்கை. இஸ்லாம் சகோதராளை விட்டுட்டியே. அவாளோட தாக்கம் இல்லையா ? இல்லை ஏய்தாம விட்டதுக்கு ஏதாவது காரணம் இருக்கா ?

பாய்ஸ் படம் பாத்தேன். பாதீல தூக்கம் வந்துட்டுது. கொட்டாவியோ கொட்டாவி. உலக சினிமா உதாரணத்துக்கு இரான் சினிமா பத்திலாம் திண்ணைல எடுத்து விடலாம்னு ஒரு யோசனை. இரான் சினிமால அந்த ஊரோட கட்டுப்பட்டித்தனத்தைலாம் மீறி என்னமா எடுக்கறா தெரியுமா ? பொம்ம்னாட்டிகளை போத்தி மூடித்தான் காட்டலாம். கொழந்தைகளை காட்டலாம். என்னன்னமோ கட்டுப்பாடு. கலாரசனை கொறையாம, (அதுக்காக சுவாரசியத்தை கோட்டை விடலை, சில ஆர்ட் பட அறுமாமணை மாதிரி), புஸ்தகம் படிக்கற மாதிரின்னா சினிமா எடுக்கறா ? சங்கரும் சுஜாதாவும், அது மாதிரி படம் பாத்தவாதான். என்னமோ தமிழ்நாட்டுக் கார ஆடியன்ஸ்னா என்ன அறுவை வேணும்னாலும் எடுக்கலாம்னு நெநைப்பு போல. இந்தியா சினிமாவும் சிலது நன்னா இருக்கு. பாவண்ணன், தேவிரின்னும் ஒரு கன்னட சினிமா பாத்தேளோ ? பாக்கலைன்னா பாருங்கோ. திண்ணைல ஒரளவுக்கு மெச்சூரா எழுதவர் நீங்கள்தான். மிஸ்டர் ஏண்ட் மிஸஸ் அய்யர் பத்தி ஏய்தினேளே. பாய்ஸ் பத்தி மாங்கு மாங்குன்னு எல்லாரும் எழுதினதுக்கு கொன்சம் கலாரசனையான சினிமா பத்தியும் ஏய்தலாமே.

அம்மாளு மாமி.

aparna177@hotmail.com


* ஞாநியிடமிருந்து மீண்டும் இப்படி ஒரு முட்டாள்தனமான கட்டுரை வரும் என்று எதிர்பார்கவில்லை. பார்பனர்கள் பெரியாரியம் பேசினால் இந்த லட்சணத்தில்தான் வெளிப்படும் போலிருக்கிறது. பெரியாரியம் குறித்து புதுவாசிப்பு, மறுவாசிப்பு எல்லாம் வந்த பிறகு இப்படி கொஞ்சநஞ்ச மாற்று உதாரணங்களுக்குகூட வழியில்லாமல் செயல்பட்டுவருகிறார். ஞாநி பாய்ஸை எதிர்த்து என்னமும் எழுதட்டும், ஜெயலலிதாவின் பார்பன அரசியலுக்கு ஆதரவாக பத்திரிக்கை நடத்தட்டும், இன்னும் தேவையானால் சிவசேனா கட்சியில் அல்லது சங்கரமடத்தில் கூட சேரட்டும், அதற்க்கு பெரியாரை ஏன் இழுக்கவேண்டும் ? இப்படி எல்லாம் எழுதியபிறகு அவர் ஜெயமோகன் மதிக்கும் பத்திரிகையாளராய் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

பாய்ஸ் படம் பையன்களின் பார்வையில் எடுக்கபட்டுள்ளது என்று சொல்வது மட்டுமே ஞாநி முன்வைக்கும் ஒரு உருப்படியான விமர்சனம். அதற்க்கு வேண்டுமானால் கேர்ல்ஸ் என்று ஒரு படம் எடுக்கட்டும். மற்றபடி அவர் பேசுவதற்க்கும் காதலர் தினத்தை எதிர்த்து சிவசேனா சொல்வதற்க்கும் எந்த வித்தியாசமுமில்லை. மீண்டும் ஞாநிக்கு கேட்கிறேன். `போடாங்கோத்தா ‘( ?) என்று ஒரு பெண் சொன்னால் அதில் ஞாநிக்கு என்ன பிரச்சனை ? ஆண்கள் சொன்னால் பரவாயில்லை பெண்சொன்னால் பிரச்சனையா ? தூத்துகுடி பக்கத்தில் பெண்கள் வெண்டை வெண்டையாக `கெட்டவார்த்தைகள் பேசுவார்கள்(மற்றஇடங்களிலும் பேசுபவர்கள் உண்டு என்றாலும் ஒரு உதாரணத்திற்க்கு). அவர்கள் குறித்து அவர் மதிப்பீடு என்ன ? ஞாநியின் மதிப்பீடு மிக கேவலமாகத்தான் இருக்கும் என்பது அவரின் கட்டுரையின் மற்றொரு பகுதியை படிக்கும்போது புரிந்துவிடுகிறது.

இந்தகால இளைஞர்களின் செக்ஸ் பிரச்சனைகளை படமாக்கலாமாம், ஆனால் அது எப்படி இருக்கவேண்டும் என்று இவர்தான் சொல்வாராம். சிவசேனா பரவாயில்லை. அது கண்ட முற்போக்கு வேஷமெல்லாம் போடாது. குறைந்தபட்சம் பெரியார் பெயரை இழுக்காது. பெரியார் பார்பனியத்தை எதிர்க்கும் தனது அரசியல் பொருட்டு ஒழுக்கம் (அதாவது பாலியலுக்கு எதிரான), ஆபாசம் என்று அவ்யப்போது பேசியிருக்கலாம். ஆனால் அவரின் `பெண் ஏன் அடிமையானாள் ? ‘ புத்தகம் மற்றும் வேறு சில கட்டுரைகள், பேச்சுகளை படிப்பவர்கள் அவர் பாலியல் விடுதலைக்கு ஆதரவாகவே கருத்துகொண்டிருப்பதை அறியமுடியும். ஞாநி பஸ்ஸில் உரசுவது குறித்து குறைந்த பட்ச அறிவுகூட இல்லாமல் எழுதுகிறார். பஸ்ஸில் சில இடங்களில் வன்முறை உள்ளது உண்மை. ஆனால் உரசினால் ஒரு பெண் வலியும் அவமானமும், வேதனையும்தான் அடைவாள் என்று நிச்சயமாய் நினைப்பது ஞாநியின் அறியாமை மட்டுமல்ல. அப்படி வலி, அவமானம், வேதனையை பெண்கள் அடையவேண்டும் என்பதும், அவ்வாறு அடையாதவர்கள் குறித்து ஞாநியின் கேவலமான மதிப்பீடும் வெளிப்படுகிறது. மேலும் இது படத்தில் பாடலில் வரும் ஒரு காட்சி. அது நியாயபடுத்தபடகூட இல்லை. படத்தின் முக்கிய பகுதி பெண்கள் முழு சுதந்திரத்துடன் டேட்டிங் செய்வது. அப்போது பாய்ஸும் , கேர்ள்ஸும் பாலியல் குறித்து பேசுவதில் ஞாநிக்கு என்ன பிரச்சனை ?இதையெல்லாம் தவறவிட்டுவிட்ட வருத்தமா ? இன்று டேட்டிங் பெரு யதார்த்தமாய் சமூகத்தில் உள்ளது. இதற்க்கு ABVP போன்றவை காட்டும் எதிர்ப்பு குரல்தான் ஞாநியின் கட்டுரையில் வெளிப்படுகிறது. வரிசையாக அவர் விரசம் என்று லிஸ்ட் போடும் விஷயங்களிலும் இதே குரல்தான் வெளிபடுகிறது. M TVக்கு மர்பகங்களை ஆட்டியபடி(அதுதான் முக்கியம்) பாடுவது எந்த வகையில் நேர்மையின்மை என்று ஞாநி விளக்க வேண்டும். டான்ஸ் ஆடும் பெண்களை கேவலபடுத்தும் (இதை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்) அவரது இந்த வரியை வன்மையாக கண்டிக்கிறென். என்னை பொறுத்தவரை படம் (இந்த அளவிற்க்கு விவாதிக்கபடகூடிய தகுதி இல்லை என்று நினைத்தாலும்) ஞாநி லிஸ்ட் போடும் காரணங்களுக்காகவே வரவேற்கபடவேண்டும் என்று நினைக்கிறென். எனக்கு தெரிந்தவரை கோபப்படும் மனைவி (வெகு யதார்தமாய், சாதரணமாய்) தாலியை கழட்டி எறியும் காட்சி உடைய ஒரே படமாக `பாய்ஸ் ‘தான் தெரிகிறது. இதற்க்கு முன் பெண் இத்தனை சுதந்திரத்துடன் வேறு படங்களில் சித்தரிக்கபட்டதாகவும் தெரியவில்லை. அதை எதிர்க்கும் ஞாநியிடம் சோ போன்ற ஒரு வைதிகவாதின் குரல்தான் ஒலிக்கிறது. மற்றபடி `தீவிரவாதிகள் ‘ சித்தரிப்பு குறித்து அவர் கூறுவதுடன் நானும் ஒத்துபோகிறேன்.

கட்டுரையின் அடுத்த பகுதிதான் நான் எதிர்பார்காத ஞாநியின் பார்பனியம் வெளிப்படும் பகுதி. அதையும் பெரியார் பெயரை சொல்லிகொண்டே செய்திருக்கிறார். பெரியார் மூடநம்பிக்கை குறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்தவர்தான். ஆனால் அவர் பிரபலமாக நடத்திய(ராமர் படத்தை செருப்பாலடித்ததில் முடிந்த) மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் கூட பார்பனிய சடங்குகள், பார்பனிய கடவுள்கள்தான் எதிர்ப்புகுள்ளாயின. உயிர் பலி இடுவதை அவர் விமர்சித்து எதையும் நான் கேள்விபடவில்லை. ஞாநி இது குறித்து ஆதாரத்துடன் எழுதவேண்டும். எப்படியிருந்தாலும் குறிப்பிட்ட முறையில்(அதாவது பார்பனிய முறையில்) வழிப்படலாம், (சின்ன கருப்பனும் சுட்டி காட்டுவதுபோல்) சர்கரை பொங்கல் படைக்கலாம், கடா வெட்டகூடாது என்று சொல்லும், அதையும் கட்டாயபடுத்தும் சட்டத்தை, சங்கராச்சாரியார் ஆலோசனையின் பேரில் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படும் சட்டத்தை பெரியார் முழு மனதுதுடன் எதிர்த்து இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. இந்த சட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம், மீண்டும் ஞாநி பார்பனர்கள் பேசும் பெரியாரியம் மிகவும் சந்தேகத்திற்க்கு உரியது என்பதற்க்கு இன்னோரு ஆதாரத்தை அளித்திருக்கிறார். பெரியார் தினமும் (ஒரு பிடிவாதமாய்) அசைவம் சாப்பிடவர்.சைவ சாப்பாட்டிற்க்கு எதிராகவும் வாதங்களை அடிக்கியவர். அவர் பெயரை சொல்லி இந்த சட்டத்தை ஆதரித்திருப்து, அயோக்கியத்தனமா, முட்டாள்தனமா என்று ஞாநிதான் சொல்லவேண்டும். அதற்க்கும் அவர் வைக்கும் வாதங்கள் சகிக்கவில்லை. கலைஞர் பற்றி அவர் வைக்கும் விமர்சனம் சரி. திருமாவளவன் பற்றி வைக்கும் விமர்சனத்தில் மீண்டும் பார்பன குரல், குசும்புதான் தெரிகிறது. தொடர்பே இல்லாமல் திருமாவளவன் சொலவதை ஜோஷி சொல்வதுடன் ஒப்பிடுகிறார். திருமாவளவன் இயற்கையோடு இயைந்த தங்கள் மக்களின் வாழ்வு குறித்து பேசுகிறார். அதை ஞாநி அடிப்படையே இல்லாமல் திரித்து, `நமது வேதத்தில் இன்றய எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் உள்ளது, விஞ்ஞானிகள் அதை மீண்டும் கண்டுபிடித்துவருகிறாற்கள் ‘ என்ற ஜோஷியின் இந்துத்வத்துடன் ஒப்பிடுகிறார். நாட்டில் எத்தைனையோ அயோக்கியதனங்களும், முட்டாள்தனங்களும் இருக்கும்போது இந்த இரண்டு விஷயங்களை மட்டும் முன்வைத்து, அதுவும் திண்ணை போன்ற பத்திரிகையில், பெரியாரை திரிக்கும் கட்டுரைகளும் வரும் இடஹ்த்தில் ஏன் முன்வைத்தாஸ்ர் என்பது கேள்வி. ஞாநிக்கு ஒரே வேண்டுகோள். என்னவும் எழுதுங்கள், உங்களை மதிக்கும் ஜெயமோகனுக்கு ரொம்ப சந்தோஷமாஸ்க இருக்கும். அதையெல்லாம் பெரியாரின் பெயரில், ஒரு முற்போக்கு குரலை ஒலிப்பதுபோன்ற பாவனையில் செய்யாதீர்கள். நிலமை ஏற்கனவே ரொம்ப மோசமாயிருக்கிறது.

எதிர்பார்த்துபோல் சின்னகருப்பன் விஷயத்தை திரித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ள ஜெயலலிதா பகுத்தறிவுவாதியல்ல, தெளிவான பார்பனிய ஆத்திகவாதி. திராவிட இயக்க தேர்தல் அரசியலில் நேர்ந்த ஒரு விபத்து ஜெயலலிதா என்பதும், அவருக்கும் திராவிட இயக்கம் தந்த கருத்துருவத்திற்க்கும்(அல்லது ரஷ்ய புத்தகம் படித்து ஜீவா + ஜெயமோகன் கண்டுபிடித்த பாப்புலிஸத்துக்கும் கூட) எந்த தொடர்பும் கிடையாது என்பதை விளக்கவேண்டிய அவசியமில்லை. இன்னும் இந்த சட்டம் பலரால், ஆத்திகவாதிகளால் வரவேற்கபடுகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஞாநியின் கட்டுரையை மட்டும் சாமர்த்தியமாக பயன்படுத்திகொண்டு சின்ன கருப்பன் கட்டுரை எழுதியுள்ளார். வழக்கம் போல ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் உளரிகொட்டி (உதாரணமாய் இந்துமதத்தில் ஈவில் என்ற கருத்தாக்கம் இருக்கிறதா ? என்று கேட்கிறாற், என்ன கொடுமை இது. கெட்டது என்று சொல்லப்படும் விஷயங்களை நான் பட்டியலிட்டால் அத்ற்க்கு வேறு சால்ஜாப்பு சொல்லுவார். ரொம்ப ஜாக்கிரதையாய் அவருடைய சால்ஜாப்பிற்க்கு இடம் தராமல் பேசினால் மனு தர்மம் இந்துமதமே இல்லை என்று ஒரு போடு போடுவார், ஆனால் பெரியார் கூட இந்துமதம்தான் எனபார்) எல்லாம் யூத கிருஸ்தவ பார்வையின் விளைவு என்கிறார். பல வைதீக யூத பழக்க வழக்கங்கள் பார்பனிய ஆச்சாரத்துடன் ஒத்துபோககூடியவை. எப்படி கிருஸ்தவ மதம் ஆதிக்கம் செலுத்தும் எல்லா சமூகங்களிலும் செக்ஸ் குறித்தும் சரி, புலால் உண்பதிலும் சரி இவ்வளவு மோசமான பார்வை இல்லை என்பது விளக்க படவேண்டும். அவருக்கு அதெல்லாம் பிரச்ச்னையில்லை. சும்மா யூத கிருஸ்தவ என்று ஏதாவது சொன்னால் போதும். உள்ளூரில் பார்பனியம் பேசுபவர்களை எதிர்க்க துப்பில்ல்லை. ஆதாரமே இல்லாமல் இதுபோல் ஏதாவது ஒளரலாம் , பின்னால் அதற்க்கு தத்துவ வடிவம் தர அறிஞர் ஒருவர் வருவார். இவ்வளவு இர்ந்தும் பாய்ஸ் படத்திற்க்கு ஆதரவாக சின்ன கருப்பன் ஒலித்திருப்பதை மனம் திறந்து பாராட்டுகிறென். கடா வெட்டும் சட்டம் தொடர்பாக, விஷயத்தை அவர் திசை திருப்பி இந்துத்வமாக மாற்றினாலும், ஞாநியின் கட்டுரையை விட இவர் எழுதுவது எவ்வளவோ மேல். குறைந்தபட்சம் இது எதிர்பையாவது கட்டமைக்கிறது. அந்த வகையில் சின்ன கருப்பன் கட்டுரைக்கு என் பாராட்டை தெரிவிக்கிறேன்.

ரோஸாவசந்த்.

rksvasanth@yahoo.com


**

மணியரசனின் சம்ஸ்கிருத வெறுப்பும் சங்கர மட வெறுப்பும் – மஞ்சுளா நவநீதன் கட்டுரை

மணியரசன் கட்டுரை, பிராமணவெறுப்பு, சம்ஸ்கிருதவெறுப்பு என்னும் திராவிட இயக்கங்களின் மொழிஅரசியல் வெளிப்பாடு என்ற பொதுத்தளத்தில் தானென்று தொடங்இகி, சங்கராச்சாரியார் விமரிசனப்படுத்தப்பட வேண்டியவர்தான்,ஆனால் வேறுஅடிப்படையில் என்று முன்வைக்கும் கருத்துகள் வருமாறு.

1. ஒரு சாதித் தலைவராக (இயினக்குழுத் தலைவர்-அவர் வைக்கும் பெயர்) உள்ளவர் யி

இந்துமதத்தின் ஒரேதலைவர் எனக் காட்டிக்கொள்கிறார்.

2, தமிழ்நாட்டு மதமாற்றத் தடைச்சட்டம், ஆடு,கோழி பலித்தடைச்சட்டம் ஆகியன அவர் ஆலோசனையின்பேரில் தான்

கொண்டுவரப்பட்டது என்றால் கண்டிக்கத்தக்கது.

3. தமிழ்ப்பத்திரிகைகள் நடமாடும் தெய்வம், ஜகத்குரு என ஏகமாய் வருணித்து மேலேதூக்கி வைத்துவிட்டார்கள்

4. தமிழ்நாட்டு அமைச்சர் வெங்கட்ராமன் (குடியரசுத் தலைவராக இவர் அங்கீகரிக்கவில்லை) மற்றும் அதிகாரவர்க்கப் பிரா

மணர்கள் அவருக்கு அரசாங்க அங்கீகாரமே இருப்பதுபோன்ற பிரமையை உண்டாக்கிவிட்டார்கள்.

5. தில்லி அதிகாரவர்க்கப் பிராமணர்களின் விடாமுயற்சியால் தமிழ்நாட்டின் ஆன்மீகப்பிரதிநிதி என்ற தவறான அபிப்ரா யம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

6. திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது ஒரு முக்கிய நிகழ்வல்ல என்று ஒதுக்கப்பட்டு, சங்கராச்சாரியாரின் முக்கியத்துவம் ஊ ஊதிப் பெருக்கப்பட்டது.

7. பாஜக ஆட்சியினரும், இந்துமத அரசியல் செய்தவர்களும் ஆன சங்கராச்சாரியாரின் சாதியினர் என்பதால், அயோத்திக்கு தீர்வு தருவதாகச் சொல்லி, இயிந்துமத அரசியலை முன்னிறுத்திச் செயல்பட்டார்.

அடுத்து சுருக்கமாக பார்ப்பன எதிர்ப்பு, சம்ஸ்கிருத ஆதிக்கம் பற்றிய விமரிசனத்திற்கு கட்டுரையாளர் அளிக்கும்

பட்டப்பெயர்கள்- ‘அர்த்தமற்ற பயமுறுத்தல் ‘, ‘பகுத்தறிவற்ற வாதம் ‘, ‘அபத்தம் ‘, ‘உளறல் ‘, ‘அஞ்ஞானம் ‘, ‘எரிச்சல் ‘,

‘கோணல்பார்வை ‘ ஆகியன.

சங்கராச்சாரியார் விமரிசிக்கப்பட வேண்டியவர் தான் என்று கூறி, அவரைப்பற்றி மஞ்சுளா நவநீதன் திருவாய்

மலர்ந்தருளும் சொற்கள்.

‘முழு யிந்துசமூகத்தின் பிரதநிிதியாகக் காட்டிக்கொள்ளும் ஆபத்தான வேலை ‘,

‘பாபர் மசூதி விவகாரத்தில் அவர் முயற்சிகள் பாரபட்சமானவை ‘

‘ இயிந்துமதத்தின் ஒரே பிரநிதி என்று வேடமிட்டு பண்ணும் அரசியல் நாடகங்கள் ஆபத்தானவை ‘

‘ ‘ஜெ ‘ போட்ட சட்டங்கள் அவர் யோசனையால் – ‘தான் ‘- என்றால்,மிகவும் கண்டிக்கத் தக்கது.

‘அயோத்தி பிரச்சினைக்குத் தீர்வு தரப்போகிறேன் என்று கிளம்பி, யிந்துஅரசியல் நலன்களை முன்னிறுத்திச் செயல்பட்டது மறக்கமுடியாத சறுக்கல் ‘

‘யிஇதற்கு மாறான நிலையை அவரிடம் எதிர்பார்க்க முடியாது ‘ (!)

கட்டுரையாளர் கூற்றுப்படியே யிதுமுழுவதும் பார்ப்பன அரசியல் தானே ? யிதைத்தானே மணியரசனின் கட்டுரையும் முத்தாய்ப்பாகக் கூறுகிறது.

அடுத்து கட்டுரையின் முழு நோக்கமே ‘தமிழில் குடமுழுக்குச் செய்யக்கூடாது; மாறாக சம்ஸ்கிருதத்தில் தான் செய்யவேண்டும். செய்தால் தீட்டுப்பட்டுவிடும் ‘ என்ற அவர் கூற்றை எதிர்த்துத்தானே! யிதில் சம்ஸ்கிருதமொழி வெறுப்பு எங்கேயிருக்கிறது ? மாறாக சங்கராச்சாரியாருக்கிருக்கும் தமிழ்வெறுப்புத்தானே ஆவேசமாய் வெளிப்படுகிறது.!

அண்மையில் காயத்தரி மந்திரத்தை பெண்கள் சொல்லக்கூடாது என்று ஒரு யிதழில் பேட்டியளித்தவரும் யிவர்தானே ? யிதற்கு பெண் என்ற முறையில் மஞ்சுளாவின் பதில் என்ன ? அவ்ர் பெண்ணில்லையென்றாலும் அவ்ர் கருத்தென்ன ?

சங்கரர் தமிழைத் தீட்டு என்கிறார்;யிதற்கு ‘தமிழரான கட்டுரையாளரின் பதில் என்ன ? அதை விடுத்து சம்ஸ்கிருதத்தின் பெருமைகளை விதந்தோதுவதேன் ? கட்டுரை முகப்பில் ‘பிராமண நலன் காப்பவர் ‘ என்று விமரிசனம் செய்யக்கூடாது என்பவர், அயோத்திக்கான அவரது தீர்வு, தான்சார்ந்த யினக்குழுவினரின் மதம் சார்ந்தது என்று சொல்லி, அவரிடம் மாறானநிலையை எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுகிறார்!

ஆபத்தான வேலை,சறுக்கல்,ஆபத்து என்று அங்கலாய்த்து நோகாமல் தடவிக்கொடுப்பவர், பார்ப்பன, யிந்துமத எதிர்ப்பாளர்களுக்குஅவர் சூட்டும் நாகரீகமற்ற பட்டங்கள் எத்தனை!

‘வடசொற்கடந்தான், தென்சொற்கலைக்கு எல்லை நேர்ந்தான் ‘ என்பது ராமனுக்குக் கவிச்சக்ரவர்த்தி கம்பன் கொடுக்கும் பாராட்டு! ஆனால் மஞ்சுளா போன்றவர்கள் சங்கரரின் தமிழ் விரோதத்துக்குப் பதில் அளிக்காமல், சம்ஸ்க்ருதத்திற்கு பாராட்டுரை வழங்குவதேன் ? கட்டுரை முழுதும் திராவிடயியக்க எதிர்ப்பு அடிச்சரடாக ஓடுகிறது. ஆனால் மணியரசன்

கருத்து அந்த யியக்கம் சார்ந்ததல்ல. மணியரசன் கட்டுரைக்கு மாற்றான அடிப்படை தரப்போவதாகப் புறப்பட்டவர் பிராமணஎதிர்ப்பு கூடாது, சம்ஸ்கிருதம் வடமொழியல்ல; யிந்தியா முழுவதற்குமான யிதிகாச, கலாச்சார,தத்துவ, உலகச் செம்மொழிகளுடன் ஒப்பிடத்தக்க மொழி என்று புகழ்பாடி முடிக்கிறார்.

‘தவமறைந்து அல்லவே செய்தல் புதல் மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த்தல் போன்று ‘ என்றான் வள்ளுவன். கட்டுரையாளர் பெயரை ராமகோபாலன் என்றே வைத்துக் கொண்டிருக்கலாம். தன் கட்டுரையைஅவரே மீண்டும் படித்துப்பார்க்கட்டும்.!

ராமச்சந்திரன் பாலசுப்பிரமணியன்

balajee40@yahoo.com

**


Dear Thinnai Editor,

I would like to point out that we have to accept and handle the wastes & pollution when our people need more industries & electricity now and in the future.

In English there is a saying if you want to make an omelet you have to break the egg. So any biological or industrial process will necessarily have effluent waste. The point is how we manage the waste efficiently. For that we cannot stop the process itself. Similar argument on plastic is equally untenable. Because managing the plastic waste is the focus and not totally ignoring it. As among all metallurgical process, plastic manufacture is more safe and modern.

Similarly when we speak of ecological balance and environmental protection we raise objection to food production etc making them industrial. If we have to combat famine deaths due to low production we have to accept industrialization. Ultimately all scientific advancements that meet the human wants are sine qua non and they just need mitigating mechanism to control their safety aspects.

Can we imagine a life without electricity for the fear of that industry’s pollution, waste or potential danger ? So the focus is mitigating the devastating effect of the growth and not curbing it. If we close all the Atomic Power Stations how will we bridge the gap of electricity generation ? What we should ensure is even if a system fails it should fail safely.

Regards,

K.M. Vijayan

Senior Advocate, Chennai

kmvijayan@yahoo.com

***

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கடிதங்கள்

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

அக்டோபர் 10, 2003



ஜெயபாரதன் கட்டுரைக்கு ஞாநி பதில் அளிக்காததன் காரணம் புரியவில்லையெனினும் ஒரளவு ஊகிக்க முடிகிறது. அணுசக்தி மின்சாரம் குறித்து அக்கறையுள்ளவர்கள் மற்றும் நிபுணர்கள் சிலரின் கருத்துகளை கேட்டிருக்கிறேன். ஜெயபாரதனின் கட்டுரையை படித்த பின்னும் எனக்கு அணுசக்திக்கு எதிரான கருத்து பக்கமே சாய்வு இருக்கிறது. இது என் துறையில்லை என்பதால் ஜெயபாரதனுடன் விரிவாக விவாதிப்பது எனக்கு சாத்தியமில்லை. ஓரளவு நிபுணனாகாமல் எழுதவேண்டாம் என்றுதான் இருந்தேன். எனக்கு கிடைத்த மிக நம்பகமான செய்தியை(அதன் ஒரு பகுதியை) மட்டுமிங்கே, காலம் தாழ்துவது சரியல்ல என்பதால் இங்கே முன்வைக்கிறென், நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.

கல்பாக்கத்தில் வேலைபார்க்கும் ஒரு விஞ்ஞானி எனது நண்பனுக்கு எழுதியது அது. நான் அவரிடமிருந்து கிடைத்த செய்தியை (பெயர் குறிப்பிடாமல்) எழுத அனுமதி கேட்டபோது மறுத்துவிட்டார். இப்போது ஜெயபாரதன்-அரசாங்கம் புளுகாது என்ற நம்பிக்கையில் தந்த விவரத்தாலும், ஞாநியை புழுகுகிறர் என்று குற்றம் சாட்டியதாலும் மட்டும் ஒரு (ஒரு நம்பிக்கை துரோகமாய்) சொல்கிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே கல்பாக்கத்தில் மின்சாரம் என்று எதுவும் உற்பத்தி செய்யபடவில்லை. முழுக்க (அணு ஆயுதத்திற்க்கு தேவைப்படும்) ப்ளுட்டொனியம் தயரிக்க மட்டுமே பயன்படுத்தப்டுகிறது. இந்த தகவல் (இன்னும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் உண்டு) ஜெயபாரதன் தரும் புள்ளி விவரங்களுக்கு எதிரானது. சொன்னவர் யார் என்று ஆதாரத்தை நான் காட்ட முனைந்தால் அவருக்கு வேலை தங்காது. ஏற்கனவே அணு ஆயுதத்திற்க்கு எதிராக கருத்து சொன்ன ஒருவருக்கு வேலை நீட்டிப்பு மறுத்து வெளியே அனுப்பியுள்ளது. அதே போல் அணு ஆயுதத்திற்க்கு எதிராக கட்டுரை எழுதிய (சென்னை) விஞ்ஞானி ஒருவரை வேலை நீக்கம் வரை இழுத்து கொண்டு போய் மற்ற விஞ்ஞானிகளின் எதிர்பால் அது கைவிடபட்டது. அரசு அராஜகம் இருக்கும் இந்நிலையில் வெளிபடையாக ஆதாரங்களை வைப்பது சாத்தியமில்லை. இதன் காரணமாகவே (இதில் தன்னளவில் நிபுணரில்லாத) ஞாநி தயங்குகிறாரோ என்று தோன்றுகிறது. எனக்கு என்னவோ ஞாநி சரியான விவரங்களுடன் எழுதுவதாகவே தோன்றுகிறது.

ஜெயபாரதன் முக்கியமாய் பதில் சொல்லாமல் தவிர்க்கும் விஷயம் கழிவுகள் பற்றியது. `பூமியின் ஆழத்தில் புதைக்கபட்டாலும் ‘ கழிவுகள் ஆபத்தானவை எனபதுதான் பலர் மீண்டும் மீண்டும் வலியுருத்துவது. கூகுளில் தேடினால் பல கட்டுரைகள் கிடைக்கும். ஜெயபாரதன் நான் எழுதியதற்க்கு கோபபட்டு ஏதேனும் எழுதகூடும், அதற்க்கும் சேர்த்து பதில் சொல்ல எனக்கு அதிக நாட்கள் பிடிக்கலாம்.

தாமதமாக எழுதுவதற்க்கு மன்னிக்கவும். கடந்த இதழில் கார்திக் என்பவர் ஞாநிக்கு என் எதிர்வினை குறித்து எழுதியிருந்தார். பாய்ஸ் படம் குறித்து விவரமான கருத்துகள் பதிவுகள் விவாதகளத்தில் தரமான திரைப்பட அலசலில் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் போய் பார்கலாம். சிலகாலம் முன்பு நாயேன் பேயேன் என்ற பெயரில் எழுதும் ஒரு கார்திக் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதி, அவரிடமிருந்த வந்த பதிலை அருள்வாக்கு கிடைத்த்துபோல் திண்ணையில் பதிப்பித்தார். (ஜெயமொகன் நான் எழுதவே தொடங்கும் முன்பு, என் எழுத்தில் வெளிப்படும் மூர்க்கம் குறித்து பேசும் மேஜிக்கல் ரியலிஸ கட்டுரை அது.) இது அதே கார்த்திக்தான் என்றால், நான் எழுதிய சொற்பமான விஷயங்களை `காட்டுகூச்சல் ‘ என்று சொல்வதில் ஆச்சரியபட ஏதுமில்லை. கார்திக்குடன் விவாதிக்க எனக்கு ஏதுமில்லை(ரோட்டில் முத்திமிட்டால் உள்ளெ போடுவதை-போட்டதை- நியாயபடுத்திய தமிழ் கலாச்சார காவலர் பித்தனுடனும்). சில தகவல் பிழைகள் குறித்தும், மற்று சில குறிப்புகள் மட்டும் கீழே தருகிறேன்.

முதலில் எனக்கு தெரிந்தவரை பாய்ஸ் படத்தில் (மெளனமாக) வரும் வார்த்தை `ங்கோத்தா ‘ அல்ல, ஓத்தா. `ங்கோத்தா ‘ என்பது தென்மிழ் மாவட்டங்களில் புழங்கும் ஒரு மரியாதையான வார்த்தை. `ஓத்தா ‘ என்பது சென்னையில் சகஜமாக பயன்படுத்தபடும் ஒரு வார்த்தை. இந்த இரண்டு வார்தைக்ளையுமே யார் யாரை நோக்கி சொன்னாலும், (அல்லது என்னை நோக்கி என் உடன் வாழும் பெண்) சொன்னாலும் எனக்கு கோபம் வராது. என் மகளை இல்லை, மனைவியை யாரும் `இழுத்துகொண்டு ஓடினாலும் ‘ -அதில் வன்முறை எதுவும் இல்லாதபட்சத்தில்-என்க்கு பொறுத்துகொள்ளாமலிருக்க ஏதுமில்லை. பாய்ஸ் படம் எதார்தத்தை காட்டுகிறதா, என்று காலாவதியான யதார்தததை வைத்துகொண்டு யதார்த வாதிகள் கேட்கிறார்கள். டேட்டிங் இன்று சென்னை மட்டுமில்லாது தமிழகமெங்கும் மாபெரும் யதார்தம். இன்னும் சுயமைதுனம் காலம்காலமான யதார்த்தம். கடைசியாக `பரத்தை ‘ என்ற tamil male chauvinist வார்த்தையை பயன்படுத்தியதற்காக அவரை வன்மையாக கண்டிக்கிறென். தட்ஸ் ஆல்.

அதற்க்கு அடுத்த இதழில் சூர்யா எழுதிய தத்துவ கட்டுரையை படித்தேன். இதைவிட கேவலமான ஒரு கிசுகிசு டைப் ஆபாச கட்டுரையை அவரால்தான் மீண்டும் எழுதமுடியும் என்று நினைக்கிறேன். இவர்கள் முன் வைக்கும் தரத்திற்க்கும், எழுதும் எழுத்திற்க்கும் உள்ள உறவை புரிந்து கொள்ள நல்ல உதாரணம். அதுவும் நல்லதிற்க்குதான், எதிர்காலத்தில் எதற்காவது பதில் சொல்ல உதவும். ஒரு கேனத்தனமான கருத்தை மாபெரும் தத்துவத்தை சொல்ல வருவதுபோல் எழுத இவரகளால்தான் எழுதமுடியும். அதற்க்கு இசைமேதை இளையராஜாதான் கிடைத்தாரா ? ஜெயெமோகனின் எழுத்தாற்றல் மீது இன்னும் கூட எனக்கு மரியாதை உண்டு. ஆனாலும் உலக எழுத்தாளார்களொடு, இன்னும் பல தமிழ் எழுத்தாளார்களொடு ஒப்பிடும்போது இவர் ஒன்றுமே இல்லை. ஆனால் ஆணவம்தான் இன்றைய எழுத்தாளனுக்கு தேவை என்று அவரும் மற்ற பொடிசுகளும் எழுதுவார்கள். இளையராஜாவின் இசை, உலகின் மற்ற அற்புத இசைகளுடன் ஒப்பிடதகுந்தது. இன்னும் காலகாலத்திற்க்கும் வாழபோவது. அவர் காலத்திற்க்கு ஏற்றார்போல் தன்னை மாற்றீ கொள்ளாமல் இர்ந்திருக்கலாம். அவர் இசையும் அதிகம் பயணபடாமல் வெறும் துணுக்குகளாவே அமைந்திருக்கலாம். ஆனால் அந்த துணுக்குகள் உலக இசை பலவற்றை அறிந்தவரகளை ஸ்தம்பிக்கவைக்ககூடியது. இன்னும் பல காலத்திற்க்கும் ஏதோ ஒரு விதத்தில் மறு அவதாரமாய் வரபோகிறது.

அப்பேர்பட்ட ஒரு மேதை-அதுவும் இசை போன்ற ஒரு (அறிவுஆதிக்கம் செய்யாத) கலைத்துறையில் இருப்பவர், கொஞ்சம் ஆணவமாய், பயித்தியக்காரத்தனமாய் நடந்துகொண்டால் என்ன கெட்டு போயிற்று. அதுவும் ஒரு ஒடுக்கபட்ட வகுப்பில் இருந்து வந்த ஜீனியஸ் ஆணவமாய் இருப்பதில் என்ன பெரிய பிரச்சனை. இதே சூர்யா முன்பு விவாதகளத்தில் புவியரசு விவகாரத்தில் இளையராஜா `அசட்டுதனமாக ‘ நடந்து கொண்டது பற்றி எழுதியிருந்தார். எழுதட்டும், ஆனால் அதற்க்கு சொன்ன உதாரணத்தை பார்கவேண்டும். இந்தியாவில் நயவஞ்சக அரசியல்வாதிகளில் முக்கிய இடம் வகிப்பவர் கேரளத்து கருணாகரன். அந்த கருணாகரன் ஜனநாயகவாதியாம், இளையராஜாவிடம் ஜனநாயகம் இல்லையாம். சூர்யாவிற்க்கு தெரிந்திருக்கும், கிட்டதட்ட எல்லா மலையாளிகளுக்கும் தெரியும். ஒரு கல்லூரி மாணவன் கருணாகரனை மேடையில் வைத்துகொண்டு அவரை கிண்டலடிக்கும் ஒரு மலையாள திரைப்படபாடல் ஒன்றை (சரியாக நினைவில் இல்லை, `கனக சிம்ஹாஸனத்தில் இரிக்கும்.. ‘ என்று வரும் பாடல் என்று நினைவு, தேவையானால் விசாரித்து எழுதுகிறென்) பாடிய காரணத்திற்காக, நக்ஸலைட் என்று சந்தேக கேஸில் போலிஸால் அடித்தே கொல்லபட்டான். சூர்யாவிற்க்கு கருணாகரன் ஜனநாயகவாதியாக தெரிகிறார், இளையராஜா ஒரு அசட்டுதனம் செய்தால் ஜனநாயக எதிரியாய் தெரிகிறார். என்னே புத்திசாலித்தனம்! ஒரு டைரக்டர் அறைந்ததால் ஈகோ விலகி இளையராஜாவிற்க்கு சரிவு வந்ததாம். முட்டாள்தனமாய் என்னமும் ஒளரட்டும், அதை ஒரு மாபெரும் தத்துவம் போல் சொல்லட்டும். இன்று வரை உருப்படியாய் எதையும் எழுதாதவர் ஒரு இசை மேதை குறித்து ஆபாசமாய் எழுதும் முன் கைகள் கூசவேண்டாம் ? வெட்கமில்லை.

ரோஸாவசந்த்.


கருத்தும் சுதந்திரமும் கட்டுரை பற்றி…..

ஈராக்கிய ஆக்கிரமைப்பை எதிர்த்த Friedman ஐயும், புஷ்ஷை விடத் தீவிரமாக அவ்வாக்கிரமைப்பை ஆதரித்த Fox News ஐயும் (இந்நிறுவனத்தால் ஒரு பேராசிரியர் வேலையிழந்ததும், Lies and the Lying Liars Who Tell Them என்ற நூலும் என் நினைவுக்கு வருகின்றன) ஒரே கட்டுரையில் நரேந்திரன் அவர்கள் புகழ்வது வியப்பாக இருக்கிறது.

போர் முனையில் செய்தி சேகரிக்கும் நிருபர்களைவிட சவூதி அரேபிய அரச விருந்தினராகப் பட்டத்து இளவரசரைப் பேட்டி காண்பது எந்த விதத்திலும் ஆபத்தானதில்லை. ஒருவர் யூதராகவே இருந்தாலும் இஸ்ரேல் பற்றிய அவரது நிலைப்பாட்டை அறிந்துகொள்ளாமலேயே அரபியர்கள் அவரைத் தீர்த்துவிடுவார்கள் என்று கருதுவது பேதைமை.

*****

வட இந்தியாவில் உள்ள ‘அரசியல் செய்தி விமர்சகர்களாக’ நரேந்திரன் குறிப்பிடும் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள். அவர்களோடு தமிழில் எழுதும் விமர்சகர்களை ஒப்பிடுவது சரியா என்பது தெரியவில்லை. வட இந்திய வட்டார மொழிகளில் உள்ள நிலையைத் தமிழக நிலையோடு ஒப்பிடுவதே ஏற்றதாக இருக்கும்.

*****

நடுநிலையை வலியுறுத்தும் நரேந்திரனின் கட்டுரையில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது திராவிடக் கட்சிகளுக்கே உரிய இயல்பு என்னும் குற்றச்சாட்டு தூக்கலாகவே தெரிகிறது. மாற்றுக் கருத்துகளையும் அவற்றை வெளியிடுபவர்களையும் நசுக்கும் இயல்பு இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. தங்களுக்குப் பிடிக்காத கருத்துகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் அட்டூழியத்திலும் இறங்காத இந்தியக் கட்சிகள் எவையும் இல்லை. (தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது கழகங்கள் அரசின் தொல்லையைச் சந்தித்தே வளர்ந்தன) அம்மா டிவியும் அப்பா டிவியும் இப்போதுதான் வந்தன; இதுநாள் வரை இந்திய அரசின் டிவி என்ன செய்துகொண்டிருந்தது ? தடாவையும், பொடாவையும் சட்டமாக்கியது தமிழகமா ?

கருத்துச் சுதந்திரம் தமிழகத்தில் மட்டுமே அல்ல, இந்தியா முழுவதுமே பேச்சளவில்தான் இருக்கிறது. விஜயனைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுங்கூட. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் இறுதிக் கடமை யாரிடம் இருக்கிறது ? தமிழகத்திலா, டில்லியிலா ?

*****

‘சுய விமரிசனம் செய்து கொள்ளாத எந்தச் சமுதாயமும் முன்னேறியதாகச் சரித்திரம் இல்லை’ என்று கூறும் நரேந்திரன் அவர்களிடம் ஒரு கேள்வி, ‘காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி’ என்பதும் இந்தச் சுய விமரிசனத்துக்கு உட்பட்டதா ? அல்லது உங்களுக்குப் பிடிக்காதவை மட்டுமே சுய விமரிசனத்துக்கு ஏற்றனவா ?

பரிமளம்


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

நியூ யார்க் இலக்கிய கூட்டம் பற்றிய கட்டுரை வாசித்துப் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

கவியரங்கம், கருத்தரங்குகளை நேரில் கண்டது, கேட்டது போல் இருந்தது காஞ்சனா அவர்களின் கட்டுரை.

உயிரெழுத்தின் சார்பில் திரு. வைரமுத்து, மற்றும் எழுத்தாளர் பாலசந்திரன் அவர்களுக்கு நாங்கள் அனுப்பிய மடல்களையும் மறவாமல் குறிப்பிட்டு இருக்கிறார்.

அயல் நாடு வந்து தமிழைப் போற்றிய வைரமுத்து, மற்றும் பாலசந்திரன் அவர்களுக்கு, அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் அனைவரின் சார்பிலும் நன்றி பாராட்டும் வகையில் கட்டுரை அமைந்துள்ளது சிறப்பு.

மற்ற மாநிலங்களின் படைப்பாளிகளையும் அருமையாக விவரித்து இருக்கிறார். அவர்கள் மத்தியில் இருந்து அளவளாவியது போன்ற உணர்வு தோன்றியது உண்மை.

சுவையாகவும், தெளிவாகவும் எழுதி இருக்கும் காஞ்சனாவுக்கும், அதனை வெளியிட்ட தங்களுக்கும் உயிரெழுத்து குழிவின் சார்பில் நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றிகள் பல.

அன்புடன்,

கற்பகம்.

http://groups.yahoo.com/group/uyirezuththu


Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கடிதங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

அக்டோபர் 3, 2003



திண்ணைக்குழு குறிப்பு:

இந்த வாரத் திண்ணை தாமதமாக வெளிவருகிறது. தவிர்க்கமுடியாத தொழில்நுட்பப்பிரச்னைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டதனை தெரிவித்துக்கொள்கிறோம். அக்டோபர் 3 வரை திண்ணைகுழு பெற்ற படைப்புக்களே இங்கு வெளியாகின்றன. வரும் வார திண்ணை இதழ் வெள்ளியன்று வெளியாகும்


ஞாநியின் ‘பாய்ஸ் ‘ பற்றிய கட்டுரையை விமர்சித்து பெங்களூர் வாசகர் எழுதிய கடிதம் கண்டேன். ‘ஒரு பெண்ணைப்பார்த்து ‘உங்கள் மார்பகங்களை திண்மையாக்க என்ன செய்கிறீர்கள் ? ‘ என ஒரு ஆண் நேரிடையாகத்தானே கேட்கிறார். இதைவிட என்ன நேர்மையை ஞாநி எதிர்பார்க்கிறார் ? ‘ எனக் கேட்பது சிறுபிள்ளைத்தனமான வாதம். நேர்மை என்பதன் முழு அர்த்தத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது கட்டுகிறது. நேரிடையாக கேட்பது மட்டுமே நேர்மையல்ல. புதுமணத் தம்பதியரிடம் போய் முதலிரவில் என்ன செய்தீர்கள் எனக் கேட்டுவிட்டு, நேரிடையாகத்தானே கேட்டேன். என்ன ஒரு நேர்மை என்று கூறமுடியாது. ‘இங்கிதம் ‘ என்பதாகத் தமிழில் ஒரு அருமையான வார்த்தையுள்ளது! ஒரு கொலைக்குற்றவாளி ‘நான் கொலை செய்துவிட்டேன். ‘ என்று கூறினால் அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டான் என்று தான் கூறுவார்களேயொழிய, அவன் நேர்மையாக நடந்து கொண்டான் என்று கூறமாட்டார்கள்!

உண்மையோடு அறம் சேர்ந்தால் தான் அது நேர்மை. (எதிலும் அறத்தைக் கலப்பது பண்டைய தமிழர்களின் குணம்.). அறம் ஒழுக்கத்தோடு இருந்தால்தான் அதற்கே மதிப்பு. ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் ‘ என்று ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுத்திருக்கிறார் திருவள்ளுவர். ஒழுக்கத்தோடு இயைந்தால்தான் உண்மை, நேர்மை அனைத்திற்கும் மதிப்பே. ஒழுக்கத்தை புறக்கணிக்கும் உண்மைகளும் நேர்மைகளும் குப்பைகளே.

ஒழுக்கக்குறைவான படங்களும் – யார் எடுத்திருந்தாலும், யார் வசனம் எழுதியிருந்தாலும் – குப்பைகளே. ஒழுக்கக்குறைவான, இங்கிதமற்ற நாவல்களும், எழுத்துக்களும் – யார் எழுதியிருந்தாலும் – குப்பைகளே. ஒழுக்கக்குறைவாக நடப்பவர்களும் – யாராக இருந்தாலும் – மதிப்பற்ற குப்பைக்கு சமமே.

– பித்தன்


அன்புள்ள ஆசிரியர் குழுவுக்கு,

உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அன்பும் அருளும் பொழியட்டும்.

நான் திண்ணையை நேசித்து வாசிக்கும் (மலேசியாவிலிருந்து) வாசகன் .

மாற்றுகருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பதாக கூறிஆரம்பத்தில் ‘இஸ்லாமிய எதிர்ப்பு ‘ செய்திகளை, கட்டுரைகளை அடிக்கடி தாங்கி வந்த திண்ணையில் தோற்றம் தற்போது

‘நடுநிலைமை ‘க்கு மாறியிருப்பது என் போன்ற வாசகர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

திண்ணையில் வெளியிடப்படும் கதைகள், இலக்கிய கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் மிகவும் கருத்துள்ளதாக வாசிப்பவரை சிந்திக்கவைப்பதாக தோன்றுகிறது.

இரா.முருகன் மற்றிம் ஜெயமோகனின் எழுத்துக்கள் மீது என்னை மோகம் கொள்ளச் செய்தது திண்ணைதான். இன்னும் எழுத தோன்றுகிறது ஆனால் நேரமில்லை..முடிவாக..ஒவ்வொரு தடவையும் ‘திண்ணையை ‘ விட்டு வெளிவரும்போது புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டோம் என்ற உணர்வுடன் வருகிறேன்..திண்ணையின் பணி தொடர, வளர ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கா.மெளலாசா


Dear Editor,

I suggest that you incorporate the publication date of each Thinnai magazine within the opening page masthead, instead of at the bottom of the page, where it apears insignificant & does not grab attention.

Thank you.

Dr.R.Karthigesu.


ஆபிதீன் எழுதிய சிறுகதை சென்ற இதழில் சிறப்பாக இருந்தது. அ.முத்துலிங்கத்தில் கட்டுரையும் சுவாரஸியமான வாசிப்பனுபவத்தை அளித்தது. பொதுவாக நம் இதழ்களில் குறைவாகவே நல்ல வாசிப்பனுபவம் அளிக்கும் கதைகள் கிடைக்கின்றன. ஆபிதீனின் கதையில் பல இடங்கள் நுட்ப்மான அங்கதங்கள் உள்ளன. காசர்கோட்டில் இஸ்லாமிய நண்பர்களுடன் நெருங்கி பழகிய காலத்தில் அறிந்த நல்ல அரபு சொற்களை இவரது எழுத்தில் அங்கதமாகவும் நுட்பமான மாறுதல்களுடனும் காணமுடிகிறது. [ஏறத்தாழ இதேபோன்ற சுவாரஸியமான ஒரு கதையை சமீபத்தைய /காலம்/ இதழில் மணிவேலுப்பிள்ளை எழுதியிருந்தார்] பாராட்டுக்கள்

அரசூர்வம்சம் அழகான அங்கதத்துடன் உள்ளது. [25 நண்பர்களுக்கு அதைபடிக்கும்படி எழுதினேன். பத்துபேர் பிரிண்ட் எடுத்து அனுப்பு என்று எனக்கே செலவு வைக்க முயன்றார்கள்]. ஆனால் முருகன் எவ்வளவு முயன்றாலும் சரித்திரம் எழுதப்படுவதில் உள்ள உண்மையான அபத்தத்தை தன் புனைவால் எட்ட முடியாது . ஓர் உதாரணம் . தர்மபுரிமாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின்பேர் ‘டெங்கனிக்கோட்டா ‘ .தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ள மிகவும் பிற்பட்ட பகுதி இது. டெங்கனிக்கோட்டா என்றால் தெலுங்கின் ஒரு கிளைமொழியில் தெற்குக் கோட்டை என்று பெயர். அதை இருபது வருடம் முன்பு தூய தமிழில் ‘தேன் கனி கோட்டை ‘ என்று மாற்றினார்கள். பிறகு எப்படியோ அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனியுடன் சேர்த்து தானமாக கொடுத்த ஊர் அது , ஆகவேதான் அப்பெயர் என்று ஒரு கூற்று ஆரம்பித்தது. அங்கே அவ்வையார்பெயரில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை. தர்மபுரிதான் அதியமான் ஆண்ட தகடூர் என்று ஒரு நம்பிக்கை ஏற்கனவே உண்டு .. ஆகவே அதையே தகடூர் என்கிறார்கள். அங்கே நெல்லிக்கனி சம்பந்தமான ஏகப்பட்ட அரசு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதற்கும் ஆதாரம் கிடையாது. ‘அதுமன்கோட்டை ‘ என்ற புராதன ஊரும் நடுவே சென்ராயபெருமாள் கோவிலும் உள்ளது. ஊர் 10 ஆம் நூற்றாண்டைத் தாண்டியது. அதை முப்பதுவருடம் முன்பு ‘அதியமான் கோட்டை ‘ என்று பெயர் மாற்றி ஒட்டுமொத்த தர்மபுரியையே தகடூர் ஆக மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் நமது ‘வம்ச ‘ கதைகள் எழுதப்படுகின்றன. முருகன் கதை எழுதுவதை விட இதே அரசூர்வம்சகதையை வரலாற்றாய்வா க மேலும் சி ல கல்வெட்டு ஆய்வுகளுடம் இருபதுவருடம் செய்தால் இதுவும் நம் வரலாறாகிவிடும்.

ஜெயமோகன்


பாய்ஸ் படம் குறித்து.

திரைப்படங்கள் மக்களை நல்லவர்களாக்குவதில்லை. இது போலவே இவை எவரையும் கெடுப்பதுமில்லை.

ஒரு திரைப்படத்தால் அழிந்து போகக்கூடிய அளவுக்கு ஓரினத்தின் பண்பாடு (ஓரினத்துக்கென்று ஒரு தனிப்பண்பாடு இல்லை என்பது என் எண்ணம்) அவ்வளவு உறுதியற்றதாக இருந்தால் அப்படிப்பட்ட பண்பாடு வாழ்வதை விட அழிவது மேல்.

தங்களுக்குப் பிடிக்காத திரைப்படத்துக்குத் தணிக்கை கோருபவர்களுக்கும் தலிபான்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை.

குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய படம் என்னும் எச்சரிக்கை (A படம் என்றிருந்தது போல) தரவேண்டியது அரசின்,படத்தயாரிப்பாளரின் கடமை.

பரிமளம்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

‘மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநி ‘ என்னும் எனது சென்ற வாரக் கட்டுரையில் ஒரு சிறு தசமப் புள்ளி பிழை மின்சார உற்பத்தி எண்ணிகையில் காணப்பட்டது. கீழே அடைப்புக்குள் சாய்வு எழுத்துக்களில் திருத்தமான எண்ணிக்கையே சரியானது.

இந்தியாவைப் போல் மற்றும் 30 உலக நாடுகள் 438 அணுமின் உலைகளை இயக்கி [2001 அறிக்கை] 351,327 MWe மின்னாற்றலைப் பரிமாறி வருகின்றன! அடுத்து 31 அணு உலைகள் கட்டப்பட்டு இன்னும் 27,756 MWe அதிக மின்னாற்றல் உலகெங்கும் பெருகப் போகிறது! [2000 ஆண்டில் மட்டும் உலக நாடுகளில் 2,447.53 பில்லியன் யூனிட் [KWh] மின்சாரம் உற்பத்தியாகி யுள்ளது!] மேலும் அமெரிக்கா, கனடா நாடுகளில் வயதாகி முன்பு மூடப்பட்ட பழைய அணு உலைகள், பல புதுப்பிக்கப்பட்டு மின்சாரம் பற்றாக் குறைப் பிரச்சனையை நிவர்த்தி செய்யத் தயாராக்கப் படுகின்றன.

சி. ஜெயபாரதன், கனடா


ஆசிரியருக்கு

சூர்யாவின் கட்டுரை வலுவான ஆதாரங்கள் அற்றது,அவர் முன்வைக்கும் உதாரணங்களும் பொருத்தமானதாக இல்லை, ஆனால் ஏதோ உலக மகா உண்மையை சொல்கிற தொனி கட்டுரையில் உள்ளது.இந்த வித்ததில் அவர் ஜெயமோகன் எழுதும் கட்டுரைகளின் ‘தரத்தை ‘ எட்ட முயன்றுள்ளார்.கட்டுரையின் நீளம்தான் குறைவு.மற்றப்படி ஜெயமோகனின் கட்டுரைகளுடன் ஒப்பிடத்தக்கது அது.விக்ரமனின் முதல் படம் புது வசந்தம் பெரும் வெற்றி, ஆனால் அடுத்த படம் படு தோல்வி.அதன் பின் அவரது எல்லாப் படங்களும் ஒரே மாதிரியான வெற்றி/தோல்விப் படங்கள் என்று சொல்ல முடியாது.பாரதிராஜாவின்முதல் தோல்விப்படம் நிழல்கள்.அலைகள் ஒய்வதில்லை வெற்றி பெற்றது, காதல் ஒவியம் தோல்வியுற்றது.கொடி பறக்குது படமும் அவர் இயக்கியதுதான், வேதம் புதிதும் அவர் இயக்கியதுதான்.இளையராஜாவின் வீழ்ச்சிக்கு காரணம் ஒருவர் அவரை அறைந்ததா ? என்ன பிதற்றல் இது ?.

காஞ்சி சங்கரமடம் ஆதிசங்கரர் நிறுவியது அல்ல என்ற சர்ச்சை பழையது.சமீபத்தில் கூட இப்போதுள்ள காஞ்சி சங்கராச்சாரியரை விமர்சித்து சில ஹிந்த்துவ அமைப்புகள் அறிக்கை விட்ட போது ஒரு ஹிந்த்த்வ ஆதரவு இணைய தளம் இதே சர்ச்சையைப் பற்றி எழுதியது. தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ மடாதிபதிகள் தீண்டாமை ஒழிப்பு,தமிழில் வழிபாடு,சமூக சீர்திருத்தம் போன்றவற்றை முன்னெடுத்து ஒன்றுபட்டு செயல்பட்டிருந்தால் காஞ்சி மடத்தின் செல்வாக்கினை குறைத்திருக்க முடியும். அவர்கள் ஊடகங்க்ளையும் பயன்படுத்தத் தவறினர். காஞ்சி மடத்தை இன்று கருணாநிதி விமர்சிக்கிறார், ஆனால் ஸ்டாலின் முன்பு குடும்பத்துடன் காஞ்சி சங்கராச்சாரியரை சந்த்தித்தாக செய்திகள் வெளியாயின. எனவே காஞ்சி மடத்தை மட்டும் விமர்சித்துப்பயனில்லை.

K.ரவி ஸ்ரீநிவாஸ்


Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கடிதங்கள்

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

செப்டம்பர் 25, 2003



அக்டோபர் ஆறாம் தேதி திங்கள்கிழமை என் எட்டு நூல்கள் வெளியீடு. [ சென்னை ஃபிலிம்சேம்பர் அரங்கம் ] மெய்ப்பு பார்க்கும் தலைபோகும் அவசரம். ஆகவே திண்ணை [உட்பட செய்தித்தாள்கள் கூட ] படிக்கவில்லை. ஒரு நண்பர் சங்கசித்திரங்கள் பற்றிய கட்டுரையை அனுப்பினார். அவசரமாக சில விஷயங்கள் மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஏற்கனவே பலமுறை சொன்னவைதான்.

அ] சங்கப்பாடல்கள் பொதுவாக திணை/துறைக்கு அடங்கியவை அல்ல. அவ்வடையாளங்கள் பிறகு அளிக்கப்பட்டவையே.

ஆ] திணை துறை என்பவை ஒருவகை வாசிப்புகள் மட்டுமே. ஒரு வாசிப்பு ஒரு கவிதையை கட்டுப்படுத்தாது. இன்று அக்கவிதைகளின் சொற்களைமட்டுமே கருத்தில்கொண்டு அவற்றை புதுக்கவிதையை எப்படி வாசிக்கிறோமோ அப்படி வாசிப்பதே நல்ல வாசிப்பு .சங்கசித்திரங்கள் அதற்கான முயற்சியாகும்

இ] திணைக்குறிப்புகளை நான் உ வே சாமிநாதய்யர் , மு சண்முகம் பிள்ளை நூல்களை ஒட்டி அளித்திருந்தேன் . வேறு நூல்களில் வேறு அடையாளப்படுத்தல்கள் உண்டு.

ஈ] என் பொருள்கோடல் குறித்து மாறுபட்ட கருத்தை எழுத்தில் தெரிவித்தவர் பேராசிரியர் க ரத்னம் மட்டுமே. அதற்கு நான் விரிவான பதில் அளித்தேன். அவர் ஏற்றுக் கொண்டார் [ ஓம்சக்தி இதழில் ] சங்கப்பாடல்களுக்கு உரைகள் எழுதப்பட்டது ஐநூறு வருடம் கழித்து சோழர் காலத்தில். அவை அக்கால விழுமியங்களின் அடிப்படையில் செய்யப்பட்டவை. அவ்வுரைகளுக்கு இடையேகூட பெரிய வேறுபாடுகள் உண்டு. இன்று அவற்றில் ஒன்றே கவிதையின் இறுதிப்பொருள் என்று சொல்ல முடியாது. கவிதையின் பொருள் வாசிப்புக்கு ஏற்ப வளர்வதாகும். இவற்றை நான் அக்கட்டுரைகளிலேயே பல இடங்களில் விரிவாக சொல்லியிருக்கிறேன்

உ] எனக்கு தமிழ்ப் பயிற்சியில் மரபு சார்ந்த ஒரு முறையான பின்புலம் உண்டு. என் பொருள்கோடல் அந்த தளத்தில் இருந்துதான்.

ஜெயமோகன்


பாய்ஸ் படம் பற்றி ஞாநி கட்டுரை சிறப்பாக இருந்தது.

அதை தொடர்ந்து ரோசா எழுதிய கடிதத்துடன் னான் மாறுபாடு கொண்டவனாக உள்ளேன்.

ரோசாவின் பல கடிதஙகளை நான் படித்திருக்கிறேன். அவர் பெரியார்,தலித் குரித்து பல தகவல்களை பற்றி திண்ணையில் எழுதியிருக்கிறார். பல காட்டு கூச்சல்களும் போட்டிருக்கிறார்.

பாய்ஸ் பற்றிய என் நிலைப்பாடு:

75% மிக சிறந்த தொழில்னுட்ப,காட்சியமைப்பு கொணட படம். மிகவும் நன்றாய் ஆரம்பிக்கப்பட்டு, மிக கேவலமாக கதையை சொதப்பியுள்ளது,மற்றும் ஜவ்வு போல இழுக்கப்பட்ட கதை, என்ன இதை விட சிறப்பாக எடுக்க முடியவில்லையா ? இவர்களால் என்ற் நினைக்க தொன்றுகிறது.

சரி இப்போது விவகாரமான கட்சிகளை பற்றி பார்ப்போம்.

ஞாநி எழுதிய காட்சிகள், அவர் ஒன்றும் மிகைபடித்தி எழுதவில்லை என்ற அளவிற்கு நிறைந்துள்ளது.

ஒரு இளம், நகர பெண் ஒரு வாலிபனை பார்ட்த்து ‘போடா ங்கோத்தா ‘ என்ற படி சிறப்பாக படம் ஆரம்பிக்கிறது. மேலும் அடிக்கடி தன் ஆட்காட்டி விரலை ஆண்களின் முகத்துக்கு நேரே காட்டுவது மிகவும் எல்லோருக்கும் பிடித்தமான விஷயமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இப்போது பிரச்சினை பல கேள்விகளை முன் வைக்கிறது.

1.இதுபோல காட்சிகள் தேவைதானா ?

காரணம் கதை, அதை உண்மையாக எடுக்க/சித்தரிக்க முயற்சி செய்தேன் என்ற் சொல்வது சரியெண்று படவில்லை. ஏனெனில் இந்த அளவுக்கு தமிழ் ‘majority ‘ மாணவ சம்தாய செய்வதாக யாரும் ஒப்புகொள்ளமுடியாது. அப்படியெனில் இதில் மிகை உள்ளது. இந்த மிகை சமுதாய ஒழுக்கத்துக்கு தீங்கு விளைக்கும் பட்சத்தில் எதிற்கபட வேண்டியது.

(சும்மா வெட்டி பேச்சு பேசாமல், னாம் நமது மகளை இப்படி பேசும்போது பொறுத்து கொள்வோமா என்று யோசிக்க வேண்டும் , ரோசா.. எனக்கு ஒரு ன்யாயம் சினிமாவுக்கு ஒரு ந்யாயம் ன்னு கதை எழுதினா..ஒன்னும் சொல்வதற்கு இல்லை)

நம் வாழ்வில் நிஜமாக ஒருபெண் (மாணவி), தன் சகமாணவனை பார்த்து ‘போடா ங்கோத்தாா ‘ என்று சொன்னால்,அதை சுஜாதா,ஷங்கர், (ரோசாவசந்த் உட்பட) யாரும் பாரட்டவோ, ஒத்துகொள்ளவோ மாட்டோம் அல்லது,குறைந்த பட்சம் கோபமாவது படுவோம்.

இதற்கு கோபம் வரவில்லை என்றாலும், ஒரு பரத்தை அழைத்து வந்து உடலுறவு கொண்டால்,

நிதானமாக யோசியுங்கள்

2.தமிழக, நகர இளை ஞர்கள்,இளை ஞிகளை குறித்த ஷங்கரின் இந்த சித்தரிப்பு,மற்றும் வசனங்கள் எந்த அளவுக்கு உண்மை நிலையை காட்டுகின்றன ?

3. எல்லாவற்றுக்கும் மேல் இப்படம் இளைய சமுதாயம், மொத்த சமுதாயத்தின் மேது ஏற்படுத்தும் தாக்கம் என்ன ?

இதில் என்னை பொறுத்தவரை, நமது சினிமா நமது இளைஞர்களின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றால், இப்படம் ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. ஆனால் இன்று நிலையோ தலைகீழ், எனவே சினிமாவினால் நாம் ஏற்படுத்து தாக்கத்திற்கு நாமே பொறுப்பாவோம். எனவே அதில் மிகுந்த கவனம் தேவை என்று ஆகிறது.

சினிமா பர்த்து ஒட்டு போட்ட சமுதாயத்திலிருந்து வந்தவன் நான். அதனால் எனது அரசியல் பட்டபாடு,

படும்பாடு எனக்கு நன்றாக தெரியும் என்று யோசிக்க கடமைப்ட்டவானாக உள்ளேன்.

——

மேலும் ஒட்டுமொத்த சமுதாய ஒழுக்கம் பற்றி ஜெயமோகனின் நிலைப்பாட்டை அறிய ஆவல்.

அன்புடன்,

கார்த்திக்


வணக்கம் திண்ணை இணையத்தள ஆசிாியருக்கு

நான் எப்பொழுதும் திண்ணையை வாசிக்க முடிவதில்லையானாலும் வாசிக்கும் நேரம் கிடைக்கிறபோது எப்பவும் திண்ணையைத் தான் முதலில் வாசிப்பேன்.

சுந்தரராமசாமி அவர்களின் பல படைப்புக்களை வாசித்தவள் என்ற வகையிலே அவரது ~படிப்பனுபவமும் படைப்பனுபவமும்~ என்ற கட்டுரையின் கருத்துக்கள் எவ்வளவு நிஜமானவை எனறு பிரமித்து நிற்கின்றேன். அவரது ~குழந்தைகள் பெண்கள் ஆண்கள், காகங்கள் தொகுப்பு, தகழிசிவசங்கரப்பிள்ளை எழுதிய மூலத்தை மொழிபெயர்த்து எழுதிய ~தோட்டியின் மகன் என்ற நாவல்…..என்பவை இன்னும் எனக்குள் இருப்பவை.

ஏனோ நான் வாசித்த அவாின் நாவல்களின் முழுமை இந்தக் கட்டுரையினூடாக மிக நோ;த்தியாக எனக்குள் நிரப்பப்பட்டுவிட்டது போன்று திருப்தியடைகிறேன்.

நிறைந்த பாராட்டுக்களும் நன்றிகளும் ..அவருக்கு மட்டுமல்ல தங்களிற்கும் தான்!

அன்புடன்

சந்ர.ஆகாயி.

23-09-2003

***


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

மீண்டும் மதிப்புக்குரிய நண்பர் ‘கல்பாக்கம் ஞாநி ‘ சென்ற வாரக் கட்டுரையில் [செப் 18, 2003] தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அணுமின் நிலையங்கள் மீது கனலற்ற தீப்பொறிகளைக் கக்கி இருக்கிறார்! ‘இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை ‘ என்று தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். பெரும்பான்மையான இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் சீரும் சிறப்பாக இயங்கி மின்சக்தி பரிமாறி வருகின்றன என்று மெய்யான செய்திகளை முழுமையாக அறியாது, கண்களை மூடிக் கொண்டு புளுகுத் தகவலைத் தமிழ் நாட்டிலும், அகிலவலை மூலம் தமிழ் உலகிலும் ஒரு பத்திரிகை ஆசிரியர் பரப்பி வருவது வியப்பாக இருக்கிறது!

50 ஆண்டு நிறைவுப் பொன்விழாவைக் கொண்டாடும் [2003-2004] பாரத அணுசக்தித் துறையகம் இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் மின்சார உற்பத்தியை 2620 MWe மின்னாற்றலிலிருந்து 6800 MWe மின்னாற்றல் மிகுதி நிலைக்கு உயர்த்தப் போவதாக அணுசக்திப் பேரவையின் அதிபதி, டாக்டர் அனில் ககோட்கர் [Dr. Anil Kakodkar, Chairman Atomic Energy Commission] வியன்னா, அகில நாட்டு அணுசக்திப் பேரவையில் [International Atomic Energy Agency, Vienna] 2003 செப்டம்பர் 17 ஆம் தேதி பெருமிதத்துடன் பறைசாற்றி யிருக்கிறார். மேலும் [2002-2003] ஆண்டில் இந்திய அணுமின் நிலையங்கள் செவ்விய முறையில் இயங்கி 19,358 மில்லியன் யூனிட் (KWh) மின்சாரத்தை, 90% திறமைத்தகுதியில் [Capacity Factor: 90%] பரிமாறியுள்ளன என்றும் கூறி யிருக்கிறார். அவற்றின் மகத்தான வெற்றிக்குக் காரண கர்த்தாக்கள்: அணுமின் உலைகளை ஆழ்ந்து டிசைன் செய்து அமைத்தவர்கள், இராப் பகலாக இயக்கிக் கண்காணித்து வரும் எஞ்சியர்கள், விஞ்ஞானிகள், பணியாளிகள் ஆகியோரே.

நூறு கோடி ஜனத்தொகையை மிஞ்சி விட்ட இந்தியாவுக்குப் பற்றாக்குறை மின்சாரம் மட்டுமா ? உணவு, நீர், உடை, இல்லம், கல்வி, வேலை, போக்குவரத்து, குடிவசதி, சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளிலும் பற்றாக்குறைகள் உள்ளன! இந்தியாவில் பற்றாக்குறை மின்சார உற்பத்திக்கு வேண்டிய நிலக்கரி கிடைப்பதில்லை! ஈரான், ஈராக்கிலிருந்து எரிஆயில், எரிவாயு ஆகியவற்றை வாங்கிப் பாரதத்தில் மின்சாரம் தயாரித்துப் பெருத்த செலவில் நமது தொழிற்சாலைகளைத் தொடர்ந்து ஓட்ட முடியாது! கோடான கோடி இல்லங்களுக்கும் விளக்கேற்ற இயலாது! நீர்வீழ்ச்சி மின்நிலையங்களை மேலும் பெருக்க நீர்வளச் செழிப்பும் கிடையாது! காற்றிலிருந்தும், கடல் அலைகளிலிருந்தும், மாட்டு சாணத்திலிருந்தும், பரிதியின் வெப்பத்திலிருந்தும், நமக்குத் தேவைப்படும் மாபெரும் 200 MWe, 500 MWe, 1100 MWe மின்சார நிலையங்களைக் கட்ட முடியாது! ஆனால் பாரதத்தில் மிகுந்து கிடக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்தி முதற் கட்டத்தில் 50,380,000 மெகாவாட் அணு மின்னாற்றலும், தோரியத்தைப் பயன்படுத்தி இரண்டாம் கட்டத்தில் 200,000,000 மெகாவாட் அணு மின்னாற்றலும் தயாரிக்க நம்மிடம் மனிதத் திறமையும், மூல உலோகங்களும், யந்திர சாதனங்களும் நிரம்ப உள்ளன.

இன்னும் இருபது அல்லது இருபத்தி ஆண்டுகளுக்கு மின்சாரம் பரிமாறவும், பற்றாக்குறையைத் தீர்க்கவும், அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் [Nuclear Fusion Power Stations] தோன்றுவது வரை, நாம் அணுப்பிளவு மின்சக்தி நிலையங்களின் [Nuclear Fission Power Stations] உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியே இல்லை! கல்பாக்கம் ஞாநி கூறுவது போல் ஓடிக் கொண்டிருக்கும் பதிமூன்று அணுமின் நிலயங்களையும் நிறுத்தி விட்டால், பாரதத்தில் என்ன பாதிப்புகள் நிகழும் என்று எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

இந்திய அணுமின் நிலையங்களின் மகத்தான சாதனைகளை www.npcil.org, www.igcar.ernet.in, www.dae.gov.in, www.aerb.gov.in, www.barc.ernet.in ஆகிய அகிலவலை முகப்புகளில் யாரும் விளக்கமாகக் காணலாம்.

சி. ஜெயபாரதன், கனடா


I don ‘t really understand how Mr. Badri has come to such a hasty conclusion, without analysing all the facts in relevance. It is a misconception amongst the public that employees are always right, tenants are always right, women are always right. Why ? Don ‘t we all know that both employer and employee could be right or guilty. So are the women-men and tenants-landlords.

Any organisation, irrespective of its business, tends to promote its business by attracting customers. So what ‘s wrong with Air India choosing not to fly overaged women to serve its customers ? The basic eligibility to serve as a air-hostess is her attractive physical appearance and nobody can refute this. So what ‘s wrong in the court ‘s verdict that lets Air India choose its employees ? How can Mr.Badri term it as anti-people ? Is it not height of wrong-thinking ?

Next is the issue with TESMA and Government staff. The learned judges, Mr.Shah and Mr.Lakshman correctly pointed out that the Government employees (they themselves are part of the Government) cannot hold a Government at ransom. And they have no fundamental or equitable right to strike work. Mr.Badri has conveniently forgotten to mention all the troubles that people have to face in the event of strike by the Government servants. So what ‘s wrong in a court coming to the Government ‘s rescue ? How else can a Government handle a strike that would bring the whole administration to a standstill ?

Mr.Badri should think well before blaming any senior judges or the courts of justice.

Regards

Venkat

(VENKATESAN BALASUBRAMANIAN )


Dear Mr Badri

I appreciated your article in thinnai . I, as a NRI, often wondered how the educated people of tamil nadu tolerate the political ‘atrocities ‘

and the odd decisions of the court (ex govt servant ‘s strike and the right to protest). It was incredible to me that even the newspapers or

magazines, (so called large circulation papers) did n ‘t manifest their frank opinions.. When I think of of attitude of news papers or mag

during the emergency time in seventees ( Black inked passages to mean they were censered), I often accept the fact that we, who declare

that India as the largest or greatest republic in the world, are no more better than ‘banaian ‘ republics. Fortunately Internet have given us a

new freedom. Thanks for your brave opinions….

I was of course scandalised by the arrest and humiliation of youngsters in Madras. I read the details of the episode by Anadi ‘s article in

Thinnai. In Vikatan or Kumutham Commissioner VijayaKumar ‘regrets ‘ the incident but doesn ‘t apologize.

Next thing is about Boys. As Shakespeare would have said ‘Too much ado for nothing ‘. As a college student years back I ‘ve heard the

same comments of the ‘boys ‘ by my fellow students.

Excuse me for my ‘ Frenglish ‘ (Frenchifying English)

Ravi


ஆசிரியருக்கு,

திண்ணையில் பல சுவாரஸ்யமான, வித்தியாசமான பார்வைகள் கொண்ட கட்டுரைகள் இடம் பெறுவது குறித்து மகிழ்ச்சி. விரிவாக அவை குறித்து எழுத இயலவில்லை.

ரோசா வசந்த எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து, பதிவுகள் விவாததளத்தில் (http://www.geotamil.com/forum/) அவரது உள்ளிடுக்கைக்கு பதிலாக என் கருத்துக்களை கூறியுள்ளதால் அதை மீண்டும் இங்கு தெரிவிப்பதைத் தவிர்க்கிறேன்.ஜெயமோகன் ஞாநி எழுதியுள்ளதை புரிந்து கொண்டுள்ளாரா என்று சந்தேகம் எழுகிறது.ஜெயமோகன் சுஜாதா குறித்து எழுதியவை (திண்ணையில்) விமர்சனபூர்வமாக இல்லாமல் புகழாரமாகவே பெருமளவிற்க்கு இருந்த்தால அவரிடம் அக்கேள்வி கேட்கப்படுகிறது என்று ஊகிக்கிறேன்.சுஜாதாவின் எழுத்துகளின் ஒரு பகுதியாகத்தான் பாய்ஸ் படத்திற்கு அவர் வசனமெழுதியதைக் காண வேண்டும். ஆபாசம் என்ற விமர்சனம் அவர் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதியவை குறித்து முன்பே எழுப்பட்டுள்ளது. ஒருவர் இரு பெயர்களில் (புஷ்பா தங்கதுரை,ஸ்ரீவேணுகோபாலன்) வெவ்வேறு வகையாக எழுதுவது போல் சுஜாதா செய்வதில்லை.அவர் வாலியுடன் இதில் ஒப்பிடத்தக்கவர். எனவே ஜெயமோகன் மழுப்பாமல் தன் கருத்தினை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். சுஜாதா அப்படி எழுதுவது அவர் உரிமையென்றாலும் அவர் தன் ஆற்றலை,அறிவை மேம்பட்ட காரியங்களை செய்ய பயன்படுத்தியிருக்கலாம் என்று கூட ஜெயமோகன் எழுதியிருக்கலாம். பாய்ஸ் குறித்த விவாதம் குறித்து எழுதினால் அவர் எழுதியது குறித்த விமரசனத்தை முன்வைக்கிறேன்.

பத்ரி சேஷாத்ரியின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனால் அதற்கு இட ஒதுக்கீடு தீர்வல்ல.இந்தியாவில் நிர்வாகச் சீர்கேடுகள், அரசுகள் தங்கள் அதிகாரத்தின் எல்லையை உணராமல் செயல்படுவது, பொறுப்பற்ற முடிவுகள் காரணமாக நீதிமன்றங்கள் பல பிரச்சினைகளில் தலையிட வேண்டிய நிலை உள்ளது.ஏர் ஹோஸ்டஸ் வழக்கின் முழு விபரங்கள் எனக்குத் தெரியாது. ஆனால் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டமுடியாது. இது அரசியல் சட்டத்திற்கு முரணனாது. மேலும் Convention on Elimination of Discrimination Against Women (CEDAW) என்ற உடன்பாட்டை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

அந்த அடிப்படையிலும் இவ்வாறு பாகுபாடு காட்டமுடியாது.வழக்கின் முழு விபரங்கள் தெரியாமல் தீர்ப்பு குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.இதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன ? பத்ரி Upendra Baxi, S.P.Sathe போன்றோர் எழுதியதை படிக்கலாம்.உச்சநீதி மன்றம் குறித்த நூல்களைப் படிக்கலாம். ஜெத்மலானி போன்றோர் பேச்சின் அடிப்படையில் முடிவுகளுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பூக்கோவிற்கும், கனிமொழியின் எழுத்துகளுக்கும் என்ன தொடர்பு என்பது எனக்கு ரவிக்குமார் எழுதிய முன்னுரையை படித்த பின் விளங்கவில்லை.

‘ஃபூக்கோ உதாரணம் காட்டிய அதே பிரச்சினைகளை – பெண்கள் மீதான ஒடுக்குமுறை, குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை, இன்னபிற – கனிமொழி தேர்வு செய்திருப்பது அவரது சிந்தனையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. ‘

இதனை சிவசங்கரி,மஞ்சுளா ரமேஷ், வாசந்தி உட்பட பலர் எழுதுவதற்கும் குறிப்பிடலாமே ?. ஐன்ஸ்டானும் சோசலிசம் பேசினார், ஐயாசாமியும் சோசலிசம் பேசுகிறார் என்று கூறுவது போல்தான் இதுவும்.கனிமொழியின் எழுத்துகளில் பூக்கோவின் சிந்தனையின் தாக்கம் என்ன, அவர் பூக்கோவின் எழுத்துக்களை எப்படி கையாள்கிறார் என்பது பற்றி எதுவும் கூறாமல் எதற்காக பூக்கோவின் பெயர் இங்கு இடம் பெறுகிறது. பூக்கோவின் கருத்துக்கள் பெண்ணியவாதிகளால் விமர்சிக்கப்பட்டுள்ளன, சர்ச்சிக்கப்பட்டுள்ளன.

மார்க்சியரும் பூக்கோவின் கருத்துக்களை சர்ச்சித்துள்ளனர். மார்க் போஸ்டர் எழுதிய நூல் Marxism, Foucault and History, முழு நூலும் இணையத்தில் உள்ளது. அதைப் படித்தால் பூக்கோ குறித்து ஒரு வித்தியாசமான புரிதல் கிடைக்கும். இத்தகைய முன்னுரைகள் நூலிற்க்கு சிறப்பு சேர்க்காது. இக்கட்டுரைக்கு எதிர்வினையாக ஒரு கட்டுரைதான் எழுதவேன்டும். எம்.யுவன் முன்னுரை பொருத்தமாக உள்ளது. ஆனால் மொழிபெயர்ப்பு என்பதினை அவ்வளவு எளிதாக இரண்டு பிரிவுகளில் அடக்க முடியாது.

மருந்துகளும்,அறிவு சார் சொத்துரிமைகள் குறித்து திண்ணையில் குறிப்பிட்டிருந்தேன். அது குறித்த என் கட்டுரையை வாசகர்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

Interpreting Para 6: Deal on Patents and Access to Drugs -K Ravi Srinivas Economic & Political Weekly (www.epw.org.in)-Vol 38 No 38 September 20, 2003

K.ரவி ஸ்ரீநிவாஸ்


துக்கமான செய்தி ஒன்று:

திரு. எட்வர்ட் செய்த்(Edward Said) அவர்கள் சற்று முன்னர் இறந்து விட்டதாக அறிகிறேன். இவரது பேட்டிகள் மற்றும் தத்துவார்த்தக் கட்டுரைகள் பல தமிழ் வாசகர் பரப்பில் தெரிந்த விடயமாகவே இருக்கும். குறிப்பாக நிறப்பிரிகையில் பல கட்டுரைகள் ரவிக்குமார் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டன. ஒரு தீவிர தத்துவஞானியாய் முகிழ்த்த பாலஸ்தீன அகதி மைந்தனின் இழப்பினை கவலையோடு நண்பர்களுடன் பகிந்து கொள்கிறேன்.

http://www.edwardsaid.org

செங்கள்ளூச் சித்தன்


Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கடிதங்கள்

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

செப்டம்பர் 18, 2003



இந்து இதழ் பற்றி மஞ்சுளா நவநீதன் எழுதிய கட்டுரை நன்றாக இருந்தது . ஒரே ஒரு விஷயம் தவிர. இந்து இதழின் இனக்குழு மனநிலை பற்றி அவர் சொல்லியிருந்தார் .இந்து இதழ்மட்டுமல்ல தமிழகத்தின் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் இனக்குழு மனநிலையே தொடர்கிறது. தினத்தந்தியில் அவர்கள் இனக்குழுவைசேராத எத்தனைபேர் வேலைசெய்கிறார்கள் ? பரிமளம் அவர்கள் எழுதியிருந்த விஷயங்களைத்தான் ஜெயமோகனும் இலக்கிய விமரிசனத்தின் அகவயத்தன்மை என்று சொல்லியிருந்தார். எல்லா இலக்கிய விமரிசனங்களும் அபிப்பிராயங்கள்தான். அந்த அபிப்பிராயம் மூலம் இலக்கிய்த்தை நாம் எப்படி கூடுதலாக அறியமுடிகிறது என்பதே முக்கியம்.

இராமுருகனின் அரசூர் வம்சத்தை இப்போதுதான் படித்தேன். நன்றாக இருந்தது . தமிழ் டான் குவிசாட்

போல. வாழ்த்துக்கள்

சூர்யா


அன்புடையீர்,

துபாயில் எழுத்தாளினி மீனா நவந்ீதகிருஷ்னண் என்ற தலைப்பில் ராமச்சந்திரன் உஷா வரைந்த கட்டுரை (திண்ணை 2003/09/11) தொடர்பாக எழுதுவதாவது:

எழுத்தாளினி, வரவேற்பாளினி, தொழிலாளினி என்றெல்லாம் பெண்பாற் சொற்கள் வெளிவருவது வரவேற்கத் தக்கதே. ஆனால் அவை முறையே எழுத்தாளன், வரவேற்பாளன், தொழிலாளன் ஆகிய (ஆண்பாற்) சொற்களின் பெண்பாற் சொற்களாய் அமைய வேண்டியவை. எழுத்தாளர், வரவேற்பாளர், தொழிலாளர் முதலிய அர்-விகுதிச் சொற்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை. பெண்கள் தம்மைக் குறித்து அர்-விகுதிச் சொற்களைத் தாராளமாகக் கையாளவேண்டும். எனது அண்ணா ஓர் எழுத்தாளர் என்று குறிப்பிடலாம் என்றால், எனது அக்கா ஓர் எழுத்தாளர் என்று ஏன் குறிப்பிடக்கூடாது ? அதாவது எழுத்தாளினி என்பது எழுத்தாளன் என்பதன் பெண்பால் ஆகுமே ஒழிய, எழுத்தாளர் என்பதன் பெண்பால் ஆகாது. ஏனெனில் எழுத்தாளர் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான சொல். பெண்கள் அர்-விகுதிச் சொற்களை ஆண்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கக் கூடாது.

துபாயில் எழுத்தாளர் மீனா நவந்ீதகிருஷ்னண் என்றே தலைப்பிடவேண்டும்.

மணி வேலுப்பிள்ளை


பாய்ஸ் படம் குறித்த ஞாநியின் கட்டுரையை படித்து சிரிப்பு வந்தது. ஒரு தமிழ் கலாச்சார காவலராக, ஆனால் நேர்மை அது இதென்று டான்ஸ் காட்டியபடி, எழுதி தள்ளியிருந்தார். ஞாநி தனது பெரியார் குறித்த கட்டுரையில், ஜெயமோகனும், சுராவும் இணையும் புள்ளி பற்றி கூறுகிறார். அதற்க்கு முன் இவரும், ஜெயமோகனும் இணையும் புள்ளி குறித்து யோசிப்பது அறிவுடமையாக இருக்கும். முந்தய திண்னையில் அக்னிபுத்திரன் என்பவரால் எழுதபட்ட கட்டுரைக்கும், ஞாநியின் கட்டுரைக்கும் அதிக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

பாய்ஸை இன்னும் என்னால் பார்க்க இயலவில்லை. பாய்ஸின் தெலுங்கு பதிப்பு குறித்த 1/2மணி நிகழ்ச்சி மட்டும் டிவியில் பார்க்க கிடைத்தது. மீண்டும் தமிழ் மக்களுக்கு இன்பமும், சுவாரசியமும் அளிக்கும் ஒரு மகத்தான படைப்பை அளித்திருப்பதாக தோன்றுகிறது. படம் பார்த்த பிறகு கருத்து மாறலாம். (படம் பார்காமலே கருத்து சொன்ன மும்முடிசோழன் என்பவரின் கருத்தும் எனக்கு கிட்டதட்ட உடன்பாடே.) ஞாநி நேர்மையினமை என்று கூறுவதை பார்போம்.

கேர்ள்ஸ் ஆசையை தணிக்கவும், மார்பகங்களை பெரிதாக்கவும், செய்யும் பயிற்ச்சி குறித்து நேரடியாய் கேட்பதில், என்ன நேர்மையின்மை வெளிப்படுகிரது என்று ஞாநிதான் விளக்கவேண்டும். பஸ்ஸில் உரசுவது பற்றி கூறுகிறார். ஞாநி தொடர்ந்து கொஞ்சம் பஸ்ஸில் பயணித்து இது குறித்து கவனமாய் புள்ளிவிவரம் எடுக்கவும். உரசுவதால் மாமிக்கள் வெளியே வரமட்டார்களா, அல்லது உரசப்படுவதற்க்காகவே வருகிறார்களா, என்று தெரிந்து கொள்ளலாம். தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையையே அவர் புரிந்து கொண்டதாய் தெரியவில்லை

மிக மோசமான ஆணதிக்க சித்தரிப்புகளும், பெண்களை கேவலப்படுத்தும் வசனங்களும் (ஆபாசமல்ல) வரும் படங்கள், கன்னத்தில் அரையும் காட்சிகள்(அதை சகஜமானதாய், இயற்கையானதாய் காட்டும் படங்கள்) `பெண்களை நம்பாதே ‘ என்று வரும் பாடல்கள் (விஜயகாந்த், அர்ஜுன் படங்கள், `செந்தமிழ் நாட்டு தமிழச்சியே ‘ பாடல்) etc ..etc.. இதையெல்லாம் விட்டு விட்டு, மக்களுக்கு இன்பம் தரும், மக்களின் அமோக ஆதரவை பெற்ற ஒரு படத்தை திட்டி கட்டுரை எழுதுபவருக்கும், `இதையெல்லாம் கட்டுபடுத்த முடியாது ‘ என்று சொல்லிவந்த பெரியாருக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. கடைசியாக `பாய்ஸ் ‘ படம் எடுத்தது போல் `கேர்ள்ஸ் ‘ என்றும் ஒரு படம் எடுக்கப்படவேண்டும் எனபதை தவிர வேறு விமர்சனமிருக்க முடியாது.

ROSAVASANTH, Banglore.


அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்

ஆங்கிலம் பற்றிய மஞ்சுளா நவநீதனின் குறிப்பும் திரு. ஜெயமோகனின் கடிதமும் குறித்து.

முன்னரே தட்டச்சு செய்து வைத்திருந்த என் கட்டுரை(கற்றதனாலாய பயனென்கொல்)யைத் திண்ணைக்கு அனுப்பிய பிறகே இந்த வாரத் திண்ணையைப் பார்த்தேன். ஆங்கிலம் பற்றிய என் கருத்துகள் மஞ்சுளா நவநீதன் அவர்களின் கருத்துகளோடு கிட்டத்தட்ட ஒத்துப் போகின்றன. திண்ணயில் அவரது குறிப்பு முதலில் வெளியாகிவிட்டதால் ‘என் கட்டுரையை வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக்கொள்ளலாம் என்று விரும்பினாலும் என் கட்டுரையில் வேறு பல செய்திகளும் இருப்பதால் தயக்கமாக இருக்கிறது. அதே நேரத்தில் என் கட்டுரை அவரது கருத்துகளைத் தழுவி எழுதப்பட்டது என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகவும் எனக்கு விருப்பமில்லை. இந்த முதல் சிக்கலை அவிழ்க்கவே எனக்கு வழி தெரியவில்லை.

முதல் நபரின் கருத்து வெளியானதை அறிந்த பிறகும் இரண்டாவது நபர் தன் கருத்தை வெளியிடுவதும், வெளியிட்டாலும் அது பற்றி மெளனம் சாதிப்பதும் நல்லதல்ல என்று கருதுகிறேன். தெரியாமலே வெளியிட்டால் சந்தேகத்துக்கு ஆளாவதிலிருத்து தப்பிக்க முடியாது (நானும்தான்).

மோகமுள், தழுவல் பற்றிய ஜெயமோகன் அவர்களின் கடிதமும் இதே திண்ணையில் உள்ளது. சந்தேகமில்லாமல் என் சிக்கல், ‘ஒரே மாதிரியான சிந்தனைகள் பலருக்கும், பல நேரங்களில், பல இடங்களில் தோன்றலாம்’ என்னும் ஜெயமோகனின் கருத்துக்கு அரணும் சேர்க்கிறது. எனக்கெதிராக அவர் தொடுத்துள்ள வழக்குக்கு நானே அவரது வலுவான சாட்சியாக நிற்கிறேன்.

இப்போது இரண்டாவது சிக்கலும் சேர்ந்துகொண்டது.

பைபிளிலும் குறளிலும் பல கருத்துகள் ஒன்றுபோலவே இருப்பதை வைத்து வள்ளுவர் ஒரு கிறித்துவர் என்று நிறுவும் நூல் ஒன்றைப் பார்த்ததாக நினைவு. மோகமுள்ளிலும் Humoresque இலும் உள்ள ஒற்றுமையைக் கண்டு மயங்கி இதே போன்றதொரு பைத்தியக்காரத்தனத்தை நானும் செய்கிறேனா என்று நான் மீண்டும் என்னிடமே கேட்டுப் பார்க்கிறேன்.

நான் நிதானத்தோடு எழுதியதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். (ஏனென்றால் என் கட்டுரையிலிருந்து சுஜாதாவின் ‘அப்பா’ கட்டுரையை அசிமாவின் ‘அப்பா’ கட்டுரையோடு தொடர்புபடுத்தும் ஒரு குறிப்பை நீக்கியிருந்தேன்.) இருந்தாலும் மோகமுள் பற்றி நான் எழுதியது தவறு என்றால் திருத்திக்கொள்வதில் எனக்குத் தடையில்லை

பரிமளம்


இவ்வாரம் முழுக்க கடிதங்கள். ‘ சுஜாதாவை நல்ல எழுத்தாளர் என்று சொல்கிறீர்களே அவர் ‘பாய்ஸ் ‘ படத்துக்கு ஆபாச வசனம் எழுதியிருக்கிறாரே இப்போது என்ன சொல்கிறீர்கள் ? ‘ ‘ என்று

சுஜாதாவை நான் முக்கியமான படைப்பிலக்கியவாதி என்று சொல்லவில்லை . அவர் நல்ல பல கதைகளை எழுதியிருக்கிறார். அதை வெங்கட்சாமிநாதன் முதலிய மூத்த விமரிசகர்கள் இருபதுவருடம் முன்பே அங்கீகரித்திருக்கிறார்கள். அவர் நடை மற்றும் கதைத்தொழிநுட்பம் ஆகியவற்றில் ஒரு விற்பன்னர், முன்னோடி — இதுவே நான் எப்போதும் சொல்வது

**

பாய்ஸ் படம் ஆபாசமா என்பது பற்றி . ஆபாசம் என்றால் பாலுறவுச் சித்தரிப்பு என்றால் அப்படத்தைவிட என்னுடைய நாவல்கள் ஆபாசமானவையே.

ஒழுக்கம் தான் பிரச்சினை என்றால் அதை நான் இவ்வாறுதான் விளக்குவேன். நான் தனிப்பட்ட ஒழுக்கநெறியில் தீவிர நம்பிக்கை உள்ளவன். பாலியல் ஒழுக்கம் இல்லாத ஒருவன் காதலை இழந்துவிடுவான், அது மிகப்பெரிய இழப்பு என்று என் அப்பா நான் 18 வயதாக இருக்கும்போது சொன்னார். ஒழுக்க மீறல் என்பது இன்னொருவரை எப்படியோ அவமதிப்பதி, சுரண்டுவதில், ஏமாற்றுவதில்தான் கொண்டு சென்று சேர்க்கும் . அதை மிக உறுதியாக உணர்கிறேன். என் பிள்ளைக்கும் அதை சொல்லுவேன். அதை அவன் மீது திணிக்கமாட்டேன். என் அப்பா என்னிடம் ‘ உன் இஷ்டம் பாத்துக்க ‘ என்றுதான் சொன்னார் .

நான் ஒழுக்கம் பற்றி எப்போதுமே பேசுவதுண்டு. காந்தியும் , ஈவேராவும், இ எம் எஸ்ஸும் பேசிய அதே ஒழுக்கம் . என் சொந்த ஒழுக்கத்தை முன்வைத்து , அதைப்பற்றி மட்டுமே பேசுவேன். பிறருடைய ஒழுக்கம் பற்றி அல்ல. பிறவகையான ஒழுக்கம் பற்றி விமரிசிப்பதும் இல்லை .

பாய்ஸ் படத்தை ஒழுக்கம் தடைசெய்யப்பட வேண்டியது என்றால் சாரு நிவேதிதா முன்வைக்கும் ஒழுக்கம் என்ன செய்யப்படவேண்டும் ? எனக்கு இரண்டுமே ஏற்புடையவை அல்ல. இரண்டையுமே நிராகரிப்பேன். ஆனால் சீரோ டிகிரி ஒரு முக்கியமான இலக்கிய முயற்சி என்று சொல்ல எனக்கு தயக்கமில்லை. என் ஒழுக்க நெறியை அளவுகோலாகக் கொண்டு சாரு நிவேதிதாவை பொடாவிலெ தள்ளக் கோரமாட்டேன்.

பாய்ஸ் படம் செயற்கையானது, முன்னுக்குபின் முரணானது, கலைத்தன்மை இல்லாதது என்றே நண்பர்கள் சொன்னார்கள். ஞாநி அதை சொல்லலாம். அப்படம் முன்வைக்கும் ஒழுக்கமுறை பற்றிய கடுமையான கண்டனத்தை தெரிவித்து தன் தரப்பை பிரச்சாரம் செய்யலாம். அவரைப்போனற சமூகப்பிரக்ஞை கொண்ட தீவிர இதழியலாளர் அதை செய்யாமலிருந்தால் அதுதான் தவறு. அவரது கருத்துக்களோடு எனக்கும் உடன்பாடுதான். ஆனால் தங்கள் தரப்பை வெளிப்படுத்தியதனால் அவர்களை தண்டிக்க எண்ணுவது சரியல்ல .

பிரச்சினை தத்துவார்த்தமாக பார்த்தால் சிக்கலானது. நமக்குத்தேவை கட்டுப்படுத்தப்பட்ட கருத்துசெயல்பாடா, இல்லை சுதந்திர கருத்து செயல்பாடா ? கட்டுப்படுத்தப்பட்ட கருத்துசெயல்பாடு என்றால் அதை கட்டுப்படுத்துவது ‘ தேர்வு செய்யப்பட்ட ‘ ‘ முதல் தளத்தில் நிற்கிற ‘ ‘அதிகாரம் கொண்ட ‘ ஒரு சிறுபான்மை. அச்சிறுபான்மை அதிகாரத்தின் பக்கத்தில் நிற்பதனாலேயே மையஅதிகாரத்தை ஆதரிக்கும் .அதற்கு எதிரான குரல்களை நசுக்கும் . இம்முறை சமூகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்பது உண்மையே. ஆனால் மரபிலிருந்து மீற அனுமதிக்காது. மாற்றங்கள் நிகழ அனுமதிக்காது. நீண்டகால அடிப்படையில் இது சமூகத்தை தேங்க வைக்கவே செய்யும். இஸ்லாமியநாடுகள் , கம்யூனிஸ நாடுகள் , மத்தியகால கத்தோலிக்க ஐரோப்பா , நமது நிலப்பிரபுத்துவ காலகட்ட கிராமங்கள் ஆகியவை இதற்கு உதாரணம். இதை நான் ஏற்கவில்லை . ஞாநியின் பல கருத்துக்கள் எனக்கு உடன்பாடானவையல்ல, அவர் நான்மிக மதிக்கும் இதழாளர்.

கட்டுப்படுத்தப்படாத கருத்துச்செயல்பாடுகள் ஜனநாயகத்துக்கு மிக அவசியமானவை. பலவகையிலான பயணங்களையும் வளர்ச்சிகளையும் அவை சாத்தியமாக்குகின்றன. அங்கே உரிமைகள் பேணப்படும். ஆனால் அச்சுதந்திரம் வணிக ரீதியாக கையாளப்படும்போது அது அத்து மீறும். சீரழிவை உருவாக்கும் . அது ஒருவகையான சுரண்டல் . எந்த கலாச்சர செய்லாளியும் அதை அருவருப்பாகவே எண்ணுவான். ஹென்றி மில்லரை அனுமதிக்கும் சமூகம் ஹெரால்ட் ராபின்ஸையும் அங்கீகரிக்கவேண்டியிருக்கும். ஹெரால்டு ராபின்ஸை தடைசெய்தால் ஹென்றி மில்லர் எழுதமுடியாது.

ஒன்று மட்டுமே செய்யமுடியும். வணிக ரீதியான அத்து மீறல்களுக்கு எதிரான தொடர்ந்து தீவிரமான எதிர்ப்பை தெரிவிக்கலாம், அதை ஒரு கருத்துப் போராட்டமாக முன்னெடுக்கலாம். ஹென்றிமில்லரையும் ஹெரால்டு ராபின்ஸையும் வேறுபடுத்திக் காட்டலாம்.

அவ்வளவில் ஞாநி எழுதியவற்றுடன் ஒத்துப்போகிறேன் .

ஜெயமோகன்

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கடிதங்கள்

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

செப்டம்பர் 11, 2003


=== மஞ்சுளா நவநீதனின் கட்டுரை பற்றி

‘தி ஹிந்து ‘ நாளேடு பற்றி மஞ்சுளா நவநீதன் எழுதிய கட்டுரையில் பல குழப்பங்கள் நிறைந்துள்ளன.

தி ஹிந்து பற்றி பல குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் அவர் முன்னுக்குப் பின் முரணாக பல பேசுகிறார்.

1. திமுக பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்தது என்கிறார், ஆனால் இன்று திமுகவிற்கு நேரிடையாக ஆதரவு தராவிட்டாலும் ஜெயலலிதாவின் ஒவ்வொரு எதேச்சாதிகாரப் போக்கையும் கண்டித்து இதே நாளிதழ்தான் தீவிரமாகப் பேசி வருகிறது. அதன் பலனாக 10க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளையும் சந்தித்து வருகிறது.

2. பெரியாரை இருட்டடிப்பு செய்தது என்ற குற்றச்சாட்டோடு, காஞ்சா அய்லய்யா மற்றும் கெயில் ஓம்வேத் ஆகியோருக்கு விடாது இடம் கொடுத்தும் வருகிறார்கள் என்றால் என்ன பொருள் ? பிராமணீயத்தை ஆதரிக்கிறார்களா இல்லை எதிர்க்கிறார்களா ? நாட்டில் உள்ள மதக்குழப்பங்களுக்கெல்லாம் காரணம் பாரதீய ஜனதாவும், சங்கப் பரிவாரங்களுமே என்று தோலுரித்துக் காண்பிக்கும் தி ஹிந்து வை பெரியார் அபிமானிகள் பாராட்டத்தானே வேண்டும் ?

3. குழிமாற்றுத் திருவிழாவினைக் கண்டித்து எழுதினார்கள் என்னும்போது அத்துடன் கூட MSS பாண்டியனின் மாற்றுக் கருத்தையும் வெளியிட்டார்கள் (அந்த மாற்றுக் கருத்துக்கு மாற்றுக் கருத்தாக முகுந்த் பத்மநாபன் கருத்தையும் வெளியிட்டார்கள்) என்பதை மஞ்சுளா அவர்கள் அறிந்திருக்கவில்லை. (

http://www.thehindu.com/thehindu/2003/03/09/stories/2003030901590900.htm,

http://www.hindu.com/thehindu/2003/03/11/stories/2003031101671300.htm

).

நல்ல விவாதம் நடக்குமாறு ஒரு மேடையைத் தருவதில் தி ஹிந்துவை விட சிறந்த இந்திய ஆங்கில நாளிதழை நான் பார்த்ததில்லை.

சென்னையிலிருந்து வெளியான ‘தி மெயில் ‘ என்னும் ஆங்கிலேயர் வசமிருந்த, ஆங்கிலேயர்களின் கருத்தை மட்டுமே சொல்லும் நாளிதழுக்கு எதிர்ப்பாக, தேசியத்தை முன்னிறுத்தும் விதமாகத் துவங்கியது ‘தி ஹிந்து ‘ ஆங்கில நாளிதழ். அதை ஏன் தமிழில் துவங்கவில்லை என்றெல்லாம் கேள்வி கேட்பது அறியாமையால் மட்டுமே. தமிழ் என்ற வார்த்தையே அந்த நாளிதழில் வராது என்கிறார். எந்தத் தமிழ் நாளிதழும் செய்யாத ‘literary review ‘ வில் தமிழ்ப் புத்தகங்களை நன்கு அறிமுகம் செய்துகொண்டு வருவது தி ஹிந்து மட்டுமே. மஞ்சுளா அவர்கள் தி ஹிந்துவைப் படிக்கிறாரா என்ற சந்தேகமே நமக்கு வருகிறது.

பாக்கிஸ்தான், இந்தியா, சீனா, என்.ராமின் கம்யூனிச ஆதரவு, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மீது அபாண்டம், எமர்ஜென்சி ஆதரவு என்று பல கருத்துக்களைக் கூறுகிறார். தி ஹிந்துவின் ஒவ்வொரு காலகட்ட ஆசிரியர்களும் செய்த எல்லாமே சரி என்று யாரும் வாதிட முடியாது. ஆனால் மொத்தத்தில், அந்தக் குறைபாடுகளையெல்லாம் தவிர்த்துப் பார்க்கையில் தி ஹிந்து வின் 150 வருட வரலாற்றில் நிறையே மிஞ்சுகிறது.

பத்ரி சேஷாத்ரி

சென்னை

=== Badri Seshadri


திரு. அக்னி புத்திரன் அவர்களுக்கு,

தங்களின் ‘பாய்ஸ் ‘ விமர்சனக் கட்டுறை பார்த்தேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. தங்களின் கட்டுறையை படித்தபோது எனது கல்லூரி நினைவுகள் வந்து போயின. தாங்கள் குறிப்பிட்டது போன்று படத்தில் இச்சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டிருப்பின், எமது வாழ்வின் குறிப்பிடத்தக்க ஒரு காலகட்டத்தை இயக்குனர் சங்கர் பதிவு செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன், மகிழ்கிறேன்.

தாங்கள் குறிப்பிட்டிருந்தது போல் ‘அந்தக்காலத்தில் ‘ இவை இலை மறை காய் மறையாக வைக்கப்படவில்லை. மாறாக சமூகத்திலும், பல்வேறு குழுக்களிலும் இத்தகு விஷயங்கள் தாராளமாக பரிமாரிக்கொள்ளப்பட்டன. இவ்வளவு ஏன், எங்கள் கோவில்களில் எம் முன்னோர் இத்தகு விஷயங்களை பாமரர்களுக்கு சிற்பங்கள் வாயிலாக வடித்து எம் மனதில் இருந்த ‘sex related guilt conscious ‘ ஐ நீக்க முயன்றனர்.

சமீப காலமாக,இவ்விஷயங்கள் இலை மறை காய் மறையாக வைக்கப்பட்டதன் விளைவு, இன்று தமிழகம் ‘AIDS ‘ நோயின் தலைமை இடமாக திகழ்கிறது ! இதுதான் நீங்கள் கட்டிக் காத்திட நினைக்கும் ‘இலைமறை காய்மறை ‘ யின் மகிமை!!

நான், என்னளவில் கண்டிருக்கிறேன், என் நண்பர்கள் விலைமாதுக்களிடம் விலை பேசி, பணம் பகிர்ந்து , வரிசை வைத்து புணர்ந்து மகிழ்வதை ( மகிழ்வது மட்டுமல்லாது, சற்றே வித்தியாசமான ‘expressions of guilt ‘ ஐயும் கண்டதுண்டு – தற்போது ஒரு ஆன்மீக-தேசீய கட்சியில் இருக்கும் தமிழ்கத்தில் பிரபலமான நண்பன் ஒருவன் பக்கத்தறையில் புணர்ந்து முடிந்ததும் ஓவென்று கதறி அழுதான் என்று மற்றொரு நண்பன் ஒரு முறை கூறினான்).

அது போல, கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு விலைமாதுவுக்கு இரு குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டதை (வென்ற குழு மாதுவை இட்டுச்சென்றதாம் – சங்கத்தமிழர்கள் அல்லவா ? ?). விலைமாதென்று வீடு திரும்பும் மகளிரை தொந்தரவு செய்த நிகழ்வுகள் அனேகமாக அனைத்து தமிழ் நாட்டு இல்லங்களிலும் ஒரு முறையாவது விவாதிக்கப்பட்டிருக்கும், வேதனையை உண்டாக்கியிருக்கும்.

இவ்வாறு நடைமுறைத் தமிழகம் இருக்கும்போது (we remain the most sexually suppressed society in India – in my view), இவற்றை வெளிக்கொணர்ந்த ஒரு மகத்தான இயக்குனரை பணத்திற்க்காக இவற்றை காட்டியுள்ளார் என்று விமர்சிப்பது நியாயம் அல்ல என்பது எனது கருத்து. Let these things be brought to the notice of all , let there be debates into the forbidden, suppressed areas of our society. புழக்கடையில் முடை நாற்றம் என்றால், ஊதுபத்தி ஏற்றி அதை மூடிமறைக்கும் மனப்பாங்கு இனியாவது மாறட்டும்.

நண்றி. வணக்கம்.

மும்முடிச்சோழன்


I ‘m sorry there ‘s a minor mistake in my e-mail address appearing at the end

of my story. The correct address is: manivel7@hotmail.com

Mani Velupillai


மோகமுள் பற்றிய பரிமளம் அவர்களின் கருத்து ஏற்கத்தக்கதல்ல. மோகமுள்ளின் கரு எங்கிருந்து முளைத்தது என்பது ஊரறிந்த ரகசியம் . யமுனா வாழ்ந்த வீட்டை தஞ்சை பிரகாஷுடன் சேர்ந்துபோய் பார்த்திருப்பவர்கள் என்னைப்போல பலர். அதைவிட அதே கதை அப்படியே நிகழ்ந்த இரு கவிஞர்களை நான் அறிவேன்.[வெறுமொரு சொல்லின் அக்கரை இக்கரை நின்று நாம் ஜென்மத்தை வீணாக்கினோம் [மலையாளம்] என் ஏதோ நரம்பில் இறுகுகிறது நூற்றாண்டுப் பிசுக்கேறிய உன் தாலிக்கொடி முடிச்சு – [தமிழ் ]. ஆட்களைச் சொல்ல மாட்டேன்]

ஒரு படைப்பின் கருவை பொதுவாக ஒப்பிட்டு இம்மாதிரி முடிவுகளுக்கு வருவது பல சமயம் தவறான விளைவுகளை ஏற்படுத்தும். மனித உறவுகளின் சிக்கல்களை ஒட்டிய கதைக்கருக்கள் பெரும்பாலும் ஒருசில வடிவங்களுக்குள் அடங்கக் கூடியவையே . ஒதெல்லோவின் , மாக்பெத் , ஹாம்லெட் போன்ற கதைகளை பெரும்பாலான கதைச்சூழல்களில் மீண்டும் மீண்டும் காணமுடியும். மோகமுள்ளின் கருவில் எங்கேயும் பல கதைகள் இருக்கும். நான் இரு மலையாள நாவல்கள், ஒரு கன்னட நாவல், இரு வங்க நாவல்களை படித்திருக்கிரேன். கருவை காப்பியடிப்பது குறித்த குற்றச்சாட்டு நூதனமான கருக்களுக்கே பொருந்தும். அறிவியல்புனைகதைகள், துப்பறியும் கதைகள், விசித்திரக் கதைகள் முதலியவை. மனித உறவுகளைப்பற்றி முற்றிலும் புதிதாக ஏதும் சொல்ல எவராலும் முடியாது. உறவுகளைப்பற்றி மனிதன் பேச ஆரம்பித்து இரண்டாயிரம் வருடங்கள் ஆகின்றன.

சொல்லப்பட்ட விதத்தை வைத்துத்தான் அது நகலெடுப்பா இல்லையா என்று சொல்லமுடியும். சம்பவக்கோவைகளை நகலெடுப்பது , திருப்பங்களை நகலெடுப்பது , மொழிப்பிரயோகத்தினை அப்படியே பிரதிசெய்வது இதெல்லாம்தான் தழுவல்/ திருட்டு ஆகும்.

ஒரு காலகட்டப் படைப்புகளில் சில பொதுவான அமைப்புகள் இருக்கும். உதாரணமாக ‘ஒரு தூரதேச ஊருக்கு ஒரு கதாநாயகன் வருவது, சில அனுபவங்கள் ‘ என்ற அமைப்புள்ள கதை இந்தியச்சூழலில் பலநூறு உள்ளன. காரணம், இது இந்திய யதார்த்தம், ஆசிரியராக, கிராமசேவகராக, மருத்துவ ஊழியராக படித்த இளைஞன் விசித்திரமான ஊருக்கு செல்வது . எனக்கே அப்படிப்பட்ட அனுபவதளம் உண்டு. இதைவைத்து இரு படைப்புகளை நகல் என்று ஒப்பிடலாகாது . ‘பங்கர் வாடி ‘ என்ற மராட்டிய நாவலையும்[ வெங்கடேஷ் மாட்கூல்கர்] கசாக்கின் இதிகாசம் [ ஓ வி விஜயன் ] என்ற மலையாள நாவலையும் இப்படி ஒப்பிட்டு ‘இலக்கிய திருட்டு ‘ என்று எழுதிய சோட்டா விமரிசகனுக்கு பதிலாக நண்பர் கல்பற்றா நாராயணன் எழுதினார் ‘ அதேபோலவே இரு அட்டைகள், அச்சிட்டபக்கங்கள், இருநூறு பக்கம். அச்சாக அப்படியே இருக்கிறது , கண்டிப்பாக இலக்கிய திருட்டுதான் ‘ என்று .

ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பம் அல்லது வாழ்க்கைப்போக்கு உலகம் முழுக்கவே ஒரு காலகட்டத்தில் ஒரேவகையான படைப்புகளை உருவாக்கும். உதாரணமாக சினுவா ஆசிபியின் சிதைவுகள் [ என் கெ மகாலிங்கம், காலச்சுவடு பதிப்பகம்] போன்ற அதே கருக்களை பலர் பல சூழல்களில் எழுதியிருக்கிறார்கள். சமீபத்தில் மலியாளத்தில் பேசப்பட்ட நாவலான ‘மாவேலி மன்றம் ‘னென்ற நாவல் [கெ வி பேபி பளியர் என்ற மலைவாசிகளைப்பற்றி எழுதியது ] பலவகையிலும் சிதைவுகளேதான் . காரணம் இது மூன்றாம் உலகம் முழுக்க நிகழும் ஒரு விஷயம் . இனக்குழுப்பண்பாட்டின் அழிவு.

ஆக பொதுவான ஒற்றுமைகளை வைத்து இலக்கியப்படைப்புகளைப் பற்றி எளிதாக முடிவுகளுக்கு வந்துிவிடலாகாது. உண்மையில் வணிகரீதியான படைப்புகளுக்கு தான் பலவிதமான கருக்கள் சாத்தியம். தீவிர இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் சுய அனுபவம் சார்ந்தவை. ஆகவே அவை ஒரே/ சிறு உலகத்துக்குள் இயங்குவது இயல்பே.

இலக்கியத்தில் இன்னும் ஒன்று உண்டு. ஒரு படைப்பின் கரு இன்னொரு எழுத்தாளரில் ஆழமான பாதிப்பை உருவாக்கி இன்னொரு படைப்பை உருவாக்கலாம் . புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் அப்படிப்பட்ட எடுத்தாளப்பட்ட கருதான் என க நா சுப்ரமணியம் அடையாளம் கண்டிருக்கிறார். எனக்கே அப்படி பல நாவல்களை மீண்டும் எழுதும் நோக்கம் உண்டு. ஒரே கருவை இருவர் எழுதலாம் .[மெளனியின் மாறுதல் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் இருகதைகளுக்கும் இடையேயான ஒற்றுமையை கவனித்தது உண்டா ? நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் ]

ஒரு படைப்பின் சாரமான அனுபவதளம் எடுத்தாளப்பட்டது என்றால், அவ்வாசிரியனின் படைப்பு ரீதியான பங்களிப்பு மூலத்தைவிட பலவீனமானதென்றால் அதை தழுவலாகக் கொள்ளலாம் . அதற்கும் திட்டவட்டமான தகவல்களுடனான ஆய்வு தேவை

சற்று நிதானித்து, மேலும் கவனித்து பிறகு இம்மாதிரி கருத்துக்களை சொல்வதே முறை

ஜெயமோகன்


ஆசிரியருக்கு

பேராசிரியர் வேதசகாய குமார் என்னிடம் கோபித்துக் கொண்டு பயனில்லை.ஜெயமோகன்,ஒரு வாசகர் எழுதியிருந்த்தன் அடிப்படையில்தான் நான் எழுதினேன். ஜெயமோகன் ஏன் அப்படி எழுதினார் என்று அவரிடம்தான் பேராசிரியர் கேட்க வேண்டும், அது குறித்த தன் கருத்தை தெரிவிக்க வேண்டும்.சுந்தர ராமசாமிக்கு எதிரான இலக்கிய அரசியலின் ஒரு பகுதியாக ஜெயமோகன் எழுதிய அக்கட்டுரையைக் காணலாம்.அது ஜெயகாந்தன் எழுத்துக்கள் பற்றிய விமர்சனக்கட்டுரை மட்டுமல்ல.ஜெயமோகன் இலக்கிய விமர்சனம் என்ற பெயரில் செய்துவரும் இலக்கிய அரசியலின் ஒரு பகுதி அது.அதில் பேராசிரியரின் ஆய்வேட்டை,ஆய்வைப் பற்றி அவர் வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதியிருக்கலாம். ஆனால் சுந்தர ராமசாமியின் மீதான விமர்சனத்தாக்குதலுக்கு அவரது ஆய்வேடு,ஆய்வு அங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.இது போன்றவற்றை நான் சுட்டிக்காட்டினால் பேராசிரியருக்குக் கோபம் வருகிறது.ஒரு ஆய்வாளர் என்ற முறையில் அவர் இத்தகைய கீழ்த்தரமான இலக்கிய அரசியலை விமர்சிக்க வேண்டும். அவர் அதை விமர்சிப்போரை கண்டிக்கிறார், அத்தகைய அரசியலில் ஈடுபடுவோருக்கு வக்காலத்து வாங்குகிறார். ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையான பின்னும் அவருக்கு இது புரியவில்லையா.

ஜெயமோகன் பேராசிரியர், சுந்தர ராமசாமியின் கருத்துக்களை ஏற்று,ஆதரித்து எழுதினார் என்று எழுதியிருக்கலாம்,ஆய்வேட்டைக் குறிப்பிடாமல்.அவர் ஏன் அதைக்குறிப்பிட்டார், பின் கட்டுரையில் பேராசிரியரின் ஆய்வை ஏன் குறை கூறுகிறார் ,தான் சுந்தர ராமசாமிக்கு எதிராக செய்யும் இலக்கிய அரசியலுக்கு வலுச்சேர்க்கவே. இது ஜெயமோகன் கட்டுரைகளை படிப்பவர்களுக்கு எளிதில் புரியும். கு.ப.ரா படைப்புகள் குறித்த கட்டுரையில் இது ஐயர்,ஐயங்கார், மரபு என்ற பெயரில் கூறப்பட்டாலும் அதன் பிண்ணணிக்காரணம் தெளிவாகவே தெரிகிறது. இப்படி படைப்பாளிகளை ஜாதி ரீதியாக குறிப்பிட்டு, மரபு மீதான கண்ணோட்டம் என்ற வாதத்தின் மூலம் அவர்களை விமர்சிப்பது அவரது குதர்க்க புத்தியையும்,கீழத்தரமான சிந்தனையையும் காட்டுகிறது. இதை கண்டிக்க வேண்டிய பேராசிரியர் மெளனம் சாதிக்கிறார்.தான் தாக்கப்பட்டாலும் தற்சார்பாக எதையும் கூற மறுக்கிறார்.இத்தகைய கட்டுரைகளை அவர் சிபாரிசு செய்யலாம்- இலக்கிய விமர்சனம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக.ஆனால் அவர் கண்ணோட்டமோ வேறுவிதமாக உள்ளது.

பேராசிரியர் நான் முன்வைத்த கேள்விகளை எதிர்கொள்ள மறுக்கிறார். அவர் சுந்தர ராமசாமியின் கருத்துகள் என் ஆய்வில் தாக்கததை ஒரளவே ஏற்படுத்தின, ஜெயமோகன் அதை மிகைப்படுத்தி எழுதியுள்ளார் என்றோ அல்லது ஜெயமோகன் எழுதியது சரியல்ல,என் ஆய்வேடு என் சிந்தனை, கருத்துகளின் அடிப்படையில் உருவானது, அதில் பிறர் கருத்துகள் வாதத்திற்கு வலுச்சேர்க்கவே பயன்படுத்தப்பட்டன என எழுதியிருந்தால் அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.அவ்வாறு எழுதாமல் மெளனம் சாதிப்பது வியப்பளிக்கிறது.அது அன்றைய நிலைப்பாடு, இன்று என் நிலைப்பாடு இது என்று தன் கருத்தை முன்வைத்திருந்தால் அல்லது என் ஆய்வில் குறையில்லை ஜெயமோகன் எழுதியதை நான் ஏற்க இயலாது என்று எழுதியிருந்தால் அவர் தரப்பு வாதம் நமக்கு தெரிந்திருக்கும்.பேராசிரியர் எழுதிய இரண்டு கட்டுரைகளின் பலவீனங்களை ஆய்வுத்துறை,அறிவுத்துறைகளில் ஒரளவு பரிச்சியமுடையவர்கள் கூட அறிவார்கள்.அவற்றிற்கு பதில் எழுதுவது அலுப்பூட்டும் செயல்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கடிதங்கள்

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

செப்டம்பர் 4, 2003



ஆசிரியருக்கு,

எந்த இடத்திலும் நான் முனைவர் பட்டத்தைக்கூட போட்டதில்லை. இங்கேபோடக்காரணம் ரவிசீனிவாஸ் இதே கேள்வியைக் கேட்பார் என்பதே. இங்கே எழுதிய நண்பரிடம் பூராசிரமம் ஜாதகம் எல்லாம் கேட்டவ அதே வாயால் இதையும் கேட்பார் என்று தெரியும். ஆய்வேடுகளைப் பற்றி படித்துவிட்டுபேச ஆளிருக்கிறது .எப்படிவேண்டுமானாலும் பேசலாமே.

மீண்டும் சொல்கிறேன், ரவிசீனிவாஸைபுண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.அவர் தன் எல்லைகளை உணர்ந்திடவேண்டும். தன் துறையிலிருந்து பொருத்தமானவற்றையும் பிறதுறைகளில் பொதுவாக நிபுணர்களால் முன்வைக்கப்பட்டவற்றையும் மட்டும் பேசவேண்டும். குறிப்புகளாக எழுதாமல் கட்டுறைகளாக எழுதி நூல்களாக்கவேண்டும். தமிழுக்கு இந்நூல்கள் நிறையவே தேவை . தொடங்கியநிலையிலேயே அவரை புண்படுத்தி துரத்த விரும்பிடவில்லை.

எம் வேதசகாயகுமார்


ஆசிரியருக்கு,

சென்ற இதழில் நான் எழுதிய குறிப்பின் தொனி மேலும் சிலரை வருத்தம் கொள்ள செய்ததாக அறிந்தேன். என் புரிதலில் உள்ள சிக்கலை சம்பந்தப்பட்டவர்கள் சரிசெய்தார்கள் .

நாகார்ச்சுனன் நெல்லையில் பேசியபோது நிகழ்ந்தவற்றை இப்படி என் பார்வையிலே சுருக்கிக் கொண்டேன். அன்று அவர் பேசிய விஷயங்களைப்பற்றிய அடிப்படைப்புரிதல் எனக்கு இருக்கவில்லை என்பதையும் சொல்லவிரும்புகிறேன்., அவை சூழலுக்கே புதிய விஷயங்கள் ஆகும். அவர் அதுவரைக்கும் பிற விமரிசகர்கள் பொதுப்புத்தி சார்ந்து குத்துமதிப்பாகவே பேசினார்கள் அமைப்பியலாளர்களே முறைப்படி இலக்கிய விமரிசனம் செய்தார்கள் என்று சொன்னதாகத் தகவலிருந்தது. க,பூரணசந்திரன் தன் கட்டுரையில் [காலச்சுவடு மலர்] இதை சொல்லியுள்ளார். மேற்படி நிகழ்ச்சியினில் அவரிடம் அவர் படைப்புகளை அலகுகளாகக் கட்டுடைப்பதற்கு தமிழின் அசைபிரிப்பு விதிகள் கொண்டுகூட்டல் மூறை ஆகியவற்றை கடைப்பிடிக்கிறாரா, அதுகுறித்தமொழியியல் விதிகள் தெரியுமா, என்ற வினா எழுப்பட்டது.

அதற்கு அவர் சொன்னபதிலில் அவை பற்றி தனக்கு தெரியாது என்ற பொருளே இருந்தது. மீண்டும் அவரிடம் அவர் கடைப்பிடிக்கும் முறைமை என்ன என்று கேட்கப்பட்டது . தன் ரசனை தேடல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே விமரிசனம் செய்வதாகவும் தனக்கு எந்த திட்டவட்டமான முறைமையும் இல்லை என்றும் சொன்னார். அத்துடன் என்னை பொறுத்தவரை உரையாடல் முடிந்தது . ரசனை சார்ந்த விமரிசனம் எப்படியும் போகலாமே.அதன் பிறகு நிகழ்ந்தது முழுக்க அவரவர் வாசிப்புகளை வெங்கடேஷ் சக்ரவர்த்தி முதிலியோர் முன்வைத்து பேசிக் கொண்டதுதான். நாகார்ச்சுனனால் பதிலளிக்க முடியவில்லை என நான் சொன்னது இதனடிப் படையிலேயே.

நாகார்ச்சுனன் எப்போதுமே முறைமைக்கு அப்பால் செல்லக்கூடிய இலக்கியத்தின் இயல்பையே முன்வைத்துள்ளார் என்றும், இலக்கியத்தின் போக்கு தன்னை இல்லாமலாக்கி இன்மைவரை செல்லக்கூடியது என்று சொல்லிவந்தார் என்றும் அதையே அக்கூட்டத்திலும் சொன்னார் என்றும் இப்போது விளக்கப்பட்டது . நான் அதை தவறாக புரிந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது . அப்படியானால் என் புரிதலுக்காக வருந்துகிறேன். நாகார்ச்சுனனிடமும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகார்ச்சுனனின் நூலுக்கு மிக விரிவான கடுமையான விமரிசனங்கள் வந்தன. அவை எதற்கும் பதில் அளிக்கப்படவில்லை . அந்நூல் திரும்பபெறப்பட்டது என்றும் விரிவான நூல் வரவிருக்கிறது என்றும் சொன்னார்கள். வரவில்லை. இப்போது அந்நூலை திரும்பப் பெறவில்லை என்று தெரிவிக்கபட்டது . அப்படியானால் அதை அப்படி ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கமேதுமில்லை.

நாகார்ச்சுனனின் பங்களிப்பைப் பற்றி குறைத்துச்சொல்ல விரும்பவில்லை. இலக்கியத்தின் கருத்தியல் உள்ளடக்கம் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்த விமரிசனச்சூழலை மாற்றியமைத்தவர் அவர். ஆனால் புது விஷயங்களை கொண்டுவருவதில் அவர் பொது விமரிசனத்தின் எல்லைகளை மீறி சென்றார் என்று மட்டுமே சொன்னேன்.

படித்தவர்கள் எல்லாருமே எழுதவேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழில் எழுதவே ஆளில்லை . தன் மெளனம் கலைந்து நாகார்ச்சுனன் வந்து நிறையவே எழுதவேண்டும்

எம்.வேதசகாயகுமார்


Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கடிதங்கள்

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

ஆகஸ்ட் 28, 2003



ஆசிரியருக்கு,

geological survey of india,zoological survey of india,botanical survey of india போன்ற அமைப்புகளுக்கு போதுமான நிதியும்,வசதிகளும் செய்து கொடுத்தால் National Geographic போன்றவற்றின் நிதி உதவி தேவைப்பட்டிராது.இதை செய்யாதது யார்- மத்திய அரசு.இந்த உண்மையை மறைத்து விட்டு எழுதுகிறார் அ.நீலகண்டன். அபத்தங்கள் திரைப்படங்களில் மட்டும்தான் உள்ளனவா- இணைய இதழ்களில் உள்ள கட்டுரைகள்,லட்சக்கணக்கில்/ஆயிரக்கணக்கில் விற்கும் பத்திரிகைகளில் வெளியாகும் கட்டுரைகள்,கதைகள்,நகைச்சுவைத் துணுக்குகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பலவற்றை உதாரணம் காட்டலாம்.திரைப்படங்கள் அரசுக்கு பல வழிகளில் வருவாய் ஈட்டித்தருகின்றன,அரசிடமிருந்து பெறும் வருவாய் அதோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு.அரசு தன் வருவாயிலிருந்து அறிவியல் ஆய்விற்கு நிதி ஒதுக்கத் தவறினால் அதற்கு திரைப்படத்துறை என்ன செய்ய முடியும்.திரைப்படங்கள் மூலம் திரட்டப்படும் வருவாயின் ஒரு பகுதியை அரசு அறிவியல் ஆய்விற்க்கு ஒதுக்கலாம், அறிவியல் நூல்கள் வெளியிட, அறிவியல் ஆர்வத்தினை வளர்க்கும் குறும்படங்கள் தயாரிக்க பயன்படுத்தலாம்.

ஜெயகாந்தன், அவரது படைப்புகள் குறித்து கோவை ஞானியின் கட்டுரை ஒன்று இணையத்தில் உள்ளது.

http://www.webulagam.com/literature/longstories/2000_11/29_story1.htm

இது தவிர ஜெயகாந்தன், அவரது படைப்புகள் குறித்து பல கட்டுரைகள்,பேட்டிகள் இணையத்தில் உள்ளன.

http://www.tamil.net/people/pksivakumar/

இவற்றையும் கவனத்தில் கொள்ளுமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்

இந்த வாரக் குறிப்புகளை அனுப்பியபின் சில செய்திகளைப் படித்தேன் – குளிர்பானங்களில் பூச்சிகொல்லி எச்சங்கள் குறித்தவை அவை.அடுத்த வாரக் குறிப்புகளில் தகவல்களை update செய்து எழுதுகிறேன் (அ) ஒரு கட்டுரை எழுதி அனுப்புகிறேன். harmonisation என்பதற்கு பொருத்தமான/ சரியான தமிழ்ச்சொல் என்ன என்பதையும் அறிய விரும்புகிறேன்.இது போல் கீழ்கண்டவற்றிற்கு பொருத்தமான தமிழ்ச்சொற்களையும்,புழக்கத்தில் உள்ளவற்றையும் அறிய விரும்புகிறேன்.

regulatory mechanism,oversight,risk,endocrine disrupting effect,immune system,tolerance level,

post normal,meta theory,transboundary,persistent organic pollutant(POP),

இது போன்ற பல சொற்களை தினமும் சந்திக்கும் போது தமிழில் ஒரு கலைச்சொல் அகராதி தேவை என்பதை உணர்கிறேன்.

risk என்பது danger என்பதிலிருந்து வேறுபட்ட பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.எனவே அதை ஆபத்து/அபாயம் என்று மொழிபெயர்ப்பது மிகப்பொருத்தமாக இராது. பெக் என்ற சமூகவியலாளர் risk society குறித்து விரிவாக எழுதியுள்ளார்.இது குறித்து தமிழில் எழுதப்பட்டுள்ளதா ?. Journal of Risk Research என்ற journal க்கு Transboundary Risk குறித்த ஒரு நூலின் மதிப்புரை எழுதினேன்.அப்போது நான் எதிர்கொண்ட பல கலைச்சொற்களுக்கு பொருத்தமான தமிழ்ச்சொற்கள் என்ன என யோசித்த போது இத்தகைய ஒரு அகராதி இருந்தால் அந்த நூலின் அடிப்படையில் ஒரு கட்டுரையை தமிழில் எழுதுவது எளிதாயிருக்கும் என்பதை உணர்ந்தேன்.

கலைச்சொற்கள் குறித்து நான் எழுதயுள்ள கட்டுரையில் இது பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்


நண்பர் இரா முருகன் எழுதிய ஒரு கருத்தைப்பற்றி என் அறிதல்கள் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் பாணியில் மரத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்களைக் கேரளத்தில் காணலாம் என்று அவரது ஒருவரியைப்பற்றி

விஷ்ணுபுரம் நாவலுக்காக சிற்பவியல் குறித்து ஆராய்ந்துகொண்டிருந்தபோது ஒரு சிற்பியிடம் ஓர் ஐயம் கேட்டேன். பெரும்பாலான சிற்பங்களில் மழுங்கலான ஆங்கில எஸ் [S] வடிவம் இருப்பதைப்பற்றி. அவர் சொன்னார் கற்சிற்பங்களின் மூலம் மரச்சிற்பங்களே என்று . மரத்தடியின் உருளைவடிவுக்குள் நிற்கும்படியே சிற்பங்களின் அடிப்படை லட்சணம் உருவாக்கப்பட்டுள்ளது. பற்பல கைகள் கொண்ட சிலைகளை பிற்பாடு செதுக்க ஆரம்பித்தபோது பலவகையான மாறுதல்கள் வந்தாலும் மரச்சிற்பங்களின் பல இயல்புகள் கற்சிற்பங்களில் தொடர்கின்றன என்று.

அது ஆச்சரயமாக இருந்தது . ஆனால் பிறகு பலகோவில்களில் மரக்கட்டிடங்களின் அமைப்புகள் அப்படியே கல்லிலும் பின்பற்றப்பட்ட்டிருப்பதைக் கண்டேன். உத்தரங்கள் , கழுக்கோல்கள், விளிம்பு வளைவுகள் போன்ற பல அமைப்புகள் நம் கோவில்களில் மரக்கட்டங்களில் இருப்பனபோலவே கல்லில் உருவாக்கப்பிருக்கின்றன. ஆமலகம் என்ற அமைப்பு முற்றிலும் மரத்தின் செதுக்குத் தன்மைகொண்டது. இதை பலர் கவனித்திருக்கலாம். தாராசுரம் [கும்பகோணம் அருகே] இதை அவதானிக்க மிகச்சிறந்த இடம். அங்கே மென்மையான வெண்கல்லிலும் மணல்கல்லிலும் கோவில் கட்டப்பட்டுள்ளது. எனவே மரத்தில் மட்டுமே சாத்தியமான எல்லா வேலைப்பாடுகளையும் மரம் என்று எண்ணும்படியாகவே கல்லில் உருவாக்கியிருக்கிறார்கள்.

இன்னொரு முக்கிய இடம் அஜந்தா. நமது சிற்பக்கலையும் கட்டிடக் கலையும் உருவாகி வந்த விதத்தை கிட்டத்தட்ட வரிசையாகவே அங்கே காணலாம். அஜந்தாகுகைக் கோவில்களில் தூண்களுக்கு அவசியமே இல்லை, அவை குடைவரை அமைப்புகள். ஆனால் மரத்தூண்கள்போலவே தூண்கள் உள்ளன. அதைவிட மேலே பார்த்தால் வளைவாக உத்தரங்களும் கழுக்கோல்களும் பட்டியல்களும் செதுக்கப்பட்டுள்ளன என்பது நம்மை வியப்பிலாழ்த்தும்!

அஜந்தா சிற்பங்களைக் காணும்போது கற்சிற்பங்களுக்கு முன்மாதிரியாக மண் சிற்பங்கள் இருந்திருக்குமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அமர்ந்த படுத்த புத்தர் சிலைகள் மண்ணில் சாதாரணமாக செய்யப்பட்ட காலம் இருந்திருக்கும். குஷிநகரில் உள்ள படுத்த வாக்கிலான புத்தரின் பரிநிர்வாண சிற்பம் புத்தரின் சிற்பங்களில் பழைமையான ஒன்று . அது ஒரு சுதைச்சிற்பம்தான்.

இன்னொரு முக்கியமான உதாரணம் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ளது . அது ஒரு பன்னிரண்டாம் நூற்றாண்டு சிற்பம், அதாவது கற்சிற்ப மரபு வேரூன்றியபிறகு உள்ளது . அது இப்பகுதியில் பிரபலமாக உள்ள சுடுமண் சிற்ப அமைப்பை அப்படியே கல்லில் கொண்டுவரப்பட்ட கள்ளியங்காட்டு நீலியின்[ நாட்டார் தெய்வம் ] சிற்பம் .

ஆக, கல்லில் உள்ளவை மரத்திலும் மண்ணிலும் உள்ளவற்றின் மேம்படுத்தப்பட்ட செம்மையான வடிவங்கள் . ஃபோக்கிலிருந்து கிளாசிக்குகள் போல உருவாகி வந்தவை. அழியக்கூடியனவற்றில் இருந்து அழியாதவை வந்தன . நாம் இன்று காணும் மிகச் செம்மையான கற்சிற்பங்கள் மிகப்பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவையே. கல்சிற்பங்களில் இருந்து மரச்சிற்பங்களும் மண்சிற்பங்களும் உருவாகவில்லை. செவ்வியலில் இருந்து நாட்டாரியல் பிறக்கமுடியாது. ஆனால் கம்பராமாயணத்தின் பாதிப்பு வில்லுப்பாட்டுகளில் இருப்பதுபோல பிற்கால மரச்சிற்பங்களில் கல்சிற்பங்களில் சில இயல்புகள் கலந்திருக்கலாம் என்பதையும் மறுக்கவில்லை.

இக்கருத்தை ஏழெட்டு சிற்பிகளிடமிருந்தாவது கேட்டிருப்பேன். கலைக் கல்வி முடித்தவர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும்

ஜெயமோகன்


அரவிந்தநின் விமரிசனங்கள் அளிக்கும் சோர்வு சாதாரணமாக இல்லை. தமிழில் இன்றுவரை விமரிசனம் எழுதவந்தவர்கள் அதற்கான விரிவான பின்னணி படிப்புடன்தான் வந்திருக்கிறார்கள். இவருக்கு தன் அறியாமைசார்ந்தே ஒரு பெருமிதம் இருக்கிறது! என்ன சொல்ல! ஜெயகாந்தன் தன் விமரிசனத்துக்கே தகுதியற்ரவர் என்று தூக்கிபோடுகிறார் . ஆனால் தமிழிலும் சரி இந்திய சூழலிலும் சரி ஜெயகாந்தனின் இடம்பற்றி ஒரு மதிப்பீட்டை உருவாக்குமளவுக்கு இவருக்கு ஒன்றும் தெரியாது. அப்படி தெரியாமல் தன் அனுபவம் சார்ந்து கருத்து சொல்லலாமா என்றால் சொல்லலாம். ஆனால் அப்போது அதற்குரிய அடக்கம் தேவை. எனக்கு பிடிக்கவில்லை , புரியவில்லை என்பதுடன் நின்றுவிடவேண்டும். தமிழ்ல் க.நா.சுப்ரமணியம் , வெப்fகட் சாமிநாதன் ஆகியோர் முன்வைத்த பல விமரிசன கருத்துக்களை தர்க்கபூர்வமாக தகர்த்தவர் எம் வேதசகாயகுமார். உதாரணமாக கு.ப. ராஜகோபாலனை புதுமைப்பித்தனைவிட மேலேதூக்கி வைத்த க.நா.சுப்ர,மணியத்தின் கருத்தை அவர் தன் தமிழ் சிறுகதைவரலாற்றில் மறுத்தமை . சென்ற காலங்களில் மெளனி , தி.ஜானகிராமன் பற்றிய விவாதங்களில் ஆக்கபூர்வமான பங்கை ஆற்றியவர். தன்முன்னோடி விமரிசகனை படிக்கவேயில்லை, படிக்கும் பழக்கமும் இல்லை என்ற ‘தெளிவை ‘ முன்வைக்கிறார் இந்தவிமரிசகன். படிப்பின்பலத்தால்தான் விமரிச்கன் உருவாகிறான். தனிப்பட்டதொடர்புகளின் பலத்திலே அல்ல. பத்விகளினாலும் அல்ல. படிப்பின்மையை ஒரு தகுதியாக எண்ணக்கூடிய விமரிசகர்களின் ஒரு தலைமுறை உருவானால் அதற்கு இவரே முன்னோடி ஆவார்.

சூரியா

சென்னை


கரிச்சான் குஞ்சுவின் கதையும் கதையை ஒட்டிய பாவண்ணன் வாழ்க்கையில் சந்தித்த நண்பரும் கொண்டுவரும் பிரச்னையை அழகாகச் சொல்லியிருக்கும் பாவண்ணன் பாராட்டுக்குரியவர். வாழ்வில் வெற்றி தோல்வி என்பது வெறும் சீட்டாட்டத்தில் கிடைக்கும் சீட்டு போன்றது என்பது கேள்விக்குறியது. ஆனால் நண்பரின் வாழ்விலோ அது தார்மீகக் கேள்வியாக இருக்கிறது. கரிச்சான் குஞ்சு எழுதிய கதையில் தார்மீக கேள்வி இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் நண்பரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வு சரியா தவறா என்ற கேள்வியோடு இணைந்தது.

பெண்ணிய நிலைபாடு பற்றிய இருதலை நிலைமை பற்றிய சிந்தனையை குட்டிரேவதி பற்றிய கட்டுரை என்னுள் எழுப்பிவிட்டது. முதலாவது பெண்ணிய நிலைபாடு பெண்ணின் உடலுறுப்பு பற்றிய குறிப்புகளை ஆணாதிக்க நிலைப்பாடாக பார்க்கிறது. இரண்டாவது பெண்ணிய நிலைப்பாடு அதனை உரத்து கூற முன்வந்து அதிர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொள்கிறது. இரண்டிலும் பெண் கலகக்காரியாக ஆகிறாள்.

நரேஷ்


Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கடிதங்கள்

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

ஆகஸ்ட் 21, 2003



21.08.03

அன்புள்ள ஆசிரியருக்கு,

முத்துராஜா எனது கடிதங்களில் உள்ள ‘முரண் ‘ களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜெயகாந்தன் பற்றிப் பிறர் கூறியுள்ள கருத்துக்களை மேற்கோள் காட்டுவதைத் தவிர்த்துவிட்டேன் என்று கூறியதன் பின்னணி வேறு; எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகளைச் சுட்டிக்காட்டியதன் பின்னணி வேறு. முதல் வாக்கியம் ஜெயகாந்தன் குறித்த என் கட்டுரை பற்றியது. என் விமர்சனக் கட்டுரையில் யாரையும் துணைக்கழைக்க நான் விரும்பவில்லை என்று சொன்னேன். இரண்டாவது வாக்கியம் என் கட்டுரை மீதான சிவகுமாரின் எதிர்வினைக்கு நான் எழுதிய பதிலில் இடம் பெற்றது. சிவகுமார், என் கருத்துக்ளை விமர்சித்து எதிர்வினையாற்றியிருந்தார். அவருக்கு பதில் எழுதும்போது எனக்கு வந்த சில எதிர்வினைகளை நான் சுட்டிக்காட்டினேன். கட்டுரை என்பது வேறு; எதிர்வினை என்பது வேறு; எதிர்வினைக்கான எதிர்வினை என்பது முற்றிலும் வேறு. என் விமர்சனத்திற்குள் பிறரது கருத்துக்களைத் துணைக்கழைக்க விரும்பாததற்கும் எதிர்வினை மீதான விவாதத்தில் வேறு சில எதிர்வினைகளைப் பதிவுசெய்வதும் இயல்பானவை; பரஸ்பர முரண் அற்றவை.

எனக்கு வந்த எதிர்வினைகளை ஆதாரமாகக்கொண்டு என் வாதத்தை நான் கட்டமைக்கவில்லை என்பதால் அவற்றை ‘ஆதாரபூர்வமாக ‘ முன்வைக்காமல் கோடிகாட்டிவிட்டுச் சென்றேன். திண்ணை ஆசிரியர் கோரினால் யார், எப்போது, என்ன சொன்னார் என்பது போன்ற தகவல்களைத் துல்லியமாகவும் விவரமாகவும் தர இயலும்.

நரேஷுக்கு ஒரு வார்த்தை: நேற்று சு.ராவைப் பாராட்டிவிட்டு இன்று விமர்சிக்கிறாயே என்ற ரீதியில் ஜெயமோகனை நான் கேட்கவில்லை. உறவில் நெருக்கமும் விலசலும் சகஷம் என்றும் அதற்காகப் பதற்றமடையாமல் நெருக்கம்/விலகல் சார்ந்த காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும்தான் நான் கூறினேன். நரேஷ் என் கடிதத்தை இன்னொரு முறை படித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

– அரவிந்தன்


வரதட்சிணையையும் உரிமைச்சொத்தையும் வித்தியாசம் காட்டி திரு ஜெயபாரதன் சொல்லியிருக்கிறார். எனது கேள்வி, வரதட்சிணைக்கும் உரிமைச்சொத்துக்கும் இன்று சட்டப்படி வித்தியாசம் இருக்கிறதா ? திருமணத்தின் போது கொடுக்கும் ஒரு குந்துமணி தங்கத்தைக்கூட வைத்துக்கொண்டு பெண் வீட்டார் போலீசுக்குப் போய், வரதட்சிணை கேட்கிறார் என்று புகார் செய்யமுடியும். அப்படி ஒரு திகிலோடு ஏன் மாப்பிள்ளை வீட்டார் திருமணம் செய்யவேண்டும் ? முன்பே பேசிவைத்திருப்பதால்தானே ? அதனை சட்டப்படி ஆக்குங்கள் என்கிறேன். என்ன தவறு ?

வரதட்சிணை பிரச்னையில் பெண் வீட்டாரின் பிரச்னையும் இருக்கிறது என்று எழுதினால் உடனே நான் மாப்பிள்ளை வீட்டுக்காரனாக ஆகிவிடுவேனா ? அல்லது பெண் குழந்தைகள் இல்லாத அரக்கப் பரம்பரை ஆகிவிடுவேனா ? என்ன பேச்சு இது ?

ஆணுக்கு முதல் தேவை பெண்ணன்று. பெண்ணின் சொத்து என்று சொன்னால் என்ன பொருள் ? எல்லா ஆண்களுக்கும் இது பொருந்துமா ?

இவ்வாறு வரதட்சிணையை சட்டப்பூர்வமாக ஆக்கினால் பெண்களுக்கு திருமணமே ஆகாது என்று கூறுகிறார் ஜெயபாரதன். எனக்கு இன்னொரு சகோதரியிடமிருந்து வந்த கடிதம் கூட இதையே கூறியது. கற்பனை செய்து பாருங்கள். தமிழ்நாட்டின் 90 சதவீத ஆண்கள், மனைவியே வேண்டாம் என்று இருந்துவிடுவார்களா ? நான் பிறந்த வீட்டுக்கு ஓடிவிடுவேன் என்று பயமுறுத்தி பிறந்த வீட்டுக்குப் பணம் கறக்கும் பெண்களைக் கூட எனக்குத் தெரியும். இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு ஆண்களின் தேவையை விட, ஆண்களுக்குப் பெண்களின் தேவை அதிகம். ஆகவே அப்படியெல்லாம் பெண்கள் திருமணம் ஆகாமல் நிற்கமாட்டார்கள். அஞ்சத்தேவையில்லை.

நிரந்தர பிற்போக்குவாதி, சமூக அஞ்ஞானி

– சின்னக்கருப்பன்.


Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கடிதங்கள்

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

ஆகஸ்ட் 15, 2003


**

அனைவருக்கும் சுதந்திரநாள் வாழ்த்துக்கள்

திண்ணைக்குழு

***

ஆசிரியருக்கு,

ராஜபாண்டியன் கடிதம். ஆக்ஸ்ட் 08 குறித்து

1,ஜெயமோகன் தவிர எல்லோருமே பொத்தாம் பொதுவாகத்தான் கி.ராவின் படைப்புகள் பற்றி எழுதியிருக்கிறார்களா ? கட்டுரையில் பிரேம் என்பவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதே, அவர் என்னதான் எழுதியுள்ளார் என்பது கடிதம் எழுதியவருக்குத் தெரியுமா ?இல்லை அவரும் இந்த பொத்தாம் பொது விமர்சகர் பட்டியலில் இடம் பெறுகிறாரா ?

2,ராஜபாண்டியன் ஆசிரியரா/மாணவரா,எந்தக் கல்லூரி.

3,நான் மார்க்சிய அழகியல் குறித்து ஜெயமோகன் எழுதியிருந்ததை கேள்விக்குட்படுத்தியிருந்தேன்.அதைப் புரிந்துகொள்ளாமல் வேறு எதையோ அவர் எழுதியுள்ளார்.

4,கட்டுரையில் கூறப்பட்டிருந்த பிற கருத்துகள் அனைத்தும் உங்களுக்கு புரிந்துவிட்டதா ? உங்கள் கல்லூரியில் அதைப்படித்த அனைவரும் அக்கட்டுரையினை முழுமையாகப் புரிந்து கொண்டார்களா ? இவை நான் அவருக்கு விடுக்கும் கேள்விகள்.

5,நான் திண்ணையில் ஜெயமோகனின் ஒரு சில கட்டுரைகளைத்தான் விமர்சித்துள்ளேன்.அனைத்தையும் விமர்சிக்க எனக்கு நேரமில்லை. நான் எழுதியுள்ள சில கட்டுரைகளே போதும் ஜெயமோகன் எழுத்தில் உள்ள அபத்தங்களை காட்ட.மற்றப்படி அவரை விமர்சித்து எனக்கு எதையும் நிறுவத் தேவையில்லை.திண்ணையில் நான் வேறு கட்டுரைகளும் எழுதியுள்ளேன்.

6,இனக்குழு – ஜெயமோகன் எழுதிய கட்டுரை குறித்து எழுதும் கட்டுரையில் விரிவாகக் குறிப்பிடுவதால் இங்கு பதில் தருவதை தவிர்க்கிறேன்.

7. தமிழ் விமர்சனங்களில் தெளிவாகப் புரியும்படி அசலான சிந்தனைகளுடன் எழுதப்படும் விமர்சனம் ஜெயமோகனுடையது. இது ஒரு நல்ல நகைச்சுவை. ஏனெனில் என் கட்டுரையில் ஜெயமோகன் கி.ரா பற்றி இரண்டு கட்டுரைகளில் எழுதியிருந்தலில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டியிருந்தேன்.

8, ராஜபாண்டியன் -இது இயற்பெயரா ? நீங்கள் திண்ணையில் இதற்கு முன் வேறொரு பெயரில் எழுதியுள்ளீர்களா ? அப்படியாயின் எந்தப் பெயரில் ?

K.ரவி ஸ்ரீநிவாஸ்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

நண்பர் பாலா என்பவர் தனது வரதட்சணைப் பதில் கடிதத்தில், பொருளாதார முன்னேற்றம் மக்களின் வாழ்க்கை முறையில், எண்ணங்களில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதை வளர்ச்சி அடைந்த ஒரு நாட்டில் வசிக்கும் என்னைப் போன்றவர் அறியாதிருப்பது வியப்பளிக்கிறது என்று எள்ளி நகையாடி யிருக்கிறார்!

பொறியியல் பட்டப் படிப்புக்குப் பிறகு 22 ஆண்டுகள் பாரதத்திலும், 23 ஆண்டுகள் கனடா நாட்டிலும் அமெரிக்கர், கனேடியர், ஆங்கிலேயர், ஐரோப்பியர், சைனாக்காரர், ஜப்பானியர், இங்கு வசிக்கும் இந்தியர் ஆகியோருடன் ஆழ்ந்த நட்புடன் பழகி யிருக்கிறேன். இந்தியாவில் வட நாட்டில் 18 ஆண்டுகள் மகாராஷ்டிரர், வங்காளி, குஜராத்தி, பஞ்சாபி, ராஜஸ்தானி, உத்தர் பிரதேச இந்துக்கள், மலையாளம், தெலுங்கு, கன்னடம், தெலுங்கு, துளு பேசும் பலரோடு நன்கு பழகி யிருக்கிறேன். எனது இரண்டு புதல்வியரும், கனடிய நாட்டு வெள்ளையர்களைத் திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். இது என் உலக அனுபவம்.

வெறும் பொருளாதாரம் மட்டும் பெரும் மாற்றங்களை மக்களிடையே கொண்டுவரும் என்று பாலா கனவு காண்கிறார்! கீழ் நாடுகள் யாவும் ஆன்மீக உணர்வில் [Spiritualism] எழுந்தவை! மேலை நாடுகள் எல்லாம் செல்வீகத் துறையில் [Materialism] உதயமானவை! சிறு வயதிலிருந்தே இங்குள்ள ஆணும் பெண்ணும் பொறி நுணுக்கத்தில் கைதேர்ந்தவராக இருக்கிறார்கள். சிறு வயது முதல் இங்குள்ள ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகுகிறார்கள். அப்படிப் பழகுவதை அவரது பெற்றோரும் விரும்புகிறார்!

தமிழ் நாட்டில் நமது மனைவியர், புதல்விகள், சகோதரிகள் அன்னிய ஆண்களுக்கு அருகில் அமர்வது கூடக் கிடையாது! ஒரு காலத்தில் நம் ஊர்களில் ஆடவர் பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைத்தார்கள்! இப்போது நமது பெண்டிரது வாய்களைக் கணவர், பெற்றோர் தைத்து வைத்திருக்கிறார்கள்! பாரதம் விடுதலை அடைந்தாலும், நாம் பெண்ணினத்தை இன்னும் இரண்டாம்தர வகுப்பினாராகத்தான் பின்னால் தள்ளி வைத்திருக்கிறோம்! நம் வீட்டில் பெண்டிருக்குப் பேச்சுச் சுதந்திரம் கிடையாது என்பதை நாம் யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்!

கனடாவில் பதினெட்டு வயதுக்குள் வாழும் ஆண் பெண் இருவருக்கும் உள்ள சுதந்திரம், பாரத நாட்டில் வாழும் பெரும்பான்மையான ஆண் பெண் இருவருக்கும் அறவே கிடையாது! திருமணமாகாத ஆண் பெண் இருவரும் பெற்றோருக்கு அடி பணியும் பிறவிகளாகத்தான் பாரதத்தில் வாழ்ந்து வருகிறார்கள்! மேலை நாடுகளில் உதாரணமாக பதினாறு வயதில் பள்ளியில் படிக்கும் ஆண் பெண் இருவர் உடலுறவு நேர்ந்து பெண் கர்ப்பவதியாகி விட்டால், கருச்சிதைவு செய்து பெண் வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறாள்! அல்லது சிசு பிறந்ததும், அதைத் தத்தெடுக்க அளித்து விட்டுப் பெண் வீட்டில் சேர்க்கப் படுகிறாள்! பிறகு அவளைத் திருமணம் செய்து கொள்ள, ஓர் ஆண் முன்வரவும் செய்கிறான்!

தமிழ் நாட்டில் பதினாறு வயதுப் பள்ளிப்பெண் கருத்தரித்தால் என்ன நேரும் என்று நான் சொல்ல வேண்டிய தில்லை. மேலை நாடுகளில் விதவைகளுக்கு மறுமணம் பிரச்சனை யில்லாமல் நடக்கிறது. நமது இந்திய நாகரீகத்தில் விதவைகள் மறுமணம் எத்தனை இதுவரை நடந்துள்ளன ? ஆங்கிலேயர் வந்த பின்பு நமது நாகரீகம் சிறிது உயர்ந்தாலும், நாமின்னும் பல வினைகளில் அநாகரீகமாகவே வாழ்ந்து வருகிறோம்.

பைநிறையப் பவுன் நாணயங்கள் குலுங்கினால் ஆண், பெண் இருவரிடமும் மாற்றங்கள் தானாக விளைந்து விடும் என்று மனப்பால் குடிப்பது அறிவீனம்! மாற்றங்களுக்குப் பொருளாதாரம் மட்டும் ஒருபோதும் போதாது. அத்துடன் கலாச்சார மலர்ச்சி, நாகரீகப் பண்பு, ஆண்-பெண் சம உணர்வு, செல்வீகத் துணிச்சல் ஆகியவை யாவும் இணையாக அத்துடன் சேர வேண்டும்!

ஆன்மீக உணர்வு முதிர்ந்த இந்தியரிடம் பொருளாதாரம் செழித்தாலும், நமது நாகரீகமும், கலாச்சாரமும் மாறிச் செல்வீக உணர்வு மிக்க ஈரோப்பியராகவோ, அமெரிக்கராகவோ ஆக ஐம்பது அல்லது நூறாண்டுகள் கூட ஆகலாம்! மேலை நாட்டு நாகரீகம், கலாச்சாரம் போல, இந்தியர் முன்னேற்றம் அடைய முடியாமலும் போகலாம்!

சி. ஜெயபாரதன், கனடா.


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

சென்ற வாரம் டாக்டர் இரா. விஜயராகவன் இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மியைப் பற்றி எழுதிய அறிவியல் கட்டுரையில் சில பிழைகள் இருப்பதைத் திண்ணை வாசகர் அறிய வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தை அனுப்புகிறேன்.

1. ‘இயற்பியலில் தொடர்வினைகளைப் [Chain Reactions] பற்றிக் கண்டுபிடித்ததால் அவர் [என்ரிகோ ஃபெர்மி] இவ்வாறு [இயற்பியலின் தந்தை] போற்றப் படுகிறார் ‘.

இது தவறு. என்ரிகோ ஃபெர்மி ‘முதல் அணுக்கருத் தொடரியக்கப் ‘ [Nuclear Chain Reaction] படைப்பாளி! தொடரியக்கம் ஒரு சோதனைப் படைப்பு [Experimental Invention]. அதை ஒரு கண்டுபிடிப்பு [Discovery] என்று கூறுவது தவறு! அவர் தொடரியக்கத்தைப் படைத்ததற்கு முன், அது எங்கும் ஒளிந்து கொண்டு, கண்டுபிடிப்போர் வருவாரென்று காத்திருக்க வில்லை!

2. ‘1933 ஆம் ஆண்டு நியூட்ரினோ [Neutrino] என்னும் அடிப்படைத் துகள் [Fundamental Particle] ஒன்று இவரால் கண்டுபிடிக்கப் பட்டது ‘. இது தவறு.

1930 ஆம் ஆண்டில் மின்னியல் அற்ற அத்துகளை [Neutral Particle] முதலில் கண்டு பிடித்தவர் உல்ஃப்காங் பாலி [Wolfgang Pauli]. அதற்கு 1933 இல் நியூட்ரினோ என்று பெயரிட்டவர்தான் என்ரிகோ ஃபெர்மி.

3. ‘ஒரு தனிமம் [Element] குறை வேக நியூட்ரான் மூலம் வெடிப்புக்கு [Bombardment] உட்பட்டால், அது கதிரிக்கம் [Radioactivity] உடையதாக மாறுவதோடு, கதிர்வீச்சு [Radiation] உமிழவும் செய்கிறது ‘.

– ‘நியூட்ரான் வெடிப்பினால் ஃபெர்மி சுமார் 80 புதிய செயற்கை அணுக்கருக்களை உருவாக்கினார் ‘.

– ‘நியூட்ரான்களை வெடிப்புறச் செய்து யுரேனியம் அணுக்கருக்களைப் பிளப்பதில் அவர் வெற்றி கண்டார் ‘.

இது தவறாக விளக்கும் அணுக்கருப் பெளதிகம் [Nuclear Physics]. நியூட்ரான்கள் வெடிப்பதில்லை! ‘Bombardment ‘ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு அர்த்தம் ‘வெடிப்பு ‘ என்று எழுதுவது தவறு. அதற்குச் சரியான தமிழ் ‘தாக்குதல் ‘ அல்லது ‘மோதல் ‘. மித வேக நியூட்ரான்கள் [Slow Neutrons] யுரேனிய அணுக்கருவைத் ‘தாக்கும் ‘ போது, அணுப்பிளவு நிகழ்கிறது. அதுபோல் மித வேக நியூட்ரான்கள் ஒரு மூலகத்தைத் ‘தாக்கும் ‘ போது, அது கதிர்வீச ஆரம்பிக்கிறது. நியூட்ரான்களைக் கொண்டு பல மூலகங்களைத் ‘தாக்கி ‘, 80 புதிய செயற்கைக் கதிர் ஏகமூலங்களை [Artificial Radioisotopes] உண்டாக்கினார்.

4. குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட்டு ஏராளமான பணத்தை ஒதுக்கி அணுகுண்டு தயாரிப்பில் உடனே ஈடுபடுமாறு ஃபெர்மியையும் அவரது அறிவியல் குழுவையும் கேட்டுக் கொண்டார்.

இது முற்றிலும் பிழையானது. அணுகுண்டு தயாரிக்க ஃபெர்மியை, ரூஸ்வெல்ட்டு ஆணையிட்டதாக வரலாறு இல்லை! அவரது ஆக்கமான முதல் அணுக்கருத் தொடரியக்கம், அணுகுண்டு தயாரிக்க வழி வகுத்தது! அவரை முதலில் ‘கட்டுப்படும் தொடரியக்கம் ‘ ஆக்கும்படி ஆணையிட்டவர், அணுகுண்டின் பிதா எனப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer]. இராணுவ தளபதி லெஸ்லி குரூஸுக்கு [Leslie Grooves] அணு ஆயுதம் ஆக்க ஆணையிட்டவர், ரூஸ்வெல்ட்டு! ஃபெர்மியை ரூஸ்வெல்ட் ஆணை யிடவில்லை! வெறும் ‘அறிவியல் குழு ‘ மட்டும் அணுகுண்டைத் தயாரிக்க வில்லை! ஃபெர்மி ஒரு பெளதிக விஞ்ஞானி மட்டுமே. ஃபெர்மியைத் தவிர நூற்றுக் கணக்கான நுணுக்கத் துறைவாளர் பலர் பங்கெடுத்து உருவானவை, முதல் அணுகுண்டுகள்!

கதிரிக்க மூலகங்கள் [Radioactive Elements] யாவும் கதிர்வீச்சை [Radiation] உமிழும்!

சி. ஜெயபாரதன், கனடா

*************


The article by jeyamokan on jeyakanthan is a detailed study with deep insight and power of language. It shows JK in new light and gives him his place in Indian Literary scenario.

But I am writing to inform another important matter. I don ‘t know whether this is my limitation of knowledge. I tried to take printout of this article and wasted lot of paper because of your layout .One of my friend told me over phone to paste it on MSWORD and take printout .But I have no fonts. And when I select the whole page the image on the MS WORD pad is only a dark shade with some blue lines. I could not select the text only .Finally I asked one of my friends to give me a print out. I wish you to take care about this.

pattabi, chennai


Dear Pattapiraaman,

I will try to put an explicit warning in thinnai page.

DO NOT PRINT THE THINNAI PAGES.

1) THE PAGES ARE NOT FORMATTED FOR PRINTING.

2) THINNAI DOES NOT SUPPORT CUTTING TREES.

Thanks and regards

Ram (Web Master)


To the editor

The jeyakanthan article is interesting and useful.

I want to mention one thing The word Inakuzhu is now used for referring big castes with ethnic identity by academics . now literary critics are also using it My teacher Na.Dharmarajan while translating Russian books originally coins the word Ina varaiviyal is also coined by him

S.sivakumar

Cochin Port Trust


ஆசிரியர் அவர்களுக்கு,

ஜெயகாந்தன் மீதான ஜெயமோகன் திறனாய்வு காலத்தால் தேவை மிக்கது என்பதில் ஐயமில்லை. பரவலாக உருவாக்கப்ப்ட்ட்தும் பிழைபட்டதுமான பொதுக்கருத்தினை முறியடித்து மாற்றுக்கூறுகளை சுட்டவும் முழுமைச்சூழலின் அடிப்படையில் நின்று ஜெயகாந்தனின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டவும் அவரால் இயன்றுள்ளது. இந்த கட்டுரை பலருக்கும் ஒரு விழ்ிதிறப்பாக அமையுமென்று எண்ணுகின்றேன். அக்கினிப்பிரவெசம் கதைகுறித்த திறனாய்வினை மிக்க வியப்புடன் கவ்னித்தேன். திறனாய்வாளன் எப்ப்டி இருக்கவெண்டும் , அவனது பெரும்பொறுப்ப் என்ன என்பதை சுட்டும் கட்டுரை இது என்று துணிந்து சொல்லலாம். ஜெயமொகன் சொல்ல் தயங்குகின்ற ஒன்றினையும் ஈங்கு சுட்டிய்ய ஆகவெண்டும். சுவைக்குன்றல் நிகழினும்கூட . தமிழில் திறனாய்வாளர்கள் என சிற்றிதழ்மட்டத்தில் புகபெற்ற அனைவருமே பரமணர்களே . [பிராமணர்கள்] இவர்கள் அவர்களை சேர்ந்த எழுத்தாளர்களுக்கு ஆழ்ந்த கவனத்தை வாசகர் மட்டத்தில் உருவாக்கி அளித்தார்கள். ஆகவே அவர்கள் ஆக்கங்களின் நுட்பங்கள் வெளிவந்தன . அவர்கள் நன்கு அறியப்பட இது வழிவகை செய்தது . ஆனால் ப.சிங்காரம், ஜெயகாந்தன், விந்தன் போனற பல படைப்பாளிகள் புறக்கணிக்கப் பட்டனர். எம்.வேத சகாயகுமார் புதுமைப்பித்தனை தூக்கும்பொது ‘கட்டளைக்கு ஏற்ப ‘ ஜெயகாந்தனை கீழிறக்கியது வருந்ததக்கதே . இப்பிழைக்ல் ந்ாளாடைவில் இங்கே களையப்படுமென எண்ணுகிறென். காலம் எவ்ர் பக்கமும் ந்ின்றுவிடுவதில்லை

சண்முகம் shanmukam1951


அன்புள்ள ஆசிரியருக்கு,

சமிப காலமாக நான் தின்னையில் இலைப்பாருகிறேன்.

தின்னயை வாராவாரம் பராமரிக்கும் தங்கள் தமிழ் பனி செவ்வனெ தொடர

யமது வாழ்த்துக்கள்.

நன்றி, வணக்கம்.

அமுதன், கலிபோர்னியா.


அரவிந்தன் எழுதியவை:

அ.) ‘ஜெயகாந்தன் பற்றிப் பிறர் கூறியுள்ள எதிர்மறையான கருத்துக்களை மேற்கோள் காட்டுவதை நான் தவிர்த்துவிட்டேன். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு அவரை மறுவாசிப்பு செய்யும் எனக்கு அவர் எப்படிப்படுகிறார் என்பதை பதிவுசெய்ய விரும்பினேன். அவரைப் பற்றி எனக்குள் உருவான எனது எதிர்மறையான முடிவுகளை முன்வைக்கையில் யாரையும் துணைக்கழைக்கவோ யார் நிழலிலும் ஒன்டிக்கொள்ளவோ நான் விரும்பவில்லை. என் விமர்சனக் கருத்துகளுக்கான முழுப் பொறுப்பையும் அதன் விளைவுகளையும் ஏற்க நான் தயாராகவே இருக்கிறேன். எனவே ஜெயமோகன் உள்பட யாரையும் மேற்கோள் காட்ட நான் விரும்பவில்லை. ‘

ஆ.) ‘இது தவிர காலச்சுவடுக்கும் ஜெ.கா. அபிமானிகள் பலரிடமிருந்து கடிதங்கள். இதற்கு மறுபுறம் பனிரெண்டாம் வகுப்பைத் தாண்டி வந்தவர்கள் – மன்னிக்கவும், ஜெயகாந்தனைத் தாண்டி வந்தவர்கள் – பலரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்புக்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இவர்களில் 99 விழுக்காட்டினர் சமகால தீவிர இலக்கியப் பரப்பில் முக்கியமான எழுத்தாளர்களாகக் கருதப்படுபவர்கள். இவர்கள் என் கட்டுரையை வெகுவாகப் பாராட்டினார்கள். ஆனால் இவர்கள் இதையொட்டி கடிதமோ கட்டுரையோ எழுதவில்லை. இவர்களைப் பொறுததவரை ஜெயகாந்தனின் படைப்பு என்பது – தீவிர இலக்கிய அரங்கில் – ஒரு செத்த பாம்பு. ஜெயகாந்தனை ஏன் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறீர்கள் என்றுகூட சமகால படைப்பாளி ஒருவர் கேட்டார். ‘

1.) அ)க்கும் ஆ)க்கும் எவ்வளவு முரண்பாடு. யாரையும் துணைக்கழைக்கவோ யார் நிழலிலும் ஒண்டிக்கொள்ளவோ விரும்பாதவர் பலரிடமிருந்து வந்தவண்ணம் இருக்கும் தொலைபேசி அழைப்புகளையும் தீவிர இலக்கியப் பரப்பில் முக்கியமான எழுத்தாளர்களாகக் கருதப்படுபவர்களையும் மேற்கோள் காட்ட விரும்புகிற விசித்திரம்.

2.) சில காலம் முன்பு திண்ணையில் ஒருவரைப் பற்றி இன்னொருவர் இப்படிச் சொன்னார் என்று மூன்றாமவர் எழுதியது பிரசுரிக்கப்பட்டது. அடுத்த வாரமே, எழுத்தில் சொல்லப்படுவதே கணக்கில் கொள்ளப்பட வேண்டியது வாய்வழி வார்த்தைகளை நம்பி எழுதுவதை பிரசுரித்த தவறு தெரியாமல் நிகழ்ந்துவிட்டது என்ற ரீதியில் திண்ணை விளக்கம் சொன்னது. தொலைபேசி அழைப்பில் சொன்னதை ஆனால் சொன்னவர்கள் எழுத்து வடிவில் தராத தனிப்பட்ட உரையாடலை அரவிந்தன் எழுதியிருக்கிறார். திண்ணை அதைப் பிரசுரித்திருக்கிறது. திண்ணை தன் நிலையை மாற்றிக் கொண்டதா இல்லை இதுவும் தெரியாமல் நிகழ்ந்துவிட்ட தவறா. திண்ணை விளக்க வேண்டும்.

– முத்துராஜா


அன்புள்ள ஆசிரியருக்கு,

ஜெயமோகனிடம், நேற்று அப்படி சுந்தர ராமசாமியை பாராட்டிவிட்டு இன்று விமர்சிக்கிறாயே என்று கேட்கும் அரவிந்தன், ஜெயகாந்தனை பாராட்டுபவர்கள் ‘பனிரண்டாம் வகுப்பை ‘ தாண்டாதவர்கள் என்று கூறுகிறார். முரண்பாடு அவருக்கே தெரிந்தால் சரிதான்

நரேஷ்


அன்புள்ள ஆசிரியருக்கு,

அரவிந்தன் நீலகண்டனின் ‘சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2 ‘ கட்டுரையின் இறுதி இரண்டு பத்திகளுக்கான எதிர்வினையும் சில யோசனைகளும்.

அரவிந்தன் நீலகண்டன் கட்டுரைகளை யாரேனும் தமிழில் மொழிபெயர்த்து எழுதினால் சற்றே புரிந்துகொள்ள ஏதுவாயிருக்கும். ஒருவேளை, மொழிப் பன்மையக் காக்கும் தொண்டர்களின் தமிழ் இப்படித்தான் இருக்குமோ என்னவோ! மணிப்பிரவாள நடையை உருவாக்கித் தமிழ்த் தொண்டாற்றியவர்களின் வாரிசான அரவிந்தன் நீலகண்டனுக்கு ஆயிரங்கோடி நன்றி.

இந்து, இந்தி என தமிழ்முறைப்படி எழுதாமல் ஹிந்து, ஹிந்தி என்று எழுவதற்கும் மொழிப்பன்மையக் காக்கும் இதே தொண்டுள்ளம்தான் காரணமோ ? அல்லது இந்தி தமிழர்களின் மொழி அல்ல என்பதுபோல் தமிழர்கள் இந்துக்களும் அல்லர் என்று உறுதிப்படுத்துவது காரணமோ ?

வரலாற்றைத் திரிப்பவர்கள் என்று அடுத்தவர்களைக் குற்றம் சொல்லும் இவருடைய திரிபுகளையும் பொய்களையும் கொஞ்சம் பார்ப்போம்.

{அ.நீ: சமஸ்கிருதம் நம் தேசம் முழுவதும் ஒரு பாரத ஒருமை மொழியாக விளங்கிய போதிலும் அதன் விளைவாக எந்த மொழியும் அழியவில்லை.}

பழங்காலத்தில் பாரத தேசம் என்ற ஒரு தேசம் எங்கிருந்தது ? அதன் எல்லைகள் எவை ? மைய அரசு எங்கிருந்தது ? மக்கள் அனைவரும் அதை ஏற்றுக் கொண்டார்களா ? இந்தப்பாரத தேசம் இருந்ததற்கான சான்றுகள் எவற்றையேனும் தமிழிலக்கியத்திலிருந்தோ கல்வெட்டுகளிலிருந்தோ காட்டவியலுமா ?

இந்தியாவை இயக்கிக் கொண்டிருக்கும் நாடாளுமன்றம், நீதித்துறை, காவல் போன்ற அமைப்புகளைப் போலவே இந்தியா என்ற நாடும் ஆங்கிலேயர்களால்தான் உருவாக்கப்பட்டது. தமிழ் பேசும் நிலப்பரப்பை வரையறுத்த தமிழர்கள் கூட இந்தத் தமிழ் நிலப்பரப்பு முழுவம் ஒரு நாட்டுக்குரிய என்று கருதியதில்லை. தமிழகம் எத்தனையோ நாடுகளாகப் பிளவுண்டிருந்தது. தமிழகத்தையே ஒரு நாடாகக் கருதியிருக்காத தமிழர்கள் பாரத தேசம் என்ற ஒரு நாட்டைப் பற்றி எண்ணியிருப்பார்கள் என்று எவ்வாறு கூற இயலும் ? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு நீண்ட வரலாற்றை உடைய தமிழுக்கென்று ஒரு அரசியல் அமைப்பு உருவானதே மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்டபோதுதான்.

பழங்காலத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அப்படிக் கல்வியறிவு பெற்றவர்கள் அனைவருமே வடமொழி கற்றிருந்தார்கள் என்றும் கூற முடியாது. எனவே வடமொழி கற்பனையான ஒரு பாரத நாட்டின் ஒருமை மொழியாக எவ்வாறு இருந்திருக்கக் கூடும் ? (ஒரு பேச்சுக்காக வட மொழி இந்தியத் துணைக்கண்டத்திலிருந்த அனைத்து நாடுகளிலும் பரவியிருந்ததாக வைத்துக் கொண்டாலும்கூட அதனால் இந்த நாடுகள் அனைத்தும் பாரத நாட்டின் பகுதிகள் என்றாகிவிடுமா ? ஆகுமென்றால் இக்காலத்தில் ஆங்கிலம் வழக்கிலிருக்கும் நாடுகள் அனைத்தும் ஆங்கிலநாட்டின் பகுதிகள் என்று அ.நீ கூறுவாரா ?) இந்தியத் துணைக்கண்டத்தை ஒன்றிணைக்கும் அளவுக்குச் மக்கள் அனைவராலும் பேசப்பட்ட அந்த வடமொழி ஏன் இன்று பேச்சுவழக்கில் இல்லை ?

வடமொழிக் கலப்பால் தமிழ் முற்றாக அழியாமல் இருந்ததென்னவோ உண்மைதான் ஆனால் தமிழ் ஆயிரக் கணக்கான தன் அழகிய பலச் சொற்களை இழந்தது. இக்காலத்தில் கல்வி பரவலாக்கப்பட்டிருப்பது போல அக்காலத்திலேயே பரவலாக்கப்பட்டிருந்தால், வடமொழியை உயர்ந்தவர்கள் மொழி என்று தனிமைப்படுத்தி வைக்காதிருந்தால், ‘தமிழை அழிக்கும் மொழி ‘ என்னும் பெருமை ஆங்கிலத்துக்குப் பதிலாக வடமொழிக்கே சென்று சேர்ந்திருக்கும்.

இந்தியைக் கட்டாயமாகப் புகுத்துவதற்கு இப்போது உதவும் மையப்படுத்தப்பட்ட அரசமைப்பும் அதிகாரமும் பண்டைக்காலத்தில் இல்லை என்பதும் தமிழ் அழியாதிருந்ததற்குக் காரணமே தவிர பன்மைய வளர்க்கும் கருணை உள்ளம் அல்ல.

ஓரினத்து மக்களின் மொழி அவ்வளவு எளிதில் அழிந்து போகாது என்னும் இயற்கை நியதியும் தமிழ் வாழ்வுக்குக் காரணமாக இருக்கலாம்.

{அ.நீ : நம் மொழிகள் அனைத்துமே ஈஸ்வர ஸ்வருபம் எனும் சிந்தனை நம் மரபுகளில் உள்ளது. ‘வானவன் காண் வடமொழியும் தெந்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் ‘ என்ப திருநாவுக்கரசர் திருமொழி.}

இது உண்மையானால் தமிழ்வழிபாட்டுக்குப் போராட வேண்டிய தேவையே இன்று இல்லயே! தமிழ் நீச மொழி (பாஷை) என்றும் வடமொழி மட்டுமே கடவுளின் மொழி என்றும் தமிழ்ப்பகைவர்கள் கூறிவந்ததால் (வடமொழிப்பற்றாளர்கள் இன்று வரை இப்படித்தான் கூறிவருகின்றனர்), அதை மறுத்துத் தமிழ் அன்பர்கள் தமிழும் கடவுள் மொழிதான். வடமொழி போல தமிழும் ஈசனின் உடுக்கையிலிருந்தான் பிறந்தது என்று கூறவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். இதான் இன்றுவரை தொடரும் வரலாற்றுண்மை. ‘தமிழும் கடவுள் மொழி ‘ என்னும் கூற்று ஒரு போர்க்குரல். (இன்று வரை இது போர்க்குரலாகவே இருக்கிறது) அ.நீ எழுதுவதுபோல ‘மொழிகளினூடேயான சாராம்ச ஒருமையை காணும் ‘ நோக்கு அல்ல.

{அ.நீ : மேட்டுக்குடி மொழியாக சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் மொழியாகும் போக்கு இன்றியமையாது எழுந்துள்ள போதெல்லாம் அத்தகைய போக்குகளை களந்து அதே நேரத்தில் சமஸ்கிருதத்தையும் தாய் மொழியையும் வளப்படுத்தும் போக்கே பாரதத்தின் அனைத்து மொழி மரபுகளிலும் உள்ளது.}

இன்னும் ஒரு நூறாண்டுகள் கடந்தபின் காலனிய எதிர்ப்புப் போர்களைப் பற்றிக் கூறும் ஒரு வரலாற்றாசிரியர், ‘ஆங்கிலேயர்கள் மொழிப்பன்மையயும் உயிரி வளப் பன்மையையும் வளர்ப்பதற்காகத்தான் பலநாடுகளுக்கும் சென்றனர். சில வேளைகளில் சுரண்டிக் கொள்ளையடிப்பது வெள்ளை இனத்தாருக்கே நன்மையாக முடியும் போக்கு இன்றியமையாது எழுந்துள்ள போதெல்லாம் அத்தகைய போக்குகளைக் களந்து இங்கிலாந்தையும் தங்களது தாய்நாட்டையும் வளப்படுத்தும் போக்கே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அனத்து நாடுகளிலும் காணப்படுகிறது ‘ என்று கூறினால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறிருக்கிறது அ.நீ தமிழர்களின் வடமொழி (இந்தி) எதிர்ப்புப் போராட்டங்களப் பற்றிக் கூறுவதும். இரண்டுமே ஏகாதிபத்தியக் குரல்கள்.

மரணம் கொடியதுதான். அதற்காக அரவிந்தன் நீலகண்டன் ஐயாயிரம் ஆண்டுப் பழமையான பிணங்களைக் கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருப்பது வெட்டிவேலையாகத் தோன்றுகிறது. இரண்டாயிரம் ஆண்டுப் பழமையான தமிழ்ப் பிணங்களக் காட்டி அழுதவர்களின் ஓலம் ஓய்வதற்குள் இந்தப் புது ஓலம். போதுமடா சாமி.

__________

பழங்காலம் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். எதிர்காலத்துக்கு என்ன செய்வதென்று

பார்ப்போம்.

தனித்தமிழுக்கோ, தனித்தமிழ் நாட்டுக்கோ, ஏன் தமிழுக்கோ கூட தமிழர்களின் ஆதரவு இல்லை. இவற்றைப் பெரும்பாலான தமிழர்கள் விரும்பவுமில்லை. தமிழால் தமிழர்களுக்கு உய்வு கிடைக்கப்போவதும் இல்லை. சுருங்கி வரும் உலகத்திற்கும், பெருகிவரும் தொழில் துறைகளுக்கும் சிறப்பாகச் சேவை செய்யும் நாடும் தனிமனிதர்களும் மட்டுமே வறுமையிலிருந்து கரையேற இயலும். இதற்கு ஆங்கிலம் மிகவும் அவசியம். கிடக்கும் ஒரு சில வாய்ப்புகளும் நகரவாசிகளுக்கு மட்டுமே செல்வதைத் தடுக்க கிராமங்களுக்கு நல்ல ஆங்கிலத்தைக் கொண்டு செல்ல வேண்டியது இன்னும் அவசியம்.

தமிழும் தெரியாத ஆங்கிலமும் தெரியாத இளைஞர்களை உருவாக்கும் தற்போதய கல்வி முறைக்குப் பதிலாக, ஆங்கிலத்தை வசக்கிவக்கும் (கி.ராவுக்கு நன்றி) திறமையுள்ள மாணவர்கள உருவாக்கும் ஒரு மாற்றுக் கல்வித்திட்டத்தப் பற்றி சிந்திக்கவேண்டியது தமிழர்களின் (இந்தியர்களின்) உடனடிக் கடமையாகும்.

இந்து, இந்தி, வடமொழி என்று பாரதக் கனவில் மிதப்பவர்களும் ஆங்கிலத்தின் அவசியத்தை உணர்ந்து ஆங்கிலம் மட்டுமே இந்தியாவின் இணைப்பு மொழியாகக் கல்வி மொழியாக இருக்கவேண்டும் என்னும் நிலைபாட்டை மேற்கொள்ளவேண்டும்.

கோயில்களிலும் ஆங்கிலம் ஒலிக்கும் எதிர்காலம் வரட்டும்.

மக்களின் நல்வாழ்வு அல்ல – மதம், இனம், சாதி, மொழி, நாட்டெல்லைகளே முக்கியமானவை என்று கரும் மனிதர்களும் அமைப்புகளும் ஆட்சிக் கட்டிலில் ஏறும் நிலை தொடருமானால் இந்தியா வறுமையிலிருந்து ஒருக்காலும் மீளப்போவதில்லை.

(ஆங்கிலம் மட்டுமே வறுமையை விரட்டிவிடாது என்பதையும் கவனத்தில் கொள்கிறேன்)

பரிமளம்

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கடிதங்கள்

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

ஆகஸ்ட் 08, 2003



வேதசகாயகுமாரின் கடிதத்திற்கு எதிர்வினை

‘அசட்டு ‘ வரியும் அசட்டுத் துணிச்சலும்

ஜெயகாந்தனின் சிறுகதைகள் பற்றிய என் கட்டுரை குறித்து வேதசகாயகுமார் எழுதிய கடிதத்தைப் படித்தேன். சிறிதும் கூச்சமோ தயக்கமோ அற்ற அவரது துணிச்சலும் உறுதிப்பாடும் அச்சமூட்டுகின்றன. என்னுடைய கட்டுரை ஜெயகாந்தன் – புதுமைப்பித்தன் குறித்து அவர் எழுதிய நூலை அடியொற்றியது என்று துளியும் சந்தேகமின்றி அவர் கூறிக்கொள்கிறார். அவரது நூலை நான் அடியொற்றினேனா, இல்லையா என்பது இருக்கட்டும். முதலில் அந்த நூலை நான் கண்டிப்பாகப் படித்திருப்பேன் என்று அவர் எப்படி முடிவுகட்டினார் என்று தெரியவில்லை. இலக்கிய அளவுகோல்களை வேசகு பிரயோகிக்கும் முறைமீதோ வள வளவென்று விரித்துக்கொண்டே போகும் அவரது வெளிப்பாட்டு முறைமீதோ பொதுவாக எனக்கு மரியாதை கிடையாது என்பதால் அவரது எழுத்துக்களைப் படிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். அவர் குரிப்பிடும் நூலை சத்தியமாக நான் படித்ததிலை. தன்னிகரில்லாத ஆய்வாளரான வேசகு, அந்தப் புத்தகத்திற்கும் எனக்கும் இடையே உள்ள உறவு (அல்லது உறவின்மை) பற்றி அறிந்துகொள்ள சிறிதும் முயற்சி செய்யாமல் அவரது நூலை அடியொற்றி நான் கட்டுரை எழுதுவதாகப் புலம்புவதைக் காணும்போது சிரிப்பு வருகிறது.

டால்ஸ்டாய் பற்றிய வரி ஜெயமோகனின் நாவல் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் வேசகு குற்றம்சாட்டுகிறார். மேற்படி நூலை நான் குறைந்தது இரண்டு முறை படித்திருப்பேன். அந்நூலின் உருவாக்கத்திலும் சிறிய அளவு பங்காற்றியிருக்கிறேன். ஆனால் அந்நூலைப் படித்துப் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதை நான் மனப்பாடம் செய்துவைக்கவில்லை. துரதிருஷ்டவசமாக நூலும் இப்போது என் கையில் இல்லை. எனவே வேசகுவின் குற்றச்சாட்டின் பெறுமானத்தைப் பரிசோதிக்க இயலவில்லை. ஆனால் ஒழுக்கம் என்ற பிரச்சினை குறித்து ஜெயகாந்தன் பிரதியில் வெளிப்படும் அணுகுமுறையையும் டால்ஸ்டாய் பிரதியில் வெளிப்படும் அணுகுமுறையையும் ஒப்பிட்டு நான் எழுதியிருந்த கருத்தை ஜெயமோகன் முன்னமேயே சொல்லியிருக்கக்கூடும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். வாசிப்பின் மூலமாகவும் விவாதங்களின் மூலமாகவும் நமக்குள் வந்து சேரும் இலக்கியப் பார்வைகள் தீர்க்கமாக உள்வாங்கப்பட்டு வளர்சிதைமாற்றத்திற்கு ஆளாகி நம் பார்வையை பாதிப்பது மிக இயல்பான விஷயம். இப்படிப்பட்ட பாதிப்புகள் நமது அளவுகோள்களை உருமாற்றியபடி இருப்பதும் இயல்பானதே. எந்த விமர்சனக் கட்டுரையிலும் அந்த விமர்சகரின் முன்னோடிகள் விவாதித்த கருத்துக்களின் தாக்கம் உடன்பாட்டு வசையிலோ எதிர்மறையாகவோ இருக்கத்தான் செய்யும். ஜெயமோகனின் கருத்தைப் பிரதிபலிக்கும்படி என் கருத்து இருக்கிறது என்றால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அவரது கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை பிரக்ஞைபூர்வமாக நான் பயன்படுத்தியிருந்தால் அதை நான் மறக்காமப் குறிப்பிட்டிருப்பேன். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதால் ஜெயமோகனின் நோல் பற்றிக் குறிப்பிட வேண்டிய தேவை எழவில்லை.

ஜெயகாந்தன் பற்றிப் பிறர் கூறியுள்ள எதிர்மறையான கருத்துக்களை மேற்கோள் காட்டுவதை நான் தவிர்த்துவிட்டேன். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு அவரை மறுவாசிப்பு செய்யும் எனக்கு அவர் எப்படிப்படுகிறார் என்பதை பதிவுசெய்ய விரும்பினேன். அவரைப் பற்றி எனக்குள் உருவான எனது எதிர்மறையான முடிவுகளை முன்வைக்கையில் யாரையும் துணைக்கழைக்கவோ யார் நிழலிலும் ஒன்டிக்கொள்ளவோ நான் விரும்பவில்லை. என் விமர்சனக் கருத்துகளுக்கான முழுப் பொறுப்பையும் அதன் விளைவுகளையும் ஏற்க நான் தயாராகவே இருக்கிறேன். எனவே ஜெயமோகன் உள்பட யாரையும் மேற்கோள் காட்ட நான் விரும்பவில்லை.

இவை ஒரு புறம் இருக்க, டால்ஸ்டாய் பற்றிய வரி ஜெயமோகனின் நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்று மட்டையடியாகக் கூறம் முக்கால ஞானி வே.ச.குவின் அசட்டுத் துணிச்சலைக் கண்டு. சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ஜெயகாந்தன் விமர்சனத்திற்கே தகுதியற்றவர் என்ற அசட்டுவரியையெல்லாம் நான் எழுதவில்லை என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார் வேசகு. ஜெ.காவின் சிறுகதையைப் பற்றி மதிப்புரைக் கட்டுரை ஒன்று எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது. அவர் கதைகளைப் படிக்க ஆரம்பிக்கிறேன். கதைகள் ஏமாற்றமளிக்கின்றன. இந்தக் கதைகளைப் பொருட்படுத்தி எதற்காக எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. பொருட்படுத்திப் பேசியாக வேண்டும் என்பதற்கான காரணங்களும் தெரிகின்றன. எனவே எழுதுகிறேன். எழுதும்போது இந்த அனுபவத்தையும் பதிவுசெய்கிறேன். சிவகுமாருக்கு நான் எழுதிய எதிர் வினையில் குறிப்பிட்டபடி, ‘ஜெயகாந்தனை இவ்வறை சீரியஸா எடுத்துக் கிட்டு எழுத வேண்டிய அவசியம் என்ன வந்தது ? ‘ என்று சமகாலப் படைப்பாளி ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த ‘அசட்டு ‘ வரியின் வேறு வடிவம்தான் இந்த வாக்கியம். தீவிர இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தனுக்கு முக்கிய இடம் எழுவும் இடம் ஏதுவும் இருக்க முடியாது என்கிற என் முடிவைப் பிரதிபலிக்கும் வரிதான் இந்த ‘அசட்டு ‘ வரி. ஜெயகாந்தனி பற்றிய இந்த மதிப்பீடு வே.சகுவுக்கு அசட்டுத்தனமானதாகத் தெரிந்தால் சிறுகதைகள் சார்ந்து ஜெயகாந்தனைத் தீவிர இலக்கியப் பரப்பில் பொருட்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். தீவிரமாக இயகங்கிவரும் பல படைப்பாளிகள் ‘ஜெயகாந்தனை இப்போது படிக்கவே முடியவில்லை ‘ என்று அதிருப்பதி கொள்வதற்கான காரணத்தையும் அவர் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நான் ஜெயகாந்தனோடு ஒப்பிட்டிருக்கும் எழுத்தாளர்களை இவர்களால் படிக்க முடிகிறது என்ற அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த ‘அசட்டு ‘ வரியை வே.ச.கு. எதிர்கொள்ளட்டும்.

ரவி ஸ்ரீநிவாஸுக்கு ஒரு வார்த்தை: ‘அந்த அரவிந்தனா இது ‘ என்ற ரீதியில் தன் கண்டுபிடிப்பை முன்வைத்து, என் ஆதர்ஸ எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தையும் ர.ஸ்ரீ. வெளிப்படுத்தியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை ஆதர்ஸ எழுத்தாளர் என்று எந்த ஒரு குறிப்பிட்ட ஆளுமையையும் நான் கருதுவதில்லை. பல்வேறு இலக்கிய ஆளுமைகளின் பல்வேறு தன்மைகள் கொண்ட குழப்பமான ஒரு தொகுப்பின் அரூபமான ஓர் ஆகிருதிதான் என் மனத்தில் ஆதர்ஸமாக இருந்துவருகிறது. திறந்த மனத்துடன், தொடர்ச்சியான தேடலுடன் செயல்பட விரும்பும் யாருக்குமே இது இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

– அரவிந்தன்


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு ஓர் ஆலோசனை.

திண்ணையில் வாராவாரம் வரும் சில கடிதங்கள் வெகு நீளமாக எழுதப்பட்டு, ஆதி அந்தம் இல்லாமல் எங்கே தலை, எங்கே கால் என்று தெரியாது, எப்போது முடியும் என்ற வேட்கையைத் தூண்டுகின்றன! ஓரிரு பக்களுக்கு [8.5 ‘x11 ‘] மீறிக் கடிதம் நீண்டு போனால், படிப்போரது பொறுமையைச் சோதிப்பதுடன், சிந்தனைத் தொடர்பும் அற்று விடுகிறது! சில கடிதங்கள் சீராகத் தொகுக்கப் படாமல், அங்கும் இங்கும் அலை மோதுகின்றன! அதற்கு உதாரணம் எல்லையற்று நெடும் இரயில்பாதை போல் போகும் சென்ற வாரக் கடிதங்கள் [ஆகஸ்டு 1, 2003] சிலவற்றைக் கூறலாம்! ஓடும் இரயில் ஏதாவது ஒரு நிலையத்தில் நிற்க வேண்டாமா ?

கடிதங்கள் கட்டுரைகள் அல்ல! கருத்தை ஆராயும் கடிதம், உளவப்படும் கட்டுரையை விட மிக நீளமாக எழுதப் படுவது விந்தைதான்! சுருங்கச் சொல்லி சுவையாக இல்லாமல், கடிதங்கள் விரித்துச் சொல்லி வெறுப்பை உண்டாக்குகின்றன! கருத்துக்கள் ஓரிரு பக்கங்களைத் தாண்டினால், அவற்றை ஓர் ஆய்வுக் கட்டுரையாக மாற்றித் தெளிவாகத் தொகுத்து எழுதலாம். சென்று வாரத்தில் வரதட்சணைப் பற்றிய நீளமான கருத்தை, ஒரு மறுப்புக் கட்டுரையாக நான் எழுதி அனுப்பினேன். ஆனால் திண்ணை ஏனோ அதை நீண்ட கடிதமாகவே வெளியிட்டது! வாசகரது பொறுமையை என் நீண்ட கடிதம் சோதித்திருக்கலாம் என்பது எனது எண்ணம்.

கடிதங்களுக்குத் திண்ணை ஓரளவு பக்க வரையரை விதிக்க வேண்டு மென்பது என் ஆலோசனை. அல்லாவிட்டால் அவை காட்டாறு போல் விரிந்து முடிந்தும் முடியாமல், புரிந்தும் புரியாமல் எந்தக் கடலிலும் சங்கமம் ஆகாமல் ஓடிக் கொண்டே போகின்றன!

சி. ஜெயபாரதன், கனடா.


அன்புள்ள ஆசிரியருக்கு,

கி.ராஜநாராயணன் பற்றிய ஜெயமொகனின் கட்டுரை கி.ராஜநாராயணனை பொத்தாம்பொதுவாக கரிசல் எழுத்தாளர், நாட்டுப்புறக் கதைசொல்லி என்றும் சொல்லிவந்த கூற்றுக்களை தெளிவாக்க உதவியது. அவரது உள்ளடக்கம் மார்க்ஸியத்தாலும் அவரது இனக்குழுமனத்தாலும் , அவற்றுக்கு இடையேயான மோதல்வளர்ச்சியினாலும் உருவாக்கப்பட்டது என்பது சரியே. அவரது படைப்புலகத்தில் தலித்துக்கள் ாகண்ணுக்கு தெரியாத மக்களாகா பலசமயம் ஆகிவிடுகிறார்கள் என்பது மேலும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கவேண்டும். தெளிவான அழுத்தமான கட்டுரை அது.

எங்கள் கல்லூரியில் அக்கட்டுரையை பிரதி செய்து வாசித்தோம். இதை எழுதக்காரணம் பிறிதொன்று. சென்ற இதழில் ரவி சீனிவாச் என்பவ எழுதியிருந்த கட்டுரைதான். தொடர்து ஜெயமோகன் என்ன எழுதினாலும் அபத்தம் மடத்தனம் என்றெல்லாம் இவர் பதில் பேச வந்துவிடுகிறார். ஆனால் பேசப்படும் விஷயம் சாதாரணமாக்க் கூட இவருக்கு புரிவதும் இல்லை. சொற்களை எடுத்து வைத்துக் கொண்டு ஒருவகை விதண்டாவாதம் செய்கிறார். இவருக்கு தெரியாததும் புரியாததும் எல்லாம் அபத்தம் என்று எண்ணுகிறார்போலும். தமிழ் விமரிசனங்களில் தெளிவாக புரியும்படி அசலான சிந்தனைகளுடன் எழுதப்ப்டும் விமரிசனம் ஜெயமோகனுடையது. அதன் முக்கியத்துவத்தைப்பற்றி மனுஷ்ய புத்திரன்கூட கல்கி கட்டுரை ஒன்றிலே சொல்லியிருக்கிறார். வெற்றுக் கோட்பாட்டுக்காரர்கள் அதை எதையாவது சொல்லி மடம்தட்ட முயன்று தங்களைதாங்களே மட்டம்தட்டிக் கொள்கிறார்கள் .

உதாரணமாக ஜெயமோஅன் கிராவில் செயல்படுவது மார்க்ஸிய நோக்கும் இனக்குழு நோக்கும் கொள்ளும் முரணியக்கம் என்கிறார். இன்னொரு இடத்தில் கிராஜநாரயணனின் கருத்தியல் மார்க்ஸியம் என்கிறார் . இது எப்படி முரபாடாகும் ? இதைக்கூட புரிந்துகொள்ளமுடியாதவர்களா இலக்கிய விமரிசனம் படிக்கிரார்கள் ?

‘ இனக்குழு ‘ என்ற சொல்லாட்சி பற்றி ரவி சீனிவாச் கேட்டிருக்கவேயில்லை என்றால் அது அவர்து பிரச்சினை. ஒரு எழுத்தாளார் அதை சொல்லும்போது அக்கறையுடன் தெரிந்துகொள்வது தகுதியுடையோர் செயல். அவருக்கு ஜெயமோகனை நான்கு வார்த்த வசைபாடினால் தானும் அறிவுஜீவி ஆகிவிடுவதாக எண்ணம் , ஒரு திருப்தி வருகிறது போலும்.

இனக்குழு என்ற சொல்லை சோவியத் நூல்கள் இந்தியசாதிகளைப்பற்றி குறிக்கும் கலைச்சொல்லாக பயன்படுத்த் ஆரம்பித்து இருபது வருடமாகிறது. அந்த சொல்லை பயன்படுத்தி ஏராளமான ஆய்வுகளும் வந்துவிட்டது. இலக்கியத்தில் பழமலையைப்பற்றிய ஆய்வேடு ஒன்றில்தான் இனக்குழு வரைவியல் என்று அவரது அழகியலை வரையறுத்திருந்தார்கள். இதப்பற்றி நிறைய விமரிசனங்களும் வந்துச் விட்ட்ன. தமிழ் கவிதைகளில் இனக்குழு கூறுகள் பறிய முனைவர் பட்ட ஆய்வேடுகள் வந்துள்ளன. அச்சொல் சமானமான சாதிகளின் ஒரு தொகையை குறிக்கிறது என்று தெரியாத எவரும் இல்லை. நமது நாட்டர் மரபு இனக்குழு கலாச்சாரம்தான் என்பதைப்பற்றி பல ஆய்வேடுகள் வந்துள்ளன. நாட்டாரியலே இனக்குழு வரிவியலாக மாறுஇவிட்டதுஎ ந்று புலம்பல் ஒருபக்கம் நடக்கிறது. திண்ணை ஆசிரியர் இம்மாதிரி கட்டுரைகளைப்பற்றி சற்று கவனமாக இருப்பது நல்லது . ஒரு கட்டுரை வெளிவந்ததுமே இம்மாதிரி ஒருவர் புரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ள முயற்சியும் எடுக்காமல் , மட்டம்தட்ட புறப்பட்டி தன் விருப்பபடி குழப்பினால் அதற்கு இடம்தந்துதான் தீரவேண்டுமா ? இம்மாதிரி சொற்களைபயன்படுத்தினால் யார் இங்கே தீவிரமாக பேச முற்படுவார்கள் ? ரவி சீனிவாசுக்கு இலக்கியவிவாத்த்தின் அடிப்படைகள்கூட தெரியவில்லை என்னும்போது அவரது இந்த போச் ஒருவகை தாழ்வுணர்ச்சியின் விளைவு என்ரே சொல்லதோன்றுகிறது. அதன் சிக்கல்களை வாசகர்களாகிய நாங்கள் சுமக்கவேண்டுமா என்ன ?

ராஜபாண்டியன்

மதுரை


அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

தமிழ்மணவாளன் அவர்களின் ‘ முற்றுமென்றொரு ஆசை ‘ கவிதை வாசிக்கும் போது சிரிப்பை வரவழைத்தாலும், வாசித்த பிறகு இன்றைய இலக்கிய சூழல் குறித்த வருத்தம் ஏற்படுவதை தவிர்க்கவியலவில்லை.

கவிதையில் அவர் கூறும் ஆசை அவரது மட்டுமல்ல;பலரது அசையும் கூடத்தான்.

சொர்ணபாரதி


அன்புமிக்க திண்னை ஆசிரியர் அவர்களுக்கு.

வணக்கம்.

அரியும் சிவனும் ஒண்ணு எனும் எனது குறுநாவல் பற்றிய அன்பர் ஆர். ரஃபீக் அவர்களின் கடிதம் கண்டேன். தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது. அதை ஊக்கப்படுத்தும் (to encourage) வண்ணம் எழுதுவதும் அறிவுடைமையாகாதுதான். இத்தக் கதையில் அவ்வாறு சொல்லப்படவில்லை. சொர்னம் என்பவரின் பாத்திரப்படைப்புக்கு ஏற்ற முடிவு அதுவாகத்தான் இருக்க இயலும். வேறு எந்த முடிவும் அவரது இயல்புக்கு முரணானதாகவே இருக்கும்.

‘அரியும் சிவனும் ஒண்ணு; அதை அறியாதவன் வாயிலே மண்ணு ‘ என்று மிகப் பரந்த மனப்பான்மையுள்ளவரைப் போல் தன் மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் வடமொழிப் பேராசிரியர் அதைத் தம் மகளுடைய காதலை அங்கீகரிப்பதன் மூலம் காட்டியிருந்தால், அந்தச் சமையல் காரர் மனச்சாட்சியின் உறுத்தல் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டிருந்திருக்க மாட்டார். இதுவே இக்கதை வெளியிடும் செய்தி (message). இது போன்ற தற்கொலைகளுக்குக் காரனர்களாகிறவர்களின் மனச்சாட்சியை விழிக்கச் செய்வதே இக்கதை முடிவின் நோக்கமாகும். வேறு எந்த முடிவும் நன்றி மிக்க – சாதுவான – பணியாளாகிய அந்தப் பாசம் மிகுந்த சமையல் காரரின் பாத்திரப் படைப்புடன் ஒத்துப்போகாது. மிக, மிக, மிக யோசித்த பின்னரே இந்த முடிவு இக்கதைக்குக் கொடுக்கப்பட்டது. வேறு விதமாய்க் கதையை எழுதியிருக்கலாமே என்பது விமரிசனம் ஆகாது. (பாத்திரப்படைப்பில் முரண்பாடுகள் இருப்பினும், வாசகர்களும் விமரிசகர்களும் ஒப்புக்கொள்ளுவதில்லை.)

தற்கொலை செய்துகொள்ளல் வீரம் என்றோ, தியாகம் என்றோ, ஒரு பிரச்சினைக்குத் தீர்வு என்றோ தனிப்பட்ட முறையில் நான் கருதவில்லை என்பதை நண்பருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆனால், தற்கொலை சங்கடப் படுத்தும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

அன்புடன்.

ஜோதிர்லதா கிரிஜா


பாலா

வரதட்சணையைப் பற்றிய என் கடிதம் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். தெளிவுக்காகச் சில வார்த்தைகள்.

பெண்களை அழவைப்பதற்கென்றே எடுக்கப்படும் சில தமிழ்ச்சினிமாக்களைப் போலவும் சின்னத்திரையின் மெகா சீரியல்களைப் போலவும் உணர்ச்சிப் பிழம்பாக இருந்ததால் திரு. ஜெயபாரதன் அவர்களை நிஷா ஷர்மா பற்றிய கட்டுரையை நான் முழுதும் படிக்கவில்லை. எனவே என் கடிதம் அக்கட்டுரைக்குப் பதிலாக எழுதப்பட்டதல்ல. (என் கடிதத்தில் அப்படி நான் எதையும் குறிப்பிடவும் இல்லை)

வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் கூடாது; தவறு என்பதான் என் கொள்கை. வரதட்சணை (ஏழ்மை, கொடுங்கோன்மை, வேலயின்மை போன்ற இன்னும் பலவும்) இல்லாத ஒரு இலட்சிய உலகம்தான் என் கனவிலும் இருக்கிறது. அதே நேரத்தில் வரதட்சணையக் கொடுக்கும், வரதட்சணையால் பாதிக்கப்படும் அத்தனைப் பேரும் அப்பாவிகளோ, ஏமாளிகளோ அல்லர் என்றும் நான் கருகிறேன்.

கடைக்குப் பொருள் வாங்கப் போனால் நாம் விரும்பும் எந்தப் பொருளையும் வாங்கிவிட முடியாது. நம் கையிலுள்ள பணத்துக்கு ஏற்ற பொருளைத்தான் வாங்க முடியும். திருமணச் சந்தையிலும் (நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்) வியாபாரம் இப்படித்தான் நடந்து வருகிறது. ஆனால் ஒரு வேறுபாடு. ‘என் கையில் உள்ள பணத்க்கு நான் விரும்பும் பொருளைக் கொடு’ என்று கேட்கும் வாடிக்கயாளர் மீது யாரும் இரக்கம் கொள்வதில்லை. திருமணச் சந்தையில் மட்டும் இப்படிப்பட்ட பெண்வீட்டார் இரக்கத்தைப் பெறுவது சரியா என்பதுதான் எனக்கேற்பட்டுள்ள ஐயம். (உரிய விலைக்குப் பொருள விற்ற பிறகு மேலும் பணம் கேட்கும் கடைக்கார ரெளடிகளைப் போன்ற ஆண் வீட்டாருக்கு நான் பரிந்து பேசவில்லை)

தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் எஞ்சினியர், டாக்டர், எம்.பி.ஏ போன்ற ‘அறிவுள்ள’ மாப்பிள்ளைகளுக்கேற்ற வரதட்சணையக் கொடுக்க முடியவில்லையே என்று பெண்வீட்டார் புலம்பினால் அங்கே வரதட்சணை மட்டுமே பிரச்சனை அல்ல. தங்கள் வீட்டுப் பெண் நல்ல இடத்தில் வாழ்க்கப் பட வேண்டும் என்ற அவர்கள சுயநலமும் (இது தவறு என்று நான் கூறவில்லை) உள்ளது என்பதுதான் என் கூற்று. வரதட்சணை மட்டுமே பிரச்சினை என்றால் பெண்ணை, குறைந்த வருவாய் ஈட்டுகிற, குறைந்த வரதட்சணை கேட்கிற சாதாரண ஏழைக்குடும்பத்ப் பையனுக்குக் கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே! (திரு. ஜெயபாரதனுக்கு இவர்களெல்லாம் மனிதர்களாகவே படவில்லையென்றால் நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை)

இந்தியாவில் சட்டங்களுக்கும் அவை நடைமுறப்படுத்தப்படுவதற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு நீளமானது என்பது எல்லாருக்கும் போலவே எனக்கும் தெரிந்ததுதான். ஏழைகளுக்குப் பெண் கொடுக்க மறுக்கும் பெண்வீட்டாருக்கு எதிராகச் சட்டம் ஏன் இல்லை என்று நான் கேட்டது, அப்படி ஒரு சட்டம் வேண்டும் என்பதற்காக அல்ல. ஒரு புதிய கோணத்தில் சிந்தித்துப் பார்க்கலாமே என்பதற்காக.

வரதட்சணை ஒழிவதற்கு திரு. ஜெயபாரதன் ஒரு வழியைக் காட்டுகிறார் (மனமாற்றம்). என் அறிவுக்கு எட்டிய வரையில் நான் ஒரு வழியைக் காட்டுகிறேன் (பொருளாதார முன்னேற்றம்). இவை தவிர வேறு வழிகளும் இருக்கலாம். ஏதோ ஒரு வகையில் வரதட்சணை ஒழிந்தால் அவரைப் போலவே நானும் மகிழ்வேன்.

பொருளாதார முன்னேற்றம் மக்களின் வாழ்க்கை முறைகளில் எண்ணங்களில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதை வளர்ச்சியடையந்த ஒரு நாட்டில் வசிக்கும் திரு.ஜெயபாரதன் போன்றவர் அறியாதிருப்பது வியப்பளிக்கிறது. அங்கெல்லாம் பெண்ணின் திருமணத்திற்குப் பெற்றோர் நகை நட்டு சேர்ப்பதில்லை (படிக்கவப்பதற்குக்கூட …. என்று இவரே எழுகிறார்) திருமணம் செய்துகொண்டு குழந்தகளைப் பெற்றெடுத்தால்தான் பெண்களின் வாழ்க்க முழுமை பெறும் என்னும் பிதற்றல்கள் இல்லை. சீவிச் சிங்காரித்க் கொண்டு முகம் தெரியாத ஒரு கணவனை எதிர்பார்த்துப் பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பதுவும் இல்லை. பெண்களை அடிமைப் படுத்தும், கேவலப்படுத்தும் இன்னும் எத்தனையோ இந்தியத்தனங்கள் இல்லை. பெண்களுக்குச் சுதந்திரமும் பாதுகாப்பும் உண்டு. முக்கியமாக, சட்டங்களுக்கும் அவை நடமுறப்படுத்தப்படுவதற்கும் இடையே உள்ள இடைவெளி மிகக் குறைவு.

எனவே பொருளாதார முன்னேற்றத்தால்தான் மனமாற்றம் ஏற்படுமேயொழிய எதிர்மறையாக அல்ல என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இந்தப் பொருளாதார முன்னேற்றத்தால் வரதட்சணை முற்றிலும் ஒழிந்துபோகும் என்பதற்கு உத்தரவாதம் உண்டா என்று வினாவெழுப்புகிறார். ‘அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு நாடுகளில் பெற்றோரை நாடாமல், மகனோ, மகளோ தானே சம்பாதித்து தாமே மேல்கல்வியைத் தொடர்ந்து முடிக்கிறார்கள்!’ என்னும் தன கூற்று கலப்படமற்ற 100% நடைமுற உண்மை என்பதற்கு திரு.ஜெயபாரதன் உத்தரவாதம் அளித்தால் அளிப்பேன்.

________

பாலா என்பது பெண் பெயரா ? (பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்னும் குற்றச்சாட்டு வேறு!) அட ஞொப்புரானே என் கதையை யாரிடம் சொல்லி அழுவது ? (நேரமிருந்தால் பிறகு முழுமையாகச் சொல்லி அழுகிறேன்). புனைபெயரைப் பயன்படுத்துவது எனக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் என் இயற்பெயரைப் பயன்படுத்தும்போது கட்டாயமாக அடைப்புக் குறிக்குள் ஆண் என்று எழுதி வரும் வழக்கத்திலிருந்து விடுபடலாமே என்று ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்தேன் (இணையம் தரும் பாதுகாப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை). இப்போதும் நான் ஆண் என்று விளக்கவேண்டிய கட்டாயம். ஐயோ எனக்கு விமோசனமே கிடையாதா!

பரிமளம் (நான் பெண்ணல்ல, ஆண்)


Dear Sir,

Thinnai magazine is very interesting and useful to read. Thinnai is one of the very few useful magazines in Tamil. I never see such a

‘scientific-research article ‘ in any other tamil magazines. I appreciate Mr. Jayabharathan ‘s good effort to write such a type of articles in

Understandable manner.

‘Kettugitae irunga ‘ articles reflects the true colour of Tamilians

Please keep this good job.

Regards,

D.Varthamanan

Singapore


வணக்கதிற்குரிய அரவிந்தன் அவர்களுக்கு,

இக்கடிதத்தையொரு எளிய மடலாக, இன்றைய இலக்கியவாதிகளுக்கு எழுதப்படுகின்ற பொதுமடலாகவேக் கொள்ளலாம்.

எந்தப் படைப்பையும் எவரும் ஒட்டியும் வெட்டியும் விமர்சிக்கலாம் அதற்கு மாற்று கருத்துக்கிடமில்லை. விமர்சனம் செய்வதின் நோக்கமே ‘குழிபறிக்க ‘ வென்றால் எங்களைப் போன்றவர்களுக்குப் படபடக்கிறது. பொதுவாக இதுபோன்ற விமர்சனங்களுக்கென்று ஒரு உத்தியுண்டு. அந்த உத்தி பூசாரி கடா வெட்டுவதற்குச் சமம். அந்த உத்தித் தங்கள் கட்டுரையிலுமிருந்தது. JK கதைகள் பற்றி, தீவிர இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் இதழொன்றில் விமர்சனம் எழுதவேண்டிய அவசியம் எதுவும் கிடையாது ‘ என்ற முகாந்திரத்தோடு ஆரம்பிக்கும் தங்கள் கட்டுரையில் வேறென்ன எதிர்பார்க்க முடியும். கத்தியின்றி இரத்தமின்றி JK எழுத்துக்கள் பலி வாங்கப் படுகின்றன.

எந்த ஓர் எழுத்தாளனும் அல்லது இலக்கியவாதியும் தான் படைப்பதெல்லாம் இலக்கியமென சத்தியம் செய்ய முடியாது (ஆனால் துரதிஷ்ட்டவசமாக தீவிர இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் அப்படித்தான் தங்களை கற்பனை செய்து கொள்கின்றார்கள்) அது எமது JKவுக்கும் பொருந்தும். எழுத்தாளனுக்குப் பாதுகாப்பில்லாத இந்தியச் சூழலில் (நான் பொருளாதாரத்தைக் சொல்கின்றேன்) சில விஷயங்களில் சமரசம் செய்துகொண்டு எழுத நேரிடுகிறது. அப்படி எழுதப்படுபவை இலக்கிய அந்தஸ்து பெறவும் செய்யலாம், பெறாமலும் போகலாம். நல்ல சிறுகதைகள், கவிதைகள் இலக்கியவாதிகள் கொச்சைபடுத்துகின்ற வணிக இதழ்களிலும், சினிமாக்களிலும் இல்லாமல் இல்லை. அவ்வாறே மோசமான சிறுகதைகளும், கவிதைகளும் இலக்கிய லேபிலோடு சிற்றிதழ்களிலும் வரத்தான் செய்கின்றன. ஆகவே ‘அவர் அங்கே எழுதியவர் ‘ அதனால் இலக்கியவாதியல்ல என்ற நினைப்போடு கட்டுரை எழுதுகின்ற இலக்கிய பெருமக்களைப் பற்றிப் பேச எங்களுக்குப் போதாது. ஒருவரை இலக்கியவாதி என்றறிய ஒரு படைப்பு போதும் என்பதே என்னைப் போன்றவர்களின் தாழ்மையான அபிப்ராயம்.

தங்கள் காலச்சுவடு கட்டுரைக்குப் பதிலளிக்கும் களமாகத் ‘திண்ணையை ‘க் கொண்டு செல்ல விருப்பமில்லை. அது முைறையும் ஆகாது. தவிர JK யின் விசுவாசியாக இருந்துகொண்டு அவர் படைப்புகைளைப் பற்றி விமர்சிப்பது இயலாது. சிலாகிக்கவே முடியும். பொதுவாகவே அவரது படைப்புக்கள் பெரும்பாலும் சமூகத்தில் கவனத்திற் கொள்ளப்படாத நகர்புற சேரிகளின் வாழ்வியல் சார்ந்தது. இம்மாந்தர்களின் வயிற்று வாழ்வோடு தொடர்புகொண்ட அழுகையையும் ஆனந்தத்தையும், ஏக்கத்தையும் எக்காளத்தையும், பகையையும் பந்தத்தையும், இவர்களைப் பற்றிய பிரக்ஞையற்று வாழ்ந்த நம்மிடம் மன்னிக்கவும் எங்களிடம் கொண்டுவந்தபோது அதிர்ச்சியாகத்தானிருந்தது. அருபதுகளில் உச்சத்திலிருந்த ஜெயகாந்தன் இன்றைக்கும் பேசப்படுகிறார், எழுதப்படுகிறார் என்ன பொருள் ? உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

பொதுவாக ஒரு படைப்பினை மீள்வாசிப்புக்கு உள்ளாக்கும்போது சமகாலவாசிப்பாக கொள்ளலாகாது. மீள்வாசிப்பில் படைப்பாளி சொல்ல வருவதை அவரவர் அறிவு சார்ந்து வாங்கிக் கொள்கின்ற திறனானது, ‘இறந்த காலத்துக்குச் சற்று கூடுதலாக வேண்டியிருக்கிறது. இங்கே படைப்பின் மூல சொற்களை மட்டுமே ஆதாராமாகக் கொண்டு விமர்சினம் செய்வது கூடாது என்பது எனது தாழ்மையான அபிப்ராயம். படைப்பின் காலம், படைபாளியின் உணர்வு மற்றும் அறிவு, படைப்பு காலத்து சமூகம், படைப்பின் சூழல் என்பன, ஒரு படைப்பை வாசிக்க நேரும்போது கவனத்திற் கொள்ளவேண்டியவை. இன்றைய நுட்பங்களை நேற்றோடு ஒப்பிட்டு உடனே நேற்றாகபட்டது குப்பை என்ற்று சொல்லிவிடமுடியாது. கூடாது.

ஜெயகாந்தனின் கூச்சலும், ஊதாரித்தனமான வார்த்தையும், இலக்கிய உபதேசமும் நிறைய வாசகர்களை எழுதப்பட்ட காலத்தில் யோசிக்க வைத்திருக்கிறது. தூக்கமில்லாமல் தவிக்கவைத்திருக்கிறது. அறிந்த சமுகத்தை வேறு கோணத்தில் சொல்லியிருக்கிறது.

‘இன்னாதது அம்ம இவ்வுலகம், இனியது காண்கிதன் இயல்புணர்ந்தோரே! ‘ என்பது வாழ்வியலுக்கு மட்டுமல்ல இலக்கியத்துக்கும் பொருந்தும்.

ஜெயகாந்தனின் ‘இனிப்பும் கரிப்பும் ‘ சிறுகதையில் கணவனிடம் மனைவி பிரஸ்தாபிக்கிறாள், ‘ராவும் பகலுமா யாரையோ தொலைக்கிறதப்பத்திதான் பேசிக்கிட்டிருக்கீங்களே ஒழிய நாம் பொழைக்கிறதைப்பத்தி யோசிக்க மாட்டாங்களா ? ‘ நாங்களும் அதைத்தான் கேட்கிறோம். மற்றவர்களை இலக்கியவாதிகள் இல்லையென என்று சொல்லிகொண்டிருப்பதைக் காட்டிலும் தங்கள் எழுத்தில் கவனமிருக்கட்டும். கூச்சலும் குழப்பமுமாகவிருக்கும் தமிழிலக்கிய குரல்கள், இப்போதெல்லாம் தில்லிக்குச் சரியாக விளங்குவதில்லையாம்.

அன்புடன்

நாகரத்தினம் கிருஷ்ணா


ஞானிக்குப் பதில்.

சென்ற திண்ணை இதழில், ‘தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ? ‘ என்ற தலைப்பில் திரு ஞானி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையைப் படித்தேன். அக்கட்டுரையில் பெரியார் பற்றிய என் கருத்துக்களை ஜெயமோகனின் கருத்துக்களோடு இணைத்து நாங்கள் இருவருமே பெரியார் பற்றி ஒரே பார்வையில் இருப்பதாகவும், ஒத்த கருத்தினராக நாங்கள் சந்திக்கும் இப்புள்ளியே தனது கவனத்தில் முக்கியமானது என்றும் ஞானி கூறியிருக்கிறார்.

பெரியார் சம்பந்தமாக அவ்வப்போது நான் எழுதியுள்ள மொத்த வரிகள் மிகக் குறைவானவை. அவற்றை எல்லாம் முழுமையாக அறிந்த நிலையிலேயே அவர் என் மீதான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் என்றால் அவரது முடிவுகளை நான் ஏற்கவில்லை.

பெரியாரைப் பற்றிய ஞானியின் பார்வைக்கு மாறுபட்டு என் அபிப்பிராயங்கள் நிற்குமெனில் அவற்றை விமர்சிக்க அவருக்கு முழு உரிமையுண்டு. எனது அபிப்பிராயங்களுடன் ஞானிக்குக் கூர்மையான வேறுபாடுகள் இருக்குமெனில் அவரது விமர்சனம் இன்னும் கடுமையாகக் கூட இருக்கலாம். இதிலொன்றும் பிரச்னையில்லை. பெரியாரைப் பற்றிய என் பார்வைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத ஒருவரின் கருத்துக்களுடன் என்னைப் பிணைத்து இருவரையும் ஜோடி சேர்த்துப் பேசுவது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. பெரியாரைப் பற்றி இருவர் கூறியிருப்பதையும் முழுமையாக ஞானி படித்திருந்தால் இது போன்ற முடிவுக்கு வருவது சாத்திமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இருந்தாலும் ஞானி முன் வைக்கும் கருத்துக்கள் எனது பார்வையிலிருந்து அவர் மாறுபடுவதால் தோன்றியதே அன்றி, தனி நபர் விரோதம் சார்ந்தது அல்ல என்ற எண்ணம் எனக்கு இருப்பதால் நான் இதுகாறும் பெரியார் பற்றிக் கூறியிருப்பதை அவரது கவனத்திற்குக் கொண்டு வந்து என் வாதங்களை முன் வைக்க விரும்புகிறேன். என்றாலும் அவற்றை என் நினைவில் புதுப்பித்துக்கொள்ளவோ, அவசியமெனில் மேற்கோள் காட்டவோ பயன்படும் ஆதாரங்கள், நான் இப்போது வெளி நாட்டில் இருப்பதால் என் கைவசம் இல்லாமல் ஆகிவிட்டது. நான் ஊர் திரும்பியதும் என் தரப்பை எழுதி ஞானியின் பார்வைக்குக் கொண்டு வருவது சாத்தியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இருப்பினும் சில விஷயங்களை இப்போதே நான் ஞானியுடனும் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. தமிழன் அறிவை பெரியார் தடுத்தார் என்று நான் கருதவில்லை. அவ்வாறு நான் சொன்னதும் இல்லை. பள்ளிப் படிப்போ அல்லது புத்தகப் படிப்போ இல்லாதவர்களும் நாட்டுக்கு நிறைவான தொண்டு ஆற்ற முடியும் என்பதுதான் என் எண்ணம். காமராஜர் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரை இது சம்பந்தமான என் பார்வையைத் தெளிவு படுத்தும்.

2. பெரியாரின் அடிப்படையான எல்லா குறிக்கோள்களும், லட்சியமும், அவற்றை நிறைவேற்ற அவசியமான உழைப்பும், எதிர்ப்புக்குப் பயப்படாமல் போராடும் உறுதியும், வெளிப்படையான பேச்சும், சில சமூக ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பதில் கொண்டிருந்த பிடிவாதமும் சிறு வயதிலிருந்தே என்னைக் கவர்ந்திருக்கின்றன.

3. நான் முதல் முதலாவதாக சேலத்தில் எனது 17 ஆவது அல்லது 18 ஆவது வயதில் பெரியாரின் பேச்சையும், அவர் முன்னிலையில் ராமாயணத்தை முன் வைத்து நிகழ்த்தப்பட்ட ஒரு சில காட்சிகளையும் பார்த்தேன். எனது வயது காரணமாகவும், மத்தியதரப் பின்னணி சார்ந்தும், எனது பெற்றோரிடமிருந்து எனது மூளையில் இறங்கியிருந்த மதிப்பீடுகள் சார்ந்தும் அன்று பெரும் அதிர்ச்சிக்கு நான் ஆளானேன். அன்று அவர் பேசிய பேச்சளவுக்கு அருவருக்குத் தகுந்த பேச்சை நான் அறிந்த வரையில் உலகத்தில் எந்தத் தலைவரும் எந்த மக்கள் கூட்டத்திற்கு முன்னாலும் பேசியிருப்பார் என்று நான் கருதவில்லை. ராமாயணத்தை முன் வைத்து நடத்தப் பட்ட காட்சிகள் மிக மிக ஆபாசமானவை. இவற்றைக் கண்டிக்க ஒருவன் பிராமணர்களைத் துக்கிப் பிடிப்பவனாகவோ, அல்லது ராமாணத்தில் பக்தி தளும்புகிறவனாகவோ இருக்க வேண்டியதில்லை. பகுத்ததறிவுவாதியாக இருந்தால் மட்டுமே போதுமானது. இந்த அனுபவம் அவரது பிரச்சாரத்தளம் மிகக் கீழானது என்ற எண்ணத்தை அன்று என் மனத்தில் ஆழமாக ஏற்படுத்திற்று.

4. பொதுவுடைமை இயக்க ஆதரவாளர்களான என் நண்பர்களுடன் பின்னால் பெரியார் பேசிய பத்துக்கு மேற்பட்ட கூட்டங்களை எங்கள் ஊரான

நாகர்கோவிலிலேயே நான் கேட்டிருக்கிறேன். அவை அந்தக் காலங்களுக்குரிய பிரச்னைகளுக்கேற்ப சில உயர்வாகவும், சில தாழ்வாகவும் இருந்திருக்கின்றன.

5.பெரியாரின் கொள்கை பற்றியும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்தும், பொது வாழ்க்கை சார்ந்தும் பல செய்திகளைப் போற்றியும், விமர்சித்தும் நான் பெருமதிப்பு வைத்துப் பழகிய ஜ ‘வா,சாத்தான்குளம் ராகவன், சாமி சிதம்பரனார் ஆகியோர் விரிவாக என்னிடம் கூறியிருக்கிறார்கள். இவர்கள் கருத்து வேற்றுமை காரணமாக பெரியாரை விட்டுப் பிரிந்து வந்தவர்கள் என்றாலும், அவர் மீது மதிப்பும் கொண்டவர்கள்.

6. பெரியாரின் பேச்சுக்களும் அவரைப் பற்றிய அவரது நண்பர்களின் விமர்சனங்களும் எனக்குத் தெரிய வந்து ஏகதேசமாக அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. அவரது கொள்கை சார்ந்த விமர்சனங்கள் முன்னிலைப்பட வேண்டிய இக்காலகட்டத்தில் அவரது பிரச்சாரத்தளம் சார்ந்த வழிமுறைகளைச் சிறிதும் ஏற்காத நான், சரியோ தவறோ, அவரது கொள்கைகளைப் பற்றி மட்டுமே ஒரு சில கருத்துக்கள் எழுதியிருக்கிறேன். அதாவது, வரலாற்றில் அவருக்கு இருக்கும் பங்கை ஏற்று அவருக்கு உரிய மதிப்பளித்தே எழுத முற்பட்டிருக்கிறேன்.

7.வரலாற்றில் தோன்றியுள்ள சகல ஆளுமைகளையும் காலமாற்றத்திற்கு ஏற்ப மறுபரிசீலனை செய்ய எழுத்தாளர்களுக்கு உரிமையுண்டு என்பது இளம் வயதிலிருந்தே என் நம்பிக்கையாக இருக்கிறது.

8 ஒரே இயக்கத்தில் நீண்ட காலம் இணைந்து நிற்பவர்கள்கூட, அவர்கள் மக்களுக்குத் தரும் தோற்றம் எப்படி இருப்பினும் சரி, ஒரே புள்ளியில் கரைந்து நின்றவர்களாக இல்லை என்பது வரலாறு நமக்கு கற்றுத் தரும் பாடங்களில் ஒன்று. காந்தியும் பட்டேலுமோ, ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தருமோ, லெனினும் டிராட்ஸ்கியுமோ ஒரே புள்ளியில் சங்கமித்தவர்கள் அல்லர். அரசியல் வாதிகள் தங்கள் குறுகிய அதிகார நோக்கத்திற்குப் பயன் படும் விதத்தில் யாரையும் யாருடனும் மொட்டையாக இணைத்துப் பேசுவார்கள். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் வேற்றுமையற்றவர்களாக வெளிக்குக் காட்சியளிப்பவர்களின் இடைவெளிகளையும் முரண்பாடுகளையும் கண்டுபிடித்து அவற்றை வெளிப்படுத்தி சரித்திரத்திற்கு ஆழமும் சூட்சுமமும் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள்.

9.இன்று வரையிலும் பெரியாரின் இயக்கத்தையும் அதன் பின் வந்த திராவிடக் கட்சிகளையும் பிரித்துப் பார்க்காமல் அவர் மீது நான் எந்த விமர்சனத்தையும் முன் வைத்ததில்லை.

இக்குறிப்பைச் சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கூறுவதில் சிறிது வெற்றி அடைந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

சுந்தர ராமசாமி.

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கடிதங்கள்

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

ஆகஸ்ட் 1, 2003



ஆசிரியருக்கு,

பி.கெ.சிவகுமாரின் கட்டுரை கண்டேன். அதில் அவர் என்னைப்பற்றி பூடகமாக எழுதியிருந்ததைப்பற்றி ஒரு சுய விளக்கம்.

சுந்தர ராமசாமி என்ற ஆளுமை மீது எனக்கு இக்கணமும் ஆழமான மதிப்பு உண்டு. அதை எப்போதுமே வெளிப்படுத்தியுமுள்ளேன். ஆனால் அவரது கலை குறித்தஆழமான ஐயங்களும் , அவரது விமரிசனங்கள்மீதான முரண்பாடும் எப்போதுமே என்னிடம் உண்டு. அவற்றை எப்போதுமே பதிவு செய்தும் வந்துள்ளேன், 1992ல் வெளிவந்த அவரது விமரிசனமலரில் என் கட்டுரை முதல் நாவல் நூல் வரை அதைக் காணமுடியும். வடிவ இறுக்கம் ,பூடகம் , கட்டுப்பாடான வெளிப்பாடு ஆகியவற்றை கலைக் கோட்பாடாக அவர் முன்வைப்பதை நான் முழுக்க ஏற்றுக் கொண்டது இல்லை. அவர் பொருட்படுத்தாத, புறக்கணித்த எழுத்தாளர்களான கல்கி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் முதல் தேவதேவன் ப சிங்காரம் கலாப்ரியா நீல பத்மநாபன் வரையிலான படைப்பாளிகளைப்பற்றி விரிவாக அவருக்கு நேர் எதிரான கோணத்தில் கடந்த 10 வருடங்களாகஆய்வும் விமரிசனமும் செய்துள்ளேன்.

இத்தனை நாள் சுந்தர ராமசாமியின் குரலை எதிரொலித்துவிட்டு திடாரென்று ஒரு கோபத்தில் அவரை மறுப்பதாக இப்போது காலச்சுவடு அவர்களது ஊதுகுழல்களான சிவசேகரம் முதலியோரைக் கொண்டு அவதூறு கிளப்புகிறது. அதை நம்புவதைவிட அச்சில் வந்த என் கட்டுரைகளை படித்துப்பார்ப்பதே சிறந்த விஷயம்.

ஜெயமோகன்


அன்புமிக்க ஆசிரியர் அவர்களுக்கு.

வணக்கம்.

‘திண்னை ‘யில் வெளியான ‘அரியும் சிவனும் ஒண்ணு ‘ எனும் என் குறுநாவல் தட்டெழுதப்பட்ட உடனேயே – திருப்பிப் படித்துப் பார்க்கப்படாமல் – நினைவுப் பிசகாக – அனுப்பப்பட்டுவிட்டது. அதில் உள்ள எழுத்துப் பிழைகளுக்காக மிகவும் வருந்துகிறேன். ‘திண்ணை ‘ வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

அன்புடன்,

ஜோதிர்லதா கிரிஜா

26.7.2003


மெளனியின் இலக்கியப்படைப்புகளின் அடிப்படைகளை சிறப்பாக எடுத்துச் சொல்வதாக ஜெயமோகனின் கட்டுரை இருந்தது. மெளனிக்கு அவரது உரிய இடம் அளிக்கப்பட்டிருந்தது . அவர் கவிதையை கதையுடன் சேர்ப்பதில் முன்னோடி. ஆனால் அவரது பலவீனமான மொழி ,மரபிலே பயிற்சி இல்லாத நிலை எல்லாம் அழமாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. தன் மனதை எழுத தமிழ் போதுமானதாக இருந்ததில்லை என்ற மெளனியின் பேச்சுக்கு அளிக்கப்பட்ட பதில் மிகவும் சிறப்பானது. இப்படி அழுத்தமாக சொல்லவேண்டிய அவசியம் உள்ளது.

சிவம் கந்தராஜா


நிஷா ஷர்மாவைப் பற்றி எழுதிய வரதட்சணைக் கட்டுரைக்கு எதிரொலிக் கடிதம்!

சி. ஜெயபாரதன், கனடா

சென்ற வாரம் [ஜுலை 24, 2003] திண்ணையில் பாலா என்பவர் நான் முந்தைய வாரத்தில் எழுதிய ‘வரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா ‘ என்னும் கட்டுரை மேல் வினா எழுப்புவது போல் ஒரு கடிதம் மூலம் தனது கருத்தை வெளியிட்டிருந்தார்! பெரிய திமிங்கலத்தைப் பிடிக்க வேண்டுமானால் வலை சிறிதாகவா இருக்கும் என்று கணித நுணுக்கமான ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்! அது நியாயமான கேள்வி! சிறிய வலையில் பெரிய மீனைப் பிடிக்க முடியாதென்று சிறு பிள்ளைக்குக் கூட நன்றாகத் தெரியும்! வரதட்சணை வழங்குவது நியாயம் என்று தொனிக்கும் தோரணையில் ஒரு கையில் பச்சைக் கொடியை வீசிக் கொண்டு, அதே சமயம் வரதட்சணை வாங்குவது சரி என்று வாதிடுவது தன் நோக்கமல்ல என்று மறுத்துச் சிவப்புக் கொடியை அடுத்த கையில் காட்டுகிறார்! யார் கட்சிக்காகப் பரிந்து பேசுகிறார் என்று ஊகிக்க முடியாமல் வாசகர்களைக் குழப்பி அடிக்கிறது, அவரது கடிதம்!

வரதட்சணைத் தவிர்ப்பு பற்றி வந்த என் கட்டுரையின் சாரம் இதுதான்:

1. ஆண்களைப் பெற்றவர் வரதட்சணைப் பணத்தை வற்புறுத்திப் பிடுங்குவதைத் தமது உரிமையாகக் கருதுவதும், பெண்ணைப் பெற்றவர் வரதட்சணை கொடுக்கக் கடமைப் பட்டவர் என்று மாப்பிள்ளை வீட்டார், அவரது கழுத்தை நெரிப்பதும் மனிதரின் கற்காலக் குணத்தைக் காட்டுபவை!

2. இரண்டு நபர்தான் வரதட்சணைக் கொடுமையை நிறுத்த முடியும்! வரதட்சணை வேண்டாம் என்று திருமணம் செய்ய முன்னிற்கும் அறிவுள்ள ஆண்மகன்! அடுத்து வரதட்சணை விழையாத ஆடவனைத்தான் மணப்பேன் என்னும் உறுதியாக இருக்கும் மணப்பெண்! அந்த அறநெறியைக் கற்றுப் பின்பற்றும் மனிதப் பிறவிகள் வீட்டுக்கு வீடு தோன்றாத வரை, திருமணச் சந்தையில் வரதட்சணையைப் பாரதத்தில் ஒழிக்கவே முடியாது!

வரதட்சணை வேண்டாம் என்று வேலையில்லாத ஓர் ஏழை வாலிபன் பெண் கேட்டால், எத்தனைப் பணக்காரப் பெற்றோர் சம்மதிப்பார் என்று கேட்கிறார்! அதுவும் நியாமான கேள்வி! அடுத்து ஏழைகளுக்குப் பெண் கொடுக்க மறுக்கும் பணக்காரப் பெற்றோருக்கு எதிராக ஏன் சட்டங்கள் எதுவும் இல்லை ? என்று கேட்கிறார்! அது அழுத்தமான கேள்வி!

‘வரதட்சணை வேண்டாம் என்று திருமணம் செய்து கொள்ள முன்னிற்கும் ‘அறிவுள்ள ‘ ஆண்மகன் ‘ என்று நான் குறிப்பிட்டது, பெண் வீட்டார் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை! பெண்ணுக்கும், பெற்றோருக்கும் பிடிக்காத கூன், குருடு, செவிடு, முடவன், மடையன், படிக்காதவன், பைத்தியகாரன், வேலையில்லாதவன், பரம ஏழை, அயோக்கியன் ஆகியோரைப் பற்றியா இங்கு விவாதம் ? ‘இல்லானை இல்லாளும் வேண்டாள்! ஈன்றெடுத்த தாய் வேண்டாள்! ‘ என்பது நாமெல்லோரும் அறிந்ததே! ஏழை மாமனாரும், அவரது ஏழை மணப் பெண்ணும் கூட, இல்லாதவனை மாப்பிள்ளையாக ஒப்புக் கொள்ளத் தயங்குவார்கள்.

ஏழைகளைச் செல்வந்தர் மாலை போட்டு மருமகனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் சட்டம் போட்டால் மட்டும் அது நடக்கப் போகிறதா என்ன ? அரசாங்கம் போட்டிருக்கும் தற்போதைய வரதட்சணைத் தவிர்ப்பு சட்டத்தை [Anti-Dowry Law] எத்தனை நடுத்தரப், பணக்காரப் பெற்றோர்கள் மதித்துக் கீழ்ப்படுகிறார் என்பதற்குப் புள்ளி விபரம் பாரதத்தில் எங்காவது கிடைக்குமா ?

‘வரதட்சணை வாய் ஒப்பந்தம் ‘ எழுத்து வடிவில் உயிர் பெற்று வராமல் பிசாசு போல் பல முறைகளில் நிலவி வருகிறது!

1. பெண்ணைப் பெற்றவர் அளிப்பதை ஏற்றுக் கொள்வது ஒரு வகை [கோடியில் ஒன்று].

2. பெண்ணைப் பெற்றவரின் தகுதிக்கு மீறி வரதட்சணை வாங்க முயன்று பலனடையாமல், திருமணத்தை நடக்க விடாமல் முறிப்பது!

3. பெண்ணைப் பெற்றவரிடம் தகுதிக்கு மீறி வரதட்சணை வாங்கி, திருமணத்துக்குப் பின்னும் பெண் வீட்டாரை மீண்டும், மீண்டும் வற்புறுத்துவது!

4. உயர்ந்த வரனுக்கு, பல பெற்றோர் இடும் வரதட்சணை ஏலப் போட்டியில், உச்சத் தொகை அளிப்போரின் பெண் நிச்சயமாகி பிறர் ஏமாற்றம் அடைதல்!

5. திருமண தினத்தன்று வரதட்சணை மிகுதியாகக் கேட்டுப் பெண்ணின் தந்தை கழுத்தை நெரிப்பது, அடுத்து கல்யாண மேடையில் அமர்ந்துள்ள மாப்பிள்ளையை இழுத்துக் கொண்டு வெளியேறுவது! [நிஷா ஷர்மா திருமண நாளன்று நடந்து போல்].

6. திருமணத்துக்கு வாங்கிய பின்னும் திருப்பி யடையாது, மீண்டும் மீண்டும் வன்முறையில் பொன்னும், பொருளும் வேண்டி, பெண்ணைத் துன்புறுத்துவது, விரட்டி விடுவது, கொன்று விடுவது, அல்லது தற்கொலை புரிந்து கொள்ள சூழ்நிலையை உண்டாக்குவது!

இந்த பயங்கர வரதட்சணை நாடகங்கள் எல்லாம் பாரத நாட்டில் பல்லாண்டுகள் நடந்தவை! மீண்டும் நடப்பவை! இந்த வழக்கத்தைப் பாலா மோன்ற பெண்டிரே ஆதரிக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது! பெண்ணுக்கு முதல் எதிரி ஒரு பெண்!

இந்தியக் கூட்டுக் குடும்பத்தில், தகப்பனார் மகன் கல்லூரிப் படிப்புக்குப் பணம் அளிக்கிறார். அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு நாடுகளில் பெற்றோரை நாடாமல், மகனோ, மகளோ தானே சம்பாதித்து தமது மேல்கல்வியைத் தொடர்ந்து முடிக்கிறார்கள்! பாலா கூறுவது போல் பாரதத்தில் தொழில்கள் பெருகி, வேலை வாய்ப்புகள் மிகுந்து பெற்றோர் பிள்ளைகளையும், பெண்கள் கணவரையும் எதிர்ப்பார்க்கும் அவல நிலை மாறினால் வரதட்சணை நாட்டில் ஒழிந்து போகுமா என்பது சந்தேகமே! கைநிறையப், பைநிறைய, மடிநிறைய, இரும்புப் பெட்டி நிறையப் பணத்தை ஆண், பெண் இருவரும் வேலை செய்து சம்பாதித்தாலும், மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை மேற்கொண்டும் கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ?

செல்வந்த வீடுகளில் பிறந்த மாப்பிள்ளையும், மணமகளும் வரதட்சணை ஒப்பந்தம் இல்லாமல் இதுவரை இந்தியாவில் எத்தனை திருமணங்கள் நடந்துள்ளன ? கோடியில் ஒன்றா ? ஆயிரத்தில் ஒன்றா ? நூறில் ஒன்றா ? அல்லது பத்தில் ஒன்றா ?


AnpuLLa Aaciriyarukku,

Kittaththatta 3 aaNdukaLaakath Thinnai vaaciththu varukireen. kadithangaLaikkooda vittuvaippathillai..avvaaRee karuththugalth thohuppukaLaiyum thodarnthu paarththu varukireen. Thanjai Saaminaathan, Venkkat Saaminaathan uLLitta palar karuththaadalgalum pala koonangaLil Thinnaip padaipapalargaLai alaci aaraivathai oruvagaik kukudhuppudan cuvaiththu varakiReen.

Sujaathavin KoLLaLLavu kuRiththa aayvu madhippeedum appadiyee en pallaandup paarvaiyodu oththuppoovathu kandu perum viyappadaintheen. KaaraNam enna theriyuma ? Thinnai oru KOOTPATTU ADIPPADAIYILAANA(Principle-Oriented) kalanththayvukkoodam..athanaalthaan! VaLarga UngaL Muyartchi.

Anbudan, A.Passoupathi,Pudhucheeri.8


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

மதிப்புக்குரிய விஞ்ஞான எழுத்தாள நண்பர் திரு இ. பரமசிவன் அவர்கள் எனது திண்ணை விஞ்ஞானக் கட்டுரைகளைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி. செம்மையான தமிழ் நடையில் திறம்பட அவர் திண்ணையில் எழுதிய சிக்கலான, தூய விஞ்ஞானக் கட்டுரைகளை நான் படித்து மகிழ்ந்திருக்கிறேன். அவரது அரிய அறிவியல் படைப்புக்களை நானும் திண்ணையில் எதிர்பார்க்கிறேன்.

‘ருத்ரா ‘ என்னும் புனை பெயரில் நகைச்சுவையுடன் அவர் திண்ணையில் எழுதி வரும் விஞ்ஞான சமூகக் கவிதைகளும் சுவையுள்ள துணிச்சலான படைப்புகள். அவை மனதை ஆடச் செய்யும் ருத்ர தாண்டவம்!

சி. ஜெயபாரதன்


I happened to read the story EnKK from thinnai website. It is written well and describes the feelings well.

Keep up the good job.

The feelings , so true and so real are captured well( rather than conjured up).

Thanks for a good story

Ramesh


Sir

I find your site is interesting and very efficient in updating regularly the articles. I know the editing members are all benevelants and one can ‘t be so demanding.

But may I suggest some useful tips that can be beneficial to irregular(occasional) readers. For instance, the controversial articles about sujata or jayaganthan and their follow-ups or replies by other authors can be followed by ‘links ‘ connected to these related articles to help the readers for better understanding. This initiative would n ‘t be time costing because there ‘s no technical problems behind this ( a hyper-text link to ‘munthaiya…article ‘). I know that even established mass media ‘s web pages don ‘t particulary bother about this problem.

Why not think about it ?

Thanking your for your effort to promote Tamil…

ravi


அரவிந்தன் எழுதிய ஜெயகாந்தன் விமரிசனத்துமேலான விவாதங்கள் என் கவனத்துக்கு வந்தன. அக்கட்டுரை என்னுடைய ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ என்ற நூலை அடியொற்றி எழுதப்பட்டது. ஆனால் என் பெயர் சொல்லப்படவில்லை. டால்ஸ்டாயைப்பற்றிய வரி ஜெயமோகனின் நாவல் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது அதுவும் பெயர்சுட்டப்படவில்லை .என் கருத்துக்கள் சற்று கொச்சைப்படுத்தப்பட்டுள்ளன. நான் ஜெயகாந்தனின் முக்கியத்துவத்தை மறுததவனல்ல. அவரது கருத்தியல் தாக்கத்தை ஏற்றுக் கொண்டவன் தான் தமிழின் சிகர சாதனையாளனாக நான் அக்ருதும் புதுமைப்பித்தனுடந்தான் ஜெயகாந்தனை ஒப்பிட்டிருக்கிறேன். ஜெயகாந்தனின் முக்கியமான படைப்புகளை ஒன்றுவிடாமல் சொல்லியிருக்கிறேன். விமரிசிக்கவே தகுதி இல்லாதவர் என்ற அசட்டுவரியெல்லாம் நான் எழுதவில்லை

எம் வேதசகாயகுமார்


இடதுசாரி மகா சன்னிதானத்துக்கு ஒரு ஹிந்துத்வ சூத்திரனின் பதில்

திரு.ஸ்ரீநிவாஸ்:நீலகண்டன் கட்டுரைக்கு விரிவான பதில் இப்போது எழுதப்போவதில்லை. அவர் தன் தொடரை( ?) முடித்த பின் எழுதுகிறேன். தேவைப்பட்டால் அவ்வப்போது சிறு கட்டுரை/குறிப்புகளை என் எதிர் வினையாக முன்வைக்கிறேன். இதற்கு முக்கியமான காரணம் நேரமின்மை.

விமர்சனம்: விரிவாக திண்ணையில் எழுதுவோரெல்லாம் வேலையத்தவர்கள் என்பதுதான் திரு.ஸ்ரீ நிவாஸின் இந்த ‘நேரமின்மை ‘ பல்லவியின் Subliminal message என எண்ணத் தோன்றுகிறது.

திரு.ஸ்ரீநிவாஸ்: அவர் ‘Historical roots of our Ecological Crisis ‘, Science (155(3767)): 1203- 1207, 1967 என்ற புகழ்பெற்ற கட்டுரையை சான்று காட்டியுள்ளார்.ஆனால் கட்டுரையின் கடைசிப் பகுதியில்(An Alternative Christian View) கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளதை, குறிப்பாக அஸிஸியைப் பற்றி எழுதியுள்ளதை குறிப்பிடவிலலை. லைன் வைட் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து எழுதியுள்ளதும் முக்கியமானது. இது குறித்து ஒரு வரி கூட ஏன் நீலகண்டன் எழுதவில்லை. இந்தக் கட்டுரை வாசகர்களுக்கு எளிதில் கிடைக்காது, ஆகவே யார் நம்மை கேள்வி கேட்கப்போகிறார்கள் என்ற எண்ணமா ?.

பதில்: உண்மையில் திரு.ஸ்ரீநிவாஸ்தான் இங்கு வாசகர்களின் அறியாதவர்கள் என்கிற எண்ணத்துடன் விளையாடுவதாக தோன்றுகிறது.ஏனெனில் அசிசியின் புனித பிரான்ஸிஸ் குறித்து குறிப்பிடுகையில் தொடக்கத்திலேயே லின் வைட் பிரான்ஸிஸ கோட்பாடான ‘விலங்கு ஆன்மா ‘ எனும் சித்தாந்தமே பாரதிய வேர் உடையதாக இருக்கலாம் என குறிப்பிடுகிறார், பிரான்ஸிஸ தத்துவம் நிறுவன கிறிஸ்தவத்தால் தோற்கடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். இதில் எனது மைய கருத்துடன் வேறுபட ஏதுமில்லை என்பதுடன் அதனை மிகவும் ஆதரிக்கும் போக்கு இருப்பதை காணலாம். இருந்தாலும் நான் திரித்து கூறிவிட்டேன் என்றோ அல்லது மொழிபெயர்ப்பில் வேண்டுமென்றே மாற்றிவிட்டேன் என்றோ கூறாதிருக்க நான் லின்வைட்டின் கட்டுரையில் அசிசியின் புனித பிரான்ஸிஸ் குறித்து கூறப்பட்டனவற்றை அப்படியே தருகிறேன். ‘What Sir Steven Ruciman calls ‘the Franciscan doctrine of the animal soul ‘ was quickly stamped out. Quite possibly it was in part inspired, consciously or unconsciously, by the belief in reincarnation held by the Cathar heretics who at that time teemed in Italy and southern France, and who presumably had got it originally from India. It is significant that at just the same moment, about 1200, traces of metempsychosis are found also in western Judaism, in the Provencal Cabbala. But Francis held neither to transmigration of souls nor to pantheism. His view of nature and of man rested on a unique sort of pan-psychism of all things animate and inaminate, designed for the glorification of their transcendent Creator, who, in the ultimate gesture of cosmic humility, assumed flesh, lay helpless in a manger, and hung dying on a scaffold. …The greatest spiritual revolutionary in Western history, Saint Francis, proposed what he thought was an alternative Christian view of nature and man ‘s relation to it; he tried to substitute the idea of the equality of all creatures, including man, for the idea of man ‘s limitless rule of creation. He failed. ‘

ஆனால் கிறிஸ்தவம் தன் இறையியலுடன் அறிவியலின் தரிசனங்களை இணைத்து பரிணமிக்க முடியும் என்பதை மறுக்கவில்லை என்பது மட்டுமல்ல அதற்கான சாத்திய கூறுகளை (தெயில் தி சார்டின் மற்றும் தொப்ஸான்ஸ்கி) ஆகிய மகத்துவமிக்க கிறிஸ்தவ மேதாவிகளையே நான் சான்று கூறியுள்ளேன். அதே சமயம் அத்தகைய இறையியல் கிறிஸ்தவத்தில் பரிணமிக்கையில் இன்று வளரும் நாடுகளில் திருச்சபை ஏற்படுத்தி வரும் ‘ஆசிய ஆத்ம அறுவடை ‘ போன்ற திருக்கூத்துகள் தன்னாலேயே அழிந்துவிடும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். ஆனால் நான் ஏதோ ‘கிறிஸ்தவமே மோசம் ‘ என்று காட்ட லின் வைட்டின் அசிசி குறித்த பகுதியை இருட்டடிப்பு செய்ததாக கூறுவது ….(நான் கேப்டன் ஹாடக்காக இருந்தால் ‘Billions of blistering barnacles ‘ அல்லது ‘Ten thousand thundering typhoons ‘ என்று கூறியிருக்க வேண்டிய இடம்!) வாசகர்களுக்கு கிடைக்காத கட்டுரை அல்ல லின் வைட்டின் கட்டுரை. இணையத்தில் கூகிள் தேடலிலேயே 5க்கும் மேற்பட்ட இணைய தளங்கள் இக்கட்டுரையை முழுமையாக கொடுக்கின்றன. மேலும் இன்றைய இணைய உலகில் இணைய பத்திரிகையில் வாசகர்களுக்கு தகவல்கள் கிடைக்காது என்கிற நினைப்பு கடைந்தெடுத்த ஸ்டாலினிஸ்ட்டுக்கு தான் இருக்க கூடும். நாம் வாழ்வது 2003 இல் 1917 இல் அல்ல என்பதை மறக்க நான் ஒன்றும் பாலிட் பீரோ உறுப்பினரோ இடதுசாரி செமினார்வாலாவோ அல்லவே!

திரு.ஸ்ரீநிவாஸ்: க்யூபாவில் உள்ள நிலை என்ன ? இயற்கையோடு இணைந்த வேளாண்மையினைத்தான் அரசு ஊக்குவிக்கிறது.etc இதை எழுதியவர்,லெவின்ஸ் ஒரு விஞ்ஞானி, ஹார்வார்ட் பல்கலைகழக்த்தில் ஆய்வாளர் etc.

பதில்: சோஷலிச நாடுகளின் சூழல் மாசுபடுத்துதல் அனைத்திலுமே பல முக்கியமான பொது அம்சங்கள் (சோஷலிச மாசுபடுத்தல் என்போமா ?-ஆகா அடுத்த கட்டுரை தொடருக்கு தலைப்பு கிடைத்துவிட்டது!) கொண்டிருப்பது கடந்த 10 வருடங்களில் தெளிவாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. உள்ளே மாசு ஏற ஏற வெளியே மாசின்மை குறித்த பிரச்சாரம் படு அதிகமாக எகிறிப் பாயும் என்பது ஒரு சோஷலிச யதார்த்தம். ஜனநாயக நாடுகளில் உள்ள சில அறிவுஜீவிகள் இந்த பிரச்சாரத்தில் மயங்கிப் போவதும் இயல்பான ஒன்றுதான். போபர்ஸை துப்புதுலக்கிய படு புத்திசாலியான நம்மூர் அம்பி சீனாவின் திபெத் குறித்த மூன்றாம் தர பிரச்சாரத்தை துப்பு கெட்ட தனமாக அப்படியே ஏற்றெடுத்து தன் ‘பளபளா ‘ பத்திரிகையில் அப்படியே வாந்தியெடுத்திருப்பதை பார்க்கலாம். இத்தனைக்கும் அம்பி மற்றபடி நல்ல புத்திசாலி ‘ஜர்னலிஸ்ட்தான் ‘(!). இது ஒருவித மார்க்சிய மனோவியாதி! அமெரிக்காவை சார்ந்த சில முன்னணி பசுமைகள் (of course ‘வெகுஜன ‘ பசுமைகள்தான்) சோவியத்தில் மாசு என்ற ஒரு விஷயமே கிடையாது என்று கூறி சான்றிதழ் அளித்து பின்னர் வழிந்த கதையையும் நாம் அறிவோம். (இது குறித்தும் விலாவாரி விளக்கம் வேண்டுமா திரு.ஸ்ரீநிவாஸ் ?) இதே கதைதான் கியூபாவிலும். கியூபாவின் வேளாண்மை மையப்படுத்தப்பட்ட இயந்திர மற்றும் வேதிமயமாக்கலையே அதிகாரபூர்வமாக நடைமுறைபடுத்தியது. அரசு உடைமை பெரும் பண்ணைகள் ஆக்கப் பட்ட விவசாய நிலங்களில் அரசு நிர்ணயித்த கரும்பு உற்பத்தியை அசுரத்தனமாக எட்ட வேண்டிய கட்டாயம் வேளாண்மையை வேதி வேளாண்மையை சார்ந்திருக்க வைத்தது. (உதாரணமாக 1970 இல் உற்பத்தி இலக்கு 10 மில்லியன் டன் சர்க்கரை!) சூழல் அறிவியலின் அரிச்சுவடி அறிந்தவர்களும் (அவர்கள் கட்சியின் பாலிட் பீரோ உறுப்பினர்களாக அல்லது தங்கள் நிழல் எஜமானர்களை நன்கறிந்த செமினார்வாலாக்களாக இல்லாத பட்சத்தில்)இத்தகைய நடவடிக்கைகள் பெரும் சூழல் சீரழிவுக்கு வழி வகுக்கும் என்பதை அறிவார்கள். கியூபாவின் முக்கிய மாசு பிரச்சனைகளில் ஒன்றாக நைட்ரேட் உர உற்பத்தியின் விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளதே இதற்கு சான்றாகும். இன்னமும் பல அடுக்கலாம், அண்மையில் கியூபா பசுமை தன்னார்வ அமைப்புகளை தடை படுத்தியது வரை.

திரு.ஸ்ரீநிவாஸ்:அரவிந்தன் என் கட்டுரையை எதிர்கொள்ளவில்லை.காரணம் வெளிப்படை.

விமர்சனம்: ஆம். ஏனெனில் என்னை பொறுத்தவரை அவை கட்டுரைகளே அல்ல. ஒரு இடதுசாரிக்கான பசுமை இயக்கங்கள் குறித்த நூல்களின் பின்பக்க குறிப்புகளிலிருந்து பாதி செமித்த-செமிக்காத துணுக்கு தொகுப்புகளில் எதிர்கொள்ள என்ன இருக்கிறது ?

திரு.ஸ்ரீநிவாஸ்: இடது சாரிகள் நிலைப்பாடு ஒரு புறம் இருக்கட்டும். நர்மதை பள்ளதாக்குத் திட்டங்கள் போன்றவை குறித்து அவர் கருத்து என்ன ? நதி நீர் இணைப்பு திட்டம் குறித்து அவர் என்ன கருதுகிறார் ? பிரண்ட்லைன் அருந்ததி ராயை ஆதரிக்கலாம், சீன அரசையும் ஆதரிக்கலாம்.அரவிந்தன் நீலகண்டன் தன்னுடய நிலைப்பாட்டினை ஏன் எழுதவில்லை.இடதுசாரிகளை எதிர்ப்பது என்பது மட்டும்தானா அவரது நிலைப்பாடு ?

விமர்சனம்: கேரளத்தில் புலையர் குழந்தைகள் ‘உயர் சாதி ‘ குழந்தைகளுடன் படிப்பதை எதிர்த்த மார்க்சிய முற்போக்குகளின் சித்தாந்த வாரிசுகளின் குடும்ப பத்திரிகைகளில் ( ‘குஜராத் புளுகு பின் மன்னிப்பு ‘ புகழ் + வன பகுதி நில ஆக்ரமிப்பு மாளிகைவாசி)அருந்ததி ராயும் ஆதரிக்கப்படலாம்; பாரதத்தை வெட்கங்கெட்ட முறையில் துரோகமாக ஆக்ரமித்துள்ள, ஆக்ரமிக்க துடிக்கும் சீனத்தையும் ஆதரிக்கலாம்.ஆனால் பன்மை பேணுதல் குறித்த ஒரு கட்டுரை தொடரில் நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து எனது நிலைப்பாடு பற்றி கூறாததுதான் இடதுசாரி மகா சன்னிதானத்துக்கு பிரச்சனை ஆகிவிட்டது!

திரு.ஸ்ரீநிவாஸ்: இதில் கவனமாக தவிர்க்கப்பட்ட பெயர் மகாத்மா காந்தி….காந்தியின் பெயர் தவிர்க்கப்பட காரணம் என்ன……விவேகானந்தர் பெயர் ஏன் முன்னிறுத்தப்படுகிறது ? காந்தியம் ஹிந்துத்வாவிற்கு எதிரானது என்பதால்தான் அவர் காந்தியைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கிறார் என்பது வெளிப்படை….விவேகானந்தர் சூழல் பிரச்சினைகள் பற்றி ஏதேனும் எழுதியுள்ளரா என்பதையும் அவர் தெரிவிக்கட்டும்.

பதில்: மகாத்மாவை ஏன் தவிர்த்திருக்கிறேன் என்பது மிகவும் நியாயமான கேட்கப்பட வேண்டிய கேள்வி. அதேசமயம் ‘விவேகானந்தர் பெயர் ஏன் முன்னிறுத்தப்படுகிறது ? காந்தியம் ஹிந்துத்வாவிற்கு எதிரானது ‘ என்பதெல்லாம் காந்தியம் குறித்தோ ஹிந்துத்வா குறித்தோ முதல்நிலை தகவல் அற்றவர்கள் கூறும் கூற்று. காந்திய சுதேசியமும் சரி ஹிந்துத்வ சுதேசியமும் சரி மண் சார்ந்த மரபுகளின் முக்கியத்துவத்தை, அவற்றை ஆக்ரமிப்பு சித்தாந்தங்களிலிருந்து காப்பதில் மிகத் தீவிரமான முக்கியத்துவத்தை மகாத்மா முன்வைத்திருக்கிறார். ஸ்வாமி விவேகானந்தரும் அவ்வாறே. மகாத்மாவின் மீதான விவேகானந்த தாக்கமும் அவ்வாறே. ‘பாரத சமுதாயத்தை முழுமையாக ஒரு தெய்வ வடிவமாக தரிசித்தவர் ஸ்வாமி விவேகானந்தர். ‘நர சேவையே நாராயண சேவை ‘ எனும் அப்பெரும் முழக்கம் போல யுவ பாரதத்தை தலைமுறைகளுக்கு தாமஸ உறக்கத்திலிருந்து

விழிப்படைய செய்யும் வேறெதுவும் உண்டா ? 1901 இல் மகாத்மா ஸ்வாமி விவேகானந்தரை காண பேலூர் வந்தார் என்றும் அப்போது உடல்நிலை காரணமாக ஸ்வாமிஜி பேலூரில் இல்லை எனவும் மகாத்மா குறிப்பிடுகிறார். ஸ்வாமிஜியின் பேச்சுகள் மற்றும் எழுத்துக்களால் தன் தேசப்பற்று பல்லாயிரம் மடங்கு அதிகரித்ததாகவும் கூறுகிறார். ரோமயின் ரோலந்தும் பிற்கால தேசிய காந்திய எழுச்சியின் வேர்கள் ஸ்வாமி விவேகானந்தரிடமிருந்தே பெறப்பட்டதை கூறுகிறார்.மகாத்மாவின் இஸ்லாமிய பரிவு சில ஹிந்து தேசிய வாதிகளிடம் அவருக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்தியதும் அது அவரது கொலையில் முடிந்ததும் ஹிந்துத்வத்தின் பரிணாமத்தில் மிகவும் சோகமான, வெட்ககரமான விஷயமே ஆகும். ஆனால் ஹிந்துத்வ சிந்தனையில் ஓர் ஜீவ நதியாகவே மகாத்மாவினை ஹிந்துத்வவாதிகளான நாங்கள் அறிகிறோம். வலிமையான, சாதி வேறுபாடுகளற்ற ஹிந்து சமுதாயம், மதமாற்றங்களற்ற சமுதாயத்தில் சிறுபான்மையினருடனான சகோதர உறவுகள், கலாச்சார தேசியத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை ஆகியன ஹிந்துத்வ இயக்கங்களையும் காந்தியத்தையும் இணைப்பவை. ‘இதில் கவனமாக தவிர்க்கப்பட்ட பெயர் மகாத்மா காந்தி ‘ என அவர் குறிப்பிடும்படியானதற்கு காரணம் ‘இறைவனையும் மனிதனையும் ‘ இணைத்து பார்த்து சேவையை வாழ்வின் ஆன்மிக சாதனையாக முதலில் குறிப்பிட்டவர் ஸ்வாமிஜியே ஆவார். நான் குறிப்பிட்ட அனைவருமே இந்த விவேகானந்த வாசகத்தை தம் வாழ்வில் ஏற்றவர்கள் ஆவர். பகுகுணா ஸ்ரீ கிருஷ்ணனையும் ஸ்ரீமத் பாகவதத்தையும் முன்னிறுத்தி தன் சூழலியல் இயக்கத்தை நடத்தியவர். அண்ணா கஸாரே அவர்களை விவேகானந்த கேந்திரத்தில் சந்திக்கும் பாக்கியமும் கேந்திரத்தின் முதுபெரும் ஊழியருடன் அவர் உரையாடுகையில் அருகில் இருக்கும் பாக்கியமும் எனக்கு கிட்டியுள்ளது. (மொழிப்பிரச்சினை காரணமாகவும், முதிர்ச்சியின்மை காரணமாகவும் நான் அவ்வுரையாடல்களில் பங்கு கொண்டதில்லை, வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்துள்ளேன்.) ஸ்வாமிஜியின் தீவிர பக்தர் அவர். அவரது வாழ்வை மாற்றியதே ஸ்வாமிஜியின் நூலை அவர் ஒருநாள் ரயில்வே பிளாட்பாரத்தில் படிக்க நேரிட்டது தான் என அவரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது. அரசியல்வாதிகளுடன் அவர் ஊழலுக்கு எதிராக போராடுவது இன்று நேற்றல்ல, மதச்சார்பற்ற சோஷலிஸ்ட்கள் காலத்திலும் நடந்தது, சிவசேனா-பாஜக காலத்திலும் நடந்தது, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் காலத்திலும் நடந்தது. பல ஸ்வயம் சேவக முழுநேர ஊழியர்களுக்கு ஹஸாரேயின் கிராம பணியே மாதிரியாக கற்பிக்கபடுவதுடன் அவர்கள் அக்கிராமத்திற்கே அழைத்து செல்லப்பட்டு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஸ்வாமி விவேகானந்தரின் பெயர் முன்னிறுத்தப்படுவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. இது நான் சார்ந்திருக்கும் இயக்கங்கள் பற்றியதன்று, மாறாக தனிப்பட்ட முறையிலானது. ஹிந்துத்வ இயக்கங்களும் சரி ஹிந்து சூழலியல் இயக்கங்களும் சரி மகாத்மாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதே உண்மை. ஆனால் தொழில்நுட்பமும் மானுட நலமும் இணைந்ததோர் இயக்கமாக சூழலியல் இயக்கங்கள் இருக்க வேண்டியது அவசியம். மானுட நலனுக்காக தன்னையே அழிக்கும் இதயமும், பிரபஞ்சத்தின் இரகசியங்களை அஞ்சாது எதிர்கொள்ளும் அறிவுத்திண்மையும் தேவை. அத்தகைய பண்புகளை நம் தேச மக்கள் முன் முதலில் வைத்தவர் ஸ்வாமிஜியே ஆவார். வங்காள அறிவியலாளரான சத்தியேந்திர நாத் போஸ் தெயில் தி சார்டினுக்கும் ஸ்வாமி விவேகானந்தரின் சிந்தனைகளுக்குமான ஒற்றுமைகளை சுட்டிக்காட்டியுள்ளார். மானுட பரிணாமம் சூழலியல் ஆகியவை குறித்து தெயில் தி சார்டினின் சிந்தனைகளின் முக்கியத்துவம் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்று என்ற போதிலும், இயற்கை, பரிணாமம் ஆகியவை குறித்த ஸ்வாமி விவேகானந்தரின் சிந்தனைகள் அந்த அளவு பிரபலமடையவில்லை. ஆனால் அறிவியல் வளர்ச்சியில் தாக்கம் என காண்போமேயானால் ஸ்வாமி விவேகானந்தர் போல ஒரு ஆன்மிகவாதி யென கருதப்பட்டவரால் பாரதத்தில் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்ட அளவு வேறு எங்காவது ஒரு ஆன்மிகவாதியால் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டிருக்குமாவென்பது சந்தேகமே. தொழில்நுட்பம், பன்மை பேணல், முடிவிலா தயை, வீரம், அறிவுத்திண்மை ஆகிய அனைத்திற்குமான ஒரு பாரத உருவாக்கமாக நான் ஸ்வாமி விவேகானந்தரை கருதவதாலும், அவரது ‘நரசேவையே நாராயண சேவை ‘ எனும் வார்த்தைகளின் தாக்கம் அனைத்து சூழலியல் களப்பணி வீரர்களின் வாழ்க்கை தத்துவமாக இருப்பதாலுமே ஸ்வாமி விவேகானந்தரை முன்னிறுத்தினேன். வேண்டுமென்றே மகாத்மாவின் பெயர் அவர் ஹிந்துத்துவத்திற்கு எதிரானவர் என்பதற்காக தவிர்க்கப்பட்டிருப்பதாக என் மீது குற்றம் சாட்டும் முன் திரு.ஸ்ரீநிவாஸ் எனது முந்தைய சாண எரிவாயு தொடர்பான கட்டுரைத்தொடரினையும் ஒப்பிட்டிருக்க வேண்டும். அதுவும் சூழலியல் தொடர்புடையதுதான். மகாத்மாவின் மாணாக்கரான ஜேம்ஸ் கர்னீலியஸ் குமரப்பா குறித்தும் குமரப்பாவின் குரு மகாத்மா என்பதும் தெள்ளத் தெளிவாக அக்கட்டுரை தொடரில் கூறப்பட்டுள்ளன. இருட்டடிப்பு செய்பவன் எல்லா இடத்திலும் செய்வது தானே. மேலும் இக்கட்டுரைத் தொடர் முடியவில்லை என்பதையும் திரு.ஸ்ரீநிவாஸ் நினைவில் கொண்டிருக்க வேண்டும். நான் சாண எரிவாயு குறித்த கட்டுரைத்தொடரில் ரெட்டியை ஒருமுறை குறிப்பிட்டதை ஞாபகமாக கூறும் ஸ்ரீநிவாஸ் அத்தொடரில் மகாத்மாவினால் உருவாக்கப்பட்டதாக குமரப்பா குறித்து கூறுவதையும், காந்திய சிந்தனையாளர் என்றே குமரப்பாவை மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதையும் ஏன் மறைக்கிறார் ?

திரு.ஸ்ரீநிவாஸ்:பாரம்பரிய அறிவு குறித்து இடதுசாரிகளுக்கும் தெரியும்.வைதிக,அவைதிக மரபுகள் குறித்து அவர்கள் எழுதியுள்ளார்கள்.

பதில்: ‘தட்சனுக்கு அறிவு ஏராளம் ஏராளம். ஆனால் அதைவிட ஆணவம் ஏராளம் ஏராளம் ‘ என்கிற திருவிளையாடல் வசனம் தான் நினைவிற்கு வருகிறது. (மன்னிக்கவும். சத்யஜித்ரே ரேஞ்சிலெல்லாம் எனக்கு ‘quote ‘ செய்ய தெரியாது. ஏதோ ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்று ஏபிஎன் பட வசனத்தை ‘quote ‘ செய்தேன்.) இந்த பாரம்பரிய அறிவுக்கான ஒரே ஒரு எடுத்துக்காட்டை தருகிறேன். ஒரு ஐரோப்பிய வரலாற்றாசிரியனை எடுத்துக்கொள்வோம். அவன் அனைவருக்குமாக ஒரு பொது வரலாற்று நூலை எழுதுகிறான் என்றும் வைத்துக்கொள்வோம், அத்தகைய நூலில் அவன் ஏசுவுக்கு ‘நியூரோஸிஸ் ‘ மற்றும் ஹிஸ்டாரியாதான் பின்னர் சமுதாய சூழல்களால் பெரிய இயக்கமாயிற்று என்று எழுதினால் என்ன நடக்கும் ? (ஒரு ஆய்வுத்தாளாக அல்லது ஒருகிறிஸ்தவ எதிர்ப்பு நூலாக இத்தகைய ஒரு கருத்து வந்தால் பிரச்சனை ஆகாது. ஆனால் ஒரு பொது நூலில் இத்தகைய ஒரு வாசகம் வந்தால் அது நியாயமாகவே பெரும் பரபரப்பையும் மதச்சார்பற்றவர்களிடையே கூட கண்டனத்தையும் உருவாக்கும்) ‘பொது மக்களுக்காக எழுதப்பட்டதாக ‘ அறிவிக்கப்படும் ரொமிலா தாப்பரின் ‘A History of India ‘ (பெங்குவின், 1966) கூறுகிறது, ‘சைதன்யர் என்கிற வங்காள பள்ளி ஆசிரியர் ஒருவித அதீத ஹிஸ்டாரியத்தன்மை கொண்ட அனுபவத்திற்கு பிறகு கிருஷ்ண பக்தரானார். ‘ இவ்வாறு வேறு ஏதாவது மதஸ்தாபகரை குறித்து எழுதப்பட்டால் ரொமிலா தாப்பர் இன்று பத்வாக்களுக்கு பயந்து ஆயிரம் முறை மன்னிப்பு கேட்க வேண்டி வந்திருக்கும். இதைப்போல மார்க்ஸிய ‘இந்தியவியலாளர்களின் ‘ எழுத்துகளில் பாரத ஞான மரபுகள் திரிக்கப்படுவதையும், கொச்சைப்படுத்தப்படுவதையும், ரோமிலா தப்பார் முதல் சுவீரா ஜெயஸ்ச்வால் வரை பல நூறு சான்றுகளுடன் விளக்கமுடியும். பாரம்பரிய அறிவு குறித்து இடதுசாரிகளுக்கும் தெரியுமாயிருக்கும் வைதிக,அவைதிக மரபுகள் குறித்து அவர்கள் எழுதியியும் இருப்பார்கள் (கிறிஸ்தவ மிசினரிகளும் காலனிய வாதிகளும்தான் எழுதியுள்ளார்களே அதைப்போல.) ஆனால் அம்மரபுகளின் நல் அம்சங்களை மதித்து, தம் வாழ்வுடன் இணைத்து தேசநலனை மேம்படுத்தும் தன்மையை இழந்தவர்கள் இடதுசாரிகள் என்பதுதான் உண்மை. தங்கள் இந்த குறை குறித்து அவர்கள் அறியவும் இயலா சித்தாந்த ஊனமுற்றவர்களாக இருப்பது பரிதாபகரமான மற்றொரு உண்மை.

திரு. ஸ்ரீநிவாஸ்: இந்த சந்தர்ப்பத்தில் நான் இன்னொரு அறிவியலாளர்-சிந்தனையாளர் பற்றியும் பேச வேண்டும். அமரர் அமுல்ய குமார் ரெட்டி (A.K.N Reddy)- மாற்று ஆற்றல் குறித்து ஆய்ந்தவர்,இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் இதை சாத்தியமாக்குவதற்காக பாடுபட்டவர்.நீலகண்டன் தன் கட்டுரைகளில் இவர் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.ஒரே ஒரிடத்தில் தவிர, அதுவும் ரெட்டி என்ற பெயரில், ஒரு கட்டுரையை குறிப்பிட்டு. ..அணுமின் ஆற்றல் குறித்து நீலகண்டன் எழுதியுள்ளது ரெட்டியின் கருத்துக்கு முரணாக உள்ளதால் ரெட்டியின் எழுத்துக்கள்,கருத்துக்கள் கவனத்துடன் தவிர்க்கப்பட்டுள்ளதாக நான் யூகிக்கிறேன்.அணுமின்சக்திக்கு, அணு ஆய்விற்கு ஒதுக்கப்படும் நிதியையும், மாற்று ஆற்றல் சக்திகளுக்கு ஒதுக்கப்படும் நிதியையும் ஒப்பிட்டால் அரசின் முன்னுரிமை எதற்கு என்பது புலனாகும்.அதுவும் தேவை, இதுவும் தேவை என்று எழுதுபவர்கள் மறைக்கும் அம்சங்களில் இதுவும் ஒன்று.

பதில்: அமுல்ய குமார் ரெட்டியை, ரெட்டி என்று குறிப்பிட்டதன் காரணம் அவர் பாரத அணுஆயுத சோதனைகளை எதிர்த்ததால் என்கிறார். இதே ரீதியில் அவர் காரணம் காட்டினால் திரு.ரவி.கே.ஸ்ரீநிவாஸை திரு. ஸ்ரீநிவாஸ் என நான் குறிப்பிடுவது கூட அவர் மார்க்ஸிஸ்ட் என்பதால் என்றுவிடுவார் போல. ‘அணுமின்சக்திக்கு, அணு ஆய்விற்கு ஒதுக்கப்படும் நிதியையும், மாற்று ஆற்றல் சக்திகளுக்கு ஒதுக்கப்படும் நிதியையும் ஒப்பிட்டால் அரசின் முன்னுரிமை எதற்கு என்பது புலனாகும்.அதுவும் தேவை, இதுவும் தேவை என்று எழுதுபவர்கள் மறைக்கும் அம்சங்களில் இதுவும் ஒன்று ‘ என்று திரு.ஸ்ரீநிவாஸ் குறிப்பிடுவது காஸ்ட்ரோவின் சின்ன சிவப்பு சுவர்க்கத் தீவு கியூபாவுக்குள் 3 பெரும் அணுசக்தி கேந்திரங்களில் 12 அணுமின் உலைகள் இருப்பதை குறித்ததாக இருக்க முடியாது அல்லது சீனா நடத்திய 75க்கும் (100 ?) மேற்பட்ட அணு ஆயுத சோதனைகள் குறித்ததாகவும் இருக்க முடியாது, அதெல்லாம் இந்தியாவுக்கு அதுவும் குறிப்பாக வாஜ்பாய் அரசின் கீழ் நடந்த 5 அணு சோதனைகளுக்கு மட்டும்தான் பொருந்தும். நான் மிகத் தெளிவாகவே கூறிவிடுகிறேன். ‘இந்திய சாண எரிவாயு அல்லது எந்த மீள் பயன்பாட்டு ஆற்றல் மூல தொழில்நுட்பங்களும் தோல்வி அடைந்ததற்கு காரணம் சோஷலிச அரசுத்தனமான பரவு முறைகள் மேற்கொள்ளப்பட்டதுதான். வலிமையான உள்நாட்டு சந்தைகளை உருவாக்கமால் இன்று பன்னாட்டு கம்பனிகளை திறந்து விடுவது சோஷலிசம் நம்மை குழியில் தள்ளியதால்தான். இன்று நம் நாடு பகை நாடுகளால், ஆக்ரமிப்பு சித்தாந்த நாடுகளால் சூழப்பட்டு உள்ளதால் நாம் அணு ஆயுத நாடாக நம்மை மாற்றுவதில் தவறில்லை. ‘

திரு. ஸ்ரீநிவாஸ்: அரவிந்தன் நீலகண்டன் தான் என்ன எழுதினாலும் படிப்பவர்கள் நம்பிவிடுவார்கள் என்று நினைக்கிறாரா ?.

விமர்சனம்: சே! அப்படி நினைக்க நான் என்ன திரு.ரவி ஸ்ரீநிவாஸா ?

திரு. ஸ்ரீநிவாஸ்: பசுமை இயக்கங்களுக்கும் , இடதுசாரிகளுக்கும் (ஒரு பரந்துபட்ட பொருளில்) உள்ள பல முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகள் . பிரிட்டிஷாரின் divide and rule தந்திரங்கள் இங்கு செல்லுபடியாகாது என்பதை அவருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். காவி இயக்கங்கள், ஹிந்த்துவ இயக்கங்களுக்கும், பசுமை இயக்கங்களுக்கும் உள்ள முரண் பகை முரண். இதுதான் கருத்தியல் ரீதியாகவும்,நடைமுறையிலும் உள்ள நிலை.

பதில்: என்ன ஒரு நட்பு! திபெத்தில் நடக்கும் சூழலியல் மற்றும் பண்பாட்டு அழிவுகளுக்கும் சூழலியலின் அடிப்படை கோட்பாடுகளுக்குமான உறவு போல நட்புக்கு இலக்கணத்தை துரியோதன-கர்ண சிநேகிதத்தில் கூட காண முடியாதே! 1960லில் தான் பசுமை இயக்கங்கள் உருவாக்க தன் நாட்டில் அனுமதி அளித்து 1980களில் தடைசெய்த காஸ்ட்ரோ அரசுக்கு பல்லாண்டு பாடும் திரு.ரவி ஸ்ரீநிவாஸுக்குதான் பசுமை இயக்கங்களுடன் என்ன ஒரு பாசம்! ஆனால் இன்றைக்கு பாரதத்தில் பண்பாட்டு பன்மை-பசுமையியல் பன்மை ஆகியவற்றில் முழுமைப்பார்வையுடன் களப்பணியாற்றும் ஒரு இயக்கமாக விளங்குவது செமினார்வாலாக்களல்ல. மாறாக பாரதிய மரபில் அதன் மதிப்பீடுகளில் நம்பிக்கை கொண்ட இடதுசாரிகளற்ற இயக்கங்கள்தாம்! அசோலா முதல் சாண எரி வாயு வரை தொழில்நுட்ப வளர்த்தெடுப்பிலும் சரி அதனை மக்களிடம் கொண்டு செல்வதிலும் சரி ஹிந்துத்வ வேர் கொண்ட பல இயக்கங்கள் மகத்தான சேவை புரிந்துள்ளன; புரிந்து வருகின்றன. மகாத்மா காந்தி, டாக்டர் ஜே.சி.குமரப்பா (வேண்டுமென்றே அவர் கிறிஸ்தவ பெயரை நான் மறைத்துள்ள சதியின் ‘motive ‘ குறித்து விரைவிலேயே நம் இடதுசாரி ஷெர்லக் ஹோம்ஸிடமிருந்து ‘திடுக்கிடும் பரபரப்பான ‘ தகவல்களை வாசகர்கள் எதிர்பார்க்கலாம்!) ஆகியோரது தொழில்நுட்ப, சமுதாய, சூழலியல் பசுமை சிந்தனைகள் நனவாகும் சேவை மையங்களை நாகபுரி ஆலின் விழுதுகளாக தேசமெங்கும் காட்டமுடியும்.

அரவிந்தன் நீலகண்டன்


அன்புள்ள ஆசிரியருக்கு,

ஜெயமோகனின் கடிதத்தில் குறிப்பிடப்படும் சில விஷயங்களைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். நண்பர்கள் என் முந்திய கடிதத்தை மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும். அதில் நான் எழுப்பி உள்ள பல கேள்விகளுக்கு, பெரிய நாவல் எழுதிய பிறகு இளைப்பாறுவதற்காக குட்டி நாவல் எழுதும், எழுத்தாளர் ஜெயமோகன் ஆயாசம் மேலிட்டு பதில் எழுத மறுக்கிறார். எழுதமுடியாது என்பதுதான் உண்மையான காரணம். அவருடைய குற்றச்சாட்டுகள் கற்பனையும் பொய்யும் கலந்தவை என்பதும் என்னுடைய கேள்விகளுக்குப் பின்னால் எழுத்துபூர்வமான ஆதரங்கள் உள்ளன என்பதும் அவருக்குத் தெரியும்.

கவிஞர் தேவதேவன் பற்றி ஜெயமோகன் குறிப்பிடும் விஷயத்தை ஆராய்வது ஒவ்வொரு விஷயத்திலும் அவர் எப்படி கற்பனையும் பொய்யும் கலந்து பேசுவார் என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கும். ஜெயமோகன் எழுதுகிறார்:

‘தன் நாடக நூல் ஒன்றில் அவர் ‘அவரைவிட நான் நன்றாக அந்நாடகத்தை எழுதிவிடமுடியும் ‘ என்று சொல்லியிருந்தார். அந்த வரியை எடுத்துக் கொடுத்து அதற்கு மேல் என் நண்பர் செந்தூரம் ஜெகதீஷ் ‘ஜெயமோகனை காக்கா பிடித்து நல்ல மதிப்புரை பெற சிலர் முயல்கிறார்கள் ‘ என்று வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொன்ன வரியை எடுத்துக் கொடுத்திருந்தார்கள். ‘

இப்போது காலச்சுவடு இதழில் வெளியானது என்ன என்று பார்க்கலாம். காலச்சுவடு (இதழ் 28, 2000) ‘கண்டதும் கேட்டதும் ‘:

விமர்சனங்களை சகிப்புத்தன்மையுடன் வரவேற்கிறவர்கள் வளர்கிறார்கள். எதிர்மறையான விமர்சனம் வரும்போது, எதிரியின் குரலாக அடையாளம் காணப்படுகிறது. சொறிந்து விடுவது, பாராட்டுவது, கூடவே இருந்து குலைவதுதான் விமர்சனம் என்று நினைக்கிறவனை குமட்டிலேயே குத்த வேண்டும். அடியாட்களை வைத்து இலக்கியத்தில் சாதித்து விடலாம் என்று நினைக்கிறவர்களை எண்ணி பரிதாபப்படுகிறேன்.

செந்தூரம் கே. ஜெகதீஷ், வேட்கை, ஜூலை-செப். ’99

அவருக்கு (ஜெயமோகன்) நான் எழுதிய கடிதத்தில் உங்களால் இந் நாடகத்தை என்னைவிடத் திறமையாக எழுதியிருக்க முடியும் என்று கூறியது மனப்பூர்வமான ஒரு கூற்றுதான் . . .

அலிபாபாவும் மோர்ஜியானாவும் நாடக நூலின்

முன்னுரையில் தேவதேவன்

இதில் ஜெயமோகனின் கற்பனைக்கு மாறாக அவருடைய நண்பர் செந்தூரத்தின் மேற்கோளில் ‘ஜெயமோகன் ‘ என்ற பெயர் குறிப்பிடப்படவே இல்லை என்பதை கவனியுங்கள். மூலத்தில் இல்லாத பெயர் இவர் கற்பனையில் குடிபுகுந்திருப்பதன் பின்னணி என்ன ? குற்ற உணர்வா ? இது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் ஜெயமோகனை ஏன் இன்றும் சுட்டுக் கொண்டிருக்கிறது ?

தேவதேவன் காலச்சுவடுக்கு அன்னியமானவர் அல்ல. அவர் கவிதைகள் பலமுறை காலச்சுவடில் வெளிவந்துள்ளன. ஆனால் ஒரு படைப்பாளி தன் நாடக நூல் முன்னுரையில் தனக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி, தன்னைவிட இதை சிறப்பாக எழுதுவார் என பதிவு செய்வது அவருடைய சுயமரியாதைக்கு இழுக்கல்லவா ? உலக இலக்கிய வரலாற்றில் இதற்கு முன்மாதிரி இருக்காது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒரு விமர்சன நூலை எழுதி, சுயமரியாதையுடன் வாழ்ந்து கொண்டிருந்த படைப்பாளியை இந்த நிலைக்கு சிரழிந்தது யார் ?

இந்தக் கேள்விகளை சூழலில் எழுப்புவதுதான் இதை வெளிவிட்டதன் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது என்பது ஜெயமோகன் இதை மீண்டும் மீண்டும் விவாதங்களில் குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது.

இந்த மேற்கோள்களை தேர்வு செய்து வரிசைப்படுத்தியது நான்தான். இவை தம்மளவில் முழுமையானவை. வெட்டி ஒட்டப்பட்டவை அல்ல. இவற்றின் முன்பின் உள்ள வாக்கியங்களால் இவற்றின் அர்த்தம் மாறுபடுமெனின் ஜெயமோகன் அதை வெளிப்படுத்தட்டும். ஒரு எழுத்தாளனின் கூற்றை அவன் எதிர்கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்துவது அவமரியாதையா ? தன் ஒவ்வொரு சொல்லுக்கும் பொறுப்பேற்க வேண்டிய கடப்பாடு எழுத்தாளனுக்கு உண்டு.

ரமேஷ் பிரேம் பேட்டி தொடர்பாக பதில் எழுதும்படி சாருவிடம் கேட்டதாக ஜெயமோகன் கூறுவது பொய். தன் எந்தக் கூற்றுக்கும் எந்த ஆதாரத்தையும் அவர் வழங்குவது இல்லை. அவதூறு என்பது இதுதான்.

ஜெயமோகனுக்கும் ராஜநாயகத்திற்கும் தொடர்பு இருந்தது என்பதால் அவருடைய பல கடிதங்கள் ஜெயமோகனிடம் இருக்கும். எனக்கும் ராஜநாயகத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் எந்த ஒரு விரிவும் அதில் இருக்காது. ஜெயமோகனால அதன் ஒளிநகலை திண்ணைக்கும் எனக்கும் அனுப்ப முடியுமா ? இது அவருக்கு நான் விடும் சவால்.

பலரையும் காலச்சுவடு ‘பயன்படுத்தி ‘யுள்ளது பற்றி ஜெயமோகன் குறிப்பிடுவது உண்மைதான். முதலில் அது ஜெயமோகனை ‘பயன்படுத்தி ‘யுள்ளது. மனுஷ்யபுத்திரனை ‘பயன்படுத்தி ‘யுள்ளது. இன்னும் பலரையும். இப்போது ரவிக்குமாரையும் அரவிந்தனையும் சிபிச்செல்வனையும் அய்யனாரையும் ‘பயன்படுத்தி ‘ வருகிறது. இதில் மறைக்க எதுவும் இல்லை. அதுபோல இவர்கள் எல்லோருக்கும் காலச்சுவடு ‘பயன்பட்டி ‘ருக்கிறது, ‘பயன்பட்டு ‘வருகிறது. ‘பயன்பட்டது ‘ அதிகமா ‘பயன்படுத்தி ‘யது அதிகமா என்பது அவரவர் மனநிலையையும் பார்வையையும் பொறுத்த விஷயம்.

ஜெயமோகனின் வளர்ச்சியில் காலச்சுவடுக்கு இருக்கும் இடம் மறுக்க முடியாதது. அவர் விலகிச் சென்ற பின்னர் ‘ஏறிச் சென்ற ஏணியை எட்டி உதைக்கிறாயா ? ‘ என்றெல்லாம் நாங்கள் ஒருபோதும் புலம்பியதில்லை. எந்த மானுட உறவும் நிரந்தரமானது அல்ல. எல்லா உறவுகளுக்கும் அடிப்படை பொருண்மை ரீதியாகவோ உணர்வு ரீதியாகவோ ‘பயன்படு ‘வதும் ‘பயன்படு ‘த்திக் கொள்வதும்தான். இதைத் தாண்டிய புனிதம் எதுவும் எந்த மானுட உறவிலும் இல்லை.

திண்ணை ஆசிரியர் குழு வெளியிட்ட குறிப்பு தொடர்பாக. நாஞ்சில் நாடன் திண்ணைக்கு எழுதிய கடிதத்தை ஜெயமோகன் திருத்தி வெளியிட்டது பற்றிய ஜெயமோகனின் ‘காதைப் பிளக்கும் மெளனம் ‘ நான் கூறுவது உண்மை என்பதற்கான சான்று. தமிழகத்தில் இன்று 10% எழுத்தாளர்களிடம்கூட இணைய வசதி கிடையாது. நாஞ்சில் நாடனுக்கும் இல்லை. எனவே அவர் திண்ணையில் எதுவும் கூறவில்லை என்பது இணையத்தின் ‘போலி ஜனநாயகம் ‘ தொடர்பான பிரச்சனை.

நாஞ்சில் நாடன் கடிதம் திருத்தப்பட்டது பற்றி நான் திண்ணைக்கு எழுதவில்லை. திண்ணை ஆசிரியருக்கு எழுதிய (ஆங்கில) மின்னஞ்சலில் இதை குறிப்பிட்டிருந்தேன். எனக்கு வாய் சுத்தம் எனவே நம்புங்கள் என அவரை நான் கேட்கவில்லை. நாஞ்சில் நாடன் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்து (அவருக்கு மின்னஞ்சல் முகவரி கிடையாது) கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளும்படி எழுதியிருந்தேன்.

ஒரு மூத்த எழுத்தாளரை நாயாக உருவகித்து எழுதப்பட்ட கதை தொடர்பாக நடந்து கொண்டிருக்கும் விவாதத்தில் இடையீடாக ‘நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்யமாட்டார்கள் ‘ என்று திண்ணை ஆசிரியர் குழு கூறுவது ஒரு அபத்த நாடகத்தில் பேசப்படும் வசனம் போல உள்ளது.

கண்ணன், காலச்சுவடு ஆசிரியர்.


கடிதம்

ஜெயமோகனுக்கு சில வார்த்தைகள்

ஜெயமோகனின் கடிதத்தில் ஒரு தகவல் பிழை. நான் 2001 வரை ஆர்.எஸ்.எஸ்ஸில் பொறுப்பில் இல்லை. 2000, ஏப்ரலோடு ஆர்.எஸ்.எஸ்ஸில் என் பொறுப்பும் தொடர்பும் முடிவுக்குவந்தன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்த நான் ஆர்.எஸ்.எஸ். அதிகார பீடத்தில் ஏறிய சமயத்தில் வெளியே வந்தேன். பலர் உள்ளே நுழையவும் தொடர்புகளைப் புதுப்பித்துக்கொள்ளவும் தேர்ந்தெடுத்த தருணம் அது.

என்னைப் பொறுத்தவரை இயக்கத்திலிருந்து எப்போது வெளியே வந்தேன் என்பதைவிட எந்த அளவுக்கு வெளியே வந்திருக்கிறேன் என்பதே முக்கியம். இயக்க ரீதியான தொடர்புகளை முற்றாகத் துண்டித்துக்கொண்டு விலகியிருக்கிறேன். இயக்கப் பிரமுகர்கள் யாருடனும் கள்ள உறவு வைத்திருக்கவில்லை. இயக்கத்திலிருந்து விலகிய பிறகும் என்னை அன்போடு ‘கவனித்து ‘ வர இயக்கத்தில் எனக்கென்று godfather அல்லது godmother யாரும் இல்லை.

ஒரு இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த ஒருவர் அதிலிருந்து வெளியேறிய பின்னும் அவரது ஆளுமையின் மீதும் செயல்பாடுகள் மீதும் அந்த இயக்கம் சார்ந்த அடையாளத்தின் நிழல் ஒட்டியிருக்கும். அதைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் எதுவுமே செய்ய முடியாது. என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய மனசாட்சிதான் முக்கியம். நான் பதில் சொல்ல வேண்டியது அதற்குத்தான். இந்துத்துவப் பாடத்தைக் கேட்க முடியாமலும் மற்றவர்களுக்குச் சொல்ல முடியாமலும் போனதால்தான் நான் வெளியே வந்தேன். ஜெயமோகன் பரிந்துரைக்கிறார் என்பதற்காக அந்த முயற்சியில் இறங்க என்னால் முடியாது. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எனக்கும் இருந்த தொடர்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுத உத்தேசித்திருப்பதால் இங்கே இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கும்போதே நான் காலச்சுவடு, சுபமங்களா, இந்தியா டுடே ஆகிய இதழ்களில் விமர்சனம்/மதிப்புரை எழுதியிருக்கிறேன். ஆனால் என் பார்வையை ஆர்.எஸ்.எஸ். பார்வை என்று யாரும் சொன்னது கிடையாது. ஜெயமோகன் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் விமர்சனம் எழுதத் தொடங்கியதும் வங்கிக் கட்டிக்கொண்ட வசை அவர் ஆர்.எஸ்.எஸ். பார்வையில் எழுதுகிறார் என்பதுதான். இது ஏன் நடந்தது என்பதை ஜெயமோகன் யோசிக்க வேண்டும்.

கண்ணன் எழுப்பியிருந்த பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத ஜெயமோகன் திடாரென்று விவாதங்கள் கண்டு சலிப்படையும் அவதாரம் எடுக்கிறார். சுந்தர ராமசாமியின் கடிதங்கள் பற்றி மட்டும் பெரிய மனது பண்ணி சில வார்த்தைகளை உதிர்க்கிறார். அதிலும் தவறான/பொய்யான தகவல்களை அளிக்கிறார். சு.ரா. சொல் புதிதுக்கு எழுதிய கடிதங்களை நானும் படித்திருக்கிறேன். டாலர் பற்றிய தகவலுக்குத் திருத்தம் போடும்படி கேட்டுக்கொண்ட சு.ரா., தன்னைப் பற்றிய செய்தியில் தன் புகைப்படத்தைப் போட்டிருக்கலாமே என்று மிக இலகுவான, இறுக்கமற்ற தொனியில் எழுதியிருந்தார். சொல் புதிதில் தொடர்ந்து அவரைப் பற்றி வந்துகொண்டிருக்கும் அவதூறுகள் பற்றித் தீவிரமாக எழுதியிருந்தார். அதையெல்லாம் விட்டுவிட்டு அவரது கடிதங்களைக் கேலிக்கூத்தாகச் சித்தரிக்கும் தந்திரத்திற்கு உதவியாக இந்த வரிகளை மட்டும் தன் போக்கில் மேற்கோள் காட்டுவது நியாயமல்ல. சொல்புதிதுக்கும் சுராவுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து முழுமையாகப் பதிவானால் உண்மை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் பார்த்த ராமசாமி வேறு; இப்போதிருக்கும் ராமசாமி வேறு என்பதெல்லாம் அரசியல்வாதியின் பேச்சு. தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு அமைப்பை/கொள்கையை/ ஆளுமையை விட்டு விலகிய பிறகு உதிர்க்கப்படும் கிளிப்பேச்சு. ஜெயமோகன் மட்டுமல்ல; காலச்சுவடுடன் (கண்ணனுடன் என்று வாசிக்கவும்) விலகல் ஏற்பட்ட பலரும் இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் காலச்சுவடின் மறுவருகைக்கு முன்னும் பின்னும் சு.ராவோடு மாற்றமில்லாத உறவைக் கொண்டுள்ள முக்கியமான ஆளுமைகளும் இருக்கிறார்கள். அவர்கள் கண்ணுக்கு இவர் வேறு ராமசாமியாகத் தெரியவில்லை. ஜெயமோகன் போன்ற சிலரது ஞானக்கண்களுக்கு மட்டுமே தெரியும் இந்த மாற்றத்தை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும். சு.ராவுக்கும் ஜெயமோகனுக்கும் இருந்த உறவு பற்றியும் விலகல் பற்றியும் நன்கு அறிந்தவர்களில் ஒருவன் என்ற முறையில் அந்த ஞானக்கண் தரிசனத்தை நானும் என் அனுபவத்தின் அடிப்படையில் பரிசீலித்துப் பார்க்க முடியும். எதிர்வினையாற்றவும் முடியும்.

உறவு என்பதும் விலகல் என்பதும் வாழ்வின் இயல்பான மாற்றங்கள். இதற்காகப் புலம்புவதைக் காட்டிலும் அதன் காரணங்களை முன்வைத்து நேர்மையாக விவாதிப்பதும் அந்த விவாதத்தின் வெளிச்சத்தில் நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்துகொள்வதுமே முக்கியம். சு.ராவுடன் தனக்கு ஏற்பட்ட பல நெருடல்களை ஜெயமோகன் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். கருத்து வேற்றுமைகளையும் விமர்சனங்களையும் முன்வைக்கும் விதம், கருத்துவேற்றுமைகளுக்கும் உறவுகளுக்கும் இருக்க வேண்டிய தொடர்பு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் நான் அவரோடு விவாதித்திருக்கிறேன். உறவுகளில் சுயவிமர்சனமற்ற அணுகுமுறையே ஜெயமோகனின் பிரச்சினை. நண்பர்கள் கூறும் யோசனைகளை அறிவு தளத்தில் ஏற்றாலும் அனுபவதளத்தில் நடைமுறைப்படுத்த முடியாத தனது பலவீனம் தனது மிகப்பெரிய பிரச்சினை என்பதை அவரே பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். மூத்த ஆளுமைகளுக்கும் அவருக்கும் ஏற்படும் உறவுச் சிக்கல்கள் இதுபோன்ற பல பலவீனங்களின் பின்னணியில் விளங்கிக்கொள்ள வேண்டியவை. மாறாக, நேற்றைய ராமசாமி, இன்றைய ராமசாமி என்று ஒற்றைபடைத் தன்மையிலான வகைப்படுத்தல்கள் எந்தப் புரிதலுக்கும் நம்மை இட்டுச் செல்லாது.

மன்னிப்புக் கேட்க வேண்டிய அளவுக்கு விபரீதமான ஆபாசப் பிரதி ஒன்றை ‘கவனக்குறைவாகப் ‘ பிரசுரித்துவிட்டு அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ளாமல் ‘தலை போகிற வேலை ‘ இருப்பதாகச் சொல்லி ஒதுங்குவது எந்த அறத்தில் சேர்த்தி ? நாச்சார் மட விவகாரங்கள் என்ற அருவருப்பூட்டும் பிரதி பிரசுரிக்கப்பட்டிராவிட்டால் இந்தப் பிரச்சினையே இருந்திருக்காதே. வேலைவெட்டி இல்லாமல் அதை எழுதியதும் பிரசுரித்ததும் யார் ? இந்த ரத்தத்தில் எனக்குப் பங்கில்லை, இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்று ஒதுங்குபவர்கள்தானே ?

என்றாலும், ஜெயமோகனும் சதக்கத்துல்லாவும் மன்னிப்புக் கேட்டுவிட்டதாலும், நான் எழுப்பிய கேள்விகளையும் இலக்கியப்பிரதி – நிஜ மனிதர்கள் தொடர்பான வாதங்களையும் எதிர்கொள்ளாமல் வே.ச.கு. ஒதுங்கிவிட்டதாலும், ஜெயமோகனின் கடிதத்தில் வெளிப்படையாகத் தெரியும் இயலாமையினாலும், பிழைப்பு மற்றும் படைப்பு சார்ந்து எனக்கும் பல வேலைகள் இருப்பதாலும் நானும் இத்தோடு இந்த விவாதத்தை முடித்துக்கொள்கிறேன்.

அரவிந்தன்


சிவகுமாரின் கட்டுரைக்கான எதிர்வினை

மறு பரிசீலனைக்கு முட்டுக்கட்டையாகும் ஆராதனை

அரவிந்தன்

திண்ணை இதழில் திரு. சிவகுமார் அவர்கள் எனக்கு எழுதிய அன்பான மடல் கண்டேன். அது பற்றிய எதிர்வினைகளைப் பதிவுசெய்வதற்கு முன் ஒரு விஷயத்தைக் கூறிவிட விரும்புகிறேன். நக்கல், நையாண்டி கலந்த சிவகுமாரின் சரளமான எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது. பல இடங்களில் அவரது நகைச்சுவை ததும்பும் வரிகளை மிகவும் ரசித்துப் படித்தேன். ஆனால் இத்தனை திறமையும் விழலுக்கு இறைத்த நீராய்ப் போனது கண்டு வருத்தம் அடைந்தேன்.

ஜெயகாந்தனைப் பற்றி எழுத முனையும்போதே அவரது தீவிர வாசகர்களிடம் நான் வசமாக வாங்கிக்கட்டிக்கொள்வேன் என்பதை எதிர்பார்த்தேன். சென்ற இதழில் குத்தலும் கேலியுமாக மத்தளராயன். இந்த இதழில் நக்கலும் நையாண்டியுமாக சிவகுமார். இது தவிர காலச்சுவடுக்கும் ஜெ.கா. அபிமானிகள் பலரிடமிருந்து கடிதங்கள். இதற்கு மறுபுறம் பனிரெண்டாம் வகுப்பைத் தாண்டி வந்தவர்கள் – மன்னிக்கவும், ஜெயகாந்தனைத் தாண்டி வந்தவர்கள் – பலரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்புக்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இவர்களில் 99 விழுக்காட்டினர் சமகால தீவிர இலக்கியப் பரப்பில் முக்கியமான எழுத்தாளர்களாகக் கருதப்படுபவர்கள். இவர்கள் என் கட்டுரையை வெகுவாகப் பாராட்டினார்கள். ஆனால் இவர்கள் இதையொட்டி கடிதமோ கட்டுரையோ எழுதவில்லை. இவர்களைப் பொறுததவரை ஜெயகாந்தனின் படைப்பு என்பது – தீவிர இலக்கிய அரங்கில் – ஒரு செத்த பாம்பு. ஜெயகாந்தனை ஏன் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறீர்கள் என்றுகூட சமகால படைப்பாளி ஒருவர் கேட்டார்.

சிவகுமார் ரொம்பவே சிரமப்பட்டு ஜெயகாந்தனைத் தூக்கி நிறுத்த முயல்கிறார். புதுமைப்பித்தனின் பலவீனங்கள், சுந்தர ராமசாமியின் மேற்கோள்கள் ஆகியவற்றையெல்லாம் அதற்குத் துணையாக சேர்த்துக்கொண்டிருக்கிறார். எத்தனை கதைகள் தேறும் என்பதை வைத்து ஒரு படைப்பாளியை எடைபோட முடியாது; ‘தேறாத ‘ கதைகள் கூட முக்கியமான கதைகளாக இருக்க முடியும் என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். எனவே பு.பியின் கதைகளில் எவ்வளவு தேறும் என்பதைப் பொறுக்கி எடுத்து (இதற்கு சு.ராவின் மதிப்பீட்டையும் துணைக்கழைத்து) ‘பு.பி. கிட்டேயே இவ்வளவு தா(ன்)ய்யா தேறும். ரொம்ப அலட்டிக்காத ‘ என்று சொல்லி ஜெயகாந்தனைக் காப்பாற்ற சிவக்குமார் முயல்கிறார். பு.பியின் எழுத்தில் காணப்படும் பக்குவம், படைப்புத்திறன், செறிவு, மொழி ஆளுமை, கூரிய நகைச்சுவை ஆகிய அம்சங்கள்தான் அவரை ஜெ.கா. போன்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. பு.பியின் தோல்வி பெற்ற கதைகளில்கூட இந்த அம்சங்களை உணர முடியும் என்பதே என் வாதம். பொன்னகரம் போன்ற அவரது ‘பிரச்சாரக் ‘ கதைகள் உள்பட பல கதைகளை வைத்துக்கொண்டு விரிவாக இதை விவாதிக்க முடியும்.

தவிர, பு.பியின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி, சு.ராவின் வார்த்தைகளின் பின்புலத்தைப் புறக்கணித்து மேற்கோள் காட்டி, ஜெ.கா. கதைகளை நியாயப்படுத்திவிட முடியாது. பு.பியின் எழுத்துக்கள் பல குறைகளைக் கொண்டவைதாம். ஆனால் அவ்வளவையும் மீறி அவை ஜெ.கா. எழுத்தைவிட மேலானவை என்பதே என் கருத்து. தமிழ்ப் படைப்புலகம் பல விதங்களிலும் பு.பியை அர்த்தபூர்வமாகத் தாண்டி வந்துவிட்டது. ஆனால் அதை சாத்தியப்படுத்தியவர்களின் பட்டியலில் ஜெ.காவுக்கு இடமில்லை என்பதே என் முடிவு. ஜெ.காவை நான் பு.பியோடு மட்டும் ஒப்பிடவில்லை. லேவ் தல்ஸ்தோய் முதல் ஆதவன்வரை பல எழுத்தாளர்களோடு குறிப்பான உதாரணங்களுடன் உரிய காரணங்களுடன் ஒப்பிட்டிருக்கிறேன். இந்த ஒப்பீடுகளை விரிவாகப் பரிசீலிப்பதன் மூலம் என் பார்வையை சரியாக விளங்கிக்கொள்ள முடிவும் என்றே கருதுகிறேன்.

எளிய சூத்திரங்களின் மகிமை பற்றி சிவகுமார் எனக்குப் பாடம் எடுக்கிறார். ணி = விசி2 என்பது அவ்வளவு எளிய சூத்திரமல்ல என்பதை மட்டும் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சிக்கல்கள் மிகுந்த வாழ்க்கையை எளிய சூத்திரங்களுக்குள் அடக்குவதன் மூலம் வாழ்வு பற்றிய புரிதலை நீர்த்துப்போகச் செய்கிறார் என்பதே ஜெ.கா. மீது நான் வைக்கும் விமர்சனம். எளிய சூத்திரங்கள், புளித்துப்போன வகை மாதிரி பாத்திரங்கள், நீதி போதனை, சத்தம் – இவற்றின் மூலம் செறிவான இலக்கியப் பிரதியை உருவாக்க முடியாது என்பதே என் பார்வை. ஜெ.காவிடத்தில் இந்த அம்சங்கள் காணப்படுவதால் தீவிர வாசகனுக்கு அவர் ஏமாற்றமளிக்கிறார் என்கிறேன் நான். ஜெயகாந்தனைத் தீவிரமாக மறுவாசிப்பு செய்பவர்களால் இதை உணர முடியும் என்று கருதுகிறேன்.

தல்ஸ்தோய், காம்யு, மார்க்வஸ் ஆகியோரைப் படித்த பிறகும் அசோகமித்திரனையும் மெளனியையும் புதுமைப்பித்தனையும் என்னால் படிக்க முடிகிறது. ஜெயகாந்தனைப் படிக்க முடியவில்லை. இது ஏன் என்று யோசிக்கிறேன். எனக்குத் தெரியவரும் காரணங்களை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதுகிறேன். ஜெயகாந்தனின் அபிமானிகள் இந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவதற்கு முன்பு இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்ட பார்வையின் அடிப்படையில் ஜெயகாந்தனை மறுவாசிப்பு செய்துபார்க்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஊதாரித்தனமான வார்த்தைப் பிரயோகம் பற்றிக் கூறினால் ஒருபொருட்பன்மொழி என்கிறார் சிவகுமார். செவ்வியல் இலக்கியம் மற்றும் நீதிநெறி இலக்கியத்திற்கான அளவுகோல்களை நவீன உரைநடைக்கும் பொருத்திப்பார்க்கிறார். பண்டைய இலக்கியத்தில் ஒரு பொருளைச் சுட்டப் பல்வேறு வார்த்தைகளைக் கையாளும்போதும் ஒவ்வொரு வார்த்தையும் வெவ்வேறு அதிர்வுகளை எழுப்புகின்றன. சிவகுமார் உதாரணம் கொடுத்திருக்கும் வரிகளையே இதற்கும் உதாரணமாகச் சொல்லலாம். ஒருபொருட்பன்மொழி காலத்திலேயே ‘எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டனர் ‘ என்று எழுதிய கம்பனையும் பார்க்கிறோம். ‘புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை உள்ளிச் சென்றோர் பழியலர் ‘ (ஈயென இழித்தல் – புறநானூறு) என்று மிகச் சிக்கனமான சொற்களில் விஷயத்தைச் சொன்ன கவிஞர்களையும் பார்க்கிறோம். ஜெயகாந்தன் கொட்டும் வார்த்தைகள் என் வாசக உணர்வைத் துன்புறுத்துகின்றன. சொற்செட்டு என்பது நவீனத்துவ, பின்நவீனத்துவச் சூழலில் மிக முக்கியமான ஒரு அம்சமாகவே கருதப்படுகிறது.

ஜெயகாந்தனின் முதல் கதையிலிருந்து ஓரு வாக்கியத்தை எடுத்து விமர்சித்திருப்பதையும் சிவகுமார் கிண்டலடிக்கிறார். முதல் கதையில் மட்டுமல்ல, தொடர்ந்து அவர் அப்படித்தான் எழுதிவந்திருக்கிறார் என்றும் சொல்லியிருக்கிறேன். சிவகுமார் விரும்பினால் ஆயிரக்கணக்கான வரிகளைத் தொகுத்து அவருக்கு அனுப்புகிறேன் (ஒளி நகலுக்கான பெரும் செலவை அவர் ஏற்பார் என்று நம்புகிறேன்).

சு.ராவின் கூற்றை மேற்கோள் காட்டி ஜெ.காவின் மொழியை சிவகுமார் நியாயப்படுத்துகிறார். சு.ரா. சொல்லாவிட்டாலும் தமிழைத் தன் விருப்பம் போலப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை ஜெயகாந்தனுக்கு இருக்கிறது. அந்தத் தமிழை விமர்சிக்கும் உரிமையும் எனக்கு இருக்கிறது.

ஜெ.கா. படைப்புகளின் மொத்தப் பார்வையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று (மீண்டும் சு.ராவை மேற்கோள் காட்டி) சிவகுமார் கூறுகிறார். நான் அவரது படைப்புகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டிருப்பது என் கட்டுரையை கவனமாகப் படித்தால் தெரியும். ஆனால் சிவகுமார் செய்வதுபோல ‘கலை மக்களுக்காகவே ‘ என்ற தட்டையான சூத்திரமாக ஜெயகாந்தனின் படைப்புப் பார்வையைச் சுருக்குவது அவரது படைப்புகளுக்கு நியாயம் செய்வதாகாது என்றே கருதுகிறேன். ஜெயகாந்தனை இப்படிச் சிறுமைப்படுத்தும் விருப்பம் சிவகுமாருக்கு இருக்கலாம். எனக்கு இல்லை.

படைப்பு பற்றிய மதிப்பீட்டை ‘காலத்தின் கையிலும் வாசகர் கையிலும் ‘ விட்டுவிடும்படி சிவகுமார் அறிவுரை வழங்குகிறார். அப்படியானால் யாரும் எதைப் பற்றியும் விமர்சனம்/மதிப்புரை எழுத வேண்டிய அவசியமே இல்லையே.

பிற்காலத்தில் நான் ‘திருந்தி ‘ ஜெ.காவின் மாண்புகளை ஏற்றுக்கொள்வேன் என்று நம்ப சிவகுமார் ஆசைப்படுகிறார். ஆனால் ஜெயகாந்தனின் அதி தீவிர தொண்டரடிப்பொடியாழ்வார்கள் ‘திருந்துவார்கள் ‘ என்ற நம்பிக்கை எனக்கு இப்போது இல்லை. மறுபரிசீலனை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்களிடம் விவாதிப்பது சாத்தியமல்ல. ஜெயகாந்தனை ஆராதிப்பவன் என்று சொன்னால் பெருமைப்படுபவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அபிமானிகளிடம் மறுபரிசீலனையை எப்படி எதிர்பார்க்க முடியும் ? அறிவார்த்தமான விவாதத்திற்கோ பரிசீலனைக்கோ ஆராதனையைவிடச் சிறந்த முட்டுக்கட்டை எதுவும் இருக்க முடியாது. காலச்சுவடில் என் கட்டுரையைப் படித்துவிட்டு இளம் வாசகர் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவர் தீவிரமான ஜெ.கா வாசகர். என் கட்டுரை அவரை மிகவும் யோசிக்கவைத்ததாகவும் ஜெ.கா. தொடர்பான தனது பிம்பங்களை உடைத்துவிட்டதாகவும் அவர் கூறினார். திறந்த மனத்துடன் படிக்கும், பரிசீலனைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளும் இதுபோன்ற வாசகர்களை முன்வைத்துதான் மதிப்புரைகளும் விமர்சனங்களும் எழுதப்படுகின்றன. ஆராதனை செய்பவர்களை முன்வைத்து அல்ல.

என்னை சு.ராவின் சிஷ்யனாகச் சித்தரிக்க சிவகுமார் மேற்கொள்ளும் முயற்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன. சு.ரா. என் மதிப்பிற்குரிய நண்பர் என்பதும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் பட்டியலில் இருப்பவர் என்பதும் உண்மைதான். ஆனால் இந்தப் பட்டியல் மாறாத ஒன்றல்ல. அதில் எந்த இலக்கிய ஆசிரியருக்கும் நிரந்தர இடம் எதுவும் கிடையாது. காரணம், நான் என் பார்வைகளையும் அளவுகோல்களையும் என் வாசிப்பு, விவாதம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து மறுபரிசீலனைக்குட்படுத்திக்கொண்டே இருப்பவன். எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்ற விஷயத்தில் சிவகுமாரைப்போல 99 வருஷத்துக்குக் குத்தகை எதுவும் எடுத்துவைக்கவில்லை.

என் கட்டுரையில் உள்ள ஊதாரித்தனமான சில வரிகளை சிவகுமார் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த விஷயத்தில் அவரோடு முற்றிலும் உடன்படுகிறேன். ஜெயகாந்தன் வாசகர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதும்போது இது போன்ற விபத்துகள் நேர்ந்துவிடுகின்றன.

ஜெயகாந்தன் கதைகளில் தட்டையான தன்மை, மிகை, ஓயாத பேச்சு, நீதிபோதனை, வெகுஜன தமிழ் சினிமாவின் அடையாளங்கள், ஆழமின்மை என்று பல குறைபாடுகளை உரிய காரணங்கள், உதாரணங்களுடன் என் கட்டுரையில் நான் விளக்கியிருக்கிறேன். ஜெயகாந்தன் அபிமானிகள் அவற்றை உரிய முறையில் பரிசீலித்துவிட்டு எதிர்வினையாற்ற முன்வந்தால் விவாதம் உருப்படியாக மேலெழும்பிச் செல்லும். இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்.

அரவிந்தன்


அன்புள்ள ஆசிரியருக்கு,

ஜோதிர்லதா கிரிஜாவின் கதையைப் படித்தேன். மதிப்புக்குரிய கதாசிரியை, தற்கொலையை ஒரு தீர்வாக, அல்லது மற்றவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வரும் உபாயமாக உபயோகித்திருப்பது வருத்தம் தருகிறது. தமிழ் சினிமாவில் தான் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட தற்கொலை மிரட்டல் விடுவது வழக்கம். காதலர்கள் காதம் நிறைவேறாவிடில் தற்கொலை செய்வதும் சினிமாவிலும் , டிவியிலும் தினசரி பார்க்கிறோம். தற்கொலையை ப்படி கவனமில்லாமல், வீர்மாக, தியாகமாக, காதல் தோல்விக்குத் தீர்வாக என்றெல்லாம் உபயோகிப்பது பற்றி ஒரு தீவிரமான விவாதம் நடைபெற வேண்டும். னி தொலைக்காட்சி தொடர்களில் ஏ வி எம் நிறுவனம் தற்கொலையைத் தவிர்க்கும் என்று செய்தியை வாசித்தேன்.

ஆர் ரஃபீக்


ஆசிரியருக்கு,

சின்னக்கருப்பன் இடுக்கி அணை கோவில் பிரச்சினையையும், நர்மதைத் திட்டத்தினையும் குறித்து எழுதும் முன் இரண்டும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை யோசித்திருக்க வேண்டும். நர்மதை திட்டம் என்பது பெரிய அணைகள்,மத்திய அளவு அணைகள்,சிறு அணைகள், நீர்த்தேக்கங்கள் என பலவற்றைக் கொண்டது.இதனால் எத்தனைபேர் பாதிப்படைவர், அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசும்,மாநில அரசும் முறையான கணக்கெடுப்பினைச் செய்யவில்லை. ஒப்புக்கொண்ட படி நிவாரணத் தொகை, மாற்று நிலம் ஆகியவையும் பாதிப்புற்றவர் அனைவருக்கும் தரப்படவில்லை. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள சஞ்சய் சங்கவி, அமிதா பவிஸ்கார் எழுதிய நூல்கள் உட்பட பல வற்றை நான் பரிந்துரைக்கமுடியும். www.narmda.org என்ற இணையத்தளம் மூலம் அவர் இது குறித்து அறிந்து கொள்ளலாம் இடுக்கியில் கோயில் பெயரால் ஒரு அரசியல் நடத்துபவர்கள் பல கோயில்கள் மூழ்க காரணமாகும் நர்மதை நதித்திட்டம் குறித்து போராட்டம் நடத்தவில்லை.

ஜெயகாந்தன் குறித்த விமர்சனக் கட்டுரையை நான் படிக்கவில்லை.முருகன், சிவக்குமார் கட்டுரை மூலம் பலவற்றை யூகிக்க முடிந்தது. அரவிந்தன் என்ற பெயரில் வேத சகாய குமார எழுதிய கதை குறித்து கடிதங்கள் எழுதிய அரவிந்தன் எழுதிய கட்டுரையா அது.அப்படியானால் அவரது ‘ஆதர்ச எழுத்தாளர் ‘ யார் என்பதை என்னால் இப்போது ஒரளவிற்கு யூகிக்க முடிகிறது.

K.ரவி ஸ்ரீநிவாஸ்


Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கடிதங்கள்

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

ஜூலை 24, 2003



ஆசிரியருக்கு,

சென்ற திண்ணை இதழின் பக்கங்களில் என்னைப்பற்றி ஒரு புயலே அடித்ததுபோன்ற உணர்வு. ஒரே இடத்தில் உருவாக்கப்பட்ட புயல்.பெரும்பாலும் வெட்டிக் கூச்சல். அவர்களுடைய அம்பு திரும்பி தாக்கியதன் பதற்றமே தெரிகிறது. ஒவ்வொரு வரிக்கும் விரிவாக பதிலளிக்க ஆரம்பித்தால் அதற்கே நேரம் சரியாக இருக்கும்.

**

காலச்சுவட்டின் அவதூறுப்பணிகளை அதன் பக்கங்களுக்கு சென்றே சாதாரண வாசகன் மதிப்பிட முடியும். தேவதேவனைப் பற்றிய அவதூறு எப்படி காலச்சுவடால் வெளியிடப்பட்டது என்பதை மட்டும் சொல்கிறேன் – ஓர் உதாரணத்துக்காக. தன் நாடகநூல் ஒன்றில் அவர் ‘அவரைவிட நான் நன்றாக அந்நாடகத்தை எழுதிவிடமுடியும் ‘ என்று சொல்லியிருந்தார். அந்தவரியை எடுத்துக் கொடுத்து அதற்கு மேல் என் நண்பர் செந்தூரம் ஜெகதீஷ் ‘ஜெயமோகனை காக்காபிடித்து நல்ல மதிப்புரை பெற சிலர் முயல்கிறார்கள் ‘ என்று வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னவரியை எடுத்துக் கொடுத்திருந்தார்கள்.

தேவதேவனைப்பற்றி தமிழிலக்கியம் அறிந்தவர்கள் அறிவார்கள். தன் பித்துக்குளித்தனமான உலகில் வாழும் கனவுஜீவிக்கவிஞர் அவர். எந்த வம்பிலும் அவர் தலைகாட்டியது இல்லை அலுவலகத்தில் கடன் வாங்கி கவிதைநூல் வெளியிடும் தனியாள். அவர் சுந்தர ராமசாமியை அங்கீகரிதது இல்லை என்பதற்காக அவரைப்பற்றி ‘காக்கா பிடிக்கும் சில்லறை ஆசாமி ‘ என்ற சித்திரத்தை உருவாக்கிக் காட்டுவதனால் தமிழிலக்கியத்துக்கு ஏற்படும் இழப்பு என்ன என்று யார் யோசித்தார்கள் ? காலச்சுவடின் பெருவாரியான வாசகர்கள் தேவதேவனின் ஒரு கவிதையைக்கூட படித்திராதவர்கள் என்றநிலையில் இதன் தாக்கம் எப்படிப்பட்டது ? அவமானம் என்பதெல்லாம் சுந்தர ராமசாமிக்கு மட்டும்தானா ? இம்மாதிரி தந்திரமாக செய்யப்படும் அவதூறு வன்முறை அல்ல, உயர்தர இதழியல் இல்லையா ? இதுகுறித்து மிகுந்த மனக்கொதிப்புடன் நான் அப்போது மனுஷ்யபுத்திரனுக்கு கடிதமும் எழுதினேன் .

இவ்வகை ‘புத்திசாலித்தனமான அவதூறை ‘ செய்தபிறகு ‘எங்கே ஆதாரம் ? ‘என்று கேட்கலாம்தான் . நாம் ஆதாரமும் காட்டமுடியாது. உண்மையைத்தானே [வெட்டி எடுத்து] போட்டார்கள்.! ‘தற்செயலாக ‘ இன்னொரு உண்மை பக்கத்தில் வந்துவிட்டது .என்னசெய்யமுடியும் ?

இத்தகைய அவதூறுக்கென எந்த அளவுக்கு கவனம் மிக்க உழைப்பு தேவை என யோசிக்கவேண்டும். இதற்கெனவே காலச்சுவடில் ஆள்வைத்து வேலைசெய்கிறார்கள்! இந்த மனநிலையை விட ஆபத்தான ஒன்று வேறு இல்லை. இவர்களே இப்போது நியாயம் பேசமுற்படுகிறார்கள், தாங்கள் பாதிக்கப்பட்டதாக உணரும்போது. இத்தனைக்கும் பிறகும் அந்த பாதையையே காலச்சுவடு பின்பற்றுகிறது, அதற்காக வாதிடுகிறது. நாங்கள் மன்னிப்புக்கோரியது எங்களுக்கு தெரியாமல்கூட எவரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்பதனால். அந்த திறந்த மனம் எப்போதுமே உள்ளது.

பிரேம் பேட்டிக்கு எதிராக சாரு நிவேதிதா எழுதிய கடிதத்தை அவருக்கு திருப்பிஅனுப்பி ‘விரிவாக எழுதி வாங்கி ‘ காலச்சுவடு பிரசுரித்தது .இதை நான் தனிப்பட்டமுறையில் உறுதியாக அறிவேன். திண்ணை இதையெல்லாம் தான் செய்திருக்கிறதா ?

*

தனக்கும் சுந்தர ராமசாமிக்கும் கண்ணனுக்கும் உள்ள உறவு குறித்து ராஜநாயகமே எழுதிய கடிதம் கைவசம் உள்ளது.

*

சுந்தர ராமசாமிக்கு இயல் விருது கிடைத்தபோது அதை வாழ்த்தி நாங்கள் ஒரு செய்தி போட்டோம். 1500 டாலர் என்பதை அமெரிக்க டாலர் மதிப்பில் போட்டுவிட்டோம் .அப்போது யாருமே சுட்டிக் காட்டவும் இல்லை. . ஒன்றரை வருடம் கழித்து அது மிகப்பெரிய அவதூறு என்றும், பொன்னீலனுக்கு வாழ்த்து தெரிவித்தபோது புகைப்படம் போட்டு தன் படத்தைபோடாமல் இருந்தது பெரிய அவமானம் என்றும் அவர் கடிதம் எழுதினார்.[நாங்கள் கோட்டோவியங்களையே போடமுடியும். புகைப்படங்கள்போட தொழில்நுட்பம் இல்லை. பொன்னீலன் படம் செய்தியுடனேயே இருந்தது] அக்கடிதத்தில் திருவனந்தபுரம் பல்கலைகழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர்களான நாச்சிமுத்து, நயினார் ஆகியோர்தொகுத்த நீலபத்மநாபன் விமரிசனத்தொகுப்பு நீலபத்மநாபனாலேயே தொகுக்கப்பட்டது பேராசிரியர்கள் ‘பினாமிகள் ‘ என்ற குற்றச்சாட்டு எந்த ஆதாரமும் இல்லாமல் தரப்பட்டிருந்தது. காலச்சுவடு பாணியில் அதைபிரசுரித்து நீலபத்மநாபனிடம் விளக்கம்கேட்டு அதையும் பிரசுரித்து பரபரப்பு ஊட்டியிருக்கலாம்.அதை நாங்கள் செய்யவில்லை. சுந்தரராமசாமி எங்கள் உழைப்பை கொச்சைப்படுத்தி எழுதியிருந்த அக்கடிதத்தைபிரசுரிக்கவும் விரும்பவில்லை.

**

நான் அறிந்த மதித்த சுந்தர ராமசாமி என்ற மனிதர் வேறு. அவரது எழுத்துக்கள்மீது எப்போதுமே விமரிசனத்தையே முன்வைத்துள்ளேன். ஆனால் அந்த ஆழமும் கம்பீரமும் கொண்ட மனிதருடனான என் உறவின் நினைவுகள் இன்றும் என் அந்தரங்கமான செல்வமாக மனதில் உள்ளன. என் ஆளுமையின் உருவாக்கத்தில் அவரது பங்கு குறித்து எப்போதுமே பெருமிதம் உண்டு. அவரை என் ஆசிரியர் இடத்திலேயே இன்றும் வைத்திருக்கிறேன். அவரது எழுத்து குறித்து விரிவான விமரிசனத்தை முன்வைக்கும் திராணியும் எனக்கு உண்டு. காலம் செல்ல செல்ல அவரது எழுத்துக்கள்பற்றி நான் முன்வைத்துவந்த விமரிசனம் வலிமைபெற்றே வருகிறது. அதேசமயம் இலக்கிய ஆளுமையாக அவரது பங்களிப்பு குறித்த மதிப்பும் வளர்ந்து வருகிறது. எந்த தருணத்திலும் எந்த விஷயத்திலும் என் கருத்தை மறைத்தோ மழுப்பியோ பூடகமாகவோ மறைமுக உத்திமூலமோ நான் சொன்னதில்லை, சொல்லப்போவதுமில்லை. இந்த உணர்வுகளை இப்போது அவரைச்சுற்றி நின்று கூச்சலிடும் சோட்டாக்களிடம் நான் விவாதிக்கமுடியாது. அதற்கு இலக்கியரீதியான குறைந்தபட்ச தகுதியை அவர்கள் எழுதி உருவாக்கட்டும் .

சுந்தர ராமசாமி இன்று பாகனால் பிச்சை எடுக்கவைக்கப்படும் கோயில்யானைபோல இருக்கிறார். அது பற்றிய ஆழமான வருத்தம் எனக்கு உண்டு. கடந்த சில வருடங்களாகவே என் மனப்பிம்பம் நொறுங்குவதன் ஆழமான வலியை அடைந்தும் வருகிறேன். என்ன் காரணங்கள் என என்னைவிட கண்ணனுக்கு தெரியும். அதைவிடா நான் அதைப்பற்றி பொதுவாக விவாதிக்கமாட்ட்டேன் என்றும் அவருக்கு தெரியும்.

***

அய்யனார் மனுஷ்யபுத்திரனையும் ரவிக்குமாரையும் காலச்சுவடு எப்படி பயன்படுத்தியது, பயன்படுத்துகிறது என ஆதாரம் தருகிறார். நான் இந்துத்துவ இயக்கங்களுடன் இருந்தது 20 வருடம் முன்பு. உறவுகளை முறித்து ,வெளிப்படையான கடும் விமரிசனங்கள் செய்து 15 வருடங்கள் ஆகின்றன. அவர் 2001 ஆண்டுவரைகூட ஆர் எஸ் எஸில் பொறுப்பில் இருந்த காலச்சுவடு ஆசிரியர் அரவிந்தனிடம் இந்துத்துவா பற்றிப் பாடம்கேட்கலாம்

**

இப்படியே ஒவ்வொன்றாக இழுத்துப்போட்டு விவாதிக்கலாம். அதற்கு அவசியமில்லை. என் நூல்களுக்கான தலைபோகிற வேலையில் இருக்கிறேன். காலச்சுவடு தன் பணியை தொடரட்டும். அதனால் அதன் பெரும்பணத்துடன் , அமைப்புபலத்துடன் முடிந்தால் ஜெயமோகன் என்ற படைப்பாளியை இல்லாமலாக்கிப் பார்க்கட்டும். இது இப்படியே முடிவின்றி போகும். நான் நிறுத்திக் கொள்கிறேன்.

***

ரவிசீனிவாஸ் ‘புத்திசாலித்தனமாக ‘ பேசியிருப்பதை வியக்கிறேன். நான் மேற்கோள்காட்டியிருக்கிறேன். பிற சிந்தனைகளை அறிந்துகொள்வதுவேறு, சிரமேற்கொண்டு அவை மட்டுமே ‘உண்மைகள் ‘ என எண்ணுவதுவேறு. நான் புறக்கருத்துக்களை ஒட்டி அசலாக சிந்திக்கமுயன்றிருக்கிறேன். தளையசிங்கம் கட்டுரை அதற்கு சான்று . அசலான சிந்தனை அதற்கே உரிய தயக்கங்கள், இடைவெளிகள், சிக்கல்களுடன்தான் இருக்கும். ரவிசீனிவாஸ் இக்கட்டுரையிலேயே என் சுயமான் பார்வைக்கு ஆதாரம் தருகிறார். ஒன்றைஅமெரிக்காவிலோ வேறெங்கோ அறிவியல்கதை என கருதினால் அது எனக்கு ஏன் நிபந்தனையாக வேண்டும். அவர்களை மீறி சிந்திக்க எனக்கு லைசன்ஸ் தரவேண்டியவர் யார் ? கட்டுரையில் என் பார்வையை திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறேன்.. அதை நான் என் வாசிப்பால் அடைந்தேன்.

ஒரு அசல் பார்வையை அதன் இடைவெளிகளைச் சுட்டி மட்டுமே மறுக்கமுடியும் ‘சரியான பார்வையை ‘ பொறுக்கி மேற்கோள்காட்டியல்ல என்பதை இவருக்குப் புரியவைக்க நான் இனி என்ன செய்யவேண்டும்!

சித்தரிப்பின் சுருக்கமான புறவயத்தன்மையில், வரிகளுக்கிடையே அர்த்தபூர்வ இடைவெளிவிடுவதில் சுஜாதாவின் நடையின்பாதிப்பை இன்றைய படைப்பாளிகளிடம் காணமுடியும் என்பது ஒரு அவதானிப்பு. எஸ் ராமகிருஷ்ணன், யூமா வாசுகி, அழகிய பெரியவன் என பட்டியலையும் தர முடியும். வரிகளை எடுத்துக்காட்டி உதாரணம் தர முடியும். அது தனி கட்டுரை. ஆனால் அதை விவாதிக்கவே முடியும். விதண்டாவாதம் செய்யமுடியாது. நான் பத்துபேர் பட்டியலை கொடுத்தால் எந்த போலீஸ்காரனும் வேறு பத்துபேர் பட்டியலை அளிக்க முடியும். அந்த விவாதத்துக்கு முடிவே இல்லை.

என் தேர்வில் உள்ளவர்கள்தான் என் எழுத்தாளர்கள், தமிழில் எழுதும் அத்தனைபேரையும் படித்து அவர்கள் அனைவரையும் பற்றிபேசமுடியாது.

***

மாலன் கதைகள் பற்றி.

மாலன்மீதான என் கவனம் விடுபட்டு பல வருடங்களாகின்றன. காரணம் அவர் பிரபல இதழ்களில் அவற்றின் தேவைக்கு ஏற்ப எழுதிய கதைகள். குறிப்பிட்ட அறிவியல் கதைகளை நான் படிக்கவில்லை. வருந்துகிறேன். நான் எழுதியது தமிழ் அறிவியல்கதைகளைப்பற்றிய முழுமையான அவதானிப்பு அல்ல. அப்படி முழுமையான ஆய்வில் கூட விடுபடுதல்கள் நிகழக்கூடிய சூழல்தான் இங்குள்ளது. அனைவரும் சேர்ந்துபேசும் பொதுத்தளமென இங்கு ஏதும் இல்லை. மாலன் கதைகளை சிலநாட்களுக்குள் படிப்பேன் என உறுதிச்சொல்கிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

**

இந்த தகர டப்பா சந்தடியில் மெளனி குறித்த என் கட்டுரை கவனம் பெறாது போனது குறித்து வருத்தமே.

ஜெயமோகன்


ஜூலை 21, 2003

கடிதங்கள் ஜுலை 17, 2003 என்ற தலைப்பில் திண்ணை வெளியிட்டுள்ள காலச்சுவடு ஆசிரியர் கண்ணனின் கடிதத்திற்கு திண்ணைக்குழு அளித்துள்ள குறிப்பில் இரண்டு எனும் எண் கொண்டப் பகுதியின் கடைசியில் கீழ்கண்ட வாக்கியங்கள் இருக்கின்றன:

‘(ஒரு ஆசிரியர்) இரண்டு ஏடுகளுக்கு கடிதங்களை அனுப்பும் போது சிறு மாறுதல்களைச் செய்யவோ செய்ய அனுமதிப்பதோ ஆசிரியரின் உரிமை. நாஞ்சில் நாடன் இது பற்றி கருத்து ஏதும் கூறவில்லை ‘.

இந்த இரண்டு வாக்கியங்கள் கூறும் கருத்துக்களையும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் இவற்றை அடுத்து வரும் மூன்றாவது வாக்கியம், ‘நாஞ்சில் நாடன் போன்ற மதிப்பிற்குரிய எழுத்தாளரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்ய மாட்டார்கள் ‘ என்பது. இக்கருத்துக்களை நான் முற்றாக மறுக்கிறேன்.

‘மதிப்பிற்குரிய ‘ எழுத்தாளர்களிடம் பிற எழுத்தாளர்கள் கொண்டிருக்கும் மதிப்பால் அவர்களுக்கு எதிராக தவறு எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற திண்ணையின் முடிவு தமிழ்ச்சூழலுடன் அவர்கள் கொண்டிருக்கும்

இடைவெளியையும், ஒரு நெருக்கடியான நேரத்தில் யதார்த்தத்தின் கிடப்புத் தெரியாமல் சம்பிரதாயமான கற்பனைகளைத் தெரிவிப்பதுமாக இருக்கிறது.

மதிப்புக்கொண்ட எழுத்தாளர்கள், பிற எழுத்தாளர்களிடமிருந்து எந்த அடிப்படை மரியாதையையும் நம்பி எதிர்பார்க்க முடியாது என்பதுதான் இன்றையத் தமிழ்ச்சூழல். எனது இந்த மதிப்பீட்டை நாஞ்சில் நாடன் முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்வார் என்பதுதான் என் திடமான நம்பிக்கை.

நாஞ்சில் நாடன் தன் எழுத்து அனுமதியுடன் திருத்தப்பட்டதா அல்லது அனுமதியின்றித் திருத்தப்பட்டதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

திண்ணை போல் தமிழ்ச்சூழல் சார்ந்து கற்பனையான மிதப்புக் கொண்டிருப்பவர்கள் இன்றைய நிலையை அறிய வேண்டும்.

சுந்தர ராமசாமி

சான்டா குரூஸ், கலிபோஃர்னியா.


‘எனக்கு வரதட்சணையே வேண்டாம். உங்கள் பெண்ணை மட்டும் கொடுங்கள்’ என்று வேலையில்லாத ஓர் ஏழை வாலிபன் கேட்டால், எத்தனைப் பணக்காரப் பெற்றோர் தம் பெண்ணை அவனுக்குக் கொடுக்க முன் வருவார்கள் ? வரதட்சணையை எதிர்க்கும் பெண்களில் எத்தனைப்பேர் இப்படிப்பட்ட ஓர் ணைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பார்கள் ?

ஏழைகளுக்குப் பெண் கொடுக்க மறுக்கும் பணக்காரப் பெற்றோர்களுக்கு எதிராக ஏன் சட்டங்கள் எதுவும் இல்லை ?

பெண்கள் நல்ல இடத்தில் வாழ்க்கைப் படவும் வேண்டும், அதே நேரத்தில் அதற்குக் கொடுக்கும் விலையும் குறைவாக இருக்க வேண்டும் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் ? (வரதட்சணை வாங்குவது சரி என்று வாதிடுவது என் நோக்கமல்ல)

தொழில்கள் பெருகி, எல்லோருக்கும் வேலை வாய்ப்புகள் நிறைந்து, பெற்றோர்கள் பிள்ளைகளையும், பெண்கள் கணவர்களையும் எதிர்பார்த்து வாழும் அவல நிலை மாறினாலொழிய வரதட்சணைப் பிரச்சினை

தீரப்போவதில்லை.

பாலா


வரவர திண்ணை குஸ்தி மைதானம் ஆகிவருகிறது. சண்டைகள் மேல் வருகிற ஆரம்ப ஈர்ப்பும் வேடிக்கை பார்க்கிற சுவாரசியமும்போய் அலுப்பு வருகிறது. அவரவர் பத்திரிகை அல்லது கோர்ட் மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு இடம் கொடுத்து திண்ணை இன்னொரு வம்பு பத்திரிகை ஆகிவிடப்போகிறது. தமிழ் இதழ்களின் வம்பையும் கிசுகிசுவையும் கண்டு ஒதுங்கி அமெரிக்க திண்ணை பக்கம் வந்தால் இங்கேயும் அதுதானா. குஸ்திகளுக்குத் தருகிற இடத்தில் இலக்கியத்தையும் வம்புகளில் அக்கறை இல்லாத வாசகர்களையும் இழந்துவிடாமல் இருங்கள்.

– சேகரன்


திரு. ஜெயபாரதன் அவர்களுடைய தமிழ் அறிவியல் இலக்கியப்பணியை பாராட்டி அவர்களுக்கு ‘திண்ணை ‘ மூலமாக ஒரு பாராட்டுக்கடிதம்.

இ.பரமசிவன்.

அன்புள்ள ஜெயபாரதன் அவர்களுக்கு

திண்ணைஇதழில் தாங்கள் எழுதியிருந்த ‘கலீலியொ ‘பற்றிய அறிவியல் கட்டுரை மிகவும் விஷயம் செறிந்ததாகவும் அற்புதமாயும் இருந்தது.உங்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுகள். ‘ E pur se move ‘ என்று அவர் வாய் முணு முணுத்துக் கொண்டேயிருந்ததாக கல்லூரியில் ஆங்கிலப்பாடத்தில் நான் படித்தது (book : ‘ideas that moved the world ‘ by Horace Pluncket) இப்போதும் நினைவுக்கு வருகிறது.அடக்குமுறையாளர்களின் துன்புறுத்துதலுக்காக

பூமியை சூரியன் சுற்றுவதாக ஒப்புக்கொண்டபோதும் ‘இல்லை அது (பூமி) தான் சுற்றுகிறது ‘ என்று முணு முணுத்துக்கொள்வதாக அந்த கட்டுரைஆசிரியர் முடிப்பார்.நீங்களும் அதைப்பற்றி குறிப்பிட்டிருந்தது எனக்கு மிகவும் ரசனை மிக்கதாக இருந்தது.திண்ணை இதழில் ‘ஒரு பட்டாம்பூச்சியிலிருந்து பிரபஞ்சங்கள் வரை.. ‘ (butter-fly effects and cosmological quantum chaos) என்ற எனது அறிவியல் கட்டுரையில் ஹெய்சன் பர்க்கின் ‘நிச்சயமற்ற தன்மை ‘ கோட்பாடு எப்படி ஒரு ‘குளறுபடியியல் விஞ்ஞானத்துக்கு ‘ (science of chaos) வித்தூன்றியிருக்கிறது என்பதை தொட்டுக்காட்டியுள்ளேன். ‘ஸ்டாஃபன் ஹாக்கிங் ‘ பற்றி நீங்கள் எழுதியிருந்த மிக அற்புதமான இன்னொரு கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்த வெப்ப இயக்கவியல் ஒழுங்கீனம் (thermo dynamic entropy) குளறுபடியியலின் இன்னொரு பக்கம் என்று சொல்லலாம்.டாக்டர் பென்ரோஸ் பிரபஞ்சத்தில் கருந்துளையை ‘பிரபஞ்சத்தின் மூடு மந்திரம் ‘ (cosmic censorship) என்று தனது ‘தனிமைப்பட்டுப்போன ஒற்றையக்கோட்பாடு ‘ (theory of singularity) மூலம் நிறுவமுயன்றார்.ஆனால் ஹாக்கிங் தனது ‘ஹாக்கிங் விளைவுகள் ‘ (hawking effects) கோட்பாட்டின் மூலம் கருந்துளையின் ‘கதிர் வீச்சின் அளவைப்பாடு ‘(quantum emision of black hole) பற்றி சமன்பாடுகள் நிறுவியிருக்கிறார்.

உங்கள் கட்டுரைகள் வாரந்தோறும் விஞ்ஞான சிந்தனயாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.இந்த உங்கள் பணி தொடர்ந்து கொண்டேயிருக்க எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

உங்கள் கட்டுரைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

வாழ்த்துக்களுடன்

இப்படிக்கு

இ.பரமசிவன்


Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கடிதங்கள்

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

ஜூலை 17, 2003



திண்ணையில் அண்மைக்காலமாக நடந்து வரும் அறிவியல் புனைகதைகள் குறித்த தகவல் பரிமாற்றங்களில் ஏனோ தெரியவில்லை மாலனது பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன. எண்னிக்கையில் சுஜாதாவிற்கு அடுத்தபடியாக அதிகம் அறிவியற் புனைகதைகள் எழுதியவர் என்ரு காஞ்சனா தாமோதரன் பெயரைக் குறிப்பிட்டிருந்த ஜெயமோகன், அவர் மூன்று கதைகள் எழுதியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் நானறிந்தவரை, காஞ்சனாவிற்கு முன்னரே, நான்கைந்து அறிவியற் கதைகள் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய வித்வான் என்ற கதை மிகப் பிரபலமானது. அதைக் குறித்து சுஜாதாவே சென்னையில் நடைபெற்ற தமிழினி கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசினார். அகில இந்திய வானொலியின் நாடகவிழாவில் அது நாடகமாக ஒலிபரப்பப்பட்டு, பின் அகில இந்திய அளவில் பரிசும் பெற்றது. அதை இன்னும் வாசகர்கள் நினைவில் கொண்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் பொதிகைத் தொலைக்காட்சியில் தொலைபேசி மூலம் பிரபலங்களுடன் உரையாடும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில், நடிகர் ஸ்ரீகாந்த்திடம் இந்த நாடகத்தை நினைவு கூர்ந்து ஒருவர் பேசினார். அப்போது ஸ்ரீகாந்தும் மாலனது பெயரைக் குறிப்பிட்டார். விதவான் தவிர மாலன், கல்கி என்ற அறிவியற் புனைகதை எழுதியுள்ளார்.. அது முதலில் கல்கியிலும் பின் திண்ணையிலும், அதன் பின் சிங்கப்பூர் தமிழ்முரசிலும் வெளியிடப்பட்டது. அந்தக் கதை இன்னும் திண்ணை தொகுப்பில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இவை தவிர, தேர்தலை நையாண்டி செய்து ஒரு கதை, இயந்திரங்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கதை, (எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து ஏற்பட்ட குழப்பத்தை வைத்து எழுதியிருப்பார் என்பது என் ஊகம்) இணையம் எல்லாம் வருவதற்கு முன்னரே e-booksஐ வைத்து எழுதப்பட்ட ஒரு கதை என் மாலன் ஐந்து அல்லது ஆறு அறிவியற்கதைகள் எழுதியிருக்கிறார்.அவரது அறிவியல் கதைகள் பற்றி சென்ன ஆன்லைனில் வெளியான ஒரு கட்டுரையிலும், யூனஸ்கோ கூரியரில் வெளியான கட்டுரைகளிலும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் பெயரை திண்ணையும் ஜெயமோகனும் இருட்டடிப்புச் செய்ய முற்படுவதேன் ? ஜெயமோகன் தன் இலக்கிய மதிப்பீடுகளைச் செய்யும் போது சொந்த விருப்பு வெறுப்புக்களை முன் நிறுத்த வேண்டாம். அது திண்ணையின் பெயரையும் கெடுத்து விடும்.

திருமதி ராம சங்கரன்


ஆசிரியருக்கு,

துக்காராம் எழுதியகதை படித்தேன். கதைகூறும் முறையில் துவக்கம் முதல் புதிய போக்கு இல்லையென்றாலும் அதன் முடிவு சிறப்பாக இருந்தது. கதையின் உடல்பகுதியில் இயற்கை குறித்த ஏக்கமெல்லாம் ஒரு சம்பிரதாயமான நடை, கோணத்தில் அமைந்திருந்தன. முடிவு சிறுகதை அதிர்ச்சி என்பதற்கு மேலாக நமது இன்றைய வாழ்வில் உள்ள அன்றாட முரண்பாட்டை காட்டுவதாக இருந்தது.

இவான் இல்யிச் போக்குவரத்தின் நவீன முன்னேற்றங்கள் எப்படி மனிதனின் வாழ்விடத்துக்கும் அவனுக்குமான உறவை சீரழித்துவிட்டன என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதை பற்றி பேச அவர் டெல்லி வந்தார். ஜவகர் லால நேரு பல்கலையில் யாரோ ஒரு மாணவர் ‘ மிஸ்டர் இல்யிச் அமெரிக்காவிலிருந்து நீங்கள் ஜெ விமானத்தில் தானே வந்தீர்கள் ? ‘ என்று கேட்டதாக சொல்வார்கள். அறிவியலால் உருவாக்கப்பட்ட உலகில் இருந்து கொண்டு அதைப்பற்றிய அச்சத்தை உணர்கிறோம், பங்கிடுகிறோம். காடுகள் அழிவதைப் ப்காகிதத்தில் கவிதை எழுதுகிறோம். கடிதம் எழுதும் பழக்கம் இல்லாமலாவது பற்றி மின்னஞ்சல் அனுப்புகிறோம். இணையத்தின் தீமை குறித்து சமீபத்தில் இணையத்தில் ஒரு குறிப்பு கண்டேன்.

இதை தொட்டுக்காட்ட முடிந்திருப்பதே கதையின் வெற்றி

ஜெயமோகன்


இந்த வாரம், இராம.கி. ன் தன்னேர்ச்சி, ஐந்திணைக்காட்சிகள் இரண்டும் ஓசை நயத்துடனும் கருத்துடனும் ரசிக்க வைத்த கவிதைகள். ரவி ஸ்ரீனிவாசின் இலக்கிய உலகம் என்ற ஜெயமோகனின் கட்டுரையிலும் இலக்கியம் பற்றிய கருத்துக்கள் ரசிக்கும்படி இருந்தன.

இனியவன் செல்வன்


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

இலினாஸிஸ் பல்கலைக்கழக விலங்கு நோயுயிரியல் பேராசிரியரான ராபர்ட்டோ தொகாம்போவின் அக்ரோபேக்டாரியம் துமிபேசிஸன்ஸ் மீதான ஆராய்ச்சி குறித்து தங்கள் திண்ணை இணைய வார இதழில் அண்மையில் அறிவியல் பகுதியில் வெளியாயிருந்த கட்டுரை குறித்து:

ராபர்ட்டோ தொகாம்போவின் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஆர்கனெலான அஸிடோகால்ஸிஸோம் அதன் சவ்வுப்படல மேற் போர்வை அமைப்பால் முக்கிய ஆச்சரியமாகியுள்ளது. ஏனெனில் புராதன ஆதிசெல்லமைப்பு கொண்ட ப்ரோகாரியோட்களை மற்ற யூகாரியோட்களிலிருந்து பிரிப்பதில் இத்தகைய சவ்வூட்டு மேல்போர்வை அமைப்பை கொண்ட செல் ஆர்கனெல்கள் இல்லாமலிருப்பது ஒரு முக்கிய வேறுபாடாக கருதப்பட்டு வந்துள்ளது. இதனால் ‘உள்ளுறை இசைவிருப்பு ‘ (Endo symbiosis) என அறியப்படும் பரிணாம இயக்க முறையே. ஆனால் இது மட்டுமே ஒரே பரிணாம இயக்க முறையல்ல- பாலியல் தேர்வு, இயற்கை தேர்வு, உள்ளுறை இசைவிருப்பு என பல இயக்கங்கள் இணைந்ததொரு கூட்டியக்கமே பரிணாம இயக்கம் ஆகும். பலசெல் அமைப்புகள் கொண்ட நாம் நம் நேரடி புலன்களால் அறியமுடிந்த உயிருலகில் மிக முக்கிய பரிணாம இயக்க முறையாக டார்வினால் இயற்கை தேர்வு அறியப்பட்டது. லின் மர்குலிஸ் நுண்ணுயிரிகளின் செழுமையான பன்மை நிறைந்த உலகில் ‘உள்ளுறை இசைவிருப்பு ‘ இயற்கை தேர்வினைக்காட்டிலும் முக்கியமான பரிணாம இயக்க செயல்பாடாக விளங்குவதை அறிந்தார். மைட்டோகாண்டிரியா, பச்சையத்தின் க்ளோரோப்ளாஸ்ட் ஆகிய ஆர்கெனல்கள் பல செல் உயிரினங்களில் தம்மை இணைவித்து தாம் இணைந்த செல்களை ஜீவ முக்கியத்துவம் உடையதாக்கி தம்மையே ஜீவித்திருக்க வழி செய்து கொண்டதாக கருத பல சான்றுகள் உள்ளன. அவற்றுள் அதி முக்கியமானது வட்ட DNA இழை. ப்ரோகாரியோட் செல்களில் காணப்படும் வட்ட DNA இழைகள் யூகாரியோட் செல்களில் இல்லை. ஆனால் மைட்டோகாண்ட்ரியா மற்றும் க்ளோரோப்ளாஸ்ட்களில் உண்டு. இனி அக்ரோபேக்டாரியம் துமிபேசிஸன்ஸ் நுண்ணுயிரியை எடுத்துக்கொண்டால் அஸிடோகால்ஸிஸோமை பொறுத்தவரை அதன் முக்கிய இயக்கம் கால்சிய நேர்மின்அயனி குழாய் (Ca++ ion pump) செயல்முறை கொண்டதாக உள்ளது. இது செல்லில் கால்சியம் மிகுந்த அளவில் சேமித்துவைக்கப்பட ஏதுவாகிறது. எனவே இது செல்லின் கால்சிய அளவுகளை ஒழுங்கு சீர் செய்யும் பணியினை செய்வதாக இருக்கலாம். கூடவே அதிகமாக பாஸ்பேட் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு அஸிடோகால்ஸிஸோம் ஆற்றல் உற்பத்தி மற்றும் பங்கீடுகளில் பங்கு கொண்ருக்கலாம் என ஊகிக்க வைத்துள்ளது. (மைட்டோகாண்டிரியா பலசெல் உயிர்களின் செல்களில் இப்பணியையே ஆற்றுகிறது. இங்கு ஒரு சிறு வேற்று தகவல்: பாஸ்பரஸுக்கும் ஆற்றலுக்குமான உறவினை கண்டுபிடித்ததில் பாரத அறிவியலாளர் டாக்டர்.சுப்பாராவ்வின் பங்கு முக்கியமானது. அவ்வுறவினை விளக்கும் அடுத்தக் கட்டமே புகழ்பெற்ற அடினோஸின் ட்ரை பாஸ்பேட் (ATP) உயிரமைப்புகளில் ஆற்றலின் ‘மூலக்கூற்றளவு பண்டமாற்று நாணயமாக ‘ கண்டு பிடிக்கப்பட்டது.) அஸிடோகால்ஸிஸோம் கண்டுபிடிப்பு நுண்ணுயிர் வளர்ச்சியில் (உள்ளுறை இசைவிருப்பு தவிர்த்த) வேறுவித செயலியக்கங்களும் இருக்க கூடும் என்பதனை நமக்கு நினைவூட்டுகிறது. குறிப்பாக பரிணாம வளர்ச்சியில் நியூக்ளிக் அமிலத்தின் மற்றும் புரதத்தின் பரிணாம வளர்ச்சி கவனிக்கப்பட்ட அளவில் சவ்வூட்டுத்தன்மை கொண்ட மேல்போர்வை கவனிக்கப்படவில்லை. ஆனால் தொடக்க உயிரின் உருவாக்கத்தில் அதன் பங்கு அபரிமிதமானது. எனவே நியூக்ளிக் அமிலங்களற்ற ஆர்கெனல்களின் பரிணாமம் குறித்த புத்தொளி நமக்கு அஸிடோகால்ஸிஸோமின் பரிணாம பாதையை ஊகித்து,ஆராய்ந்து நிர்ணயிப்பதன் மூலம் கிட்ட கூடும். ராபர்ட்டோ தொகாம்போவின் மிகக் கவனமான வார்த்தைகளில், ‘அனைத்து ஆர்கெனல்களும் ப்ரோகாரியோட் செல்களை யூகாரியோட் செல்கள் விழுங்கியதால் உருவானவை எனும் அறிதலுக்கு எதிரானவை. ‘ முக்கியமான பதம் இதில் ‘அனைத்து ‘. அனைத்து உயிர்களிலும் வாழும் சில முக்கியமான ஆர்கெனல்களில் ‘உள்ளுறை இசைவிருப்பு ‘ இயக்க பங்கு உறுதியாக்கப்பட்ட உண்மை.

எனவே இக்கண்டு பிடிப்பு உள்ளுறை இசைவிருப்பு (Endosymbiosis) இயக்கத்தையே நிராகரித்துவிட்டது; ஆட்டம் கண்டுகொள்ள வைத்துவிட்டது;பொய்ப்பித்து விட்டது என்று கூறுவது பரபரப்பான இதழியல் உக்திதான். ‘பரிணாம இயக்கங்களில் புதியதொரு இயக்க சாத்தியகூறு இருப்பதற்கான சான்றாக ஒரு கண்டுபிடிப்பு ‘ என்கிற இடியாப்பக் குழப்பமான தலைப்பு எத்தனை பேரை ஈர்க்க கூடும் ? துரதிர்ஷ்டவசமாக பரபரப்பான இதழியல் உக்திகள் நல்ல அறிவியல் பரப்பு சாதனங்களாவதைவிட மோசமான அறிவியல் எதிர்ப்பு கருவிகளாகும் வாய்ப்புகள் அதிகம். ‘இறைவனால் படைக்கப்பட்ட நுண்ணுயிர் டார்வினின் பரிணாம வாதத்தை பொய்ப்பித்தது ‘ என்கிற படைப்புவாதிகளின் அபத்ததிற்கும் தங்கள் கட்டுரையின் பரபரப்பான தலைப்பிற்கும் தூரம் மைக்ரான்களில் இல்லாவிட்டாலும் அதிகமல்ல. நல்ல அறிவியல் பரப்புதற்கும், பரபரப்பான கவனம் ஈர்க்கும் பத்திரிகையியல் உக்திக்கும் ஏதோ ஓரிடத்தில் ஒரு சந்திப்பு புள்ளி இருக்கக் கூடும். அதை தொடுவதற்கான முயற்சி என்றென்றும் புதிதாகும் ஒன்று. உலகெமெங்கும் அறிவியல் பரப்பும் இதழ்கள் அம்முயற்சியில் என்றென்றும் ஈடுபட்டவாறே உள்ளன. அம்முயற்சியில் திண்ணையால் வெற்றி பெற முடியுமென்றே நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

அரவிந்தன் நீலகண்டன்


ஆசிரியருக்கு,

திண்ணையில் வந்த கடிதங்களைப் பார்த்தேன். தாம் செய்யாத குற்றத்திற்கு ஜெயமோகனும் அவரது ஆசிரியர் குழுவினரும் மன்னிப்பு கேட்ட பெருந்தன்மை என்னை அதிசயிக்க வைத்துவிட்டது. சொல்புதிது ஆசிரியர் குழுவினர் படிக்காமல் புரிந்து கொள்ளாமல் வெளியிட்ட கதையை இனி வாசகர்கள் பல ஆண்டுகள் படித்து துன்புறப் போகும் கொடுமையை என்ன சொல்வது. இக்கதையை எழுதியதாக சொல்லப்படும் டாக்டர் எம். வேதசகாய குமார் ‘சொல்புதிது ‘ ஆசிரியர் குழுவில் உள்ளார் என்ற மறைக்கப்பட்ட தகவலை வாசகர் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மேற்படி கதைப் பற்றி திண்ணையில் விவாதம் நடப்பதால் இக்கதையை பிரசுரிக்குமாறு திண்ணை ஆசிரியர் குழுவினரைக் கேட்டுக் கொள்கிறேன். பலதரப்பட்ட வாதங்களை படித்த பின்னர் இப்பிரச்சினை பற்றி சுயமான ஒரு முடிவுக்கு வர மூலப்பிரதி அவர்களுக்கு படிக்கக் கிடைப்பது மிக அவசியம்.

காலச்சுவடு பற்றி ஜெயமோகன் இங்கும் எங்கும் பேசி வரும் விஷயங்கள் ஆதாரமற்றவை. காலச்சுவடில் திண்ணை இதழைப் போலவே விவாதப் பகுதியிருந்தது. பலர் தம்முடைய கருத்துகளை முன் வைக்க விவாதிக்க இடமிருந்தது. எங்கள் அனுபவத்திற்கும் வரையறைக்கும் உட்பட்டு அந்த அந்த காலங்களில் பிரதிகளை எடிட் செய்து பிரசுரித்திருக்கிறோம். காலச்சுவடு மீது அவர் வைக்கும் இந்தக் குற்றச்சாட்டு திண்ணைக்கும் பொருந்துமா என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். யாரிடமிருந்தும் கேட்டு வாங்கியதில்லை. ஜெயமோகன் இந்தக் குற்றச்சாட்டிற்கான ஆதரத்தை வழங்க வேண்டும். அவர் வழங்க மாட்டார். அவரால் முடியாது. ஏனெனில் அவ்வாறு எப்போதும் நடந்ததில்லை.

காலச்சுவடின் விவாதப் பக்கங்களை (மீண்டும் திண்ணையைப் போலவே) மிக அதிகமாக – வேறு யாரைவிடவும் அதிகமாக – பயன்படுத்தியவர் ஜெயமோகன். இப்பகுதிக்கான அவருடைய பங்களிப்பை தொடர்ந்து எடிட் செய்ய வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்தது. அவற்றில் அந்த அளவுக்கு அவதூறுகள் இருக்கும். இதை ஒட்டி எழுந்த கசப்பு அவர் காலச்சுவடை விட்டு விலக ஒரு காரணம். காலச்சுவடு விவாதப் பக்கங்களையும் ஜெயமோகனின் திண்ணை கட்டுரைகளையும் விவாதங்களையும் படித்துப் பார்த்து வாசகர் அவருடைய குற்றச்சாட்டை பரிசீலிக்க வேண்டும்.

ஆர்.பி. ராஜநாயகம் ஜெயமோகனின் அழைப்பின் பெயரில் அவரது ஊட்டி குருகுல இலக்கிய அரங்கில் கலந்து கொண்டார். ராஜநாயகத்தை இன்று வரை நான் சந்தித்தது இல்லை. காலச்சுவடின் எந்த அரங்கிலும் அவர் கலந்து கொண்டது இல்லை. மேற்படி இலக்கிய அரங்கை பற்றிய ராஜநாயகத்தின் பதிவு காலச்சுவடுக்கு வரும்வரை அவரோடு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அவரை நாங்கள் அனுப்பி வைத்ததாக ஜெயமோகன் ஆதாரமின்றி அவதூறு செய்து வருகிறார். ராஜநாயகம் அவர் பெயரில் கட்டுரை எழுதினார். புனைப் பெயரில் அல்ல. கட்டுரையாக எழுதினார் புனைவாக அல்ல. அந்தக் கட்டுரைக்கு சொல்புதிது ஆசிரியரில் ஒருவரான மோகனரங்கனும் பொது நண்பரான நாஞ்சில் நாடனும் அனுப்பிய மறுப்புகளை காலச்சுவடு பிரசுரித்தது. காலச்சுவடு ஆசிரியர் குழு சார்பில் இருவரும் அடுத்த அடுத்த இதழ்களில் இதுபற்றி விளக்க அளித்தோம். ‘டூர் ‘ போனராகக் கூறி ஒளிந்து கொள்ளவில்லை. (சொல்புதிது எப்போது அச்சுக்கு போனது, ஜெயமோகன் எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை பயணம் சென்றிருந்தார் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.)

கோவை ஞானி, வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன், தேவதேவன் ஆகியோரை காலச்சுவடு அவதூறு செய்ததாக ஜெயமோகன் கூறியுள்ளார். இதற்கான ஆதாரத்தை காலச்சுவடில் இருந்து எடுத்துக்காட்டுமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன். அவரால் காட்ட முடியாது. ஏனெனில் காலச்சுவடில் நாங்கள் இவர்களையோ வேறு எந்த மூத்த எழுத்தாளரையோ அவதூறு செய்தது இல்லை. ஆதாரமில்லாமல் இவ்வாறு குற்றச்சாட்டுவதே அவதூறு. மாறாக ஆதாரத்துடன் யாரையும் விமர்சிக்க எவருக்கும் உரிமையுண்டு. மூத்த எழுத்தாளர்களுக்கு குரு வணக்கம், முதல் மரியாதை எல்லாம் செலுத்தி பின்னரும் அவர்கள் வழிக்கு வராவிட்டால் ஆபாசக் கதை வெளியிடுவது ஜெயமோகனின் பாணி. காந்தியை வணங்கி சுட்டுக் கொன்ற கோட்சேயின் இயக்கத்திலிருந்து உருவானவர் ஜெயமோகன்.

காலச்சுவடு இதுவரை குஜராத் வன்முறை, கலைஞர் கைது, ராணி மேரி கல்லூரி விவகாரம், ஈராக் போர் என பல விஷயங்களுக்கு எழுத்தாளர்கள் கையெழுத்தை திரட்டி அவை தினமணி, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர் போன்ற நாளேடுகளில் வெளிவந்துள்ளன. இது இலக்கியப் பிரச்சனை என்பதால் அறிக்கை திண்ணைக்கு அனுப்பப்பட்டது.

காலச்சுவடு பெற்ற கையெழுத்துகள் இரு கூட்டங்களில் பெறப்பட்டவை என்பது பொய். மேற்படி அறிக்கை காலச்சுவடு 48இல் வெளியாகியுள்ளது. இதில் பிரபஞ்சன், ஆர். ராஜகோபால், அழகிய சிங்கர், களந்தை பீர் முகமது, ந. முருகேச பாண்டியன், கனிமொழி, ராஜ்கெளதமன், தோப்பில் முகமது மீரான், மாலதி மைத்ரி, யூமா வாசுகி, க. பஞ்சாங்கம், உமா மகேஸ்வரி, மாலன் போன்றோர் எந்தக் கூட்டத்தில் இந்த அறிக்கைக்கு கையெழுத்திட்டார்கள் என்பதை ஜெயமோகன் விளக்க வேண்டும். மேலும் அறிக்கையில் கையெழுத்து பெறுவது ஒரு பகிரங்க நடவடிக்கை. அதை எழுத்தாளர்கள் குழுமும் அரங்களில் செய்வதில் என்ன தவறு ?

தன்னை விமர்சித்த எழுத்தாளர்கள் பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கும் அவதூறுகளுக்கு ஒரு கலைக் களஞ்சியமே வெளியிட முடியும். ஜெயமோகன் மறுத்தால் பல உதாரணங்களை நான் திண்ணைக்கு அனுப்பி வைக்கிறேன்.

ஆர்.பி. ராஜநாயகம் விஷயம் தொடர்பாக ஜெயமோகன் திண்ணையில் செய்த ஒரு மோசடியை நான் அப்போதே திண்ணை ஆசிரியர்கள் கவனத்துக்கு கொண்டு வந்தேன். இதைப் பற்றி இங்கு குறிப்பிடுவது ஜெயமோகன் மூத்த எழுத்தாளர்கள் மீது கொண்டுள்ள ‘மரியாதையை ‘ தெளிவுபடுத்தும்.

ஆர்.பி. ராஜநாயகம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஜெயமோகன் அதன் நகலை நாஞ்சில் நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்கனை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துகளை சேர்த்தும் அனுப்பியுள்ளார். நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது. திண்ணைக்கு அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்கமுடியும். இந்த அத்துமீறல் மூலம் ஜெயமோகன் நாஞ்சில் நாடனை அவமதித்துள்ளார், திண்ணை ஆசிரியர்களை ஏமாற்றியுள்ளார், வாசகர்களை மோசடி செய்துள்ளார். என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக்கொள்கிறேன்.

புதுமைப்பித்தன் பதிப்புப் பணியை அவதூறு செய்து எம். வேதசகாயகுமார் எழுதிய கட்டுரையை வெளியிட்ட சொல்புதிது, இப்பணியின் ஆலோசகர் குழு உறுப்பினர் ராஜமார்த்தாண்டன் எழுதிய மிக நிதானமான மறுப்பை வெளியிட மறுத்தது. இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஆதாரங்களை உறுதிப்படுத்தி ஆசிரியர் குழு சார்பில் வெளியிடப்பட்ட குறிப்பு சொல்புதிது ஆசிரியர்களின்-அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால் – கவனத்திற்கு கொண்டு வரப்படாமல் ஜெயமோகனால் சேர்க்கப்பட்டது. இதையும் ஆதாரத்துடன் மறுக்கும்படி அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜெயமோகன் சுந்தர ராமசாமி பற்றி சொல்புதிதில் எழுதிய பல அவதூறுகளுக்கு சுந்தர ராமசாமி எழுதிய வாசகர் கடிதத்தை – வெளியிடுவதாக வாக்களித்து ஜெயமோகன் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பிய பின்னரும் – வெளியிடவில்லை.

இவையெல்லாம் பாசிச நாகரீகம். இந்த நாகரீகத்தில் காலச்சுவடுக்கு இடமில்லை. எப்போதும் காலச்சுவடு விவாதப் பக்கங்களில் மறுப்பிற்கும் மாற்றுக் கருத்திற்கும் இடமிருக்கும்.

அவதூறுகளைப் பொழிவதும் எதிர்கொள்ளும்போது புனைப்பெயர்களில் மறைந்து கல்லடிப்பதும் ஜெயமோகனின் பாணி. புதுமைப்பித்தன் பிரச்சனையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கு காலச்சுவடில் சவால் விட்டிருந்தேன். ஜெயமோகனால் அதை எதிர்கொள்ள இயலவில்லை. இதன் விளைவே நாச்சார் மட விவகாரம் சிறுகதை.

சொல்புதிதின் முன்னாள் ஆசிரியர் குழு உறுப்பினர் திருமதி எஸ். அருமொழி நங்கை (ஜெயமோகனின் மனைவி) சொல்புதிதில் ‘என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ? ‘ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இதைப் படித்துப் பார்த்து சொல்புதிதுக்கு எழுத்தாளர்கள் மேல் இருக்கும் மரியாதையை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து ஒரு வாக்கியம்: ‘வீட்டுக்கு வரும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அலுப்பூட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ‘ (சொல்புதிது 11, பக். 7).

கண்ணன், காலச்சுவடு ஆசிரியர்


மேற்கண்ட கடிதத்துக்கு திண்ணைக்குழு குறிப்பு:

1. ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது

2. நாஞ்சில் நாடன் கடிதம் திண்ணையில் வெளியானவுடனேயே, காலச்சுவடிற்கும் இஇந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது,, இரண்டு கடிதங்களுக்கும் உள்ள வித்தியாசம் இவை பற்றி கண்ணன் திண்ணைக்கு எழுதியிருந்தார். காலச்சுவடில் கடிதம் வெளிவந்தவுடன் கண்ணனின் கடிதத்தை வெளியிடுவது பற்றி முடிவு செய்ய எண்ணினோம். காலச்சுவடில் கடிதம் வெளியான பிறகு, நாஞ்சில் நாடனுக்கு இந்தக் கடிதங்களை ஒப்பிட்டு ஏதும் சொல்வதாய் இருந்தால் சொல்லக் கூடும், அது தான் முறை என்பதால் , கண்ணனின் கடிதம் வெளியிடப் படவில்லை. இரண்டு ஏடுகளுக்கு கடிதங்களை அனுப்பும் போது சிறு மாறுதல்களைச் செய்வதோ, செய்ய அனுமதிப்பதோ ஆசிரியரின் உரிமை. நாஞ்சில் நாடன் இது பற்றி ஏதும் இதுவரை கருத்துக் கூறவில்லை. நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்யமாட்டார்கள்.

3. இரண்டாவது நாச்சார் மடம் கதை திண்ணையில் பிரசுரம் செய்வதற்கில்லை.

திண்ணை குழு


வேதசகாயகுமாரின் கவனத்திற்கு

அரவிந்தன்

‘திண்ணை’யில் வேதசகாயகுமாரின் கடிதத்தைப் பார்த்ததும் பனிரெண்டு வயதுச் சிறுவன் ஒருவன் தனது பை, டிபன் பாக்ஸ், சைக்கிள் ஆகியவற்றை யாரிடமோ பறிகொடுத்துவிட்டு கண்ணைக் கசக்கிக்கொண்டு நடுத்தெருவில் நிற்பதுபோன்ற காட்சி என் கண்முன் தோன்றியது. ஆனாலும் இந்த சுந்தர ராமசாமி ரொம்ப மோசம். அவர் பாட்டுக்கும் மதிப்பீடுகளின் வீழ்ச்சி அது இது என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். வே.ச.கு. போன்ற வெள்ளந்தியான ஆத்மாக்கள் அதை எக்குத்தப்பாகப் புரிந்துகொண்டு கண்ட இடத்திலும் பயன்படுத்தி அடி வாங்கி நடுத்தெருவில் நிற்பார்கள். இனிமேல் சு.ரா. மதிப்பீடுகளின் வீழ்ச்சி பற்றிப் பேசினால் அவர் கொட்டை எழுத்தில் இப்படி ஒரு குறிப்பையும் சேர்த்துவிடுவதுதான் பொருத்தமாக இருக்கும்:

“நான் முன்வைக்கும் கருத்துகள் என் அனுபவத்தின் அடிப்படையில், என் சிந்தனையில், என் பார்வையில் உருவான கருத்துகள். என் எழுத்துகளைப் படிப்பவர்களின் பரிசீலனைக்காக இவற்றை முன்வைக்கிறேன். மருத்துவர் தரும் மருந்துச்சீட்டுபோல இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”.

***

1993இல் பாம்பன் விளையில் சுந்தர ராமசாமி ஒழுங்கு செய்த ஒரு கூட்டத்தில்தான் வே.ச.குவை நான் முதன்முதலில் சந்தித்தேன். அதன் பிறகு சில முறை சு.ராவின் வீட்டில் அவரை சந்தித்திருக்கிறேன். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் ஓர் ஆளுமையாகத்தான் அவர் என் மனத்தில் உருக்கொண்டிருக்கிறார். பாம்பன் விளையில் விவாதங்கள் கூர்மைபெற்று ஒரு குவிமையத்தை நோக்கி வரும்போதெல்லாம் அதைக் கலைத்துபோடும் அரும்பணியை வே.ச.கு. ஒரு தார்மீகக் கடமைபோல ஆற்றிவந்தார். ஜெயமோகன் உள்பட பல நண்பர்களும் வே.ச.குவின் பங்களிப்பு குறித்து என்னிடம் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.

‘நாச்சார் மட விவகாரங்கள்’ சிறுகதையை நான்தான் எழுதினேன் என்கிறார் வே.ச.கு. தனது கூற்றுக்கு வலுசேர்க்க, இதற்கு முன்பும் கதைகள் எழுதியிருக்கிறேன் என்று அறிவிக்கிறார். இனிமேலும் எழுதுவேன் என்று மிரட்டுகிறார். அவர் கூறவது பொய் என்று கூற நான் விரும்பவில்லை. ஆனால் இந்தக் கதையில் – அதன் சகல கீழ்மைகளையும் தாண்டி – வெளிப்பட்டிருக்கும் புனைவு அம்சத்தை அவரால் சாதித்திருக்க முடியும் என்பதற்கான எந்த அடையாளமும் இதுவரை வெளிப்பட்டதில்லை. இதற்கு முன்பும் கதைகளை எழுதியிருக்கிறேன் என்று அடக்கமாகச் கூறிக்கொள்ளும் வே.ச.கு. அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கோருகிறேன். சுத்த சுயம் பிரகாச ஆராய்ச்சியாளரான அவருக்கு ஆதாரங்களைத் திரட்டித் தருவது சுலபமான காரியம்தானே.

***

இந்தக் கதை மதிப்பீடுகளின் வீழ்ச்சி பற்றிய கதை என்று அவர் கூறிக்கொள்வது குரூரமான ஜோக். சரோஜாதேவி புத்தகங்களில் கடைசி வரிகள் ‘எந்தத் தப்புத்தண்டாவுக்கும் போகக்கூடாது என்பதை உணர்ந்தேன்’ என்ற ரீதியில் முடியும். அந்த வரிகளோடு மட்டுமே இந்த வரிகளை இணைத்துப்பார்க்க முடியும். தமிழ்ச் சூழலில் மதிப்பீடுகளின் வீழ்ச்சி புதிய எல்லைகளைத் தொட்டிருப்பதன் ஆகப் பொருத்தமான அடையாளமாக நிற்கும் இந்தக் கதைக்கு வே.ச.கு. கொடுக்கும் இந்தப் பின்குறிப்பு அதை சரோஜாதேவி நூல்களின் வரிசையில் சேர்க்கப் பரிபூரண தகுதியுடையதாக ஆக்கியிருக்கிறது. இதற்காக வே.ச.குவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது என் கடமை.

***

நா.ம.வி. கதையின் கீழ்மையை மறைக்க சு.ராவின் கவிதைகளைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார் வே.ச.கு. இவ்வளவு எளிதாக நியாயப்படுத்தக்கூடிய கதையாக நா.ம.வி. இருந்திருந்தால் முதலில் தனிப்பட்ட முறையிலும் பிறகு பகிரங்கமாகவும் ஜெயமோகனும் சதக்கத்துல்லாவும் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பதை வே.ச.கு. யோசித்துப் பார்க்க வேண்டும். அந்தக் கதையில் பிழையேதும் இல்லை என்று அவர் உண்மையிலேயே கருதினால் அவர் ஜெயமோகனும் சதக்கத்துல்லாவும் தெரிவித்த மன்னிப்பைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

இலக்கியப் பிரதிகளுக்குள் இருக்கும் மனிதர்கள் அல்லது உருவகங்கள் அந்தப் பிரதிக்கு வெளியே இருக்கும் மனிதர்களை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிப்பவைதாம். பெளதீக உலகில் நடப்பவை அல்லது நடக்கக் கூடியவை என்ற எல்லைக்குள்தான் புனைவுலகம் இயங்குகிறது. மிகு யதார்த்தம், மாய யதார்த்தம் முதலான வெளிப்பாடுகள் கூட பெளதீக உலகின் பல்வேறு சாத்தியங்களின் நீட்சிதான். ஆழ அகலம் காண முடியாத மனிதப் பிரக்ஞையின் புதிரான பயணத்தின் வீச்சுக்கு அப்பாற்பட்ட எந்த சாத்தியமும் புனைவின் வழி வெளிப்பட முடியாது. மனிதப் பிரக்ஞையோ பெளதீக உலகுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டது. இந்நிலையில், எழுதப்பட்ட பிரதியில் உருப்பெற்ற அனைத்து அம்சங்களையும், மனிதப் பிரக்ஞையை உள்ளடக்கிய பிரம்மாண்டமான வாழ்வின் நிழல்கள் என்று சொல்லலாம். இதன் அடிப்படையில் புனைவில் வெளிப்படும் சகல மாந்தர்களுக்கும் உருவகங்களுக்கும் இணையான, நெருக்கமான மனிதர்களை வெளி உலகில் அடையாளம் காணலாம். எனவே புற உலக அடையாளங்கள் படைப்பில் வெளிப்படுவது என்பது முற்றிலும் இயல்பானதுதான். சு.ரா. எழுதிய நாய்களையும் ஆந்தைகளையும் வெளி உலகில் தேடுவது என்பது இதன் அடிப்படையில்தான் சாத்தியமாகிறது. இதே ரீதியில் பல பிரதிகளைக் கட்டுடைத்துக்கொண்டே போகலாம். ஜெயமோகன் காலச்சுவடின் ஆரம்ப இதழ் ஒன்றில் எருமை மாட்டை வைத்து ஒரு கவிதை எழுதியிருந்தார். தமிழக அரசியல்வாதி ஒருவரைப் பற்றிய சித்திரமாக அதைப் பார்க்க முடியும் என்று அவர் என்னிடம் அப்போது கூறினார். மனுஷ்ய புத்திரனின் ‘அரசி’ கவிதை, எஸ். ராமகிருஷ்ணனின் ‘ராமசாமிகளின் வம்ச சரித்திரம்’ என்ற சிறுகதை, சுராவின் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’, நீல. பத்மநாபனின் ‘தேரோடும் வீதியிலே’, சாரு நிவேதிதாவின் ‘ஜீரே டிகிரி’ என்று பல உதாரணங்களை இந்த வகையில் அடுக்கிப் பார்க்கலாம். புற உலகை அழுத்தமாக நினைவுபடுத்தும் இத்தனை பிரதிகளுக்கு மத்தில் ‘தேரோடும் வீதியிலே’ நாவல் மட்டும் சில எழுத்தாளர்களின் கண்டனத்திற்கு உள்ளானது ஏன் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். வரலாறு காணாத அளவில் நா.ம.வி. சிறுகதை கண்டனத்திற்கு உள்ளாகி மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது ஏன் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும்.

பொது வாழ்வில் ஈடுபட்டுவரும் ஆளுமைகளை நாய்களாக, குரங்குகளாக, கோமாளிகளாகச் சித்தரிப்பது கார்ட்டூன் என்கிற கலைத்துறையில் அன்றாடம் நடந்துவருவதுதான். உலகப் பெரும் தலைவர்கள் உள்பட யாரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நாயாக ஒரு கார்ட்டூனில் உருவகப்படுத்தப்படும் ஒரு தலைவர் என்னை நாய் என்று சொல்லிவிட்டார்கள் என்று வருத்தப்பட்டுக்கொள்வதில்லை. இலக்கியப் பிரதிகளிலும் நாய், மாடு முதலான உருவகங்களை வைத்து தனிநபர்கள் சித்தரிக்கவும் விமர்சிக்கவும்படுவது சகஜம்தான். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்ற தொடர் மாட்டைக் குறிப்பதல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இத்தகைய பின்னணியில் நா.ம.வி. கதை மட்டும் சகல தரப்பினராலும் கண்டிக்கப்படுவதும் (நான் அறிந்தவரை இந்தக் கதையைப் படித்த அனைவரும் இது ஒரு கீழ்த்தரமான பிரதி என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒப்புக்கொண்டவர்களில் காலச்சுவடுடன் தங்களை முற்றாகத் துண்டித்துக்கொண்டவர்களும் அடக்கம்) அதைப் பிரசுரித்தவர்கள் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதும் ஏன் நடக்கின்றன என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். இலக்கியப் பிரதியினூடே முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கான நாகரிக எல்லைகள் அனைத்தையும் நாமவி மீறியிருப்பதுதான் இதற்குக் காரணம் என்பது ஆராய்ச்சி தேவைப்படாத வெளிப்படையான உண்மை. தன்னிகரற்ற ஆராய்ச்சியாளரும இலக்கிய விமர்சகரும் மதிப்பீடுகளின் வீழ்ச்சி பற்றி யார் கண்ணிலும் படாத கதைகளை எழுதியவருமான வே.ச.குவுக்கு இது புரியாமல்போனது ஆச்சரியம்தான்.

(நிஜ மனிதர்களை நினைவுபடுத்தும் கதைகளின் வரிசையில் நாமவி கதையை ஏன் சேர்க்க முடியாது என்பதையும் இது ஏன் ஆகக் கீழ்த்தரமான கதையாகக் கருதப்படுகிறது என்பதையும் இதற்கு மேல் விளக்க நான் விரும்பவில்லை. அப்படிச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு, நாமவி கதையைக் கட்டுடைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அது ஏற்கனவே புண்பட்டிருப்பவர்களை மேலும் கேவலப்படுத்தி மேலதிகமாகப் புண்படுத்தும் செயலாக முடியும் என்பதால் அந்த முயற்சியில் நான் ஈடுபட விரும்பவில்லை. மேலும், இக்கதையின் எதிர்மறையான விளைவுகளுக்காக ஜெயமோகனும் சதக்கத்துல்லாவும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுவிட்ட நிலையில் இக்கதையில் அப்படி என்னதான் பிரச்சினை என்று வே.ச.கு. அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அல்லது மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு அந்த ஆபாசக் கதையை மீண்டும் ஒருமுறை படித்துப்பார்க்கலாம்.)

பின்குறிப்புகளாகச் சில கேள்விகள்:

1. சுராவின் கருத்துக்களை நம்பி மோசம்போனேன் என்று சிறு குழந்தை போல அழும் வே.ச.கு., கல்வித்துறையில் அவர் என்ன செய்தார், அதன் விளைவாக என்னதான் நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த முன்வருவாரா ?

2. ‘ஒரிஜினல் ஆந்தை’ பற்றி இப்போது எழுதும் வே.ச.கு., சுராவைத் தனது குருவாக வரித்திருந்த 30 ஆண்டுகளில் இந்த ஆந்தை பற்றி வாய் திறக்காமல் இருந்தது ஏன் ? குருநாதரின் ‘குற்றம்’ அப்போது கண்ணில்படவில்லையா ? அல்லது பக்தி விசுவாசம் கையைக் கட்டிப்போட்டு விட்டதா ? இவரைப் பதிப்பாசிரியராகக் கொள்ளாமல் புதுமைப்பித்தன் செம்பதிப்பைக் காலச்சுவடு கொண்டு வந்தபிறகு பீறிட்டெழும் தார்மீக ஆவேசங்களுக்கும் உண்மையான தார்மீக உணர்வுகளுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் ?

3. பு.பி. செம்பதிப்பு தொடர்பாகத் திண்ணை ஆசிரியர் குழு எழுப்பிய கேள்விகளுக்கான பதில்களைக் கண்ணன் முன்வைத்திருந்தார். அதில் அவர் வே.ச.குவுக்கும் சொல்புதிதுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு இன்றுவரை யாரும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல முடியாத கையறு நிலைதான் வன்மமாக வெளிப்படுகிறது என்று நான் எடுத்துக்கொள்வதில் மதிப்பீடுகளின் பிதாமகர் வே.ச.குவுக்கு ஏதேனும் ஆட்சேபணை உண்டா ?

அரவிந்தன்


உண்மைக்கும் பொய்க்குமான இடைவெளி

சொல்புதிது ஆசிரியர் ஆர்.எம். சதக்கத்துல்லா அவர்களுக்கு,

வணக்கம்.

திண்ணையில் தங்களின் மன்னிப்புக் கடிதம் கண்டேன்.

அந்தக் கடிதத்தில் சில தவறான தகவல்களும் கூடவே உள்ளது.

‘நாச்சர் மட விவகாரங்கள் ‘ கதையை ‘கறுப்பு வெள்ளை ‘ ஜெராக்ஸ் பிரதி மட்டுமே எடுத்து பல எழுத்தாளர்கள் வாசகர்களுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு அதிகபட்சம் ஆன செலவு (தபால் தலையும் சேர்ந்தே) 980 – 75 பைசா மட்டும்தான். கலர் ஜெராக்ஸ் + தங்க லேமினேஷன் செய்து அந்தக் கதையை அனுப்பியிருந்தால் மட்டுமே பெரும் பொருள் செலவு ஆகியிருக்கும். அப்படி ஏதும் செய்யவில்லை. உங்கள் விளம்பரதாரர்கள், உங்கள்பால் நல்லெண்ணம் கொண்டவர்கள் யார் என்ற பட்டியல் எங்களிடம் இல்லை. அதை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு உங்கள் மன்னிப்புக் கடிதத்தையும் சேர்த்து அனுப்புவோம். ‘சொல்புதிது ‘ இஸ்லாமியத் தீவிரவாத இதழ் என்ற பிரச்சாரமும் எந்தெந்த வழிமுறைகளில் (Poster, Bit Notice, mike Anouncement. Adverisment) காலச்சுவடால் செய்யப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டினால் நல்லது.

ஜெயமோகனைப் பதில் சொல்ல முடியாத அளவிற்குத் கொண்டுபோனது குமுதம்தானே தவிர காலச்சுவடுஅல்ல. கண்ணன் பெயரைக் கூடக் குறிப்பிட மறுக்கும் குமுதத்திடம் இந்தவிஷயத்தைக் கொண்டுபோக முற்சித்தோம் என்று சொல்வது ஆச்சர்யமளிக்கிறது.

12 சொல்புதிது இதழ்களுக்கும் நீங்களே பொறுப்பேற்றுப் பேசியிருப்பதில் மகிழ்ச்சி.. ஏனெனில், 11 இதழ்கள் வரை பொறுப்பில் இருந்த பலரின் பெயரை 12வது இதழில் பார்க்கமுடியவில்லை. தனது இந்துத்துவா முத்திரையை அழிக்க தங்களையும் பிற நண்பர்களையும் ஜெயமோகன் பயன்படுத்துவது உங்களுக்குத் தெரியாததல்ல. உங்களையும் மீறி இப்படி பொய்யை எழுதச்சொல்பவர்களின் வரலாறை முழுமையாகத் தெரிந்துகொண்டுதான் செயல்படுகிறீர்களா என்பது உங்களை நன்கு அறிந்த எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது.

மிருந்த அன்புடன்

பெ. அய்யனார்


நாச்சார்மடமும் சக்கைப்புளிக்கறியும்

இது 1952 களின் துவக்கத்தில் நடந்த உண்மைச் சம்பவம். நாகர்கோவில் வடிவீஸ்வரத்திலே கோலம்மை ஆச்சி என்று ஒரு பெண்மணி இருந்தாள். என்ன காரணத்தாலோ அவளுக்கு ‘சக்கைப்புளிக்கறி ‘ என்று பெயர் கிட்டியிருந்தது. [பலாக்காய் புளிக்குழம்பு ] .அவளை சிலர் அப்படிக்கூப்பிட்டு தொந்தரவு செய்தார்கள். ஒருமுறை இரு விடலைப்பையன்கள் அப்படிக் கூப்பிட்டு தொந்தரவு செய்தபோது அவள் போய் அன்று நாகர்கோவில் பாரில் பெரிய கிரிமினல் லாயராக இருந்த முத்துக்கறுப்ப பிள்ளையிடம் சொன்னாள். அவர் போலீஸில் பிராது கொடுக்கச்செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வித்து கோர்ட்டுக்குக் கொண்டு சென்றார் . வழக்கை விசாரித்த நீதிபதி இனிமேல் கோலம்மையை சக்கைப்புளிக்கறி என்று யாரும் சொல்லக்கூடாது என்று உத்தரவு போட்டு குற்றவாளிகளுக்கு கோர்ட் கலையும்வரை காவல் தண்டனை விதித்தார். பையன்கள் நீதிமன்ற முகப்பில் நிற்கச்செய்யப்பட்டனர். அதைக் கண்காணிக்க கோலம்மையும் நின்றாள். போகிறவர்களும் வருகிறவர்களும் ‘என்ன விஷயம் ‘ என்று கேட்க ‘சக்கைப்புளிக்கறி ‘ விஷயத்தை கூடியிருந்தவர்கள் சொல்ல பெருங்கூட்டம் கூடிவிட்டது. சக்கைபுளிக்கறி என்பதன் அர்த்தம் பற்றிய ஆராய்ச்சிகள் பலகோணங்களில் நடந்தன.

அன்று தினமலர் நாளிதழ் திருவனந்தபுரத்திலிருந்து வந்துகொண்டிருந்தது. நாகர்கோவிலுக்கு தலைமைநிருபர் சி பி .இளங்கோ என்பவர் .இவர் ஒரு சுதந்திரப்போராட்ட தியாகி . வ உ சியுடன் கூட ஜெயிலில் இருந்தவர். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். [இவரது வேடிக்கைக் கதைகள் நிறைய உண்டு ] செய்தி சேகரிக்க கோர்ட்டுக்கு வந்த அவர் சம்பவத்தைக் கேட்டு அப்படியே ரிப்போர்ட் செய்தார் . மறு நாள் தினமலரில் பெரிய செய்தி . ‘ வடிவீஸ்வரம் கோலம்மையை இனிமேல் யாரும் ‘சக்கைப்புளிக்கறி ‘ என்று சொல்லக்கூடாது , மஜிஸ்ட்ரேட் உத்தரவு!! ‘ அச்சம்பவம் அதி பயங்கரமாக பிரபலமாகி விட்டது. கோட்டாறு வட்சேரி எல்லா பக்கமிருந்து ஆட்கள் திரண்டுபோய் சக்கைப்புளிக்கறி ஆச்சியை வேடிக்கை பார்த்தார்கள் . அந்தத் தெருவே சக்கைப்புளிக்கறித்தெரு என்று சொல்லப்பட்டது . வெளியே தலைக்காட்டமுடியாத கோலம்மை ஊரைவிட்டு கிளம்பி ராஜபாளையம் பக்கமாக போய் குடியேறிவிட்டாள். அதன் பிறகும் அந்த தெருவுக்கு அப்பெயர் நீடித்தது . பிறகுதான் ஒரு தனித்தமிழ் பெயர்வந்தது. நாகர்கோவில் கோர்ட் வட்டாரத்தில் இக்கதை மிகப் பிரபலம். மானநஷ்ட வழக்கு வரும்போது

‘சக்கைப்புளிக்கறிக்கேஸ் ‘ என்பார்கள்.

நான் எழுதிய ‘ நாச்சார்மடம் ‘ உண்மையில் மிக எளிமையான ஒரு கதை. அதில்பெரிதாக வசை ஏதும் இல்லை. அதன் தொடக்கம் என்னவாக இருந்தாலும் கடைசியில் நான் உத்தேசித்தது ராமர்கோவில் விஷயமும் வாஜ்பாயும்தான். அதை 25000 ரூபாய் செலவில் காலச்சுவடு தங்களைப்பற்றிய கதையாக மாற்றிக் கொண்ட வேடிக்கையை பார்த்தால் கோலம்மை ஆச்சிகள் இன்றும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இல்லை முத்துக்கறுப்ப பிள்ளை வக்கீல்போல வேறு யாராவதுலெளள்ளே புகுந்து விளையாடிவிட்டார்களா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

ஏறத்தாழ 1500 அச்சிட்ட கடிதங்கள் காலச்சுவடு சார்பில் கதையின் பிரதியுடன் தமிழ்நாடு முழுக்க அனுப்பப்பட்டுள்ளன. அதற்கு எதிர்வினையாக அனுப்பப்பட்ட கடிதங்களில் சில என் கவனத்துக்கும் வந்தன. அவற்றில் சுந்தரராமசாமி எழுதிய வசைக்கவிதைகள் கதைகள் ஆகியவை தோண்டி எடுக்கப்பட்டு பேசப்படுகின்றன. புதிய காற்று பத்திரிகையில் சுந்தர ராமசாமி எழுதிய தனிநபர் வசைகளின் ஒரு பட்டியல்தரப்பட்டுள்ளது . திண்ணையில் ஒரு கட்டுரை கண்டேன். அது இங்கே ஜெராக்ஸ் நகல்களாக உலவுகிறது. காலச்சுவடு அளித்த கோரிக்கைமனுவுக்கு பதிலாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சுந்தர ராமசாமி நிகழ்த்திய கீழ்த்தரமான தனிநபர் தாக்குதல்களை பட்டியலிட்டு எழுதி காலச்சுவடுக்கு அனுப்பி அது பிரசுரிக்க மறுத்த கடிதத்தின் நகலும் எங்கும் கிடைக்கிறது. புளியமரத்தின் கதையில் வரும் இசக்கி உண்மையில் நாகர்கோவிலில் உள்ள பி எஸ் மணி என்ற சிறு பத்திரிகையாளர்தான் என்ற செய்தியும், இது அக்காலத்தில்பெரிய பிரச்சினையாகி அடிதடி விளிம்புவரை போய் சக்கைபுளிக்கறி பயத்தால் கைவிடப்பட்டது என்பதும் எனக்கே இப்போதுதான் தெரிந்தது. பல கவிதைகள் யாரை நோக்கி யாரால் எழுதப்பட்டன என்பதெல்லாம் வெட்ட வெளிச்சமாகின்றன.

அதைவிட முக்கியமான விஷயம் எல்லாருமே ‘நாச்சார்மடம் ‘ என்று சாதாரணமாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தான். உண்மையில் எனக்கே வருத்தமாக இருக்கிறது. நான் இதை கண்டிப்பாக உத்தேசிக்கவில்லை. காலச்சுவடு பிரசுரித்த அறிக்கையில் கையெழுத்திட்ட ஒரு எழுத்தாளரே ஒரு கூட்டத்தில் ‘நாச்சார் மட விமரிசனமுறை ‘ என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். நாகர்கோவிலில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில்பல பேச்சாளர்கள் சாதாரணமாக ‘நாச்சார்மடங்களின் பார்வை ‘ என்றெல்லாம் பேசுவதைக் கேட்டேன். மனித மனநிலையைவைத்து பார்த்தால் இந்த விவகாரமே சீக்கிரம் மறக்கப்பட்டுவிடும். கதையும் நிற்காது . நாச்சார்மடம் என்ற பேர் மட்டும் சுந்தர ராமசாமியுடன் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டுவிடும். கொஞ்ச நாள் கழிந்ததும் கோபம் , கிண்டல் ஏதும் இல்லாமல் சாதாரணமாக அப்படி சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். எழுதி சம்பாதித்த பேரைவிட இந்தபெயர் நிரந்தரமாக நின்றுவிடும்.

சுந்தர ராமசாமி மீது எனக்கு எவ்வளவு மனத்தாங்கல் இருந்தாலும் அவரது அழகியல்பார்வைதான் என் பார்வையும். அவரது ஸ்கூலே இப்படி அபத்தமாக நாச்சார் மடம் என்று சொல்லப்படுவது என்னையும் அவமானப்படுத்துவதற்கு சமம்தான். ஆனால் நான் இதில் ஒன்றும் செய்யவில்லை. அப்பெயரை குமுதம் மூலமும், பல ஆயிரம் கடிதங்கள் மூலமும், காலச்சுவடுதான் பிரச்சாரம் செய்தது. அவர்கள் குழுவில் உள்ள யாரோ வேண்டுமென்றே விளையாடிவிட்டார்கள். அல்லது கொஞ்சம் கூட முதிர்ச்சியே இல்லாமல் நடந்துகொண்டார்கள் . இந்த ரத்தத்திலே எனக்கு பங்கில்லை என்று மட்டும் சொல்லி ஒதுங்கிக் கொள்கிறேன்.

எம். வேதசகாயகுமார்


Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கடிதங்கள்

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

ஜூலை 10, 2003



இது எங்கள் கடிதம்:


அன்புள்ள வாசகர்களுக்கு,

ஒரு சில காரணங்களால், இந்த இதழ் சற்று முன் கூட்டியே செவ்வாய்க் கிழமையில் வெளிவருகிறது. அதனால், பல கடிதங்களை இந்த இதழில் போட முடியவில்லை. அடுத்த இதழ் அடுத்த வியாழக்கிழமையில் (17 ஆம் தேதி, ஜூலை 2003) வெளிவரும்.

நன்றி

திண்ணைக்குழு


இனி உங்கள் கடிதங்கள்


தமிழோவியம் இணையதளத்தில் திண்ணை ஆசிரியர் குழுவில் இருக்கும் கோபால் ராஜாராம் பற்றிய குறிப்புகள் வந்திருக்கின்றன.

http://www.tamiloviam.com/html/America37.Asp கோபால் ராஜாராம் பற்றிய குறிப்புகள் உண்மையா ?

நரேஷ்


அன்புள்ள ஆசிரியருக்கு

வடக்கு முகம் நாடகம் குறித்து எனக்கு நிறைய கடிதங்கள் வந்தன. நீங்கள் இரு கடிதங்கள் மட்டுமே பிரசுரித்துள்ளதை கண்டேன். உங்களுக்கு அவை அனுப்படவில்லையா என்ன ?

ஜெயமோகன்

***

திண்ணைக்குழு: வடக்கு முகம் பற்றி திண்ணைக்கு வந்த கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டுவிட்டன

***

ஆசிரியருக்கு

சில வருடங்களுக்குமுன்னர் நந்தன் இதழில் பிரபஞ்சன் எழுதிய கட்டுரை ஒன்றின் தலைப்பு ‘அசோக மித்திரனா சோரபுத்திரனா ? ‘ அந்த பிரபஞ்சன் தான் படைப்பாளிகளை இழிவுசெய்ததை கடுமையாக கண்டித்து கையெழுத்து போட்டவரா , இல்லை அது வேறு யாராவதா ?கேட்டு தெளிவுசெய்ய காலச்சுவடு குழு தயாராகவேண்டும் என கோருகிறேன்

விக்னேஸ்வரன் சென்னை14


ஆசிரியருக்கு,

கணேஷ் எழுதிய கட்டுரை ஒரு புதிய கோணத்தைக் காட்டியது. சிறுபத்திறிக்கை உலகுக்குள் இவர்கள் இதுவரை ‘நாய்ச்சண்டை ‘தான் போட்டிருக்கிறார்கள் . அதை அமர இல்க்கியம் என்று பம்மாத்து காட்டியிருக்கிறார்கள். சுராவுக்கு பதிலாக நகுலன் நாய்கள் என்று ஒரு கதை எழுதியுள்ளதாக சொல்கிறார்கள். சுட்டிக்காட்டிய கட்டுரைக்கு நன்றி. சுந்தர ராமசாமியை ஒரு புனிதபசுவாக காட்டவே இந்த சர்ச்சையை காலச்சுவடு கட்டியெழுப்பியது எறு தோன்றுகிறது.

சிவராம் கெ.எம். சென்னை


ஆசிரியருக்கு,

திண்ணையின் வாசகன் என்ற முறையில், சுஜாதாவை பற்றிய கட்டுரை ஒரு தனி மனித துதிபாடுதளாக உள்ளது. இப்படிபட்டகட்டுரைகளை வெளியிட்டு உஙகள் வாசகர்களை துன்புறுத்தாதீர்கள். சுஜாதாவின் புகழ் பாட திண்ணை ஒரு களமாக இடம் கொடுக்க வேண்டாமே. கணபதி சுப்புவுக்கும் சுஜாதாவிற்க்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

ராஜா


அன்புள்ள ஆசிரியருக்கு:

வார்த்தைகளுக்கு இடையே போதுமான இடைவெளி தேவைதா. திண்ணையின் கதை, கட்டுரைகளில் எழுத்துகளுக்கு இடையேயும் தேவையற்ற ஒரு இடைவெளி இருக்கிறது. (எ-டு: அவளைப் பார்த்தான் என்பதற்கு பதிலாக அ வ ளைப் பா ர்த் தா ன் என்பது போல் வருகிறது) இது சரளமாக படிக்க தடையாக இருக்கிறது. இதைச் சரிசெய்ய இயலுமா ?

என். சுவாமிநாதன்

லாஸ் ஏஞ்சலஸ்


திண்ணைக்குழு:

பல கணினிகளில் இது சரியாகத்தான் தெரிகிறது என்று எழுதியிருக்கிறார்கள். உங்கள் கணினியில் இருக்கும் டாப்டைம்ஸ் ஃபோண்ட் ஒருவேளை பழையதாக இருக்கலாம்.. அதனை ஃபோண்ட் டைரக்டரியிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் திண்ணையை பார்க்க முயற்சி செய்யலாம். உங்கள் கணினியில் இருக்கும் ஆப்பரேட்டிங் ஸிஸ்டம் மற்றும் புரொவ்ஸர் என்ன என்பதை கடிதத்தில் தெரிவியுங்கள். பரிசோதித்துப் பார்க்கிறோம்.


Series Navigation